Marukkathe Nee Marakkathe Nee - 26
மறக்காதே நீ மறுக்காதே நீ - 26
இருபதாம் நாள்... (பாகம் - 1)
மாலை மணி ஐந்து
சித்தார்த் செல்போனை எடுத்து சம்யுக்தாவை அழைத்தான்.
"ஹலோ சம்யுக்தா" என்றவனது குரல் சீராக இருந்தது.
"ஹாய்.." என்ற சம்யுக்தாவின் குரல் மெதுவாக ஒலித்தது.
"ஆபிஸ் முடிஞ்சவுடன் தாத்தாவோட சென்னை ஆபிஸுக்கு வா, உன்னோட பேசணும்" என்று சொல்லி விட்டு அவள் பதிலுக்குக் காத்திராமல் வைத்து விட்டான்.
வருகிறாயா என்றால் கேட்டால் சம்யுக்தா வர மாட்டேன் என்று முறுக்கி கொள்ளலாம். இன்று அவளுடன் பேசியே தீர வேண்டும். இன்று பல விஷயங்களுக்கு முடிவு செய்து விட வேண்டும் என்று காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போதே உறுதி எடுத்திருந்தான்.
வேலையில் கவனம் செலுத்த முடியாமல் கண்ணாடி தடுப்பின் வழியே தெரிந்த வானத்தை பார்த்தான். வசந்தனுடன் சம்யுக்தா காரில் அன்று வந்தது நினைவில் வந்து போனது.
மாலை ஆறே முக்கால் மணி ஆகியிருந்தது. சம்யுக்தாவின் அலுவலகத்திலிருந்து தாத்தாவின் அலுவலகம் பத்து நிமிட தொலைவில் இருந்தது. கண்டிப்பாக இன்று அவனை பார்க்க அவள் வருவாள் என்று அவனுக்கு தெரியும். பிரச்சனைகளை பார்த்து பயப்படாமல் தைரியமாக அவள் எதிர்கொள்வாள் என்று அறிந்திருந்தான்.
அவனது செயலாளர் சம்யுக்தா வந்திருப்பதாக அலுவலக உள்பேசியில் சொன்னாள். அவளை உள்ளே அனுப்ப சொல்லி விட்டு கதவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சில விஷயங்கள் அவனுக்கு எப்போது பார்த்தாலும் அலுக்காதவையாக இருந்தன. அலை ஒடி வந்து மோதும் கடல், மெல்ல அசைந்து வரும் கருத்த யானை, இருண்ட வானில் மின்னும் நட்சத்திரங்கள், சிறு வயதில் அவன் ராதிகாம்மாவுடன் விளையாடும் வீடியோ பதிவுகள், மனதை நிறைக்கும் சம்யுக்தா.
கதவை சன்னமாக தட்டிவிட்டு உள்ளே வந்த சம்யுக்தாவை சிரிப்புடன் ஆழ்ந்து பார்த்தான். தனது உணர்வுகளை வெளிகாட்டாமல் இயல்பாக வைத்திருக்க அவள் முயல்வது தெரிந்தது.
"ஹாய்" என சொன்னவளிடம் எதிரே இருந்த இருக்கையை காண்பித்தான். அவள் அமர்ந்தவுடன், தனது செயலாளரை அழைத்தவன், "காப்பியா, டீயா" என அவளைப் பார்த்து கேட்டான்.
வேண்டாமென்று மறுக்க நினைத்தவள், "காப்பி" என்றாள். "காப்பி வித்..." என போனில் சொன்னவன், அவளைப் பார்த்து "சுகர் ஆர் சால்ட்?" என அமர்ந்த குரலில் கேட்டான்.
அவன் தன்னை வேண்டுமென்றே சீண்டுவதை உணர்ந்து, பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கியவள் பற்களை கடித்து தன்னை அமைதியாக்கி கொண்டு, "சுகர்" என்று சொன்னாள்.
"டூ காப்பி வித் சுகர்"
"டெண்டல் இன்ஷுயர்ன்ஸ் இருக்கா?" என கேட்டவனை புரியாமல் பார்த்தாள்.
"பல்லை இந்தளவு ஸ்டிராங்கா கடிச்சா, பல் உடைஞ்சிரும்" என நக்கலாக சொன்னாள்.
'சம்யு கண்ட்ரோல் யுவர்செல்ப்' என்று மனதில் சொல்லியபடி அவனை பார்த்து வலிந்து புன்னகைத்தாள்.
"இதுக்கு நீ சிரிக்காமேயே இருந்திருக்கலாம், அதுவே பெட்டராக இருந்தது" என அழுந்த சொல்லிவிட்டு தன் மடிகணிணியில் கவனத்தை திருப்பினான்.
சித்தார்த்தா தன்னிடம் இப்படி பேசுகிறான் என நம்ப முடியாமல் அவனை பார்த்தாள். அவன் கூப்பிடவுடன் வந்தது தன்னுடைய தப்பு என்று தன்னையே நொந்து கொண்டாள்.
அவனது செய்லாளர் காப்பியை கொண்டு வந்து வைத்து விட்டு சென்றவுடன், அதை எடுத்து மெதுவே பருகினாள்.
"காப்பி எப்படியிருக்கு?" என கேட்டான். தன்னிச்சையாக நன்றாக இருப்பதாக தலையசைத்தாள்.
"உங்களோட காப்பி எஸ்டேடிலிருந்து வந்தது தான்" என சொன்னவனிடன், "எங்க காப்பி எஸ்டேட்டா? அப்பாவுக்கு காப்பி எஸ்டேட் இல்லை. தோட்டம் தான் இருக்கு" என அழுத்தமாக சொன்னாள்.
"நான் சொன்னது உங்கப்பாவோட எஸ்டேட் இல்லை. சசியோட காப்பி எஸ்டேட்" என நிதானமாக சொன்னான்.
"சசியோட எஸ்டேட், எப்படி எங்க எஸ்டேட் ஆகும்?" என எரிச்சலாக கேட்டாள்.
"நீ அவனை தானே கல்யாணம் செஞ்சிக்க போறே? அப்படினா சசியோட சொத்தெல்லாம் உன்னுடையது தானே?" என கூர்மையாக அவளைப் பார்த்து கேட்டான்.
"நான் சசியை கல்யாணம் செஞ்சிக்க போறேன் என்று உங்களிடம் யார் சொன்னாங்க?" என கடுப்பாக கேட்டாள்.
"வேற யார் சொல்லணும், இன்னியோட நான் சொன்ன இருபது நாள் முடிய போகுது. இது வரைக்கும் உங்கிட்டேயிருந்து பாஸிட்டாவா ஒரு பதிலும் இல்லை. யோசிச்சி பார்த்தேன், நானாவது இரண்டு வருஷமா தான் உனக்காக காத்திட்டிருக்கேன், சசி இருபது வருஷமா காத்திட்டிருக்கான். நீ அவனை காதலிக்கலைனா கூட பரவாயில்லை. அவன் தான் சீனியர், ஸோ நீ அவனை கல்யாணம் செஞ்சிக்கிறது தான் சரியாயிருக்கும் என்று நினைச்சேன்" என சீரியசான குரலில் சொன்னான்.
"நீங்க என்ன வேணா நினைச்சிக்குங்க, ஐ டோண்ட் கேர்" என படபடவென்று பொரிந்தாள் சம்யுக்தா.
"ஒ, அப்போ அவனும் இல்லையா? ஸோ சாட். அப்போ வேற யாராவது புதுசா? அவனையாவது ஏமாற்றாம இருந்தா சரி" என அவன் சொல்லும் போதே சேரை தள்ளி விட்டு எழுந்தாள் சம்யுக்தா.
"இதை பத்தி தான் பேச கூப்பிட்டிங்கனா, நான் கிளம்பறேன்" என சொல்லும் போதே அவளது கண்கள் சிவந்து மூச்சு வாங்கியது.
"கூல் சம்யுக்தா. உட்காரு" என மெதுவான குரலில் சொன்னதும் எதையோ முணுமுணுத்தபடி உட்கார்ந்தாள்.
"யசோசக்தியைப் பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?" என ஆர்வத்துடன் கேட்டான்.
"நான் ஆபிஸில் கேட்டேன். எனக்குத் தெரிஞ்ச மீடியா காண்டாக்ட்ஸ் கிட்டேயும் கேட்டேன். யாருக்கும் தெரியலைனு சொல்லிட்டாங்க" என தனது நகங்களைப் பார்த்தபடி சொன்னாள்.
"ஒ, இஸிட்?" என வருத்தமான குரலில் சொன்னவன், "உனக்கு அவரை தெரியுமா?" என அவளைக் கூர்மையாக பார்த்தபடி சொன்னான்.
"யாரை தெரியுமா?" என கேட்டவளிடமிருந்து தனது பார்வையை விலக்காமல் அவளருகே வந்து மேஜையில் சாய்ந்து நின்றான்.
"அதான், அந்த கட்டுரை எழுதினாரே யசோசக்தி" என ஆழ்ந்த குரலில் சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான்.
தனது இதயம் வழக்கத்திற்கு மாறாக வேகமாக அடிப்பதை உணர்ந்தவள், "எனக்கு.." என சொல்லி விட்டு தனது விரல்களை கைகளால அழுத்தியப்படி "தெ.. தெ.. தெரியாது" என சொல்லும் போதே அவளது நாக்கு திக்கியது.
"ஒ.. அப்படியா?" என அழுத்தமாக சொல்லி விட்டு ஒரு நிமிடம் மெளனமாக அவளையே நிதானமாக பார்த்தாள்.
அந்த குளிருட்டப்பட்ட அறையிலும் அவளுக்கு நெற்றியிலும், உதட்டின் மேற்புறத்திலும் வேர்த்திருந்தது. தொண்டை குழி வேகமாக ஏறி இறங்கியதில் அவள் பதற்றமாக இருக்கிறாள் என்பது தெரிந்தது. அவளது கண்கள் தாழ்ந்து அவளது விரல் நகத்தையே பார்த்தபடி இருந்தன.
"ஆல்மோண்ட் பிங்க்" என மெதுவெ சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளைப் பார்த்து வலிந்து புன்னகைத்தவன், "உன் நைல் கலர்" என மென்மையாக சொன்னான்.
உடனே தன்னை சமன்படுத்தியவன், "ஒகே, யசோசக்தியை பத்தி தெரிஞ்சக்க தான் கூப்பிட்டேன்" என சொல்லிவிட்டு நிமிர்ந்தான்.
சரியென்று தலையசைத்து விட்டு எழுந்தவள், கதவை நோக்கி இரண்டடி வைத்தவளை, "சம்யுக்தா.." என்ற சித்தார்த்தின் குரல் அழைத்தது.
ஒரு நொடி கண்களை மூடி திறந்தவள், இன்று போனில் அழைத்த போதும், இப்போது பேசும் போதும், சித்தார்த் அவள் பெயரை சம்யுக்தா என்று சொன்னது நினைவில் வந்தது. கடற்கரையில் மிதரனுடன் பார்த்தது முதல் அவளை யுக்தா என்றே அழைத்தது ஞாபகத்திற்கு வந்தது. அப்படியென்றால் முழுவதும் விலகி விட்டானா என்று நினைக்கும் போதே நெஞ்சில் முள் குத்துவது போல் சுருக்கென்று வலித்தது.
தனது வலியை வெளி காட்டாமல் அவனை திரும்பி பார்த்தாள். அவளருகே வந்தவன், "ஸாரி, நான் உன்னை கடத்தியிருக்க கூடாது. ஆனா.." என்று தோளை குலுக்கியவன், "நீ என்னை விரும்பலைனாலும் பரவாயில்லை, அட்லீஸ்ட் என்னை மன்னிச்சிடு", முடிஞ்சளவு அதை பத்தியும் மறந்திடு" என ஆழ்ந்த குரலில் அவளது கண்களைப் பார்த்து சொன்னான்.
அவள் எதுவும் பேசாமல் மெளனமாக இருக்க, "நீ என்னை மன்னிச்சிட்டேனு தெரிஞ்சா தான் என்னால் நிம்மதியா இருக்க முடியும். மறந்துட்டேனு தெரிஞ்சா சந்தோஷப்படுவேன்" என மென்மையான குரலில் சொன்னான்.
"சித்தார்த், நான் உங்களை எப்பவோ மன்னிச்சிட்டேன். ஆனா.." என சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள்.
"ஆனா.." என அவன் கேட்க கதவருகே சென்றவள், "நான் உயிரோட இருக்கிற வரைக்கும் மறக்க முடியாது" என சொன்னவளின் கண்களின் ஒரத்தில் நீர் துளிர்த்தது.
அவளது கண்களின் ஒரத்தில் துளிர்த்த நீரை கண்டதும், தாங்காமல் அவளருகே வந்து நின்றான்.
"ஸாரி, எனக்கு இது மேலே உங்கிட்ட எப்படி மன்னிப்பு கேட்கிறது என்றே தெரியலை" என சொன்னவனது குரல் உடைந்து போனது.
"யுக்தா..: என மென்மையாக அழைத்தவன், "நான் உங்கிட்டே ஒண்ணு கேட்கட்டுமா?" என கேட்டான்.
அவள் மெளனமாக இருக்க, "நான் உன்னை கடத்தாம இருந்திருந்தா, சசிக்கு முன்னாடி உங்கிட்ட வந்து பிரபோஸ் பண்ணியிருந்தா என்னை விரும்பி இருப்பியா?" என கேட்டவனது கண்கள் அலைபாய்ந்தன.
"சித்தார்த், நடந்து போனதை பத்தி எதுவும் பிரயோஜனம் இல்லை" என தாழ்ந்த குரலில் சொன்னாள்.
"நீ என்னை மன்னிச்சிட்டேன் என்று சொன்னா, என்னை ஏன் கல்யாணம் செஞ்சிக்க மறுக்கிறே?' என கேட்டபடி அவளது மிக அருகே வந்து நின்றான்.
"சி..த்..தா..ர்.த்.." என அதுக்கு மேலே எதுவும் சொல்ல முடியாமல் வார்த்தை தொண்டைக்குள் சிக்கி கொண்டது.
அவன் இன்னும் நெருங்கி வர கதவுடன் சேர்ந்து ஒட்டி கொண்டாள். அவளது முகத்தின் இருபுறமும் கைகளை வைத்தவள், குனிந்தவனது மூச்சு காற்று அவள் மேல் பட்டது.
காணாமல் போயிருந்த தனது தைரியத்தை திரட்டி, "நீங்க ஜெண்டில்மேன் என்று நினைச்சேன்" என தாழ்ந்த குரலில் சொன்னாள்.
"உன் அனுமதியில்லாம என் விரல் கூட உன் மேலே படாது" என மென்மையாக சொன்னவனின் குரல் அவளை ஏதோ செய்தது.
"யுக்தா.." என அழைத்தவன், "எங்கிட்டே என்ன பிடிக்கலை?" என மெதுவான குரலில் கேட்டான்.
அவனை பார்க்க முடியாமல் தனது விழிகளை தாழ்த்தியவள், மெளனமாக நின்றாள்.
"என்னொட உயரம்?"
இல்லை என தலையசைத்து மறுத்தவளிடம், "என் கலர் பிடிக்கலையா?" என கேட்டான்.
இல்லை என அதற்கும் தலையசைத்து மறுத்தாள்.
"என் படிப்பு, வேலை?' என கேட்டதற்கும் தலையசைத்து மறுத்தாள்.
"ஒ, அம்மா அப்பா இல்லாத அனாதை என்பதலா?" என நிதானமாக கேட்டவுடன் வேகமாக நிமிர்ந்த்வள் அவனது கண்களை பார்த்து, "சே, கண்டிப்பா.. கண்டிப்பா அது இல்லை" என சொல்லும் போது அவள் குரலும் உடைந்து போனது.
அவனது நீல நிற கண்களிடமிருந்து தன் பார்வையை விலக்க முடியாமல் தவித்துப் போனாள். எப்போது போல் அவனது கண்களை பார்த்தவுடன் எதையும் யோசிக்க முடியாமல், இதயம் நெகிழ்ந்து போனாள்.
"அப்போ சித்தார்த் என்ற பெயர் தான் பிடிக்கலை ரைட்?" என ஆழ்ந்த குரலில் அவன் கேட்டவுடன் குழுப்பத்துடன் அவனை பார்த்தாள்.
அவளது சிவந்த இதழ்களையும், அதன் மேல் துளிர்த்திருந்த வியர்வை துளிகளையும் ஆசையுடன் பார்த்தவன், "யசோசக்தி.. அப்படினா என்ன?" என கிசுகிசுத்த குரலில் கேட்டான்.
அவள் பதில் சொல்லாமல் மெளனமாக இருக்க, அவளது சிவந்த இதழ்களை நோக்கி குனிந்தான்.
"ப்ளீஸ் சித்து.." என கிசுகிசுப்பான குரலில் சொன்னவளிடம், "யசோசக்தினா என்ன?" என கரகரத்த குரலில் கேட்டான்.
"யசோ.. யசோ.. யசோத்ரா.." என திக்கியப்படி சொன்னாள்.
"அப்படினா.." என இன்னும் குனிந்தவனிடம், "புத்தர், அதான் சித்தார்த்தோட மனைவி பெயர் யசோதரா" என மூச்சு வாங்கியப்படி சொன்னவளிடம், "அப்போ சக்தி.." என கேட்டான். "சக்தி.. சக்திவேல், அதான் யசோசக்தி" என சொல்லிவிட்டு கண்களை மூடி கொண்டாள்.
அவளை விட்டு விலகி நின்றவன், அவளையே ஆழ்ந்து பார்த்தவன் ஏதோ சொல்வதற்குள் அவனது செல்போன் அடித்தது.
"ஹலோ விக்ரம்.." என சொன்னான். விக்ரம் சொன்னதை கேட்டதும் அவனது முகம் மாறுதலைடைய. "தாங்க்ஸ் விக்ரம்" என சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான்.
சம்யுக்தா தன்னை சமன்படுத்தி நிமர்வதற்குள், அவளருகே வந்து தனது இருகையினாலும் வேகமாக அவளது முகத்தை நிமிர்த்தியவன், தனது வலிமையான உதடுகளால், அவளது மென்மயான இதழ்களை அணைத்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro