Marukkathe Nee Marakkathe Nee - 13
மறக்காதே நீ மறுக்காதே நீ - 13
ஏழாவது நாள்...
காலை மணி பத்து..
சித்தார்த் உணவு முடித்து ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். கெளதமனும், சுநீதியும் உறவினர்களைப் பார்க்க வெளியே சென்றிருந்தனர். வெற்றிவேல் தாத்தா காலை உணவிற்குப் பின் தனது அறையில் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
ஞாபகம் வந்தவனாக தனது மொபலை எடுத்தவன்,
'குட்மார்னிங் மிஸ் சம்யுக்தா வசந்தன், ஜஸ்ட் பதினான்கு நாட்கள்'
என அனுப்பும் போதே சிரிப்பு வந்தது. மனதில் அவளை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்திருந்தது.
"என்ன அண்ணா, ஒரே சிரிப்பாயிருக்கு. சம்யுக்தா ஒகே சொல்லிட்டாங்களா?" என கேட்டபடி அருகே வந்தமர்ந்தான் யதுநந்தன்.
"சொல்லிட்டாலும்..." என முணுமுணுத்தவன், "இன்னும் பதினாலு நாள் இருக்கு, ஹோப் ஃபார் தி பெஸ்ட்" என சிரித்தபடி சொன்னான்.
"யது, நேத்தே உங்கிட்ட கேட்கனும் என்று நினைச்சேன். அன்னிக்கு பூஜையில் திடீரென்று ஏன் அமைதியாயிட்டே?" என கேட்டான்.
"இல்லையே, நான் எல்லார் கிட்டேயும் பேசிட்டுத் தானே இருந்தேன்" என சொல்லி விட்டு தன் மொபலை கையில் எடுத்தான்.
அதை பிடுங்கி எதிரே இருந்த மேஜையில் போட்ட சித்தார்த், "யது.. என்னாச்சு" என கேட்டான்.
"ஒண்ணுமில்லை" என தோள்களைக் குலுக்கியவனது பார்வை ஹாலின் வெளியே இருந்த மரங்களில் பதிந்தது.
"என்ன பிராப்ளம், தாத்தா எதாவது சொன்னாரா? இல்லை அன்னிக்கு பூஜையில் ஏதாவது நடந்ததா?" என கேட்டான்.
"தாத்தா என்னிக்கு என்னை திட்டியிருக்கார்? அவரோட இருந்தாலே ஜாலியா தான் டைம் போகும். மத்தவங்க என்ன சொன்னாலும், ஐ ஜஸ்ட் டோண்ட் கேர்" என சொன்னான்.
"யது, கம் அவுட் வித் இட்" என அவனது தோள்களில் கை வைத்து தன் பக்கம் திருப்பினான்.
"அண்ணா, இந்த காதலை பத்தி நினைச்சாலே, ஹவ் டூ ஸே, இப்படியா ஒரு மனுஷனை கஷ்டப்படுத்தும்?" என கேட்டான்.
"ஏன் என்னாச்சு?" என யதுநந்தனின் முகத்தை ஆராய்ந்தபடி கேட்டான் சித்தார்த்.
ஏதோ சொல்ல வந்தவன், தன் கை முஷ்டியால் சோபாவை குத்தி விட்டு, "அண்ணா, உனக்கே சம்யுக்தாவை கரெக்ட் பண்ண இரண்டு வருஷமாகுது, என் நிலைமையெல்லாம் நினைச்சாலே, கண்ணைக் கட்டுதே ராசா" என அலுத்துக் கொண்டான்.
ஒரு நொடி யோசித்த சித்தார்த், "ஸ்மிருதியாடா?" என ஆர்வத்துடன் கேட்டான்.
அவனை மேலும், கீழேயும் கேவலமாக பார்த்த யதுநந்தன், "நீ என் அண்ணனே இல்லை. போ..." என்றவன், "எங்கண்ணன் எத்தனை ஷார்ப்பா இருந்தான்? நான் ஸ்மிருதியை முதல் தடவை பார்த்த பார்வையிலே, எனக்குப் புரியறதுக்கு முன்னாடியே அவனுக்கு என் மனசில் இருக்கிறது புரிஞ்சிருக்கும். யூ ஆர் டூ லேட் அண்ட் ஸ்லோ. அம்மாவுக்கே புரிஞ்சு அவளை பூஜைக்குக் கூப்பிட்டிருக்காங்க. நீ இப்போ தான் மெதுவா ஸ்மிருதியானு கேள்வி கேட்கிறே" என தலையில் அடித்துக் கொண்டான்.
"யது ஸாரிடா... என் கவனம் சிதறடிச்சி" என என்ன சொல்வதென்று தெரியாமல் வலிந்து புன்னகைத்தவன், "நான் ஸ்மிருதியை காஃபி ஷாப்புக்கு வர சொல்லட்டுமா? நாம மீட் பண்ணலாம்" என சொல்லியபடி போனை எடுத்தான்.
கையெடுத்துக் கும்பிட்ட யதுநந்தன், "அண்ணன், நீ செய்ய வேண்டிய ஒரே வேலை, சீக்கிரம் சம்யுக்தாவை கல்யாணம் செஞ்சி எனக்கு ரூட்டை கிளியர் செய்யறது மட்டும் தான். ஸ்மிருதியை நான் பார்த்துக்கிறேன்" என நக்கலாக சொன்னான்.
"ஒகே, ஆல் தி பெஸ்ட். உன்னால் கண்டிப்பா முடியும்னு எனக்குத் தெரியும்" என அவனை தோளோடு அணைத்துக் கொண்டான்.
"இந்த பெப் டாக்கெல்லாம் எங்கிட்ட வேண்டாம். ஆபிஸோட நிறுத்திக்க" என கடுப்பாக சொன்னவன், "இந்த இரண்டு வருஷம் காத்திருக்கிறது டூ மச்சாக தெரியுது. எனக்கு பத்து நாளே டார்ச்சரா இருக்கு. நீ அதுக்குப் பேசாம அவங்களை கடத்தின போதே தாலி கட்டியிருக்கலாம்" என சீரியசான குரலில் சொன்னாள்.
"ஏன் என் வாழ்க்கையை மொத்தமா நரகமாக்கறதுக்கா? கடத்தினதுக்கே என்னை இரண்டு வருஷமா அலைய விடறா. அப்படி ஏதாவது வலுகட்டாயமா செஞ்சிருந்தா, நான் இருபது வருஷம் சென்னைக்கும், நம்ம ஊருக்கும் அலைஞ்சிட்டிருக்க வேண்டியது தான்" என அலுத்தபடி சொன்னான்.
"இப்பவும் சம்யுக்தா ஒண்ணும் மாறினதா தெரியலை. உனக்கு இன்னும் இரண்டு வாரம் தான் டைம். நீ என்ன செய்வியோ தெரியாது. அதுக்குள்ளே நீ அவங்களை சம்மதிக்க வைக்கிறே. இதில் உன் லைஃப் மட்டுமில்லை. என் லைஃபும் அடங்கியிருக்கு" என்றான் யதுநந்தன்.
"ஏன் யுக்தா சம்மதிக்கலைனா, ஸ்மிருதி சம்மதிக்க மாட்டாளா?" என கவலையுடன் கேட்டான்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஸ்மிருதியை நான் எப்படியும் சம்மதிக்க வைச்சிடுவேன்" என நம்பிக்கையுடன் சொன்னவன், "வீட்டில் இருக்கிற பெரிசுங்க எல்லாம், உனக்கு முன்னாடி நான் கல்யாண்ம் செஞ்சிக்கிட்டா, நான் ஏதோ பெரிசா தப்பு செஞ்சா மாதிரி சீன் போடுவாங்க. நீ சொந்த அண்ணனா இருந்தா நான் அப்படி செய்வேனா என்று சொல்லி இஷ்யூ கிரியேட் செய்வாங்க" என கோபமாக சொன்னான்.
"யூ டோண்ட் வொரி, நான் தாத்தா பாட்டியோட பேசி சம்மதிக்க வைக்கிறேன்" என சொன்ன சித்தார்த்தை ஏளனமாக பார்த்தவன், "நீ அந்த டாஷ் வேலையை பார்க்கிறதுக்குப் பதிலா போய் சம்யுக்தாவை சம்மதிக்க வைக்க உன் முழு திறமையும் காட்டு. அதை செய்யாம உட்கார்ந்து காலையிலே பேப்பர் படிச்சிட்டிருக்கே. இது இப்போ ரொம்ப முக்கியமா?" என கடுப்பாக கேட்டான்.
"இது சென்சிட்டிவான விஷயம் யது. நான் என்ன செய்யறேனு எனக்குத் தெரியும்" என அமர்த்தலாக சொல்லும் போது அவனது செல் போன் அடிக்க, அதில் தெரிந்த பெயரை ஆச்சரியத்துடன் பார்த்தான்.
அந்த ஐந்து நட்சித்திர உணவகத்தின் உள்ளே நுழையும் போதே சித்தார்த், தன்னை போனில் அழைத்தவனை பார்த்து விட்டான்.
"ஹலோ சசிதரன், ஹவ் ஆர் யூ?" என தனது கையை நீட்டினான்.
"ஹலோ சித்தார்த். ஐ ஆம் ஃபைன்" என கையை குலுக்கியவன், எதிரே இருந்த நாறகாலியை காண்பித்தான்.
"ஸாரி சசிதரன், அன்னிக்கு உங்களை மித்ரன் ரிசப்ஷனில் மீட் பண்ண முடியலை. சீக்கிரம் கிளம்பிட்டிங்க போலிருக்கு" என சொன்னான்.
"ஆமாம் ஸிட். யூ கேன் கால் மீ சசி, முன்னாடியே சொன்னேன்" என ஆழமான குரலில் சொன்னான்.
"யா, ஞாபகமிருக்கு. இப்போ பிசினஸ் எப்படியிருக்கு?" என சிரித்தபடி சொன்னான்.
"ரொம்ப பெரிசாயிடிச்சு. நாங்களே இப்போ வேர்ல்ட் வைட் டிஸ்டிரிபியூஷன் செய்யறோம்" என பெருமையாக சொன்னான்.
"தெரியும் சசி, தெற்காசியாவில் நீங்க தான் நம்பர் ஒன்னா இருக்கீங்க. ரீசண்ட் மார்கெட் ரிசர்ச்சை படிச்சேன்" என ஆழ்ந்த குரலில் சொன்னான்.
"குளோபல் லெவலில் உங்களோட போட்டியாளரா மாற எங்களுக்கும் அதிகம் வருஷமாகுது ஸிட். வி ஆர் கிளோபல் பிளேயர்ஸ் நவ்" என அழுத்தமாக சொன்னான் சசிதரன்.
"ஒ இண்ட்ரஸ்ட்டிங்க். இப்போ ஒப்பன் மார்கெட் ஆயிடிச்சு சசி" என சொல்லியபடி அவனை ஆராய்ந்தான் சித்தார்த்.
"ஸிட். நான் உங்களை சந்திக்கனும்னு ஆறு மாசமா நினைச்சிட்டிருந்தேன். ஆனா இப்போ தான் சந்தர்ப்பம் கிடைச்சுது" என சீரியசான குரலில் சொன்னான் சசிதரன்.
"நான் நாலு மாசத்திற்கு முன்னாடி கூட இந்தியா வந்திருந்தேன் சசி. அப்போ மீட் பண்ணியிருக்கலாமே" என சொன்னான சித்தார்த்.
"நீங்க வந்துட்டுப் போன பிறகு தான் தெரிஞ்சுது. அப்போ நான் சிங்கப்பூரில் இருந்தேன்" என யோசனையாக சொன்னான்.
"என்ன சசி, அந்த பழைய பிசினஸ் காண்டிராக்ட் சைன் பண்ணனுமா? இப்போ இருக்கிற மார்க்கெட் ரேட்க்கு மாத்திடலாம். நீ எங்க ஆப்ரேஷன் ஹெட் கூட பேசு. நானும் அவர்கிட்டே சொல்றேன்" என சொன்னான் சித்தார்த்.
"நோ தாங்க்ஸ் ஸிட். நான் சொன்னதை நீங்க ஒழுங்கா புரிஞ்சிக்கலைனு நினைக்கிறேன். ஐ ஆம் யுவர் காம்பிட்டேட்டர்" என சொன்னவனது குரலில் கிண்டல் தொனித்தது.
"ஒகே, அப்போ எதுக்கு என்னை மீட் பண்ணனும்?" என கவனமான குரலில் கேட்டான் சித்தார்த்.
"ப்யூர்லி பர்சனல் ஸிட்" என ஆழ்ந்த குரலில் சொல்லி விட்டு சித்தார்த்தின் முகத்தை தீவிரமாக பார்த்தான்.
"பர்சனல்?' என கேட்ட சித்தார்த், "வாட் கேன் ஐ டூ ஃபார் யூ" என்றான்.
இரண்டு நிமிடம் மெளனமாக இருந்த சசிதரன், "ஸிட், நீ எங்க அப்பா மேல கொடுத்திருக்கிற கேஸை வாபஸ் வாங்கனும்" என அழுத்தமாக சொன்னான்.
இதை எதிர்பார்த்திருந்த சித்தார்த், "சசி, அந்த கேஸ் எனக்கு ரொம்ப முக்கியம். எங்கப்பாவுக்கு நான் செய்ய வேண்டிய கடமை அது. ஸாரி என்னால, அந்த கேஸ் வாபஸ் வாங்க முடியாது" என உறுதியான குரலில் சொன்னான் சித்தார்த்.
"ஸிட், எனக்குப் புரியாம இல்லை. எங்கப்பாவுக்கும் வயசாயிட்டு போகுது. கோர்ட், கேஸ் என்று அலைய முடியலை. இன்னும் சொல்ல போனா உங்களால எங்கப்பாவுக்கு எதிரா எதையும் நிரூபிக்க முடியலை. இன்னும் ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று கேஸ் இழுத்துட்டுத் தான் போகும்" என அமர்த்தலான குரலில் சொன்னான் சசிதரன்.
"தெரியும் சசி. ஆனா வேற வழியில்லை. என்னால் குற்றவாளிக்குத் தண்டனை வாங்கி தராம சும்மாயிருக்க முடியாது" என கோபமான குரலில் சொன்னான் சித்தார்த்.
"ரிலாக்ஸ் ஸிட். எங்கப்பா சந்தன கடத்தலுக்கு உடந்தையா இருந்தார் என்பதை தவிர, உங்கப்பா கொலையில் அவருக்கு சம்பந்தம் இருக்கிங்கிறதை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை. இருபது மூணு வருஷம் முன்னாடி நடந்ததை பத்தி இப்போ கண்டுபிடிச்சு ஒரு பயனும் இல்லை" என நிதானமான குரலில் சொன்னான் சசிதரன்.
"இப்போ வேணா ஆதாரம் இல்லாம இருக்கலாம். ஆனா கண்டிப்பா தேவையான நேரத்தில் ஆதாரம் கிடைக்கும். சசி உங்கப்பா அலையறதை பார்த்தே உனக்கு இவ்வள்வு கஷ்டமாயிருக்கே. எங்க்ப்பா அம்மாவை கொலை செஞ்சிருக்காங்க. நான் அனாதையா வளர காரணமாயிருந்திருக்காங்க. அவங்களை எப்படி நான் சும்மா விட முடியும்?" என தன் குரலை உயர்த்தி சித்தார்த் சொல்லும் போதே. பக்கத்து மேஜையில் உணவருந்தி கொண்டிருந்தவர்கள் திரும்பி பார்த்தனர்.
"ஸிட், காம் யுவர் செல்ஃப். எதுக்கு இப்படி கத்தறீங்க. எனக்குப் புரியாம இல்லை. எங்கப்பா ஜெயிலில் கொஞ்ச நாள் தான் இருந்தார், அதுவே எனக்கு தாங்கவே முடியலை. உங்க கோபம் நியாயமானது தான், அதை ஒத்துக்கிறேன்" என தாழ்ந்த குரலில் சொன்னான் சசிதரன்.
"எல்லோரும் பிறக்கும் போது நல்லவங்களா தான் பிறக்கிறாங்க ஸிட். ஆனா சூழ்நிலை தான் அவங்களை நல்லவங்களாகவோ, கெட்டவங்களாவோ மாத்திடுது. எங்கப்பா தப்பு செஞ்சிருக்கலாம், ஆனா கண்டிப்பா கொலை செய்ய உடந்தையா இருந்திருக்க மாட்டார்" என அழுத்தமான குரலில் சொன்னான் சசிதரன்.
"இல்லை சசி, சூழ்நிலை தான் ஒருத்தனை நல்லவனாவோ, கெட்டவனாவோ அடையாளம் காட்டுது. ஒரு கஷ்டமான சூழ்நிலை வரும் போது தான், அவன் குணம் என்னவென்று நமக்குத் தெரியவே வருது. ஆனா, ஒரு மகனா எனக்கு உன்னோட உணர்வுகள் புரியுது. அதே மாதிரி உணர்வுகள் எனக்கும் இருக்கும்கிறதை நீ புரிஞ்சிக்கிட்டா நல்லாயிருக்கும்" என ஆழ்ந்த குரலில் சொன்னான் சித்தார்த்.
"ஸிட். ஃபைன், எங்கப்பா கேஸை நான் இழுத்தடிக்கலை. அப்படியே விட்டுடறேன். உன்னால் முடிஞ்சா ஆதாரத்தோட நீருபிச்சு அவருக்கு தண்டனை வாங்கி கொடு" என நிதானமான குரலில் சொன்னான்.
"தாங்க்ஸ் சசி. நீ என்னை புரிஞ்சிப்பேனு எனக்கு தெரியும்" என நிம்மதியாக சொன்னான் சித்தார்த்.
"அப்போ நீ எனக்கு ஒரு ஹெல்ப் செய்யனும் ஸிட்" என ஆழ்ந்த குரலில் சொன்னான் சசிதரன்.
"என்ன சசி, யூரோப்பில் உன் பிராடக்டஸ்ஸை மார்கெட்டிங் செய்யனுமா? இல்லை ஆஸ்திரேலியா?" என கேட்டான் சித்தார்த்.
இல்லை என தலையசைத்து மறுத்த சசியை யோசனையுடன் பார்த்தான்.
"சம்யுக்தா.." என மென்மையாக சொல்லிவிட்டு சிரித்தான் சசிதரன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro