Marukkathe Nee Marakkathe Nee - 30
மறக்காதே நீ மறுக்காதே நீ - 30
சித்தார்த்தை உதடுகள் ஏளனமாக வளைய பார்த்தபடி சேரில் கால் மேல் கால் போட்டு அலட்சியமாக அமர்ந்தாள் சம்யுக்தா.
அவளை வெறுப்பாக பார்த்து விட்டு வாசலை நோக்கி நகர்ந்தவனை சம்யுக்தாவின் குரல் நிறுத்தியது
"மிஸ்டர் சித்தார்த், உங்களை என்னவோ நினைச்சேன் இவ்வளவு தானா?" என தோளை குலுக்கினாள்.
ஒரு நொடி நின்று அவளை திரும்பி முறைத்துப் பார்த்தான் சித்தார்த்.
"உங்களை தொட கூட முடியாதுனு சொன்னாங்க, ஆனா ஜஸ்ட் லைக் தட்" என கையை சொடுக்கியவள், "ஈஸியா தூக்கிட்டோம்" என முகத்தில் ஏளனம் தெரிய சிரித்தாள்.
"கங்கிராட்ஸ்" என வெறுப்பாக கைகளை சேர்த்து தட்டி விட்டு கதவை நோக்கி ஒரடி எடுத்து வைத்தான்.
"தி கிரேட் சித்தார்த்" என எழுந்தவள், "உங்களை பார்க்கவே எனக்கு பாவமாயிருக்கு" என இடுப்பில் கையை வைத்தபடி நின்றாள்.
"உன்னை யார் என்னை பார்க்க சொன்னா?" என இன்னும் இரண்டடி எடுத்து வைத்தான்.
"நீங்க பெரிய தைரியசாலினு நினைச்சேன். ஒரு பிரச்சனையை நின்னு தைரியமா எதிர் கொள்ள தெரியாமா ஒடி போறதிலேயே இருக்கீங்க" என அலட்சியமாக சொன்னாள்.
"நீ என்ன நினைச்சாலும், ஐ ஜஸ்ட் டோண்ட் கேர்" என அழுத்தமாக அவளைப் பார்த்து சொன்னான் சித்தார்த்.
"ஒ, அப்போ எதுக்கு இந்த இருபது நாள் குட் மார்னிங், குட் நைட் மெசெஜ் எனக்கு அனுப்பிச்சி டார்ச்சர் செஞ்சீங்க" என கேட்டாள் சம்யுக்தா.
"தப்பான ஆளுக்கு அந்த மெசெஜை அனுப்பிச்சிட்டேன். உன்னை டார்ச்சர் செஞ்சதற்கு ஸாரி" என அவளது முகத்தைப் பார்த்து உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.
"அதுக்கு மட்டும் தான் ஸாரியா? நீங்க செஞ்ச மத்த தப்புக்கெல்லாம் ஸாரி கேட்க மாட்டிங்களா?" என உணர்ச்சியற்ற குரலில் கேட்டான்.
"என்னடா சாமி இன்னும் மலை ஏறலையேனு நினைச்சேன், வரிசையா நான் செஞ்ச தப்பை எல்லாம் சொல்லு. நான் எல்லாத்துக்கும் ஒரேடியா உங்கிட்ட மன்னிப்பு கேட்டு விட்டு கிளம்பறேன்" என எரிச்சலாக சொன்னான்.
சம்யுக்தா சிரிப்புடன் அவனையே எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது சிரிப்பைப் பார்த்து தன்னுடைய உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முயன்று முடியாமல் கடுப்பானவன், "ஏன் மறந்தட்டியா?" என அவளை வெறுப்புடன் பார்த்து, "நீ தான் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேனு சொன்னியே?" என கேட்டான் சித்தார்த்.
"ஆமாம் மறக்க மாட்டேனு தான் சொன்னேன், அதிலே என்ன தப்பு?" என அமர்த்தலாக கேட்டாள்.
தனது தலையை ஆயாசமாக அசைத்தவன், "எப்பவும் சொல்லுவியே, என்னால தான் உன் கல்யாணம் நின்னு போச்சு, அடுத்து, நான் உன்னை கடத்திட்டேன், ஹ்ம்ம் அப்பறம் என்ன? சசி உன்னை நம்ப மாட்டேங்கிறான், உங்கம்மா கூட உன்னை நம்ப மாட்டேங்கிறாங்க. உன் வாழ்க்கையே போச்சு, எதிர்காலமே இருட்டாயிடிச்சு" என வேகமாக வரிசையாக சொல்லியவனை கண்கள் மின்ன பார்த்துக் கொண்டிருந்தாள்.
"எதையாவது விட்டுட்டேனா? கரெக்ட்டா தானே சொன்னேன்?" என புருவத்தைத் தூக்கி கேட்டவனின் அருகே வந்து நின்றாள் சம்யுக்தா.
"லிஸ்ட் ஒகே, ஆனா முக்கியமான ஒரு விஷயத்தை விட்டுட்டிங்க?" என சொன்னாள்.
"எதை விட்டேன்? ஒ, உங்கப்பா உன் கல்யாணத்துக்கு செஞ்ச செலவு வீணாயிடிச்சு? அது தானே?" என அவளை முறைத்த படி கேட்டான் சித்தார்த்.
இல்லை என தலையசைத்து மறுத்தவளை யோசனையுடன் பார்த்தவன், "ஹ்ம்ம், உன்னை ஒரு நாள் முழுக்க சாப்பாடு கொடுக்காம பட்டினி போட்டேன். சரியா?" என ஆழ்ந்த குரலில் கேட்டான்.
அடக்க முடியாமல் கண்களை மூடி சிரித்தவளின் அழகில் விழ தொடங்கிய இதயத்தை சமன் செய்ய முடியாமல் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
"சித்து..." என இன்னும் அவனருகே வந்து நின்றவள், "நான் சொல்லட்டுமா?" என மெதுவான குரலில் கேட்டாள்.
அவனது மிக அருகே அவளின் குரல் கேட்டதும், சட்டென்று இரண்டடி தள்ளி நின்றான் சித்தார்த்.
"சீக்கிரம் சொல்லு, நான் ஸாரி சொல்லிட்டு கிளம்பணும்" என முடிய வாசற்கதவை பார்த்துச் சொன்னான்.
"முதன் முதலா மித்ரனோட என்னை கடற்கரையில் பார்த்த போது, யுக்தா என்று ஆசையா கூப்பிட்டது, பார்ட்டியில் அத்தனை பேர் இருக்கும் போதும் என் கையை விடாம பிடிச்சட்டிருந்தது, தாத்தாவோட சத்தியமங்கலம் வீட்டில் என் மனசை எனக்கே உணர வைச்சுது, கடைசியா ஏர்போட்டில் நான் கூப்பிட்டா உடனே வருவேன் என்று சொன்னது, இதெல்லாம் நீங்க செஞ்ச தப்பில்லையா?" என மென்மையான குரலில், இமைகள் தரை நோக்கி சரிய கேட்டவளை பார்க்கும் போதே சித்தார்த்திற்கு மூச்சு விட முடியாமல் போனது.
தன்னை தொகுத்து கொண்டவன், "ஒகே, லிஸ்ட் அவ்வளவு தானா? இன்னும் இருக்கா?" என நக்கலாக கேட்டவன், "எல்லாத்துக்கும் ஒரு பெரிய ஸாரி, நான் செஞ்ச தப்புக்கு, நான் செஞ்சதா நீ நினைக்கிற தப்புக்கு ஸாரி, என்னை மன்னிச்சிடு" என தன் இரு கைகளையும் குவித்தான்.
அவனையே பார்த்தபடி இருந்தவள், "சித்து, நான் உங்களை என்னிக்கோ மன்னிச்சிட்டேன்" என ஆழ்ந்த குரலில் சொன்னாள்.
"எஸ், அன்னிக்கே அதை சொன்னே. தாங்க்ஸ் எ லாட். ஹ்ம்ம்ம்.. மறக்க தான் முடியாது என்று சொன்னே இல்ல. ஆனா காலம் எல்லாத்தையும் மாத்திடும். நீ கண்டிப்பா மறந்துடுவே" என ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி சொன்னேன்.
"சித்து, நீங்க அதை மறந்துட்டிங்களா?" என கூர்மையாக கேட்டவளை திரும்பி பார்த்தான்.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன், "அதான் சொன்னேன் இல்லை? காலம் எல்லாத்தையும் மாத்திடும். இது என் வாழ்க்கையில் வெறும் நிகழ்வா மாறி போயிடும்" என கசப்புடன் சிரித்தான் சித்தார்த்.
"அதை தான் நீங்க விரும்பறீங்களா?" என சீரியசாக கேட்டாள் சம்யுக்தா.
"நாம விரும்பறது எல்லாம் கிடைக்கிறதில்லை. கிடைக்கலை என்ற காரணத்துக்காக அதையே நினைச்சிட்டு அப்படியே இருக்க முடியாது. இது இல்லைனா வேறு ஒண்ணு பெட்டரா கிடைக்கும் என்று நம்பிக்கையோட நாம வாழ்க்கையோட அடுத்த படிக்கு போக வேண்டியது தான்" என விரக்தியோடு சொன்னான்.
"சித்து, என்னை விட கார்லா பெட்டர் என்று நினைக்கிறீங்களா?" என கேட்கும் போதே சம்யுக்தாவின் குரல் உடைந்து விட்டது.
"எனக்கு சத்தியமா தெரியலை" என சொன்னவனை நம்ப முடியாமல் பார்த்தாள் சம்யுக்தா.
"எனக்கு கார்லாவை காலேஜில் படிக்கும் போதிலிருந்தே தெரியும். எதையும் வெளிப்படையா பேசிடுவா, மனசில் எதையும் வைச்சுக்க மாட்டா. என்னை பிடிச்சிருக்கு என்று அவளே தான் வந்து சொன்னா. வேற ஒரு பையனை பிடிச்சிருக்கு என்றும் அவளே தான் வந்து சொன்னா. கடைசி வரைக்கும் ஹானஸ்ட்டா இருந்தா, ஆனா எனக்கு உன்னை பத்தி எதுவுமே தெரியாது. உங்கூட ஒரு நாள் கூட இயல்பா பேசினதில்லை. உன் மனசில் உண்மையா என்ன இருக்குனு எனக்குத் தெரியலை. நீ என்னை விரும்பறே என்று நான் நினைச்சது என்னோட வெறும் கற்பனை மட்டும் தான் என்று ரொம்ப லேட்டாக தெரிஞ்சது. உன்னை எனக்குத் தெரியவே தெரியாத போது, யார் பெட்டர் என்று எப்படி சொல்ல முடியும்?" என வருத்தமான குரலில் சொன்னான்.
"சித்து...." என சொல்லி விட்டு அதற்கு மேல் என்ன சொல்வது என்று புரியாமல் தடுமாறினாள் சம்யுக்தா.
"இப்பவும் உன் மனசில் இருக்கிறதை வெளிப்படையா உன்னால சொல்ல முடியலை பார்" என சொன்னவன், "நாம சந்திக்காமேயே இருந்திருக்கலாம" என கண்கள் அலைபாய சொன்னான்.
"என மனசில் என்ன இருக்குனு உங்களுக்குத் தெரியாதா? வெளிப்படையா தான் சொல்லணுமா? என்னோட உணர்வுகள் உங்களுக்குப் புரியலையா?" என கண்களின் ஒரத்தில் நீர் நிறைய கேட்டாள் சம்யுதா.
"எனக்கு உன் மனசு, உன் உணர்வுகள், உன்னைப் பத்தி எல்லாமே.." என மேலே சொல்ல முடியாமல் நிறுத்தியவன், "எல்லாமே தெரியும் என்று தான் நினைச்சேன். ஆனா அது நிஜம் இல்லை. என்னோட மனசித்திரம் தான் என்று லேட்டா தெரிஞ்சுது" என பெருமூச்சு விட்டபடி சொன்னாம்.
"சித்து.. அது.. கண்டிப்பா கற்பனை இல்லை" என மேலே எப்படி சொல்வது என்று தெரியாமல் தவித்தாள் சம்யுக்தா.
"ஒகே, கற்பனை இல்லை, என்னோட அழகிய சுகமான கனவா இருந்தது. தூங்கி எழுந்தவுடனே அது கனவு என்று தெரிஞ்சு, ஒரு நிமிஷம் என் மனசு அது நிஜமா இருக்காதா என்று ஏங்கி போச்சு. கனவுக்கும் நிஜத்துக்கும் நிறைய தூரம் இருக்கு. ஆனா என்ன? என்னோட கனவுக்கும் எனக்கும் வானளவு தூரம் இருக்கு" என தோளை குலுக்கினான்.
"அது உங்க கனவு மட்டுமில்லை, என்னோட கனவும் அதுவும் தான்" என ஆழ்ந்த குரலில் சொன்னவள், "சித்து, நான் உங்களை விரும்ப்....." என சொல்லும் போதே, "போது சம்யுக்தா. இதுக்கு மேலே எதையும் நான் கேட்க விரும்பலை" என அழுத்தமான குரலில் சொன்னான்.
"நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க" என உடைந்த குரலில் சொன்னாள் சம்யுக்தா.
"உனக்கு ஒன்றரை வருஷம் டைம் இருந்தது சம்யுக்தா. நீ ஒரு போன் செஞ்சிருந்தா போதும், போன் கூட தேவையில்லை, ஒரு மெசெஜ் அனுப்பியிருந்தா அடுத்த ஃபிளைட்டில் ஒடி வந்திருப்பேன். நீ தயங்கிற என்று நினைச்சு தான் இருபது நாள் உனக்காக சென்னை வந்து உங்கூடவே சுத்திட்டிருந்தேன். நீ அப்பவும் அதை புரிஞ்சிக்காம திரும்பவும் உன்னை பொம்மை மாதிரி வைச்சு விளையாடறதா சொன்னே. எனக்கு அப்போ தான் நான் உன்னை புரிஞ்ச்சிக்கலை என்று தெரிஞ்சுது" என சொன்னவன் கதவருகே சென்றன்.
"என் தயக்கம், என் மனசோட போராட்டம் எதுவுமே உங்களுக்குப் புரியலையா?" என கண்களில் நீர் நிறைய கேட்டாள் சம்யுக்தா.
"அதுக்குப் பேரு தயக்கம் இல்லை, உன்னோட ஈகோ தான் காரணம். உன் ஈகோவினால் உன் மனசும் புரியாம, என் அன்பையும் புரிஞ்சிக்காம, உன்னையும் கஷ்டப்படுத்தி, மத்தவங்களையும் கஷ்டப்படுத்தி, இப்போ கடைசியில் உனக்கு என்ன கிடைச்சிது?" என இளகிய குரலில் கேட்டான்.
"சித்து.." என சொல்லும் போதே கண்களின் ஓரத்தில் இருந்து நீர் வழிந்து விட்டது.
"இப்பவும் நீ உன் மனசில் இருக்கிறதை சொல்லியிருக்க மாட்டே. நான் ஊருக்குப் போறேன், வேற ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சிக்க போறேன் என்று தெரிஞ்சவுடனே தான், உன மன்சில் என்ன இருக்குனு சொல்லலாம் என்று முடிவு செஞ்சே. காலம் முழுக்க இயல்பா இல்லாம இதே மாதிரி ஒவ்வொரு விஷய்த்துக்கும் என்னால போராட முடியாது" என சொல்லியப்படி கதவை திறந்தான்.
"இனிமே அப்போ நமக்குள்ளே எதுவுமே இல்லையா?" என மெலிதான குரலில் கேட்டாள் சம்யுக்தா.
"நமக்கு நடுவிலே எதுவுமே இல்லை. அப்படி இருந்ததா நான் மட்டும் என் மனசில் நினைச்சிட்டேன். ஒரு வேளை..." என சொல்லி நிறுத்தியவன், "நாம இயல்பா சந்திச்சிருந்தா, எல்லாமே சரியா நடந்திருக்கும்" என வெளியே நடந்து சென்றான் சித்தார்த்.
"சித்து.... ப்ளீஸ்" என மடங்கி அமர்ந்து அழுத சம்யுக்தாவின் குரல் சித்தார்த்தின் காதுகளுக்கு எட்டவே இல்லை.
யதுநந்தனுக்கு போன் செய்து தன்னை கூட்டி செல்ல சொல்லலாம் என்று நினைத்த சித்தார்த், வேண்டாமென்று என்று முடிவெடுத்து மெதுவே நடந்தான். காட்டில் சிலீரென்று காற்று மனதில் பட சற்றே மனம் நெகிழ்வதை உணர்ந்தான். சம்யுக்தா தனியாக அந்த கெஸ்ட் ஹவுஸில் இருக்கிறாளே என்று அலைபாய்ந்த மனதை அடக்கியப்படி நடந்தான்.
எங்கோ தூரத்தில் மோட்டர் சைக்களின் ஒலி கேட்டது. கருப்பு கண்ணாடியோடு ஹெல்மெட் அணிந்து சென்றவன் சற்று தூரம் தள்ளி நின்றான்.
நேற்றிலிருந்து எதுவும் சாப்பிடாத்தது சற்றே சோர்வாக இருந்தது. மோட்டர் சைக்கிளில் வந்தவனிடம் லிஃப்ட் கேட்டு செல்லலாம் என்று நினைத்த படி வேகமாக வண்டியருகே சென்றான்.
"ஹலோ, என்னை மெயின் ரோடில் டிராப் செய்யறீங்களா?" என கேட்டான்.
சம்மதமாக தலையசைத்தவனிடன், "நீங்க ஃபாரஸ்ட் ஆபிஸரா?" என கேட்டான்.
தலையிலிருந்த ஹெல்மெட்டையும், கறுப்பு கண்ணாடியையும் கழற்றி, "ஃபாரஸ்ட் ஆஃபிசர் இல்லை, இன்வெஸிடிகேடிவ் ஜர்னலிஸ்ட், ஐ ஆம் யசோத்ரா" என கையை நீட்டினாள்.
ஒரு நொடி அவளையே இமைக்காமல் பார்த்தவன், "நைஸ் மீட்டிங் யூ, ஐ ஆம் சக்திவேல்" என அவளது கைகளைப் பற்றினான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro