Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Sudum Nilavu Sudatha Suriyan - 29

சுடும் நிலவு சுடாத சூரியன் – 29

"நான் அனுப்பிய விசா அப்ளிகேஷனில் பேப்பர்ஸ் சரியில்லை, என்று ரிஜக்ட் பண்ணி திருப்பி அனுப்பிட்டாங்க. லண்டனில் இருக்கிற இந்தியன் ஹை கமிஷனை கால் பண்ண போது, அவங்க ஒழுங்கான காரணத்தை சொல்லலை. திரும்பவும் அப்ளை பண்ண போது, முதல் தடவை ரிஜக்ட் ஆனதால் ஆறு மாசம் கழிச்சு திரும்பவும் அப்ளை பண்ண சொன்னாங்க."

"அப்போ தான் வெற்றி தாத்தா என்னை பார்க்க லண்டன் வந்தார். அவர் எங்கூட அங்கே ஒரு மாசம் இருந்தார். அவரோடு பேசிட்டு இருக்கும் போது ஒரு நாள், எனக்கு தொடர்ச்சியா வந்த கனவுகளை பத்தியும், ஆழ்நிலை மயக்கத்தில் அஞ்சு வயசில் நடந்ததையும் சொன்னேன். தாத்தாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. நம்ப முடியாம மயக்கமாயிட்டார். அவருக்கு ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்திருந்ததால் நான் பயந்துட்டேன். அதுக்குப் பிறகு நானும் அவரிடம் அந்த விபத்தை பத்தி பேசலை. அவரும் கேட்கலை. இந்தியா கிளம்பும் போது, அவரும் என்னை இங்கே வரவே கூடாது என்று சொல்லிட்டார்".

"ஆறு மாசம் கழிச்சு, நான் திரும்பவும் விசா அபளை பண்ணேன். அப்பவும் ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. அப்போ தான் நான் இன்னொரு..." என்று சித்தார்த் சொல்லும் போதே, மித்ரனுக்கு அடுத்து அவன் என்ன சொல்ல போகிறான் என்று புரிந்து போனது. அகிலன் இங்கே பேசும் அனைத்தையும் பதிவு செய்கிறான் என்று நன்றாக தெரிந்திருந்தது. இதனால் சித்தார்த்துக்கு பின்னாளில் நிறைய பிரச்சனைகள் வருமே என்று யோசித்தபடி அகிலனை பார்த்தான்.

ஆனால் அகிலனோ சுவராசியமின்றி, "சித்தார்த், உன் கதையைக் கொஞ்சம் நிறுத்து" என சொன்னவன், நெற்றியைத் தேய்த்துக் கொண்டு, "எனக்கு தலை வலிக்குது, நாதன் அங்கிள், எனக்கு டீ கிடைக்குமா? நேத்து இங்கே சாப்பிட்ட டீ நல்லா இருந்தது" என்றான்.

திரும்பி சித்தார்த்தை, அகிலன் கூர்மையாக பார்க்க, அவன் அதற்குள் தன்னை தொகுத்து சமன்படுத்திக் கொண்டான்.

"சித்தார்த் என்னமோ சொல்லிட்டிருந்தே, ஹ்ம்ம். திரும்பவும் உன் விசா அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆயிடிச்சு, அதற்கு பிறகு என்னாச்சு?" என ஆழ்ந்த குரலில் கேட்டான்.
"நான் சுநீதி அத்தைகிட்ட இதைப் பத்தி பேசினேன். அப்போ தான் தேவன் தாத்தா, இந்தியன் ஹை கமிஷனில் எனக்கு இந்தியாவுக்கு விசா கொடுக்க கூடாது என்று சொன்னதை கேள்விபட்டேன். அதனால் வெற்றி தாத்தா அடிக்கடி என்னை லண்டனில் வந்து பார்த்துட்டுப் போவார்"

"இரண்டு வருஷம் லண்டனில் இருந்துட்டு திரும்பவும் அமெரிக்கா போனேன். என்னை பிரிஞ்சதில் தாத்தாவுக்கும், பாட்டிக்கும் மனதளவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தது. தேவன் தாத்தாவுக்கு அப்போது தான் வெற்றி தாத்தாவோட தவிப்பும், பிரிவு தர வேதனையும் புரிஞ்சுது. எனக்கு இந்தியா போக அனுமதி கொடுத்தாங்க. ஆனா வெற்றி தாத்தா என்னை இந்தியாவுக்கு வரவே கூடாது என்று சொல்லிட்டார். இங்கே வந்தா எனக்கு ஏதாவது ஆபத்து வந்துடும் என்று பயந்தார். நான் அவரோட பேரன் என்று வெளியே சொல்ல வேண்டாம் என்று சொன்னேன். ஆனா என்னை பார்த்தாலே, அவரோட பேரன் என்று சொல்ற மாதிரி தான் நான் இருந்தேன்".

"அதனால் அவர்கிட்ட சொல்லாம இந்தியாவுக்கு வந்தேன். சென்னைக்கு வராம நேராக கோவை விமான நிலையம் வழியா சத்தியமங்கலத்துக்கு வந்தேன். டூரிஸ்ட் மாதிரி சுத்திட்டிருந்தேன். நாலு நாள் கழிச்சு, நான் ஹோட்டலில் சாப்பிடும் போது, ஒரு வயசானவர் எங்கிட்ட வந்து, நான் வெற்றிவேலோட சொந்தகாரனா என்று கேட்டாங்க. இல்லை என்று மறுத்துட்டேன். ஆனா இரண்டு தாத்தாவும் பயப்படற மாதிரி ஏதாவது ஆயிடுமோ என்று நினைச்சு, திரும்பவும் அமெரிக்கா வந்துட்டேன்".

"ஆனாலும் என்னால் நிம்மதியா அங்கே இருக்க முடியலை. இந்த தடவை வெற்றி தாத்தா கிட்ட சொல்லிட்டே இந்தியா வந்தேன். சத்தியமங்கலத்தில் என்னை அடையாளம் தெரிஞ்சிக்கிறாங்க என்று சொன்னேன். இந்த வீட்டிலேயும் என்னால தங்க முடியாது, ஹோட்டலில் தங்க முடியாது என்று சொன்னேன். அவர் எனக்கு கொட்டடி பக்கத்தில் காட்டுக்குள்ளே இருந்த அவரோட பழைய வீட்டை தயார் பண்ணி கொடுத்தார். என் வெள்ளை கலரும், நீல கண்ணும், என்னை எங்கே போனாலும், தனியா தெரிய வைச்சுது. அதனால், உடம்புக்கு கருப்பு பாடி கலரும், கண்ணுக்கு கருப்பு லென்ஸும் போட்டுக்கிட்டேன். தலைமுடியை நீளமா வளர்க்க ஆரம்பிச்சேன். சித்தார்த் என்ற பெயர் என்னை வெற்றிவேலின் பேரன் என்று அடையாளப்படுத்தும் என்பதால் என்னோட இன்னொரு பெயரான சக்திவேலை உபயோகிச்சேன்" என சித்தார்த் சொன்னவுடன், ஸம்யுவிற்கு அவன் தான் தன்னை கடத்தியவன் என்று புரிந்து போனது.

அதற்குள் அனைவருக்கும் வேலையாள் டீ எடுத்து வர, அதை எடுத்துக் கொண்டனர். மித்ரனுக்கு சித்தார்த் மேல் பயங்கர ஆத்திரம் வந்தது. கண்கள் சிவந்து போனது. மித்ரனது கைகள் அவனை அடிக்க துறுதுறுத்தன. சோறு, தண்ணி, தூக்கமில்லாமல் தான் ரோடு ரோடாக அலைந்தது ஞாபகம் வந்து போனது. சம்யுக்தாவை அடிப்பட்டு வைத்தியர் வீட்டில் பார்த்தது கண் முன்னே வந்து நின்றது.

அகிலன் இயல்பாக அவனது தோளின் மேல் கையை வைத்து அவனை அணைத்துக் கொண்டான். அகிலனது பார்வை அவனை கஷ்டபட்டு கட்டுப்படுத்திக் கொள்ள வைத்தது. தன் முஷ்ட்டியை இறுக்கி, பக்கத்தில் இருந்த கைப்பிடி சுவற்றை குத்தினான்.

என்னவென்று நிமிர்ந்து பார்த்த சித்தார்த்தை, "ஒரு பூச்சி, என்னை கடிச்சிட்டு ஆட்டம் காண்பிச்சது. கையில் இப்போது தான் சிக்கிச்சு, நசுக்கி கொண்ணுட்டேன்" என கண்களில் அனல் தெரிக்க சொன்னான்.

"அந்த பூச்சி உன்னை கடிச்சதுக்கு ஏதோ காரணம் இருக்கும் மித்ரன். நீயோ இல்லை வேற யாரோ அதை ஏதாவது செஞ்சிருப்பாங்க. அதுக்கு நேரம் கிடைச்ச போது உன்னை கடிச்சிடுச்சு" என அவனது கண்களை நேருக்கு நேர் பார்த்துச் சொன்னான் சித்தார்த்.

சம்யுக்தா தலையை குனிந்து தன் முகத்தை மறைத்திருந்தாள். சித்தார்த் தான் தன்னை கடத்தினான் என்று அவளுக்கு சந்தேகம் இருந்தாலும், ஏனோ அது உண்மையாக இருக்க கூடாது என்று நினைத்தாள். அவனது பெற்றோர்கள் இறந்ததையும், அவனது சிறு வயது கஷடங்களைக் கேட்டு, அவளது மனம் உருகியிருந்தாலும், இப்போது அது வெறுப்பாக மாறியிருந்தது.

கடத்திய போது தான் பட்ட கஷ்டங்கள் அவள் கண்களின் முன்னால் படமாக விரிந்தது. எத்தனை சந்தோஷங்களுடன் தன் கல்யாணத்தை எதிர் நோக்கியிருந்தாள். வசந்தன் எத்தனை செலவு செய்திருந்தார். வினோதினி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து, தவறு நேர்ந்து விட கூடாது என்று எத்தனை கவனமாக செய்தார். சசி தன்னை காதலுடன் லெஹங்காவில் பார்த்தது மனதில் வந்து போனது. ஒரு அழகிய கனவு போல நடந்திருக்க வேண்டிய தன் திருமணத்தை, இவன் தானே நிறுத்த வைத்தான் என்று நினைக்கும் போதே கண்மண் தெரியாமல் கோபம் வந்தது. தன் முகத்தின் உணர்வுகளை கஷ்டபட்டு சமன்படுத்தி, நிமிர்ந்து மித்ரனை பார்த்தாள். அவனும் கணகளிலும் அவளது உணர்வுகளே பிரதிபலித்தது. அவனை இனி, தப்ப விட மாட்டேன் என்று அவளுக்கு நம்பிக்கை அளித்தது.

அகிலன் சுற்றி பார்த்த போது, முரளிதரனையும், வசந்தனையும் தவிர அனைவரும் டீ குடித்து முடித்திருந்தனர். அவர்கள் இருவரும், டீ கப்பை கையில் வைத்தபடி வெறித்து அமர்ந்திருந்தனர்.

"சொல்லு சித்தார்த், எப்படி வைத்தியரை கண்டுபிடிச்சே?" என கேட்டான் அகிலன்.

"தாத்தா அப்போ தான் ரவிகுமாரை எனக்கு அறிமுகப்படுத்தினார். நான் எங்கேயும் போகாம, அவனை தான் வெளியே அனுப்பினேன். விபத்து நடந்த இடத்திற்கு பக்கத்தில் தான் அந்த வீடு இருந்தது என்று தெரியும். அப்பவே அவருக்கு வயசானதால், அவர் உயிரோடு இருக்கிறாரா என்று எனக்குத் தெரியலை. அவருக்கு கண்டிப்பாக இப்போ எண்பது வயசிருக்கும் என்று நினைச்சேன். ரவி அப்போ தான் ஹசனூரில் எண்பது வயதில் ஒரு வைத்தியர் இருக்கார் என்று சொன்னான். எனக்கு உடம்பு சரியில்லை என்று அவரை பார்க்க போனேன். பார்த்தவுடன் எனக்கு அவர் தான் என்று தெரிஞ்சு போச்சு. நான் என்னை பத்தி சொன்ன போது அவருக்கு எதுவும் ஞாபகம் வரலை"

"எங்க காரை இடிச்ச லாரி டிரைவரை தேடினேன். ஆனால் அவன் விடுதலையான பிறகு குடிச்சே செத்துட்டான் என்று சொன்னாங்க. அவனை பிடிச்சா யார் லாரியால் எங்க காரை இடிக்க சொன்னாங்க என்று கேட்கலாம் என்று நினைச்சேன். அவனும் இறந்துட்டதால் எனக்கு என்ன செய்யறது என்றே தெரியலை".

"எங்கப்பா அம்மாவை மருத்துவமனைக்கு காரில் தூக்கிட்டு போன நகை கடை முதலாளியை சந்திச்சேன். முதலில் அவருக்கும் சரியா ஞாபகம் இல்லை. ஆனா கொஞ்ச நேரத்தில் ஞாபகம் வந்துடிச்சு. காரில் அவங்க இரண்டு பேரும் மட்டும் தான் இருந்தாங்க என்று சொன்னார். அவங்க காருக்கு தூக்கிட்டு வரும் போதே அவங்க இரண்டு பேருக்கும் சுயநினைவே இல்லை என்று சொன்னார். ஒரு லாரி காரை இடிச்சிட்டு நின்னுட்டிருந்தது என்று சொன்னார். அவர் சொன்னதை வைச்சு என்னால் எந்த முடிவுக்கும் வர முடியலை"

"திரும்பவும் நான் வைத்தியர் கிட்டே போய் நின்னேன். இந்த தடவை நான் அந்த விபத்தைப் பற்றி கேட்ட போது தான் அவருக்கு ஞாபகம் வந்தது. ஆனால் நான் தான் அவர் காப்பாத்தின் பையன் என்று சொன்னதை அவர் நம்பலை. தாத்தாவுக்கு ஏற்கனவே அவரை தெரியும் என்பதால், அவர் வந்து சொன்ன பிறகு தான் என்னை நம்பினார்" என வைத்தியரை பார்த்தான்.

வைத்தியர் மித்ரனை பார்த்து விட்டு, "மித்ரன், உங்களுக்கு இப்போ சக்திவேல் யார் என்று தெரிஞ்சிடுச்சா?" என கேட்டார்.

மித்ரன் எதுவும் சொல்லாமல் சித்தார்த்தை வெறித்துப் பார்த்தான்.

"ஐயா நீங்க சொல்லுங்க. சக்திவேலோட அப்பா அம்மா செத்த அன்னிக்கு என்ன நடந்தது?" என்று அகிலன் கேட்டான்.

"அந்த சமயத்தில் தான் என் மனைவியோட மரணத்தில் இருந்து தெளிஞ்சிட்டிருந்தேன். என் பசங்க எனக்கு மர வீடு கட்டிட்டுருந்தாங்க. கட்டிடம் கட்டறவங்க அப்போ உள்ளே வேலை செஞ்சிட்டிருந்தாங்க. அன்னிக்குத் தான் வாசல் கேட் பொருத்தியிருந்தாங்க. அதை சரி பார்த்துட்டிருந்தேன். அப்போ நல்லா அடிபட்ட ஒருத்தர் ஒரு பையனை தூக்கிட்டு வந்து எங்கிட்டே ஒடி வந்தார். அவங்களை கொல்றதுக்கு துரத்திட்டு வர்றாங்க, அந்த பையன் வெற்றிவேல் ஐயாவோட பேரன் என்று சொல்லிட்டு மயக்கமாயிட்டார்".

"முதலில் எனக்குப் எதுவும் புரியலை. ஒரு மருத்துவரா, அவருக்கு முதலுதவி செஞ்ச போதும், அவர் உடல்நிலை மோசமாயிட்டிருதது. நான் அவருக்கு முதல் உதவி செஞ்ச போது, நிறைய காலடி சத்தம் கேட்டாலும், யாரும் என்னை நெருங்கலை. வீட்டிலிருந்து வந்த சத்ததால் பயந்து நின்னுட்டாங்க என்று நினைக்கிறேன்".

"நான் முதலுதவி செய்யும் போதே வீட்டிலிருந்து ஆளுங்க வந்துட்டாங்க. அவங்களை முன்னாடி போய் ரோடில் போற வண்டியை நிறுத்த சொன்னேன். நான் டிரைவரை தூக்கிட்டு, பையனை பிடிச்சு இழுத்திட்டு, ரோடில் ஆளுங்க காரில் ஏறி மருத்துவமனைக்குப் போனேன். அந்த கார் டிரைவர் அவசரமாக எங்கேயோ போயிட்டு இருந்ததால் எங்களை மருத்துவமனையில் இறக்கி விட்டுட்டு போயிட்டார்.

மருத்தவமனையில் எங்கிட்டேயிருந்து டிரைவரை வாங்கி ஸ்டெர்ட்சரில் போட்டுக்கிட்டு போயிட்டாங்க. அந்த சின்ன பையன், ஒரு வயசான அம்மாவை பார்த்துட்டு என் கையை உதறிட்டு ஒடி போயிட்டான். எனக்கும் திரும்பவும் போய் இயல்பு வாழ்க்கையில் சிக்கிக்க இஷ்டமில்லை. அதனால் உள்ளே போகாம வந்துட்டேன்" என்றார்.

"டிரைவரை துரத்திட்டு வந்தவங்களில் யாராவது பார்த்தீங்களா?" என கேட்டான் அகிலன்.

"அதையே தான் சக்தியும் எங்கிட்ட கேட்டான்" என சொன்னவர், "நான் முதலுதவி செஞ்சி டிரைவரை காப்பாத்தனும் என்பதால் வேற எதையும் அப்போ கவனிக்கலை. ஆனா டிரைவரை தூக்கிட்டு ஒடும் போது, ஒருத்தனை பார்த்தேன். அவன் மரத்துக்குப் பின்னாடி மறைஞ்சிட்டிருந்தான். நான் கொஞ்சம் தூரம் போனவுடன் அவன் ஏதாவது செய்ய போறான் என்று நினைச்சு திரும்பி அவனை பார்த்தேன். அவன் மரத்துக்குப் பின்னாடியிலிருந்து எட்டிப் பார்த்துட்டிருந்தான். அவன் முகம் அப்படியே மனசில் பதிஞ்சு போச்சு" என நிறுத்தினார்.

"வைத்தியர் அப்படி சொன்னதும், நான் லாரி டிரைவரோட நண்பர்கள், பழக்கமானவங்க போட்டோவை எடுத்துட்டு போய் காண்பிச்சிட்டிருந்தேன். ஆனால் வைத்தியர் அவங்க யாரும் இல்லை என்று சொல்லிட்டார். மாமாவுக்கு அப்போ உடம்பு முடியாம போச்சு. அத்தை மாமாவை கவனிச்சிட்டு வீட்டுக்கும், ஹாஸ்பிடலுக்கும் அலைஞ்சிட்டிருந்தாங்க. நந்தன் அப்போ தான் மாஸ்டர்ஸ் முடிச்சிருந்தான். அவனால் தனியா பிஸினசை சமாளிக்க முடியலை. நான் திரும்பவும் அமெரிக்கா போயிட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியா வந்து, முகம் தெரியாத அந்த ஆளை தேடிட்டிருந்தேன். சில சமயம் வெறுத்துப் போய் திரும்பவும் அமெரிக்கா போயிடுவேன்".

"இரண்டு மாசம் முன்னாடி நான் இங்கே வந்த போது, நாதன் அங்கிள் சத்தியமங்கலத்தில் இருந்தார். என்னை பார்க்க கொட்டடி வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் நான் வெறுத்துப் போய் பேசிட்டிருந்த போது, அவர் இந்த வீட்டில் இருந்த பழைய போட்டோக்களை எடுத்துட்டு வந்து எங்கிட்ட கொடுத்தார். நான் அதை கொண்டு போய் வைத்தியர் கிட்டே காண்பிச்சேன். அதிலே ஒரு கல்யாண போட்டோவில் மாப்பிள்ளையா இருந்தவரை காண்பிச்சு, இவன் தான் அன்னிக்கு மரத்துப் பின்னாடி நின்னுட்டிருந்தான் என அடையாளம் சொன்னார்" என சொன்னான்.

"அவர் அடையாளம் காண்பிச்சவனை கண்டுபிடிச்சியா?" என கேட்டான் அகிலன்.

"அடுத்த நாள் நாதன் அங்கிளை எங்க வீட்டுக்கு வர சொன்னேன். நான் அப்போ யாரையும் நம்ப தயாராயில்லை, நாதன் அங்கிளையும் நம்ப தயாராயில்லை. அதனால் அவர்கிட்ட அந்த ஆல்பத்தில் இருந்த எல்லாரையும் பத்திக் கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்குத் தேவையான ஆளைப் பத்தியும் கேட்டேன். அவர் சொன்னதை வைச்சு, அவனை பத்தி நானும் ரவியும் எல்லா தகவல்களையும் சேகரிச்சோம்" என்றான்

"அவன் பெயர் என்ன சித்தார்த்" என கேட்டான் மித்ரன்.

"உனக்கு அவரை நல்லா தெரியும் மித்ரன், அவன் பெயர் வசந்தன்" என சொன்னவனது கண்கள் வசந்தனை பார்த்தது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro