3. மீண்டும் என்னை அழைக்காதே
கவிதையில் லயித்திருந்த எனக்கு,
கனவுகள் தந்தவளே..!
கனவுகள் கலையும் முன்னே
கதவையடைத்தது ஏன்?
வீதியில் பயணித்திருந்த என்னை
விண்ணுலகிற்கு அழைத்து சென்று
விழிகள் திறக்கும் முன்னே
விட்டுவிட்டு சென்றதெங்கே?
கடலில் தத்தளித்து நீந்நி
கரையேரும் நேரத்தில்
மீன் விழியை திறக்காதே
மீண்டும் என்னை அழைக்காதே..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro