Sudum Nilavu Sudatha Suriyan - 17
சுடும் நிலவு சுடாத சூரியன் – 17
"சித்து.." என அழைத்தபடி வந்த வெற்றிவேல் அவர்கள் அனைவரையும் பார்த்து நட்பாக சிரித்தார்.
"யெஸ் கிராண்டி" என சொன்னவனை தன்னுடன் வர சைகை செய்தார்.
தன்னுடன் வந்தவனை அழைத்துச் சென்று, "இவர் வசந்தன், மித்ரன், ஸம்யுவோட அப்பா" என்றார்.
"யா, எனக்கு தெரியும். ஆஸ்பிட்டலில் பார்த்தேன்" என சினேகமாய்ப் புன்னகைத்தான்.
"இவர் முரளிதரன், இவருக்கும் நம்ம சத்தி தான் சொந்த ஊர். முப்பது வருஷ பழக்கம். இப்போ பேசிட்டிருந்தியே, சசிதரன், அவனோட அப்பா" என சொன்னார்.
"ஒ, அவர் நீங்க தானா. நான் உங்களை மீட் பண்ணனும் என்று நினைச்சிட்டிருந்தேன்" என சிரிக்காமல் சொன்னவன், தன் கைகளை நீட்டினான்.
முரளிதரன் நீட்டிய கையை வலிமையாக பற்றினான். "நைஸ் மீட்டிங் யூ அங்கிள்" என குலுக்கினான். அவன் சற்று அளவுக்கு அதிகமாகவே அவரது கையை அழுத்தியது போல் உணர்ந்தார் முரளிதரன்.
வலியை மறைத்துக் கொண்டு, அவர் வலிந்து புன்னகைத்தவர், "எதுக்கு என்னை மீட் பண்ண நினைச்சீங்க" என கேட்டார்.
"மகாதேவன் தாத்தா, தேவ் ஃபுட்ஸ் என்ற பெயரில் வொர்ல்ட் வைட், பிராஸஸ்ட் ஃபுட்ஸ், டிஸ்டிரிப்யூட் செய்யறார். இந்தியாவில் ஸீ ஃபுட்ஸ்க்கு சரியான சானல் பார்ட்னர் கிடைக்கலை. நீங்க ஸீ ஃபுட்ஸ் எக்ஸ்போர்ட் பண்றீங்க என்று கேள்வி பட்டேன்" என சொன்னவனது கண்கள் முரளிதரனை கூர்மையாக பார்த்தன.
"கண்டிப்பாக மீட் பண்ணலாம். ஒரு நாள் ஆபிஸுக்கு வாங்க" என தன் விஸிட்டிங் கார்ட்டை கொடுத்தார்.
கார்ட்டை கையில் வாங்கியவனின் துளைக்கும் பார்வையை தாங்க முடியாமல், தன் முகத்தை மறுபக்கம் திருப்பி வெற்றிவேலை பார்த்தார்.
"அங்கிள், நாம இனிமே நிறைய மீட் பண்ணுவோம் என்று நினைக்கிறேன்" என உணர்ச்சியற்று சொன்னவனை திரும்பி கேள்வியாக பார்த்தார்.
"ஸீ ஃபுட்ஸ், பார்ட்னர்ஷிப் பத்தி பேசணும், உங்க பிராஸ்ஸஸிங் யூனிட்டைப் பார்க்கனும், பாக்கேஜிங் பத்தி பேசணும்" என சொன்னவனிடம் எதுவும் சொல்லாமல் தலையசைத்தார்.
அதற்குள், வெற்றிவேலை யாரோ கூப்பிட, சித்தார்த்துடன் நகர்ந்து சென்றார். குளிரூட்டப்பட்ட அந்த பெரிய ஹாலில், முரளிதரனுக்கு வியர்த்துக் கொட்ட, தன் கைகுட்டையால் துடைத்தார்.
பஃபே முறை உணவு முடிந்து, ஸம்யுக்தா அமிதாவுடன் கிளம்பினாள். மித்ரனை தேடியவளின் பார்வை சூழன்று சித்தார்த்திடம் வந்து நின்றது.
சித்தார்த் தீவிரமாக தன் எதிரே நின்றிருந்தவனிடம் ஏதோ பேசி கொண்டிருந்தான். முதலில் விளக்கு வெளிச்சத்தில், இன்னொருவனின் முகம் சரியாக தெரியவில்லை. உற்று பார்த்ததில் தெரிந்த முகத்தைப் பார்த்து அதிர்ந்தே போனாள்.
அகிலனுடன், பேசி கொண்டிருந்த மித்ரனிடம் பதட்டமாக சென்றவள், "அண்ணா, அங்கே பாரு. ரவிகுமார் ஜெயிலில் இருந்து தப்பிச்சிட்டான் போலிருக்கு" என சொன்னாள்
ஸம்யுக்தா சுட்டிய இடத்தில் சித்தார்த், ரவிகுமாரிடம் பேசி கொண்டிருந்தான். வெளிப்படையாக அனைவரும் இருக்கும் போது சித்தார்த், ரவிகுமாரிடம் பேசுவான் என மித்ரன் எதிர்பார்க்கவில்லை.
"ரவிகுமாருக்கு பெயில் கொடுத்துட்டாங்க ஸம்யு" என அகிலன், எப்போது பெயில் கொடுத்தார்கள், என்பதை சொல்லாமல் விட்டான்.
"எனக்கு சந்தகமே இல்லை அண்ணா, இவங்க இரண்டு பேரும் தான் என்னை கடத்தினாங்க. சித்தார்த் தான்.." என அவள் சற்று குரலை உயர்த்தியதும், அருகே நின்றவர்கள் திரும்பி பார்த்தனர்.
"அமிதா, ஸம்யுவை கூட்டிட்டு வீட்டுக்குப் போங்க. நான் அப்பா கிட்ட சொல்றேன், அவரும் உங்க கூட வருவார்" என்றான் மித்ரன்.
"இல்லை அண்ணா, அவன் தான், எனக்கு நல்லா தெரியும்.." என ஸம்யு மறுபடியும் தொடங்க, அவளது கைகளை பிடித்த மித்ரன், "ஸ்ம்யு, நீ அண்ணாவை நம்பறே தானே?" என கேட்டான்.
அவள் மறுக்க முடியாமல் தலையசைக்க, "நான் பார்த்துக்கிறேன். நீ இப்போ எதுவும் சொல்லாமல் வீட்டுக்குக் கிளம்பு" என்றான் மித்ரன்.
அமிதாவுடன் பத்தடி நடந்த ஸம்யு, திரும்பி மித்ரனை பார்த்தாள். அந்த பார்வை நான் உன்னை நம்புகிறேன் என்று சொன்னது. அவன் திரும்பி பார்த்த பார்வை, உன் நம்பிக்கையைப் பொய்யாக்க மாட்டேன் என்றது.
சசிதரனுடன் பேசி கொண்டிருந்த வசந்தனிடம், ஸம்யுவிற்கு கால் வலிப்பதால் அவள் வீட்டுக்குச் செல்ல போவதாக சொன்னான். உடனே அவரும், வினோதினியுடன் கிளம்புவதாக சொன்னார். சசியும் அவருடன் செல்வதை பார்த்து விட்டு, திரும்பும் போது ரவிகுமார் அங்கே இல்லை. சித்தார்த் வேறு ஒருவருடன் பேசி கொண்டிருந்தான்.
அகிலன் சுற்றிலும் பார்த்து விட்டு ரவியை காணாமல் மித்ரனிடம், "குருவி பறந்திடிச்சு" என்றான். "எதிர்பார்த்தது தானே" என்றான் மித்ரன்.
அவர்கள் அருகே வந்த சித்தார்த், "பார்ட்டி எப்படியிருந்தது?" என கேட்டான்.
அகிலன் சிரித்தபடி, "குட். நிறைய பேரை மீட் பண்ணோம்" என்றான்.
"சித்தார்த், நாம நெக்ஸ்ட் எப்போ மீட் பண்ணலாம்?" என கேட்டான் மித்ரன்.
"தாத்தா நேட்டிவுக்கு போகனும் என்று சொல்றார். இன்னும் பிளான் முடிவாகலை. அவருக்கும் இப்போ தான் ஹெல்த் சரியாயிட்டு வருது. மகாதேவன் தாத்தாவோட பிஸினஸை, இங்கே எக்ஸ்பாண்ட் பண்ண சில பேரை சந்திக்க வேண்டியிருக்கு. தாத்தா, இன்னிக்கு அதுக்காக சில அதிகாரிங்களையும், பிஸினஸ் ஆளுங்களையும் அறிமுகம் செஞ்சு வைச்சார்" என்றான்.
"ஒ, அப்படியா. நீ ஃப்ரியா இருக்கும் போது சொல்லு. மீட் பண்ணலாம்" என்றான் மித்ரன்.
"ஷுயூர். நான் இன்ஃபார்ம் பண்ணறேன்" என்றான் சித்தார்த்.
"அஞ்சு நிமிஷம் முன்னாடி, ஒரு ஒல்லியான பையன் கூட பேசிட்டிருந்தியே, யார் அவன்?" என இயல்பாக கேட்டான் அகிலன்.
சற்றும் முகம் மாற்றம் அடையாமல், "அகில், யாரை சொல்றே? நிறைய பேரை இன்னிக்கு சந்திச்சேன். எனக்கு இப்போ ஒருத்தர் பேர் கூட ஞாபகமில்லை" என்றான் சித்தார்த்.
"மாடி ஸ்டெப்ஸ் கிட்ட பேசிட்டிருந்தியே? ரெட் ஷர்ட் போட்டிருந்தானே?" என்றான் அகிலன்.
"ஒ, அவனா, ரவிகுமார்" என சற்றும் குரலில் மாற்றமில்லாமல் சொன்னான் சித்தார்த்.
"அவனை முன்னாடியே தெரியுமா?" என கேட்டான் அகிலன்.
"இங்கே வந்தப்பறம் தான் தெரியும், தாத்தா வீட்டில் தான் வேலை செய்றான். எனக்கு சென்னையில் எந்த இடமும் தெரியாது. இங்கே டிரைவ் செய்யறது ரொம்ப கஷ்டமாயிருக்கு. அவன் தான் ஹெல்ப் செய்றான்" என்றான்.
"சித்தார்த், அவன் ஒரு கிட்நாப் கேஸில் போலிஸிடம் மாட்டியிருக்கான், உனக்கு தெரியுமா?" என கேட்டான் மித்ரன்.
முகத்திலோ, குரலிலோ எந்த மாற்றமும் இல்லாமல், "எனக்குத் தெரியும்" என்றான் சித்தார்த்.
"நாதன் அங்கிள் அவனை பத்தி சொன்னார். இப்போ பெயிலில் இருக்கான்" என சொன்னான்.
"தெரிஞ்சும் ஏன் அவன் கூட பழகிட்டிருக்கே, யூ ஷுட் ஸ்டே கிளியர் ஆஃப் திஸ் பெர்ஸன்" என கோபமாக சொன்னான் மித்ரன்.
"மித்ரன், யார் தான் தப்பு செய்யலை. சில பேர் மாட்டிக்கிறாங்க, சில பேர் தப்பிச்சிடறாங்க. உங்க நாட்டில் சின்ன தப்பு செஞ்சவங்க எல்லாம் ஈஸியா மாட்டிக்கிறாங்க, கொலை செஞ்சவங்க வெளியே ஹாப்பியா இருக்காங்க" என சித்தார்த் சொல்லும் போது அவன் குரல் உணர்ச்சியற்று இருந்தது.
"சித்தார்த் உனக்குப் புரியலை. இவன் உன்னை மிஸ் கைட் பண்ணலாம், பீ கேர்ஃபுல்" என்றான் மித்ரன்.
"மித்ரன், எனக்கு என்னை பார்த்துக்க தெரியும்" என சொன்னவன், "அவனுக்கும் எனக்கும் ஒரு பாண்ட் இருக்கு" என ஆழ்ந்த குரலில் சொல்லி அவர்கள் இருவரையும் அதிர வைத்தான்.
"பாண்ட்?" என புரியாமல் கேட்டான் அகிலன்.
"யெஸ், ஹாவ எ எமொஷனல் கனெக்ட். தமிழில் எப்படி சொல்றது" என யோசித்தான்.
"பந்தம்" என சொன்னான் மித்ரன்.
"யெஸ், அது தான்" எனறவனிடம், "நீ வந்து பத்து நாள் கூட முடியலை. அவனை உனக்குப் பத்து நாளாக தானே தெரியும், அப்பறம் எப்படி அவ்வளவு டீப் ரிலேஷன்ஷிப்" என கேட்டான் அகிலன்.
"இட் கோஸ் டெவண்டி இயர்ஸ் பேக்" என்றான் சித்தார்த்.
புரியாமல் பார்த்த மித்ரனிடம், "எங்கப்பாவும், அம்மாவும் இருபது வருஷம் முன்னாடி, கார் ஆக்ஸிடண்ட்டில் இறந்துட்டாங்க" என வருத்தமான குரலில் சொன்னவன், "அந்த காரோடு டிரைவர் தான் ரவிகுமாரோட அப்பா, சண்முகம்" என்றான்.
"ஓ, அப்படியா?" என கேட்ட அகிலனிடம், "அப்போ எனக்கு அஞ்சு வயசு, ரவி அப்போ பிறக்கவே இல்லை. அவங்கம்மா சைல்ட் பர்த்தில் இறந்துட்டாங்க" என சொன்னான்.
"அந்த ஆக்ஸிடண்ட்டால், நானும், ரவியும் ஆர்ஃபன், அனாதையா இந்த உலகத்தில் இருக்கோம்" என சொன்னவனின் கண்களில் ஆழ்ந்த வலி தெரிந்தது.
"ஐ ஆம் ஸாரி" என வருத்தமான குரலில் சொன்ன அகிலனிடம், "இட்ஸ் ஒகே" என சொன்னான்.
"ரவியை யாரும் ஒழுங்கா கைட் பண்ணதால், கிரிமினலாயிட்டான். அவனை பார்த்துக்க வேண்டிய ரெஸ்பான்ஸிபிலிட்டி எனக்கிருக்கு" என சொன்னான்.
"ஒகே, ஃபைன். நாங்க கிளம்பறோம்" என அவனிடம் கை கொடுத்து விட்டு கிளம்பினர்.
அகிலனின் காரில், நேராக அவர்கள் போலிஸ் தலைமையகம் வந்தனர்.
அகிலனின் அறையில் வந்து சேரில் அமர்ந்ததும், அகிலன் அவனை பார்த்து, "சித்தார்த் இஸ் ஸிம்பிளி அமேஸிங் அண்ட் மார்வெலஸ். நீலிமா இன்னும் ரிப்போர்ட் அனுப்பலை. எங்கே படிச்சான் என்று பார்க்கனும். ஏதோ பெரிய பிஸினஸ் ஸ்கூலில் படிச்சிருப்பான். நாளைக்கு நம்ம பசங்களையும் அங்கே தான் படிக்க அனுப்பனும்" என சிலாகித்தவனை முறைத்தான் மித்ரன்.
"அவன் நம்மை வைச்சு நல்லா விளையாடறான்" என சொன்னவனை கடுப்பாக பார்த்தான் மித்ரன்.
"அவன் ஸம்யுக்தா பார்க்கனும் என்று தான் ரவிகுமாரோட பார்ட்டியில் பேசியிருக்கான். அவனுக்கு நல்லா தெரியும், ஸம்யு உங்கிட்ட வந்து அதை பத்தி சொல்லுவானு. நீயும் கண்டிப்பாக ரவியைப் பத்தி அவங்கிட்ட சொல்லுவேன் என்றும் அவனுக்கும் தெரியும்" என சிரித்தான்.
"அவன் நம்மகிட்ட சொல்ல வேண்டிய விஷயத்தையும் சொல்லிட்டான்" என சொன்ன அகிலனை கேள்வியாகப் பார்த்தான் மித்ரன்.
"அவனும், தாத்தாவும் இன்னும் கொஞ்ச நாளில் சத்தியமங்கலுத்துக்கு போறாங்க. ரவியும், அவனும் ஒரே விஷயத்தால் பாதிக்கப்பட்டிருக்காங்க. அதனால் அவங்க இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ செய்ய போறாங்க. அதை நம்மால முடிஞ்சா கண்டுபிடிக்க சொல்றான்" என சிரித்தபடி சொன்னான் அகிலன்.
"அவன் செய்யறதுக்குப் பேர், கண்ட்ரோல்ட் இன்ஃபோர்மேஷன் பிரொவிஷன்" என்றான் மித்ரன்.
"ஆமாம். அவனுக்கு எப்போ, யார்கிட்ட, எந்த இடத்தில், எந்த விஷயத்தை, எப்படி சொல்லனும் என்று தெரியும். அவனுக்கு எந்த மாதிரி ரியாக்ஷன் வேணுமோ, அதுக்கு ஏத்த மாதிரி அவன் இயல்பாக செய்யற மாதிரி, தான் நினைச்சதை செஞ்சிடறான்" என அகிலன் சொன்னான்.
"அவங்க அப்பா, அம்மா செத்து போனதில் ஏதோ மர்மம இருக்கு. அது வெறும் ரோட் ஆக்ஸிடண்ட் என்று தோணலை. ஸம்யு கடத்தப்பட்டதற்கு, அதுக்கும் தொடர்பு இருக்கு என்று நினைக்கிறேன்" என சொன்னான் மித்ரன்.
"அதை தான் அவன் இன்னிக்கி நம்ம கிட்ட சொன்னான். இப்போ இருக்கிற நாலு பேர் தான் அந்த விபத்தின் போது அங்கே இருந்திருக்காங்க. வெற்றிவேல் தாத்தா, சித்தார்த், எங்கப்பா, முரளிதரன் அங்கிள்" என்றான் மித்ரன்.
"நாதன் ஸார்?" என யோசனையாக கேட்டான் அகிலன்.
"அவர் அப்போ அங்கே இல்லை. மூணு மாசத்திற்கு அப்பறம் தான் வந்திருக்கார்" என்றான் அகிலன்.
"வெற்றிவேல் தாத்தாவோ, சித்தார்த்தோ என்ன நடந்தது என்று சொல்ல மாட்டாங்க. எங்கப்பாவோ, முரளி அங்கிளோ தான் சொல்லனும்" என்றான் மித்ரன்.
"சரி, நான் வீட்டுக்குப் போறேன்" என சொன்ன மித்ரனிடம், "வெயிட் பண்ணு, நீலிமா ரிப்போர்ட் அனுப்பியிருக்காளா என்று பார்த்துட்டு நானும் வர்றேன்" என்ற அகிலன் அவன் மெயிலை செக் செய்தான்.
"மித்ரன், நீலிமா ரிபோர்ட் அனுப்பியிருக்கா. அதை பார்த்துட்டு போலாம்" என்றான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro