புன்னகை முகமூடி
காலங்கள் மாற
காயங்கள் ஆறும்.
எப்போது காலம் மாறும்?!
எப்போது காயங்கள் ஆறும்?!
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு யுகமாய் எனக்கு
ஒவ்வொரு யுகமும்
இரத்த கண்ணீரில் எனது
எத்தனை சோகங்கள்!
எத்தனை மனக்குமறல்கள்!
அனைத்தையும் மறைக்க
ஓரே ஒரு புன்னகை!
புன்னகையின் பின்னணியில்
இருக்கும் சோகக்கதை
யாரும் அறியாதது.
காயங்களுடனும் கீறள்களுடனும்
புன்னகை புரியும் ஒவ்வொரு
நெஞ்சமும் இதை அறியும்!
ஒவ்வொரு புன்னகையின் பின்னாலும்
நிச்சியமாக ஒரு கதை இருக்கும்.
புன்னகை ஒரு அழகான மொழி
இந்த மொழியின் அர்த்தம்
எவரும் அறியமாட்டார்.
புன்னகையின் உரிமையாளரை
தவிர..
ஆம்!.
புன்னகை ஒரு
அழகான முகமூடி!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro