Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Marakkuthe Nee Marakkathe Nee 24

மறக்காதே நீ மறுக்காதே நீ - 24
பதினெட்டாம் நாள்...

காலை பதினோரு மணி

"நந்து, எதுக்கு என்னை உடனே பார்க்கணும் என்று சொன்னீங்க" என கேட்டபடி அவன் எதிரே காப்பி ஷாப்பில் அமர்ந்தாள் ஸ்மிருதி.

"எதுக்கா, அடிப்பாவி.. உன்னை வைச்சிட்டு நான் என்ன செய்ய போறேனோ?" என அலுத்த குரலில் சொன்னான்.

"விளையாடாதீங்க நந்து. பாதி எடிட்டிங்கில் இருந்து வந்திருக்கேன். இன்னிக்கு நைட் அதை டெலிகாஸ்ட் செய்யணும்" என பதற்றமான குரலில் சொன்னாள்.

"யாரு விளையாடறது. கவிதை மாதிரி பிரபோஸ் செய்ய மட்டும் தெரியுது. ஆனா பிராக்ட்டிக்லா ஒண்ணும் காணோம்" என சலித்த குரலில் சொன்னான்.

"நந்து.. எனக்கு வேலையிருக்கு" என கெஞ்சும் குரலில் சொன்னாள் ஸ்மிருதி.

"நந்து என்று கூப்பிட்டா மட்டும் பத்தாது. பிரண்ட் மாதிரி எதிரே உட்கார்ந்திருக்கே" என எரிச்சலாக சொன்னான்.

"என்னாச்சு உங்களுக்கு. திடீரென்று இப்படி பேசறீங்க" என தாழ்ந்த குரலில் கேட்டாள்.

"ஸ்ம்ரு. நீ பிரபோஸ் செஞ்சதிலிருந்து உன்னை உடனே பார்க்கணும் என்று நினைச்சேன். நேற்று முழுக்க உனக்காக காத்திட்டிருந்தேன். நீ ஒரு போன் கூட செய்யலை" என புலம்பினான்.

"நந்து, நேத்து எனக்கு சேனலில் பிஸியா வேலையிருந்தது. நீங்க போன் செஞ்ச போது நான் நாளைக்கு பார்க்கலாம் என்று சொன்னனே. இன்னிக்கும் வேலை அதிகமாயிருந்தது. ஸாரி ஸ்வீட் ஹார்ட்" என மெதுவே சொன்னாள்.

"நீ ஸ்கிரிப்ட் எழுத தான் சரிபடுவே. இப்போ சொன்னியே ஸ்வீட் ஹார்ட், அதை எப்படி ஃபீல் செஞ்சி சொல்லணும் தெரியுமா?' என அவளது கைகளை மெதுவே பற்றினான்.

"ஸ்வீட்டி.." என ஆழ்ந்த குரலில் சொல்லியபடி அவளைப் பற்றியிருந்த கைகளிலிருந்த விரல்களில் தன் விரல்களை கோர்த்து கொண்டான்.

"நந்து.." என அதற்கு மேல் சொல்ல முடியாமல் மெதுவே அவனது விரல்களிலிருந்து அவளது விரல்களுக்கு வெப்பம் பரவுவதை உணர்ந்தாள்.

"எல்லோரும் இருக்காங்க" என அவள் தனது கைகளை இழுத்து கொள்ள முயன்ற போது, அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவன், "யாருக்கும் மத்தவங்களை கவனிக்க நேரமில்லை ஸ்ம்ரு" என கண்கள் மின்ன சொன்னான்.

"நந்து.. பிளிஸ்" என தனது விரல்களை விடுவித்துக் கொண்டவள், "எனக்கு ஒரு இரண்டு நாள் டைம் கொடுங்க" என்றாள்.

"ஃபைன். நானும் அதை பத்தி தான் பேச தான் உன்னை வர சொன்னேன். சித்தார்த் இரண்டு நாளா டென்ஷனா இருக்கான். அவங்கப்பா கேஸ் விஷயத்தில் ஏதோ பிராப்ளம் போலிருக்கு. சம்யுக்தாவும் இன்னும் அவனுக்கு ஒகே சொல்லலை போலிருக்கு. அவன் என்னை விட ஸ்டராங்கான ஆள் தான். ஆனா, இப்போ எமோஷன்லா டிஸ்டர்ப்ட்டாக இருக்கான்" என சொல்லிவிட்டு நிறுத்தினான்.

"புரியுது நந்து. நான் இன்னும் எங்க வீட்டிலேயும், சம்யுக்தாவிடமும் கூட சொல்லலை" என மெலிதான குரலில் சொன்னாள்.

"எதை சொல்லலை ஸ்ம்ரு" என முகத்தை ஒன்றும் தெரியாதவன் போல் வைத்துக் கொண்டு கேட்டான் யதுநந்தன்.

மேஜை மேலிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து எட்டி அவனை இரண்டு போடு போட, அவளின் இரண்டு கைகளையும் கெட்டியாக பிடித்துக் கொண்டான்.

"நந்து, விடுங்க.." என அவள் கெஞ்சியும் கைளை விடாதவன், "ஹ்ம்ம்.. இப்போ சொல்லு" என அவளைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான்.

"நந்து.. எல்லோரும் பார்க்கிறாங்க" என சொல்லும் போதே கண்கள் நீர்த்து, வெட்கத்தினால் முகம் சிவந்து விட்டது.

"அப்போ சீக்கிரம் சொல்லு" என பிடியை விலக்காமல் அவன் ஆழ்ந்த குரலில் சொன்னான்

"லவ் யூ நந்து" என் கண்களை மூடி சொன்னவளிடம், "லவ் யூ ஸ்மிருதி" என மென்மையான குரலில் சொன்னான் யதுநந்தன்.

அவன் பிடியை தளர்த்தியவுடன், மெதுவே தனது சீட்டில் அமர்ந்தாள்.

அதுவரை இயல்பாக பேசி கொண்டிருந்த யதுநந்தன், ஸ்மிருதியிடமிருந்து தன் பார்வையை வலுகட்டாயமாக விலக்கி சுற்றிலும் பார்த்தான்.

தன்னை சமன்படுத்தியவள், "என்ன நந்து?" என கேட்டாள்.

"தப்பு பண்ணிட்டேனா என்று யோசிக்கிறேன் ஸ்மிருதி. கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேனோ என்று யோசிக்கிறேன்" என கண்கள் அலைபாய சொன்னான்.

"ஏன் நந்து, சித்தார்த் சம்யுக்தா விஷய்ம முடியற வரைக்கும் நம்ம காதலை நான் வெளியே சொல்லலை. எனக்கு உங்க மனநிலை புரியுது" என சொல்லி விட்டு அவனது கைகளைப் பற்றினாள்.

"இது சித்தார்த் விஷயமில்லை ஸ்மிருதி. நான் இப்போ தான் பார்த்தேன். அந்த முதல் டேபிளில் ரெட் கலர் டாப்ஸ் போட்டிருக்கிற பொண்ணு, ஸ்வீட்டா, கியூட்டா இருக்கா. அவளை முதலில் பார்த்திருந்தா, அவகிட்ட.." என யதுநந்தன் சொல்லும் போதே, எழுந்த ஸ்மிருதி தனது கைபையினால் அவனை மொத்த தொடங்கினாள்.

"ஸ்ம்ரு. ஸ்டாப்.. ஸ்டாப்" என அவன் கத்தியவுடன் நிறுத்தியவள், "அவ கூடவே போய் காப்பி சாப்பிடு" என சொல்லி விட்டு வேகமாக வெளியே சென்றாள்.

முகத்தில் உறைந்த சிரிப்புடன் தனது காரை ஸ்டார்ட் செய்தவள், வெளியே வந்த யதுநந்தனை பார்த்து கையசைத்து விட்டு சென்றாள்.

"ஹலோ யுக்தா," என செல்போனில் சித்தார்த்தின் குரல் கேட்டவுடன் இதயம் இருமடங்கு வேகமாக அடித்துக் கொண்டது.

"ஹ்லோ சித்தார்த்" என மெதுவாக சொன்னாள்.

"நான் கேட்டா ரைட்டர் பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?" என கேட்டான்.

அவன் நேரடியாக ரைட்டரைப் பற்றி கேட்டது சற்றே ஏமாற்றமாக இருந்தது.

"ஆபிஸில் கேட்டிருக்கேன். ஏதாவது தெரிஞ்சா உங்களுக்கு உடனே கால் செய்யறேன்" என உணர்ச்சியின்றி சொன்னாள்.

"ஒகே தாங்க்ஸ், பை யுக்தா" என இணைப்பை துண்டிக்க இருந்தவனை, "சித்தார்த்.." என அவசரமாக அழைத்தாள்.

"என்ன யுக்தா" என கேட்டவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தாள். தன்னிடம் வேறு எதையும் பேசுவதற்கு அவனுக்குத் தோன்றவில்லையா என்ற ஏக்கம் எழுந்தது. குறைந்தது ஹவ் ஆர் யூ என்றாவது கேட்டிருக்கலாமே என்று தோன்றியது.

"யுக்தா.." என சற்றே உயர்ந்த குரலில் சித்தார்த் அழைக்கவும், "அவரிடமிருந்து என்ன இன்ஃபோர்மேஷன் வேணும்?" என அவசரமாக கேட்டாள்.

ஒரு நொடி மெளனமாக இருந்தவன், "நான் அதை அவரிடமே சொல்லிக்கிறேன்" என சொல்லி விட்டு போனை வைத்து விட்டான்.

சம்யு: என்ன யுக்தா பல்ப் வாங்கின போலிருக்கு?

யுக்தா: அதெல்லாம் இல்லை.

சம்யு: சமாளிக்காதே, கண் ஒரத்திலே என்ன தண்ணியா?

யுக்தா: இல்லையே, லைட் வெளிச்சத்தில் அப்படி என் கண் அப்படி தெரியுது

சம்யு: பயங்கர ஃபார்மலா பேசினான். நீ எப்படியிருக்கேனு கூட கேட்கலை

யுக்தா: அவங்கப்பா கேஸ் விஷயமா டென்ஷனா இருக்கான்.

சம்யு: எனக்கு என்னமோ அவன் கொஞ்சம் கொஞ்சமா உங்கிட்டேயிருந்து விலகறா மாதிரி தோணுது.

யுக்தா: நேத்து கூட மெசெஜ் அனுப்பினானே? விலகற எண்ணம் இருந்தா எதுக்கு மெசெஜ் அனுப்பணும்?

சம்யு: அவன் இதுவரை தினமும் காலையில் தானே மெசெஜ் அனுப்பினான். நேற்று ஏன் அவன் நைட் அனுப்பனும்?

யுக்தா: அவன் காலையில் மும்பை போயிருந்தான். அவங்கப்பா கேஸ் விஷயத்தில் பிஸியா இருந்திருப்பான்

சம்யு: அதான் சொல்றேன். நீ அவனுக்கு சம்மதம் சொல்றதா தெரியலை. சரி, இவ வேலைக்கு ஆக மாட்டா என்று நினைச்சிருப்பான். இந்தியா வந்ததுக்கு அப்பாவோட கேஸையாவது முடிச்சிடலாம் என்று நினைச்சிருப்பான். பதினைஞ்சு நாளா காலையிலே நீ தான் அவனுக்கு முதலில் நினைவுக்கு வந்தே. இப்போ எல்லா வேலையும் முடிச்ச பிறகு தான் நீ நினைவுக்கு வரே. இன்னும் இரண்டு நாள் போனா உன்னை சுத்தமா மறந்துடுவான்.

யுக்தா: என்னை அழ வைக்க முயற்சிக்காதே.

சம்யு: நேத்து தான் பிஸியா இருந்தான். இன்னிக்கு சென்னையில் தானே இருக்கான். ஏன் இன்னும் மெசெஜ் அனுப்பலை

யுக்தா: லூஸா நீ, எதுக்கு மெசெஜ் அனுப்பனும், அவன் தான் எங்கூட பேசினானே?

சம்யு: என்ன பேசினான்? அவங்கப்பா கேஸ் பத்தி கேட்டான். உன்னை என்ன மானே தேனே பொன்மானே என்றா கூப்பிட்டான்? இன்னிக்கு எப்பவும் உன்னை கூப்பிடுவானே, ஹனி என்றா கூப்பிட்டான். யுக்தா என்று தானே கூப்பிட்டான்.

யுக்தா: கெட் லாஸ்ட், நீ என்னை குழப்பாதே

சம்யு: என்னை கெட் லாஸ்ட் என்று சொல்றதால் எதுவும் ஆகாது. இன்னும் இரண்டு நாள் தான் நீ ஸ்ட்ராங்கா இருக்கணும். அன்னிக்கு அவன் என்ன திமிரா உன்னை சாய்க்க இருபது நாள் போதும் என்று சொன்னான்.

யுக்தா: அது அவன் திமிரா சொல்லலை. எங்க காதல் மேல இருந்த நம்பிக்கையில் தான் சொன்னான்

சம்யு: உங்க காதலா? இது என்ன புது கதையாயிருக்கு

யுக்தா: கெட் லாஸ்ட்

என சொல்லும் போதே நெஞ்சில் பாரம் ஏறியது.

வீட்டில் வந்து இரவு உணவு சாப்பிடும் போது சம்யுக்தாவின் மனதில் சித்தார்த்தை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள்.

"என்னாச்சு சம்யு, ஏதோ மாதிரி இருக்கே?" என மயூரி கேட்டாள்.

"ஒண்ணுமில்லை அண்ணி" என்ன சொல்லிவிட்டு பாதி சாப்பாட்டிலே எழுந்து சென்று தனது அறையில் படுத்துக் கொண்டாள்.

தூக்கம் வராமல் தனது அறையின் பாலகனியில் வந்து நின்றாள். சித்தார்த் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் என யோசித்தாள். தனக்கு ஏன் இன்னும் அவன் மெசெஜ் அனுப்ப வில்லை என யோசித்தாள்.

"சித்து" என வாய் விட்டு சொன்னவள், முன்பு போல் அவனை நினைக்கும் போது மனதில் எந்த உறுத்தலும் தோன்றவில்லை என்பதை உணர்ந்தாள். அவன் அப்பாவின் கேஸில் எதையும் செய்ய முடியவில்லை எனப்தால் கவலையாக இருப்பானோ என நினைத்தாள்.

அவனிடம் பேச வேண்டும், அவன் குரலை கேட்க வேண்டும் என்று மனதில் தோன்றியது. தனது மனதை திசை திருப்ப முயன்றும் முடியாமல், கை தன்னிச்சையாக அவனது எண்ணை செல்போனில் அழுத்தியது.

இரண்டு ரிங் போனவுடன், சித்தார்த் போனை எடுத்து, "ஹலோ யுக்தா" என்றான்.

அவனது குரலை கேட்டவுடனே மனம் சற்றே அமைதியடைந்ததை உணர்ந்தவள், "ஹலோ சித்தார்த்" என்றாள்.

"என்ன யுக்தா, யசோசக்தியை பத்தி ஏதாவது விவரம் தெரிஞ்சுதா?" என ஆவலுடன் கேட்டான்.

"இல்லை.." என இழுத்தவள், "ஆபிஸில் கேட்டிருக்கேன். ரிப்போர்ட்ர்ஸ் கிட்டேயும் கேட்டிருக்கேன். மத்த ரைட்டர்ஸிடமும் கேட்டிருக்கேன்" என மெதுவான குரலில் சொன்னாள்.

"ஒ, தாங்க்ஸ். எப்போ எந்த விவரம் தெரிஞ்சாலும் எனக்கு உடனே கால் பண்ணு" என சொன்னான்.

"கண்டிப்பா கால் செய்யறேன்" என அவள் சொன்னவுடன், "பை யுக்தா" என உடனே போனை வைத்து விட்டான்.

அவன் காலையில் பேசியதையே, இரவும் பேசியதை உணர்ந்தவள், தான் எதற்கு கால் செய்தோம் என்று கூட சித்தார்த் கேட்கவில்லை என்பதை உணர்ந்தாள்.

கண்களின் ஒரத்தில் இருந்து கசிந்த நீரை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தாள். அவளது இதயத்தை ஏதோ இறுக்கமாக கவ்வி பிடித்திருப்பதாக தோன்றியது.

மெளனமாக அழுதப்படியே அவள் தூங்கிய பிறகு, அவளது மொபைல் குவிக் என்றது.

'குட்நைட் மிஸ் சம்யுக்தா வசந்தன், ஜஸ்ட் மூன்று நாட்கள்'

என்ற சித்தார்த் அனுப்பிய மெசெஜ் அனுப்பியதை அன்று சம்யுக்தா படிக்கவில்லை.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro