Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஹிட்லர்: 38

நம் நாயகனும் நாயகியும் நான்கு வருடங்கள் பின் சந்தித்து இன்றோடு நான்கு நாட்களாகியிருந்தது.

ஆம்... நான்கு நாட்கள் ஆகியிருந்தது. ஷிவன்யா யாதேஷிடமிருந்து ஓடத் தொடங்கியும் நான்கு நாட்களாகியிருந்தது, அவளை வேங்கை போல் அவன் பின் தொடரத் தொடங்கியும் நான்கு நாட்களாகியிருந்தது.

கடந்த நான்கு நாட்களுமே சசி அவள் அக்கா மற்றும் அக்கா மகளை விட்டு பெரிதாக நகரவில்லை. அக்காவை உடனிருந்து பார்த்துக் கொண்ட தங்கை தான் தினம் ஷிவன்யாவின் அழுகையை தேற்றும் தாயுமாகிப் போனாள்.

ஆனால் என்ன அழுது என்ன பயன்? விட்டுச் செல்ல முடிவெடுத்தப் பின் அதை சரியாக செய்ய வேண்டும் தானே என தன்னைத் தானே ஷிவன்யா அவனின் நீங்கா நினைவுகளிடம் இருந்தும் அழியா காதலிடம் இருந்தும் பிரித்துச் செல்ல நினைத்தாலும், நித்தம் ஒரு முறை யாஸ் நிறுவனத்தில் இருந்து வந்த தொலைப்பேசி தொடர்புகள் அவளை இம்மியும் நகரவிடவில்லை.

" ஹலோ யமுனா, திஸ் ஈஸ் யாஸ் டீவி! உங்களுக்கு ஜாப் ஆஃபர் ஓப்பன்ல தான் இருக்கு. சீக்கிரம் நீங்க வருவீங்கன்னு நான்... அஹ்... அது நாங்க நீங்க வருவீங்கன்னு காத்துட்டு இருக்கோம்! "

" நாங்க யாஸ் டீவி-ல இருந்து பேசுறோம். தி ஈஸ் யமுனா, ரைட்? உங்க ரெஸ்யூம நாங்க அக்ஸெப்ட் பண்ணலாம்னு இருக்கோம்? நீங்க எப்போ என்ன பார்க்க வருவீங்க? "

" உங்கள மாதிரி ஒரு டலென்டட்-ஆன ரைட்டர் அண் எடிட்டர தான் நாங்க நாழு வர்ஷமா தேடீட்டு இருக்கோம், யமுனா! "

" நாங்க யாஸ் டீவி எடிட்டோரியல் டீம்-ல இருந்து பேசுறோம், யமுனா, நீங்க எப்போ வேலைக்கு ஜாய்ன் பண்ணப் போறீங்க? "

" யமுனா இது ஒன் டைம் ஆஃபர் இல்ல! உங்கள மாதிரியான திறமையான ஆட்கள எங்க டீவீ இப்டி தான் தேடித்தேடி கண்டுப்பிடிச்சு நாங்களே வச்சுப்போம். அதனால நீங்க எப்போ வரதா இருக்கீங்க யமுனா? "

இப்படி வார்த்தைக்கு வார்த்தை யமுனா யமுனா என்று எண்ணற்ற தொலைப்பேசி எண்களில் இருந்து அவளுக்கு அழைப்பு விடித்து நான்கு நாட்களும் அவளை அல்லோலப் படுத்திவிட்டான் நம் நாயகன்.

சசியும் ஒவ்வொரு முறையும் எதாவது தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் அதை சில வினாடிகள் பார்த்துவிட்டு பின் பதிலளித்த அக்காவை கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.

ஒவ்வோர் முறையும் அந்த அழைப்பை ஏற்கும் போதே மறுபுறம் இருந்தது அவன் தான் என்று ஷிவன்யாவிற்கு ஏதோ ஒன்று சொல்லிக் கொண்டே தான் இருந்தது. அதை அறிந்து தான் அவள் பதில் பேசுகிறாள் என தெரியாமல் ஒரு ஒரு முறையும் தன் மாமன் தன் அக்காவிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என செய்யும் ஆட்டகாசங்களை எல்லாம் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சசி.

மீண்டும் அன்று அழைப்பு வந்தது. சசி ஷிவானிக்கு இரவு உணவை ஊட்டிக் கொண்டே ஒரு காதையும் ஒரு கண்ணையும் மட்டும் சமையல் அறையில் இருந்த ஷிவன்யா மீது பதித்தாள்.

திரையில் ஒளிர்ந்த எண்ணைக் கண்டு பெருமூச்சுவிட்ட ஷிவன்யா அன்றைய பதினாறாவது அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

" ஹலோ

" யாஸ் டீவில இருந்து பேசுறீங்க... சொல்லுங்க... " என இவளே நேராக விஷயத்திற்கு வர, அப்புறம் ஒரு நீண்ட அமைதி நிலவியது.

" ஆர்யு யமுனவன்யா? "

இப்போது கேட்டது ஒரு பெண்ணின் குரல். ஷிவன்யா குழப்பமாய் அந்த திரையை பார்த்துவிட்டு ம்ம் என்று அமோதிக்க, அந்த பெண்ணும் தொடர்ந்தாள்.

" ஐம் மிருதுளா, யாஸ் டீவி எடிட்டோரியல் டீம் ஹெட். நீங்க எங்க டீவிக்கு அப்லை பண்ணி ஃபோர் டேஸ் ஆகியும் ஏன் இன்னும் ஜாய்ன் பண்ணாம இருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா? "

மிருதுளா மிகவும் பவ்யமான குரலில் அமைதியாய் கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திருக்க, ஷிவன்யாவிற்குத் தான் ஒன்றும் புரியவில்லை.

" நான் பெர்ஸ்னல் அஸிஸ்டென்ட் வேகென்சிக்கு தான் அப்லை பண்ணியிருந்தேன். "

மிருதுளா " அதுக்கான வேகென்சிக்கு பதிலாகத் தான் எங்க ஷிவன் பாஸ் உங்களுக்கு எடிட்டோரியல் டீம் வேகென்சிய ரெஃபெர் பண்ணாங்க, யமுனஷிவன்யா. "

ஷிவன் பாஸ்...

ஒரு பெருமூச்சோடு குழப்பத்தை ஓரந்தள்ளிய ஷிவன்யா " இல்ல மேடம். ஐம் நாட் இன்ட்ரெஸ்டட். "

மறுபுறமிருந்து ஷிவன்யா எதிர்பார்க்காத பதில் உடனடியாக வந்தது.

" ஐம் ஸாரி யமுனஷிவன்யா. நீங்க மெய்ல் அப்லிகேஷன்லையே அதை மென்ஷன் பண்ணியிருந்தா மட்டும் தான் உங்களால எங்க ஜாப் ஆஃபர ரிஜெக்ட் பண்ண முடியும். இல்லனா... நீங்க வந்து தான் ஆகனும்... "

கடைசி வாக்கியத்தை அந்த பெண் தயக்கத்தோடே கூறி முடித்தாள்.

" எக்ஸ்க்யூஸ் மீ! " ஷிவன்யா சமையலில் இருந்த கவனத்தை மொத்தமாக மிருதுளா புறம் திருப்பினாள். " இது...இது என்ன புதுசா சொல்றீங்க? இந்த மாதிரி எந்த ரூலும் நீங்க முன்னாடி சொல்லலையே, "

மிருதுளா மறுபுறம் சற்று தாமதத்திற்குப் பின் மீண்டும் பேசினாள். " புதுசா கொண்டு வந்த ரூல் மேடம்! அஹ்... அதான் யமுனஷிவன்யா இந்த ரூல் வந்து நாழு நாள் தான் ஆகுது. புதுசா அப்லை பண்ண எல்லாருக்கும் எங்க ஷிவன் பாஸே டேரக்ட்டா அன்னைக்கே மெய்ல் செண்ட் பண்ணீட்டாரு! "

ஷிவன்யாவிற்கு அவன் பெயரை கேட்டதும் நா எழவில்லை. மறுபக்கம் இருந்த மிருதுளா ' நம்புங்களேன் ' என்ற கெஞ்சலோடே ஒரு தடுமாற்றத்தோடு பேசிக் கொண்டிருக்க, அந்த அப்பாவி பெண் படும்பாடு நம் நாயகிக்கு எங்கு தெரியப் போகிறது?

வேகவேகமாக மெயிலில் போய் பார்த்தாள். மிருதுளா கூறியது போலவே நான்கு நாட்கள் முன்பு, நம் நாயகன் மற்றும் நாயகி பார்த்துக் கொண்ட அதே நாள் இரவு, யாதேஷ் ஷிவன் என்ற பெயரில் இருந்தே ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.

உதட்டைக் கடித்து கண்களை இறுக்கி மூடிய ஷிவன்யா, தப்பி ஓட முயன்ற பொருமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.

" சரி நான் என்ன செய்யனும் மேடம் இப்போ? "

அவள் கேட்டது தான் தாமதம். மிருதுளா கத்தியே விட்டாள்.

" நீங்க கெளம்பி கம்பெனிக்கு நாளைக்கு வந்தா போதும் மேடம்! மீதியெல்லாம் எங்க பாஸே...ஐயோ அஹ்... நாங்களே பார்த்துக்குவோம்! "

ஷிவன்யா சுவற்றில் சாய்ந்து நெற்றியை நீவ, இவள் சரி என கூறியதுமே விட்டால் போதுமென மிருதுளா அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

உணவை ஊட்டி முடித்திருந்த சசி மெல்ல சமையலறைக்குள் எட்டிப் பார்த்தாள். ஷிவன்யா அந்த மின்னஞ்சலை மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு இப்போது ஆட்காட்டி விரலால் அவள் நெற்றிப்பொட்டில் தட்டிக் கொண்டிருந்தாள்.

சசி " என்னாச்சுக்கா...? "

ஷிவன்யா " உங்க மாமா கம்பெனில இருந்து தான் "

மீண்டும் பெருமூச்சோடு தன்னைத் தானே கடிந்து கொண்ட ஷிவன்யா தான் பேசும் வார்த்தைளை கவனிக்க முயன்றாள்.

" அம்... அதான் ஜாப் அப்லை பண்ண அன்னைக்கே மெயில ரிஜெக்ட் பண்ணா தான் வேற ஜாப் போக முடியுமாம்... இல்லனா அட்லீஸ்ட் 6-10 மன்த்ஸ் ஜாப்க்கு வரனுமுன்னு ந்யூ ரூல்ஸ் கொண்டு வந்து இருக்காங்களாம்... "

யாஸ் நிறுவனம் பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலும் இந்த விஷயம் சசிக்குமே புதிதாகத்தான் இருந்தது. ஏனெனில் இந்த புதிய விதியையே தன் நறுவனத்தில் நான்கு நாட்கள் முன் தானே நம் நாயகன் கொண்டு வந்தான்.

சசி " சோ... இப்போ என்னக்கா பண்ணப்போற? "

ஷிவன்யா அவள் கண்களை தன் தங்கை மீது பதித்திருந்தாலும் அவள் சிந்தனை வேறு எங்கோ இருந்தது.

" போய்ட்டு வரேன்... "

***

யாஸ் நிறுவனம்

தன் கேபினுக்குள் மிருதுளா அழைப்பைத் துண்டித்ததும் நம் நாயகன் குதிக்காத குறை தான். கடந்த நான்கு நாட்களும் இந்த மொத்த யாஸ் நிறுவனமே இவனது அட்டகாசங்களில் தவிதவித்துப் போய்விட்டது.

இவ்வளவு நேரமும் மிருதுளாவை இப்படி சொல் அப்படி சொல் என ஒரு வழி செய்துவிட்டான் இவன். இவனது அட்டூழியங்களில் சிக்கிக் கொண்ட அப்பாவி மிருதுளா, நம் நண்பர்களின் காலேஜில் இவர்களுடன் படித்தவள் தான்.

யாதேஷின் அட்டகாசங்களைப் பார்த்தபடி வாய்மேல் கை வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தான் ஆரவ்.

அன்று பருத்திவீரன் போல பல மணி நேரம் இவன் கோப்புகளும் கையுமாய் இருந்தது இந்த வேலையைப் பார்க்கத் தானா என அவன் ஆவென இவனைப் பார்க்க, யாதேஷ் இப்போது மிருதுளாவிடம் பொரிந்தான்.

" சொதப்பாம ஒழுங்கா நீ பேசியிருந்தா இன்னைக்கே வந்துருப்பா அவ! "

மிருதுளா பேசும் போதெல்லாம் அவள் மண்டையில் கொட்டியும் தட்டியும் இவளை தொந்தரவு செய்தது மட்டுமில்லாமல் இப்போதும் குறைசாடுபவனை முறைத்துவிட்டு, " உனக்கு அந்த திறமை இருந்தா நாழு நாழா ஏன் வரலையாம் அவ?! "

யாதேஷ் " அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ போய் உன் டீம்ல இப்போ ஒரு சீட் ரெடி பண்ணு. நான் சொன்னதெல்லாம் நியாபகம் வச்சுக்கோ! நியாபகம் இருக்கு தானே? "

மிருதுளா " எல்லாம் தெரியும்! ஆளவிடுடா சாமி! " என யாதேஷ் மீண்டும் அவன் பட்டியலைத் தொடங்குவதற்குள் அங்கிருந்து குடுகுடுவென ஓடிவிட்டாள்.

ஆரவ் " டேய் நீ என்ன டா நினைச்சிட்டு இருக்க? "

" யமுனாவத்தான்! "

ஆரவின் அதிர்ந்த பார்வையை எல்லாம் இவன் கண்டு கொண்டதைப் போலவே தெரியவில்லை. இன்னும் எத்தனை நிமிடங்கள் களித்து அவளுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கலாம் என யாதேஷ் மனதுக்குள்ளே ஐன்ஸ்டெய்ன் போல கணக்குப் போட, ஆரவ் பே என அவனைப் பார்த்தான்.

" டேய் என்ன டா...? "

இவன் அவளுக்காக எதையும் செய்வான் என ஆரவும் எதிர்பார்த்தான் தான். ஆனால் இத்தனை விரைவில் அவளைப் பார்த்த அன்று முதலே தொடங்குவான் என தான் இவன் நினைத்திருக்கவில்லை.

" ஒருத்தன் பேசீட்டு இருக்கேன்ல! என்ன பாரு டா,  " ஆரவ் எழுந்து சென்று மனகணக்கில் இருந்த யாதேஷை அவன் புறம் திருப்பினான்.

" என்னா டா வேணும் உனக்கு?! "

ஆரவ் " உனக்கு உங்கம்மா அந்த ஸ்வேத்தா கூட கல்யாணம் பண்ணனும்னு நிக்கிறாங்க... நீ என்னடான்னா வேற ட்ரக் போட்டுட்டு இருக்கியே, "

" அவங்க நாழு வர்ஷமா அதத்தான் சொல்றாங்க... அதெல்லாம் பார்த்தா நான் என் ஆள எப்போ பார்க்குறது? என் லைஃபு, என் ட்ரக்கு! " என அவனுக்கே கடைசியாக கூறிக் கொண்டு நாளை வரப் போகும் தன்னவளைப் பார்க்க இப்போதே தயாராக ஓடினான் அந்த காதல் மன்னன்.

ஆரவ் இவன் செல்வதைப் பார்த்தபடி அவன் செல்பேசியை எடுத்து ஷிவனேஷிற்கு அழைத்தான்.

ஆரவ் " மச்சான், இவன் வேற ஃபார்ம்ல போயிட்டு இருக்கான் டா, நாளைக்கு ஷிவா கம்பெனிக்கு வந்துடுவான்னு தான் நினைக்கிறேன். "

ஷிவனேஷ் " நமக்கு மாமா வேலை வைக்காம இருக்கானேன்னு அப்போ சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான். "

ஆரவ் " ஆமா இல்லனா மட்டும் நீ அப்டியே பண்ணி கிழிச்சிருவ. அவன் பாப்பான் பேசுவான், அவ வருவா, போவா-ன்னு சாமியார் மாதிரி தான் பேசீட்டு இருந்திருப்ப, "

ஆரவ் காலை வாரியதைக் கூட கண்டுகொள்ளாமல் ஷிவனேஷ் அடுத்த விஷயத்திற்குத் தாவினான்.

" சரி டா... நான் எப்போ ஷிவாவ போய் பார்க்கட்டும்? சூர்யா வேணாம் வேணாம்னே சொல்லீட்டு இருக்கா... "

ஆரவ் " ஆனா நீ ஷிவாவ பார்த்து தான் டா ஆகனும்... அவளோட அப்பா, இவன் அப்பரம் நீ... நீங்க மூணு பேருமே அவளால தான் இறந்துட்டீங்கன்னு நாழு வர்ஷமா அவள அவளே கஷ்டப்படுத்தீட்டு இருந்துருக்கா... நாம சீக்கிரமே அவளோட மனச மாத்தனும், "

ஷிவனேஷ் " ம்ம்ம், "

ஆரவ் " நீ எப்போ கம்பெனிக்கு வரலாமுன்னு இருக்க? "

ஷிவனேஷ் அந்த கேள்விக்கு நீண்ட நேரம் பதிலே அளிக்காமல் இருக்க, ஆரவ் அவன் தயக்கம் அறிந்து அவன் குரலைக் கேட்க காத்திருந்தான்.

" சொல்லு டா, எப்போ வர போற? "

ஷிவனேஷின் பதில் ஒரு பெருமூச்சோடு வந்தது. " வரேன் டா... எவ்ளோ சீக்கிரம் ஷிவாவ நான் நேர்ல பார்க்குறனோ அவ்ளோ சீக்கிரம் அவன பார்க்கவும் நான் வருவேன், "

புன்னகையோடு அழைப்பைத் துண்டித்த ஆரவ் தன் நண்பன் இன்னமும் அவன் நாயகியை வரவேற்பதற்காக அலுவலகம் முழுவதும் பார்த்துப் பார்த்து செய்யும் வேலைகளை எல்லாம் கண்டு மகிழ்ச்சியுற்றான்.

***

அன்று மாலை ஷிவன்யா யோசனையோடே பார்க்கில் அமர்ந்து ஷிவானி மற்றும் ஆர்யா தூரத்தில் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சசி ஏதோ வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தாள்.

அவள் யோசனை மொத்தமும் யாதேஷிடம் தான் இருந்தது. மனம் ஒரு புறம் அவனைத் தேடி ஓடவே காத்திருக்க, மறுபுறம் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவன் முன் நிற்பாய் என கேலியாய் சிரித்தது.

இப்படி யோசனையிலே மூழ்கி ஷிவன்யா தன்னையே இழந்த நேரம் அவள் முன் ஒரு நிழலாடியது.

சூர்யா

தன் முன் வந்து நின்றவளை ஒரு சில வினாடிகள் பின்னே அடயாளம் கண்ட ஷிவன்யா வேகமாய் எழுந்து அவளை கட்டிக் கொண்டாள்.

அவளை மென்மையாய் அணைத்துக் கொண்ட சூர்யா புன்னகையோடு ஷிவன்யாவின் கன்னத்தில் வலிந்த கண்ணீரைத் துடைத்தாள். ஷிவன்யாவிற்கு வார்த்தைகள் தந்தியடித்தது. துக்கம் தொண்டையை அடைக்க, குற்ற உணர்ச்சியில் தலை குனிந்தாள்.

அவன் உயிருக்குப் போராடும் போது தன்னந்தனியாக நின்ற ஷிவன்யாவை உடன் நின்று பார்த்துக் கொண்ட சூர்யா... ஷிவனேஷின் மரணச் செய்தி அவர்களை அடைந்த அதே நேரம் யாதேஷின் உயிரும் பிரிந்ததாய் இவள் அறிந்திருக்க பின் சூர்யாவின் நிலையை கவனிக்கும் நிலையில் ஷிவன்யா இல்லை.

" சூ...சூர்யா... நீங்க... என்ன...என்ன மன்னிச்சிருங்க சூர்யா, "

சூர்யா " ஷிவா... இட்ஸ் ஓக்கே, நீ ஏன் டா ஸாரி கேட்குற? "

" நான்...நான் அன்னைக்கு உங்கள அப்டியே விட்டுட்டுப் போய்ட்டேன்... அன்னைக்கு தான் உங்களுக்கு ஹிட்லர் கூட... "

அதற்கு மேல் அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவன் பெயரை சொன்ன அடுத்த நொடி மீண்டும் கண்ணீர் பெருக்கெடுக்க, சூர்யா மீண்டும் அவளை அணைத்துக் கொண்டார்.

" ஷ்ஷ்ஷ்... நான் உன் கூட தான் இருந்தேன் ஷிவா... உனக்கு எங்க யாரையும் பார்க்க தைரியம் இல்ல, அதனால தான் நான் உன்ன தூரத்துல பார்த்துட்டே இருந்தேன் மா... நீ எந்த தப்பும் பண்ணல ஷிவா, "

ஷிவன்யா அவள் சொன்னதை கேட்டு சற்றே அதிர்ந்து பின் நகர, அதே நேரம் மீண்டும் ஒரு நிழல் அவர்கள் மீது படர, ஆர்யா மற்யும் ஷிவானியின் ஒரு சேர கேட்ட, " அப்பா! " மற்றும் " மாமா! " என்ற கூவலோடு இறுதியாக ஷிவன்யாவின் பார்வை அவள் முன் வந்து நின்ற அவள் ஹிட்லர் மீது விழுந்தது.

ஷிவனேஷின் கண்கள் முழுவதும் பயம் பரவியிருக்க, அவளின் கலங்கிய கண்களை கண்ட அடுத்த நொடி ஷிவனேஷ் அவள் முன் அங்கேயே முட்டியிட்டு அமர்ந்தான்.

ஆர்யாவும் ஷிவானியும் ஓடி வர, ஷிவானி ஷிவன்யாவின் அருகில் ஓடியதும் ஆர்யா ஷிவனேஷின் கழுத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டான்.

ஷிவனேஷின் முகத்திலிருந்து பார்வையை எடுக்க இயலாமல் ஷிவன்யா நடுங்க, ஷிவனேஷ் ஆர்யாவை ஒரு கரத்தால் பிடித்தபடி மறு கையால் ஷிவன்யாவின் கண்ணீரைத் துடைத்தான். ஷிவன்யாவிற்கு இதயத்தை குத்திக் கிழித்த முற்கள் மெல்ல கீழே விழ, அவள் மயங்கும் முன் அன்று உண்மையில் அவனைத் தான் பார்த்தாள் என்ற உண்மை விளங்கியதும் அவளின் மனம் நீண்ட நாட்கள் பின் நிம்மதி பெருமூச்சுவிட்டது.

அழுகையோடு அவன் கைகளை பிடித்தவளின் இதழ்கள் புன்னகையில் விரிய கண்ணீரோடு சிரித்த ஷிவன்யாவால் சொல்ல முடிந்தது இதை மட்டும் தான்...

" நீங்க...நீங்க... சாகல... நீங்க சாலக ஹி...ஹிட்லர்... "

விழி மீறிய வழி நாடி...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro