Sudum Nilavu Sudatha Suriyan - 4
சுடும் நிலவு சுடாத சூரியன் – 4
ஸம்யுக்தா கண்களை கஷ்டப்பட்டு பிரித்தாள். சுற்றிலும் இருட்டாக இருந்தது. ஒன்றும் புரியவில்லை. இது எந்த இடம் என்று தெரியவில்லை. தலை வெடித்து விடுவது போன்று வலித்தது. கண்கள் எரிந்து நீர் வழிந்தது. உடலை அசைக்க முடியாமல் கைகள் அவள் அமர்த்தி வைக்கப்பட்டு இருந்த நாற்காலியுடன் கட்டப்பட்டு இருந்தது. கால்களும் அதே போல் நாற்காலியுடன் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது.. தொண்டை வரண்டு போய் தாகத்தினால் தவித்தது.
அவள் அணிதிருந்த மஸ்தானி டிரஸ் வியர்வையில் நினைந்திருந்தது. பசி வேறு காதை அடைத்தது. இப்போது மணி என்ன்வென்று தன் வாட்சில் பார்க்க முயன்று தோற்றாள்.
கண்களை மூடி என்ன நடந்தது என யோசித்தாள். ஸ்ருதியின் கார் என்று நினைத்து வந்து நின்ற ரெட் ஐ20 காரில் ஏறினாள். ஏறியவுடன், டிரைவரை பார்த்ததும் அது ஸ்ருதியின் கார் இல்லை என்று தெரிந்தது. ஸாரி என்று சொல்வதற்குள் பின்னாலிருந்து ஒரு கை அவள் மூக்கில் ஒரு துணியை வைத்து அழுத்தியது மட்டுமே ஞாபகம் இருந்தது.
தன்னை கடத்தியிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள சில நொடிகளே பிடித்தன. அதற்கு மேல் இப்போது யோசிக்க உடலிலும் மனதிலும் வலுவில்லை. மிகவும் சோர்வாக இருந்தது.
பசி அதிகரித்ததும் அம்மாவின் நினைவு வந்தது. அம்மா என்று நினைக்கும் போதே கண்ணில் நீர் நிறைந்தது
கண்ணீரை துடைக்கக் கூட இயலாமல் கைகள் கட்டியிருப்பதை எண்ணி இன்னும் அழுகை அதிகரித்தது. அழுவது கோழைத்தனம் என்று மித்ரன் சொல்வது மனதின் ஆழத்தில் இருந்து ஒலித்தது. மித்ரனை நினைத்தவுடன் சற்றே உடலிலும் மனதிலும் வலு சேர்ந்தது போல் உணர்ந்தாள்.
"யாராவது இருக்கீங்கிளா" என்று தன் சக்தி முழுவதையும் திரட்டி கூப்பிட்டாள்.
தன் குரல் தனக்கே கேட்கவில்லை என்று உணர்ந்து இன்னும் சற்றே உரக்க, ":யாராவது இருக்கீங்கீளா" என கூப்பிட்டாள்.
ஒன்றும் பதிலில்லாமல் போக சோர்ந்து போனாள். கால் மணி நேரம் கடந்த பிறகு திரும்பவும் கூப்பிட, அருகில் எதோ சத்தம் கேட்பதை உணர்ந்தாள். ஏதோ அசைகின்ற ஒலியும் கால் தட ஒலியும் அருகில் கேட்டது.
சில நொடிகளுக்கு பின் கதவு திறக்கும் ஓசையும், யாரோ அருகில் நடந்து வரும் ஒசையும் கேட்டது. சுவிட்சை அழுத்தும் ஒலியும் கூடவே கேட்டது. ஒரு மங்கிய விளக்கு ஒளி பரவியது. கண்கள் சற்றே கூச கண்ணை அழுந்த மூடி திறந்தாள்.
அவளிருந்தத இடம் ஒரு பழைய அறையாக ஒட்டடை படிந்து இருந்தது. ஜன்னல்கள் அழுந்த சாத்தப்பட்டிருக்க ஒரு விதமான பழங்காலத்து கோவில்களில் அடிக்கும் வாசம் அந்த அறையை நிறைத்திருந்தது. கண்களை சுழல விட்டவளின் எதிரே அவன் நின்றிருந்தான்.
ஒடிசலான தேகம், ஒடுங்கிய முகம், தலை நிறைய எண்ணை தடவி படிய வாரிப்பட்டிருந்தது. முகத்தில் பரவலான தாடியும், பூனை முடி மீசையும் பார்ப்பதற்கு ஒரு இருபது வயது பையனாக தெரிந்தான்.. காட்டன் கட்டம் போட்ட சட்டையும், வெளுத்து போன ஜீன்சும் அணிந்திருந்தான்.
"என்ன வேணும், எதுக்கு இப்படி கத்தறே" என்றான் கட்டையான குரலில்.
அவன் குரலுக்கும் உடலுக்கும் சமபந்தமே இல்லாமல் இருந்தது. வேண்டுமென்றே குரலை தடிப்பாக ஆக்கி கொள்கிறான் என புரிந்தது.
"ஒழுங்கு மரியாதையாக என் கை கால் கட்டுகளை அவிழ்த்து விடு. இல்லை எங்கண்ணன் கிட்ட சொல்லி முட்டிக்கு முட்டிக்குத் தட்ட சொல்வேன்" என்று திடமான குரலில் அவனை மிரட்டினாள்.
"நல்லா காமெடி செய்றே, இவ்வளவு நாளுக்கு அப்பறமே நீ எங்கே இருக்கேனு இன்னும் ஒங்கண்ணன் கண்டுப்பிடிக்கலை. அவரு என்னை முட்டிக்கு முட்டிக்கு தட்டப்போறாரா? நினைப்புத்தான்", என்றான் நக்காலாக
"இவவளவு நாளா? இன்னிக்கு என்ன நாள்?" என பதட்டதுடன் கேட்டாள் சம்யுக்தா.
"இன்னிக்கு ஜனவரி இருபதாம் தேதி. இப்ப அதுக்கு என்ன?" என கிண்டல் தொனிக்கும் குரலில் சொன்னான்.
"ஐயோ! இன்னிக்கு தான் என்னோட கல்யாணம் நடக்க இருந்தது, முஹுர்த்தம்.. "என்று சொல்லும் போதே கஷ்டப்பட்டு கண்கள் அவளின் வாட்சை பார்க்க மணி பத்தரையை தாண்டியிருந்தது.
"சசி" என அவளை அறியாமலே வாய் முணுமுணுத்தது. இனிதே நடந்து முடிந்திருக்க வேண்டிய திருமணம். வினோதினி பார்த்துப் பார்த்து செய்த ஏற்பாடுகள். ஒரு சிறு குறையும் ஏற்பட கூடாது என்று கண்ணும் கருத்துமாக எல்லாவற்றையும் செய்ததை நினைத்து நெஞ்சடைத்தது. எவ்வளவு பணம் செலவு செய்வதற்கும் தடை சொல்லாத தந்தை வசந்தன். எத்தனை தடவை கூப்பிட்டாலும் ப்ர்சேஸிர்க்கு கூட வந்த மித்ரன். தன் மேல் உயிரே வைத்திருக்கும் சசிதரன்.
ஒரு இனிமையான கனவு போல் நடந்திருக்க வேண்டிய திருமணம். இவனால் தானே எல்லாம் கானல் நீரானது என்று நினைத்தப் போது உள்ளேயிருந்து பொங்கி வந்த ஆத்திரத்தில், "நாயே. உன்னையெல்லாம் என்ன செய்றேன் பாரு, கயிற்றை அவிழ்த்து விடுடா", என்று இரைந்தாள.
"நாய் என்றா திட்டறே, உன்னை" என அவன் முடிக்கும் முன்னரே, "ஆமாடா, நாய், பேய், பன்னி, பொறுக்கி ராஸ்கல்" என சராமாரியாக திட்ட தொட்ங்கினாள்.
"ஐயோ பாவம் என்று பார்த்தால் ரொம்ப தான் துள்ளறே, அப்படியே கிட" என விளக்கை அணைத்து விட்டு கதவை சாத்திவிட்டு சென்று விட்டான்.
இப்படி அறிவிழந்து நடந்து கொண்டோமே என நினைத்து அழுதாள் சம்யுக்தா.
கைகளும் கால்களும் கட்டியிருக்கும் நிலையில் இப்போது அவன் தயவின்றி எதுவும் செய்ய முடியாது. கட்டுகளை அவிழ்ப்பதற்கும் சக்தி வேண்டும். இப்போது வீரியத்தை விட காரியமே பெரியது என முடிவெடுத்தவள், "ஸாரி, மன்னிச்சிடுங்க" என கத்தினாள். ஆனால் அதற்கு ஒரு பதிலும் வெளியில் இருந்து வரவில்லை.
பல முறை அவள் மன்னிப்பும் கேட்டும், கெஞ்சியும், அழுதும் மன்றாடியும் வெளியிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. தாகத்தினாலும் கெஞ்சியதாலும் குரல் வற்றி மயங்கி போனாள் சம்யுக்தா.
சிலீரென்று தன் மேல் விழுந்த நீர் துளிகளால் விழித்து எழுந்தாள். எதிரே அவன் நின்றிருந்தான். திறந்திருந்த கதவின் வழியே வெளிச்சம் அறையில் பரவியது. தலை பாரமாக வலித்தது. எதுவும் பேச முடியாமல் தொண்டை காய்ந்திருந்தது. வெளிச்சத்தைப் பார்த்த கண்கள் எரிந்து தாமாக மூடி கொண்டன.
திரும்பவும் அவளின் மேல் விழுந்த நீர் துளிகளால் அதிர்ந்து விழித்தாள். அருகிலிருந்த மேஜை மேல் ஒரு பாட்டில் தண்ணீரும், ஒரு டிபன் பொட்டலமும் இருந்தது.
அவளின் கை கட்டை அவிழ்த்தவன் அவளின் முன் இருந்த மேஜையை நோக்கிக் கை காட்டினான்.
"முன்னாடி கத்தியதற்கு மன்னிச்சிடுங்க" என முகத்தை பாவமாக வைத்தப்படி சொன்னாள் சம்யுக்தா.
"ரொம்ப தாகமாக இருந்தது. பசியில் உயிர் போவது மாதிரி இருந்தது. அது தான் என்ன பேசறோம் என்று தெரியாமல் கத்திவிட்டேன்" என கண்களில் நீர் வழிய சொன்னாள்.
இறுக்கமாக இருந்த அவனின் முகம் சற்றே தளர்ந்தது. "எல்லோருக்கும் பசியும் தாகமும் ஒன்று தான். பசி எவ்வளவு கொடுமையானது என்று என்னை விட யாருக்கும் தெரியாது. நீங்க சாப்பிடுங்க" என இளகிய குரலில் முடித்தான்.
தண்ணீர் பாட்டிலில் பாதி நீரை மடக்கு மடுக்கு என குடித்தவுடன் அவளுக்கு பாதி உயிர் வந்தது மாதிரி இருந்தது. பொட்டலத்திலிருந்த இரண்டு இட்லியை அவசர அவசரமாக சாப்பிட்டவுடன் ஏனொ வயிற்றை புரட்டுவது போல் இருந்தது.
இலையில் மீதி இட்லிகள் இருந்தும் அவளால் சாப்பிட முடியவில்லை. அவளையே பார்த்து கொண்டிருந்தவன், "அந்த மயக்க மருந்து சில பேருக்கு ஒத்துக்காது. இப்படி தான் வயிற்றைப் புரட்டும்" என்றான்.
வாந்தி வருகிறது என அவள் செய்கை செய்தவுடன் அவன், "கொஞ்சம் தண்ணி குடிங்க சரியாயிடும்" என்றான்,
மீதியிருந்த நீரை குடித்தும் புரட்டல் நிற்கவில்லை. திரும்பவும் அவள் வாந்தி வருவதாக செய்கை செய்ததும், அவளின் கால் கட்டையும் அவிழ்த்து விட்டான். நிற்க முயர்சி செய்த சம்யுக்தாவினால் கால் தரையில் ஊன்/ற முடியவில்லை. சிறிது அமர்ந்து தன்னை சமன் செய்தவள், மீண்டும் அவன் கைகளை பற்றியப்படி எழுந்து நின்றாள்.
தள்ளாடியப்படி காலடிகளை எடுத்து வைத்து அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். வெளியே இருந்த சிறிய ஹாலிலும் வேறு யாருமில்லை.
ஹாலின் கதவை திறந்து அவளை படிக்கட்டில் அமர வைத்தான். சம்யுக்தா நிமிர்ந்து சுற்றிலும் பார்வையை சுழல விட்டவள், எங்கும் செடி கொடி மரங்களால் நிறைந்திருப்பதை கண்டாள். .
அவளின் பார்வையை தொடர்ந்தவன், "சுத்தியும் காடு தான். எங்கியும் தப்பிக்க முடியாது. காட்டில் வழி தவறி ஓநாய்க்கு பலியாக வேண்டியது தான்." என்றான்.
சிலுசிலுவென அடித்த இயற்கை காற்றினால் சற்றே புரட்டல் நின்ற மாதிரி உணர்ந்தாள். தூரத்தில் எங்கோ நரி ஊளையிடும் சத்தம் கேட்டது. கூடவே கோட்டனின் சத்தம் போலவும் கேட்டது.
பயம் முகத்தில் பரவ , "இது எந்த இடம்" என கேட்டாள்.
அவன் பதில் எதுவும் கூறாமல் அவளையே வெறுமையாக பார்த்தப்படி நின்றான்.
திரும்பவும் வயிறு புரட்ட பக்க்த்திலிருந்த செடியின் அருகில் சென்று வாயிலெடுத்தாள். அவளைப் பிடித்துக் கொள்ள வந்தவனிடம் வேண்டாம் என தலையசைத்து மறுத்தாள். தண்ணீர் வேண்டும் என்று செய்கை செய்தாள்.
அவன் நீர் கொண்டு வர வீட்டினுள் சென்றான். இது தான் சரியான தருணம் என தன் சக்தி முழுவதையும் திரட்டி ஒடலானாள்.
எது வழி என்று தெரியாமல் கால் போன போக்கில் ஒடினாள். கால்களில் குத்திய முட்களையும் கற்களையும் பொருட்படுத்தாமல் அவள் திசை தெரியாமல் ஒடினாள்.
பின்னால் அவன் ஒடி வந்து அவளை கூப்பிடுவது கேட்டும் நிற்காமல் ஒடினாள்.
எங்கோ தூரத்தில் வண்டி வரும் சத்தம் கேட்டது. செவி கூர்ந்து சத்தம் வரும் திசையை அறிந்தவள், அந்த திசையை நோக்கி ஒடினாள்.
சிறிது தொலைவில் தெரிந்த காட்டு பாதையில் ஒரு மோட்டர் பைக் வந்து கொண்டிருந்தது. அதில் கருப்ப சட்டையும் ஹெல்மெட்டும் அணிந்த ஒருவன் ஒட்டி வருவது மங்கலாக தெரிந்தது. ஒடி வந்ததால் முச்சிறைத்து, வியர்வை முகத்தில் வழிந்து கண்களை மறைத்தது.
இருப்பினும் பலம் முழுவதையும் திரட்டி அவன் வரும் பாதையை அடைத்து, "ஹெல்ப் ப்ளீஸ், என்னை யாரோ கடத்தியிருக்காங்க, ப்ளீஸ் காப்பாத்துங்க", என கண்களில் நீர் வழிய கெஞ்சினாள்.
முகத்தை மூடிய ஹெல்மெட்டினால் அவளால் அவனை சரியாக பார்க்க முடியவில்லை.
அவன் பின்னால் அமர செய்கை செய்ததும் பின்னால் ஏறி அமர்ந்து, " ரொம்ப தாங்க்ஸ், சீக்கிரம் போங்க" என அவசரப்படுத்தினாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro