Marukkathe Nee Marakkathe Nee - 17
மறக்காதே நீ மறுக்காதே நீ - 17
பதினோராம் நாள்...
காலை எட்டரை மணி..
வேகமாக காலை உணவை சாப்பிட்டு முடித்து, வாசலில் நின்றிருந்த காரில் ஏறுவதற்காக சென்றவளை மித்ரனின் குரல் நிறுத்தியது.
"சம்யு, என்னாச்சு நேத்திலிருந்து ஒரு மாதிரி இருக்கே?" என கேட்டான்.
"ஒண்ணுமில்லையே அண்ணா" என சொல்லி விட்டு வாட்ச்சைப் பார்த்தாள்.
"நேத்து யாராவது உன்னை ஃபாலோ பண்ணாங்களா? போனில் இல்லை நேரில் மிரட்டினாங்களா?' என கவலையுடன் கேட்டான்.
இல்லை என தலையசைத்து மறுத்தவளிடம், "நேத்து ஏன் சித்தார்த் கோயிலுக்கு வரலை? உன்னை வாசலிலே டிராப் செஞ்சிட்டு போயிட்டான்?" என கேட்டான்.
"எனக்குத் தெரியாது" என நிதானமான குரலில் சொன்னவள், "அண்ணா, எனக்கு ஆபிஸுக்கு நேரமாகுது, பை" என அவனது பதிலுக்குக் காத்திராமல் வேகமாக காரிலேறி அமர்ந்தாள்.
காரிலேறி அமர்ந்ததும் டிரைவர் வண்டியை கிளப்ப, கண்களை மூடியவளின் விழிகளுக்குள் சித்தார்த்தின் முகம் தெரிந்தது.
இதை போல் என்றும் சசியின் முகம் அவளது விழிகளுக்குள் தெரிந்ததே இல்லை.
சித்தார்த் நேற்று பேசி கொண்டிருக்கும் போதே, சசிதரனுக்குப் போன் செய்வான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்க வில்லை.
அவன் தன்னால் நின்ற திருமணத்தை நடத்தி வைப்பதாக சொன்னவுடன், அவளுக்கு சொல்ல முடியாத கோபம் வந்தது. அதுவும் சசிதரனை அவன் போனில் அழைத்ததை, அவளால் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியில் ஒரு நொடி மூச்சு விட மறந்து விட்டாள்.
"ஹலோ சசி, சித்தார்த் ஹியர்" என இவன் சொன்னதற்கு, சசிதரன் என்ன பதில் சொன்னானோ தெரியவில்லை.
"இன்னிக்கு நைட் டின்னருக்கு மீட் பண்ணலாமா?' என அவன் கேட்கும் போதே, சம்யுக்தா அவனது கையிலிருந்த போனை பிடுங்கி இணைப்பை துண்டித்தாள்.
"ஹே, உனக்கு டீஸன்ஸியே கிடையாதா? போன் பேசிட்டிருக்கும் போது கையிலிருந்து பிடுங்கிறே, உன் இஷ்டத்துக்கு கால் கட் செய்யறே?" என முதல் முறையாக சித்தார்த்தின் அழுத்தமான குரலை கேட்டு சற்று தடுமாறினாலும், தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.
அவள் கையிலிருந்த சித்தார்த்தின் போனில், சசிதரன் காலிங் என்று ஒளிர, இணைப்பைத் துண்டித்தாள்.
"யுக்தா, ஆர் யூ கிரேஸி?" என கேட்டவன், அவளிடமிருந்து போனை பிடுங்க முயல, அவள் போனை ஸ்விட்ச் செய்து டாஷ் போர்டில் போட்டாள்.
"உன் மனசில் என்ன நினைச்சிட்டிருக்கே?" என திரும்பியவன் கண்களில் கோபம் தெரிந்தது.
"நீங்க மனசில் என்ன நினைச்சிட்டிருக்கீங்க? எப்போ, யாரை கல்யாணம் செஞ்சிக்கனும்னு எனக்குத் தெரியும். நீங்க என் விஷயத்தில் தலையிட வேணாம்" என ஆத்திரத்தில் சம்யுக்தா பேசும் போதே, அவளது குரல் சற்றே உடைந்தது.
"என்னால தான் உன் கல்யாணம் நின்னு போச்சு. அதை தானே இந்த ஒன்றரை வருஷமா சொல்லிட்டிருக்கே. அப்போ வேற வழியே இல்லை. அதை சரி செய்ய வேண்டியது இப்போ என்னோட கடமையாயிடிச்சு" என ஆழ்ந்த குரலில் சொன்னான்.
"என்ன சரி செய்ய போறீங்க?" என கடுப்புடன் கேட்டாள் சம்யுக்தா.
"ஹ்ம்ம், சசியை எப்படியோ கன்வின்ஸ் செஞ்சி, உங்க இரண்டு பேரோட கல்யாணத்தை நடத்தறேன்" என பல்லை கடித்தபடி சொன்னான்.
அவன் சொன்னதை கேட்டதும், சம்யுக்தாவிற்கு வந்த கோபத்தில் அவனை தன்னுடைய கைபையினால் அப்படியே இரண்டு சாத்து சாத்த வேண்டும் என்று தோன்றியது.
"அவனை மட்டும் கன்வின்ஸ் செஞ்சா பத்தாது. நானும் கல்யாணத்துக்கு சம்மதிக்கனும்" என சீறினாள்.
"உன்னை எதுக்கும் கன்வின்ஸ் செய்யனும்? நீ தான் கல்யாணம் நின்னு போச்சு, நின்னு போச்சுனு எப்பவும் வருத்தமா சொல்லிட்டேயிருக்கியே. அப்போ அவனை கல்யாணம் செஞ்சிக்க நீ தயாரா இருக்கேனு தானே அர்த்தம். ஒ, அவன் தான் உன்னை கல்யாணம் செய்ய தயாரா இல்லை போலிருக்கு. நான் போய் அவங்கிட்டே பேசறேன்." என நக்கலாக சொன்னான்.
"நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க" என கோபமாக சொன்னவள், முகத்தை வெளி பக்கம் திருப்பி கொண்டாள்.
"ஒ, நீ மட்டும் தான் அவனை காதலிச்சியா? ஏன் அவன் உன்னை காதலிக்கலியா? ஸோ சாட்..' என பரிதாபமான குரலில் அவன் சொன்னவுடன் திரும்பி பார்த்தவள், அவனது உதடுகள் ஏளனத்துடன் வளைய, கண்களில் கிண்டல் தெரிய நக்கலாக சிரித்தான்.
அவனது நக்கலான சிரிப்பும், அலட்சியமான உடல்மொழியும் அவள் உடலை ஆத்திரத்தில் பற்றி எரிய வைத்தது. கோபம் தலைக்கேற, கண்கள் சிவந்து உதடுகள் துடிக்க, "அவன் தான் என் பின்னாடி வருஷக்கணக்கா அலைஞ்சிட்டிருதான். நான் அவனை இப்போ மட்டுமில்லை, என்னிக்குமே காதலிச்சதேயில்லை" என சொல்லும் போதே மூச்சு வாங்கியது.
கண்கள் மூடி தன் உணர்வுகளை சமன் செய்ய போராடியவள், கார் நின்றிருப்பதை உணர்ந்தாள்.
"ஏன் காரை நிறுத்தினீங்க? அண்ணி வீட்டில் எனக்காக வெயிட் செஞ்சிட்டிருப்பாங்க" என எரிச்சலாக சொன்னவளிடம், எதிரே தெரிந்த கோயிலை கையினால் சுட்டி காண்பித்தான்.
காரிலிருந்து அவள் இறங்கியவுடன், அவன் காரை கிளப்பி கொண்டு சென்று விட்டான்.
இறங்கி கோயிலை நோக்கி நடக்கும் போது தான், அவனிடம் கடைசியில் என்ன சொன்னோம் என்பதை உணர்ந்தாள். கடவுளே, அவனிடம் ஏன் அதை சொன்னோம் என்று தன்னையே நொந்து கொண்டாள். அவன் விரித்த வலையில் வசமாய் சிக்கி, தன் வாயாலேயே சசியை காதலிக்கவில்லை என்று வேறு சொல்லி விட்டோமே என தலையில் அடித்துக் கொண்டாள். கோபுரமாய அடுக்கி வைத்த சீட்டுக் கட்டைப் போல தன் தரப்பு நியாயங்கள் அனைத்தும் உதிர்வதை உணர்ந்தாள்.
சசிதரனை காதலிக்கவில்லை என்று தானே சொன்னோம். அதற்காக அது அவனை காதலிப்பதாக ஒன்றும் அர்த்தம் இல்லையே என்று தன்னை சமாதானம் செய்து கொண்டாள். இதே போல, சத்தியமங்கலத்தில் தாத்தா வீட்டில் சித்தார்த் கேட்டு தான் பதில் சொல்லாமல் குழம்பியது ஞாபகத்திற்கு வந்து போனது. ஐயோ, ஒரு தடவை பட்டும், அதிலிருந்து பாடம் படிக்காமல், அதே தப்பை மீண்டும் செய்து விட்டோமே என தன்னை திட்டிக் கொண்டாள்.
குவிக் என்ற செல்போன் சத்தத்தில் தன்னை மீட்டுக் கொண்டவள், அனிச்சையாக வந்திருந்த குறுஞ்செய்தியை திறந்து பார்த்தாள்
'குட்மார்னிங் மிஸ் சம்யுக்தா வசந்தன், ஜஸ்ட் பத்து நாட்கள்'
என வந்திருந்த செய்தியைப் பார்த்ததும் முகத்தில் புன்னகை விரிந்த புன்னகையுடன் மென்மையாய, "சித்து" என்று சொன்னாள்.
"ஹலோ யதுநந்தன்" என அவனது எதிரே தனது அலுவலக ஸீட்டில் வந்தமர்ந்தாள் ஸ்மிருதி.
"ஹாய் ஸ்மிருதி" என அவன் நீட்டிய வெள்ளை நிற ரோஜா பூங்கொத்தை, "தாங்க்ஸ்" என சொல்லி வாங்கி கொண்டாள்.
"உங்களுக்கு எப்படி எனக்கு வைட் ரோஸ் பிடிக்கும்னு தெரியும்?" என கேள்வியாக பார்த்தாள்.
"உங்க வெப் ப்ளாகை பார்த்தேன். அதிலே உங்க வீட்டில் வெள்ளை ரோஜா பூத்திருந்ததை பத்தி எழுதியிருந்தீங்க" என ஆர்வமுடன் சொன்னான்.
"ஹ்ம்ம். பொழுது போகலைனா ஏதாவது கிறுக்குவேன்" என சிரித்தபடி சொன்னாள்.
"ஹ்ம்ம், அப்படி கிறுக்கினதை படிச்சச் தான் உங்க மேலே இன்னும் கிறுக்காயிட்டேன்" என சிரித்தபடி சொன்னான்
"வாட்.." என புருவத்தை சுருக்கியவள், 'புரியலை" என அடர்ந்த குரலில் சொன்னாள்.
"ஐ ஆம் கிரேஸி அபவுட் யூ" என ஆழ்ந்த குரலில் சொன்னவனிடம், "நோ கிட்டிங்" என நம்ப முடியாமல் சொன்னாள்.
"இதிலே யாராவது விளையாடுவாங்களா? ஐ மீன் இட்" என அவளது கண்களை நேராக பார்த்துச் சொன்னான்.
"என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? திடீரென்று வந்து இப்படி சொல்றீங்க?' என கேட்டவளது குரலில் சற்றே கோபம் தெரிந்தது.
"ஒகே, உங்களைப் பத்தி சொல்லுங்க, தெரிஞ்சிக்கிறேன். என்னைப் பத்தி என்ன தெரியணுமோ கேளுங்க. சொல்றேன்" என தோளை குலுக்கினான்.
அவனை குழப்பமாக பார்த்தவள், "உங்க ஊர் மாதிரி, நீங்க லீவ் இன் ரிலேஷன் ஷிப் மாதிரி ஏதாவது எதிர்பார்க்கிறீங்கனா, ஸாரி நான் அந்த மாதிரி பொண்ணு இல்லை" என நிதானமான குரலில் சொன்னாள்.
"என்னை நீங்க தப்பா நினைச்சிட்டிங்க. நான் நம்ம இரண்டு வீட்டு பெரியவங்களோட சம்மதத்தோட உங்களை கல்யாணம் செஞ்சிக்கலாம்னு இருக்கேன்" என அமர்த்தலாக சொன்னான்.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்திருந்தாள்.
"ஹலோ ஸ்மிருதி, எங்கே போயிட்டிங்க? ஸ்விஸ்ஸா, ஆஸ்திரேலியாவா? தனியா போய் டூயட் பாடாதீங்க. இடத்தை சொன்னா நானும் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்" என சிரித்தபடி சொன்னான்.
"மிஸ்டர் யதுநந்தன். இது என்ன பிராக்டிகல் ஜோக்கா? நல்லாவே இல்லை. எனக்கு வேலையிருக்கு, கிளம்புங்க" என குரலில் லேசாக கோபம் எட்டி பார்க்க சொன்னாள்.
"ஜோக்கா, நான் இந்த அளவு சீரியசா என வாழ்க்கையில் இருந்ததே இல்லை. ஏன் நான் மாஸ்டர்ஸ் படிக்கும் போது கூட ஜாலியா தான் சுத்திட்டிருந்தேன்" என இயலபாக சொன்னான்.
"எனக்கு உங்களைப் பத்தி எதுவுமே தெரியாது. திடீரென்று வந்து ஆபிஸில் இப்படி பேசினா?' என அதே கோபத்துடன் கேட்டாள்.
"ஒகே, உன் மொபைலுக்கு என் முகநூல் பக்கம், என் இன்ஸ்டா பக்கம், என இணைய முகவரி எல்லாத்தையும் ஷேர் பண்ணியிருக்கேன். பார்த்துட்டு நைட்டுக்குள்ளே உன் சம்மதத்தை சொல்லு" என ஒருமையில் சொல்லியபடி எழுந்தான்.
"இன்னிக்கு ராத்திரிக்குள்ளேயா?" என நம்ப முடியாமல் கேட்டவளிடம், "டேக் யுவர் டைம். நாளைக்கு இங்கே பத்து மணிக்கு வரேன். ஒகே சொல்லு ஸ்ம்ரு" என சொன்னவன், எழுந்து அறை கதவை திறந்து வெளியே சென்றான்.
அவன் செல்வதையே நம்ப முடியாமல் பார்த்தவள், தன் மொபலை கையில் எடுத்தாள். அவன் சொன்னதை போல அவனது இணைய விவரங்களை ஷேர் செய்திருந்தான்.
இரவில் வீட்டிற்கு போய் அவனை பற்றி பார்க்கலாம் என நினைத்தவள், ஏதோ தோன்ற அவன் அனுப்பியிருந்த இணைய முகவரியை திறந்தாள்.
அவன் அனுப்பியிருந்த முகநூல் பக்கங்களில் ஒவ்வொரு போட்டோவிலும், பல நிற பெண்களுடன் நின்றிருந்தான், நெருக்கமாக அமர்ந்திருந்தான். கடற்கரையில் விளையாடி கொண்டிருந்தான். அவன் நண்பர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம் இருந்தனர். மிக குறைந்த படங்களில் மட்டுமே அவனுடன் சித்தார்த்தும், குடும்பத்தாரும் இருந்தனர்.
அவனது புகைப்பட தளத்தில், விதவிதமான ஆடைகளில், குளிர் கண்ணாடியுடன் இருந்தான், வெவ்வேறு பெண்களுடன். அவனது காரில், பைக்கில் என்று எடுத்த படங்களில் எல்லாம் பெண்கள் அவனுடன் கட்டிப்பிடித்த படி அமர்ந்திருந்தனர். சில படங்களை பார்க்கவே முடியாமல் போக, வெறுப்புடன் தூக்கி மேஜையில் போட்டாள் ஸ்மிருதி.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro