Sudum Nilavu Sudatha Suriyan - 2
சுடும் நிலவு சுடாத சூரியன் – 2
"வாங்க சசி", என்று வாசலுக்குச் சென்று வரவேற்ற வசந்தனிடம், "எதுக்கு மாமா இந்த மரியாதை, நானும் மித்ரன் மாதிரி உங்க மகன் தான்" என்றவனிடம், "தெரியும் சசி, இனிமே மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாங்க கொடுக்கனும் இல்லையா?" என அவன் கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தார்
"வா சசி, டிஃபன் சாப்பிடலாம்" என அழைத்த மித்ரன் தன் அருகிலிருக்கும் சேரை நகர்த்தினான்.
சசிதரன் மாநிறத்தில், சராசரிக்கும் அதிக உயரத்தில் இருந்தான், சுருட்டை தலை முடியும், அகன்ற நெற்றியுமாய் பார்ப்பதற்கு எடுப்பாய் இருந்தான்.
"ஹை சசி" என்ற மகளிடம், :"சம்யு திருமணம் முடியும் வரை மாபிள்ளையை மற்றவர்கள் எதிரில் பேர் சொல்லிக் கூப்பிடாதே என்று சொன்னேன் இல்லை", என்றவரிடம், "இங்கே மற்றவங்க யார் இருக்காங்க, நீங்க தானே இருக்கீங்க", என்றாள் சம்யுக்தா.
"அத்தை அவளை அப்படியே இருக்க விடுங்க, மற்றவற்களுக்காக வேஷம் எல்லாம் போட வேண்டாம்" என்ற சசியிடம், "உங்களை மாதிரி கண்வன் கிடைக்க எங்க சமயு கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றார் வினோதினி
"உங்க மகளுக்கும் உங்களை மாதிரியே அதிர்ஷ்டம் அத்தை", என்று அவன் சொன்னவுடன், அவன் முதுகைத் தட்டி, "கரெக்ட் சசி" என சிரித்த வசந்தனைப் பார்த்து மித்ரனும்,சம்யுக்தாவும் வலிந்து செயற்கையாக புன்னகை செய்தனர்.
தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மித்ரனிடம், "டேய் அண்ணா, இவங்க யாரும் இன்னும் வளரவேயில்லையே, இப்போ தான் எனக்கு நிஜமாகவே சிவாஜி படம் பார்க்கிற எஃப்க்ட் வருது" என்றாள் மெல்லிய குரலில்.
பொங்கி வந்த சிரிப்பை உதட்டை மடித்து அடக்கியப்படி, "கடவுள் இருக்கான் குமாரு, இதை தான் நீ உன் லைப் முழுசா பார்க்கப் போகிறாய்" நல்லா அனுபவி", என்றான் நக்கலாக
உதட்டை மடித்து பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவள், தன் அண்ணனை மேலும் கீழுமாக பார்த்து வந்த சிரிப்பை அடக்க தன் கைகளால் வாயை மூடி கொண்டாள்.
என்னவென்று புருவத்தைத் தூக்கி கேட்டவனிடம், ""டேய் அண்ணா, எனக்காவது என்ன பார்க்கப் போகிறேன் என்று தெரியும், உன்னை நினைச்சாலே ரொம்ப பாவமா இருக்கு. உனக்கு நம்ம ஸ்கூல் மிஸ் கிட்டயிருந்து எப்பவும் ஸ்கேலால் அடியும், முதுகில் டின்னும் தான்" என்று முனுமுனுத்தாள். அதை அப்படியே கற்பனை செய்து பார்த்தவள், வந்த சிரிப்பை அடக்க முடியாமல் உரக்க சிரித்து விட்டாள்.
"என்ன சம்யு, ஏதோ ஜோக் போலிருக்கு, சொன்னா நாஙகளும் சிரிப்போம்" என்ற சசியிடம் சட்டென்று என்ன சொல்வது என தெரியாமல் முழித்தாள். மித்ரனோ அதுக்கும் தனக்கும் எந்த வித சமபந்தமில்லை என்பது போல் இட்லியை சாம்பாரில் தொட்டு சாப்பிட்டு கொண்டிருந்தான்.
'மகனே உனக்கு அப்பறம் இருக்கு' என்று நினைத்தவள், "இல்லை, ஸ்கூல் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். மித்ரன் மாத்ஸ் மிஸ் கிட்ட அடி வாங்கினான் இல்லை, அது இப்போ ஞாபகம் வந்தது அதை நினைத்து சிரித்தேன்", என்றாள்.
"மித்ரன் மாத்ஸில் எப்பவும் செண்டம் தானே வாங்குவான். அவன் எப்போ அடி வாங்கினான்", என கேட்ட வினோதினியிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தாள்.
"அம்மா, நான் அடியெல்லாம் வாங்கியதே இல்லை, இவ தான் எப்பவும் மாத்ஸ் கிளாஸில் அடி வாங்கிட்டு வெளியே நிற்பாள். இது ஊருக்கே தெரியும்" என்றான் மித்ரன்.
தன்னை இன்னும் நன்றாக மாட்டி விட்ட அண்ணனை பற்கள் கடித்தப்படி முறைத்தாள். இவனை என்ன செய்தால் மாட்டி வசமாக மாட்டி விடும் என்று யோசித்தாள்
"ஸம்யு ரொம்ப ஷார்ப் என்று நினைத்தேன்.." என்று இழுத்த சசியிடம், "அவளுக்கு மாத்ஸ் வராது என்பதால் தான் ஜர்னலிசமே படித்தாள்", என்றும் எரியும் நெருப்பில் மேலும் பெட்ரொலை ஊற்றினான் மித்ரன்.
தன் வருங்கால கணவனிடம் தன்னை பற்றி இப்படி போட்டு கொடுத்து விட்டானே என்று ஒரு நொடி யோசித்தவள், அடுத்த நொடி முகம் வருத்தமாக மாற கண்களில் நீரைத் தேக்கிக் கொண்டாள்.
அவளின் கண்ணீரை கண்டவுடன் வசந்தன், "மித்ரன், நீ இவ்வளவு படிச்சது எதுக்கு? எங்கே பேசறோம், என்ன பேசறோம் என்று தெரிய வேண்டாம். உனக்கு எமொஷ்னல் இண்டலிஜென்ஸ் கொஞ்சம் கூட இல்லை, நீயெல்லாம் எப்படி ஐபிஸ் பாஸ் செய்தாயோ தெரியவில்லை" என கடுப்புடன் சொன்னார்.
"இன்னும் இரண்டு நாளில் அவ திருமணம் முடிந்து போய் விடுவாள். அது வரைக்கும் நீ கொஞ்சம் உன் வாயை மூடிக் கொண்டிரு டிஃபன் சாப்பிட்டு விட்டாயானால் நீ ஸ்டேஷ்னுக்குக் கிளம்பு" என கோபமாக சொன்ன அம்மாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பார்த்தான் மித்ரன்.
"மாத்ஸ் வரலை என்றால் என்ன, நீ தான் உன் ஃபில்டில் திறமையானவள் என்று பெயர் எடுத்திருக்கியே" என்று சசியும் சமாதானப்படுத்த முயற்சித்தான்.
இப்போது எது பேசினாலும் தப்பாக தெரியும் என்பதால், மெளனமாக தன் லாப்டாப் பேகை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினான் மித்ரன். வாசல் கதவு வரை சென்றவன் ஏதோ உள்ளுணர்வு தோன்ற திரும்பி பார்த்தப் போது, சம்யுக்தாவின் முகம் மட்டும் வருத்தமாக இருக்க கண்கள் சிரிப்புடன் மின்னின.
பொங்கி வந்த சினத்தை தன் அம்மா சொன்ன சொற்களை அடக்கியது. இது போல் வம்பிழுக்க இரண்டு நாட்களுக்கு பிறகு தன் தங்கை இந்த வீட்டில் இருக்க மாட்டாள் என்ற நினைப்பே தொண்டையை அடைத்த்து. அவனின் முகம் உணர்ச்சியற்று இருக்க, அவனின் கண்களில் நீர் நிறைந்தது.
அவனையே கேலியாகப் பார்த்து கொண்டிருந்த சம்யுவின் கண்கள், அவனில் எற்பட்ட மெல்லிய மாற்றம் கண்டு திகைத்தன. அவனின் மனநிலையை உடனடியாக உணர்ந்தவளின் கண்களிலும் நீர் நிறைந்தது.
சிறு வயதில் இருந்து இவர்கள் இருவருக்குள்ளும் என்றும் இருப்பது. ஒருவர் மற்றவரின் உணர்வுகளை வாய் மொழியால் சொல்லாமல் பார்த்தவுடன் அறிந்து கொள்வது. உணர்வுகளை புரியாதவர்களுக்காக தானே மொழியே உண்டாக்கப்பட்டது
தன் உணர்வுகளை அடக்கியப்படி தட்டில் இருந்த இட்லியை சட்னியில் தொட்டு சாப்பிட்டாள்.
"நீ எப்ப டிரஸ் ரிகர்ஸல் முடித்து விட்டு வருவாய்?", என கேட்ட தன் அம்மாவிடம், "அம்மா, இங்கே திரும்பவும் வந்து விட்டு போவதற்கு நேரமில்லை. நான் அப்படியே நேராக ப்யூட்டி பார்லர் போய் மேக் அப் செஞ்சிட்டு ஹோட்டலுக்கு இரண்டு மணிக்கு வந்திடறேன்", என்றாள்.
"அத்தை நான் சம்யுவை அழைச்சிட்டு வந்திடறேன்" என்ற சசிதரனிடம், "சசி, நீங்களும் ரெடியாக வேண்டாமா? நான் என் பிரண்ட் ஸ்ருதியை பார்லருக்கு நேராக வர சொல்லியிருக்கேன். நான் அவ காரில் வந்து விடுகிறேன்" என்றாள்.
"சம்யு, அப்படியெல்லாம் உன்னை தனியாக விட முடியாது. திருமணம் கிட்ட நெருங்கிட்டிருக்கு" என்றார் கவலையுடன் வினோதினி.
"ஐயோ அம்மா, சசி என்னை ப்யுட்டி பார்லரில் டிராப் செய்து விடுவான். ஸ்ஸ்ஸ்.. ஸாரி விடுவார். ஸ்ருதி அங்கே எனக்காக காத்திக்கிட்டு இருப்பா. நான் தனியாக எப்பவும் இருக்க மாட்டேன். பயப்படாதீங்க" என்றாள்.
"அப்ப லஞ்ச் எங்கே சாப்பிடுவே?" என்ற தாயிடம், "நான் பீட்ஸா சாப்பிடறேன்", என்றவளை பார்த்து முறைத்தவர், "ஸம்யு, வெளியில் பார்த்துச் சாப்பிடு செல்லம்", என கவலையுடன் முடித்தார்.
"சரிம்மா" என சொன்னவள் சசியை பார்த்து கண்ணைசத்து சீக்கிரம் கிளம்ப சொன்னாள்.
"சரி அத்தை, கிளம்பறோம்", என்றான் சசிதரன்.
"சசி, நீங்க உங்க அப்பா அம்மாவோடு நேராக ஹோட்டலுக்கு வந்து விடுங்க. மித்ரனும் நேராக ஹோட்டலுக்கு வந்து விடுகிறேன் என்றான். நானும் மாமாவும் லன்ச் முடிச்சிட்டு இரண்டு மணிக்கு வந்து விடுகிறோம்" என்றார்.
"சம்யு, மெஹந்தி டிரஸ் எடுத்திட்டியா?" என கேட்டார் வினோதினி
"எடுத்திட்டேன்மா" என்று பேகை காட்டினாள்.
"ஆண்ட்டிக் செட் தானே போட்டுக்க போறே? அதை எடுத்திட்டியா, உன் வளையல், கொலுசு இதெல்லாம் எடுத்திட்டியா?" என கேட்டார்.
"எல்லாம் நேற்றே எடுத்து வைச்சிட்டேன்மா" என்றாள்
"சம்யு, எதாவது மிஸ் பண்ணிட்டே என்றால் போன் பண்ணி சொல்லு, நாங்க ஒரு மணிக்கு மேல தான் கிளம்ப்வோம். நான் வரும் போது எடுத்திட்டு வரேம்" என பாசத்துடன் சொன்னார்.
"மொபைலில் சார்ஜ் இருக்கா?" என சிறு குழந்தைப் போல் தன்னை கேள்வி கேட்கும் தாயை அலுப்புடன் பார்த்தாள்.
"அம்மா, எனக்கு என்னை பார்த்துக்க தெரியும்மா" என ஆற்றாமையுடன் சொன்னவளின் இரு கன்னங்களையும் கைகளில் ஏந்தியவர், "நீ எனக்கு இன்னும் பிங்க் ஃப்ராக் போட்டிருக்கிற சம்யு தான்" என சொன்னவரின் கண்களில் நீர் நிறைந்தது.
"வினோ. என்ன இது.. அவங்க கிளம்பனும். சம்யு எதுவானாலும் மித்ரனை உடனே கூப்பிடு" என்றார் வசந்தன்.
சரியென்று தலையசைத்து சசியுடன் காரில் பார்த்தப்படியே நின்றிருந்தார் வினோதினி.
தன் மனைவியின் தோளினைப் பற்றி ஆறுதல்படுத்திய வசந்தன், "நல்ல காரியம் நடக்கும் போது அழக்கூடாது, அவங்க ஜோடி பொருத்தம் பார், எப்படி அருமையாக இருக்கு", என்றார்.
"எனக்கு அது தாங்க பயம். ஒரு குறையும் இல்லாம இந்த திருமணம் நல்லபடியாக முடியனும். அந்த மகமாயியை தான் நம்பி இருக்கேன்" என்றார்.
"எல்லா நல்லப்படியாக நடக்கும். அவளுக்குப் பொருத்தமானவன் கிட்ட தான் மகமாயி கொண்டு போய் சேர்ப்பாள்" என்றார் வசந்தன்.
"என்ன சேர்ப்பாள்னு சொல்றேங்கே, சசிக்கிட்ட ஏற்கனவே சேர்த்து வைத்து நம் வேண்டுதலை நிறைவேற்றி வைத்து விட்டாள்", என்றார் வினோதினி.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro