Marukkathe Nee Marakkathe Nee - 15
மறக்காதே நீ மறுக்காதே நீ - 15
ஒன்பதாம் நாள்...
காலை எட்டரை மணி..
அலுவலகத்திற்கு தன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த சம்யுக்தா, நேற்று இரவு வண்டியை நிறுத்திய இடத்தைப் பார்த்தபடி சென்றாள்.
பின்னால் சித்தார்த்தின் குரல் கேட்டதும், அவளை தாக்க வந்தவர்கள், சற்று தயங்கிய பின், வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக சென்று விட்டனர்.
அவர்க்ளைப் பின் தொடர்ந்து பைக்கில் சென்றவர்களைப் பார்த்ததுமே போலிஸ்காரர்கள் என்று தெரிந்தது.
"உனக்குக் கராத்தே தெரியும்னு மித்ரன் சொன்னான். ஆனால் இத்தனை துல்லியமா சரியான இடத்தில் அடிப்பேனு தெரியாது" என அவள் வண்டியின் மேலே சாய்ந்து நின்றவனை முறைத்துப் பார்த்தாள்.
"எனக்கு உன்னை பத்தி புது புது விஷயம் தெரிய வரும் போதெல்லாம், உன் மேலே எனக்கு அப்படியே.. அதை எப்படி சொல்றது, டீப்லி ஃபாலிங் இன் லவ் வித் யூ பேபி" என முலர்ந்த முகத்துடன் சொன்னவனை கடுப்பாக பார்த்தவள், "தள்ளுங்க, வண்டியை எடுக்கணும்" என்றாள்.
சற்றும் நகராமல் அப்படியே நின்றவன், "ஹனி, எதுக்கு என்னை கால் செஞ்சே?" என முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு கேட்டான்.
"நான் அகில் அண்ணாவை கூப்பிடனும்னு போனை எடுத்தேன். பதட்டத்தில் என் விரல் தவறுதலா உங்க நம்பர் மேல பட்டு கால் போயிடிச்சு" என பற்களைக் கடித்தபடி சொன்னாள்.
"ஒ, அப்படியா, உன் விரல் எப்போ அது மாதிரி தவறுதலா என் மேலே படும்?" என தீவிரமான குரலில் கேட்டாலும், அவனது கண்களில் குறுகுறுப்பு தெரிந்தது.
"விரல் மட்டும் தனியா படாது, இப்போ அவங்க எங்கிட்ட வாங்கினதை பார்த்தீங்க இல்லை? அது மாதிரி தான் மொத்த விரலும் கையோட சேர்ந்து தான் படும். உயிர் போற மாதிரி வலிக்கும்" என்றாள்.
"யுக்தா, அதுக்கு உன் கை எதுக்கு? ஏற்கனவே உன் கண் அந்த வேலையை தான் செஞ்சிட்டிருக்கு. என்னை ஒவ்வொரு நிமிஷமும் கொல்லாம கொன்னுட்டிருக்கு" என உணர்ச்சிகரமாக அவன் சொன்னது, அவள் இதயத்தை ஏதோ செய்தது. அவனை நிமிர்ந்து பார்த்தால், தனது இதயம் அவனிடம் சரிந்து விடும் என உணர்ந்தவள், "அவங்ளை மாதிரி நீங்களும் என் பின்னாடியே வரீங்களா?' என போராடி குரலில் கடுமையை வரவழைத்துக் கொண்டாள்.
"நான் எதுக்கு உன் பின்னால் வரேன். நான் என் வீட்டுக்குப் போயிட்டிருக்கேன்" என அமர்த்தலாக சொன்னான்.
"இது திருவான்மியூர் போற வழி, தாத்தா வீடு பெசண்ட் நகரில் இருக்கு. இந்த வழியா எதுக்கு வந்தீங்க?" என உணர்ச்சியற்ற குரலில் கேட்டாள்.
"ஒ, அப்படியா, சென்னை ரூட்டெல்லாம் எனக்கு இன்னும் சரியா தெரியலை. ஜிபிஎஸ் இப்படி தான் வழி காண்பிச்சுது" என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் சொன்னதை நம்பாமல் பார்த்தாள்.
"சித்து, தள்ளுங்க, எனக்கு நேரமாகுது" என அவள் சொன்னவுடன், அவளை காதலுடன் பார்த்தபடி தள்ளி நின்றான்.
அவள் வண்டியைக் கிளப்பும் போதும், "யுக்தா.." என அவனது கரகரத்த குரலில் திரும்பி பார்த்தாள்.
சித்தார்த் கண்களை நிறைத்த நீருடன், "ராதிகாம்மாவும் என்னை சித்து என்று தான் கூப்பிடுவாங்க" என சொல்லும் போதே, குரல் உடைந்து போக, மறுபக்கம் முகத்தை திருப்பிக் கொண்டான்.
அவனது கண்களில் நீரை பார்த்ததும் சம்யுக்தா தன் இதயத்தில் கூர்மையான வலியை உணர்ந்தாள். தொண்டையில் ஏதோ அடைத்து, கண்களில் நீர் நிறைந்தது.
"சித்தார்த்" என அவள் அழைத்தவுடன், வேகமாக சென்று காரில் அமர்ந்தவன், தலையை பின்புறம் சாய்த்துக் கொண்டான்.
என்ன செய்வதென்று ஒரு நொடி நின்றவள், தன் வண்டியை மெதுவே யோசனையுடன் கிளப்பினாள்.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு சித்தார்த்தின் கார் தன் பின்னால் வருவதை ரியர் வியூ கண்ணாடியில் பார்த்த பின்பே சற்று நிம்மதியுடன் வண்டியை செலுத்தினாள்.
தனது வீட்டின் வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தி திரும்பி பார்த்த போது, அவனது கார், அங்கே நிற்காமல் கடந்து சென்றது.
இரவு உணவருந்தி விட்டு, தனது அறையில் அமர்ந்தபடி அவனை அழைக்க இரண்டு முறை நினைத்து, கடைசி நொடியில் தயக்கத்துடன் கை விட்டாள். சத்தியமங்கலத்திலும் இதே போல் அவன் தன் அம்மாவை நினைத்து, கண்களில் நீருடன் அமர்ந்திருந்தது நினைவில் வந்து அவளது இதயத்தில் வலியை ஏற்படுத்தியது. அன்று தோன்றியதை போலவே, இன்றும் அவனை நினைத்து இதயம் உருகியது. கூடவே தன்னை கடத்தியதும் ஞாபகத்தில் வந்து நிற்க, என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்துடன் தவித்தவள், பின்னிரவில் தான் தூங்கினாள்.
அன்று மதியம் வரை வேலை சரியாக இருக்க, சாப்பிடும் போது, தனது செல்போனை எடுத்து அவனிடமிருந்த வந்த மெசெஜை இருபதாவது தடவையாக படித்தாள்.
'குட்மார்னிங் மிஸ் சம்யுக்தா வசந்தன், ஜஸ்ட் பன்னிரண்டு நாட்கள்'
ஒவ்வொரு தடவை அந்த செய்தியைப் படிக்கும் போதும், அவனே அதை தன் காதருகே. தனது ஆழ்ந்த குரலில் சொல்வது போல உணர்ந்தாள். தலையை சிலுப்பி தன் எண்ணங்களை திசை திருப்ப முயலும் போது, மித்ரனிடமிருந்து அழைப்பு வந்தது.
"ஹலோ அண்ணா, எப்போ வந்தீங்க?' என ஆர்வமாக கேட்டாள்.
"பத்து மணிக்கு வந்துட்டேன். இப்போ என்ன செய்யறே?" என கேட்டான்.
"சாப்பிடறேன். எதுக்கு அண்ணா கேட்கிறீங்க" என்றாள்.
"சும்மா கேட்டேன். சாயங்காலம் எப்போ கிளம்புவே?' என கேட்டான்.
"ஆறு மணியாயிடும். எதுக்கு கேட்கிறே?' என கேட்டாள்
"ஒகே, ஆறு மணிக்கு தயாராயிரு. நான் வரேன்" என அவள் பதிலுக்குக் காத்திராமல் போனை வைத்தான்.
மாலை ஆறு மணிக்குள் வேலையை முடித்து விட்டு தயாராக இருந்தாள்.
டிரைவருடன் வந்த மித்ரன், அவளைக் காரில் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். டிரைவர் அவளது வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
வீட்டிற்கு வரும் வழியில் மித்ரன் சாதாரணமாக பேசி கொண்டு வந்தாலும், ஏதோ ஒரு விதத்தில் அமைதியின்றி இருந்தான்.
"ஹாய் மயூரி. டிரிப் எப்படி இருந்தது?' என கேட்டபடி அவள் கையை பிடித்துக் கொண்டாள்.
"வேகமா போச்சு. ஒரு வாரமே போனதே தெரியலை" என மென்னகையுடன் சொன்னாள் மயூரி
"அண்ணா, இப்போ தான் ஒரு வாரம் தொடர்ச்சியா ஸ்டேஷனுக்குப் போகாம இருந்திருக்காங்க" என்றாள்.
"ஆமாம். ஆனா தினமும் நம்ம வீட்டைப் பத்தியும், உன்னை பத்தியும் பேசாம இருந்ததே இல்லை" என அன்புடன் சொன்னாள் மயூரி.
"என்ன அண்ணி, பொறாமையா?' என கிண்டலாக கேட்டாள்.
"சே, எதுக்குப் பொறாமை? உனக்கு கல்யாணம் முடியற வரைக்கும் தானே உன்னை பத்தி கவலைப்பட போறார். அதுக்குப் பிறகு சித்.." என சொல்ல தொடங்கிய மயூரி, சுதாரித்துக் கொண்டு, "அதுக்குப் பிறகு வாழ்க்கை முழுசும் உன் ஹப்பி தானே கவலைப்படனும்" என கவனமாக முடித்தாள்.
"ஒ, அப்போ கல்யாணத்திற்குப் பிறகு என்னை பத்தி, இந்த வீட்டில் யாரும் நினைச்சுக் கூட பார்க்க மாட்டிங்க, அப்படி தானே? நான் எப்படா வீட்டை விட்டு போவேன் காத்திட்டிருக்கீங்க. கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ளே என்னை வீட்டை விட்டு துரத்த பார்க்கிறீங்க' என சம்யுகதா அடர்ந்த குரலில் கேட்டவுடன், அதை எதிர்பாராத மயூரி திணறி போனாள்.
"அப்படி சொல்ல வரலை சம்யு, அது வந்து நாங்க.." என மயூரி திணறும் போதே, அவள் தலையில் மெதுவாக கொட்டு வைத்த மித்ரன், "வாலு, அவளை எதுக்கு டென்ஷன் செய்யறே?' என கேட்டபடி அருகே உட்கார்ந்தான்.
"மயூம்மா, அவ உன்னை வம்புக்கு இழுக்கிறா? நீ எதுக்குடா டென்ஷனாகிறே?" என கேட்டான்.
"இல்லை, நான் அந்த அர்த்தத்தில் சொல்ல வரலை" என தீனமான குரலில் மயூரி சொன்னாள்.
"அய்யோ, அண்ணி, நான் உங்களோட விளையாடினேன். டென்ஷனாகாதீங்க" என அவளை அணைத்தபடி சொன்னாள்.
"சம்யு, உன்னை விட்டா இன்னும் கொஞ்ச நேர்த்தில், என் ஸ்வீட்டியை அழ வைச்சிடுவே. நீ உன் ரூமுக்குப் போ" என விரட்டினான்.
"என்ன அண்ணா, என்னை துரத்திட்டு ஹாலிலே ரொமான்ஸா? அம்மா கிச்சனில் தான் இருக்காங்க" என கேட்டவளை அவன் கொட்ட முயல, அவன் கைகளை தட்டிவிட்டு மாடிக்கு ஒடினாள் சம்யுக்தா.
"நானும், என் தம்பியும் எங்க வீட்டில இப்படி தான் இருப்போம்" என சொன்ன மயூரி, "அவன் காலேஜில் இருந்து வந்திருப்பான். நான் அவங்கிட்ட பேசியே ஒரு வாரம் இருக்கும்" என சொல்லியபடி போனை எடுத்தாள்.
அவள் தன் தம்பியுடன் பேசுவதை பார்த்தான், ஏதோ யோசனையுடன் மாடிப்படி ஏறி சென்றான்.
கதவை தட்டி விட்டு, அவன் உள்ளே நுழைந்ததும், "என்ன அண்ணா, அண்ணி இன்னும் டென்ஷனா இருக்காங்களா?' என கேட்டாள்.
"இல்லை, அவ தம்பியோட பேசிட்டிருக்கா" என சொன்னவன், "சம்யு, நேத்து நைட் என்னாச்சு?" என கேட்டான்.
அவன் ஊரிலிருந்து இன்று தான் வந்திருக்கிறான். எதற்கு தேவையில்லாமல் அவனிடம் சொல்லி அவனை கவலை அடைய வைக்க வேண்டும் என்று நினைத்தவள், "ஒண்ணுமில்லையே" என தோள்களைக் குலுக்கினாள்.
"பொய் சொல்லாதே, சித்தார்த் எங்கிட்ட மதியம் பேசினான்" என தீவிரமான குரலில் சொன்னான்.
"உன் ஃபிரண்டுக்கு வேற வேலை இல்லை. ஏதாவது சொல்லிட்டிருப்பான்" என சொன்னாள்.
"அப்போ அகிலனும் பொய் சொல்றானா?' என் கடுமையான குரலில் கேட்டான் மித்ரன்.
"அது ஒண்ணுமில்லை அண்ணா, சும்மா இரண்டு பேர் என்னை பயமுறுத்த முயற்சி செஞ்சாங்க" என தோள்களைக் குலுக்கினாள்.
"கடவுளே.." என படுக்கையில் சாய்ந்தவன், "உனக்கு எந்த நேரத்தில் இப்படி ஒரு பேரை செலக்ட் செஞ்சாங்க. ஏன் உனக்கு சம்யுக்தானு பேர் வைச்சாங்க. அவளை மாதிரியே உன்னையும் கடத்த டிரை செய்யறாங்களே" என இறுக்கி கண்களை மூடி கொண்டாள்.
"அதுக்குப் பிள்ளையார் சூழி போட்டது, உன் ஃபிரண்ட் தான்" என்ற நிதானமான குரலில் சொன்னாள்.
அவன் சொன்னதைக் கேட்டதும், கண்களைத் திறந்து வெளியே வெறித்துப் பார்த்தவன், மெளனமாக இருந்தான்.
"சம்யு, நீ ஏதாவது முக்கியமான கேஸ் அல்லது ஆர்ட்டிகல் எழுதிட்டிருக்கியா?' என கேட்டான்.
"போ அண்ணா, வெறுப்பாத்திறே. என்னை ஆபிஸில் சிஸ்டத்தோட கட்டி போட்டு வைச்சிருக்காங்க. என்னை ஃபீல்ட் வொர்க் செய்ய அனுப்பறதே இல்லை. என்னோட ஜுனியர்ஸ் எல்லாம் பரபரப்பா செய்தி கொண்டு வரும் போது, எனக்கு பொறாமையா இருக்கு. கையும், காலும் துறுதுறுனு இருக்கு. ஆனா ஒண்ணும் செய்ய முடியலை. நிறைய தடவை எங்க எடிட்டர் கிட்டே பேசிட்டேன். ஆனா அவர் ஏதாவது காரணம் சொல்லி தட்டி கழிச்சிக்கிட்டிருக்கார்" என வெறுப்பாக சொன்னாள்.
"அதுவும் உன் நல்லதுக்குத் தான் சம்யு" என எழுந்து அவளருகே வந்தவன், அவளது தலையை பாசமாக வருடினான்.
"சம்யு, இனிமே நீ தினமும் காரிலேயே ஆபிஸூக்குப் போ" என மெதுவான குரலில் சொன்னான்.
"எத்தனை நாளைக்கு அப்படி போயிட்டு வருது? எனக்கு அது ஜெயிலில் இருக்கிற மாதிரி இருக்கு" என சொல்லும் போதே கண்களில் நீர் வந்தது.
"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?" என கேட்டு விட்டு கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்த தங்கையிடன் என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்தபடி நின்றான் மித்ரன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro