Sudum Nilavu Sudatha Suriyan -3
சுடும் நிலவு சுடாத சூரியன் – 3
ராயல் ப்ளு லெஹங்காவில் தன் எதிரே வந்து நின்ற சம்யுக்தாவைப் பார்த்து சசிதரனுக்கு ஒரு நொடி மூச்சு நின்றே விட்,டது. அவளது மின்னும் சந்தன நிற சருமத்திற்கு, நீல நிறம் அழகாய் பொருந்தியது. பார்டரில் இருந்த வெண்ணிற கற்களும், குந்தன் முத்துக்களும் எழில் சேர்த்தன. மெல்லிய ராயல் பளூ ஜார்ஜெட் சுன்ரியில் வெள்ளி நிற ஜர்தோஸி பூக்களும் இலையும் கொடியும் அவளது அழகை இன்னும் மெருகுட்டியது.
"சசி, இப்ப ஃபிட்டிங் சரியாக இருக்கா?" என முன்னும் பின்னும் இயலபாக திரும்பி நின்று கேட்டவளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் மலைத்து நின்றான்.
"சசி... சசி.. " என அவள் அருகில் வந்து விரல் சொடுக்கவும் தன்னிலை அடைந்தான்.
"ஸோ ப்யுட்டிஃபுல்", என்று அவளின் கன்னஙளை தொட வந்தவனை நாசுக்காக தடுத்தவள், "நீங்க ஃபிட்டிங் பார்க்கலையா?" என கேட்டாள்.
"நாளைக்கு தான் ரெடியாகும் போலிருக்கு" என்றான்.
"சரி நாளைக்கு திரும்பவும் வரலாம். நான் டிரஸ் மாத்திட்டு வந்துவிடுகிறேன்" என்றாள்
"எதாவது ஹெல்ப் வேண்டுமா?" என்றவனை புரியாமல் பார்த்தாள்.
"டிரஸ் சேஞ்ச் செய்றதுக்கு... எனி ஹெல்ப்" என்றவனை கண்கள் மின்ன, சுட்டு விரல் அசைத்து, "கிட்ட வந்தீங்க. மித்ரன் கிட்ட மாட்டி விட்டு விடுவேன். இதை சொன்னால் உங்க தோலை உரிச்சிடுவான்" என்றாள்.
"அவன் இன்னும் இரண்டு நாளைக்கு பின்னால் என்ன செய்றான் என்று பார்க்கிறேன். வசமாக மாட்டிக் கொள்ளப் போவது நானா இல்லை அவனா என்று நீயும் பார்க்கத் தானே போகிறாய்?" என அழுத்தமான குரலில் அவன் சொல்ல, இரு புருவஙளையும் உயர்த்தி அவனை கேள்வியாக பார்த்தாள்.
"இரண்டு நாளைக்கு பிறகு என்ன நடக்கும் என்று தெரியுமில்லை. அதுவும் இல்லாம மாப்பிள்ளை என்றால் மரியாதை கொடுத்து தானே ஆக வேண்டும்" என கேலியான தொனியில் சொன்னான்.
ஸம்யுக்தாவிற்கு சசியின் குரல் மாறியது போல தோன்றியது. தன் சுட்டு விரலால் நெற்றியை தேய்த்துக் கொண்டாள்.
"சம்யு, ஜஸ்ட் கிட்டிங், கிளம்பு" என்று இயல்பான் குரலில் சசி சொன்னாலும், எதோ ஒன்று ஸ்ருதி மாறி வேறு ,மாதிரி ஒலித்தது போல் தோன்றியது.
பார்லரின் வாசலில் அவளை இறக்கி விட்டவன், "நான் ஒன்றரை மணிக்கு வந்து பிக் அப் செய்றேன்" என்றான்.
"வேண்டாம் சசி, ஸ்ருதி கார் வைச்சிருக்கா, நான் அதில் வந்து விடுகிறேன். இப்போது போய் நீங்கள் டிரஸ் செஞ்சி கிளம்பினா தான் இரண்டு மணிக்கு ஹோட்டலுக்கு வர முடியும்" என்றாள்.
"சரி பீ கேர்ஃபுல். எதாவது வேண்டும் என்றால் என்னை செல்லில் கூப்பிடு. எதுவாக இருந்தாலும்" என்று கண்ணடித்து சொன்னவனிடம் உதை கிடைக்கும் என்று செய்கை செய்தவள், உதட்டில் இனிமையாக உறைந்த புன்னகையுடன் அவனுக்கு கையசைத்து விட்டு பார்லரில் நுழைந்தாள்.
வரவேற்பில் இருந்த பெண், "மேம் சிக்கிரம் வாங்க. லேட்டாகி விட்டது" என கையை பிடித்து அழைத்து சென்றாள்.
"சம்யு" என்று உள்ளே வந்தவளை அணைத்துக் கொண்ட ஸ்மிருதி, "என்ன இன்னிக்கு சசியோட ரொமன்ஸ் ஜாஸ்தி போல இருக்கு, முகம் எல்லாம் சிவந்திருக்கு. சசியை பார்த்தால், இந்த பூனையும் பால் குடிக்குமா என நினைச்சேன். இப்போ தான் தெரியுது.." என இழுத்தவளை, "இங்க உட்காருங்க" என்ற பியுட்டிஷியனின் குரல் நிறுத்தியது
"நீ நினைக்கிறது போல் எதுவும் நடக்கலை" என சொன்ன சம்யுவிடம், "நம்பிட்டேன்" என்றாள் கிண்டலாக ஸ்மிருதி.
"நான் லைட் மேக் அப் செய்து கொள்கிறேன் என்ற ஸ்மிருதி, பியுட்டிஷியனிடம், "ஒன்றரை மணிக்குள்ளே ரெடி பண்ணுங்க", என்றாள்.
தேவதையாக ஆரஞ்சு-பிங்க் கலரில் மஸ்தானி உடையில் தயாரானவளின் இடுப்பை கிள்ளியவள், "ஐய்யோ விடு ஸ்மிருதி, நேரமாகி விட்டது. சசியின் அம்மா திட்டப் போறங்க" என்றாள் சம்யுக்தா.
காதிலும் கழுத்திலும் தொங்கிய ஆண்டிக் ஜவல்லரியும் கையில் அடுக்கியிருந்த ஆரஞ்சு-பிங்க் த்ரெட் வளையல்களும், அவளின் நீண்ட தலைமுடியை அடர்ந்த சுருள்களாக மாற்றியிருந்த்து அவளின் அழகை பல மடங்கு அதிகரித்துக் காட்டியது.
"சம்யு, என் கண்ணே பட்டு விடும் போலிருக்கு. தேவதையெல்லாம் இப்படி உன்னை மாதிரி தான் இருக்கும் போல" என்றாள்.
"ஒவராக ஒட்டாதே. போய் காரை எடு" என்றாள் ஸம்யு.
"சசி பாடு இன்னிக்கு கஷ்டம் தான். சரி நான் கார் எடுத்திட்டு வரேன். இங்கே பார்க்கிங் இல்லை, அதனால பக்கத்து தெருவில் விட்டிருக்கேன். நீ வாசலில் வைட் பண்ணு. கார் வந்தவுடன் உட்னே ஏறி விடு, டிராஃபிக் அதிகமாக இருக்கு, என்னால ரொம்ப நேரம் காரை நிறுத்த முடியாது", என்றாள் ஸ்மிருதி.
"நானும் உன்னோட வந்திடறேன்", என்ற சம்யுவிடம், :இல்லை வேண்டாம். மேக் அப் கலைந்து விடும். என் கார் தெரியுமிலை", என்றவளிடம், "தெரியும். ரெட் கலர் ஐ20 தானே", என்றாள் சமயுக்தா.
ஆமாம் என்று தலையசைத்த ஸ்மிருதி, எதிரே சாலையை கடந்து சென்று மறைந்தாள்.
"மேம். நீங்க உங்க கிரடிட் கார்டை மறந்திட்டிங்க" என்று கார்டை கொடுத்த வரவேற்பரை பெண்ணிடம் நன்றி சொன்னவள், தன் மறதியை நினைத்து லேசாக பின் மண்டையில் தட்டிக் கொண்டாள்.
கார்டை ஸ்லிங் பாகில் வைத்து நிமிர்ந்தவளின் அருகில் வந்த ரெட் ஐ20 காரின் கதவு திறக்க உடனே அதில் ஏறினாள் சம்யுக்தா..
மித்ரன் ஹோட்டலில் நுழையும் போது மணி இரண்டே கால் ஆகி விட்டது. அம்மவிடம் நன்றாக வாங்கி கட்டிக் கொள்ளப் போகிறோம் என நினைத்தப்படி ஹாலில் நுழைந்து தன் அம்மாவை தேடினான்.
சசியிடம் தீவிரமாக பேசிக் கொண்டிருந்த வினோதினி, இவனை கண்டதும் முகம் மலர்ந்தார். அப்பாடி தப்பித்தோம் என நினைத்தவன், "அம்மா, இந்த குர்தா எப்படியிருக்கு" என்றான்.
"அழகன்டா நீ" என்று அவன் கன்னத்தை இழைத்தவர், "இப்படி டிரஸ் செய்வதை விட்டுவிட்டு எப்பவும் அந்த காக்கி டிரஸில் போரடிக்கிறாய்" என்றார்.
"இதுக்கே இப்படியா, ரிசப்ஷனில் டக்ஸ் அணிந்து கொண்டு எப்படி அசத்தப் போகிறேன் பார்" என்றான்.
"மச்சான். அது என்னோட ரிஷப்ஷன். ப்ளிஸ் டோண்ட் ஸ்டீல் த ஷோ", என்றான் சசிதரன்
"அம்மா, எங்கே சம்யு" என்ற மகனிடம், "அவளுக்காக தான் காத்திக்கிட்டு இருக்கோம்", என்றார்.
"மணி இரண்டரை ஆகி விட்டது. எப்பவும் அவ நேரத்திற்கு வர்றதில்லை" என சொன்னவன், சம்யுவை செல்லில் அழைத்தான்.
செல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாக தானியங்கி குரல் சொல்ல சசியிடம் அவளை அழைக்க சொன்னான். அவனுக்கும் அதே பதில் வர தன் அம்மாவிடம், " இன்னும் சின்ன பெண்ணாகவே இருக்கிறாள். ஒழுங்காக பாட்டரி சார்ஜ் கூட போடவில்லை பார்" என்றான் மித்ரன்.
:"டிரைவர் பிக் அப் செய்ய போய் இருக்கிறாரா?" என் கேட்டவனிடம், "இல்லை ஸ்மிருதி கூட இருக்கிறாள்", என்றார்.
ஸ்மிருதியின் செல்லை அழைத்தவன் அது பிஸியாக இருக்க மறுமுறையும் அழைத்தான்.
செல்லை எடுத்த ஸ்மிருதி சொன்ன செய்தியில் ஒரு நொடி அதிர்ந்தாலும் தன்னை சமன் செய்தவன், "நீ அங்கேயே இரு. நான் வருகிறேன்" என்றான்.
"ஸ்மிருதி வண்டியில் ஏதோ ப்ராப்ளமாம், கால் டாக்சியும் கிடைக்கலை போலிருக்கு. நான் போய் அழைச்சிட்டு வர்றேன்", என்று கிளம்பினான்.
ப்யுட்டி பார்லரில் அழும் நிலையிலிருந்த ஸ்மிருதியை கண்டவுடன் மித்ரனுக்கு மிச்சமிருந்த நம்பிக்கையும் தகரந்த்தது. இரூப்பினும் எதையும் வெளிக் காட்டாமல், "ஸ்மிருதி, நிதானமாக என்ன நடந்தது என்று சொல்லு", என்றான்.
"அண்ணா, நான் கார் எடுத்து கொண்டு வரும் போது பார்லர் வாசலில் சம்யுவை காண்வில்லை. பின்னால் டிராஃபிக் அதிகமானதால் என்னால் வண்டியை அதிக நேரம் நிறுத்த முடியவில்லை. பக்கத்து கடை வாசலில் நிறுத்திட்டு இங்கே உள்ளே வந்து பார்த்தேன். சம்யு இங்கேயும் இல்லை. செல்லில் கூப்பிட்டாலும் ஸ்விட்ச் ஆப் என்றே வருகிறது" என்று சொல்லும் போதே அழுது விட்டாள்.
"ஸம்யு நேரமாகி விட்டதால், ஹோட்டலுக்கு போயிட்டாளா என்று தெரிஞ்சுக்க தான் உங்களை செல்லில் கூப்பிட்டேன். நல்ல வேளை நீங்களே திரும்ப கால் பண்ணீங்க" என்றாள்.
"இருக்கும், அவ நேராக ஹோட்டலுக்கு போயிருப்பா" என்ற மித்ரன் , மெஹந்திக்கு, மனைவியுடன் வந்திருந்த தன் நண்பனும் சக போலிஸ் அதிகாரியான அகிலனை அழைத்தான்.
"அகில், ஸம்யுக்தா ஹோட்டலுக்கு வந்தவுடன் என்னை கூப்பிடு" என்றான்.
"எனி ப்ராப்ளம்", என்ற அகிலனிடம், "எதுவும் இருக்ககூடாது என்று தான் வேண்டிக்கிறேன்", என்றான் தளர்ந்த குரலில் மித்ரன்.
"அகில், நீ எதற்கும் அப்பா, அம்மா சசி மேல ஒரு பார்வை வைத்து கொள். எதுக்கும் அவங்களை வெளியில் விடாதே. அலர்ட இரு.. எதற்கும் அந்த ஏரியா போலிஸை அலர்ட் செஞ்சிடு" என்றான்.
"சரி. நான் பார்த்துக் கொள்கிறேன்" என உறுதியளித்த அகிலனிடம், மித்ரன் நன்றி சொன்னான்.
"சிசி டிவி பதிவு இருக்கா?" என கேட்ட மித்ரனிடம் அதன் சிடியை பதட்டத்துடன் அந்த பார்லரின் மேலாளர் கொடுத்தாள்.
சிசி டிவியின் பதிவை ஓட விட்டு பார்க்கும் போது, அழகு தேவதையாய் பார்லரின் வாசலை நின்றிருக்கும் தங்கையை கண்டதும் இதயத்தில் சுமை ஏறியது.
சம்யுக்தா கிரடிட் கார்டை கொடுத்த பெண்ணிடம் நன்றி சொல்லி தன் பாகில் வைத்து நிமிர்கிறாள், அவள் அருகில் வந்து நின்ற ரெட் ஐ20 காரின் கதவு திறக்க அதில் ஏறி கொள்கிறாள்..
"அண்ணா, இது என் கார் மாதிரியே இருக்கு. சம்யு என் கார் என்று நினைத்து ஏறிட்டாள்" என்று நடுங்கும் குரலில் சொன்ன ஸ்மிருதியிடம், "கவலைப்படாதே. கார் மாறி ஏறி விட்டது தெரிந்ததும் எங்காவது பக்கத்தில் இறங்கி இருப்பாள்", என்றான்
"இங்கிருந்து ஹோட்டல் பத்து நிமிடம் தான். மணி இப்போது மூன்றரை ஆகி விட்டது" என்றாள் கவலையுடன் ஸ்மிருதி.
எத்தனை முறை பார்த்தும் அவனால் சம்யு ஏறிய காரின் நம்பரை பார்க்க முடியவில்லை.
சிடியை காப்பி செய்து எடுத்துக் கொண்டவன், கன்ட்ரோல் ருமிற்கு போன் செய்து பார்லருக்கு அருகிலிருந்த சிக்னலின் சிசி டிவி பதிவை எடுத்து அவன் செல்லிற்கு அனுப்ப சொன்னான்.
"ஸ்மிருதி, உன் கார் சாவியை கொடு. உன் காரை வீட்டில் விட சொல்கிறேன். நீ என்னோடு வா" என்றான்.
சரி என தலையசைத்து சாவியை கொடுத்தவள், அவனுடன் சற்று தள்ளி நிறுத்தியிருந்த அவன் போலிஸ் இன்னோவா வண்டியின் முன் கதவை திறந்தாள், அங்கே ஸீட்டில் இருந்த சம்யுக்தாவின் ஸ்லிங் பாகை கண்டு , "அண்ணா", என்று அலறி விட்டாள்.
என்ன என்று பதறியப்படி வந்த மித்ரனிடம், "அண்ணா, இது சம்யு எடுத்து கொண்டு வந்த பாக்", என்றாள்.
சிசி டிவி பதிவில் ஏற்கனவே அந்த பாகை பார்த்திருந்தவன், அதை திரும்பவும் தன் வண்டியில் கண்டவுடன் கண்கள் இருட்டி கொண்டு வந்தது. தலையைக் கையால் தாங்கி பிடித்தப்படி அருகிலிருந்த கடையின் படிக்கட்டில் அமர்ந்து கொண்டான்.
கண்களை அழுத்தமாக மூடி கொண்டால், சற்று முன் பதிவில் பார்த்த சம்யுவின் சிரித்த முகம் வந்து போனது. இயல்பாக கார்டை மறந்து தலையில் தட்டி கொண்டதை நினைத்தவனுக்கு கண்களைக் கரித்தது
"சம்யு எங்கிருக்கிறாய்? எங்கிருந்தாலும் திருமபவும் எங்களிடம் வந்து விடு" என்று தன் தங்கையிடம் மானசீகமாக யாசித்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro