Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Marukkathe Nee Marakkathe Nee - 14

மறக்காதே நீ மறுக்காதே நீ - 14
எட்டாவது நாள்...

மதியம் மணி இரண்டு..

அகிலன், "சித்தார்த், இன்னிக்கு என்ன எட்டாவது நாளா? சம்யுக்தா ஒகே சொல்லிட்டாளா?" என சிரித்தபடி கேட்டான்.

"எனக்கு ஒகே சொல்லாம, வேற யாருக்குச் சொல்ல போறா? வேற யாருக்காவது சொல்ல தான் விட்டிருவேனா?" என அமர்த்தலாக கேட்டான் சித்தார்த்.

"ஸிட், சம்யுக்தா உன்னை மன்னிச்சிட்டாளா? அவ கூட பேசினியா?" என ஆர்வத்துடன் கேட்டாள்.

"உன் தங்கை எங்கே பேசறா? பக்கத்திலே போனாலே எரிஞ்சு விழறா" என கடுப்பாக சொன்னான்.

"ஸார் என்ன சாதாரண வேலையா செஞ்சீங்க. நீங்க செஞ்ச வேலைக்கு உங்களை எங்கிட்ட மாட்டி விட்டிருக்கனும்" என சீரியசாக சொன்னான்.

"நானோ, தாத்தாவோ அவகிட்ட என்னை காப்பாத்த சொல்லி கேட்கலை. அது அவளும், அவங்கப்பாவும் எடுத்த முடிவு" என அதே தொனியில் பதில் சொன்னான்.

"அகில், நான் செஞ்ச தப்புக்கு தண்டனையா இந்த ஒன்றரை வருஷம் அவளை பார்க்காம, பேசாம இருந்துட்டேன். இனிமே என்னால அவளை பிரிஞ்சு இருக்க முடியாது" என ஆழ்ந்த குரலில் சொன்னான்.

"ஒகே, எப்படியோ சம்யுக்தா சீக்கிரம் கல்யாணம் முடிஞ்சா எங்க எல்லோருக்கும் சந்தோஷம் தான்" என சொன்னவன், "ஸிட், எதுக்கு என்னை அர்ஜெண்ட்டா பார்க்கனும் என்று சொன்னே, ஈவ்னிங் வீட்டுக்கு வந்திருக்கலாமே, அமிதாவையும் பார்த்திருக்கலாம்" என சொன்னான்.

"அகில், நேத்து சசிதரனை சந்திச்சேன். அதை பத்தி பேச தான் வந்தேன்" என நேற்று நடந்ததை விவரித்தான்.

"சம்யுக்தாவா?" என கேட்டான் அகிலன்.

"அவன் சம்யுக்தா என்ற பெயரை சொன்னவுடனே அவன் கழுத்தை என் இரண்டு கையாலும் நெரிக்க நினைச்சேன். வந்த கோபத்திற்கு அவனை சுவற்றில் வைச்சு தேய்ச்சிருப்பேன். வெளியே பிரச்சனை செய்ய வேண்டாம் என்று பல்லை கடிச்சு அடக்கிட்டேன்" என சொல்லும் போதே அவனது கண்கள் சிவந்து போனது.

"அவன் சம்யுக்தா என்று எதுக்குச் சொன்னான்?" என கேள்வியாக பார்த்தான் அகிலன்.

"அவன் எதுக்கு சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. அதை கேட்கிற நிலைமையில் நான் இல்லை. எனக்குத் தேவையும் இல்லை" என கழுத்து நரம்பு புடைக்க சொன்னான் சித்தார்த்.

"சித்தார்த், நீ அவன் என்ன சொல்றான் என்று பொறுமையா கேட்டிருக்கலாம். நீ அத்தனை சீக்கிரம் உண்ர்ச்சி வசப்படறவன் இல்லையே. உனக்கு என்னாச்சு?" என கவலையுடன் கேட்டான்.

தலைமுடியை அழுந்த பின்னால் தள்ளியவன், "தெரியலை அகில். அவன் வாயால் சம்யுக்தா என்று சொன்னதை கூட என்னால் தாங்க முடியலை" என தாழ்ந்த குரலில் சொன்னான்.

"ஸிட், இது உனக்கே கொஞ்சம் அதிகமா தெரியலை. சசிதரன் தான் உன் மேலே கோபபபடணும்" என உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.

"அவன் ஏன் எதுக்கு கோபப்படணும்?" என சொன்னவனது குரலில் கோபம் தெரிந்தது.

"ஸிட். நம்ம அறிவு இருக்கே, நமக்கு வேணுங்கிறா மாதிரி மட்டும் தான் யோசிக்கும். நீ சம்யுவை கடத்தினதில் அவனும் பாதிக்கப்பட்டிருக்கான். அவன் காதலிச்ச பொண்ணை அவனால் கல்யாணம் செய்ய முடியாம போயிடிச்சு. சம்யு அளவு இல்லைனாலும், அவனுக்கும் உன் மேல கோபப்பட நியாயமான காரியம் இருக்கு" என அடர்ந்த குரலில் சொன்னான்.

"இந்த ஒன்றரை வருஷமா என்ன செஞ்சிட்டிருந்தான்? கல்யாணம் செஞ்சிட்டிருக்க வேண்டியது தானே?" என கடுப்பான குரலில் சொன்னான்.

"ஸிட், அந்த கடத்தலுக்குப் பின்னால அவங்க இரண்டு பேருக்கும் நடுவிலே இருந்த ஏதோ ஒண்ணு அறுந்திடிச்சு. அதனால் தான் இரண்டு பேரும் கல்யாணத்தைப் பத்தி பேசவே இல்லை. முரளிதரன் ஜெயிலிக்குப் போனது ஒரு காரணன் என்று எடுத்திக்கிட்டாலும், அவர் மூணு மாசத்திலேயே ஜாமினில் வெளியே வந்துட்டார். ஆனா, அதுக்குப் பிறகு சசிதரன் வீட்டிலிருந்து ஒரு தடவை கூட கல்யாணத்தைப் பத்தி பேசவே இல்லை" என சொன்னான் அகிலன்.

"அகில், அவங்க இரண்டு பேருக்கும் நடுவில் என்னிக்கும் எதுவும் இருந்ததே இல்லை. ஏதாவது இருந்தா தானே அறுந்து போகும்" என வெளியே வெறித்தபடி சொன்னான் சித்தார்த்.

"எப்படி சொல்றே?" என கேட்டான் அகிலன்.

"எனக்குச் சம்யுக்தாவை நல்லா தெரியும். அவ மனசு அத்தனை சீக்கிரம் மாறாது. ஒரு முடிவு எடுத்தா அதிலிருந்து எந்த சூழ்நிலையிலும் மாறவே மாட்டா. நான் அவளை அடைச்சு வைச்சிருந்த போது, மத்தவங்கனா பயந்து போயிருப்பாங்க. அவளைப் பட்டினி போட்ட போதும், அவ தையரியத்தை விடலை. சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் தப்பிக்க முயற்சி செஞ்சா. சசியை அவ நிஜமா விரும்பியிருந்தா, இந்த ஒன்றரை வருஷத்தில் அவங்க கல்யாணம் முடிஞ்சிருக்கும்" என அழுத்தமாக சொன்னான்.

"சம்யுக்தா வேணா அவனை விரும்பாம இருந்திருக்கலாம். சசிதரன் அவளை முழு மனசா காதலிச்சானே? அதனால் தானே கல்யாணமே நடக்க இருந்திருச்சு?" என கேட்டான் அகிலன்.

"சசிக்கும் கடத்தின போது ஏதாவது நடந்திருக்கும் என்று அவ மேலே சந்தேகம். நிஜமான காதலா இருந்தா அதை அவ கிட்டே நேரில் கேட்டிருப்பான், இல்லை அதை ஒரு விபத்தா நினைச்சு கடந்து போயிருப்பான். அவன் அதில் எதையுமே செய்யலை. ஒரு மாசத்திற்கு பிறகு கோவிலில் திருமணம் என்று பெரியவங்க முடிவு செஞ்சாலும் அவனாலே முழுசா ஒத்துக்க முடியலை, மறுக்கவும் முடியலை. அவங்கப்பா ஜெயிலுக்கு போனதை ஒரு சாக்கா வைச்சு, அந்த கல்யாணத்தை நிறுத்திட்டான். அவனுக்கு அவ மேலே வெறும் ஈர்ப்பு தான் இருந்தது." என சலித்தபடி சொன்னான்.

"சரி, அவன் சம்யுவை ஏதாவது செய்வான் என்று நினைக்கிறியா?" என கேட்டான்.

"கடந்த பத்து நாளா யுக்தாவை யாரோ இரண்டு பேர் ஷாடோ செய்யறாங்க. மித்ரனுக்கும் அந்த சந்தேகம் இருந்தது. நான் அவளைப் பார்த்துக்கிறேன் என்று சொன்னதால் தான் அவன் ஹனிமூனுக்குப் போனான்" என சீரியசான குரலில் சொன்னான்.

"இதுவரைக்கும் அவங்க யாருனு நீ கண்டுபிடிக்கலையா? அதை என்னை நம்ப சொல்றியா?" என சிரித்தபடி கேட்டான் அகிலன்.

"ஒரே குரூப் ஆளுங்க அவளை பின் தொடரலை. தினமும் வேற வேற ஆளுங்க தான் ஃபாலோ செய்யறாங்க. அவங்களுக்கும் வேற வேற ஆளுங்க மூலமா தான் இந்த வேலையை செய்ய சொல்லி உத்தரவு வந்திட்டிருக்கு" என யோசனையாக சொன்னான் சித்தார்த்.

"ஒ, நான் என் இன்ஃபார்மர்ஸ் கிட்டேயும் கேட்கிறேன். மித்ரன் என்னிக்கு வரான்?" என கேட்டான் அகிலன்.

"நாளைக்கு காலையிலே வந்துடுவான். உனக்கும் இன்ஃபார்ம் செய்யலாம்னு நினைச்சேன். ஒகே, பை" என்றான்.

"ஒகே, பை. ஏதாவது இன்ஃபார்மேஷன் கிடைச்சா, போன் பண்ணறேன்" என்றான் அகிலன்.

சம்யுக்தாவினால் இரண்டு நாட்களாக வீட்டிலேயே இருந்ததால் சித்தார்த்தை பார்க்க முடியவில்லை. வீட்டில் காலிங் பெல் அடிக்கும் போதெல்லாம் அவனாக இருக்குமோ என்ற லேசான குறுகுறுப்பு எட்டிப் பார்த்தது. நேற்று இரவு எட்டு மணிக்கு பொழுது போகாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். பார்த்த படத்தையே சுவராசியமின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

வாசலில் அழைப்பு மணி அடிக்க, நெஞ்சம் படபடக்க ஏதோ எதிர்ப்பார்ப்புடன் ஒடி போய் கதவை திறந்தாள். கோயிலுக்குப் போன வினோதினி வாசலில் நின்றிருப்பதைப் பார்த்து, தன் ஏமாற்றத்தை மறைக்க முடியாமல், "நீ தானா?" என சலிப்புடன் கேட்டாள். "வேற யாருனு நினைச்சே?" என அவரின் கேளிவிக்குப் பதில் சொல்ல முடியாமல், "ஸ்மிருதி வரேன் என்று சொன்னா" என திணறி சமாளித்தாள்.

அன்று சற்று வேலை அதிகமாக இருந்ததால் இரவு எட்டு மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பினாள். மூன்று நாட்களாக ஏதோ ஒன்றை இழந்தது போலிருந்தது. எதை எதிர்பார்க்கிறோம், தனக்கு என்ன வேண்டும் என தெரியாமல் தவித்துப் போனாள். இரண்டு நாட்களாக அதிகரித்துக் கொண்டு வந்த அமைதியின்மை இன்று காலையுணவின் போது அவனிடமிருந்து வந்த குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் எரிச்சலாக மாறியது.

'குட்மார்னிங் மிஸ் சம்யுக்தா வசந்தன், ஜஸ்ட் பதிமூன்று நாட்கள்'

"இதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை" என கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு, செல்போனை கோபமாக தூக்கி போட்டாள்.

"சம்யு, நேத்திலிருந்து நீ சரியே இல்லை, என்னாச்சு?" என்ற வினோதினியின் குரலுக்கு, 'ஒன்றுமில்லை" என முணுமுணுப்பாக பதில் சொல்லி விட்டு வேலைக்குக் கிளம்பினாள்.

தனது வண்டியை பார்க்கிங்கில் இருந்து எடுக்கும் போது பின்னாலிருந்து "ஹாய் யுக்தா" என்ற குரல் அழைத்தது. திரும்பாமலே சித்தார்த் என உணர்ந்தவள், படபடத்த இதயத்தை, கண்களை மூடி சமன் செய்து, "உங்களுக்கு வேற வேலையே இல்லையா?' என உணர்ச்சியற்ற குரலில் கேட்டாள்.

"இப்போ இது தான் ஃபுல் டைம் வேலை. ஆறு மணியிலிருந்து உனக்காக தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன். நீ தான் வர லேட்டாயிடிச்சு" என வாட்ச்சை பார்த்தபடி சொன்னான்.

"நான் உங்களை வெயிட் பண்ண சொல்லலை" என சொல்லியபடி வண்டியை நகர்த்தினாள்.

"எனக்காக நீ ஒன்றரை வருஷம் காத்திட்டிருந்தே. உனக்காக நான் ஜஸ்ட் டூ அவர்ஸ் தான் வெயிட் செஞ்சேன்" என ஆழ்ந்த குரலில் சொன்னான்.

"நினைப்பு தான்" என இதழின் ஒரம் கசிய இருந்த புன்னகையை உதட்டை மடித்து அடக்கினாலும், கண்களை நிறைத்த ஒளியை மறைக்க முடியவில்லை.

"யுக்தா, எனக்கு பசிக்குது, டின்னர் சாப்பிடலாம் வா" என்றவனை முறைத்தாள், "நான் எதுக்கு உங்க கூட டின்னர் வரணும்? அதுக்கு வேற ஆளைப் பாருங்க" என நக்கலாக சொன்னவள், அவன் எதிர்பார்க்காத போது வண்டியை கிளப்பினாள்.

பத்தடி தூரம் சென்றவுடன் அவன், "யுக்தா.." என சத்தமான குரலில் அழைத்ததில் நின்று திரும்பி பார்த்தாள்.

"ஹனி, ஒவ்வொண்ணத்துக்கும் தனி தனியா ஆள் பார்க்க முடியாது. எனக்கு எல்லாத்துக்கும் நீயே போதும்" என கண்கள் மின்ன சித்தார்த் சொன்னவுடன், ஒரு நொடி நின்று வேகமாக துடித்தது அவளது இதயம்.

வேகமாக இழந்த மூச்சை சரி செய்ய முடியாமல் தவித்தவள், கன்னங்கள் சூடானதை உணர்ந்தாள். அவன் வேகமாக அவளருகே நடந்து வருவதை உணர்ந்தவள், தன்னை வேகமாக சமன் செய்து வண்டியை கிளப்பினாள்.

தனது வீட்டினருகே செல்லும் போது, கடந்த பத்து நாட்களைப் போலவே இன்றும் தன்னை பின் தொடர்வதாக உணர்ந்தாள். சித்தார்த் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறான், இது என்ன சின்னபிள்ளை தனமாக போகுமிடத்திற்கு எல்லாம் பின் தொடர்கிறான் என எரிச்சலாக வந்தது. பின்னால் வந்தால் இவனை காதலிப்பேன் என்று நினைக்கிறானா? இன்றோடு இதற்கு முடிவு கட்ட வேண்டும் என நினைத்தவள், வண்டியை நிறுத்தி இறங்கினாள்.

அவனை பின் தொடர்ந்த கார், அவளைத் தாண்டி சென்று நின்றது.

வேகமாக அவள் காரின் அருகே செல்லும் போது, அதில் இருந்து உயரமாக, தடிமனாக இரண்டு பேர் இறங்கினர். அவர்களைப் பார்த்தவுடன் சற்றே பயம் தோன்றினாலும் அதை வெளி காட்டாமல், "எதுக்கு என்னை பாலோ செய்யறீங்க்?' என உயர்ந்த குரலில் கேட்டாள்.

"பாலோ செய்யறோம் என்று தெரியுதில்ல்ல, அப்போ எதுக்கு செய்யறோம்னு தெரியலையா?' என அதில் நெற்றியில் வெட்டுக் காயத்துடன் இருந்தவன் கட்டையான குரலில் சொன்ன போது, சம்யுக்தாவிற்கு வண்டியை நிறுத்தி தவறு செய்து விட்டோம் என்று புரிந்தது.

"இனிமே ஃபாலோ செய்யாதீங்க" என முணுமுணுப்பாக சொல்லி விட்டு, தனது வண்டியின் அருகே வேகமாக சென்றவள், அவர்கள் பின்னாலேயே வருவதை உணர்ந்தாள். மித்ரனை அழைக்க வேண்டும் என்று அவசரமாக செல்போனில் அவனது நம்பரை தேடி எடுக்கும் போது தான் அவன் ஊரில் இல்லை என்பது ஞாபகம் வந்தது.

கண்களை நொடி நேரம் மூடி திறந்தவள், காலையில் சித்தார்த்திடம் இருந்து வந்த மெசேஜை தேடி, அந்த எண்ணிற்கு கால் செய்தாள். ரிங் சென்ற போதும், அவன் எடுக்கவே இல்லை.

அதற்குள் அவளருகே வந்தவர்கள், "ஒழுங்கா வண்டியில் ஏறு" என மிரட்டும் தொனியில் சொன்னார்கள்.

"நான் எதுக்கு வண்டியில் ஏறணும்? யார் நீங்க, நான் யாருனு தெரியுமா?" என நடுக்கத்தை மறைத்துக் கொண்டு கேட்டாள்.

"தெரியுமே, அந்த பத்திரிகையில் வேலை செய்யற பொண்ணு தானே, உங்க அண்ணன் கூட ஏஸிபி மித்ரனில்ல?" என அமர்த்தலாக கேட்டான். அதற்குள் இன்னொருவன் நெருங்கி வர, "பக்கத்திலே வராதீங்க, எனக்கு ஏதாவது எங்கண்ணன் உங்களை சும்மா விட மாட்டார்" என சொல்லியபடி பின்னால் சென்றாள்.

அவன் இன்னும் நெருங்கி வர, கண்ணிமைக்கும் நேரத்தில் அவனது கழுத்தில் தனது கையினால் ஒரு வெட்டு வெட்டியவள், தனது காலினால் அவனது முட்டியை இடித்து அவனை கீழே தள்ளினாள். வேகமாக அவளருகே வந்த இன்னொருவனை இரு கைகளாலும் அறைந்து, அவனது காலை இடறி கீழே தள்ளினாள்.

அவர்கள் சுதாரித்து அவளருகே வரும் போது, "குட் ஷோ ஹனி. இம்ப்ரெஸ்ட் எ லாட்" என சித்தார்த்தின் குரல் கேட்டது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro