Sudum Nilavu Sudatha Suriyan - 20
சுடும் நிலவு சுடாத சூரியன் – 20
அவனை அங்கே எதிர்பாராததால், அதிர்ந்த மனதை ஒரு நொடியில் சமன்படுத்தி திரும்பி அங்கே தொங்கி கொண்டிருந்த டிஷர்ட்களின் சைஸை பார்த்தாள்.
"ஹாய் யுக்தா" என அவன் அழைத்ததற்குத் திரும்பாதவள், ஸ்மிருதி கண்களால் கேட்ட கேள்விக்குக், கண்களாலே ஆம் என்று பதில் சொன்னாள். ஒரு வேளை, கன்னத்தில் அடிப்பேன் என்று பேசியதை கேட்டிருப்பானோ என தோன்றினாலும், உண்மையை தானே சொன்னேன், அதற்கு ஏன் பயப்பட வேண்டும் என்று தோன்றியது.
ஸ்மிருதி நன்றாக திரும்பி அவனை பார்த்தாள். ஆறடிக்கு மேல் அடர்ந்த தலைமுடியுடன், நீல நிற கண்களுடன் நின்றிருந்தான்.
வேறு எந்த டிஷர்ட்டும் நன்றாக இல்லாததால், கிரே டிஷர்ட்டை பில் போட எடுத்துக் கொண்டு அங்கே இருந்து நகர்ந்தாள் ஸம்யுக்தா.
வழியை மறித்து நின்றவன், "ஹாய் யுக்தா, வி ஹாவ் மெட் ட்வைஸ், பேபி" என்றான்.
ஏற்கெனவே அவனை எதுவும் செய்ய முடியவில்லை என்ற கோபத்தில் இருந்தவள், அவன் பேபி என்று சொன்னதும் வந்த எரிச்சலை, பற்களை கடித்து அடக்கிக் கொண்டாள்.
"ஹாய்" என வாய்க்குள் முனுமுனுத்தவள், அவனை தாண்டி செல்ல முயன்றாள்.
"யுக்தா, உனக்கு, ஸாரி உங்களுக்கு நல்ல கலர் சென்ஸ் இருக்கு. இந்த டிஷர்ட்டில் எது எனக்கு ஸுட் ஆகும் என்று சொல்லுங்க" என அவள் செல்ல முடியாமல், இரு டிஷர்ட்களையும் தன் இரு பக்கம் பிரித்துக் காண்பித்தான்.
இரண்டையும் வேண்டா வெறுப்பாக பார்த்தவள், "இரண்டும் நல்லா இல்லை" என சொன்னாள்.
"ஹப்பா.. அட் லாஸ்ட்.. உங்களுக்குப் பேச கூட வருமா? நான் உங்களுக்குக் காது கேட்காது, வாய் பேச முடியாது என்று நினைச்சேன். பரவாயில்லை, உங்க வாய்ஸ் ஸ்வீட்டா தான் இருக்கு" என சொன்னவனின் குரலில் நக்கல் தெரிந்தது.
நிமிர்ந்து முறைத்தவளின் கண்களில் தெரிந்த சீற்றத்தைக் கண்டவன், சற்றும் நகராமல் வழியை அடைத்துக் கொண்டு அப்படியே நின்றான்.
"இந்த இரண்டு டிஷர்ட்டும் நல்லாயில்லைனா, எனக்கு வேற டிஷர்ட் செலக்ட் பண்ணி கொடுங்க" என கண்களில் சிரிப்புடன் சொன்னான்.
"நீங்க ஃபளர்ட் பண்ணறதுக்கு வேற ஆளை பாருங்க" என சொன்னவள், பக்கத்தில் கடை ஊழியர் யாராவது தென்படுகிறார்களா என பார்த்தாள்.
சித்தார்த்தை சுவராசியமாக பார்த்தபடி நின்றிருந்த ஸ்மிருதியை முறைத்தவள், போலாம் வா என்று செய்கை செய்தாள்.
ஸம்யுவின் முன்னால் வந்த ஸ்மிருதி, "வம்பு பண்ணாம வழியை விடுங்க, மிஸ்டர்.." என்றாள்.
"சித்தார்த், யு கான் கால் மீ ஸிட், நைஸ் மீட்டிங்க் யூ" என சிரித்தபடி வலது கையிலிருந்த சட்டையை தன் இடது கைக்கு மாற்றி தன் வலது கையை ஸ்மிருதியிடம் நீட்டினான்.
அவன் சொன்னதை கேட்டுச் சட்டென்று சிரித்து விட்ட ஸ்மிருதி, "ஐ ஆம் ஸ்மிருதி, ஸம்யுவோட ஃபிரண்ட்" என சொன்னாள்.
"கிரேட். நாம இனிமே நிறைய மீட் பண்ணுவோம்" என கண்களில் மின்னலுடன் சொன்னான்.
"ஷுயுர்" என சொல்லிவிட்டு ஸ்மிருதி திரும்பிய போது, சம்யுக்தா அந்த இடைவெளியில் வெளியே சென்று நின்றிருந்தாள்.
"ஸோ ஸ்மார்ட்" என ஸம்யுக்தாவை பார்த்து சிரிப்புடன் சொன்னவன், "ஐ லைக் யுர்..." என இடைவெளி விட்டு, "ஸ்மார்ட்னஸ்" என முடித்தான்.
அவள் டிஷர்ட்டை எடுத்துக் கொண்டு பில் போடும் இடத்தின் அருகே செல்லும் போது, "யுக்தா.." என உயர்ந்த குரலில் கூப்பிட்டான்.
அனிச்சையாக தன் பெயரைக் கேட்டதும், அவள் திரும்பி அவனை பார்த்ததும், "பை, ஸீ யூ பேபி" என்றான்.
பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கியவள், வெளியே எதுவும் பிரச்சனை செய்ய வேண்டாமென்று, பில் போடும் இடத்திற்கு சென்று பணம் கொடுத்தாள்.
டிஷர்ட்டை கவரில் போட்டு, வாங்கி கொண்டு கடையை விட்டு வெளியே வரும் போது ஸ்மிருதி, "ஹி ஹிஸ் ஸ்மார்ட் அண்ட் ஹாண்டஸம்" என்றாள்.
"ஸ்மிருதி.., போதும், ரொம்ப பிடிச்சிருந்தா, உங்க அப்பா கிட்ட சொல்லி அவனை கல்யாணம் பண்ணிக்கோ" என கடுப்புடன் சொன்னாள்.
"சே, நான் என் ஃபிரண்டுக்கு துரோகம் பண்ண மாட்டேன்பா. அவன் உன்னை பார்க்கிற பார்வையிலே தெரியலை. ஹி ஹிஸ் கிரேஸி அபவுட் யூ" என்றாள்.
"இன்னும் ஒரு வார்த்தை அவனை பத்தி பேசினே, உன்னை இங்கேயே விட்டு விட்டு போயிடுவேன். நீ ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போக வேண்டி வரும்" என்றாள்.
"சரி, சரி அவனை பத்தி எனக்கு தோணற ஒரு விஷயத்தைச் சொல்லவா, சொன்னா நீ என்னை அடிக்க கூடாது" என சொன்ன ஸ்மிருதியின் குரல் தீவிரமாக மாறியது.
சரியென்று தலையசைத்தவளிடம், "உன்னை பணத்துக்காக கடத்தலை என்று சொன்னாங்க இல்லை. வேற எந்த விஷயத்துக்காக உன்னை கடத்தியிருக்கலாம் என்று யோசிச்சேன். இவனை பார்க்கும் போது ஒரு விஷயம் தோணிச்சு. பையன் ரொம்ப ரொமாண்டிக்கா இருக்கான்" என சொல்லி கொண்டு வந்தவள், ஸம்யுவை கூர்மையாக பார்த்தாள்.
"உன்னை அவன் எங்காவது வெளியே பார்த்திருக்கலாம். பார்த்தவுடன் உன் அழகில் மயங்கிருக்கலாம். உன்னை பத்தி விசாரிக்கும் போது, உனக்கு கல்யாணம் என்று தெரிஞ்சிருக்கலாம். இனிமே என்ன செஞ்சாலும் கல்யாணத்தை நிறுத்து முடியாது என்று அவனுக்குத் தோணியிருக்கலாம். உன மேல் இருக்கிற அளவுக்கு அதிகமான ஆசையிலோ, காதலிலோ உன்னை கடத்தியிருக்கலாம்" என சொன்னாள் ஸ்மிருதி.
"ஸ்மிருதி, போதும், நான் ஏற்கெனவே அவனை பார்த்ததில் அப்செட்டாக இருக்கேன். நீ வேற இப்படியெல்லாம் பேசாதே" என எரிச்சலுடன் சொன்னாள்.
"ஸம்யு, நான் கிண்டல் பண்ணலை. உன்னை கடத்தறதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொன்னேன். அவ்வளவு தான்" என்றாள்.
"எனக்கு அப்படி தோணலை" என சொன்ன ஸம்யுவிடம், "எப்படி சொல்றே?" என கேட்டாள்.
"அவன் என்னை அங்கே அடைச்சி வைச்சிருக்கும் போது, என்னை அன்பாவும் நடத்தலை. ஆசையாவும் பார்க்கலை. இன்னும் கேட்டா, நான் கண் முழிச்ச பிறகு சோறு, தண்ணி கொடுக்காம ஒரு நாள் ஃபுல்லா தவிக்க விட்டானுங்க. இவன் தேவைக்கு அதிகமாக ஒரு பார்வை கூட என்னை பார்க்கலை. அந்த இன்னொரு பையன், பேசின அளவு கூட இவன் பேசலை" என்றாள்.
"எப்படி பேசுவான், இவனுக்குத் தான் பேச வராதே" என கண் சிமிட்டிய ஸ்மிருதியை முறைத்துப் பார்த்தாள்.
"ஸம்யு, எல்லோரும் அவங்க அன்பை ஒரே மாதிரி காண்பிக்க மாட்டாங்க. சில பேர் வெளிப்படையா காண்பிப்பாங்க, சில பேர் தங்களுக்குள்ளேயே வைச்சுப்பாங்க. ஆனா அவங்க அன்பு நிஜமாக இருந்தா, சின்ன விஷயத்திலேயும் ஈஸியா வெளியே தெரியும். நான் என மனசில் தோணினதை சொன்னேன்" என்றாள் ஸ்மிருதி.
ஸ்மிருதி சொன்னதை யோசித்தவள், டிரைவர் அவள் முன் நிறுத்திய காரில் ஏறினாள். ஸ்மிருதியை வீட்டில் கொண்டு விட்டு, வரும் போது அவள் சொன்னதை யோசித்தாள்.
தன் மேல் உள்ள ஆசையினால் கடத்தியிருப்பானா என்று சந்தேகம் மனதில் எழுந்தது. ஆனால் அறிவோ இல்லை என்று அவளிடம் வாதிட்டது. நடக்க முடியாமல் காலில் கற்களும், முட்களும் பாதத்தில் குத்தியிருந்த போது, அவளது காலில் இரவில் போட்டிருந்த பச்சிலை பத்து ஞாபகம் வந்து போனது. ஸ்மிருதி சொன்னது போல், அது அன்பின் வெளிப்பாடா என்று யோசித்தாள். அது ஒரு நோயாளியிடம் தோன்றும் அனுதாபம் என்று சொல்லி, அறிவு அவளை அடக்கியது. ஆனால் மனமோ, யானையிடமிருந்து தன் உயிரை பணயம் வைத்து அவளைக் காப்பாற்றியது அன்பு தானே என வாதிட்டது. அவளது அறிவு பதில் சொல்ல முடியாமல் தடுமாறியது.
டிரைவர், "ஸம்யும்மா, வீடு வந்தாச்சு" என்றார். சுயநினைவுக்கு வந்தவள், இனி இதை பற்றி நினைக்க கூடாது என உறுதி எடுத்துக் கொண்டு வண்டியை விட்டு கீழே இறங்கினாள்.
அவள் உள்ளே வந்தவுடன், ஹாலில் அமர்ந்திருந்த விலாசினியின் முகம் நிம்மதி அடைந்தது.
"வா சம்யு,, காப்பி சாப்பிடறியா?" என கேட்டார்.
ஸ்மிருதி சொன்னதை யோசித்ததில் தலை வலிப்பது போலிருக்க, சரியென்று தலையசைத்தாள்.
உள்ளேயிருந்து வந்த வசந்தன், "ஸ்ம்யு, வேலை எப்படி போயிட்டிருக்கு?" என கேட்டார்.
"இப்போ வெறும் எடிட்டிங் வொர்க் தான்பா பார்க்கிறேன். எங்க பாஸ் ஒரு மாசத்துக்குப் பிறகு வெளியே போகலாம் என்று சொன்னார்" என அலுப்புடன் சொன்னாள்.
"அதையும் செய்ய கத்துக்கம்மா. நாலு வேலையும் செய்ய தெரிஞ்சவன் தான்ம்மா, திறமையான வேலைக்காரன்" என அவளது தலையை வருடியவரிடம், "போங்கப்பா, ரொம்ப போரடிக்குது" என்றாள். ஸம்யுவின் பத்திரிகை எடிட்டரிடம் ஒரு மாதத்திற்கு அவளை வெளி வேலைக்கு அனுப்ப வேண்டாம் என மித்ரன் கேட்டுக் கொண்டிருந்தான்.
"என்ன ஸம்யு, ஸல்வார் தைச்சிட்டானா?" என கேட்ட விலாசினி, காப்பி கப்பை வசந்தனிடமும், ஸம்யுவிடம் கொடுத்தார்.
"தைச்சிட்டான்மா. நான் மித்ரனுக்கு ஒரு டிஷர்ட் வாங்கினேன்மா" என சொன்னாள்.
"நம்ம சசிக்கும் ஒன்னு வாங்கினியாம்மா?" என கேட்ட தாயைப் பார்த்து எதுவும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டாள்.
வசந்தன், விலாசினியை மேலே எதுவும் பேசாமல் இருக்க கண்ணால் செய்கை செய்தவர், "ஸம்யு, இப்போ கை எப்படியிருக்கு, டைப் பண்ணா வலிக்குதா?" என பேச்சை மாற்றினார்.
"இப்போ பரவாயில்லைப்பா. நடு நடுவே ரெஸ்ட் எடுத்துக்கிறேன்" என சொன்னாள்.
"என்னங்க, நான் ரொம்ப வருஷம் சொல்லிட்டிருக்கேன். நீங்க காதிலே போட்டுக்கவே மாட்டேங்கிறீங்க. நம்ம குலதெயவம் பண்ணாரி அம்மன் கோயிலுக்குப் போய் பதினெட்டு வருஷத்திற்கு மேலாகுது. அம்மனுக்கு மாவிளக்கு போடற நேர்த்தி கடன் பாக்கி இருக்குங்க. இப்போ கல்யாணம் நின்னு போனதுக்கு அது தான் காரணமாயிருக்குமோ என்று என மனசுக்குத் தோணுது. நாம் குடும்பமா ஒரு முறை சத்தியமங்கலத்துக்குப் போய் நேர்த்தி கடன் செலுத்திட்டு வந்திடலாம்" என கெஞ்சும் குரலில் கேட்டார் விலாசினி.
"நான் மித்ரன் கிட்ட பேசிட்டு சொல்றேன். அவனுக்கும் வர்றதுக்கும் வசதிப்படனும் இல்லையா?" என கேட்டார்.
"அப்பா, அடுத்த வாரமே போயிட்டு வந்திடலாம்பா. ஆபிஸில் இப்போ எனக்கு வேலை அதிகம் இல்லை. இன்னும் கொஞ்சம் நாளாச்சு என்றால் வெளியே போற வேலை கொடுத்திடுவாங்க" என சொன்னாள் ஸம்யுக்தா.
"சரி, நாம அடுத்த வாரம் போலாம். ஆனா எங்கே தங்கிறது, நம்ம பூர்வீக வீட்டை தான் வித்துட்டோமே?" என யோசித்தார்.
"எதுக்குங்க யோசிக்கிறீங்க, நம்ம சசியோட வீடு தான் அங்கே பெரிசா இருக்கே" என சொன்னார் விலாசினி.
"கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை வீட்டில் நாம தங்கினா ஊரில் ஏதாவது சொல்லுவாங்க" என யோசனையுடன் சொன்னார்.
"இது பிரச்சனையாப்பா? எவ்வளவு ஹோட்டல் இருக்கு. அங்கே தங்கிக்கலாம்" என்றாள் ஸம்யுக்தா.
"ஹோட்டல் எல்லாம் சரிப்பட்டு வராதுங்க. அம்மனுக்கு சுத்தபத்தமா நேர்த்தி கடன் செய்யறதுக்கு வீடா இருந்தா தான் வசதிப்படும்" என்றவர், "ஏங்க, நம்ம வெற்றிவேல் ஐயா வீடு பெரிசா தானே இருக்கு. நாம அங்கே தங்கலாமா?" என கேட்டார்.
"நான் ஐயாகிட்ட அதை பற்றி கேட்கிறேன்" என யோசனையுடன் சொன்னார் வசந்தன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro