Marukkathe Nee Marakkathe Nee - 29
மறக்காதே நீ மறுக்காதே நீ - 29
"சித்து.." என ராதிகாம்மாவின் குரல் வெகு தூரத்தில் மெலிதாக கேட்டது.
"அம்மா......" என முனகிய சித்தார்த்தின் குரல் அவனுக்கே கேட்கவில்லை.
"சித்து... சித்தும்மா.... கண்ணா..." என கொஞ்சிய அவனது அம்மாவின் விரல்கள் அவனது தலை முடியை பாசமாக வருடியது.
"அம்ம்ம்மா......." என சொல்லும் போதே எதற்கென்று தெரியாமல் அவனது மூடிய கண்களில் இருந்து நீர் வழிந்தது.
மென்மையான இரு கைவிரல்கள் அவனது கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்தன.
"சித்து...." என அவனது நெற்றியில் பாசத்துடன் இதழை பதித்தன.
"யுக்தா...." என அவனையும் அறியாமல் வாய் முணுமுணுத்தன.
கண் இமைகளைப் பிரிக்க முடியாமல் பிரித்த போது சுற்றிலும் இருட்டாக இருந்தது.
எதுவும் புரியாமல் திரும்பவும் மயக்கம் சூழ அவனது கண்கள் மூடி கொண்டன.
எத்தனை நேரம் கடந்ததோ தெரியவில்லை, மீண்டும் கண் விழித்த போது சற்றே வெளிச்சம் அறையினுள் பரவியது.
தலையை தூக்க முடியாமல் பாரமாக இருந்தது. கண்களை நாலைந்து தடவை மூடி திறந்ததால் பார்வை சற்றே தெளிவடைந்தது.
அந்த இடம் பழகியதாக தெரிந்தது. ஞாபக அடுக்கில் தேடிய போது சம்யுக்தாவை அடைத்து வைத்திருந்த அதே ஹாசனூர் கெஸ்ட் ஹவுஸ் என்று தெரிந்தது.
அவளைக் கட்டி வைத்திருந்த அதே சேரில் அவனையும் சேர்த்து கட்டி வைத்திருந்ததை உணர்ந்தான்.
உடம்பில் சற்றும் வலுவில்லாததை உணர்ந்தான். இந்த கட்டுக்களை அவிழ்க்க அவனுக்குப் பத்து நிமிடங்கள் போதும். ஆனால் சூழ்ந்திருக்கும் ஆபத்தை பற்றி முதலில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.
சசிதரனை பற்றி லேசாக எடை போட்டு விட்டோம், அவனது எச்சரிக்கையை பற்றி யோசித்திருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் தன்னுடைய கண்காணிப்பு குழு இத்தனை நேரம் அவன் இருக்கும் இடத்தை எளிதாக கண்டு பிடித்திருக்கும். தாத்தாவிற்கும், யதுநநதனுக்கும் அவனை கடத்தியதைப் பற்றியும் அவனிருக்கும் இடத்தையும் பற்றிய விவரங்கள் தெரிவிக்க பட்டிருக்கும்.
ஆழமாக மூச்சை இழுத்து விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயன்றான்.
கதவு திறக்கும் ஒசை கேட்டு தலையை நிமிர்ந்தவன், எதிரே மெலிதாக வந்தவனை பார்த்து அதிர்ந்தான்.
"ரவி..." என்று அவனது வாய் முணுமுணுத்தது. இவன் அமெரிக்காவில் தன்னுடன் தானே இருந்தான், எப்போது இந்தியா வந்தான் என நினைக்கும் போதே அவன் எதிரே இருந்த மேஜையில் ஒரு பேப்பர் பொட்டலத்தையும், தண்ணீர் பாட்டிலையும் வைத்து விட்டு சித்தார்த்தை நிமிர்ந்தும் பார்க்காமல் வெளியே சென்றான்.
"ரவி.. ரவி...." என அவன் அழைத்தும் நிற்காமல் வெளியே சென்று விட்டான். சசிதரனுடன் அவன் கூட்டு சேர்ந்து விட்டானா என்று நினைக்கும் போதே, கண்டிப்பாக இருக்காது என்று மனம் சொல்லியது.
உடலில் சற்று வலு சேர்ந்ததை உணர்ந்தவன், கட்டுக்களை தளர்த்த முயன்றான். கயிறு அழுந்த கட்டியிருப்பதை உணர்ந்ததும், தான் கற்று கொடுத்ததை ரவிகுமார் தன்னிடமே பயன்படுத்தியிருக்கிறான் என்பதை புரிந்து கொண்டான். அதை அவிழ்க்க சற்றே கஷ்டப்பட வேண்டும். ஆனால முடியாத காரியம் இல்லை என நினைக்கும் போதே மனதில் ஆயாசம் சூழ்ந்து கொண்டது.
ரவியும் தனக்கு துரோகம் செய்து விட்டிருப்பானா என நினைக்கும் போதே. மனம் வலித்தது.
தனக்கு இந்த உலகத்தில் யாருமில்லை என நினைத்தவன், ஒரு உந்துதலுடன் தனது கை கால் கட்டுகளை அவிழ்த்தான். படாரென்று சேரை தள்ளி விட்டு எழுந்தவன், வேகமாக கதவை உடைத்து திறந்து கொண்டு வெளியே வந்தான்.
ஹாலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தவனை பார்த்ததும் ஒரு நொடி அதிர்ந்து விட்டான்.
"யது.." என அவனையும் மீறி கத்தியே விட்டான் சித்தார்த்.
"சித்தார்த்.." என அவனை பார்த்து அமர்த்தலாக சொன்னவனை நம்ப முடியாமல் பார்த்தான்.
எப்பொழுது அண்ணா என்று கூப்பிடுவன் சற்றே அதட்டலான குரலில் தன் பெயரை சொன்னதைக் கேட்டதும் சற்றே திகைத்தான்.
"யது.. என்ன விளையாட்டு இது?" என அதட்டலாக கேட்டான்.
"விளையாட்டா? மிஸ்டர் சித்தார்த், நான் ரொம்ப நாளா எதிர்ப்பார்த்திருந்தது இன்னிக்கு தான் நடந்திருக்கு" என ஆழ்ந்த சொன்னான் யதுநந்தன்.
"என்னடா பேசறே, எப்பவும் சின்ன பையன் மாதிரி விளையாடிட்டு?" என கடுப்பாக சொன்னான் சித்தார்த்.
"உனக்கு என்னை பார்த்த சின்ன விளையாட்டுப் பையன் மாதிரியா இருக்கு?" என பக்கத்தில் இருந்த துப்பாக்கியை எடுத்து சித்தார்த்தை பார்த்து குறி வைத்தான்.
"யது, உனக்கு அதை ஹாண்டில் செய்ய தெரியாது. கீழே போடு" என சொல்லும் போதே சித்தார்த்தின் குரலில் டென்ஷன் ஏறியது.
"ஏன் எனக்குத் தெரியாது? எல்லா விஷயமும் உனக்கு மட்டும் தான் தெரியுமா? நீ வளர்ந்த அதே வீட்டில் தானே நானும் வளர்ந்தேன். உன்னை எப்படி வளர்த்தாங்களோ அதே மாதிரி தான் என்னையும் வளர்த்தாங்க" என கடுப்பாக சொன்னான் யதுநந்தன்.
"யது..." என மேலே சொல்ல முடியாமல் மெளனமானான் சித்தார்த்.
"அந்த வீட்டில் எனக்கு மட்டும் தான் எல்லாத்துக்கும் உரிமை இருக்கு. ஆனா என்னோட எல்லா விஷயத்திலும் நீ பங்கு போட்டுக்கிட்டே. பங்கு போட்டிருந்தா கூட பிரச்சனையில்லை. உனக்கு போக தான் மிச்சம் எனக்கு கிடைச்சுது. எங்கம்மாவோட அன்பு கூட உனக்கு தான் அதிகமாக கிடைச்சுது" என கோபமாக சொன்னான்.
"அப்படியில்லை யது. என்னோட வேதனையை மறக்கடிக்க தான் அவங்க அப்படி அதிகமா பாசம் காட்டினாங்க. நீ புத்திசாலி அதை புரிஞ்சிட்டிருப்பேனு நினைச்சேன்" என வருத்தமான குரலில் சொன்னான்.
"விட்டில் யார் என்னை புத்திசாலி ஒத்துக்கிறாங்க? அப்பா, தாத்தா எல்லோரும், சித்தார்த், சித்தார்த் என்று நீ சொல்றதை தானே கேட்கிறாங்க. வீட்டில் பூரணி பாட்டியும், அம்மாவும் சமைக்கிறதை உனக்கு எடுத்து வைச்சிட்டு தானே மிச்சத்தை எனக்கு சாப்பிட கொடுக்கிறாங்க" என எரிச்சலாக சொன்னான்
"அது உன் கற்பனை யது" என ஆயாசமாக சொன்னான் சித்தார்த்.
"எது கற்பனை, நான் ஆபிஸில் எந்த முடிவு எடுத்தாலும், உன்னை கேட்டு தானே செய்யறாங்க. நீ ஊரில் இல்லைனாலும், வர வரைக்கும் காத்துட்டு தானே இருக்காங்க" என சொன்னவனை நம்ப முடியாமல் பார்த்தான் சித்தார்த்.
"யது, இதை நீ எங்கிட்ட நேரிலே சொல்லியிருக்கலாம் இல்லை?" என கெஞ்சும் குரலில் கேட்டான்.
"ஏன் நீ தான் பெரிய புத்திசாலி இல்லை? இதையும் நீயே புரிஞ்சிட்டிருக்க வேண்டாம்?" என வெறுப்பான குரலில் சொன்னான் யதுநந்தன்.
"ஒகே, ஸாரி, நான் இந்தியாவிலே தாத்தாவோடயே இருந்திடறேன். நீ தேவ் புட்ஸ்ஸை முழுசா பார்த்துக்கோ" என தணிவான குரலில் சொன்னான் சித்தார்த்
"அதெப்படி முடியும்? கார்லா நீ கூப்பிட்டவுடனே இந்தியாவுக்கு வந்துடுவாளா? அவ அங்கேயே பிறந்து வளர்ந்தவள். அவ அங்கே தான் இருக்கணும் என்று அடம்பிடிப்பாள்?" என குரலை உயர்த்தினான் யதுநந்தன்.
"அவளை கன்வின்ஸ் செய்ய வேண்டியது என் பொறுப்பு. நீ அதைப் பத்தி கவலைப்படாதே" என நிதானமான குரலில் சொன்னான் சித்தார்த்.
"எப்படி கவலைப்படாம இருக்க முடியும்? நாளைக்கு ஸ்மிருதி உன்னை பார்க்கும் போதெல்லாம், நீ சம்யுக்தாவை கல்யாணம் செய்யலைனு டென்ஷனானாயிருவா. எனக்கு தான் அதனால் எப்பவும் பிரச்சனை" என கண்கள் அலைபாய சொன்ன யதுநந்தன், "உன்னால் என் லைஃப் இதுவரைக்கும் பிரச்சனையானது போதும். நீ சம்யுக்தாவை கல்யாணம் செஞ்சா தான் என் லைஃப் ஹாப்பியா இருக்கும்" என்றான்.
"சீரியஸ்லி யது, தேவ் ஃபுட்ஸ் நீயே பார்த்துக்கும் போது, நான் எதுக்கு அமெரிக்கா வரணும்?. நான் இந்தியாவில் தான் இருக்க போறேன். இரண்டு வருஷத்திற்கு ஒரு தடவை பார்த்தாலே பெரிசு. உனக்கு இஷட்மில்லைனா அது கூட பார்த்துக்க வேண்டாம். பூரணி பாட்டிக்கோ, அம்மாவுக்கோ என்னை பார்க்கணும் என்றால் இந்தியா வந்து என்னை பார்க்கட்டும்" என சித்தார்த் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான்.
அவன் சொன்னதை நம்ப முடியாமல் அவனையே பார்த்தான் யதுநந்தன்.
"நிஜமாவா சொல்றே? விட்டுக் கொடுத்திடுவியா?" என கண்களை விரித்துக் கேட்டான்.
ஆமாம் என்று சம்மதமாக தலையசைத்த சித்தார்த், "யது, நான் என்ன உனக்கு விட்டுக் கொடுக்கிறது. அது எப்போதும் உன்னுடையது தான். சுநீதியம்மாவோட சுநீதி டிரஸ்லைனும் உன்னோடது தான்" என அழுத்தமாக சொன்னான் சித்தார்த்.
"நான் அதை கேட்கலை. இரண்டு வருஷத்திற்கு ஒரு தடவை நாம பார்த்தா போதும் என்று சொன்னியே? அப்பறம் அது கூட பார்க்க வேணாம் என்று சொன்னியே?" என உணர்ச்சியற்ற குரலில் கேட்டான் யதுநந்தன்.
"உன்னை பார்க்காம இரண்டு வருஷம் இருக்கணுமாடா? எப்படி... எப்படி.... அது கூட பார்க்கவே வேணாமா? இப்படி சொன்னதுக்காகவே உன்னை ஏன் நான் சுட்டுத் தள்ள கூடாது?" என சொன்னபடியே சித்தார்த் அருகே வந்த யதுநந்தன் அவன் நெற்றியில் கன்னை வைத்து அழுத்தினான்.
சற்றும் அசராமல் அப்படியே நின்ற சித்தார்த், "யது, கன்னை லோட் பண்ணலை,, சேஃப்டி லாட்ச்சை ரீலிஸ் பண்ணலை" என சிரித்தபடி சொன்னான்.
கன்னை கோபமாக கீழே போட்ட யதுநந்தன், "கன் இல்லைனா என்ன, என இரண்டு கை இருக்கு" என அவன் கழுத்தில் கை வைத்து அழுத்த இருந்தவன், சட்டென்று சித்தார்த்தை இறுக்கி கட்டி கொண்டான்.
"அப்படி சொல்ல உனக்கு எப்படி மனசு வந்தது? என்னை பார்க்காம அத்தனை நாள் இருந்திருவியா?" என சித்தார்த்தின் தோள்களிலும் வலிமையாக குத்தினான் யதுநந்தன்.
"யது, ப்ளீஸ் வலிக்குது" என அவன் கைகளைத் தடுத்தவனையும் மீறி பலமாக குத்தினான்.
"ஒகே, ஸாரி, நான் சும்மா தாண்டா சொன்னேன். நீ பாதி பேசும் போதே கண்டுபிடிச்சிட்டேன்" என அவனது கைகளை பிடித்தான் சித்தார்த்.
"எப்போ கண்டு பிடிச்சே?" என முகத்தை பாவமாக வைத்துக் கொண்டான் யதுநந்தன்.
"சும்மா நடிக்காதே. நான் கண்டுபிடிக்கணும் என்று தானே வேணும்னு அம்மாவும் பாட்டியும் சமைச்சதை எனக்கு எடுத்து வைக்கிறாங்க என்று சொன்னே? உண்மையா சண்டை போடறவனா இருந்தா அதையா சொல்வான்?" என கைகளில் இடுப்பில் வைத்தபடி கேட்டான் சித்தார்த்.
"யது, சொதப்பிட்டியே?" என வாசல் கதவை திறந்தபடி வந்து நின்றாள் ஸ்மிருதி.
"என்ன சொதப்பிட்டியே? அவ்வளவு தான் என்னால பெர்ஃபார்மன்ஸ் செய்ய முடியும். உங்களை கட்டிக்கணும்னா ஆஸ்கர் வாங்கற அளவில் நடிக்கவா முடியும்?" என கோபமாக சொன்னவன்.
"அண்ணா, இந்த தமிழ் பொண்ணுங்க வேணாம். ஹாண்டில் செய்யறது கஷ்டமா இருக்கு" என கண்களை உருட்டியப்படி சொன்னவனை ஸ்மிருதி கோபத்துடன் பார்த்தாள்.
"சும்மா முறைக்காதே, அண்ணா கார்லா அண்ணிக்கு ஸிஸ்டரோ, ஃபிரண்டோ இருக்காளானு பாரு. எனக்கு இவளும் வேணாம், உனக்கு சம்யுக்தாவும் வேண்டாம்" என அலுப்பாக சொன்னான் யதுநந்தன்.
"நந்தன்.." என உயர்ந்த குரலில் சொல்லி விட்டு ஸ்மிருதியின் அருகே வந்து நின்ற சம்யுக்தாவை வெறுமையாக பார்த்த சித்தார்த், "யது, எனக்கு ஸ்மிருதியைப் பத்தி தெரியாது, ஆனா எனக்கு சம்யுக்தா கண்டிப்பா வேண்டாம்" என அழுத்தமான குர்லில் சொன்னான் சித்தார்த்.
"சம்யுக்தா, என்னால் இந்த சிங்கத்தை நீங்க தான் சிங்களா ஹாண்டில் செய்யணும், நான் கிளம்பறேன்" என சொல்லி விட்டு , "வா ஸ்ம்ரு" என ஸ்மிருதியின் கைகளைப் பிடிக்க வந்தவனை தட்டி விட்டாள் ஸ்மிருதி.
"போய் கார்லோவோட சிஸ்டரோட கையை பிடிங்க" என வேகமாக முன்னால சென்றவளின் கையை பிடிக்க அவள் பின்னால ஒடினான் யதுநந்தன்.
"ஸ்ம்ரு, அது சும்மா ரைமிங்கா சொன்னேன் மா, ப்ளீஸ், ப்ளீஸ் என ரவிகுமார் ஸ்டார்ட் செய்த ஜீப்பில் வேகமாக ஏறிய ஸ்மிருதியின் பின்னே தொற்றி ஏறி கொண்டான் யதுநந்தன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro