Sudum Nilavu Sudatha Suriyan - 5
சுடும் நிலவு சுடாத சூரியன் – 5
ஸம்யுக்தா காணாமல் போய் இன்றோடு நான்கு நாட்களாகி விட்டது. செல் ஃபோனை வைத்து டிரேஸ் செய்து விடலாம் என இருந்த நம்பிக்கையும், அவளின் ஸ்லிங் பாகையும் அதிலிருந்த செல் ஃபோனையும் பார்த்ததில் தகர்ந்து போனது.
கண்ட்ரோல் ரூமிலிருந்த வந்த விடியோ க்ளிப்பிங்கைப் பார்த்ததில், அந்த நேரத்தில் வந்த ரெட் ஐ20 காரின் நம்பர் தெரிந்தது. ஸன் ஷேட் கருப்பாக ஒட்டியிருந்ததால் டிரைவரின் முகம் தெரியவில்லை. ஒரு நிமிடம் தாமதமாக வந்த ஸ்மிருதியின் காரும் அதில் பதிவாகியிருந்தது.
காரின் நம்பரை கண்ட்ரோல் அறைக்கு அனுப்பி, அதன் உரிமையாளரின் பெயரையும் முகவரியையும் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வாங்கி அனுப்பச் சொன்னான் அந்த பகுதியில் மற்ற சிக்னல்களின், சிசி டிவி பதிவகளையும் தேடச் சொன்னான்.
பத்து நிமிடத்தில் திரும்பவும் அழைத்தவர்கள், அது ஒரு ஸ்கூட்டியின் எண் என்றனர், அந்த வண்டியின் உரிமையாளர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் என்றதும் மித்ரனுக்கு இது திட்டமிட்ட ஆள் கடத்தல் என்று புரிந்து போனது.
ஸம்யுக்தாவை கடத்திய கார், ஒரு மணி நேரத்திற்குப் பின்பும் எந்த டிராஃபிக் சிக்னலின் வழியாக வெளியே செல்லாதது தெரிந்தது. போலீஸ் அந்த பகுதியிலிருந்து செல்லும் சாலைகளை அடைத்து, தேடுதல் வேட்டையை துவங்கியது. மெயின் ரோடிலிருந்து பிரிந்து சென்ற நிழல்கள் அடர்ந்த முட்டு சந்தில் அந்த கார் யாருமில்லாமல் நின்றிருந்தது.
பக்கத்து வீடுகளில் அந்த காரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. மதிய நேர வேளை என்பதால் அதிக ஆள் நடமாட்ட்மும் இல்லை.
மித்ரனுக்கு கண்களை இருட்டி கொண்டு வந்தது. இதை விட ஆட்டம் காட்டும் கேஸ்களைப் பார்த்திருக்கிறான். இப்படி உடனடியாக சோர்வானதில்லை. மற்ற கேஸ்களுக்கும் இதற்கும் ஒரே வித்தியாசம். சம்யுக்தா!. அவளை நினைக்கும் போதே நெஞ்சடைத்த்து.
கண்களில் நீர் துளிர்க்க, மனம் உடனடியாக தன் அம்மாவை நினைத்தது. மெஹந்தி ஹாலில் அனைவரும் காத்திருப்பார்களே என தோன்ற அகிலனை செல்லில் அழைத்து, சம்யுக்தாவிற்கு அடிப்பட்டு விட்டதால் சங்கீத்தை கேன்ஸல் செய்ய சொன்னான், அருகேயிருந்த மருத்தவமனைக்கு, தன் பெற்றோர்களையும், சசிதரன் குடும்பத்தினரையும் மட்டும் வர சொன்னான். .
ஸம்யுக்தா ஐசியுவில் இருக்கிறாள் என்று சொன்னவுடன், வினோதினியும் வசந்தனும் அழ தொடங்கினர். என்ன சொல்லியும் சமாதானம் செய்ய முடியவேயில்லை. சசிதரனும் அவளை உடனே பார்த்தே தீர வேண்டும் என்று அடம் பிடித்தான்.
நாளைக் காலையில் தான் அவளை பார்க்க முடீயும் என்று சொல்லியும் யாரும் வீட்டிற்கு செல்ல மறுத்து விட்டனர்.
அழுது அழுது வினோதினியின் கண்கள் சிவந்து விட்டன. சம்யுவை பார்க்காமல் தண்ணீர் கூட பருக மாட்டேன் என அடம்பிடித்த தாயை சமாதானப் படுத்த முடியாமல், தயங்கி தயங்கியே வேறு வழியின்றி அவள் கடத்தப்பட்டதைச் சொன்னான்.
அதை சொன்னவுடனே வினோதினி மயக்கம் போட்டு விழுந்து விட்டார். அவரை அந்த மருத்தவமனையிலே அனுமதித்து சிகிச்சை அளித்தனர். உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால், அதற்கு மருந்தும், தூக்க மாத்திரையும் கொடுத்து தூங்க வைத்தனர். வசந்தன் பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தார். வினோதினி மயக்கம் போட்டு விழுந்தது கூட அவருக்கு தெரியவில்லை.
அகிலனும் அவன் மனைவி அமிதாவும், அவருக்கு தண்ணீர் கொடுத்து தெளிய வைத்து, மெதுவாக இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயன்றனர். தெளிந்ததும் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தப்படியே இருந்தது.
சசிதரனின் நிலைமையோ சொல்லவே முடியாததாக இருந்தது. காலையில் அவளுடன் கடைக்குச் சென்றது முதல் அனைத்தும் படம் போல் நெஞ்சில் ஒடியது. அவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
சசிதரனின் பெற்றோர்களிடம் அவனை வீட்டிற்கு அழைத்து செல்ல மித்ரன் சொல்லியும் அவன் செல்வதாக இல்லை. மித்ரனுடன் அவனும் தேட கிளம்பினான்.
அவனை கஷ்டப்பட்டு தடுத்து நிறுத்தி, அவன் பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தான். ஏதாவது செய்தி கிடைத்தால் உடனே தெரிவிப்பதாக வாக்களித்தான். மனமேயின்றி, சசி அவன் பெற்றோர்களுடன் வீட்டிற்கு சென்றான்.
அமிதாவை தன் பெற்றோர்களுக்கு துணைக்கு வைத்துவிட்டு மித்ரன், அகிலனுடன் கிளம்பினான்.
நேராக அவன் சென்றது, சம்யுக்தா கடைசியாக கண்ணம்மா பேட்டையில் சந்தித்த அந்த ஏரியாவின் தாதாவை தான்.
அவனை ஸ்டேஷனுக்கு இழுத்து வந்து அடித்து உதைத்து விசாரித்தப் போதும் அவனுக்கு சம்யுக்தா கடத்தபட்டதைப் ப்ற்றி எதுவும் தெரிய வில்லை.
இரவு முழுவதும் அகிலனுடன் நகரிலிருந்து வெளியில் செல்லும் பாதையில் இருக்கும் செக் போஸ்ட்களில் சம்யுவின் போட்டோவை காண்பித்து விசாரித்தும் எதுவும் தெரியவில்லை.
இரவில் சில இடங்களில் குடித்த டீயை தவிர எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை. அதுவும் அகிலன் வற்புறுத்தியதால் மட்டுமே குடித்தான்.
ஒவ்வொரு தடவை போன் அடிக்கும் போதும் அவளை கடத்தியவர்கள் ஏதாவது பேசுகிறார்களா என நினைத்து எடுத்தான். யாரும் அப்படி தொடர்பு கொள்ளாத போது இன்னும் வருத்தமானது.
தன்னை தொடர்பு கொள்ளாமல் தன் தந்தையை தொடர்பு கொள்வார்கள் என நினைத்ததும் பொய்த்து போனது. வசந்தனையும் யாரும் தொடர்பு கொள்ளவில்லை.
மணிக்கு ஒரு தடவை சசியும் தொடர்பு கொண்டு விசாரித்தப்படியே இருந்தான். ஆனால் அவளைப் பற்றிய எந்த செய்தியும் வரவேயில்லை.
மறுநாள் காலையில், மருத்தவமனையிலிருந்து வினோதினியும் வசந்தனும் வீடு திரும்பினர். அமிதா வற்புறுத்தி இருவரையும் சாப்பிட வைத்தாள். சசியும் அவன் பெற்றொர்களும் வீட்டிற்கு வந்தனர். மித்ரனால் யாரையும் முகத்திற்கு நேராக பார்க்கவே முடியவில்லை.
தன் துறையில் மிகவும் திறமைசாலி என பெயர் எடுத்தவன். அமைச்சர் ஒருவரின் பேரன், ஸ்கூலில் இருந்து கடத்தப்பட்டப் போது நான்கே மணி நேரத்தில் கண்டு பிடித்தவன், இன்று இருபது மணி நேரம் கடந்தும் தன் தங்கையை கண்டு பிடிக்க முடியாதது, தன் தோல்வி என நினைத்தான். செய்வதறியாமல் தவித்தான்.
திருமணம் நடக்க, இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அவளிருக்கும் இடம் தெரியாததால், திருமணத்தை தள்ளி வைக்க முடிவெடுத்தனர். அதை சொன்னவுடன் வினோதினியின் அழுகையை கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லை. அமிதாவும், சசியின் அம்மாவும் கஷ்டப்பட்டு சமாதானம் செய்தும் அழுகையை நிறுத்த முடியவில்லை.
சசியின் அம்மா, அவள் எந்த நிலையில் வீட்டிற்கு திரும்பினாலும், தன் மருமகளாக ஏற்றுக் கொள்ள தயார் என சொன்ன பிறகே அழுகையை நிறுத்தினார். சசியும் அவர் கையைப் பிடித்து வாக்களிக்க, இதைப் பார்த்துக் கொண்டிருந்த வசந்தனுக்கு தாங்க முடியாமல் போனது. சசியின் தந்தை அவருக்கு ஆறுதல் படுத்தினார்.
மிகவும் நெருங்கியவர்களுக்கு ஃபோன் செய்து சம்யுகதாவிற்கு அடிபட்டு இருப்பதால் திருமணத்தை தள்ளி வைப்பதாக சொன்னார்கள். மாலை மற்றும் காலை செய்தி தாளிலும் திருமணம் தள்ளி வைக்கப்பட்டிருப்பதை அறிவித்தனர். சமூக வலைதளங்களிலும் திருமணத்தை தள்ளி வைத்திருப்பதை அறிவித்தனர்..
மித்ரன் சென்னையில் உள்ள அனைத்து ஆள் கடத்தல் கும்பலகளை, அடித்து விசாரித்தும் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. போலீஸ் இன்ஃபார்மர்களுக்கும் எதுவும் தெரியவில்லை. வேறு ஊர்களில் உள்ள சக ஐபிஎஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டும் எதுவும் முன்னேற்றமில்லை. சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அவளின் போட்டோ அனுப்பபட்டு தேடல் தொடர்ந்தது.
ஒவ்வொரு நாளும் அவன் வீட்டிற்கு வரும் போதும் வினோதினியும் வசந்தனும் ஒடி வந்து சம்யுவை பற்றி கேட்பதும், இவன் பதில் சொல்ல முடியாமல் தவிப்பதும் தொடர்ந்தது. சசியின் செல் அழைப்புகளை எடுக்கவே கஷ்டப்பட்டான்.
அன்று இரவு வீட்டிற்கு செல்ல இயலாமல், சென்னை மாநகர வீதிகளில் சுற்றி திரிந்தான். வீட்டிற்கு சென்றால் வினோதினியின் குற்றம் சாட்டும் விழிகளை சந்திக்கவே முடியவில்லை. வசந்தனோ பேசுவதையே நிறுத்தி விட்டார்.
மறு நாள் காலை கமிஷ்னர் அழைப்பதாக அவரது அலுவலகத்திலிருந்து அழைத்தனர்.
சிறிது நேர் காத்திருப்பிற்கு பின்பு அழைப்பு வர உள்ளே சென்றான். அங்கு அவனுக்கு முன்பாக அகிலன் அமர்ந்து கமிஷ்னருடன் பேசி கொண்டிருந்தான்.
"வாங்க மித்ரன். இப்போது தான் அகிலனிடம் அனைத்தும் கேட்டு தெரிந்து கொண்டேன்.. நீங்க என்ன நினைக்கிறீங்க" என்றார்.
"தெரியவில்லை சார், நானும் என்னால் முடிந்த அளவு தேடி கொண்டிருக்கிறேன், கண்டுபிடிக்கவே முடியவில்லை" என தலையை குனிந்து கொண்டான்.
"மித்ரன், நீங்க எப்.ஐஆர் போட்டிங்களா?" என கேட்டார்.
"இல்லை சார், அது வந்து.. பின்னால பிரச்சினை வரும் என்று போடவில்லை" என தர்மசங்கடமாக தலை குனிந்தான்.
"இட்ஸ் ஒகே மித்ரன். எனக்கும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள், என்னால் புரிந்து கொள்ள் முடிகிறது. தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம், உங்கள் தங்கைக்கு இந்த திருமணத்தில் சம்மதம் தானே?" என கேள்வி எழுப்பினார்.
"இது லவ் சும் அரேஞ்ச்ட் திருமணம் சார். இருவருக்கும் சிறு வயது முதல் பழக்கம், அது அப்படியே காதலாக மாறிவிட்டது. இரு தரப்பு பெற்றோர்களுக்கும் இதில் முழு சம்மதம்" என்றான்.
"மித்ரன் இப்போ எல்லாம் நிச்சியம் முடிந்த பிறகு தான், புதுசாக வேறு ஒருவனை காதலிக்கவே ஆரம்பிக்கிறாங்க" என்றவரை சட்டையை பிடிக்க துறுதுறுத்த கைகளை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.
"என் த்ங்கை அப்படியெல்லாம் இல்லை சார்", என்றான்.
"மித்ரன், நம்ம ஸ்டேஷ்னில் வயசு பொண்ணுங்க காணாமப் போய் விட்டாள் என்று புகார் கொடுக்க வந்தால், நாம என்ன சொல்றோம், உங்க பொண்ணு யார் கூடவாவது ஒடி போயிருப்பாள் என்று தானே சொல்றோம்" என நிறுத்தினார்.
"மித்ரன், நீங்க உங்க அம்மா கிட்ட இதை பத்தி விசாரிச்சிங்களா?" என கேட்டார்.
"அப்பாக்கிட்ட கேட்டிங்களா?" என்றவுடன் "இல்லை சார் எனக்கு தெரியும்" என தொடங்கியவனை கை அமர்த்தி தடுத்தவர், "உங்க மாப்பிள்ளை வீட்டில் விசாரித்தீர்களா?" என கடுமையாக கேட்டார்.
"இல்லை சார், அவங்களே ரொம்ப பெருந்தன்மையாக நடந்துக்கிட்டிருக்காங்க, நான் இதில் விசாரணை என்று போய் என்ன கேட்பது" என அவன் விவரிக்க தொடங்கும் முன்பு, "இதற்கு தான் மித்ரன் ரத்த பந்தகளோ, உறவுகளோ கேஸை விசாரிக்க கூடாது என்று சட்டம் சொல்லுது", என்றார்.
"மித்ரன், நீங்க நம்ம டிபார்ட்மண்டின் மிக திறமைசாலியான அதிகாரிகளில் ஒருவர், அதில் எனக்கு கொஞ்சம் கூட எனக்கு சந்தேகமேயில்லை. ஆனால் இந்த கேஸில் நீங்க எமோஷனலா அட்டாச்டாக இருக்கீங்க.. அதனால் தான் தெளிவா செயல்பட முடியவில்லை." என நிறுத்தியவர், அகிலனைப் பார்த்து, "நீங்க மித்ரன் கிட்ட எப.ஐ.ஆர் எழுதி வாங்கிட்டு, முறையாக விசாரணையை தொட்ங்குங்க" என்றார்.
"மித்ரன், நீங்க புரிஞ்சிட்டிங்க என நினைக்கிறேன். நீங்க அகிலன் கூட சேர்ந்து இந்த கேஸில் வொர்க் பண்ணுங்க. லெட் அகிலன் டேக் த லீட். இது உங்க்ளுக்கே பல விஷயத்தில் உதவியாக இருக்கும்" என சொல்லி அவன் தோள்களைத் தட்டினார்.
"ஆல் த பெஸ்ட் பாய்ஸ்" என் இருவர் கைகளையும் குலுக்கியவர், "அகிலன், இந்த கேஸில் என் பெயரை எங்கு வேண்டுமானலும் யூஸ் செய்துக் கொள்ளுங்கள்" என அனுமதி தந்தார்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro