Marukkathe Nee Marakkathe Nee - 32
மறக்காதே நீ மறுக்காதே நீ - 32
"சித்து, நீங்க எங்கப்பாவை தானே கடத்தறதா இருந்தீங்க? என்னை ஏன் கடத்தினீங்க?" என கேட்டாள் சம்யுக்தா.
"ஹ்ம்ம் எப்படி சொல்றது, அன்னிக்கு உங்கப்பாவை கடத்த தான் பிளான் போட்டிருந்தோம்" என்றவன், "அன்னிக்கு நீ கூட வருவேனு நாங்க எதிர்பார்க்கலை" என அவளது முகத்தில் விழுந்த முடி கற்றையை விலக்கியப்படி சொன்னான்.
"அன்னிக்கு நீ லைட் ப்ளு கலர் சல்வார் போட்டிருந்தே. உங்கப்பா ஆபிஸ் எதிரே உன்னை இறக்கி விட்டார். உன்னை பார்த்த போது எனக்கு மனசில் சொல்ல தெரியாத ஏக்கமா இருந்தது. எங்கம்மாவுக்கு பிறகு என் மனசில் இடம் பிடிச்ச ஒரே பொண்ணு நீ தான். வசந்தனோட பொண்ணா மட்டும் நீ இல்லாம இருந்தா எப்படியாவது உன்னை கல்யாணம் செஞ்சிருப்பேன். கடவுள் என்னோட மட்டும் ஏன் இப்படி விளையாடறார் என்று கோபமா இருந்தது. நீ உங்கப்பாவை பார்த்து கையசைச்சிட்டு ரோடை கிராஸ் செஞ்சப்போ உன்னை ஒரு பைக்காரன் இடிச்சிட்டான். நீ கீழே விழுந்திட்டே" என நிறுத்தினான்.
"ஹ்ம்ம்.. எனக்கு ஞாபகமிருக்கு. அது ஜனவரி இரண்டாம் தேதி. ஆனா எனக்கு அன்னிக்கு அடிப்படலையே?" என இயல்பாக சொன்னாள் சம்யுக்தா.
"நீ கீழே விழுந்தவுடனே உங்கப்பா காரில் இருந்து வேகமாக இறங்கி ஓடி வந்தார். ஓடி வந்த போது எதிரே வந்த வேனை அவர் கவனிக்கவே இல்லை. அந்த வேன் பக்கத்தில் பிரேக் போட்டதால் அவர் தப்பிச்சார். ஆனா அதை அவர் உணரவே இல்லை. அவர் பார்வை, கவனம் எல்லாம் உன் மேலேயே இருந்திச்சு" என வருத்தமான குரலில் சொன்னான் சித்தார்த்.
"அப்பாவுக்கு என் மேலே பாசம் ஜாஸ்தி. அன்னிக்கு எதுவுமே அடிப்படலை. ஆனா என்னை அப்படியே தூக்கிட்டு ஹாஸ்பிட்டல் போயிட்டார். டாக்டர் அடிப்படலைனு சொன்ன பிற்கும் அவர் என்னை விடவே இல்லை. என்னை ஆபிஸுக்கு போகவே விடலை. வீட்டிலே அன்னிக்கு எங்கூடவே இருந்தார்" என சொல்லும் போதே சம்யுக்தாவின் தொண்டை கரகரத்தது.
"ஒ, அதனால் அன்னிக்கு உங்க பிளான் ஃபைலாயிடிச்சா?" என கேட்டாள்.
"ஹ்ம்ம்.. பிளான் மட்டும் ஃபைலாகலை. என் மனசும் அன்னிக்குத் தான் எனக்குப் புரிஞ்சுது. நீ கீழே விழுந்த போது உங்கப்பா மாதிரியே எனக்கும் பதட்டமாயிடிச்சு. ஒரு நிமிஷம் என்ன செய்யறதுனு தெரியலை. உனக்கு ஏதாவது அடிப்பட்டிருக்குமோ என்று கவலையா இருந்தது. நீ ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு போற வரைக்கும் நானும் அங்கே இருந்தேன். உனக்கு ஒன்றுமில்லை என்று தெரிஞ்ச பிறகு தான் எனக்கு நிம்மதியாச்சு" என அவளை தன்னோடு சேர்த்து அணைத்து தலையில் தனது கன்னத்தைப் பதித்தான்.
"உன்னை எந்த காரணத்துக்காகவும், யாருக்காகவும் விட்டு கொடுக்க முடியாது என்று அன்னிக்கு தான் முடிவெடுத்தேன். உனக்கு இரண்டு வாரத்தில் கல்யாணம் என்பதால் அதை நிறுத்த முடியும் என்று தோணலை. அப்போ தான் உன்னை கடத்தலாம் என்று முடிவெடுத்தேன். உங்கப்பா உன்னை கடத்தினா உண்மையை கண்டிப்பா சொல்வார் என்று தோணிச்சு. அதனால் எங்க பிளானை மாத்திட்டோம். உன்னை மத்தவங்க கிட்ட ஒப்படைக்க முடியாது என்பதால் தான் ரிஸ்க் அதிகமாக இருந்தும், நானும் ரவியுமே இதிலே நேரடியா இறங்கினோம்" என ஆழ்ந்த குரலில் சொன்னான்.
"அப்பறம் ஏன் எனக்கு சாப்பாடு கொடுக்காம பட்டினி போட்டிங்க?" என கேட்டாள்.
"தப்பிச்சி போனா, வேற என்ன செய்ய முடியும்? அன்னிக்கு நானும் சாப்பிடலை" என மெதுவாக சொன்னவனை நம்பாமல் பார்த்தாள்.
"அதனால் தான் அன்னிக்கு காலில் பச்சிலை மருந்தெல்லாம் போட்டிருந்தீங்களா?" என கேட்டாள்.
ஆமென்று தலையசைத்தவன், "யுக்தா.. எனக்கு ஒரு ப்ராமிஸ் வேணும்" என சொன்னான்.
என்னவென்று பார்த்தவளை, "நம்ம கல்யாணம் முடியறவரைக்கும் உன் இன்வெஸ்டிகேட்டிவ் வேலையெல்லாம் வேண்டாம்" என சொன்னான்.
"சித்து, என்னை பார்த்துக்க எனக்குத் தெரியும்" என தொடங்கியவளை தனது ஒற்றை விரலை அவளது உதடுகளில் வைத்து அழுத்தினான்.
"எனக்குத் தெரியும், நானே நேரில் பார்த்திருக்கேன். அந்த அரசியலவாதிக்கு எப்படியோ உன் மேலே சந்தேகம் வந்திருச்சு. விக்ரமிடம் அவங்க பல விதத்தில் நெருக்கடி கொடுத்திட்டிருக்காங்க. விக்ரம் இப்போ இரண்டு நாள் முன்னாடி செத்துப் போன எழுத்தாளர் தான் கொடுத்தார் என்று சமாளிச்சிருக்கான்" என்றான் சித்தார்த்.
"அப்போ கல்யாணத்துக்குப் பிறகு பிரச்சனை வராதா?" என அவனிடமிருந்து விலகி நின்று கேட்டாள் சம்யுக்தா.
"அப்போ நான் உன்னை பார்த்துப்பேன்" என சொன்னவனை கோபமாக பார்த்தவள், "ஏன் எனக்கே என்னை பார்த்துக்க முடியாதா? இத்தனை நாள் எங்கண்ணா, எங்கப்பா என்னை பார்த்துக்கலையா? என்னவோ நீங்க தான் பெரிய ஹீரோ மாதிரி என்னை காப்பாத்தறேன் என்று சொல்றீங்க" என படபடவென்று பொரிந்தாள்.
"ஹனி, நான் அதுக்குச் சொல்லலை" என தனது தலையை பின்னால் அழுந்த தள்ளியப்படி சொன்னவன், "ப்ளீஸ் புரிஞ்சுக்கோ" என மென்மையாக சொன்னான்.
"என்ன புரிஞ்சுக்கணும். சித்தார்த் எனக்கும் உங்களுக்கும் செட்டாகாது. எனக்கு அப்பவே தெரியும்" என வேகமாக கதவை நோக்கி சென்றவளின் கையைப் பற்றி வேகமாக தன் பக்கம் இழுத்தவன், அவளது முகத்தை பற்றி அவளது இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.
கோபமாக அவனை தள்ள முயன்றவள், "ஹனி.. ப்ளீஸ்" என்ற அவனது மென்மையான குரலில் ஒரு நொடி தயங்கினாள். கண்களில் அளவற்ற காதலுடன், ஏக்கத்துடன் நின்றிருக்கும் சித்தார்த்தைப் பார்த்தவள், சற்றே எம்பி அவனது சிவந்த உதடுகளை தனது இதழ்களால் அணைத்தாள்.
சென்னை விமான நிலையம்..
"என்ன மச்சான், உன் யுக்தாவை காணோம்?" என கேட்டான் அகிலன்.
"நான் வர வேண்டாம் என்று சொல்லிட்டேன். அவ அழறதைப் பார்த்தா எனக்கு போகவே மனசே வராது" என வருத்தமான குரலில் சொன்னான்.
"அதான் இன்னும் ஒரு இருபது நாளில் உங்கப்பா கேஸ் ஹியரிங் இருக்கில்லை? அதுக்கு திரும்பி வர தானே போறே?" என கேட்டான்.
"ஹ்ம்ம். இருபது நாள் அவளைப் பிரிஞ்சு இருக்க முடியுமானு தான் தெரியலை" என ஏக்கத்துடன் சொன்ன சித்தார்த்தை நக்கலாக பார்த்தான்.
"ஸிட், உனக்கே இது ஒவர் ஸீனா தெரியலை" என கேட்டான்.
"அகில், உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. இது ரொமான்ஸ், மனசில் இருந்து ஃபீல் பண்ணனும்" என கண்களை மூடி சொன்னான்.
"யப்பா, உங்களை மாதிரி ரொமான்ஸே வேண்டாம்டா, நீ அவளைக் கடத்தினதும், அவ உன்னை கடத்தினதுக்கும் பேர் தான் ரொமான்ஸாடா? இது காட்டுத்தனமா இல்லை இருக்கு" என சலிப்பாக சொன்னான் அகிலன்.
"அகில், நானே கேட்கணும் என்று நினைச்சேன். நீயே வந்து வசமா சிக்கிட்டே. என்னை கடத்த பிளான் போட்டது நீ தானே?" என அவனது கையை இறுக்க பிடித்தான் சித்தார்த்.
"ஏய், இரு, என் கையை எதுக்கு இப்படி இறுக்கிறே? நான் வெறும் பிளானிங் தான்ப்பா, செயல்படுத்தினதெல்லாம் உன் அருமை தம்பியும், ஆசை காதலியும், பாசமான தாத்தாவும் தான்" என கையை சித்தார்த்திடமிருந்து உருவி கொண்டான் அகிலன்.
"டேய், நீங்க இனிமே ஏன் குடும்பமா கிட்நாப்பிங் சர்வீஸ் ஆரம்பிக்க கூடாது? என்னமா யோசிக்கிறீங்க? உன் தம்பி இருக்கானே, நான் அவனை விளையாட்டுப் பையன் என்று நினைச்சேன். அவன் உன்னை ஒண்ணுமில்லாம செஞ்சிட்டான். உன் சர்வைல்ன்ஸ் டீம் அது தான் உன் கண்காணிப்பு குழு அவங்களையே கடத்தலுக்கு கூட்டு சேர்த்துக்கிட்டான். கையிலே அழுக்கு படாம, உடம்பை வளைக்காம, கொஞ்சம் கூட டென்ஷனே ஆகாம சரியான ஆளை வைச்சி வேலையை முடிச்சிடறான்" என ஆச்சரியத்துடன் சொன்னான் அகிலன்.
பெருமையாக சிரித்தவனை கடுப்பாக பார்த்த அகிலன், "செய்யறது கடத்தல், இதிலே உன் தம்பியை நினைச்சு பெருமையா? ஏண்டா மேய்க்கிறது எருமை, இதிலே உனக்கு பெருமை வேறேயா?" என சிரித்தபடி கேட்டான்.
"அவன் எந்த வேலையும் கொஞ்சம் கூட கஷ்டப்படாம, ரொம்ப ஈஸியா தான் செய்வான்" என சிரித்தபடி சொன்னான் சித்தார்த்.
"ஹ்ம்ம், நிஜமாவே நீ கார்லாவை கல்யாணம் செய்யறதா இருந்தியா?" என கேள்வியாக பார்த்தான்.
"என் யுக்தா இருக்கும் போது, நான் ஏன் மத்த பொண்ணுங்களைப் பார்க்க போறேன்?" என கண்கள் மின்ன சொன்னான்.
"ஸிட், எனக்கும் மித்ரனுக்கும் உன் மேலே அந்த நம்பிக்கை இருக்கிறதால் தான், உன்னை சம்யு பக்கத்திலேயே அனுமதிச்சோம்" என சீரியசான குரலில் சொன்னான் அகிலன்.
"அகில், அதுக்காக நீங்க என்னிக்கும் வருத்தபட மாட்டிங்க" என அவனது கையைப் பிடித்து சொன்னவன், "ஒகே, நான் கிளம்பறேன், பை" என சொன்னவன், "யது.." என்று கூப்பிட்டான்.
ஸ்மிருதியின் கைகளை பிடித்தபடி அவளுடன் மெதுவாக பேசியப்படி நின்றிருந்தான் யதுநந்தன்.
"யது..." என மறுபடியும் சத்தமாக கூப்பிட்டும் அவன் திரும்பாததால், சித்தார்த், "ஸ்மிருதி.." என மெதுவே கூப்பிட்டான்.
"ஸிட்.." என திரும்பிய ஸ்மிருதியிடம் தனது வாட்ச்சை காண்பித்தான் சித்தார்த்
"பை நந்து.." என சொன்னவளின் கைகளை விடாமல் பற்றியப்படி நின்றான் யதுநந்தன்.
"நந்து, நான் தான் அடுத்த மாசம் அங்கே வர போறேனே" என ஸ்மிருதி சொல்லியும் அசையாமல் நின்றான்.
"யது, அந்த ப்ளூ கலர் டாப்ஸ் போட்டிருக்கிற பொண்ணு பத்து நிமிஷமா உன்னையே பார்த்துட்டிருக்கா" என்றான் சித்தார்த்.
"யாரு? எங்கே" என ஸ்மிருதியின் கைகளை விட்டு விட்டு சித்தார்த்தின் அருகே சென்றான் யதுநந்தன்.
சுற்றிலும் பார்த்த யதுநந்தனின் கைகளை கெட்டியாக பிடித்த சித்தார்த், ப்ளு டாப்ஸ் அணிந்திருந்த ஸ்மிருதியை நோக்கி கை காண்பித்தான்.
"ஒ, ஸ்மிருதியா?' என கேட்டவன் அவளை நோக்கி காலெடுத்து முயல, அவனது கைகளை விடாமல், "பை ஸ்மிருதி, டேக் கேர்" என சொல்லியப்படி முன்னே நடந்தான்.
வேறு வழியின்றி சித்தார்த்துடன் சென்றவன், "அண்ணா, ஒரு நிமிஷம்" என்று கைகளை விடுவித்து ஸ்மிருதியிடம் சென்று, அவளது நெற்றியில் தனது உதடுகளைப் பதித்து, "பை ஸ்வீட்டி, டேக் கேர்" என சொல்லியபடி சித்தார்த்துடன் சேர்ந்து நடந்தான்.
கண்களின் ஒரம் வைரமாக ஜொலித்த ஒற்றை நீர் துளியுடன் நின்றிருந்தாள் ஸ்மிருதி.
இருபது நேர எங்கும் நில்லாத ஃபிளைட்டில் சென்று வீட்டிற்கு சென்று சேர்ந்த போது, சித்தார்த்திற்கு களைப்பில் கண்கள் சொருகியது.
தனது படுக்கையறைக்குச் சென்று பொத்தென்று படுக்கையில் விழும் போது, அவனது மொமைல் 'யுக்தா" என்று சத்தமிட்டது.
வேகமாக மொபைலை எடுத்து சம்யுக்தாவிடம் இருந்த மெசெஜை தொட்டு திறந்தான்.
"குட் நைட் சித்தார்த் குமரவேல், ஜஸ்ட் அறுபது நாட்கள்" என குறுஞ்செய்தியை பார்த்து சிரித்தான் சித்தார்த்.
Hi Friends..
Marukkaathe Nee Maraakkathe Nee is my 5th completed book in wattpad. Thanks to all the readers for your overwhelming support. I think have covered all the hanging threads and the logic is right. If I have missed anything , please let me know to correct in the edited version. Many thanks are due to Sasivadhana for her breath taking covers, it was amazing dear.. Thanks Valli for your critical review and constant feedback that made this story a readable one.
Please drop a note to [email protected] with your review and feedback that would help me to improve and do a better work. Requesting your support for my future novels, resuming Envasam Naanillai from 23rd March 2018 in wattpad.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro