Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Marukkathe Nee Marakkathe Nee - 22


மறக்காதே நீ மறுக்காதே நீ - 22
பதினாறாம் நாள்...

காலை ஒன்பது மணி

'குட்மார்னிங் மிஸ் சம்யுக்தா வசந்தன், ஜஸ்ட் ஐந்து நாட்கள்'

என்ற மெசெஜை அனுப்பி விட்டு சித்தார்த் நிமிர்ந்த போது, பூஜையறையிலிருந்து திருமாறன் வந்தான்.

"வா சித்தார்த், காப்பி சாப்பிட்டிங்களா?" என கேட்டவர், சோர்வாக தலை அசைத்தவனை யோசனையுடன் பார்த்தார்.

"என்னாச்சு, விக்ரம் ஏதாவது கண்டுபிடிச்சானா?" என கேட்டார்.

இல்லை என மறுத்தவனை கவலையுடன் பார்த்தவர், கண்களை மூடி யோசித்தார்.

"சித்தார்த், நான் எங்கிட்ட எல்லா ஆவண்ங்களையும் விக்ரமிடம் கொடுத்துட்டேன். அப்போ சர்வீஸிலிருந்த போலிஸ்காரங்க எல்லாரோட விவரங்களையும் கொடுத்துட்டேன்" என நிராசையாக சொன்னார்.

"தாங்க்ஸ் சார். ஆனா அது எல்லாமே முரளிதரன் சந்தன கடத்தியிருக்கார் என்பதற்கான ஆதாரங்களா தான் இருக்கு. எதுவுமே என் அப்பாவை அவர் தான் கொல்ல சொன்னார் என்பதற்கு ஆதாரமா இல்லை" என விரக்தியுடன் சொன்னான்.

"நீ உன் வழியில் எதுவும் முயற்சிக்கலையா?' என கேட்டார்.

"அதையும் முயற்சி செஞ்சோம். நாதன் அங்கிள் அந்த பழைய கேஸை ஒபன் செய்ய கூட முயற்சி செஞ்சார். தாத்தா தான் வேண்டாம் என்று சொல்லிட்டார். அவர் எந்த மிரட்டலுக்கும் மசிய மாட்டேங்கிறார். அவருக்கு உடல்நிலை வேற சரியில்லை. ஏதாவது தடாலடியா செஞ்சு, அவருக்கு ஏதாவது ஆயிடிச்சுனா, பிரச்சனை பெரிசாயிடும். எனக்கு அவருக்குத் தண்டனை தான் வாங்கி தரணுமே தவிர, அவரை கொலை செய்யறதில்லை" என ஆயாசமாக சொன்னான்.

"நான் கொடுத்த முரளிதரனோட போன் கால் ரெக்கார்டிங்கெல்லாம் என்னாச்சு" என ஆர்வமாக கேட்டார்.

"ஆம் அதையெல்லாம் கேட்டோம். அதிலேயும் எதுவும் உருப்படியா இல்லை. இன்னும் கேட்டா, கொலை நடக்கிறதுக்கு இரண்டு நாள் முன்னாடியிலிருந்து அவர் தன் வீட்டுப் போனை உபயோகப்படுத்தலை" என வெறுப்பாக சொன்னான்.

"சித்தார்த். ஆறு மாசம் முன்னாடி அந்த சந்தன கடத்தலை பற்றி மும்பையில் இருநது வெளிவர ஒரு ஆங்கில பத்திரிகையிலே தொடரா எழுதினாங்க. இப்போ இருக்கிற முக்கியமான அரசியல்வாதிக்கும் அதில் சம்பந்தம் இருக்கும்னு எழுதியிருந்தாங்க. நிறைய ஆராய்ச்சி செஞ்சு அதை எழுதியிருந்தாங்க. கோர்ட்டில் அந்த பத்திரிகை அவர் சந்தன கடத்தல் கும்பலோட பேசினதுக்கு ஆதாரம் கொடுத்திருந்தாங்க. நீ வேணா அவங்க கிட்ட பேசி பாரேன்" என சொன்னார்.

"ஒகே, அந்த பத்திரிகை பெயர் சொல்லுங்க" என்றான்.

"இரு வரேன்" என உள்ளே எழுந்து சென்ற திருமாறன், திரும்பி வரும் போது கையில் பழைய பத்திரிகையுடன் வந்தார்.

கடற்கரையில் இருந்து வீசிய ஈரமான இரவு நேர காற்று யதுநந்தனின் தலைமுடியை கலைத்துச் சென்றது

காலையிலிருந்து வானம் கருத்து மழை வருவது போலவே இருந்தது. வானம் கருத்திருந்ததால் மிகையான ஓளி அந்தி நேரத்தை வெளுப்பாக்கியது.

தனது பின்னே கார் நிற்கும் ஒசை கேட்டு திரும்பி பார்த்த யதுநந்தன், "ஹாய் ஸ்மிருதி, குட் ஈவனிங்" என்றான்.

"ஹலோ" என்று சொன்னவளிடம் தனது கையிலிருந்த கிஃப்ட் பார்சலை நீட்டினான்.

அதை கையில் வாங்காமல் அவனை பார்த்தவள், "நந்தன் எதுக்கு என்னை சந்திக்கனும் என்று சொன்னீங்க" என கேட்டாள்.

"ஸ்மிருதி, நீ தெளிவா யோசிக்கிற பொண்ணு, உனக்கு என்னை பிடிச்சிருந்தா இத்தனை நாளில் எனக்கு சம்மதம் சொல்லியிருப்பே" என தனது கையை தளர்ந்து தொங்க போட்டவன், அவளை நிமிர்ந்து பார்த்தான்.

கேள்வியுடன் அவனை பார்த்தவளை, "ஐ ஆம் நாட் தட் லக்கி" என உதட்டைப் பிதுக்கு தோளை குலுக்கியவன், "தட்ஸ் ஃபைன். ஆனா, நாம் நண்பர்களா இருக்கலாம் என்று உன்னை மாதிரி என்னால சொல்ல முடியாது. முடிஞ்ச வரைக்கும் இனிமே சந்திக்காம இருப்போம். அப்படியும் சந்திக்க நேர்ந்தா ஒரு ஸ்மைலோட நிறுத்திக்கலாம்" என ஆழ்ந்த குரலில் சொன்னான்.

"உனக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கி தரணும் என்று தோணிச்சு. இது என்னோட முதல் கிஃப்ட்டா, கடைசி கிஃப்ட்டா என்று நீ தான் முடிவு செய்யணும்" என்றான்.

அவனை நிமிர்ந்து புரியாமல் பார்த்தவளை, "இது நான் என் அர்த்தாங்கினிக்கு வாங்கி தர முதல் கிஃப்ட்டா இருக்கலாம், இல்லை நான் விரும்பின பொண்ணுக்கு வாங்கி தந்த முதலும் கடைசியுமான கிஃப்ட்டாவும் இருக்கலாம்" என நெகிழ்ந்த குரலில் சொன்னவன், கிஃப்ட்டை நீட்டினான்.

அவனிடமிருந்து கிஃப்ட்டை வாங்கியவள் அதை பிரிக்கும் போதே, அது ஒரு புத்தகம் என்று உணர்ந்தாள். பிரித்த போது, அது சன் சூவின் 'ஆர்ட் ஆஃப் வார்" என்ற புத்தகம் இருந்தது.

"இந்த புக் எல்லா துறைக்கும் பொருந்தும், காதல் உட்பட. எதையாவது ஜெயிக்கணும் என்று நினைக்கிறவங்க, இந்த புத்தகத்தை படிக்கலாம்" என்று சொன்னான்.

"தாங்க்ஸ். எனக்கு இந்த புக் பிடிக்கும் என்று நினைக்கிறேன்" என மென்மையான குரலில் சொன்னாள் ஸ்மிருதி.

"என்னை பிடிக்கலைனாலும், என் கிஃப்ட்டாவது உனக்குப் பிடிக்கட்டும்" என உடைந்த குரலில் சொன்னவனிடம், "நந்தன், உங்களை பிடிக்காம இல்லை. நாம நல்ல நண்பர்க்ளா.." என அவள் சொல்லும் போதே,, "நோ ஸ்மிருதி. அது முடியாது" என மறுத்து கண்களை மூடி திறந்தான்.

"டேக் கேர், பை" என அவளிடம் கை நீட்டினான். என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு நொடி திகைத்தவள், "நந்தன்.." என அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாமல் அவனது கையை பற்றினாள்.

மழை வருவதற்கு அறிகுறியாக மின்னல் மின்னி, இடி இடித்தது. லேசான தூறல் மேகத்தில் இருந்து கீழிறங்கி மண்ணை நினைத்தது. மழை துளி ஒன்று இணைந்திருந்த அவர்களது கையில் விழுந்தது.

ஸ்மிருதிக்கு மனதில் தயக்கமும் ஏக்கமும் ஒன்றாக தோன்றின. இனி யதுநந்தனை பார்க்க முடியாது, இவனது அதிரடியான பேச்சுகளை கேட்க முடியாது என நினைக்கும் போதே சொல்ல தெரியாத வெறுமை சூழ்ந்தது.

"ஸ்ம்ருதி, எங்க பூரணி பாட்டி கண்ணனோட காதலை பற்றி சொல்லியிருக்காங்க. கண்ணனால ராதையை கல்யாணம் செஞ்சிக்க முடியாம போச்சு. ஆனா அவர் பதினாறாயிரம் பொண்ணுங்களை கல்யாணம் செஞ்சிக்கிட்டாராம். ஏன் தெரியுமா?' என கேட்டான்.

தெரியாது என தலையசைத்தவளிடம், "அவர் தான் கல்யாணம் செஞ்சிக்கிட்ட அத்தனை பெண்களிலும் ராதையை தேடினாராம். இனிமே பார்க்கிற, பழகிற எல்லா பெண்களிலும், நான் என் ஸ்மிருதியை தான் தேடுவேன்" என தனது கையை விடுவித்தவன், காரை கிளப்பிக் கொண்டு சென்றான்.

அவனது கார் தனது கண்களிலிருந்து மறையும் வரை அதையே பார்த்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தாள் ஸ்மிருதி.

வெறுமையான மனதுடன், எதையும் யோசிக்க முடியாமல் வீட்டிற்கு வந்தாள் ஸ்மிருதி.

"ஸ்மிருதி,, சாப்பிடறியா?" என கேட்ட மலர்விழியிடம், "பசிக்கலைம்மா" என சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றாள்.

உடை மாற்றாமல் அப்படியே படுக்கையில் விழுந்தவள், கண்களை மூடி கொண்டாள். முதல் முறையாக மூடிய கண்களுக்குள் யதுநந்தன் தெரிந்தான்.

தலையை உலுக்கி தன்னை சமன்படுத்தி அவனது நினைவுகளை உதறியவள், உடை மாற்றி சாப்பிட சென்றாள்.

சாப்பாடு பறிமாறியப்படி மலர்விழி, "ஸ்மிருதி, நீ யாரையாவது விரும்பறியா?" என கேட்டார்.

"என்னம்மா திடீரென்று இப்படி கேட்கிறீங்க? அப்படி யாராவது இருந்தாங்கனா உங்க கிட்ட தான் முதலில் சொல்லியிருப்பேன்" என சொல்லும் போதே யது நந்தனின் முகம் நினைவில் வந்து போனது.

"எனக்குத் தெரியும், இருந்தாலும் உங்கப்பா கேட்க சொன்னார், அதான் கேட்டேன்" என சிரித்தபடி சொன்னார்.

எதுவும் சொல்லாமல் சாப்பிட்டவளிடம், "ஞாயிற்று கிழமை நம்ம வீட்டுக்கு டின்னருக்கு ஒரு பையன் வந்திருந்தானே, நல்ல உயரமா, சுருட்டை முடியோட வந்தானே, அவன் பெயர்.." என யோசித்தார்.

"யதுநந்தன்" என சொல்லிவிட்டு சாப்பிடுவதை தொடர்ந்தாள்.

"கரெக்ட். யதுநந்தன் வீட்டுக்கு அப்பா நேத்து போனாங்களாம். அவங்க தாத்தா ஈரோடு பக்கம் போலிருக்கு. உங்க தாத்தா, அதான் எங்கப்பாவை அவருக்கு நல்லா தெரியுமாம்" என மகிழ்ச்சியாக சொன்னார்.

"ஒ, அப்படியா?" என சுவராசியமின்றி சொல்லிவிட்டு சாப்பிடுவதை தொடர்ந்தாள்.

"அவர் பேரனுக்கு அதான் நம்ம வீட்டுக்கு வந்தானே அந்த பையனுக்குப் பொண்ணு பார்த்திட்டிருக்காராம்" என சொல்லும் போதே சாப்பிட்டு விட்டு எழுந்தாள்.

"ஸ்மிருதி, உங்கப்பாவுக்கு யதுநந்தனை பிடிச்சிருக்கு. எனக்கும் அவனை பிடிச்சிருக்கு. உனக்கும்..." என அவர் சொல்லும் போதே அவரை முறைத்தாள்.

"உனக்கும் பிடிச்சிருந்தா பார்க்கலாம்னு.." என சுருதி இறங்கிய குரலில் சொன்னவர், "உனக்கு இஷ்டமில்லைனா வேணாம்" என சொல்லி விட்டு உள்ளே சென்றார்.

தனது அறைக்கு சென்றவள் அவன் கொடுத்த புத்தகத்தை பிரித்தாள். முதல் பக்கத்தில் ஒரு பத்திக்கு மேல் படிக்க முடியாமல் மூடி வைத்தாள். டிவியில் அவளது நியூஸ் சேனலில் நிகழ்ந்து கொண்டிருந்த அரசியல் கல்ந்தாய்வை சலித்தபடி பார்த்தாள். எந்த சானலையும் பார்க்க முடியாமல், டிவியை அணைத்து விட்டு கண்களை மூடி தூங்க முயன்றாள்.

தூக்கம் வராமல், திரும்பவும் அவன் கொடுத்த புத்தகத்தை கையில் எடுத்தாள், படிக்காமல் அதை கையில் அப்படியே வைத்திருந்தவள், தனது மொபலை இன்னொரு கையில் எடுத்தாள்.

டிங்டிங் என்ற தனது மொபைலில் மெசேஜ் வந்து சத்தத்தில் கவனம் கலைந்த யதுநந்தன், வெறுப்புடன் கரையை முட்டும் கடலின் அலைகளை வேடிக்கை பார்த்தான்.

வெளியே மெல்லிய சாரலாக மழை பொழிந்து கொண்டிருந்தது. காதலில் விழுந்து புலம்பி தவிக்கும் நண்பர்களையும், தோழிகளையும் நக்கலடித்திருக்கிறான். ஒன்றரை வருடமாக தினமும் வீட்டில் சம்யுக்தாவை நினைத்திருக்கும் சித்தார்த்தை கலாய்த்திருக்கிறான். அந்த நிலைக்கு தானும் தள்ளப்படுவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை.

நாளைக்கே திரும்பவும் ஊருக்கு கிளம்பி விட வேண்டும் என்று நினைத்தான். ஸ்மிருதியை பார்க்காமல, பேசாமல் சென்னையில் இருக்க முடியும் என்று தோன்றவில்லை. சித்தார்த்தின் திருமண தேதி முடிவான பிறகு சென்னை வந்தால் போதும் என நினைத்தான். அது கூட வேண்டாம், திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு வந்து, திருமணம் முடிந்தவுடனே கிளம்பி விட வேண்டும் என நினைத்தான். சித்தார்த் சொன்னால் புரிந்து கொள்வான், அம்மாவை சமாளிப்பது தான் கஷ்டம், பொய் சொன்னால் எளிதாக கண்டு பிடித்து விடுவார். அவரை சித்தார்த்தால் மட்டுமே சமாளிக்க முடியும்.

நாளை காலையிலே ஏதாவது ஃபிளட்டை புக் செய்ய தனது செகரட்டரியிடம் சொல்ல போனை எடுத்தான்.

ஸ்மிருதியிடம் இருந்து முதல் முறையாக மெசெஜ் வந்திருப்பதைப் பார்த்து அதை படிப்பதா, வேண்டாமா என யோசித்தான். திரும்பவும் நண்பர்களாக இருக்கலாம் என்று சொல்லியிருப்பாள் என நினைத்தபடி அதை தொட்டுத் திறந்தான்.

நான் படிக்க விரும்பும் புத்தகங்கள்

1. நோட்புக் - நிகோலஸ் ஸபார்க்ஸ்
2. நீலம் - ஜெயமோகன்
3. தி டான்ஸ் ஆஃப் சிவா - ஆனந்த குமாரசாமி
4. யதுநந்தன் - சுநீதி கெளதமன்
என்றிருந்த மெசேஜை படித்து ஒரு நொடி ஒன்றும் புரியாமல் விழித்தவன், அடுத்த நொடி பாலகனிக்கு ஓடி சாரல் மழையில் நனைந்தபடி, 'ஹே' என்று கத்தியபடி போனை மேலே தூக்கி போட்டுப் பிடித்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro