Marukkathe Nee Marakkathe Nee - 28
மறக்காதே நீ மறுக்காதே நீ - 28
மறுநாள் சம்யுக்தா காலை எழுந்திருக்கும் போதே மணி பத்தாகி விட்டது. அன்று அலுவலகத்திற்கு செல்லவில்லை. வீட்டிலிருந்த வினோதினி அவளை வற்புறுத்தி சாப்பிட வைத்தார். சாப்பிட்டவுடன் திரும்பவும் தனது அறைக்குள் அடைந்து கொண்டாள்.
இதுவரை தோன்றியிராத வெறுமை தோன்றியது. சித்தார்த் இனிமேல் சந்திக்காமல் இருக்கலாம் என்று சொன்னது மனதை அறுத்தது. விக்ரம் இருபதாவது நாளே தன்னைப் பற்றிய உண்மையை சொன்னான் என்ற கோபத்தில் சித்தார்த்திடம் வெறுப்பாக பேசியதில், அனைத்துமே தலைகீழாகி விட்டது.
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை, சித்தார்த்திடம் சென்று பேசினால் அனைத்தும் சரியாகி விடும். பேச கூட வேண்டாம், அவனை சென்று பார்த்தாலே போதும், அவன் புரிந்து கொள்வான். அனைத்தையும் சரி செய்து விடுவான். அவள் மனதில் இருப்பதை அவனை விட யாராலும் நன்றாக புரிந்து கொள்ள முடியாது. பல முறை தன்னை தொகுத்து கொண்டாலும், அவளால் அன்று முழுவதும் கிளம்பவே முடியவில்லை.
மறுநாள் வழக்கம் போல் கிளம்பி அலுவலகம் சென்றவள், அன்று மாலை அவனை சென்று சந்திக்க வேண்டும் என்று நினைத்தாள்.
"அங்கிள், இந்த செக் புக்கில் கையெழுத்துப் போட்டிருக்கேன். வேற ஏதாவது டாக்குமெண்ட்ஸில் சைன் செய்யணுமா?" என கேட்டான்.
"இல்லை சித்தார்த், நான் பார்த்துக்கிறேன். ஏதாவது வேண்டுமானால் ஃபேக்ஸ் பண்ணறேன்" என்றார் நாதன்.
"ஒகே, அங்கிள், நான் கிளம்பறேன்" என்றவனை உள்பேசி அழைத்தது.
"ஒகே, அனுப்புங்க" என்று உள்பேசியில் சொன்னவன், "அங்கிள், ஒரு முக்கியமான விஸிட்டர்..." என்றான்.
"சரி சித்தார்த். ஹாவ் எ நைஸ் ஜர்னி" என அவன் கையை குலுக்கி விட்டு கதவை திறந்து சென்றார்.
"ஹலோ ஸிட்" என உள்ளே வந்தான் சசிதரன்.
"ஹலோ சசி" என்ற சித்தார்த், எதிரே இருந்த இருக்கையை காண்பித்தான்.
"ஸிட், காலையில் என்னுடைய லாயர் பேசினார்" என அவன் முகத்தைப் பார்த்தான் சசி.
எதுவும் பதில் சொல்லாமல் உணர்ச்சியற்று அவனை பார்த்தான் சித்தார்த்.
"கோர்ட்டில் எங்கப்பாவோட போன் ரெக்கார்டிங்க்ஸ், லெட்டர் இரண்டத்தையும் முக்கியமான எவிடன்ஸா கொடுத்திருக்காங்க" என்றான்.
"விக்ரம் ஆதாரம் கிடைச்சிருக்கு என்று சொன்னான்" என்று நிதானமான குரலில் சொன்னான் சித்தார்த்.
"ஸிட், முன்னாடியே பேசினோம். நீ கேஸை வித்டிரா செஞ்சா, நீ என்ன கேட்டாலும் தரேன். அப்பவுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை. இன்னும் கோர்ட், கேஸ், ஜெயில் இதையெல்லாம் நினைச்சு கூட பார்க்க முடியலை" என வருத்தமான குரலில் சொன்னான் சசிதரன்.
"சசி, ஒரு மகனா உன்னோட கஷ்டம் புரியுது. ஆனா அதே சமயம் என் நிலைமையில் இருந்து யோசிச்சு பாரு. நான் எங்கப்பவுக்கு செய்யற ஒரே கடமை இது மட்டும் தான்" என சீரான குரலில் சொல்லி விட்டு மடிகணினியை மடித்து தன் பேகில் வைத்துக் கொண்டான்.
"நான் சம்யுக்தாவை விட்டுக் கொடுத்திடறேன் ஸிட். என்னால் எந்த பிரச்சனையும் உங்க இரண்டு பேருக்கும் வராது" என சொன்னான் சசிதரன்.
வருத்தமாக புன்னகைத்த சித்தார்த், "சசி, எனக்கு வெளியே ஒரு மீட்டிங் இருக்கு. கிளம்பிட்டிருக்கேன்" என எழுந்தான்.
"ஸிட், நான் விஷயத்தை சாஃப்ட்டா ஹாண்டில் செய்ய நினைக்கிறேன்" என சற்றே கடினமான குரலில் சொன்னான் சசிதரன்.
"ஸாரி சசி, இந்த விஷய்த்தில் எந்த விதத்திலும் காம்ப்ரமைஸே கிடையாது" என அழுத்தமான குரலில் சொன்னான்.
"ஸிட், நான் எங்கப்பாவை காப்பாத்த எந்த லெவலுக்கும் போவேன்" என மிரட்டும் தொனியில் சொன்னான்.
"உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ" என சொல்லிவிட்டு அறை கதவை திறந்தான்.
அவனை தாண்டி வேகமாக சென்ற சசிதரனை வெறுப்பான பார்வை பார்த்தான் சித்தார்த்.
வெளியே வந்து தனது காரை எடுத்தவன், போலிஸ் தலைமையகத்தின் அருகே இருந்த உணவகத்தின் அருகே காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான்.
"ஹாய் விக்ரம், லேட்டாயிடிச்சு" என சொன்னவன், "ஸாரி, கிளம்பற நேரத்தில் ஒரு விஸிட்டர் வந்துட்டார்" என சொல்லியபடி அமர்ந்தான்.
"இட்ஸ் ஒகே" என சொன்ன விக்ரமிடன், "வந்தது யார் தெரியுமா?" என கேட்டான்,
தெரியாது என்று தோளை குலுக்கியவனிடம், "சசிதரன்" என்று சிரித்தபடி சொன்னான் சித்தார்த்.
"ஒ, என்ன சொல்றான்" என கவலையுடன் கேட்டான் விக்ரம்.
"கேஸை வித்டிரா செய்ய சொல்லி மிரட்டறான்" என சொன்னான்.
"நம்ம சைட் ஸ்டராங்கா இருக்கு ஸிட். அவன் என்ன செஞ்சாலும், இப்போ அவங்கப்பாவை காப்பாத்த முடியாது" என சொன்னான்.
"எனக்குத் தெரியும், விக்ரம், அவங்கப்பாவை காப்பாத்த அவன் முயற்சி செய்யறதில் எந்த தப்பும் இல்லை" என சொன்னான்.
"எதுக்கு ஸிட், உடனே பார்க்கணும் என்று வர சொன்னே?" என கேட்டான் விக்ரம்.
"விக்ரம், நாளைக்கு எர்லி மார்னிங் ஃபளைட்டில் ஊருக்குப் போறேன்" என்று சொன்னான் சித்தார்த்.
"நாளைக்கா? நேத்து மித்ரனிடம் பேசிட்டிருந்தேன். நீ இன்னும் பத்து நாள் இங்கே தான் இருக்க் போறே என்று சொன்னான்" என ஆசசிரியத்துடன் கேட்டான் விக்ரம்.
"அப்படி தான் பிளான் இருந்தது. அப்பா கேஸ்லும் ஆதாரம் கிடைச்சிருச்சு. வந்த வேலை முடிஞ்சிருச்சி. இங்கே வந்து ஒரு மாசமாக போகுது. அங்கே வேலை நிறைய இருக்கு" என சுற்றிலும் பார்த்தபடி சொன்னான்.
"ஒ அப்படியா, மித்ரன் உனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடிச்சு, இந்த வீக் எண்ட் உனக்கு நிச்சியம் நடக்க போகுது என்று சொல்லிட்டிருந்தான்" என சொன்னான்.
"ஹ்ம்ம், அது ஸ்டாப் ஆயிடிச்சு" என விரக்தியான குரலில் சொன்னான் சித்தார்த்.
"ஏன் ஸிட், உனக்குப் பொண்ணை பிடிக்கலையா?" என ஆவலுடன் கேட்டான் விக்ரம்.'
"அவளுக்குத் தான் என்னை பிடிக்கலை" என சொன்னவனை நம்பாமல் பார்த்தான் விக்ரம்.
"வாட், உன்னை பிடிக்கலையா?" என அதிர்ச்சியுடன் பார்த்தவனிடம், தலையசைத்தான் சித்தார்த்.
"நம்பவே முடியலை. எவ அவ, உன்னை போய் பிடிக்கலை என்று சொல்றா. உன்னை எதனால் பிடிக்கலையாம்?" என கோபத்துடன் கேட்டான் விக்ரம்.
"விடு விக்ரம், எல்லோரோட டேஸ்ட் ஒரே மாதிரி இருக்காது" என சொன்னவன் கண்களை இறுக முடி திறந்தான்.
"அந்த லூஸூ யாரு ஸிட்" என கோபமாக கேட்டவனிடம் வருத்தமான புன்னகையை மட்டுமே பதிலாக தந்தான் சித்தார்த்.
"உன் நிச்சியத்திற்கு தான் உன் ஃபாமிலி அங்கிருந்து வந்தாங்கனு கேள்விபட்டேன்" என சொன்னான் விக்ரம்.
"ஹ்ம்ம், அது தான் பிளான். நம்ம நினைச்சுது ஒன்று, நடக்கிறது ஒன்று" என ஆயாசமாக சொன்னான் சித்தார்த்.
"நாளைக்கு அவங்களும் உன்னோட கிளம்பறாங்களா?" என்று கேட்டான்.
"இல்லை, அவங்க பத்து நாளுக்குப் அப்பறம் தான் வராங்க, நான் மட்டும் தான் நாளைக்குப் போறேன்" என சொன்னான்.
உணவக அட்டெண்ட்ர் அருகே வந்து நிற்க, "ஸிட் என்ன சாப்பிடறே?" என கேட்டான்.
"எதுவும் வேண்டாம். வீட்டுக்குப் போய் பாக் பண்ணிட்டு சாப்பிட்டு கிளம்பணும்" என்றான்.
"ஜுஸாவது சாப்பிடு" என்ற விக்ரமிடம் வேண்டா வெறுப்பாக தலையசைத்தான்.
"இரண்டு ஆப்பிள் ஜுஸ்" என்று சொல்லும் போதே, விக்ரமின் போன் அடித்தது.
"ஹாய் அகில்" என்றவன், "ஸிட், எங்கூட தான் நம்ம பக்கத்து ஹோட்டலில் இருக்கான்" என்றவன், "சரி வா" என்றான்.
"அகில்ன் உன்னை பார்க்கணும் என்று சொன்ன விக்ரமிடம் மையமாக தலைய்சத்தான்,
"சரி, எதுக்கு என்னை அவசரமாக பார்க்கணும் என்று சொன்னே?" என கேட்டான் விக்ரம்.
"நீ எனக்கு ஒரு ஹெல்ப் செய்யணும்" என்றான் சித்தார்த்.
"சொல்லு ஸிட்" என்றான் விக்ரம்
"இந்த ரெக்கார்டிங், லெட்டர்ஸ் எல்லாம் சம்யுக்தா தான் கொண்டு வந்து கொடுத்தாள் என்று வெளியே சொல்லாதே" என்றான்.
"ஏன் ஸிட், சொன்னா நமபகத்தனமை அதிகமா இருக்குமில்லை?" என கேட்டான்.
""இல்லை, வேண்டாம். நாம கேஸை ஜெயிச்சிடலாம். அவ எந்த பிராப்ளமிலும் மாட்டிக்க கூடாது. ஏற்கனவே அந்த அரசியல் பிரமுகர் கேஸில் அவ மேலே தான் சந்தேகப்படறாங்க" என ஆழ்ந்த குரலில் சொன்னான் சித்தார்த்.
"அவ மித்ரனோட தங்கை, வீட்டிலேயே போலிஸ் இருக்காங்க" என்றவனிடம், "நோ விக்ரம், சம்யுக்தாவை இதில் இன்வொல்வ் செய்யாதே. என்னால அவளுக்கு எந்த பிரச்சனையும் வர வேண்டாம்" என தீவிரமான குரலில் சொன்னான்.
"ஒகே, ஸிட்" என சொல்லும் போதே, அகில்ன் அவர்களின் மேஜையில் வந்து அமர்ந்தான்.
அதற்குள் ஜுஸ் வந்து விட, விக்ரமும் சித்தார்த்தும் அதை அருந்தினார்கள்.
"என்ன சித்தார்த் ரொம்ப டய்ர்ட்டா தெரியறே?" என கேட்டான் அகிலன்.
"இரண்டு மூணு நாளா தூக்கமே இல்லை. இப்போ தூக்கம் கண்ணை சுத்துது" என கொட்டாவி விட்ட படி சொன்னான்.
"ஸிட், பை, ஹாப்பி ஜர்னி" என சொல்லிவிட்டு விக்ரம் கிளம்பினான்.
சித்தார்த் மெதுவே ஜூஸை அருந்தும் போது, "மச்சான், நீ அவசரப்படாதே" என தயக்கத்துடன் சொன்னான் அகிலன்.
"அகில், நான் இரண்டு வருஷமா காத்திட்டிருக்கேன். இனிமே அவளே எங்கிட்ட வந்து ஒத்துக்கிட்டாலும், நான் அவளை கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்" என கோபமான குரலில் சொன்னான்.
"எனக்கு உன் நிலைமை புரியுது, அவ நிலைமையும் யோசிச்சி பாரு" என மெதுவாக சொன்னான்.
"அது தான் பிரச்சனை. நான் அவ மனசு கொஞ்சம் கூட வருத்தப்பட கூடாது என்று நினைக்கிறேன். ஆனா அவ என மனசை சுக்கு நூறா உடைச்சிட்டா. எங்களுக்கு இனிமே செட்டாகாது" என எரிச்சலான குரலில் சொன்னான்.
"மச்சான் நான் அவகிட்ட பேசறேன். நான் சொன்னா புரிஞ்சிப்பா" என நிதானமான குரலில் சொன்னான்.
"அகில், நான் முடிவெடுத்துட்டேன். இனிமே அவ என் வாழ்க்கையில் கிடையாது. இரண்டு நாளா முன்னால் தான் என் பழைய கேர்ல் ஃபிரண்ட் கால் செஞ்சா. அவ முதல் புருஷனோட டிவோர்ஸ் ஆயிடிச்சாம்" என கண்கள் அலைபாய சொன்னான் சித்தார்த்.
"யாரு கார்லா ஸ்டீபனா?" என்று கேட்டு விட்டு பல்லை கடித்துக் கொண்டான் அகிலன்.
"அவளே தான்" என்று சொன்ன சித்தார்த், "உனக்கு எப்படி அவளை தெரியும்?" என கேள்வியாக அவனை பார்த்தான்.
"நீலிமா சொன்னா" என்றவனை புரியாமல் பார்த்தான்.
"நீலிமா, மித்ரனோட... ஹ்ம்ம்.. மித்ரனோட பிரண்ட், அமெரிக்காவில் உன் காலேஜில்.. தான் படிச்சா.." என சொல்லி சமாளித்தான் அகிலன்.
"அப்படியா?" என சொன்னவன், "எங்க காலேஜ் காம்பஸ் பெரிசு" என் சொன்னான்.
"ஊருக்குப் போனதும், அடுத்த நாளே கார்லாவை பார்த்து உடனே கல்யாணம் செஞ்சிக்க போறேன்" என சொன்னவனை நம்பாமல் பார்த்தான் அகிலன்.
"எனக்கு முடிவெடுக்க தான் நேரமாகும் அகிலன். முடிவெடுத்தா அதில் இருந்தே மாறவே மாட்டேன்" என உறுதியன குரலில் சொன்ன சித்தார்த்தை பாவமாக பார்த்தான் அகிலன்.
"ஒகே, யுவர் லைஃப், யுவர் சாய்ஸ்" என சொன்னவன், "பை, ஹாவ எ நைஸ் ஜர்னி, என்னால இன்னிக்கு ஏர்போர்ட்டுக்கு வர முடியாது. அமிதாவுக்கு உடம்பு முடியலை" என்றான் அகிலன்.
"பரவாயில்லை" என சொல்லி எழுந்த சித்தார்த் சற்றே தடுமாறி, சேரை பிடித்துக் கொண்டான்.
"என்னாச்சு ஸிட்" என கேட்ட அகிலனிடன், "இரண்டு நாளா தூங்கலை, மெண்ட்டல் ஸ்டிரஸ், ஹெவி வொர்க்" என கண்களை தேய்த்து விட்ட்படி சொன்னான்.
"ஸிட், நான் வேணா டிராப் செய்யட்டுமா" என்றவனிடம், "இல்லை அகில், பிராப்ளம் இல்லை" என்று சொல்லும் போதே த்லை சுற்றுவது போலிருந்தது.
"ஸிட், நான் சொல்றதை கேளு, உன் கார் கீயை கொடு, நான் அப்பறம் தாத்தா வீட்டில் காரை கொண்டு விடறேன். நீ கேபில் போ" என்றான் அகிலன்.
சரியென்று தலையசைத்து விட்டு வெளியே அகிலனுடன் வந்த சித்தார்த், கார் கீயை அகிலனிடம் கொடுத்தான். ரோடில் சென்ற கேபை நிறுத்திய அகிலன், சித்தார்த்தை அதில் ஏற்றி விட்டான்.
காரின் பின் சீட்டில் தலைசாய்த்து கண்கள் மூடியவனின் இமைகளுக்குள் தெரிந்தாள் சம்யுக்தா.
"
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro