Marukkathe Nee Marakkaathe Nee - 6
மறக்காதே நீ மறுக்காதே நீ - 6
"வா மச்சான்" என சித்தார்த்தை வரவேற்ற அகிலன், யதுநந்தனை தீவிரமாக பார்த்து, "உன்னை எப்படி கூப்பிடறது? அமிதாவிடம் ஏதோ சொன்னியாமே?" என ஆழ்ந்த குரலில் கேட்டான்.
"நீங்க யது, நந்தன், இல்லைனா யதுநந்தன் என்று இப்போதைக்குக் கூப்பிடலாம்" என அமர்த்தலாக சொன்னான்.
சித்தார்த் இவர்களைக் குழப்பமாக பார்க்க, "இப்போதைக்கு அப்படி கூப்பிடலாம் என்றால் என்ன அர்த்தம்?" என தீவிரம் குறையாமல் கேட்டான் அகிலன்.
"சுமிதா எனக்கு ஒகே சொன்னா சகலைனு கூப்பிடலாம். சம்யுக்தா சித்தார்த்துக்கு ஒகே சொன்னா, சின்ன மாப்பிளை என்று சொல்லலாம். அப்பறம்.." என நிறுத்தியவன், வேகமாக சம்யுக்தாவின் பின்னே சென்று நின்று கொண்டு, "அமிதா எனக்கு ஒகே சொன்னா.." என இழுத்தபடி நிறுத்தினான்.
"உன்னை.." என கோபமாக அகிலனும், வேகமாக சித்தார்த்தும் நெருங்கி வர, "சம்யுக்தா காப்பாத்துங்க" என தன் கைகளால் முகத்தை மூடி கொண்டான்.
"அகில், சித்தார்த்" என சத்தமாக அமிதா கூப்பிட, இருவரும் திரும்பி பார்த்தனர்.
"அவனை விடுங்க" என அழுத்தமாக கூறியவள், "அவன் சின்ன பையன். ஏதோ விளையாட்டுக்குச் சொல்லிட்டிருக்கான். ஹி ஹிஸ் ஹார்ம்லெஸ்" என சொன்னவள், "நந்தன், அடங்கவே மாட்டியா?. இப்படி சொல்றது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும். விளையாட்டுத்தனத்துக்கும், அதிகபிரசங்கிதனத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு" என தடித்த குரலில் சொன்னாள்.
"நீ சொல்லி நான் கேட்காம இருப்பேனா அமி.." என மெலிதான குரலில் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்ன யதுநந்தன், "செல்லம்" என சத்தமாக முடித்தான்.
"டேய்" என கத்திய அகிலன் என்ன செய்திருப்பானோ, மித்ரனும், மயூரியும் உள்ளே நுழைந்தனர்.
"ஹாய் மயூரி, ஹலோ மித்ரன்" என வரவேற்றாள் அமிதா.
"வாங்க மயூரி" என்ற அகிலன், "என்னடா புதுமாப்பிள்ளை, கால் தரையில் தான் இருக்கா? இல்லை.." என மித்ரனைப் பார்த்து சிரித்தபடி சொன்னான்.
"என் கால் இப்போதைக்குத் தரையில் தான் இருக்கு. நாளைக்குத் தான் இரண்டு பேருமே சேர்ந்து பறக்கிறோம்" என மலர்ந்த முகத்துடன் சொன்னான்.
அப்போது தான் சித்தார்த்தை கவனித்த மயூரி, "ஹாய் சித்தார்த்" என்றாள். மித்ரனும் அவனை திரும்பி பார்த்து சினேகமாய புன்னகைத்தான்.
"ஹாய் நந்தன், கல்யாணத்தில் உன்னோட பேச நேரமே கிடைக்கலை. இங்கே டைம் எப்படி போகுது?" என கேட்டான் மித்ரன்.
"மித்ரன், ஹி ஹிஸ் வெரி டேஞ்சரஸ். அவனுக்கு டைம் எப்படி போகுதா? எங்களுக்குத் தான் அவன் வந்ததிலிருந்து டைம் சரியில்லை. எங்க எல்லாருடைய உசிரையும் வாங்கறான்" என கடுப்பாக சொன்னான் அகிலன்.
"நந்தன், அப்படி என்னடா பண்ணே?" என மித்ரன் ஆர்வமாக கேட்டான். முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டவன், "தெரியலை மித்ரன். அவருக்கு ஏதோ இன்செக்யூரிட்டி காம்பளெகஸ்" என உதட்டைப் பிதுக்கினான்.
"இன்னும் ஒரு மாசம் இங்கே தானே இருக்க போறே, எங்கிட்ட கண்டிப்பா மாட்டுவேடா மவனே" என பற்களைக் கடித்தபடி சொன்னான் அகிலன்.
"அமி, உன் புருஷன் எப்படி என்னை மிரட்டரான் பாரு" என எழுந்து அமிதாவின் அருகே செல்ல இருந்தவனை கையைப் பிடித்து, தன்னருகே அமர்த்திக் கொண்டான் அகிலன்.
"நீ டின்னர் முடியறவரைக்கும், என் பக்கத்திலேயே இரு" என அவனது கைகளைப் பிடித்துக் கொண்டான்.
இவர்கள் பேசுவதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சம்யுக்தாவை, சித்தார்த்தின் கண்கள் ஆசையுடன் ரசித்துக் கொண்டிருந்தன. ஏதோ தோன்ற திரும்பியவள், அவனது பார்வை தன் மேல் படிந்திருப்பதை உணர்ந்து முகத்தை வேகமாக மறுபுறும் திருப்பிக் கொண்டாள்.
எத்தனை திமிராக இருபது நாட்களுக்குள் என்னை காதலிக்க வைக்கிறேன் என்று சொன்னான். இவன் வந்து நின்றவுடன், நடந்த அனைத்தையும் மறந்து விடுவேன் என்று நினைத்தானா? இவன் இருக்கும் பக்கம் கூட திரும்ப கூடாது என்று முடிவு செய்தாள்.
அமிதா அனைவரையும் சாப்பிட அழைக்க, சம்யுக்தா யதுநநதன் அருகே அமர்ந்து சாப்பிட்டாள். எதிரே அமர்ந்திருந்த சித்தார்த்தின் பார்வை தன் மேல் இருப்பதை உணர்ந்தும், ஒரு முறை கூட அவனை பார்க்கவே இல்லை.
"அமிதா, உங்க சமையல் சூப்பரா இருந்தது. நீங்க இவ்வளவு அருமையா சமைப்பீங்க என்று தெரியவே தெரியாது" என சொன்னாள் மயுரி.
"அமிக்கு நிறைய விஷயம் தெரியும். சில பேருக்கு மட்டும் தான் எல்லா வேலையும் செய்ய வரும். ஐ ஆம் ரியலி பிரவுட் ஆஃப் ஹெர்" என அவளது தோளின் மேல் கையை வைத்து அணைத்துக் கொண்டான் அகிலன்.
"ஆமாம். அமி, எனக்கும் உன்னை நினைச்சாலே பெருமையா இருக்கு. உன்னை மாதிரியே உன் சமையலும் நல்லா இருந்தது. நான் இங்கே டெய்லி வந்து உன்னோட லஞ்ச் சாப்பிடறேன்" என யதுநந்தன் சொன்னவுடன், "சித்தார்த், உன் தம்பி கையை காலை உடைச்சிட்டுத் தான் அமெரிக்கா திரும்பி போவான் என்று நினைக்கிறேன்" என அழுத்தமான குரலில் சொன்னான் அகிலன்.
"யது.." என மிரட்டும் குரலில் சித்தார்த் அழைக்க, "ஐ வில் பிஹேவ்" என மெதுவான குரலில் சொன்னான் யதுநந்தன்.
மித்ரன் நடப்பது எதுவும் புரியாமல் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்க்க, மயூரி அடக்க முடியாமல் சிரித்து விட்டாள்.
அவள் சிரிப்பதை காதலுடன் மித்ரன் வைத்த கண் எடுக்காமல் பார்க்க, "மயூரி, நீங்க சிரிச்சா ரொம்ப அழகாயிருக்கு. நீங்க சிரிக்கும் போது, உங்க கண் அழகா மலருது. சிரிக்கற சத்தமே வர மாட்டேங்குது, அப்படியே ஒரு டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ் மாதிரியிருக்கு" என சொன்னான் யதுநந்தன்.
அவன் சொன்னதைக் கேட்டதும் மித்ரனின் முகம் லேசாக கறுத்தது. தன் கை முஷ்டியை மடக்கி கோபத்தை அடக்கி கொண்டான்.
"தாங்க்ஸ் நந்தன்" என மயூரி சொன்னவுடன், மித்ரனுக்கு உள்ளுக்குள் எழுந்த எரிச்சலை கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்தது.
சித்தார்த் இயல்பாக சூழ்நிலையை எளிதாக்க, "அமிதா, டெஸர்ட் பாதாம் கீர் தானே? சூப்பரா இருந்தது" என்றான்.
"ஏன் ஸிட், மத்த ஐட்டமெல்லாம் நல்லாயில்லையா?" என நிதானமான குரலில் கேட்டாள் அமிதா.
"மத்த ஐட்டமெல்லாம் நல்லாயிருந்தது. ஆனா, கீர் ரொம்ப நல்லாயிருந்தது. எப்படி சொல்றது, செர்ரி ஆன் தி டாப்" என்றான்.
"உனக்கு அது தான் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்" என கிண்டலாக சொன்னவள், திரும்பி சம்யுக்தாவைப் பார்த்து, "சம்யு தான் பாதாம் கீர் செஞ்சா" என சொன்னாள்.
"ஓ, இஸிட். யுக்தாவுக்குச் சமைக்க தெரியுமா?" என ஆர்வமாக கேட்டான் சித்தார்த்.
"சம்யு நல்லா சமைப்பா. ஆனா அவளுக்கு மூட் இருந்தா தான் சமைப்பா" என மித்ரன் பெருமையாக சொன்னான்.
"தட்ஸ் ஃபைன். எனக்கும் சமைக்க தெரியும். அவளுக்கு மூட் இருந்தா சமைக்கட்டும், இல்லைனா நான் பார்த்துக்கிறேன்" என அவளைப் பார்த்து நக்கலாக சொன்னான்.
பக்கத்திலிருந்த தண்ணீர் பாட்டிலை அவன் மேல் எடுத்து வீச வேண்டும் என்று தோன்றியதைக் கஷ்டப்பட்டு அடக்கியவள், "மித்ரன், வீட்டுக்குப் போலாம். நாளைக்கு காலையில் நீங்க சீக்கிரம் கிளம்பணும்" என பற்களைக் கடித்தபடி சொன்னாள்.
"ஒகே, குட் நைட். கிளம்பறேன்" என பொதுவாக சொல்லிவிட்டு மித்ரன் வாசற்படியை நோக்கி நடந்தான்.
"மித்ரன், எத்தனை நாள் டிரிப்?" என சாதாரணமாக கேட்டான் யதுநந்தன்.
"ஒரு வாரம் நந்தன்" என மித்ரன் சொன்னவுடன், "மயூரி, ஹாவ் எ நைஸ் டிரிப். ஐ வில் மிஸ் யுவர் ஸ்மைல். நீங்க சிரிச்சா பார்த்துக்கிட்டே இருக்கலாம். நீங்க ஊரிலிருந்து வந்தவுடனே எனக்குக் கால் பண்ணுங்க. என் நம்பர்.." என யதுநந்தன் சொல்லும் போதே மித்ரன், "நந்தன், உதை வாங்க போறே" என கடுப்பாக சொன்னான்.
அகிலன், "மித்ரன், வந்த போது கேட்டே இல்ல? இவன் இதை தான் செய்யறான். பரவாயில்லை. எனக்கு மட்டும் தான் இவன் சொல்ற மாதிரி இன்செக்யூரிட்டி ஃபீலிங்னு நினைச்சேன். சேம் பிளட் ஃபார் யூ டூ" என சொன்னவனது குரல் தீவிரமாக இருந்தது.
"சித்தார்த்" என அழுத்தமாக கூப்பிட்ட மித்ரன், "உங்கூட தனியா பேசணும்" என்று யதுநந்தனை பார்த்தபடி சொன்னான்.
"மித்ரன், ஹி ஹிஸ் ஜஸ்ட் கிட்டிங். இவ்வளவு சீரியசாக இதை நீங்க எடுத்துக்க வேண்டாம்" என இளகிய குரலில் சொன்னாள் மயூரி.
அவளைப் பார்த்து மையமாக தலையசைத்தவன், சித்தார்த்துடன் கீழே இறங்கி சென்றான்.
அமிதாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு மயூரியுடன், சம்யுக்தா கீழே இறங்கி வந்தாள். தனது காரின் அருகே நின்றபடி சித்தார்த்துடன் பேசி கொண்டிருந்தான் மிதரன்.
"அண்ணி, நீங்க மித்ரனோட காரில் வாங்க. நான் என் வண்டியில் வந்துடறேன்" என்றாள் சம்யுக்தா.
"நீயும் எங்களோட வந்துடு சம்யு. எதுக்கு நைட்டில் தனியா வண்டி ஒட்டி ரிஸ்க் எடுத்துக்கிறே?" என கவலையுடன் சொன்னாள் மயூரி.
"அண்ணி, எனக்கு நாளைக்கு காலையில் வண்டி வேணும். டெய்லி ஆபிஸிலிருந்து நைட் வண்டியில் தான் வரேன். நீங்க கவலைப்படாதீங்க" என தனது ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள்.
"டேக் கேர்" என்று சொன்ன மயூரியை பார்த்து தலையசைத்து விட்டு சென்றாள் சம்யுக்தா.
மயூரி காரின் அருகே வந்தவுடன் மித்ரன், "ஒகே ஸிட், பை. நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்" என ஆழ்ந்த குரலில் சொன்னான் மித்ரன்.
"ஷுயூர். இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் டென்ஷனாகாதே. நீ ஹாப்பியா போயிட்டு வா" என சொன்னான் சித்தார்த்.
"ஸிட். இப்போ இது சின்ன விஷயமா இருக்கலாம். ஆனா வளர விட்டா, நமக்குத் தான் பிரச்சனை. உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்" என சொன்ன மித்ரனின் முகம் கறுத்திருந்தது.
"மித்ரன், என்னை நம்பு" என சிரித்தபடி சொன்னான் சித்தார்த்.
"ஸிட், அகிலனுக்கு ஏற்கனவே நிறைய பிரச்சனை இருக்கு. ஆபிஸில் இப்போ அவன் கிரிட்டிக்கல் கேஸ் ஹாண்டில் செஞ்சிட்டிருக்கான். அவன் கவனத்தை இந்த மாதிரி விஷயம் சிதறடிச்சிடும்" என கவலையுடன் சொன்னான் மித்ரன்.
"ஐ அண்டர்ஸ்டாண்ட்" என யோசனையுடன் சொன்னான் சித்தார்த்
"தாங்க்ஸ் ஸிட். குட் நைட்" என்றான்
"ஹாவ் எ லவ்லி டைம் மித்ரன். அங்கே போனவுடனே இதெல்லாம் உனக்கு ஞாபகமே வராது. ஒரு வாரம் அப்படியே ஒரு நிமிஷமா ஒடி போயிடும்" என அர்த்தத்துடன் சிரித்தபடி சொன்னான் சித்தார்த்.
"இன்னும் ஒரு மாசத்துக்குப் பிறகே இதையே நான் உனக்கு சொல்ல போறேன் பாரு" என சிரித்தபடி சொன்னான் மித்ரன்.
"உன் தங்கை என்னை திரும்பி கூட பார்க்க மாட்டேங்கிறா" என முணுமுணுப்பாக சொன்னான் சித்தார்த்.
"ஸிட், அவ மனசோட காயம் இன்னும் ஆறாம அப்படியே தான் இருக்கு. அவசரப்பட்டு எதையாவது செஞ்சு அவளை இன்னும் காய்ப்படுத்திடாதே. என்னால் தாங்க முடியாது" என கவலையுடன் சொன்னான் மித்ரன்.
அவனது தோள்களை ஆதரவாக தட்டிய சித்தார்த், "எனக்கு சக்தி இருந்ததுனா, அந்த அஞ்சு நாட்களை எங்க இரண்டு பேரோட வாழ்க்கையிலிருந்தும் அழிச்சிடுவேன். ஆனா இப்போ வேற வழியில்லை. அந்த நாட்களை மறக்க முடியலைனா கூட அவ அதை கடந்து வந்தா எனக்குப் போதும்" என சொன்னான்.
"ஆல் தி பெஸ்ட்" என சொல்லிவிட்டு காரை கிளப்பினான் மித்ரன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro