Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Sudum Nilavu Sudatha Suriyan - 16

சுடும் நிலவு சுடாத சூரியன் – 16

"வா சம்யு" என அமிதா காரின் கதவை திறந்து அவளை பார்த்துச் சிரித்தாள்.
அவளது கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவள், "இந்த டிரஸ்ஸை பாக்ஸில் இருந்து எடுக்கும் போதே, இது உனக்கு தான் என்று எடுத்து வைச்சிட்டேன். உனக்கு இந்த டிரஸ் சூப்பர்பா இருக்கு" என்றாள்.

அமிதா, காலை அவர்களின் வீட்டுக்கு வந்திருந்த போது, தன் பொட்டிக்கில் இருந்து சம்யுக்தாவிற்கு, மயில்கழுத்து நிறத்தில் ஃபுல் லெந்த் ஸல்வார் எடுத்து வந்திருந்தாள்.
கழுத்தில் இருந்து இடுப்பு வரை, தங்க நிற ஜரி வேலைப்பாடுகளுடன் அந்த உடை எழிலாக இருந்தது. ஸம்யுக்தாவின் சந்தன நிறத்திறகு அமிதா எதிர்பார்த்ததை போலவே அழகாய் பொருந்தியது. காதுகளில் தொங்கிய டைமண்ட் ஹாங்கிங்ஸும், கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய டைம்ண்ட் டிஸைனர் செயினும் அவளை இன்னும் அழகாக்கியது.

மித்ரன் ஏற்கெனவே சொல்லியிருந்ததால், சம்யுக்தாவுடனே இருந்தாள் அமிதா. வெற்றிவேலின் நெருங்கிய நண்பர்களும், அரசு அதிகாரிகளும், பிஸினஸ் தொடர்பு உள்ளவர்களும் வந்திருந்தனர். நூறு பேர் கலந்து கொண்ட அந்த பார்ட்டி வெற்றிவேல் வீட்டின் இரண்டாவது மாடியில் நடந்தது.

அமிதா, சம்யுக்தாவுடன் இயல்பாக பேச முயற்சி செய்துக் கொண்டிருந்தாள். ஆனால் சம்யுவோ, தன் மெல்லிய துப்பட்டாவின் நுனியை, விரல்களில் அழுந்த சுற்றிப் பிரித்துக் கொண்டிருந்தாள். அலைபாய்ந்த அவளது கண்கள், அகிலனுடன் மித்ரன் பத்தடி தூரத்தில் நிற்பதைக் கண்ட பின்பே அமைதியானாள்.

"ஹாய் ஸம்யு" என அருகே வந்த சசிதரனை பார்த்ததும், வலிந்து புன்னகைத்தாள்.
"ஹாய்" என மெலிதான குரலில் சொன்ன சம்யுகதா, திரும்பி தன் அண்ணனை பார்த்தாள்.

அவன் அங்கேயே நின்றிருக்க, திரும்பவும் சசியை ஏறிட்டுப் பார்த்தாள். இளநீல நிற சட்டையும், கறுப்பு பேண்ட்டும் அணிந்திருந்தான்.

"இப்போ கால் காயம் ஆறிடிச்சா?" என பரிவுடன் கேட்டான்.
"பரவாயில்லை" என சொல்லி விட்டு பார்வையை சுழல விட்டாள்.
"இப்போ வலது கையை அசைக்க முடியுதா?" என அவன் கேட்டவுடன், மையமாக தலையசைத்தாள்.

அமிதாவிற்கு அங்கு நிற்பதா, வேண்டாமா என தெரியவில்லை. சசியால் தான் அங்கு இருப்பதால், இயல்பாக பேச முடியவில்லை என உணர்ந்தாள்.

மெதுவாக நகர்ந்து, சற்று தள்ளி நின்று தன் செல்லை பார்க்க தொடங்கினாள்.

சசியால், ஸம்யுவின் முகத்திலிருந்து கண்களை எடுக்கவே முடியவில்லை. என் மனைவியாக, என்னருகே நின்றிருக்க வேண்டியவள், விதியின் செயலால், தள்ளி நிற்பதை பார்க்க கஷ்டமாக இருந்ந்தது,

அவள் கண்கள் அலைபாய்வதையும், முகத்தில் ஒரு நிலையின்மை இருப்பதையும் உணர்ந்தான். அவள் கைகளைப் பிடித்து ஆறுதல் சொல்ல நினைத்தாலும், மித்ரன் என்ன நினைப்பான் என யோசனையாக இருந்தது.

"ஹாய் மித்ரன், ஹலோ அகிலன்" என அவர்கள் தோள்களை தட்டிய கமிஷ்னரைப் பார்த்து, மித்ரனும், அகிலனும் மரியாதையாக புன்னகைத்தனர்.

"ஹவ் டூ யூ டூ ஸர்?" என கேட்டனர்.
"ஃபைன்" என்றவர், "ஹோம் செக்ரெட்டரி வந்திருக்கார். நீங்க மீட் பண்ணனும்" என அழைத்துச் சென்றார்.

மறுக்க முடியாமல், மித்ரன் ஸம்யுவை திரும்பி பார்த்தான். அவள் சசியுடன் பேசி கொண்டிருக்க, அமிதா சற்று தள்ளி நின்று செல்லைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிம்மதியுடன் அவன், அங்கேயிருந்து நடந்தான்.

அமிதாவின் அருகே வந்த இரு இளம் பெண்கள், "ஹாய்" என்றனர்.
சினேகமாய புன்னகைத்த அமிதா, "ஹாய்" என்றாள்.

"உங்க ஸாரி ரொம்ப அழகாயிருக்கு. கலர் காம்பினேஷன், பாட்ச வொர்க், அமேஸிங். எங்கே வாங்கினீங்க?" என கேட்டனர்.

"வாங்கலை, நானே டிசைன் செஞ்சேன்" என்றவுடன், "வாவ்" என ஒரே நேரத்தில் இருவரும் சொன்னார்கள்.

"நீங்க டிரஸ் டிசைனரா?" என அதில் ஒருத்தி கேட்டவுடன், "யெஸ், ஐ ஹாவ் எ பொட்டிக்.." என பேச்சை தொடர்ந்தாள் அமிதா.

சசி என்ன கேட்டாலும், ஒற்றை வார்த்தையிலேயே பதில் சொன்னாள் சம்யுக்தா. அவனது முகத்தைப் பார்க்காமல் தலையை குனிந்து கொண்டோ, சுற்றி பார்த்தபடியே பதில் சொன்னாள்.

"ஹாய் யுக்தா. நைஸ் மீட்டிங்க் யூ அகைன்" என கை நீட்டியவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் எதிரே, நீல் நிற கண்களுடன் சிரித்தபடி நின்றிருந்தான். வெள்ளை நிற ஷர்ட்டும், ஆழ்ந்த கருநீலத்தில் டை அணிந்திருந்தான். அதே ஆழ்ந்த நீலத்தில் கோட் அணிந்திருந்தான். இவன், அவனில்லை என்று மித்ரன் சொன்னது நினைவில் வந்து போனது.

முகம் மகிழ்ச்சியில் மலர்ந்திருக்க, வெள்ளை நிறத்தில் மின்னும் கன்னங்களும், அதை விட மின்னிய கூர்மையான கண்களும், கூர்மையான மூக்கும், அகன்ற நெற்றியும், அடர்த்தியான மீசையும், அடர்ந்த கறுத்த தலைமுடியும், அவனிடமிருந்து பார்வையை அகல விடாமல் செய்தது.

"நாம முன்னாடியே மீட் பண்ணியிருக்கோம். ரிமம்பர்.. ஸிட்.. சித்தார்த். அன்னிக்கு மித்ரனோட பீச்சில் பார்த்தோமே" என சொன்னவனது கூர்மையான பார்வை, அவளது கண்களை தாண்டி இதயத்தை ஏதோ செய்தது.

"அன்னிக்கும் நீ ஹாண்ட் ஷேக் பண்ணவே இல்லை" என ஆழ்ந்த குரலில் அவன் சொன்னவுடன், அனிச்சையாக அவள் வலது கையை நீட்டினாள்.

நீண்டிருந்த அவனது வலது கை மென்மையாக அவளது கையைப் பற்றியது. ஒரு நொடி சம்யுக்தாவிற்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அவனது கையிலிருந்து ஏதோ மின்சாரம் பாய்ந்ததை போல் உணர்ந்தாள். உச்சந்தலையிலிந்து, உள்ளங்கால் வரை வேகமாக ஒரு மின் அதிர்வு கடந்து சென்று, அவளது இதய்த்தை அதிர வைத்தது. கன்னங்கள் சிவந்து, கண்கள் நீர்த்து, மூச்சு விட சிரமமானது. கால்கள் தளர தொடங்கி, விழுந்து விடுவோமோ என அவள் நினைத்த அந்த நொடியில் அவனது இடது கையும், இணைந்திருந்த அவர்களது கையுடன் சேர்ந்து கொண்டு, வலிமையாக அவளை பற்றியது. அவனது கண்கள் அவளிடம் மொழியுல்லாமல் சொன்னதை, அவளது இதயம் புரிந்து கொண்டது.

அப்போது தான் சசிதரனை கவனித்தவன், அவளது கைகளைப் பற்றியபடியே, "ஸாரி, நீங்க..." என கேள்வியுடன் பார்த்தான்.

"ஐ ஆம் சசிதரன், முரளிதரனோட ஸன்" என்றவனை உணர்ச்சியின்றி பார்த்தவன், "யெஸ், தாத்தா சொல்லியிருக்கார். உங்களுக்கும் சத்தி தான் நேட்டிவ், ரைட்?" என்றான்.

"யெஸ், இன்னும் அங்கே எங்களுக்கு பிராபர்ட்டி இருக்கு" என சொன்னவனை பார்த்து புன்னகைத்தான்.

சித்தார்த் இன்னும் ஸம்யுக்தாவின் கைகளைப் பற்றியிருப்பதை பார்த்த சசி, "ஸம்யு இஸ் மை ஃபியான்ஸே" என நாசூக்காக சொன்னான்.

"இஸ் இட். கங்கிராட்ஸ் சசிதரன்" என சொன்னவன், "கங்கிராட்ஸ் யுக்தா" என அவளைப் பார்த்தவனது கண்களில், இனம் புரியாத உணர்வு வந்து போனது.

"யுக்தா பேச மாட்டாங்களா?" என சசியிடம் திரும்பி கேட்டான் சித்தார்த்.
"நல்லா பேசுவா. ஷி இஸ் நாட் வெல் நவ்" என்றான்.

என்ன்வென்று பார்வையாலே சித்தார்த் கேட்க, அவனிடம் கடத்தல் பற்றி சொல்ல வேண்டாம் என்று, "ரோட் ஆக்ஸிடண்ட், தலையில் லேசாக அடிபட்டிருச்சு, வலது கையில் ஃப்ராக்சர், காலில் நல்ல அடி" என்றான்.

"ஸாரி" என வருத்தமாக சொன்னவன், அவளை பற்றியிருந்த வலது கையை பார்த்து, "ஆர் யூ ஒகே நவ்" என கேட்டவனது குரலில் மிக லேசாக கவலை எட்டி பார்த்தது. "இப்போ நடக்க முடியுதா?" என கேட்டவனின் குரல் உணர்ச்சியற்று இருந்தாலும், அவளைப் பார்த்த கண்களில் கவலையும், வேதனையும் தெரிந்தன. அவளது கையை மெதுவாக அவனது கைகள் வருடி ஆறுதல் சொல்லின.

அவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தாலும், அவளது தொண்டை வரண்டு போயிருந்தது. பேச முடியாமல் ஏதோ ஒன்று அவள் நாக்கை கட்டி போட்டிருந்தது. எதற்கு தலையசைக்கிறோம் என்று தெரியாமலே அதை செய்தவள், அவனிடமிருந்து மெதுவாக தன் கையை விலக்கி கொள்ள முயன்றாள். மென்மையாக பற்றியிருந்த்தை போலிருந்தாலும், அவனது கைகள் அவளை வலிமையாக பற்றியிருந்தன.

"சசி, நீங்க என்ன செய்யறீங்க?" என சித்தார்த் கேட்க, "நான் அப்பாவோட பிஸினஸ் செய்யறேன். ஃபுட் ப்ராஸ்ஸஸிங்" என்றான்.

"ஓ, கிரேட். ஸீ ஃபுட்?" என கேட்டவனிடன், "யெஸ், அது மட்டுமில்லை, டிரை புருட்ஸ், நட்ஸ்.." என அவன் சொல்லி கொண்டிருக்க, "ஹாய் ஸிட்" என அவன் தோளை தட்டினான் மித்ரன்.

"ஹாய் டியூட்" என்ற சித்தார்த், "அகில் எங்கே?" என கேட்டான்.

"ஹி ஹிஸ் வித் அவர் பாஸ்" என சொன்னவன், சித்தார்த், ஸம்யுவின் கையை பற்றியிருப்பதை கூர்மையாக பார்த்தான்.

மித்ரனின் பார்வை சென்ற இடத்தை உணர்ந்தவன், "யூ ஆர் ஸோ பேட் மித்ரன், யுக்தா மெட் வித அன் ஆக்ஸிடண்ட், நீ எங்கிட்ட சொல்லவேயில்லை. இப்போ தான் சசி சொன்னார். வலது கையில் ஃபிராக்சர் என்று சொன்னார். அதான் பார்த்திட்டிருந்தேன்" என அவன் சொல்லும் போது, ஸம்யுகதா தன் கையை அவனது கைகளிடமிருந்து விலக்கி கொண்டாள்.

அவளது கண்களைப் பார்த்து, "டேக் கேர்" என ஆழ்ந்த குரலில் சொன்னான்.

அமிதா, அப்போது தான் ஸம்யுவுடன், மூன்று பேர் நிற்பதை கண்டாள்.
"எஸ்கியூஸ் மீ" என தன்னுடன் பேசி கொண்டிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு, ஸம்யுவின் அருகே வந்து நின்றாள்.

பேச்சை திசை மாற்ற மித்ரன், "ஷி இஸ் அமிதா" என்றான்.
"ஐ நோ. அகிலன்ஸ் பெட்டர் ஹாஃப்" என சிரித்தபடி சொன்னவன், "ஐ ஆம் ஸிட். ஹவ் ஆர் யூ டூயிங் மேம்?" என்றான்.

"ஃபைன்" என மையமாக சிரித்தாள். "உங்க பொட்டிக் பிஸினஸ் எப்படியிருக்கு?" என அவன் கேட்டவுடன், கேள்வியாக மித்ரனை பார்த்தாள்.

"அகிலன் சொன்னான். நாங்க லாஸ்ட் ஸண்டே மீட் பண்ணோம். அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவை அவன், உங்களை பத்தி தான் பேசிட்டிருந்தான். அமிதா லைக்ஸ் திஸ், ஷி இஸ் வெரி மச் டேலண்ட என்று சொல்லிட்டே இருந்தான். ஹி அடோர்ஸ் யூ" என சித்தார்த் சொல்லி கொண்டிருக்கும் போதே, "அமிதா யார் அது" என கேட்டபடி வந்தான் அகிலன்,

"திங் ஆஃப் தி டெவில்.." என அகிலனது வலியில் லேசாக குத்தியவுடன், வயிற்றைப் பிடித்துக் கொண்டான்.
லேசாக அவன் குத்தினாலும், ஊசி முனையாக வலி அகிலனுள் இறங்கியது. தன்னை சமாளித்துக் கொண்டவன், அதை வெளி காட்டாமல் புன்னகைத்தான்.

"நீ சொல்லும் போது, நான் நம்பலை. இப்போ பார்த்தாலே தெரியுது. மேம் இஸ் ஸோ பியுட்டிஃபுல் அண்ட் டேலண்டட் டூ. மேமோட ஷார்ப் ஐஸ் பார்த்தாலே தெரியுது" என்றான்.

லேசாக நெளிந்த அமிதா, "சித்தார்த், மேம் இஸ் டூ ஃபார்மல். நீங்க என்னை அமிதா என்றே கூப்பிடலாம்" என்றாள்.

"ஷுயர்" என அமிதாவின் கண்களைப் பார்த்து கேட்டவுடன், அவள் தலையசைத்தவடன், "தாங்க்ஸ், அமிதா, உங்களை பார்த்ததும், எனக்கு உங்களை மாதிரி ஒரு ஸிஸ்டர் இருந்தா நல்லாயிருக்கும் என்று தோணுது" என்றவன், "யூ ஆர் லைக் மை ஸிஸ்டர், தட் ஐ நெவர் ஹாட்" என சொன்னவனின் குரலில் உணர்ச்சி நிறைந்திருந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro