Marukkathe Nee Marakkathe Nee - 27
மறக்காதே நீ மறுக்காதே நீ - 27
இருபதாம் நாள்... (பாகம் - 2)
சம்யுக்தா தன்னை சமன்படுத்தி நிமர்வதற்குள், அவளருகே வந்து தனது இருகையினாலும் வேகமாக அவளது முகத்தை நிமிர்த்தியவன், தனது வலிமையான உதடுகளால், அவளது மென்மயான இதழ்களை அணைத்தான்.
அவனது முதல் இதழ் தீண்டலில் அவளது உடலில் இருந்த அத்தனை செல்களும் இனிமையாக அதிர்ந்தன. இதயம் வழக்கத்தை விட வேகமாக புதிய இரத்தத்தை உடலெங்கும் பரவ செய்தது. அறிவு செயலிழந்து எதையும் ஆணையிடாமல் உறைந்தது. அவனது இதழணைப்புகாகவே இத்தனை காலம் காத்திருந்ததாக தோன்றியது. தாமாகவே மூடி கொண்ட சம்யுக்தாவின் இமைகளுக்குள் மின்மினி பூச்சிகள் பறந்தன. அவளது கைகள் தானாக உயர்ந்து அவனது தோளை தொட்டவுடன், கண்கள் திறந்து கொண்டன.
திறந்த விழிகளின் வழியே பாய்ந்த வெளிச்சம் அறிவை உயிர்க்க வைக்க, அவளது கைகளை வேகமாக அவனது தோளை தள்ளி விட்டது.
சித்தார்த் தன்னை மறந்திருந்த இனிமையான தருணத்தில் எதிர்பார்க்காத போது அவள் தள்ளி விட்டதால் தடுமாறியவன், நொடியில் தன்னை சமன்படுத்திக் கொண்டான்.
கோபத்துடன் தன்னை உறுத்துப் பார்க்கும் சம்யுக்தாவை, முகத்தில் உறைந்த சிரிப்புடன் பார்த்தான்.
"உங்களை ஜெண்டில்மேன் என்று நினைச்சு தான் நீங்க கூப்பிட்டவுடனே வந்தேன். விரல் கூட மேல படாது என்று சொன்னீங்க?" என கோபமாக கேட்டவளின் அருகே வர கால்களை எடுத்து வைத்தான்.
"ஸ்டாப்.." என குரலை உயர்த்தி சொன்னவள், "இன்னும் ஒரு அடி எடுத்து வைச்சீங்க, நான் கதவை திறந்துட்டு போயிடுவேன்" என அழுத்தமான குரலில் சொன்னாள்.
"ஒகே யசோதரா சக்திவேல்" என கண்கள் மின்ன சொன்னவன், மேஜையின் மேல் சாய்ந்து நின்று தனது கைகளை கட்டிக் கொண்டான்.
"நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க" என கேட்டவளை புரியாமல் பார்த்தவனது உதடுகள் லேசாக சிரிப்பில் வளைந்திருந்தன.
"என்ன கேட்டே ஸ்வீட்டி?" என அமர்த்தலாக கேட்டான் சித்தார்த்.
அவன் கேட்டதற்கு என்ன சொல்வதென்று ஒரு நொடி தடுமாறியவள், "எதுக்கு என் பக்கத்திலே வந்து.." என அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் மெளனமானாள்.
"ஹனி, உன் பக்கத்திலே வந்து, நான் என்ன செஞ்சேன்?" என தலையை சாய்த்து கேட்டான்.
மனதிற்குள் அவனை கலர்கலராக திட்டியவள், என்னிடம் சிக்காமல் மகனே எங்கே போய் விடுவாய் என நினைத்தபடி, "என்னை எதுக்கு தொட்டீங்க? விரல் கூட படாது என்று சொன்னீங்க?" என மூச்சு வாங்க சொன்னாள்.
"நான் சம்யுக்தா கிட்ட தொட மாட்டேன் என்று சொன்னேன். சம்யுக்தாவை நான் தொடவே இல்லையே" எனறவனை முறைத்துப் பார்த்தாள்.
"நான் தொட்டது, அப்பறம் கிஸ்..." என சொல்லும் போதே கண்களை மூடி காதை பொத்தி கொண்டவளை காதலுடன் பார்த்தான்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு கண்களை திறந்தவளிடம், "ஒகே, எனக்கு கூட உன்னை மாதிரி தியரி பிடிக்கவே பிடிக்காது. பிராக்டிகல் தான் பிடிக்கும்" என அவளை ரசனையுடன் பார்த்தபடி சொன்னான்.
"சித்தார்த்.." என சீரியசாக சொன்னவளிடம், "உனக்குத் தான் சித்தார்த் என்ற பெயர் பிடிக்கலையே, சக்திவேல் தானே பிடிச்சிருக்கு, அப்படியே கூப்பிடு, யசோம்மா" என நக்கலாக சொன்னவன், "நான் தொட்டது சம்யுக்தாவை இல்லை, யசோத்ரா சக்திவேலை தான்" என அமர்த்தலாக சொன்னான்.
"அப்படி பெயரை வைச்சதால் நான் உங்களை விரும்பறேன் என்று அர்த்தமில்லை. எனக்கு ஒரு புனைபெயர் தேவைப்பட்டது. இது எல்லாரும் செய்யறது தான்" என சொல்லும் போதே அவளது குரலின் சுருதி குறைந்தது.
"உனக்கு வேற பெயரே கிடைக்கலையா? அப்படி பெயர் வைச்சிக்கிட்டா என்ன அர்த்தம் தெரியுமா? யுக்தா, யுவர் கேம் இஸ் ஒவர்" என அழுத்தமாக சொன்னவன், "விக்ரம் கால் செஞ்சான்" என அவளை கூர்மையாக பார்த்தபடி சொன்னான்.
"அப்படியா, எதுக்கு?" என சொன்னவள் தனது உணர்வுகளை முகத்தில் தெரியாமல் இருக்க போராடினாள்.
"அவனுக்கு எங்கப்பா கேஸில் வலுவா ஆதாரம் கிடைச்சிருக்காம். முரளிதரன், எங்கப்பாவை கொல்ல சொல்லி, அந்த சந்தன கடத்தல் தலைவனோட பேசின போன் ரெக்கார்டிங்கும், எங்க கார் நம்பர், எங்கப்பா அம்மாவோட அடையாளம் சொன்ன முரளிதரனோட லெட்டர் எல்லாம் கிடைச்சிருக்காம்" என நிதானமாக சொன்னான்.
எதையும் சொல்லாமல் கண்ணாடி தடுப்பின் அருகே சென்று நின்று வெளியே பார்த்தாள்.
அவளருகே வந்து நின்றவன், "அதை விக்ரமிடம் கொடுத்தது யார் தெரியுமா?' என நிதானமான குரலில் கேட்டான்.
"நான் தான் கொடுத்தேன்" என சொன்னவளின் கண்கள் அலைபாய்ந்தது.
"நான் விக்ரமிடம் நாளைக்குத் தான் வெளியே சொல்ல சொன்னேன். ஏன் இன்னிக்கே வெளியே சொன்னார்?" எனறவளின் முகம் கசங்கியது.
"எங்கிட்ட சொல்லிட்டு நாளைக்கு வரை வெளியே சொல்ல வேண்டாம் என்று தான் விக்ரம் சொன்னான்" என சொன்னான்.
"யுக்தா, தாங்கஸ் எ லாட். இந்த ஆதாரம் எனக்கு கிடைச்சுதில் சந்தோஷமா இருக்கு. அதுவும் இந்த ஹெல்ப் செஞ்சதில், உனக்கு எப்படி நன்றி சொல்றது என்றே தெரியலை" என சொனவனை உணர்ச்சியற்று பார்த்தாள்.
"நான் இதை உங்களுக்காக செய்யலை. எங்கப்பா செஞ்ச தப்புக்கு இது ஒரு வகையில் பிராயசித்தம். தாத்தா எங்க குடும்பத்துக்கு செஞ்ச உதவிக்கு நன்றி கடன்" என சொல்லி விட்டு வெளியே வெறித்துப் பார்த்தாள்.
"இந்த ஆதாரம் எப்படி கிடைச்சுது?" என அவளை ஆவலாக கேட்டான்.
"மித்ரன் பத்திரிகையில் சொன்னதால் எனக்கு டெஸ்க் வொர்க் மட்டும் தான் கொடுத்தாங்க. பயங்கரமா போரடிச்சுது. அப்போ தான் திருமாறன் அவரோட சுயசரிதையை எழுத ஆரம்பிச்சார். அதை அவருக்கு தொகுக்க என்னோட பிரண்ட் தான் உதவி செஞ்சாள். அவரோட சுயசரிதையில் சந்தன கடத்தல் கேஸ் ஒரு அத்தியாயம் தான். ஆனா அதுக்கு அவர் கொடுத்த போன் ரிக்கார்டிங்க்ஸ், லெட்டர்ஸ், ரெக்கார்ட்ஸ் நிறைய இருந்தது. அவ இதைப் பத்தி சொன்னதில் எனக்கு சந்தன கடத்தல் பற்றி எழுதலாம் என்று தோணிச்சு. அவளிடமிருந்து எல்லா மெட்டிரியல்ஸையும் வாங்கினேன். அப்போ தான் இப்போ பிரபலமா இருக்கிற அரசியல் பிரமுகர், அந்த சமயத்தில் கடத்தலுக்கு உடந்தையா இருந்தது தெரிஞ்சுது. எனக்கு இன்னும் நிறைய ஆவணங்கள் தேவைப்பட்ட போது, என்னுடைய ஃபிரண்ட், திருமாறன் புக் எழுத வேண்டும் என்று கேட்டதால் எல்லா துறைகளிலும் உதவி செஞ்சாங்க" என நிறுத்தினாள்.
"எங்கப்பா கொலையோட போன் ரெக்கார்டிங்க்ஸ், லெட்டர்ஸ், ஆவணங்கள் எப்படி கிடைச்சுது?" என கேட்டான்.
"அந்த அரசியல் பிரமுகரை கைது செஞ்ச போது, அவரோட வீட்டில் இருந்து பழைய லெட்டர்ஸ், ரெக்கார்ட்ஸ் எல்லாம் கிடைச்சுது. அரசு வக்கில் அவருக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கிட்டு இதையெல்லாம் தேவையில்லை என்று போலிஸில் கொடுத்துட்டாங்க. எனக்கு அது பிறகு தேவையாயிருக்கும் என்று தோன்றியதால, என் காண்டாக்ட்ஸிடம் சொல்லி அதை நான் வாங்கி வைச்சிக்கிட்டேன். மித்ரன் ஊரிலிருந்து வந்த பிறகு, ஒரு நாள், உங்கப்பா கேஸில் எதுவும் எவிடென்ஸ் கிடைக்கலை என்று அப்பாவிடம் வருத்தபட்டு சொல்லிட்டிருந்தான். எங்கிட்ட இருக்கிறதில் இருக்கா என்று தேடி பார்த்தேன். அதில் முரளிதரன் அந்த அரசியல் பிரமுகர் வீட்டிலிருந்து பேசின போன் ரெக்கார்டிங்க்ஸ், முரளிதரன் கைப்பட எழுதின லெட்டர் எல்லாமே இருந்தது. அதை தான் விக்ரமிடன் கொண்டு போய் கொடுத்தேன்" என சொன்னாள்.
"அதை ஏன் நாளைக்கு வரை வெளியே சொல்ல கூடாது என்று சொன்னே? நான் சொன்ன இருபது நாள் டைம் முடியணும் என்பதற்காகவா? என சீரியசான குரலில் கேட்டான்
"ஆமாம். நீங்க மறுபடியும், மறுபடியும் தப்பு செஞ்சிட்டே போறீங்க. உங்களுக்கு அது புரியவே இல்லை" என ஆழ்ந்த குரலில் சொன்னாள்.
அவளைப் புரியாமல் பார்த்தவனிடம், "உங்களுக்கு அது புரிய கூட இல்லை. நீங்க என்னை கடத்தினதில் மனசளவில் பாதிக்கப்பட்டிருந்தேன். நான் அதில் இருந்து மீண்டு வருவதற்குள், அமிதா வீட்டில் இருபது நாளைக்குள் என்னை சம்மதிக்க வைக்க இருபது நாள் போதும் என்று சவால் விடறீங்க? நீங்க என்னை பொம்மைனா நினைச்சிட்டிருக்கீங்க?" என ஆத்திரமாக கேட்டாள்.
"நிஜமாவா யுக்தா, நான் சொன்னதை அப்படியா புரிஞ்சிக்கிட்டே? உன் மனசை கேட்டுப் பாரு, அது உனக்கு நான் என்ன அர்த்தத்தோட சொன்னேன் என்று சொல்லும். நான் சொன்ன இருபது நாள் உன்னை காதலிக்க வைக்க இல்லை, நம்ம மனசில் இருக்கிற காதலை வெளியே சொல்ல தான்" என சொல்லி விட்டு தலையை அழுந்த பின்னால் தள்ளி கொண்டான்.
"நான் சொல்றதை எல்லாம் உள் அர்த்தத்தோட தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டா, நான் எதுவும் செய்ய முடியாது. நீ எப்பவும் உன் இடத்தில் இருந்து மட்டும் தான் யோசிக்கிறே. என் இடத்திலே இருந்தும் யோசிச்சு பாரு" என சொன்னவன், தனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.
தனது முழுங்கைகளை மேஜையில் ஊன்றி, தனது இருகைகளிலும் முகத்தைப் புதைத்து கொண்டான். வாழ்க்கையில் ஒரு நிமிடம் கூட சந்தோஷத்துடன் இருக்க முடியாதா என்ற விரக்தி ஏற்பட்டது.
யசோத்ரா சக்திவேல் என்று சொல்லி அப்போது தான் சம்யுக்தா இனிய அதிர்ச்சி கொடுத்திருந்தாள். அவள் சொன்ன அடுத்த நிமிடம் விக்ரம் போன் செயது ஆதாரம் கிடைத்து விட்டது என்றும் அதை சம்யுக்தா கொண்டு வந்து கொடுத்தாள் என்றும் சொன்னான். அந்த நிமிடம் வானமே வசப்பட்டது போல தோன்றியது. அந்த நிமிட சந்தோஷத்தை அவளிடன் பகிர்ந்து கொள்ள அவள் இதழணைத்திருந்தான்.
ஆனால் சம்யுக்தாவோ அதை எதுவும் புரிந்து கொள்ளாமல், அவனையே குற்றம் சொல்லி கொண்டிருந்தாள். மற்ற காதலர்களுக்கிடையில் இது பெரிய பிரச்சனையாக இருக்காது. வெறும் ஈகோ பிரச்சனையாகவே மட்டுமே இருக்கும். சம்யுக்தா என்றும் இவனை இயல்பான இணையாக பார்க்க போவதில்லை. இவன் எதை செய்தாலும் அவளை கடத்திய கண்ணோட்டத்தில் இருந்தே பார்க்க தொடங்குவாள். இதனால் இருவரின் வாழ்க்கையும் சில நாட்களிலே நரகமாக விடும் என நினைத்தான்.
சம்யுக்தா சற்று முன்பும் இதையே தான் சொன்னாள். அவளை கடத்தியதை மன்னித்து விட்டாள், மறக்க தான் முடியாது என்று தெளிவாக சொல்லி விட்டாள். இந்த இரண்டு வருடங்களாக அவள் சற்றும் மாறாதது அதனால் தான். எல்லோருக்கும் விருப்ப பட்ட அனைத்தும் கிடைப்பதில்லை. ஆனால் அவனுக்கு தான் விருப்ப பட்ட எதுவுமே கிடைக்கவில்லை. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அவனிடம் எல்லாமே இருப்பது போல் தோன்றினாலும், அவனிடம் இருப்பது வெறுமையும் தனிமையும் தான்.
இந்த பிறவியில் இறைவன் அவனுக்கு வாழ்க்கையாக அதை கொடுத்திருந்தால் என்ன செய்ய முடியும் என்று மறுபடியும் விரக்தி எழுந்தது..
"சித்தார்த், நான் கிளம்பறேன்" என சீரியசான குரலில் சொன்னாள் சம்யுக்தா.
தனது கைகளில் புதைந்திருந்த முகத்தை உயர்த்தியவன், உணர்ச்சிகளற்று அவளைப் பார்த்தான்.
"நான் கிளம்பறேன்" என சொன்னவளிடம் மையமாக தலையசைத்தான்.
கதவருகே போனவளை, "சம்யுக்தா.." என்ற அவனது சீரியசான குரல் தடுத்து நிறுத்தியது.
"எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் செய்யணும்" என்றான்.
என்னவென்று புரியாமல் பார்த்தவளிடம், "இனிமே நான் உங்களை எந்த விதத்திலும் டிஸ்டர்ப் செய்ய மாட்டேன். நாm இனிமே எந்த காரணத்துகாகவும் மறுபடியும் சந்திக்காம இருந்தா நல்லாயிருக்கும்" என சீரான குரலில் சொன்னான்.
அவன் சொன்னதற்கு தலையசைத்து விட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். வீட்டிற்கு காரில் வரும் போது, அவன் சொன்னதின் அர்த்தம் முழு அர்த்தம் புரிந்து மனதில் பாரமும், இதயத்தில் வலியும் ஏற்பட்டது.
வினோதினியிடம் வெளியே சாப்பிட்டதாக சொன்னவள், உடை மாற்ற கூட தோன்றாமல் படுக்கையில் விழுந்தாள். எதையும் யோசிக்க தோன்றாமல் கண்களிலிருந்து நீர் வந்தபடியே இருந்தது. அன்றிரவு முழுவதும் தூங்காமல் அழுதபடியே இருந்தவள் அதிகாலையில் தான் தூங்கினாள்.
சித்தார்த் எப்போதும் அனுப்பும் குறுஞ்செய்தியை அன்று அனுப்பவே இல்லை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro