Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Sudum Nilavu Sudatha Suriyan - 32

சுடும் நிலவு சுடாத சூரியன் – 32

"சம்யு, நீ சொல்றது எனக்குப் புரியலை" என தன் நெற்றியைத் தேய்த்து விட்டபடி மறுபடியும் கேட்டான் அகிலன்.

"அகில் அண்ணா, அவர் என்னை முன்னாடி கடத்தியிருந்தா தானே திருமபவும் கடத்த முடியும்?" என அவள் கேட்டவுடன், தலையைத் திருப்பி மித்ரனை வினோதமாக பார்த்தான் அகிலன்.

"அப்போ நீ வைத்தியர் வீட்டில் அடிப்பட்டு கிடந்தது எல்லாம் பொய்யா?" என கோபமாக கேட்டான் மித்ரன்.

"அண்ணா, உனக்கு முதலில் இருந்து சொன்னா தான் புரியும். உனக்கே தெரியும், சசி தான் என் பின்னாடி சுத்திட்டிருந்தான். வேறு வழியில்லாம தான், நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். இவரைப் புடவை கடையில் தான் முதலில் பார்த்தேன். பார்த்தவுடனே இவர் தான் என் ஸோல் மேட் என்று தெரிஞ்சு போச்சு. இரண்டு பேரும் மீட் பண்ணி பேசினோம். எனக்கு இவரை ரொம்ப பிடிச்சுப் போச்சு. இவருக்கு என் மேலே ஆசை இருந்தாலும், எனக்கு கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க என்று தெரிஞ்சதும் பின் வாங்கிட்டார். எனக்கு எப்படி கல்யாணத்தை நிறுத்தறது என்று தெரியலை. வேற வழியில்லாம நானும் ரவியும் பிளான் பண்ணி, பார்லர்லிருந்து எஸ்கேப் ஆயிட்டோம். ரவி தலைமாலை கெஸ்ட் ஹவுஸ் கீயை எனக்காக திருடி வைச்சிருந்தான். நானும் ரவியும் அங்கே தான் இருந்தோம். இவருக்கு அஞ்சு நாள் கழிச்சு தான் நாங்க தலைமாலை கெஸ்ட் ஹவுஸில் இருக்கிறோம் என்று தெரிஞ்சுது. நான் செஞ்சது தப்பு என்று திட்டி, என்னை ஜீப்பில் சென்னைக்குக் கிளப்பிட்டு வந்தார். காட்டு வழியே வரும் போது, எதிரே யானை வந்ததால், இவர் ஜீப்பை நிறுத்த, நான் சரிவில் குதிச்சிட்டேன். அது மலை சரிவு என்கிறதால் எனக்கு நிறைய அடிபட்டிருச்சு. உடனடியாக எனக்கு வைத்தியம் பார்க்கனும் என்று என்னை வைத்தியர் வீட்டில் கொண்டு சேர்த்தார்" என முச்சு விடாமல் சொன்னாள்.

அவள் சொன்னதை கேட்டதும், அனைவரும் எப்படி உணர்ந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. நாதன் பெருமூச்சு விட்டு உடலை தளர்த்திக் கொண்டார். ரவி, சேரில் இறுக்கம் தளர்ந்து சாய்ந்து உட்கார்ந்தான். வசந்தனது முகத்திலும் சொல்ல முடியாத நிம்மதி பரவியது. மித்ரனின் முகம் கோபத்தில் சிவந்தது. அகிலனது முகத்தில் புன்னகை பரவியது.

சித்தார்த் கண்கள் மலர ஆச்சரியத்துடன், ஸம்யுக்தாவை புதுசாக பார்ப்பது போல் பார்த்தான். சுவராசியமாக அவனது பார்வை அவள் மேல் படர்ந்தது.

"சம்யுக்தா, ஆர் யூ ஆல் ரைட்?" என சந்தேகத்துடன் கேட்டான் அகிலன்.

"ஐ ஆம் ஃபைன் அகில் அண்ணா. நீங்க நல்லா யோசிச்சேங்க என்றால் நான் சொல்றது உண்மை தெரியும். அந்த கெஸ்ட் ஹவுஸில் இவரோட கைரேகையே இருக்காது" என சொன்னவளை சிரிப்பை அடக்கி கொண்டு பார்த்தான் அகிலன்.

"அப்போ ஏன் உன்னை கடத்தினாங்க என்று ஹாஸ்பிடலில் சொன்னே?" என கோபமாக கேட்டான் மித்ரன்.

"வேற என்ன செய்யறது? இவரை கலயாண்ம் பண்ணிக்கலாம் என்று தான் ஓடி போனேன். இவர் மறுத்துட்டதால் என்ன செய்றது என்று தெரியலை. அது தான் என்னை கடத்தினாங்க என்று பொய் சொன்னேன்" என்று சொன்னவளை ஆத்திரத்துடன் பார்த்தான் மித்ரன்.

சித்தார்த், தன் வலது கையை வாயின் மேல் வைத்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டான். கண்கள் மின்ன, சமயுக்தா சொல்வதை நம்ப முடியாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.

"சம்யு, எதுக்கு என்று தான் எனக்குத் தெரியலை. ஆனால் நீ பொய் சொல்றே என்று நல்லா தெரியுது" என சொன்ன மித்ரன் யாரும் எதிர்பார்க்காத போது, சித்தார்த்தின் சட்டை காலரைப் பற்றி, அவனை தூக்கி நிறுத்தினான்.

"சொல்லுடா, சம்யுவை என்ன சொல்லி மிரட்டினே?" என ஆத்திரத்துடன் கேட்டவனை, "மித்ரன் ரிலாக்ஸ்" என அவனது கையை அழுத்தமாக பற்றினான் சித்தார்த்.

"அண்ணா, அவர் மேல இருந்து கையை முதலில் எடுங்க, அப்பறம் அண்ணன் என்று கூட பார்க்க மாட்டேன்" என உரத்த குரலில் சொன்ன தங்கையை நம்ப முடியாமல் பார்த்தான் மித்ரன்.

சித்தார்த்தின் கழுத்தில் இருந்து கையை உதறியவன், கண்கள் சிவக்க, ஆத்திரத்தில் உதடுகள் துடிக்க, வேகமாக மூச்சு இழைய, கையினால் தன் தலைமுடியை அழுந்த தள்ளி கோபத்தை அடக்க முயன்றான்.

சித்தார்த் திரும்பி சம்யுக்தாவை பார்த்த போது, அவள் கையினால் முகத்தை மூடி அழுது கொண்டிருந்தாள். சம்யுக்தா அவனுக்காக, அவள் அண்ணனிடம் கத்தியதை கேட்டதும், அவனது இதயத்தில் இனம் தெரியாத உணர்வுகள் எழுந்தன. கண் மூடி தன்னை கட்டுப்படுத்தியவன், சேரில் சாய்ந்து அமர்ந்தான்.

தன் உயிரை விட மேலாக தன்னை நினைக்கும் அண்ணனிடம், அப்படி பேசியது அவளை மிகவும் வருத்தியது. மித்ரனிடம் தனிமையில் சொன்னால் புரிந்து கொளவான் என்று நினைத்தாள். தன் அழுகையை கட்டுப்படுத்தி நிமிர்ந்தவள், "அகில் அண்ணா, வேற ஏதாவது கேள்வி இருக்கா? நான் ஆபிஸ் போகணும்" என கேட்டாள்.

"எதுவும் இல்லை சம்யு, உனக்கு ஏதாவது கேட்கிறதுக்கோ, சொல்றதுக்கோ இருக்கா?" என கேட்டான் அகிலன்.

"ஆமாம் அண்ணா" என்றவள், மித்ரனை திரும்பி பார்த்து, "என்னை காணவில்லை என்று அண்ணா, கேஸ் ஃபைல் பண்ணியிருந்தாங்க, அதை வாபஸ் வாங்கனும்" என அவள் சொன்னதை கேட்டதும், அகிலனே அதிர்ச்சி அடைந்தான். சித்தார்த்தின் முகம் இறுகி போயிருந்தது. மித்ரன் மேஜையை தன் முஷ்டியால் குத்தினான்.

"சம்யு, எனக்கு நீ ஏன் சித்தார்த் உன்னை கடத்தலை என்று சொன்னே என்று தெரியலை. ஆனா உங்கண்ணா கொடுத்த கேஸ் அப்படியே இருக்கட்டும். ஒரு வேளை நீ மனசு மாறி, உன்னை கடத்தினவங்களை தண்டிக்கனும் என்று நினைச்சா, அப்போ அது ரொம்பவே யூஸ்ஃபுல்லாக இருக்கும்" என்றான் அகிலன்.

"நான் தான் என்னை யாரும் கடத்தலை என்று சொல்றேனே. சித்தார்த் இன்னிக்கு ஊருக்குப் போறார், அவர் நிம்மதியா ஊருக்குப் போகட்டும்" என்று சொன்னாள்.

"சம்யு, நீ நாளைக்கு வா, நாம கேஸை வாபஸ் வாங்கிடலாம்" என அகிலன், மித்ரனைப் பார்த்தபடி சொன்னான்.

"நான் கிளம்பறேன்" என்று பொதுவாக சொன்னவள், தன் தந்தையை மட்டும் ஆழ்ந்து பார்த்துவிட்டு கதவை திறந்து வெளியே சென்றாள்.

அவள் சென்றவுடன், உடனே எழுந்த சித்தார்த் அகிலனை பார்த்து சிரிப்புடன் தலையசைத்து விட்டு வேகமாக வெளியே சென்றான்.

அகிலன் வாய் விட்டு சிரிக்க, நாதனின் முகத்திலும், வசந்தன் முகத்திலும் புன்னகை படர்ந்தது. ரவி எதற்கு வெட்கபடுகிறோம் என்று தெரியாமல் தலையை குனிந்து கொண்டான். மித்ரனின் முகம் மட்டும் எந்த உணர்வுகளுமற்று உறைந்திருந்தது.
நாதன், வசந்தனது தோள்களை அணைத்தபடி வெளியே செல்ல, ரவிகுமார் அவர்களை பின் தொடர்ந்தான்.

"மித்ரன்" என அவன் தோள்களை தட்டிய அகிலனது கையை கோபமாக தட்டி விட்டான்.
"நீ அரெஸ்ட் வாரண்ட் ஏன் இஷ்யூ பண்ணலை என்று இப்போ தான் தெரியுது. இங்கே என்ன நடக்க போகுது என்று உனக்கு முன்னாடியே தெரியும். நான் தான் தேவையில்லாம டென்ஷனா சுத்திட்டிருந்தேன். என் சொந்த தங்கையே என்னை ஏமாத்திட்ட மாதிரி தோணுது. எனக்கு இப்போ யாரை நம்பறது என்றே தெரியலை" என வெறுப்பாக சொன்னான் மித்ரன்.

"இல்லை மித்ரன், எனக்கும் நிஜமா இது தான் நடக்க போகுது என்று தெரியாது" என அவனது கண்களைப் பார்த்து சொன்ன அகிலனது குரலில் உண்மை தெரிந்தது.

சேரில் உடகார்ந்த மித்ரனின் அருகே மேஜையில் சாய்ந்து நின்றவன், "ஆனா, எனக்கு இண்டியூஷன் இருந்தது. சம்யு கண்டிப்பாக சித்தார்த்தை அரெஸ்ட் பண்ண விட மாட்டா என்று நினைச்சேன்" என நிறுத்தினான்.

"அவ சித்தார்த்தை சரியா அடையாளம் தெரியலை என்று சொல்லுவா என்று தான் நினைச்சேன். ஆனா கண்டிப்பா கடத்தவே இல்லை என்று சொல்லுவா என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. இன்ஃபாக்ட், அவ கேஸை வாபஸ் வாங்கனும் என்று சொன்னது, எனக்கே பெரிய அதிர்ச்சி தான்" எனறான் அகிலன்.

"அகிலன், அவ ஏன் அப்படி சொன்னா?" என ஆற்றாமையுடன் கேட்டான் மித்ரன்.

"ஸம்யுவை தவிர வேற யாரும் அதுக்குப் பதில் சொல்ல முடியாது மித்ரன்" என அவனது தோளை ஆதரவாக தட்டினான் அகிலன்.

அகிலனது அறையில் இருந்து மெதுவே நடந்து, வசந்தனின் கார் நின்றிருக்கும் இடத்திற்கு யோசித்தபடி சென்றாள் சம்யுக்தா.

"யுக்தா.." என பின்னால் சித்தார்த்தின் குரல் கேட்டவுடன், தன் நடையின் வேகத்தைக் கூட்டியவள், கார் அருகே சென்றாள்.

அவள் கார் அருகே செல்வதற்குள், சித்தார்த் அவளருகே வந்து விட்டான்.

"தாங்க்ஸ் எ லாட், யுக்தா" என சொன்னவனது குரலில் உணர்ச்சிகள் நிறைந்திருந்தது.
மையமாக தலையசைத்தவள், வசந்தன் வருகிறாரா என திரும்பி எட்டிப் பார்த்தாள்.

"யுக்தா, ஸோ, யூ காட் தி ஆன்ஸர்?" என சித்தார்தின் உதடுகள் சிரிப்பில் வளைய, கண்களில் காதல் தததும்ப கேட்டான்.

அவன் என்ன சொல்கிறான் என்று புரிந்தும், அதை வெளிகாட்டாமல், மறுபக்கம் திரும்பி "ஸாரி, நீங்க என்ன சொல்றீங்க என்று புரியலை" என எரிச்சலாக சொன்னாள்.

"உன் சோல் மேட் யார் என்று இப்போ தெரிஞ்சிடுச்சா?" என மென்மையாக கேட்டவன், காற்றில் நெற்றியில் படிந்த அவளது முடிகற்றையை இயல்பாக ஒதுக்க கையை நீட்டினான்.

அவனது கையை வேகமாக தட்டி விட்டவள், "மிஸ்டர். சித்தார்த், நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிட்டிருக்கீங்க" என அவள் சொன்னவுடன், கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு காரில் சாய்ந்து நின்றான்.

"மிஸ் சம்யுக்தா நான் எதை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்" என நக்கலாக கேட்டான்.

"எங்க அப்பா, உங்கப்பா அம்மாவுக்கு நடந்தது விபத்தில்லை, கொலை என்று மறைச்சது தப்பு தான். ஆனா அது அவர் வேண்டுமென்றே மறைக்கலை. எனக்காகவும், எங்க குடும்பததுக்காகவும் தான் செஞ்சார். நீங்க அதனால் பாதிக்கபட்டிங்க என்பதையும் மறுக்கலை. அதுக்குப் பிராயச்சித்தமாக தான், நீங்க என்னை கடத்தினதை இப்போ இல்லை என்று போலிஸ் கிட்டே சொல்லிட்டு வந்துட்டேன்" என சொன்னாள்.

"ஓ, இப்போ நீ சொன்னதால், நான் இன்னிக்கு வரைக்கும் பட்ட கஷ்டம் எல்லாம் இல்லை என்றாகி விடுமா?" என ஆழ்ந்த குரலில் கேட்டான்.

"நான் செஞ்சது பிராயசித்தம் என்று தான் சொன்னேன். உங்க கஷ்டத்துக்கு அது ஈடாகும் என்று சொல்லலை" என மெதுவான குரலில் சொன்னாள்.

"ஸாரி, நான் உன்னை கடத்தியிருக்க கூடாது, ஆனா..." என்று அவன் சொல்லும் போதே, அவள் வேகமாக திரும்பி கண்களில் அனல் தெறிக்க அவனை பார்த்தாள்.
"ஸாரியா.. என்ன பேசறீங்க? காலம் காலமா இது தான் நடக்குது. உங்க ஆண்கள் சண்டையில் பொண்ணுங்க தான் மாட்டிக்கிட்டு கஷ்டப்படறாங்க. ஏன் தைரியம் இருந்தா என்னை கடத்தினதுக்குப் பதிலா, மித்ரனை கடத்தியிருக்க வேண்டியது தானே? அதுக்கு உனக்கு தைரியம் கிடையாது. உன்னால் என்னோட வாழ்க்கை, கல்யாணம் எல்லாம் போச்சு. என்னை கடத்தினதில் எனக்கு ஏதாவது தப்பா நடந்திருக்குமோ என்று சசி நினைக்கிறான். ஏன் எங்கம்மாவே அப்படி தான் நினைக்கிறாங்க. காலம் முழுசும் இது ஒரு கரையா என் மேல இருந்திட்டே இருக்கும். எனக்கு வர கோபத்துக்கு உன்னை கட்டி வைச்சு உதைக்கனும் என்று தோணுது" என் சொன்னவளின் குரல் கோபத்தில் நடுங்கியது.

அவள் சொன்னதைக் கேட்டதும், அவனது முகம் கறுத்துப் போனது. இப்போது தான் உள்ளே அவனை போலிஸ் கேஸில் இருந்து காப்பாற்றியிருந்தாள். அத்தனை பேர் எதிரேயும் அவனை ஸோல் மேட் என்று சொல்லியிருந்தாள். தன்னை அவள் மன்னித்து விட்டான் என்றே அவன் எண்ணியிருந்தான். அவளது கோபம் அவன் எதிர்பாராத ஒன்று. தன்னை சமன்படுத்திக் கொண்டு அவளை இயலாமையுடன் பார்த்தான்.

"உன் வாழ்க்கையை என்னாகும் என்று நீ கவலைப் பட வேண்டாம். நான்.." என அவன் சொல்லும் போதே, அவளது அனல் பார்வையில் மேலே பேச முடியாமல் நிறுத்தினான்.

"நீ என்ன செய்ய போறே? என்னை கல்யாணம் செஞ்சிக்க போறே, எனக்கு வாழ்க்கை கொடுக்க போறே, அது தானே?" என நக்கலாக கேட்டவள், "இதை எங்கிட்டயே வந்து சொல்றே. உன்னை எல்லாம் ஏன் கம்பத்தில் கட்டி வைச்சு உதைக்க கூடாது?" என அவள் சொல்லும் போதே வசந்தனும், நாதனும் அருகே வந்தனர்.

"என்னாச்சு, சம்யு?" என கவலையுடன் கேட்ட வசந்தனிடம், "எனக்கு ஆபிஸுக்கு லேட்டாகுது. போலாம்" என சொன்னாள்.

சித்தார்த் கார் பக்கமிருந்து திரும்பி, அவள் ஏறுவதற்கு வழி விட்டான். காரில் ஏறியவளை பார்த்துக் கொண்டே நின்றான் சித்தார்த்.

சென்னை சர்வதேசம் விமான நிலையம்..

"அப்பறம் எப்போ சென்னை வருவே சித்தார்த்?" என கேட்டான் அகிலன்.

"தெரியலை அகில். அங்கே நந்தனால் தனியா மேனேஜ் பண்ண முடியலை. டைம் கிடைக்கும் போது தாத்தாவை பார்க்க கண்டிப்பா வருவேன். இனிமே தாத்தா டிராவல் பண்ணா ரிஸ்க் என்று டாக்டர் சொல்லியிருக்கார்" என வருத்தமுடன் சொன்னான்.

"சித்தார்த், உங்கிட்ட பர்ஸனலா ஒரு கேள்வி?" என நிறுத்தினான் அகிலன்.

சம்மதமாக தலையசைத்தவனிடம், "சம்யுவை நீ ஏன் கடத்தினே சித்தார்த்? நான் ஒரு போலிஸ் ஆபிஸரா கேட்கலை. சம்யுவோட வெல் விஷரா கேட்கிறேன்" என கேட்டான்.

"அகிலன், அது தான் நான் சொன்னேனே. வசந்தன் அங்கிளை பழி வாங்க.." என அவன் சொல்லும் போதே, அகிலனின் கூர்மையான பார்வை அவனை பேச விடாமல் செயதது.

"அது மட்டும் காரணமில்லை அகில்.." என சொன்ன சித்தார்த், அதற்கு மேல் சொல்ல முடியாமல் மறுபக்கம் தலையை திருப்பிக் கொண்டான்.

"நானும் அதை தான் நினைச்சேன் ஸிட்" என சொன்ன அகிலனிடம், "ஒகே, அகில் நான் கிளம்பறேன். அமிதாவிடம் வீட்டுக்குப் போயிட்டு கால் பண்றேன் என்று சொல்லு" என்றான்.

"ஸிட் அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு, மித்ரன் எனக்கு முன்னாலேயே கிளம்பிட்டான்.

ஏன் இன்னும் வரலை என்று தெரியலை" என்ற அகிலனிடம், "ஷுயூர்" என்று சொன்னான்.

"விக்ரம் அப்பறம் உங்கிட்ட பேசறேன் என்று சொன்னான். முரளிதரன் கேஸில் உங்கிட்டேயும் ஸ்டேட்மெண்ட் வாங்கனும் என்று சொன்னான்" என்றான்.

"என் யு.எஸ் நமபரில் கால் பண்ண சொல்லு" என அவன் சொல்லும் போதே பத்தடி தொலைவில் நின்ற ஜீப்பில் இருந்து இறங்கி வந்தான் மித்ரன்.

"ஹாய் ஸிட், ஹாப்பி ஜர்னி" என கை நீட்டிய மித்ரனை தோளோடு அணைத்துக் கொண்டான் சித்தார்த்.

"ஸாரி, காலையில் உன் சட்டையை பிடிச்சிட்டேன். எனக்கிருந்த கோபத்தில் என்ன செய்யறேன் என்றே தெரியலை" என வருத்தமுடன் சொன்ன மித்ரனின் தோளை தட்டியவன், "மித்ரன், நோ வொரீஸ். நீ செஞ்சது தப்பே இல்லை. எந்த அண்ணனும் செய்யறதை தான் நீ செஞ்சே. நான் தான் உங்கிட்ட நடந்தது எல்லாத்துக்கும் ஸாரி கேட்கணும். வெறும் ஸாரி மட்டும் பத்தாது" என வருத்தமாக சொன்னான் சித்தார்த்.

"உன் கார் என்னாச்சு மித்ரன், போலிஸ் ஜீப்பில் வந்திருக்கே?" என கேட்டான் அகிலன்.
"வரும் போது, கார் பிரேக் டவுன் ஆயிடிச்சு. அந்த வழியா வந்த போலிஸ் ஜீப்பில் வந்தேன்" என்றான் மித்ரன்

"ஸிட், உங்கிட்ட கேட்கறதுக்கு எனக்கு நிறைய கேள்விங்க இருக்கு. ஆனா ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. சம்யுவை கடத்தின பிளான் எப்படி வாட்டர் டைட்டாக, ஒரு தப்பும் இல்லாம இருந்தது. இது மாதிரி எங்க டிபார்ட்மெண்ட்டில், இல்லைனா, டிஃபன்ஸில் மட்டும் தான் பிளான் பண்ணுவாங்க. உன் கை ரேகை எங்கேயும் இல்லை. ரவியை அடிச்சும் அவன் எதுவும் சொல்லலை" என ஆர்வமாக கேட்டான் மித்ரன்.

"ஒகே.." என தோளை குலுக்கிய சித்தார்த், "உலகம் முழுக்க, ஃபார்மல் இண்டெலிஜென்ஸ் நெட்வொர்க் மாதிரி, அதாவது அந்த நாட்டு உளவு துறைக்கு இணையா இன்ஃபார்மல் இண்டெலிஜென்ஸ் நெட்வொர்க் இருக்கும். அதை யூஸ் பண்ணேன்" என அவன் சொன்ன போது அவனது செல்லில் ஏதோ மெஸெஜ் வந்தது. அதை எடுத்துப் பார்த்தவனது முகத்தில் ஒரு மந்தகாச புன்னகை மலர்ந்தது. முகம் சிவக்க, தன் தலைமுடியை பின்னால் தள்ளி விட்டான்.

"ஹ்ம்ம். தெரியும், ஆனா.." என மித்ரன் சொல்லும் போதே, "இதை பத்தி இன்னும் டீடெயில்ஸ் வேணும் என்றால், உன் தங்கையைக் கேளு. இரண்டு வாரமா அதை யூஸ் பண்ணி என்னை பத்தி விவரங்களை சேகரிச்சிட்டிருக்காள்" என சிரித்தபடி சொன்னான் சித்தார்த்.

"ஸிட். அப்பறம் எப்போ சென்னைக்கு வருவே?" என ஆர்வத்துடன் கேட்டான்.
"உன் தங்கை எப்போ கம்பம் ரெடி பண்றாளோ அப்போ வருவேன்" என சொல்லும் போதே அவனது கண்கள் மின்னி, உதடுகள் புன்னகையில் வளைந்தன.

"அப்படினா?" என புரியாமல் கேட்ட மித்ரனை பார்த்துச் சிரித்தவன், "மித்ரன், உன் செல்போன் வழியா, லைவா நாம் பேசறதைக் கேட்டிருக்கிற யுக்தாக்கு, நான் சொல்றது புரியும்" என சொன்னான்.

தன் தோளைக் குலுக்கிய மித்ரனிடம் கையை நீட்டினான் சித்தார்த். மித்ரன் தன் செல்போனை எடுத்து சித்தார்த்திடம் கொடுக்க, மித்ரனது போனில் சம்யுவின் போட்டோவுடன் ஆன் கோயிங் கால் என்று காண்பித்தது. அதை கட் செய்து திருப்பி அவனிடம் கொடுத்தான் சித்தார்த்.

"யூ ஆர் ஸ்மார்ட் ஸிட், ஆனா ஏன் காலை கட் பண்ணே?" என்ற அவன் தோளைத் தட்டிய அகிலனை பார்த்துக் கண்ணடித்தவன், "யுக்தா, சீக்கிரம் கம்பத்தை ரெடி பண்ணு" என சத்தமாக சொன்னான்.

அகிலன் யாரிடம் சொல்கிறான் என பார்க்க, சித்தார்த் மித்ரனது ஜீப்பைக் காண்பிக்க, மித்ரன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.

"யுக்தா, ஐ அம் ஜஸ்ட் எ போன் கால் அவே பேபி" என சத்தமாக சொன்னவன், மிதரனிடமும், அகிலனிடமும் கை குலுக்கி விட்டு, ஜீப்பை பார்த்து கையசைத்து விட்டு உள்ளே சென்றான் சித்தார்த்.

ஜீப்பில் அமர்ந்திருந்தவளின் கண்களில் நீர் நிறைய, உதடுகளில் புன்னகை உறைந்திருக்க, அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஸம்யுக்தா.

End of Sudum Nilavu Sudatha Suiryan – Part 1

Hi there..
This is my fourth story. With Maruvaarthai I felt like, was sort of repeating certain sequences. Want to try out something different. This thriller genre is entirely new to me.. Just tried my hands and not sure how convincing and appealing the story was to the readers. Hope you enjoyed this story, I learnt a lot while writing the story and the readers comments and conversations were really hilarious.
I started the story by 1st week of September and it has dragged tlll November last week. Lot of breaks due to various reasons and really want to thank all the readers who sent offline messages and prodded for next update. Without their motivation, this story is not really possible.
Thanks for your comments, likes and support. It means a lot to me.
This story is part 1 and planning to write part 2 by Jan 18 or July 18. Part 2 will be mostly a romance story of Siddharth and Samyuktha and titled Marakkathe nee, Marukkaathe Nee. Shall be starting my travelogue shortly by Dec 1st, 2017. Counting on you gals and guys.
Thanks
Niharika Nivas

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro