Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சாரல் -2


வெகு நேரம் ஆகியும்.. எந்த ஒரு தகவல் சொல்லாமல் இருப்பது...
இப்போது சங்கருக்கு சற்று பதட்டமாகவே இருந்தது.. . அது மட்டும் இல்லாமல்.. அவர் பெண் கொடுத்த வீட்டில் இருந்து.....இன்னும் மாப்பிள்ளை . அவரது குடும்பத்தில் இருந்து யாரும் வராததை.. எண்ணி.. குழப்பம் ஏற..

என்ன இது.. நாம புள்ளைக்கு வலி வந்துருச்சு ஹோச்பிடல் வாங்கன்னு.. சொல்லி எம்புட்டு நேரம் ஆகுது இன்னும்.. யாரையும் காணோம்... , இந்த டாக்டர் வேற ஏதும் சொல்லாம இருக்காங்களே.. என்று எரிச்சல் வேறு....

இதற்க்கு இடையில்.. ஒரு வழியாக... தேவன் அரவிந்த் உடன்...வந்து சேர்த்தான்...

அப்பா.. அம்மா....என்ன ஆச்சு அக்காக்கு.. டாக்டர் ஏதும் சொன்னாங்களா என பதட்டத்துடன் கேட்க..

" வா தேவா இன்னும் ஏதும் சொல்ல மாட்டேன்கிறாங்களே ... எனக்கு ரொம்ப பயமா இருக்கே... என சாந்தி பொலம்ப...

சங்கரின் நிலை இன்னும் மோசமாய்.. இருந்தது..

தேவனின் சுற்றிலும் பார்த்து.. அடுத்த கேள்வி...கேட்டான்..." எங்கே ம்மா.. மாமாவை காணோம்.. வெளியே இருக்காரா.."

அதை கேட்ட சாந்தி மேலும் உடைந்து போய் அழுது கொண்டே இப்பவரைக்கும் அவரும் அவங்க வீட்டு ஆளுங்களும் வரவே இல்லைப்பா.. சொல்ல.."

" தேவன் அதிர்ந்து.. . என்ன இன்னும் வரலையா. ஏன் சொல்லிடிங்களா.. இல்லையா.. அக்காவ பத்தி..

" எல்லாம் நேத்தே சொல்லிட்டோம் ப்பா. ஆனா எந்த ஒரு பதில் இல்லை.. இப்போ திருப்பி . போன் பண்ணினா.. போன் எடுக்க மாட்டேன்கிறாங்க ...என ஷங்கர்.. சொல்ல.."

" என்னங்க டா..இது... .புதுசா இருக்கு.. அவன் அவன் .. வேலையே விட்டுட்டு புள்ள போராக்குற.. நேரத்துல... தவமா கிடப்பானுங்க.. இங்க என்னன்னா.. இப்பிடி இருக்காயங்க என அரவிந்த் தேவன் இடம் கேட்க..

தேவனுக்கும் குழப்பமாய்.. இருந்தது அவனும் தன் பங்கிற்கு வாணியின்.. கணவனுக்கு போன் செய்து..
பார்க்க.. அது... நாட் ரிச்சப்ல் என்று வந்தது....

அதுக்குள்....நர்ஸ் .. அவசரமாய் .. வெளியே வந்து.. ஆபரேஷன் தான் செய்து எடுக்கணும்.. குழந்தை... கழுத்து கோடி சுத்தி இருக்கு..

சாந்திதேவி.. ரொம்ப பயந்து போய் விட்டார் .. .

தேவன் . அவரை தேற்றி.... என்ன செய்யணும்.. சிஸ்டர்.....

சீக்கிரம் அவங்க ஹச்பண்ட் இருந்தா கூப்பிடுங்க கையெழுத்து .. வாங்கணும்....என சொல்ல....

தேவன்.. மற்றும் சங்கர்.. தலை குனித்து.. நின்றார்கள்...

அதை பார்த்து என்ன விஷயம் என்று நர்ஸ் கேட்க.. சங்கர் நிலவரத்தை சொல்ல.. நர்ஸ் திட்டி விட்டு.... வேகமாய்.. டாக்டர் இடம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்க சென்றார்.....

மீண்டும் வெளியே.. வாணியின் தந்தை இடம் கை எழுத்து எல்லாம் வாங்கியே பின்.. வாணியே ஆபரேஷன் தியேட்டர் குள் அழைத்து செல்ல...

இரண்டு மணி நேரம் கழிச்சு.. டாக்டர்.... வெளியே.. ஆபரேஷன் .. சக்செஸ் ஆனா... உங்க பொண்ணுக்கு ப்ளட்.. ரொம்ப போனது நால.. காப்பாத்த. முடியல.... அதுவும் இல்லாம.. நான் முன்னவே சொன்ன மாதிரி அவங்க கர்பப்பை ரொம்ப பலவீனம்பலவீனமா இருந்ததுனால அவங்கள எங்க நால காப்பாற்ற முடியலை ஐ ஆம் சாரி என டாக்டர் சொல்ல

சாந்தி.. " அய்யோ.... பாவி மகளே இப்பிடி எங்கள விட்டு போயிட்டியே.. என அவர் கத்தியே படி அங்கயே மயங்கி சரிந்து விட்டார்
தேவன்.. வேதனை உடன் தாயே தாங்கி பிடித்தான்..... பின் கோபமாக.. இது தான் விசயம்னு.. நீங்க ஏன் எங்க கிட்ட சொல்லல டாக்டர்....

" என்ன சொல்லுரிங்க நான் இது விஷயமா வாணி.. கிட்ட அவ ஹச்பண்ட் கிட்ட எவ்வளவோ எடுத்து சொன்னேனே அவங்க ஏதும் சொல்லவில்லையா...உங்ககிட்ட ..

என்ன என எல்லாரும் அதிர்ந்து போய் விட்டார்கள்....

எதுமே எங்களுக்கு தெரியாதே..... என அவர் அவர்.... முகம் காட்டி கொடுத்தது .. ஏதும் சொல்ல முடியாமல்... டாக்டர் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார் ......

அப்போது தான்.. ஏதோ .. பெண் பார்க்க வருவது போல் ..... வாணியே ... மாம்மியார் வீட்டில் இருந்து.. அனைவரும் என்றால் .. மாமி மட்டும் வாணியின் கணவன்...

அப்போது தான்.. ஏதோ .. பெண் பார்க்க வருவது போல் ...வாணியின் வீட்டில் இருந்து. தாயும் மகனும் .வந்தார்கள் ....

அவர்களின் வரவை பார்த்த. தேவன்.. கோபத்தில் உச்சியில் இருந்தான் என்ன மனுசனுங்க இவனுங்க.. . இப்பிடி வருதுங்க... என பெரியவர்கள் பேசட்டும் என்று அவன் வேடிக்கை பார்க்க.. ஆரம்பித்தான்...இல்லை நடித்தான்...

சாந்தி தான் கதறிவிட்டார்... , ஐயோ மாப்பிள்ளை நம்ம வாணி.. நம்ம வாணி... நம்மள விட்டு போய்டா...

அதை கேட்ட அவன் தாய் தான் அவனை பேச விடாமல்... " என்ன அண்ணி சொல்லுரிங்க.. எப்போ முடிஞ்சது.. [ என்னமோ அவள் இதை தான் எதிர்பார்த்து இருந்தது போல்.......கேட்க..]

சாந்தி.. அந்த பெண்மணியின் பேச்சை கேட்க.. என்ன அண்ணி இப்பிடி கேட்குறிங்க.. அழுத படி கேட்டார்..

என் புள்ளை எப்பிடி எல்லாம் துடிச்சாலோ ..நீங்க இப்பிடி பேசுறிங்க...

" எனக்கு அப்போவே தெரியும் உங்க பொண்ணு எதுக்கும் தேற மாட்டான்னு .. ஹ்ம்ம் எல்லாம் விதி... சரி விடுங்க.. என்ன புள்ளை பொறந்து இருக்கு...

" அவளது இந்த கேள்வியே சற்றும் அங்க இருந்தவர்கள் எதிர்பார்கவில்லை.... என்று அவர் அவர் முகம் காட்டி கொடுத்தது....அதில் தேவன் அந்த பெரியே . மனுசியே கொலைவெறி உடன் பார்த்து கொண்டு இருந்தான்.........அந்த இடத்தில அரவிந்தன் மட்டும் இல்லை என்றால்.. இந்நேரம் நடந்து இருப்பது வேறு என்று பாவம் வாணியின் கணவன் மற்றும்.. அத்தை அம்மாளுக்கு தெரியேவில்லை

இருந்தாலும்... சாந்தி தான் வேற வழி இல்லாமல் பேசினார்... ஆண் குழந்தை தான் பொறந்து இருக்கு

" ஒ , செலவு மிச்சம் தான்.. சரி அண்ணி எல்லாம் காரியம் முடிச்சுட்டு சொல்லி அனுப்புங்க .. நாங்க கிளம்புறோம் " என நகர போக..

அவர்களை அவசரமாக தடுத்த

" சங்கர்.. " என்னமா பேசுறிங்க.. எங்க பொண்ணுக்கு எதோ பிரச்சனையை இருக்கு.....அத மறைச்சது மட்டும் இல்லாம... இப்போ விருந்தாளி மாதிரி வந்து இப்பிடி பேசுறிங்க...

" அப்போது தான்.. வாணியின் கணவன்....மகேஷ்.. " என்னங்க குரல் ரொம்ப உயருது... அவங்க எங்க அம்மா பார்த்து பேசுங்க.."

மனைவி பற்றி பேசும் பொது அமைதியாக இருந்தவன் தாயே சொன்ன உடன்...கோபம் கொள்ள

இங்கே தேவன் அரவிதன் கையே உதறிவிட்டு ஒரே எட்டில் மகேஷின் சட்டையே பிடித்து... ஏன்டா..மனுசனா நீ இவ்வளோ நேரம் எங்க அக்காவை உன் அம்மா தரக்குறைவா பேசும் போதும் வாயே மூடிகிட்டு இருந்தவன் இப்போ மட்டும் ரோசம் பொங்குதா உனக்கு உன்னை எல்லாம் சும்மா விட்டா .. எங்க வீட்டு பொண்ணு கட்டை வேகாது டா நாயே , பார்த்து பார்த்து வளர்த்த புள்ளையே இப்பிடி அந்நியாயமா கொன்னுடின்களே டா பாவிங்களா , போ நீயும் ஏன் இன்னும் உயிரோடு இருக்க.. என தேவ் மகேஷ் கழுத்தை.. பிடித்து நெரிக்க...

மகேஷ்.. வலி யில் துடித்துவிட்டான்.....

எங்க தன் மகனை கொன்று விடுவானோ என்கிற பயத்தில்... மகேஷின் தாயார்... கத்தி.. கூச்சல் போட

சங்கர் மற்றும் அரவிந்தன் வேகமாய் வந்து அவனை பிடித்து விளைக்கி விட்டார்கள்....

அப்போது சகுந்தலா..." டேய் நான் அப்போவே சொன்னேன்.. இங்க எல்லாம் வர வேண்டாம்ன்னு இப்போ பார்த்தியா உனக்கே மரியாதையே..இல்லை அவளே போய்டா அவ புள்ள மட்டும் நமக்கு எதுக்கு வா டா போகலாம் . இனி இங்க இருந்தா நம்மளையும் கொன்னுடுவாங்க. இவனுங்க... என கிளம்ப...செல்ல

சாந்தி, தான்.. ஐயோ அண்ணி... என்ன சொல்லுறிங்க தம்பி இருந்து தானே எல்லாம் காரியம் செய்யனும்.. . ...

" ஹ்ம்ம்கும் இத உன் பையன் என் பையன் மேல கையே வைக்கிறது முன்னாடி யோசிச்சு இருக்கணும் இப்போ பேசி என்ன பயன்.. டேய் வாடா.. போகலாம்.. என அவர்கள் கிளம்பிவிட

சாந்தி......தான் டேய் தேவா போய் அவங்கள தடுத்து நிறுத்து டா ... என அழ ஆரம்பிக்க.

இப்போது தேவனுக்கு . கோபம் தன் தாய் மீது திரும்பியது... " அம்மா நீங்க சும்மா கொஞ்சம் இருகிங்களா.. இப்பிடி கெஞ்சி தாங்கி தான் நம்ம வீட்டு பொண்ண இப்பிடி எமன் கிட்ட தூக்கி கொடுத்து இருக்கோம் இப்போவும் பேசலைனா இத விட நம்ம பொண்ண யாரும் அசிங்க படுத்த முடியாது.... ..

" அதுக்கு இல்லடா.. காரியம் எல்லாம் பண்ணனுமே.. " சாந்தி கேட்க..

" ஏன் தம்பியா நான் , பெத்தவரா அப்பா இருக்காருல்ல நாங்க பார்த்துக்கிறோம்... நீங்க பேசாம இருங்க என தேவா சொல்லிவிட்டான்....

இதை கேட்டு அரவிந்தன் " டேய் கொஞ்சம் பொறுமையா.... இருடா.. அந்த குழந்தை நிலைமையே நாம யோசிக்க வேண்டாமா...

குழந்தை என்றதும் இப்போது.. தேவன்.. கோபம் சற்று தணிந்தது..." ஒரு முடிவு உடன்... நிமிர்ந்து... அரவிந்தனை பார்த்து.. இனி இந்த குழந்தை என் பொறுப்பு... "

அவன் அருகில் வந்த.. அரவிந்தன்.. " டேய் நல்ல யோசிச்சுக்கோ.. . அகிலா இதுக்கு சரின்னு சொல்லுவாளான்னு..."

அதை கேட்டு தேவன்.. முகம் இறுக.." அதை நான் பார்த்துகிறேன் இனி என்ன நடந்தாலும் .. இவன நான் என் புள்ளையா தான் வளர்க்க போறேன்... யாரும் இத தடுக்க முடியாது.. "

அரவிந்தன் , " இருந்தாலும் ஒரு தடவைக்கு நூறு தடவ யோசிச்சுக்கோ தேவா ....உன்னோட வெட்டி விராப்புல புள்ளை ஓட வாழ்கையே வீண் ஆக்கிடாதே....

இதை ஏதும் கண்டுக்காமல்..

சகுந்தலா ..." எங்களுக்கும் இந்த குழந்தை தேவை இல்லை என்று கொஞ்சம் கூட இறக்கம் இன்றி பேசிவிட்டு டேய் மகேஷ் இப்போ கிளம்புறியா இல்லையா..., என மகனை அவள் அதட்டி சொன்னவுடன்...
அவனும் ஏதும் சொல்லாமல் தாயின் பின்னால் சென்று விட்டான்....

ஏதோ மழை அடித்து ஓய்ந்தது போல்.. இருந்தது.... தேவன் இப்போது தலையே பிடித்து கொண்டு அங்கே கிடந்த பெஞ்சில் அமர்ந்துவிட்டான்....

" எவ்வளோ செல்லமாக வளர்ந்தவள் அவனது அக்கா. இன்று.. அவள் உயிரோடு இல்லை.. இதை நினைத்து பார்க்கணும் பொது அவனது மனதில் பெரும் பாரம்ஏறியது...எவ்வளோ பெரியே விஷயம் அக்காவும் தன் வீட்டுக்கு சொல்லாமல் விட்டுற்சே ஏன் அக்கா இப்பிடி பண்ணின.... என மனதுக்குள் தன் அக்காவுடன் பேச... .. இனி இந்த குழந்தையே தான் தான் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் அதுக்கு அகிலா என்ன தடை சொன்னாலும்.. சமாளிக்க வேண்டும்.. என்ன நீ வேண்டாம் உன் காதல் வேண்டாம் என்று தானே சொல்லுவாள்.. அப்பிடி ஒரு சுயனலமானா காதல் எனக்கும் தேவை இல்லை .... என்று அவனும் முடிவு செய்துவிட்டான்.....

பிறகு.. நிமிர்ந்து.. தன் தாய் - தந்தையே பார்க்க.. அவர்களும் அடுத்து என்ன செய்வது அறியாமல் அவனை பார்த்து கொண்டு இருந்தார்கள்..

அவர்களை பார்த்து அப்பா ஆகவேண்டியதை பாருங்க... என அவன் சொன்ன உடன். சங்கர்...

டாக்டரை சென்று பார்த்து. வாணியின் உடலை.. தகனம் செய்ய ஏற்பாட்டை செய்தார்.

சாந்தி தான் உடைந்து போய் அமர்ந்து இருந்தார்..
சற்று... நேரத்தில் . வாணியின் உடல் வீட்டுக்கு எடுத்து வர..

சொந்தங்களின் கூட்டம் கூடி விட்டது... ... சாந்தி.. மகளின் முகம் பார்த்து பார்த்து கதறி கொண்டு வந்தார்.... கையோடு வாணிக்கு செய்யே வேண்டியே எல்லாம் காரியமும் செய்து முடித்தார்...

உடல்... நலம் குறைவால் இறந்தது நாள் வாணியே ரொம்ப நேரம் வைக்க

கூடாது என்று கூட்டத்தில் யாரோ சொல்ல .. தேவன் மற்றும் அரவிதன்.. தான் அவளது..உடலை அம்புலன்சில் ஏற்றி.. மின் மயானத்துக்கு சென்றாகள்....

சிறிது நேரத்தில்.. வாணியின் உடல் சாம்பல் ஆகிவிட...

சங்கர் அங்கயே நெஞ்சை பிடித்து கொண்டு கதறி கொண்டே சரிந்தார்...

தேவன் , இறுகி போய் அவரை தாங்கி பிடித்து ...அப்பா , போதும் அப்பா...

" முடியலை பா.. என் பொண்ணு டா தேவா., எவ்வளோ செல்லமா வளர்த்தேன்.. இத பார்க்க தானா .. ஐயோ... நான் இன்னும் உசுரோட தானே... இருக்கேன்... .. என அவர் தலையில் அடித்து கொள்ள..."

அதை பார்த்து கொண்ட இருந்த அரவிந்தனோ... கடவுளை சபித்து கொண்டு நின்று இருந்தான்...

இதோ முடிந்துவிட்டது.. எல்லாம்.சங்கரை கைத்தாங்கலாய் பிடித்து கொண்டு ஆண்கள் எல்லாம் திரும்பி வீட்டுக்கு வந்து விட்டார்கள்...

குளித்து.. முடித்து.. ஆகா வேண்டியதை பாப்போம் என்று உட்காரும் பொது தான் தேவனுக்கு குழந்தை யாபகம் வந்தது...

அவன்.. எங்க அம்மா குழந்தை.. காணோம்." என தேட..

**************************

ஹாய் பிரெண்ட்ஸ் இதோ அடுத்த எபி போடாச்சு 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro