Marukkathe Nee Marakkathe Nee - 31
மறக்காதே நீ மறுக்காதே நீ - 31
"நீங்க இந்த ஊரா?" என கேட்டவளிடம், "ஆமாம், பக்கத்தில் சத்தியமங்கலம் இருக்கில்லை, அங்கே வெற்றிவேல்னு ஒரு பெரிய மனுஷன் இருக்கார். நான் அவரோட பேரன்" என சொன்னான்.
"ஒ, அப்படியா, எனக்கு அவரை தெரியும், ஃபாமிலி ஃபிரண்ட்ஸ், ஆனா நான் உங்களைப் பார்த்ததே இல்லை" என ஆச்சரியத்துடன் சொன்னாள்.
"வாஷிங்கடனில் இருக்கேன்" என நிதானமாக சொன்னான்.
"இங்கே காட்டில் என்ன செய்யறீங்க?" என கேட்டாள்.
"மார்னிங் வாக் வந்தேன்" என அமர்த்தலாக சொன்னான்.
"இங்கே யானைங்க ஜாஸ்தி, ஒத்தை யானைக்கிட்டே மாட்டிக்க போறீங்க" என கண்கள் மின்ன சொன்னாள்.
"ஐ நோ, ஏற்கனவே ஒரு தடவை மாட்டி, தப்பிச்சிருக்கேன்" என சொன்னவன், "யூ லுக் பிரிட்டி" என அவளை கூர்மையாக பார்த்தபடி சொன்னான்.
"உங்க ப்ளு ஐஸ்..." என சொன்னவள், "ரொம்ப அழகாயிருக்கு" சொல்லும் போதே அவளது கன்னங்கள் சிவந்து விட்டன.
"யுவர் ஃபேஸ் இஸ் ஸோ எக்ஸ்பரஸிவ்" என அவன் சொன்னவுடன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தடுமாறினாள்.
அவளது தடுமாற்றத்தை ரசித்தபடி, "நீங்க எங்கே போறீங்க?" என கேட்டான்.
"சத்தியமங்கலம், நீங்க?" என திருப்பி கேட்டாள்.
அவனது தோளை குலுக்கியவன், "நானும் அங்கே தான் போகணும்" என சிரித்தபடி சொன்னான்.
உதடுகள் விரிய சிரித்தவள், "போகலாம். வாங்க" என பைக்கின் பின் ஸீட்டை பார்த்தாள்.
அவன் ஏறாமல் ஒரு நொடி நிற்க, "என்ன? என் மேலே நம்பிக்கை இல்லையா?" என தலையை சாய்த்துக் கேட்டாள்.
"எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்களுக்கு தான் என் மேலே நம்பிக்கை இருக்கானு தெரியலை..." என ஆழ்ந்த குரலில் சொன்னான்.
அவனை கூர்மையாக பார்த்தவள், மெதுவே இதழ் விரித்து சிரித்தபடி, "நம்ப முடியாதவங்களை என் வண்டியில் நான் ஏத்தறது இல்லை" என அழுத்தமாக சொன்னாள்.
"தாங்க்ஸ்" என சொல்லியபடி மோட்டார் சைக்கிளில் அவன் ஏறியவுடன், ஹெல்மெட்டை அணிந்து வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.
இயல்பாக அவன் அவளது தோள்களின் மேல் தனது கைகளை வைத்தவுடன் ஒரு நொடி தடுமாறியவள், தன்னை சமன் செய்து வண்டியை செலுத்தினாள். (Nishi, Valli, Sasivadhana, Vidya, Priya, Pavi, Anbu, Shaju, Aashi for all Kutties skip the rest of this page please.. Farmi, though not sure about you...)
காற்றில் பறக்கும் அவளது தலை முடியை மெதுவே முன்னால் தள்ளியவன், மென்மையான குரலில், "யசோ..." என அவளது மென்மையான காதுமடல்களை தன் உதடுகளால உரசியப்படி அழைத்தான்.
ஒரு நொடியில் அவளது உடல் முழுவதும் வெப்பம பரவ, "சக்தி.." என சொல்லியவளின் உடலோடு ஒட்டி அமர்ந்தவன், "யுக்தா..." என காதலோடு அழைத்தான்.
அவளது கண்கள் தாமாக மூடி கொள்ள, "சித்து.." என அவளது உதடுகள் மென்மையாக முணுமுணுத்தன. "ஹனி..." என சொல்லியபடி அவளது சிவந்த தோளில் தனது உதடுகளை மயிலறகினும் மென்மையாக பதித்தான்.
இதயம் ஒரு நொடி நின்று போக, வண்டியின் ஹாண்டில் பாரில் பிடிக்க முடியாமல் அவளது கைகள் பலமிழந்ததை உணர்ந்தாள். தடுமாற தொடங்கிய வண்டியை அவனது உறுதியான கைகள் பின்னிருந்து பற்றின.
"சித்து.." என அவனது தோளில் தலை சாய்ந்தவளை, தனது இடது கையினால் தன்னோடு சேர்த்துக் அணைத்தவன், அவளது வலது கன்னத்தில் தனது உதடுகளை அழுந்த பதித்து, "லவ் யூ, யுக்தா..." என ஆழ்ந்த குரலில் சொன்னான்.
கண்களை மூடி அந்த தேவ கணத்தை தனது இதயத்தில் பதிவு செய்தவள், "லவ் யூ சித்து..." என சொல்லியப்படி முகத்தை திருப்பி தனது மென்மையான இதழகளால் அவனது சிவந்த உதடுகளை அணைத்தாள்.
"கங்கிராட்ஸ் மச்சான்.." என சித்தார்த்தின் தோள்களில் பலமாக அறைந்தான் அகிலன்.
தனது வலது கையினால் அவளது இடது கையை பற்றியிருந்தவன், "தாங்க்ஸ்" என பற்கள் தெரிய சித்தார்த்தை ஆசையுடன் பார்த்தாள். "சம்யு, விட்டா என் மச்சானை அப்படியே சாப்பிட்டிருவே போலிருக்கு" என அகிலன் சொன்னவுடன், அமிதா அவனை முழங்கைகளால் இடித்து விட்டு முறைத்தாள்.
"அமி செல்லம், நம்ம சம்யு தானே, அதான் சும்மா..." என சொல்லும் போதே அவனது குரல் தேய்ந்தது.
"ஸாரி, ஸிட், ஸாரி சம்யு, இவர் ஆபிஸிலிருந்து வர நேரமாயிடிச்சு. அதான் டைமுக்கு வர முடியலை" என வருத்தமான குரலில் சொன்னாள் அமிதா.
"பரவாயில்லை அமிதா" என சொன்ன சித்தார்த்திடம், "எங்க, நம்ம யதுநந்தனை காணோம்? அவனையும் விஷ் செய்யணும்" என கேட்டான் அகிலன்.
"ஸ்மிருதியோட இருப்பான்" என அவனை ஹால் முழுக்க தேடியும் கண்ணில் படவில்லை.
"நான் அவனை போனில் கூப்பிடறேன்" என செல்போனை எடுத்த அகிலனிடமிருந்து அதை பிடுங்கினாள் அமிதா.
"அவனை டிஸ்டர்ப் செய்யாதீங்க" என கடுப்பாக சொன்னவளிடம், "இல்லை அமி, அவனையும் விஷ் செய்யணும் இல்லை?" என கேள்வியாக பார்த்தான்.
"வந்தது லேட், இதிலே அவனை வேற டிஸ்டர்ப் செஞ்சீங்க, எனக்கு கெட்ட கோபம் வரும்" என பொரிந்தாள் அமிதா.
"ஒகே, நீ சொன்னா சரியாக தான் இருக்கும்" என அவன் சொல்லும் போதே மித்ரனும் மயூரியும் அருகே வந்தனர்.
"என்ன சரியாக இருக்கும்?" என கேட்டான் மித்ரன்.
"அமிதா எது சொன்னாலும் சரியாயிருக்கும் என்று சொன்னேன். கரெக்ட் தானே?" என கேட்டான் அகிலன்.
"எனக்கு அமிதாவைப் பத்தி தெரியாது. ஆனா மயூம்மா சொன்னா அது கரெக்ட்டா தான் இருக்கும். சித்தார்த் கண்டிப்பா கல்யாணத்துக்கு வருவானு சொன்னா, அவன் கண்டிப்பா நிச்சியம் முடிக்காம ஊருக்குப் போக மாட்டானு சொன்னா, அதே மாதிரி நடக்குது" என கண்களை விரித்து சொன்னான் மித்ரன்.
"இன்னொரு சிங்கமும் எலியாயிடிச்சா?" என அலுத்தபடி சொன்னான் அகிலன்.
"என்னது எலி" என புரியாமல் கேட்ட மயூரியிடம், "ஸிட் சம்யுவிடம் மாட்டிக்கிட்டான், அதை தான் சொன்னேன்" என சொல்லி விட்டு தலையை இருபுறம் அசைத்து பெருமூச்சு விட்டான் அகிலன்.
"அகில் அண்ணா.." என முகத்தை கோபமாக வைத்துக் கொண்ட சம்யு, "நீங்களுமா?" என சிணுங்கிய குரலில் கேட்டான்.
அவளது சிணுங்கும் முகத்தை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தை கிண்டலாக பார்த்த அகிலன், "ஸிட்.. ஸிட்... ஸிட்.." என உரக்க கூப்பிட்டான்.
அப்படியும் சம்யுக்தாவை பார்த்தபடி இருந்த சித்தார்த்தை, ஒங்கி முதுகில் அடித்தான்.
"அகில், வலிக்குது. வாயை திறந்து கூப்பிட்டிருக்கலாம் இல்லை" என எரிச்சலாக சொன்னான் சித்தார்த்.
"வாயை திறந்தா, டேய் கத்திட்டிருந்தேண்டா, உன் காதில் விழலை?" என கேட்டான் அகில்ன்.
"இல்லையே, ஹனி, உனக்கு கேட்டதாடா?" என சம்யுக்தாவைப் பார்த்து கேட்டான்.
இல்லை என உதட்டைப் பிதுக்கிய சம்யுக்தாவை பார்த்த அகிலன், "மித்ரன், எனக்குப் பசிக்குதுடா, சாப்பிடலாமா?" என அகில்ன் கேட்டான்.
"ஸிட், சாப்பிடலாம் வரியா?" என கேட்டான் மித்ரன்.
"இல்லை, நீங்க சாப்பிடுங்க" என சம்யுக்தாவைப் பார்த்தப்டி சொன்னான்.
"மித்ரன், போகலாம் வா, அவங்களுக்கு இப்போ பசி, தூக்கம் இரண்டு வராது" என இழுத்தபடி சென்றான்.
"மித்ரன்.." என கூப்பிட்ட சித்தார்த், "நான் சம்யுக்தாவை வீட்டில் டிராப் செஞ்சிடறேன்" என சொன்னான்.
"இல்லை, நான் எவ்வளவு நேரமானாலும் வெயிட் செய்யறேன்" என்ற மித்ரனை முறைத்தாள் மயூரி.
"இல்லை ஸிட், நீங்க டிராப் செஞ்சிருங்க. நாங்க சாப்பிட்டு விட்டு கிளம்பறோம்" என அமிதாவுடன் முன்னே சென்றாள் மயூரி.
"மித்ரன், ஸேம் பிஞ்ச். நான் மட்டும் தான் கல்யாணத்துக்குப் பிறகு இப்படி மாறிட்டேனு நினைச்சேன். இப்போ உன்னை பார்த்தவுடனே தான் நிம்மதியாயிருக்கு" என சொன்னவனை புரியாமல் பார்த்தான் மித்ரன்.
"என்ன அகில்" என கேட்டவனிடம், "டபுள் ஒகே, சாப்பிடலாம் வா" என கையைப் பிடித்து அழைத்து சென்றான் அகிலன்.
"யுக்தா.. எங்கூட வா" என அவளது கையைப் பிடித்து மாடியிலிருந்து தனது அறைக்கு அழைத்துச் சென்றான் சித்தார்த்.
தனது அறையின் பால்கனியில் அவளை நிற்க வைத்த சித்தார்த், "இரண்டு நிமிஷம், டிரஸ் மாத்திட்டு வரேன்" என சொல்லி விட்டு உள்ளே சென்றான்.
இருண்டிருந்த கடற்கரையிலிருந்து ஈர காற்று வீசியது. லேசாக மழை தூறி கொண்டிருந்தது. வெற்றிவேலின் வீட்டை அலங்கரிந்திருந்த விளக்குகள் மின்னி கொண்டிருந்தன.
"ஹனி.." என கரகரத்த குரலில் காதோரம் கிசுகிசுத்த சித்தார்த்தின் கைகள் பின்னிருந்து அவளது இடையை அணைத்தது.
"சித்து.. ப்ளீஸ்" என விலக முயன்றவளை அவனது கைகள் இன்னும் சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டன.
"ஸ்வீட்டி.." என அவளது மென்கழுத்தை முத்தமிட்டவனை அவளது கைகள் வலுகட்டாயமாக பிரித்து தள்ளின.
"யுக்தா, என்னாச்சு?" என அடர்ந்த குரலில் கேட்டான் சித்தார்த்.
அலைபாய்ந்த கண்களுடன் கடற்கரையின் அலைகளைப் பார்த்தபடி நின்றாள் சம்யுக்தா.
"சித்து.." என சொன்னவளின் தோளை மெதுவே தொட்டான் சித்தார்த்.
கண்களின் நீருடன் அவனை ஏறிட்டுப் பார்த்தவுடன், சித்தார்த்தின் இதயத்தில் சொல்ல தெரியாத பாரம் ஏறியது.
தனது கைகளால் அவளது கன்னங்களை ஏந்தியவன், நெற்றியில் தனது இதழ்களைப் பதித்தான்.
அவனது இதழ் தீண்டல் அவளது மனதிற்கு ஆறுதல் அளிக்க, இமைகளை மீறி கண்ணீர் வழிந்தது.
"என்ன யுக்தா?" என கேட்டவனது தோளில் முகம் புதைத்தவள், அவனை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.
அவளது தலைமுடியில் இதழ் பதித்தவன், அவளது தலையை மெதுவே வருடியப்படி, "என்னடா.." என்று கேட்டான்.
"இதே மாதிரி ஒரு நிச்சியம் எனக்கு முன்னாடியே..." என மேலே சொல்ல முடியாமல் அவனது தோள்களில் முகம் புதைத்து அழுதாள்.
"எனக்குப் பயமாயிருக்கு... நம்ம.. நம்ம கல்யாணம் ஒழுங்கா நடக்குமா?" என திக்கி திணறியப்படி கேட்டாள்.
"உனக்கு ஏன் அதிலே சந்தேகம்?" என கேட்டான் சித்தார்த்.
"மித்ரன் முதலில் சொல்லும் போது, இந்த மாசமே கல்யாணம் முடிச்சிடலாம்னு சொன்னான். அப்பறம் திடீரென்று இன்னும் இரண்டு மாசம் கழிச்சு தான் கல்யாணம் என்று சொல்லிட்டான். எனக்கு ஒரு மாதிரி ஆயிடிச்சு" என்றாள்.
"பூரணி பாட்டி கல்யாணத்துக்கு வருவதாக இருந்தாங்க. அவங்களுக்கு இப்போ உடம்பு முடியலை. இப்போ அத்தனை தூரம் அவங்களால் டிராவல் செய்ய முடியாது. அவங்க இல்லாம கல்யாணம் செய்ய எனக்கும் யதுவுக்கு இஷ்டமில்லை. அது தான் இரண்டு மாசம் தள்ளி வைச்சிருக்கோம்" என அவளது தலைமுடியை நீவி விட்டபடி சொன்னான் சித்தார்த்.
"ஸிட், இரண்டு மாசமாகுமா?" என கேட்டவளின் குரலில் கவலையும் ஏக்கமும் தெரிந்தது.
அவளை தன்னோடு இன்னும் சேர்த்து அணைத்தவன், "நீ இப்பவே என்னோட வந்துடு. உனக்கு லிவிங் டூகெதர் ஓகேவா?" என சிரித்தபடி கேட்டான்.
அவனை தள்ளி விட்டவள், "அம்மா வெட்டிருவாங்க" என தள்ளி நின்றாள்.
"யாரு உங்கம்மா தானே? நான் கேட்டா உன்னை என்னோட அனுப்பிச்சிருவாங்க" என அவளை எட்டி இழுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான்.
"சித்து, நீங்க எங்கப்பாவை தானே கடத்தறதா இருந்தீங்க? என்னை ஏன் கடத்தினீங்க?" என கேட்டாள் சம்யுக்தா.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro