Marukkathe Nee Marakkathe Nee - 20
மறக்காதே நீ மறுக்காதே நீ - 20
பதினான்காம் நாள்...
அதிகாலை நாலு மணி......
சித்தார்த் இரவு முழுவதும் தூக்கம் வராமல் பால்கனியில் அலைந்து கொண்டிருந்தான். கண்கள் சிவந்து, தலைமுடி கலைந்து, நிலையில்லாமால் ஒரு இடத்தில் நிற்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
நேற்று சம்யுக்தாவுடன் எந்த பிரச்சனையில்லாமல், எந்த சண்டையும் இல்லாமல் இயல்பாக பேசி கொண்டிருந்தது அவனுக்கு உலகத்தையே வென்று விட்டது போலிருந்தது. மேகங்களில்லாத பெளர்ணமி இரவில், சலனமில்லாத நதியின் மேல், இனிய தென்றல் வீச, சத்தமில்லாமல் செல்லும் படகின் மேல் அவர்கள் இருவரும் தங்கள் மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்ள தொடங்கியிருந்தனர்.
எப்போதும் இயல்பாக இல்லாமல், இறுக்கத்துடன் இருக்கும் சம்யுக்தா, நேற்று தான் முதன் முதலாய் இயல்பாய் இருந்தாள். பூங்கொத்தை கையில் வாங்கி சிரிப்புடன் நன்றி சொன்னாள். அவளை முதலில் எப்போது அவன் பார்த்தான் என இயல்பாய் கேட்டாள். கண்களில் வெட்கம் தெரிய அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தாள். இன்னும் ஒரு ஐந்தே ஐந்து நிமிடம் சென்றிருந்தால், சம்யுக்தா அவனுக்குச் சம்மதம் சொல்லியிருப்பாள் என்று நம்பினான்.
சசிதரன் அந்த நேரத்தில், அந்த உணவகத்திற்கு வருவான் என்றோ, அவர்கள் இருவருடனும் பேசுவான் என்றோ எதிர்பார்க்கவே வில்லை.
"ஹாய் சம்யு, ஹலோ சித்தார்த்" என சசிதரன் சொன்னவுடன், ஒரு விநாடி நீ எங்கடா இங்கே என சித்தார்த்திற்கு தோன்றியது. நம்முடைய பிளான் ஏ, பிளான் பி என்று எதிலும் இவன் இல்லவே இல்லையே, எங்கிருந்துடா வரீங்க நீங்கெல்லாம் என நினைத்தான்.
வெட்கத்தில் பார்வையை தழைத்திருந்த சம்யுக்தாவின் முகம் மாறிவிட்டிருந்தது.
"ஹாய் சசி" என உணர்ச்சியற்ற குரலில் சொன்னவள், அவனை பார்த்து வலிந்து சிரித்தாள்.
"சித்தார்த் மூணு நாள் முன்னாடி ஈவனிங் கால் செஞ்சி டின்னருக்கு கூப்பிட்டே, அது பாதியிலே கட் ஆயிடிச்சு. நான் திரும்பவும் கால் செஞ்சேன். நீ எடுக்கவேயில்லை. அதற்குப்புறம் நீ கூப்பிடவே இல்லை" என சொன்னான் சசிதரன்.
சம்யுக்தாவிற்கு மனதின் மூலையில் அழுத்திக் கொண்டிருந்த பாரம் இறங்கியது போல் உணர்ந்தாள். சித்தார்த் அவளை மிரட்டுவதற்காக தான் சசியுடன் நின்று போன திருமணத்தை நடத்துவதாக சொல்லியிருக்கிறான். சசிதரனுடன் அவன் பேசவில்லை என்பதே நிம்மதியாக இருந்தது.
"ஸாரி சசி, மறந்துட்டேன்" என அவன் சொல்லும் போதே, சம்யுக்தாவின் இதழ்களின் ஓரத்தில் கிண்டலாக ஒரு சிரிப்பு படர்ந்தது. அவளுடைய மேல் பற்களால் தன் கீழ் உதட்டை லேசாக கடித்தபடி, கண்களில் சற்றே குறுகுறுப்புடன் சித்தார்த்தை பார்த்தாள். ஒரு நொடி அவளைப் பார்த்த சித்தார்த்திற்கு தான் சும்மா மிரட்டியதை கண்டுபிடித்து விட்டாளே என நினைக்கும் போதே, சூடாக இரத்தம் முகத்தில் பாய, அவனுடைய வெண்மையான முகம் சிவந்து விட்டது.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த சம்யுக்தாவிற்கு மூச்சு அடைப்பது போல் தோன்றியது. அவனது சிவந்த முகத்தை, அதில் அடர்சிவப்பாக மின்னும் அவனது மூக்கின் நுனியை தொட வேண்டும் என்று பரபரத்த கையை வலுகட்டாயமாக அடக்கி கொண்டாள். இது என்ன புது விதமான உணர்வு என நினைக்கும் போதே அவளது முகமும் சிவந்து விட்டது
"உட்காராலமா?" என சசிதரன் கேட்ட பின்பே இருவரும் இயல்பு நிலைக்கு வந்தனர்.
"ஷுயூர் சசி" என முதலில் தன்னிலை அடைந்த சித்தார்த் சொன்னவுடன், அவனருகே அமர்ந்தான்.
"சம்யு, சித்தார்த்துக்காக தான், நான் கூப்பிட்ட போது டின்னருக்கு வரலைனு சொன்னியா?" என ஆழ்ந்த குரலில் கேட்டவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.
"இல்லை வேலை இருந்தது. அப்பறம்.." என சம்யுக்தா சொல்லும் போதே, சித்தார்த்தின் முகம் மலர்ந்து விட கிண்டலாக அவன் உதடு வளைந்தது. சாய்ந்து அமர்ந்து தனது தலைமுடியை பின்னால தள்ளியவனின் கண்களில் ஒளி தெரிந்தது.
"சசி, உங்க ஆபிஸ் பக்கத்தில் இருக்கா?" என கேட்டான் சித்தார்த்.
"இல்லை, நானும் என் மலேசியன் பார்டனுரும் காபி குடிக்க வந்தோம். உங்க இரண்டு பேரையும் பார்த்தேன். ஒரு ஹாய் சொல்லிட்டுப் போகலாம் என்று வந்தேன்" என சொன்னவனது கண்கள் சம்யுக்தாவின் அருகே இருந்த பொக்கேவையும், டேபிள் மேலிருந்த கேண்டில் லைட்களையும் பார்த்தன.
"தட்ஸ் கிரேட் சசி" என புன்னகையுடன் சொன்னவன், "டின்னர் சாப்பிடறியா?' என கேட்டான்.
"இல்லை ஸிட், எனக்கு இப்போ டைம் இல்லை. நாம இன்னொரு நாள் போகலாம்" என்றான்.
"ஷ்யூர்" என சொன்ன சித்தார்த், "உன் மலேசியன் பார்ட்னர் வெயிட் செய்யறாரா?" என கேட்டான்.
"இல்லை, அவன் கிளம்பிட்டான்" என்றவன், "ஸிட், நான் போன் தடவை மீட் பண்ணும் போது சொன்னதை யோசிச்சி பார்த்தியா?' என கேட்டான்.
அவன் என்ன சொல்கிறான் என உடனடியாக புரிந்து கொண்ட சித்தார்த், "சசி, நாம இன்னொரு நாள் பேசலாம்" என அவனை தவிர்த்தான்.
"ஸிட், சீக்கிரம் முடிவு செஞ்சா தான், நான் இரண்டு பேருக்குமே நல்லது" என சொல்லியபடி சம்யுக்தாவை அர்த்தத்துடன் பார்த்தான்.
"என்ன?" என இருவரையும் பொதுவாக பார்த்தபடி ஆர்வத்துடன் கேட்டாள்.
"ஒண்ணுமில்லை யுக்தா. பிஸினஸ் பத்தி பேசிட்டிருந்தோம். சசி, வேலையிருக்குனு சொன்னியே, கிளம்பு" என பற்களைக் கடித்தபடி சொன்னான்.
"ஸிட், இது ஆஸ்திரிலியா பத்தி இல்லை. கடைசியா பேசினோமோ, அந்த விஷய்த்தைப் பத்தி சொல்றேன்" என சம்யுக்தாவை கூர்மையாக பார்த்தான்.
"சசி" என ஆழ்ந்த குரலில் அழைத்த சித்தார்த், "எனக்குப் புரியாம இல்லை. இப்போ அதை பத்தி பேச வேண்டாம். கிளம்பு" என சொன்னான்.
"ஒகே, ஃபைன்" என எழுந்த சசி, "பை சித்தார்த்" என சொன்னவன், "சம்யு, ஸிட் கிட்டே போன சண்டே பேசினேன். அவனுக்கு அவங்கப்பாவோட கேஸ் ஜெயிக்கணுமா, இல்லை நீ வேணுமா என்று கேட்டேன். அவன் யோசிச்சு சொல்றேன் என்று சொன்னான்" என நக்கலாக சிரித்தபடி வெளியே சென்றான்.
சித்தார்த் பொங்கி வந்த கோபத்தை கண்கள் மூடி அடக்கினான். கண்களை திறந்து பார்த்த போது, சசிதரன் சென்று விட்டான். எதிரே கறுத்த முகத்துடன் சம்யுக்தா அவனை நம்ப முடியாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
"யுக்தா, டோண்ட் பிலீவ் ஹிம். அவன் பொய் சொல்றான்" என அழுத்தமாக சொன்னான்.
"நீங்க லாஸ்ட் சண்டே அவனை மீட் பண்ணவே இல்லையா?" என கேட்டாள்.
"மீட் பண்ணினேன். ஆனா.." என அவன் சொல்லும் போதே, "சித்தாத், அவன் உங்க கிட்ட உங்கப்பா கேசா, நானா என்று கேட்டானா?" என கோபமாக கேட்டான்.
அவள் கோபமாக இருப்பதை உணர்ந்தவன், பேச வேண்டாம் என்று முடிவெடுத்து, ஆமென்று தலையசைத்தான்.
"நீங்க அதுக்கு என்ன பதில் சொன்னீங்க. எனக்கு உண்மையான பதில் வேணும் சித்தார்த்" என அலைபாய்ந்த கண்களுடன் கேட்டாள்.
"நான் பதில் எதுவும் சொல்லலை யுக்தா. அவன் அதை சொன்னவுடன் எனக்கு" என மெல்லிய குரலில் சொல்லும் போதே கண்களை மீறி கொட்டும் கண்ணீருடன் வேகமாக எழுந்து வெளியே சென்றாள்.
"யுக்தா.. " என அவளை அழைத்தபடி எழுந்திருக்கும் போதே, உணவக பெண்மனி உணவுடன் அவன் எதிரே வந்தாள்.
"ஸார்.." என அவள் அழைக்க, பர்ஸில் இருந்து பணத்தை எடுத்து எண்ணாமல் மேஜையில் போட்டவன், வேகமாக படிகளில் இறங்கி சென்றான்.
வாசலில் சென்று பார்த்த போது,, சம்யுக்தா சென்றிருப்பதை உணர்ந்தவன், பதற்றத்துடன் மித்ரனுக்கு போன் செய்தான்.
"ஸிட், டோண்ட் வொரி. அவளை ஷாடோ செய்ய காப்ஸ் அனுப்பியிருந்தேன். ஷீ இஸ் சேஃப்" என சொன்ன பின்பே அவனால் இயல்பாக மூச்சு விட முடிந்தது.
வீட்டிற்கு வந்து பல முறை முயன்றும் சம்யுக்தா போனை எடுக்கவேயில்லை. அவன் அனுப்பிய மெசேஜகளுக்கும் பதிலில்லை. கையெட்டும் தூரத்தில் இருந்து திரும்பவும் எட்ட முடியாத தொலைவுக்கு அவள் மறுபடியும் சென்று விட்டதாக் தோன்றியது.
என்ன செய்வதென்று புரியாமல் தவித்தவன், எப்போதும் போல் அவளுக்கு
'குட்மார்னிங் மிஸ் சம்யுக்தா வசந்தன், ஜஸ்ட் ஏழு நாட்கள்'
என்ற மெசெஜை அனுப்பினான்.
காலை பதினோரு மணிக்கு ஃபிரண்ட் டெஸ்க் பெண் யதுநந்தன் வந்திருப்பதாக இண்டர்காமில் சொன்ன போது,, ஸ்மிருதிக்கு கோபமாக வந்தது. அவனை உள்ளே அனுப்ப சொன்னவள், மடிகணிணியில் தன் கவனத்தைப் பதித்தாள்.
"ஹாய் ஸ்ம்ரு" என வந்தவனை சீரியசாக பார்த்து என்னவென்று புருவத்தைத் தூக்கினாள்.
"ஸ்வீட்டி நேத்து ஃபுல்லா உன்னை பார்க்கலை. அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்" என அமர்த்தலாக சொன்னான்.
"மிஸ்டர் நந்தன். இது ஆபிஸ், நான் வொர்க் செய்யற இடம். ப்ளீஸ் டிஸ்டர்ப் பண்ணாதீங்க" என நிதானமான குரலில் சொன்னாள்.
"ஒ ஐ ஆம் ஸாரி" என்றவன், "அப்போ வெளியே மீட் பண்ணலாமா?" என கேட்டான்.
"இன்னிக்கு வொர்க் நிறைய இருக்கு. மீட் பண்ண முடியும்னு தோணலை. ஸாரி" என உணர்ச்சியற்ற குரலில் சொன்னாள்.
"ஒகே, ஃபைன். ஈவனிங் மீட் பண்ணலாம்" என கதவருகே சென்றான்.
"ஈவனிங் எப்போ வொர்க் முடியும்னு தெரியாது" என மடிகணிணியை பார்த்தபடி சொன்னாள்.
"வொர்க் முடிஞ்சு வீட்டுக்குத் தானே வருவே. அங்கே வெயிட் பண்ணறேன்" என நிதானமாக சொன்னான்.
"வாட், நான் எதுக்கு உங்க வீட்டுக்கு வர போறேன்" என எரிச்சலாக கேட்டாள்.
"நீ தான் லிவ் இன் ரிலேஷனில் நம்பிக்கை இல்லை என்று சொல்லிட்டியே. ஒரு நல்ல நாள் பார்த்து உன் கழுத்தில் தாலி கட்டி தான் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் ஸ்ம்ரு. நான் சொன்னது..." என சிரித்தபடி அவன் சொல்லும் போதே, "நந்தன், ஸ்டாப் இட்" என தன் குரலை உயர்த்தி சொன்னவள், "என் பொறுமைக்கு எல்லை இருக்கு" என வெறுப்பாக முடித்தாள்.
"இன்னிக்கு மிஸ்டர் இளம்செழியன் அவர் வீட்டுக்கு என்னை டின்னருக்கு கூப்பிட்டிருக்கார்" என சொல்லி விட்டு கதவை திறந்தான்.
"நந்தன், வெயிட் எ மினிட்" என அவசரமாக தனது சேரில் இருந்து எழுந்து வேகமாக அவனருகே வந்தாள்.
"அப்பாவா?" என நம்பமுடியாமல் கேட்டாள்.
"மிஸ்டர் இளம்செழியன் ஆஃப் செழியன் ஃபாபிரிக்ஸ், உங்கப்பா தானே?' என கேட்டான்.
"உங்களுக்கு அவரை எப்படி தெரியும்?' என டென்ஷனாக கேட்டாள்.
"சுநீதி டிரஸ் லைன்னுக்காக தரமான ரேயான் காட்டன் வேணும் என்று விளம்பரம் கொடுத்திருந்தோம். மிஸ்டர் இள்ம்செழியன் நேத்து அம்மாவை மீட் பண்ண வீட்டுக்கு வந்தார். அம்மாவோட கம்பனிக்கு நான் தான் பர்சேஸ் ஹாண்டில் பண்ணறேன்" என மீசையை நீவியப்படி சொன்னவன், "அவர் தான் என்னை இன்னிக்கு நைட் அவர் வீட்டுக்கு டின்னருக்கு இன்வைட் செஞ்சார்" என சொன்னான்.
என்ன சொல்வதென்று தெரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளிடம், "ஸ்ம்ரு.. நான் பேஸிக்கலி கொஞ்சம் ஷை டைப். என்னை இப்படி சைட் அடிக்காதே. எனக்கு ஏதோ மாதிரி இருக்கு" என கண்கள் மின்ன சொன்னவன், தோளை குலுக்கியபடி வெளியே சென்றான்.
வேண்டுமென்றே நேரம் கழித்து இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு சென்றவள், அவன் அப்போதும் வீட்டில் இருப்பான் என்று சத்தியமாக எதிர்பார்க்க வில்லை.
"மிஸ்டர் யதுநந்தன். இவ என் பொண்ணு ஸ்மிருதி. நியூஸ் சானலில் எடிட்டரா இருக்காள்" என பெருமையாக அவனுக்கு ஸ்மிருதியை அறிமுகப்படுத்தினார் செழியன்.
"ஒ, கிரேட். நான் இவங்களை ஏற்கனவே மீட் பண்ணியிருக்கேன். மித்ரன் கல்யாணத்தில் பார்த்தேன். எங்க வீட்டுக்கு பூஜைக்கு கூட வந்திருந்தாங்க" என உதட்டில் உறைந்த சிரிப்புடன் சொன்னான்.
அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஸ்மிருதியின் அம்மா மலர்விழி திரும்பி அவனை ஆர்வமாக பார்த்தார்.
"நேரமாயிடிச்சு. நான் கிளம்பறேன். நீங்க நாளைக்கு வீட்டுக்கு வாங்க, டீல் முடிச்சிடலாம்" என செழியனிடம் சொன்னவன், அவளது அம்மாவை பார்த்து தலையசைத்தான்.
ஸ்மிருதியின் அருகே வந்தவன், "பை ஸ்மிருதி, குட் நைட்" என்றவன், "மெசேஜ் அனுப்பியிருக்கேன்" என மெதுவான குரலில் சொல்லி விட்டு சென்றான்.
அவளது மொபலை எடுத்து பார்த்தவன், அவன் அனுப்பிய மெசெஜை திறந்து பார்த்தாள். அவன் முன்பு அனுப்பியிருந்த அதே இணைய முகவரி மெசெஜை மறுபடியும் அனுப்பியிருந்தான். எதற்கு அதையே அனுப்பியிருக்கிறான் என அதை திறந்தவள், அவனது பக்கங்களில் பெண்களுடன் இருந்த அனைத்து போட்டோக்களையும், பதிவுகளையும் நீக்கியிருந்தான். மீதிமிருந்த பதிவுகளில் தனியாகவும், அவனும் சித்தார்த்தும், குடும்பத்துடன் இருந்த பதிவுகள் மட்டுமே இருந்தன.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro