பகுதி - 1
செங்கதிரவனின் செந்நிறத்தில் அந்த
சாலை காட்சியளிக்க அங்கு ஒருவனோ சரக்குந்தின் சக்கரங்களுக்கு இரையாகி இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான்.
பத்திரிக்கையாளர்களின் புகைப்படக் கருவி ஒன்று விடாமல் அதை சேகரித்துக் கொண்டிருக்க
" இது கொலையா ? தற்கொலையா? " இந்த சரக்குந்து பழுதடைந்து இரண்டு நாட்களாக இங்கு நின்று கொண்டிருக்க அவர் எப்படி சக்கரத்தில் சிக்கி இறந்தார் என்பது கேள்விக் குறியாக உள்ளது.. " என்று பத்திரிக்கை நிருபர் ஒருவர் பேசிக் கொண்டிருக்க
மறுபுறமோ காவலதிகாரிகள் எப்படி இந்த மரணம் நடந்தது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க அந்தோ பரிதாபம் இறந்தவரின் முகம் கூட அடையாளம் தெரியாமல் சிதைந்திருந்தது...
கொலைகள் தொடரும்....
நான் உங்கள்
தனுதீரன்
என்ற தொடர்கதையை படித்து முடித்தவள் " ச்சச யாருடா இந்த தனுதீரன்...முடியல மண்டையை வெடிக்க வைத்துவிடுவார் போல..
கதையில் சில திருப்பங்கள் இருக்கலாம்...திருப்பங்கள் மட்டுமே கதையாக இருந்தால் எப்படி " என்று புலம்பிக் கொண்டிருந்தவளின் மண்டையில் அடித்த வாசுவோ "நீ ஏன் தான் தனுதீரன் கதைக்கு இவ்வளவு வெறியா இருக்கியோ...அதில நடக்கும் கொலைகளைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது " என்றவளின் பூந்தளிர் மேனி நடுங்க ஆரம்பித்தது...
ஒரே ஒரு பகுதி படித்ததன் விளைவு அது.
" வா காபி குடிக்க போகலாம் " என்று அழைத்த வாசு என்கிற வாசுகியிடம் "ம்ம் சரி " என்றவாறு தலையசைத்தவள் சிறிது தலையை எட்டிப்பார்த்து தேட
" உன் தேடல் நாயகன் வெளியே சென்று விட்டார் " என்றவளின் வார்த்தையைக் கண்டு வாடியவள் ஒரு சோர்வுடனே அந்த பத்திரிக்கையை பத்திரமாக ஒரு இடத்தில் வைத்து விட்டு எழுந்து சென்றாள்.
அது ஆறடுக்குகளைக் கொண்ட கட்டிடம்...
புகழ்பெற்ற ஸ்கை டிவி...
நாளிதழ்,வார இதழ் என பலவற்றை எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு மட்டுமே ஐந்தாவது தளம்.
ஒவ்வொருவர் ஒவ்வொரு பிரிவில் இருக்க இவளோ கவிதைகள் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள்.
ஆறாவது தளம் சிற்றுண்டி சாலை...
ஆறாவது தளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தவர்களை "ஜோ" என்ற குரல் அழைக்க திரும்பியவள்
தன் தலையில் கொட்டிக் கொண்டு
" சாரி சாரி...நான் எழுதிட்டேன் உங்க கிட்ட கொடுக்க மறந்துட்டேன் " என்று சமாளிப்பாக ஒரு புன்னகை சிந்தியவள் வேகமாக சென்று எழுதி வைத்ததை தேட அவளருகே இருந்த நாளிதழில் " கோயம்புத்தூரில் திடீர் மரணம்....பழுதடைந்து இரண்டு நாட்களாக நின்றிருந்த சரக்குந்தின் சக்கரத்தில சிக்கி ஒரு இளைஞன் தன் உயிரை நீத்தார்..." என்ற செய்தி அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.
தான் எழுதி வைத்த கவிதையை ஒருவழியாக கண்டுபிடித்தவள் கைகளில் எடுத்துக் கொண்டு கலைந்திருந்த காகிதங்களை எல்லாம் ஒன்றாக எடுத்து மேசையின் மீது வைக்க அந்த செய்தியும் மறைக்கப் பட்டிருந்தது
அந்த தொடர்கதையை எழுதிய எழுத்தாளரைப் போல்...
" இன்றைக்கு இரண்டு நபரா ?" என்றவன் தன் சட்டைப் பையில் இருந்த இருநூறு ரூபாயை அந்த நபரின் கைகளில் திணித்து விட்டு வெளியே வந்து அவர் கொடுத்த சிறு துண்டு பேப்பரை தன் தோள்ப்பையில் போட்டுக் கொண்டு ஹோண்டாவை கிளப்ப ஏற்கனவே அவன் பையில் இருந்த சதீஸ் என்ற பெயர் தன் இருப்பையும் காட்டிக் கொண்டிருந்தது...
இதுவரை யாரிந்த நபர் எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த அதிகாரிகள் இப்போது இறந்த இளைஞனின் பெயரை உறுதி செய்துள்ளனர்.
அந்த இளைஞன் மருத்துவக்கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவன்.
அவர் பெயர் சதீஸ் எனக் கூறிக் கொண்டிருந்தனர் பத்திரிக்கை நிருபர்கள்.
🏃♀🏃♀🏃♀ரொம்ப நாளா ஒரு த்ரில்லர் எழுதணும்னு ஆசை...
எனக்கு பிடித்தது த்ரில்லர் தான்...
அதுவும் த்ரில்லர்ல வர வில்லன்கள் அழகா இருப்பாங்க😂அந்த காரணத்துனாலயே ரொம்ப பிடிக்கும்.
ஏதோ எனக்கு தெரிந்த மாதிரி த்ரில்லர் கொடுக்கிறேன்.
இது திரைப்படக் கதை மாதிரி இருக்குனு தோணுனாலும் தாரளமாக சொல்லிடுங்க😂😂...
வாரத்திற்கு இரண்டு முறை பதிவுகள் வரும்....
கண்களில் உறைந்த கனவேவும் இரண்டு பதிவுகள் வரும்.
நேரமிருக்கும் போது பதிவுகள் தர முயற்சி செய்கிறேன்.
அடுத்த பதிவில் சந்திக்கலாம்.
அப்புறம் தலைப்பு உங்களுக்கு கொடுத்த க்ளூ...கண்டுபிடிங்களேன்😂எதுனால இந்த தலைப்புனு..
கண்டுபிடிக்கிறவங்க கமெண்ட்ல சொல்லிடாதீங்க🤣😂.
டாடா🏃♀🏃♀🏃♀
அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்...மறக்காம பிரியாணியை பார்சல் பண்ணி விட்டுடுங்க.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro