Sudum Nilavu Sudatha Suriyan - 13
சுடும் நிலவு சுடாத சூரியன் – 13
"ஹாய் செம.. யுக்.. தா!!... மித்ரன் டிட் ஐ ஸ்பெல் இட் ரைட்?" என ஆவலுடன் கேட்டான்.
"நோ ஸிட், இட் இஸ் ஸம்யுக்தா" என திருத்தினான் மித்ரன்.
"அண்ணா, போலாம்" என மித்ரனின் காதுகளுக்குக் கேட்கும் படி மெதுவாக முனுமுனுத்தாள் சம்யுகதா.
"ஹோ, இட் இஸ் டஃப் மேன். ஐ வில் கால் ஹெர் யுக்தா" என சிரித்தபடி சொன்னான்.
"அண்ணா, ப்ளீஸ் போலாம்" என மறுபடியும் கெஞ்சும் குரலில் சொன்னாள்.
"ஹவ் ஆர் யூ டூயிங் யுக்தா.. ஐ ஆம் சித்தார்த் குமரவேல். யூ கேன் கால் மீ ஸிட்" என தன் வலது கையை நீட்டினான்.
தன் அண்ணனை இறுக பற்றி கொண்டவள், "அண்ணா.." என மேலே சொல்ல முடியாமல் குரல் அடைக்க, தலையை குனிந்து கொண்டாள்.
யோசனையுடன் அவளை பார்த்தவன், "மித்ரன், உங்க ஸிஸ்டர் கன்ஸ்ர்வேட்டிவா இருக்காங்க. தாத்தா, தமிழ் பொண்ணுங்க டிரேடிஷனல் அண்ட் கன்ஸ்ர்வேட்டிவ் என்று சொன்னார். நான் அப்ப நம்பலை, இப்ப நேரில் பார்க்கும் போது தான் தெரியுது" என சிரித்தபடி தன் நீட்டிய கைகளை அப்படியே வைத்தபடி சொன்னான்.
தன் தங்கை பயப்படுவதை உணர்ந்தவன், "அப்படியில்லை ஸிட். இன்னிக்கு ஏதோ அவளுக்கு மூட் சரியில்லை. வி வில் மீட் ஸம் டைம் லேட்டர்" என சொன்னான் மித்ரன்.
"ஷுயூர் மித்ரன். எனக்கு இங்க சென்னையில் யாரும் ஃபிரண்ட்ஸ் இல்லை. இந்த ஸண்டே ஃபிரியா இருந்தா எங்காவது போலாம். யுக்தா கேன் ஆல்ஸோ ஜாயின் வித் அஸ்" என அவன் சொல்லும் போது, ஸம்யுக்தாவிற்கு கண்களை இருட்டி கொண்டு வருவது போலிருந்தது.
நல்ல வேளையாக மித்ரன், "பை டேக் கேர்" என சித்தார்த்தின் தோள்களை தட்டி விட்டு, அவளுடன் முன்னால் நடந்தான் மித்ரன்.
"அண்ணா, சீக்கிரம் போலாம்" என சொன்னவளை கவலையுடன் பார்த்தபடி நடந்தான் மித்ரன்.
சிறிது தூரம் சென்றவுடன், தன்னை அடக்கி கொள்ள முயன்றும், முடியாமல் அவள் திரும்பி பார்த்தாள். அவன் அதே இடத்தில் முகத்தில் உறைந்த புன்னகையுடன், கூர்மையாக அவளை பார்த்தபடி நின்றிருந்தான்.
மித்ரன் ஜீப்பில் பக்கத்து ஸீட்டில் அவளை உடகார வைத்து, கதவை சாத்தி விட்டு, அங்கேயே நின்றிருந்த சித்தார்த்தை பார்த்து கையசைத்து விட்டு மறு பக்கம் வந்து ஜீப்பைக் கிளப்பினான்.
தன் கைகளை இரண்டையும் கெட்டியாக பிடித்துக் கொண்டு, தன் உடல் நடுக்கத்தை குறைக்க முயன்றாள் ஸம்யுக்தா. அப்படியும் முடியாமல் போக பற்களை அழுந்த கடித்து நடுக்கத்தைக் குறைத்தாள்.
வீட்டில் மித்ரன் ஜீப்பை நிறுத்தியவுடன், வேகமாக தன் அறைக்குச் சென்று படுக்கையில் சுருண்டு படுத்துக் கொண்டாள். அவள் பின்னாலே வந்த மித்ரன், அவள் படுத்துக் கொள்வதைப் பார்த்து கதவை சாத்தி விட்டு வந்தான்.
இரவு உணவை தனது அறையில் சாப்பிட்டு விட்டு கண் மூடி படுத்தாள் ஸம்யுகதா. வினோதினி அவளது தலையை மெதுவாக வருட, சிறிது நேரத்தில் தூங்கி போனாள்.
இரவு இரண்டு மணிக்கு, நன்றாக தூங்கி கொண்டிருந்த மித்ரன், தன் அறை கதவை திறக்கும் சத்தம் கேட்டு கண் விழித்தான். அவனது அறையின் வாசலில் நின்றிருந்த தன் தங்கையை பார்த்ததும், உள்ளே வரும்படி சைகை செய்தான்.
"நான் உங்கூட இந்த ரூமில் படுத்துக்கட்டுமா?" என கண்களில் பயத்துடன் கேட்டாள்.
சரி என்று தலையசைத்து, அவளுக்கு படுக்க இடம் கொடுத்து நகர்ந்தான் மித்ரன்.
பக்கத்தில் படுத்துக் கொண்டவள், சிறிது நேரத்திற்கு பிறகு, "அண்ணா, எனக்கு பயமா இருக்கு" என்றாள்.
தனது பத்தாவது வயதிலிருந்தே, தனியாக தனியறையில் படுத்துத் தூங்கும் தங்கை, இப்போது பயப்படுவதை பார்த்து அவனுக்கு வேதனையாக இருந்தது.
அதை வெளிகாட்டாமல், "ஸம்யும்மா, நான் தான் இருக்கேன் இல்லை. அப்பறம் உனக்கு என்ன பயம்?" என அவளை ஆறுதல் படுத்தினான்.
"அண்ணா, அவன் என்னை திரும்பவும் கடத்துவானா?" என கேட்டாள்.
"ரவியை தான் பிடிச்சிட்டோமே. இனிமே யாரும் உன்னை கடத்த மாட்டாங்க" என சொன்னவன், கவனமாக அவனை பெயிலில் விட்டதை சொல்லாமல் மறைத்திருந்தான்.
"அந்த இன்னொரு ஆள் வெளியில் தானே இருக்கான்?" என கேட்டவளை கவலையுடன் பார்த்தான்.
"அவனையும் பிடிச்சிடலாம். நாளைக்கு டிஜிட்டல் ஆர்ட் படம் வரைஞ்சதும் அவனையும் ஈஸியாக கைது பண்ணிடலாம். இப்ப அதை பத்தி யோசிக்காம நீ தூங்கு" என தன் தங்கையின் தலையை வருடினான்.
"டிஜிட்டல் ஆர்ட் எதுக்கு அண்ணா? நாம தான் அவனை நேரில் பார்த்தோமே?" என்றாள்.
தன் தங்கையின் மனது குழம்பி இருப்பதை உணர்ந்தவன், "ஆமாம். ரவியை தான் பார்த்தோமே" என்றான்.
"ரவியை சொல்லலை, அந்த வாய் பேச முடியாத உயரமான இன்னொரு ஆள். அவனை பீச்சில் பார்த்தோமே. நீ கூட பேசிட்டிருந்தியே" என அவள் சொன்னதும் அவன் அதிர்ந்தான்.
தலையில் லேசாக அடிபட்டதில் அவளுக்கு மனநிலை பிறழ்ந்து விட்டதா? இல்லை தப்பி வந்த அதிர்ச்சியில், மன அழுத்தம் காரணமாக பிதற்றுகிறாளா? என புரியாமல் தவித்தான்.
யாரை பார்த்தாலும், தன்னை கடத்த பார்க்கிறார்கள் என நினைக்கிறாள் என தன்னை சமன்படுத்தியவன், மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல், "ஓ அவன் தானா? நாளைக்கு காலையில் அவனை கைது பண்ணிடலாம்" . என சொல்லி அவளது தலையை வருடினான்.
சரியென்று தலையசைத்து, கண்களை மூடியவள் தூங்கியே போனாள்.
மித்ரன், தனது அலுவலக அறையில் மனநல மருத்தவரிடம் பேசி கொண்டிருந்தான். இரவு அவனது அறைக்கு வந்து சம்யுக்தா பேசியதில் அரண்டு போயிருந்தான். கண்டிப்பாக அவளுக்கு ஏதோ மனநல பிரச்சனை ஏற்பட்டு விட்டது என்று நம்பினான்.
"மித்ரன், உங்ககிட்ட முன்னாடியே சொன்னது தான். ஒரு அதிர்ச்சியான நிகழ்விலிருந்து மீளும் போது, சில நேரம் இப்படி பட்ட மன சித்திரங்கள் அவங்களுக்குத் தோன்றும். கால போக்கில் அது சரியாகி விடும்" என்றார் மனநல மருத்துவர் தயாளன்.
"உங்க தங்கை கிட்ட பேசியதில், அவங்க இப்ப மன அழுத்தத்தில் இருக்காங்க என்று தெரியுது. அவங்க என்ன சொன்னாலும் கொஞ்ச நாளைக்கு, அவங்களை அனுசரிச்சு போங்க. நீங்க எதிர் வாதம் செஞ்சா, அவங்க உள்ளுக்குள் ஒடுங்கிடுவாங்க" என்றார் தயாளன்.
"சம்யு, ரொம்ப தைரியமான பொண்ணு, இப்ப எதை பார்த்தாலும் பயப்படறா. நேற்று கடற்கரைக்குக் கூட்டிட்டு போனேன். இருட்டின உடனே வீட்டுக்குப் போகனும் என்று பயந்துக்கிட்டே சொல்றா" என வருத்தமாக சொன்னான்.
"மித்ரன், சில பேர் அதிர்ச்சியில் அவங்க ஆளுமைக்கு நேர் எதிரா மாறிடுவாங்க. எத்தனை சினிமாவில் பார்த்திருக்கோம். திடீரென்று பயந்தாங்கொள்ளி, வீரமாக மாறி பத்து பேரை போட்டு அடிப்பான். இது அதற்கு நேர் மாறான விஷயம்" என அவர் சொல்லும் போதே அகிலனுடன் உள்ளே வந்தாள் சம்யுக்தா.
"நான் ராத்திரி சொன்னேன் இல்லை. இப்ப பாரு, அந்த இன்னொரு ஆளோட படம்" என படத்தை ஆர்வமாக காட்டினாள்.
எதிரே இருந்த டிஜிட்டல் ஆர்ட் படத்தில், இருந்தது சித்தார்த்தின் முகம். நிமிர்ந்து அவன் அகிலனை பார்க்க, அவன் எதுவும் சொல்லாமல் உதட்டை பிதுக்கினான்.
"நான் சொன்னதை நீங்க இரண்டு பேருமே நம்பலை. அந்த வீட்டில் இவனோட கை ரேகையே இல்லை என்று சொன்னீங்க. இவன் உங்க இரண்டு பேரை விட உயரமாக இருந்தான். அவன் அப்படி ஒரு கருப்பு கலரில் இருந்தான். அவனுக்குக் காதும் கேட்கலை, வாயும் பேச முடியலை" என அடுக்கிக் கொண்டே போனாள்.
கண்களை உருட்டி தலையை இரு புறமும் வேகமாக அசைத்து, இழுத்து மூச்சு விட்ட அகிலன், பொத்தென்று தயாளனின் பக்கத்திலிருந்த சேரில் அமர்ந்தான். மேஜையில் மீது முழுங்கைகளை வைத்துத் தலையை அதன் மேல் சாய்த்துக் கொண்டான்.
"டாக்டர், அவனோட கண்ணோட கலர், கறுப்பாக இருந்தது. உலகத்தில் எத்தனை பேருக்கு கண்ணோட கலர் கறுப்பாக இருக்கும் ?" என கேட்டாள்.
தயாளன் சிரித்துக் கொண்டே, "ரொம்ப குறைவானவங்களுக்கு தான் கண்ணோட நிறம் கருப்பாக இருக்கும். அது கறுப்பு என்று கூட சொல்ல முடியாது. ஆழந்த பிரவுன் கலர், அடர்த்தியாக இருக்கும் போது, பார்க்கறவங்களுக்கு கறுப்பு நிறம் மாதிரி தோன்றும்" என்றான்.
"இப்போ நம்பறேன் சம்யு. நீ சொன்னது தான் சரி. நாங்க இப்பவே அவனை போய் கைது செய்யறோம். முட்டிக்கு முட்டி தட்டி, அவனை லாக்கப்பில் போடறோம்" என சீரியசாக சொன்னான்.
"பார்த்து அண்ணா, ரொம்ப அடிக்காதீங்க" என அவள் சொன்னதும், அகிலன் தலையில் அடித்துக் கொண்டான்.
என்னவென்று கேள்வியாக திரும்பி பார்த்தவளை, ஒன்றுமில்லை என்று வலிந்து புன்னகை செய்தான் அகிலன்.
வெளியே காத்திருந்த வசந்தனுடன், சம்யுக்தாவை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு, சேரில் வந்தமர்ந்தான் மித்ரன்.
"டாக்டர், இதுக்கு என்ன சொல்றீங்க?" என சித்தார்த்தின் படத்தைக் காட்டி கேட்டான் மித்ரன்.
"நேற்று இவனை பீச்சில் பார்த்தேன் என்று சொன்னீங்க இல்லை? அவன், உங்க தங்கை மனதில் ஏதோ ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் தன் மன சித்திரத்திற்கு அவனோட முகத்தை இவங்க பொருத்தியிருக்கலாம்" என சொல்லிவிட்டு தோளை குலுக்கினார் தயாளன்.
"அவனோடு நேற்று ஸம்யு பேச கூட இல்லை. அவனை ஒழுங்கா நிமிர்ந்து பார்த்தாளா என்று கூட தெரியலை" என அழுத்தமாக சொன்னான் மித்ரன்.
"அவனை, சம்யுக்தா ஒரு நொடி பார்த்திருந்தா கூட போதும்" என சொன்னவரை யோசனையுடன் பார்த்தான்.
"டாக்டர், அவன் உயரமானவன் என்பதை தவிர சித்தார்த்துக்கும், அவன் சொல்ற ஆளுக்கும் எதுவுமே ஒத்துப் போகலை" என்றான் அகிலன்.
"அவன் கறுப்பு என்று சொன்னாள். சித்தார்த் நல்ல வெள்ளை கலர். அவன் கண்ணோட கலர் கறுப்பு என்று சொன்னாள். சித்தார்த்தின் கண்ணோட கலர் ப்ளு கலர். எல்லாத்துக்கும் மேலே அவன் வாய் பேச முடியாத, காது கேட்காத முடியாதவன் என்று சொன்னாள். அவனை ஏர்போர்ட்டில் பிக் அப் செய்ய போயிருந்தோம். வர்ற வழி எல்லாம் பேசி சிரிச்சிட்டு தான் வந்தான். காதும் பயங்கர ஷார்ப்பாக கேட்குது" என அலுப்பாக சொன்னான்.
"நான் கொடுத்த மருந்தை தினமும் அவளுக்கு கொடுங்க. அவ சொல்றதுக்கு எதிரா எதுவும் சொல்லாதீங்க. அவ நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். ராத்திரியும் நல்லா தூங்க வைங்க. அவ பாதுகாப்பான இடத்தில் இருக்காங்க என்ற நம்பிக்கையை கொடுங்க. ஒரு அண்ணனா, அவ சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்யுங்க" என சொல்லி விட்டு எழுந்தார்.
கதவருகில் சென்றவர், நின்று திரும்பி, "மித்ரன், சம்யுக்தா சொல்றது உண்மையாகவும் இருக்கலாம். அந்த கோணத்திலும் விசாரணை செய்யுங்க" என சொல்லிவிட்டு சென்றார்.
"அகிலன், நாம சித்தார்த்தை விசாரிக்கலாமா?" என கேட்டான்.
"வொய் நாட்? கண்டிப்பாக விசாரிக்கலாமே" என நக்கலாக சொன்னான் அகிலன்.
என்னவென்று புருவத்தை தூக்கியவனிடம், "இதுக்கு தான் ஒரு கேஸில் எமோஷனலாக அட்டாச்சாக கூடாது என்று சொல்றது. அவங்க அனாதை இல்லத்தில் வளர்ந்த பையனை பெயில் எடுக்கிறதுக்கு அமைச்சர் லெவலில் மூவ் பண்றாங்க. நீ அவங்க வீட்டு பையன், அதுவும் ஒரே செல்ல பேரன், வெற்றி வேலோட சொத்துக்கு ஒரே வாரிசு. அவன் மேல கை வைச்சா என்னாகும் என்று யோசிச்சு பாரு" என்றான் அகிலன்.
"அப்போ தப்பே செஞ்சாலும், பெரிய வீட்டு விஷயம் என்றால் விட்டு விடனுமா? என கோபமாக கேட்டான்.
"இது பெரிய வீட்டு பையன் என்கிற விஷயமில்லை மித்ரன். அவனை சந்தேகப்பட எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. அவனுக்கு எதிரா நமக்கு ஒரு எவிடன்ஸ் கூட இல்லை. அவனோட கைரேகை கூட அந்த வீட்டில் இல்லை. உன் தங்கையை தவிர அவனை யாரும் பார்த்ததாக சொல்லலை. சம்யு, இப்ப இருக்கிற நிலைமையில் அவளை நம்பறதா, வேண்டாமா என்றும் தெரியலை. இந்த நிலைமையில் எதை வைச்சு அவனை விசாரணைக்குக் கூப்பிடறது?" என அழுத்தமாக சொன்னான் அகிலன்.
"இதில் வேற ஒரு பிரச்சனையும் இருக்கு. அவன் இந்திய சிட்டிசன் இல்லை. என்.ஆர்.ஐ கூட இல்லை. அவங்க தாத்தா காலத்திலிருந்து அவங்க வீட்டில் எல்லோரும் பிறப்பால் அமெரிக்க சிட்டிசன். எத்தனை தடவை பக்கத்து நாட்டு ஆளுங்க வந்து, நம்ம மீனவர்களை கைது பண்ணாலும், வேடிக்கை பார்க்க அவங்க ஒன்னும் நம்ம நாடு இல்லை. அவங்க நாட்டு சிட்டிசன் மேல கையை வைச்சா, அவ்வளவு தான். யு.என். மனித உரிமை ஆணையத்திலிருந்து ஆட்கள் வந்திடுவாங்க" என அமர்த்தலாக சொன்னான் அகிலன்.
"நான் இணையத்தில் தேடி பார்த்ததில், அவங்க குடும்பம் அமெரிக்காவில் வசதியான குடும்பமாக இருக்கு. அங்க இருக்கிற இந்திய வம்சாவழி மக்களில், இவங்க தாத்தா செல்வாக்கான ஆளா இருக்கார்" என்ற அகிலன் எதையோ நினைத்துச் சிரித்தான்.
அவன் பேசுவதை கேட்டு கடுப்பான மித்ரன், "இப்ப எதுக்குடா சிரிக்கிறே?" என கேட்டான்.
"நம்ம ஏதோ ஆர்வ கோளாறில் அவனை விசாரிக்க போனோம் என்று வைச்சுக்கோ, சென்னையில் இருக்கிற எம்பஸியிலிருந்து கோட் போட்ட இரண்டு வெள்ளைக்காரங்க, கமிஷனரை பார்க்க வந்துருவாங்க. அப்பறம் என்ன? இந்த கேஸை எங்கிட்டேயிருந்து பிடுங்கி, வேற யார்கிட்டேயாவது கொடுத்து, இரண்டு நாளில் ஆதாரம் சரியாக இல்லை என்று கிடப்பில் போட்டு விடுவாங்க. நமக்கு நேரம் சரியாயிருந்தா அத்தோடு போகும், நேரம் சரியில்லை என்று வைச்சுக்கோ. அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்ணோம் என்று சஸ்பெண்ட் பண்ணிடுவாங்க. உனக்காவது உங்கப்பா பிஸினஸ் காத்திட்டிருக்கு. எங்கப்பா ஸ்கூல் வாத்தியார். அமிதா வைச்சிருக்கிற டிரஸ் பொட்டிக்கில் காஷியரா உட்கார வேண்டியது தான்" என சலித்த குரலில் சொன்னான் அகிலன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro