Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாட்டியின் கோபம்: 53

அந்த இரம்மியமான இரவின் நிசப்தத்தில் ஷிவானியின் சிரிப்பொலியோடு வேறெந்த இரைச்சலும் இன்றி கடலில் மூக்குளித்துக் கொண்டிருந்த மதியை இரசித்துக் கொண்டிருந்த ஷிவன்யாவை தன் கைவளைவில் வைத்து கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் யாதேஷ்.

" எவ்ளோ நேரம் பாஸ் இப்டியே இருக்களாம்னு உத்தேசம்? இப்டி பாத்துட்டே தான் இருப்பீங்களா? "

யாதேஷ் அவளை இன்னும் இறுக்கி ஒரு கரத்தால் ஷிவன்யாவின் முகத்தை அவன் புறம் திருப்பி அவள் கன்னத்தில் அவன் இதழால் கோலம் போட்டுக் கொண்டே " நாழு வர்ஷம் நான் பார்த்துர மாட்டனான்னு நான் தினம் தினம் ஏங்குன முகம் டி இது. இன்னும் ஒரு மணி நேரம் பார்க்கலாமே... "

" அப்போ ஒரு மணி நேரம் அப்பரம் பார்க்க மாட்டீங்களா? "

" இல்ல பாப்பேன். "

ஷிவன்யா அவன் நேரடி பதிலில் தலையைத் திருப்பி சிரிக்க அவள் கழுத்தில் சிரித்துக் கொண்டே தன் முகத்தைப் புதைத்த யாதேஷ் " என் பொண்டாட்டிய நான் பார்க்காம வேற யாரு பார்க்க போறா? "

திடீரென அப்போதே ஏதோ நினைவு வந்து ஷிவன்யா பட்டென அவன் அணைப்பிலே திரும்பி இரண்டு கைகளாலும் அவன் முகத்தைப் பிடிக்க, யாதேஷ் அவள் சட்டென திரும்பியதால் மலங்க மலங்க முளித்தான்.

" யோவ் மாமா! "

" ஏய் ஏய் மாமனுக்கு கொஞ்சம் அப்பப்போ மரியாதை குடுக்க மறந்து போயிடுற நீ, "

" ம்க்கும் என் மரியாதைக்கு என்ன கொறை இங்க? அத விடுங்கங்க! எப்போ உங்களுக்கு நியாபகம் வந்துது? எப்டி நியாபகம் வந்துச்சு? "

" ஹப்பாடா ஒருவழியா கேட்டுட்டியா? "

" அட எப்போ எப்டின்னு சொல்லுங்க மாமா! ஒரு வாரமா எங்க போனீங்க நீங்க?! கிட்டத்தட்ட இரெண்டு வாரமா நான் தலையப் பிடிச்சிட்டு உக்காந்துருக்கேன்! "

" சரி சரி பொருமை பொருமை. எல்லாத்தையும் உன் கிட்ட சொல்ல தான் டி அழச்சிட்டே வந்தேன். வா போற வழி-ல சொல்றேன். "

" இல்ல இல்ல இப்போ இங்கையே சொல்லுங்க! "

" இல்ல டா கார்-ல பேசிக்களாம், " என யாதேஷ் கூறிக் கொண்டிருக்கும் போதே ஷிவானி கண்களை தேய்த்துக் கொண்டு கொட்டாவி விட்டபடி இவர்களிடம் வந்தாள்.

" அம்மாஆஆஆ பாப்பாக்கு தூக்கம் வர்து. "

ஷிவானி ஷிவானியின் கால்களை அரை தூக்கத்தில் கட்டிக் கொண்டு அவளை நிமிர்ந்து பார்க்க, ஷிவன்யாவின் கவனம் முழுதாக குழந்தை புறம் சாய்ந்தது.

" அம்மா கிட்ட தூங்கு செல்லம். வீட்டுக்குப் போனதும் எழுப்புறேன் சரியா? "

ஷிவன்யா அவளைத் தூக்கி தோளில் சாய்த்துக் கொள்ள, ம்ம் ம்ம் என அரை தூக்கத்திலே தலையை ஆட்டிவிட்டு அவள் தோளில் முகம் புதைத்த ஷிவானி நம் நாயகனும் நாயகியும் காரின் அருகில் வருவதற்குள்ளாகவே நித்திராதேவியின் பிடியில் லயித்திருந்தாள்.

மெதுவாக தன் பிள்ளையின் தூக்கம் கலையாதவாறு காரை செலுத்திக் கொண்டிருந்தான் யாதேஷ். ஷிவன்யா அவனை அவ்வப்போது பார்த்துக் கொண்டே ஷிவானியின் முதுகில் மென்மையாய் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

நீண்ட நேர அமைதியின் பின் ஷிவானி முழுதாய் அவள் அன்னையின் நெஞ்சில் குழந்தையென உறங்க, இனி தேங்கா பன் என மைக் வைத்து கத்தினாலும் தன் மகள் உறக்கத்திலிருந்து எழ மாட்டாள் என தெரிந்து ஷிவன்யா அவள் மடிமீது இருந்த யாதேஷின் கரத்தைப் பிடித்தாள்.

" என்னங்க... இப்போவாவது சொல்லுங்க. பாப்பா தூங்கீட்டா, "

" ஹ்ம் எனக்கு உடனேவெல்லாம் எல்லாம் நியாபகம் வரல யமுனா. அன்னைக்கு சூப்பர்மாட்கேட்-ல என்ன பார்த்துட்டு நீ பயந்து ஓடுன நியாபகம் இருக்கா...? அப்போ எனக்கு தலை ரொம்ப வலிச்சிது... நான் உன் பின்னாடியே வந்தேன் ஆனா நீ ரோட்ல கவனில்லாம போனப்போ ஒரு செக்கெண்ல உன்ன ஒரு கார் இடிக்க வந்தத பார்த்துட்டு நான் அப்டியே நின்னுட்டேன். என்னால உன்னத் தவிற வேற எதப்பத்தியும் யோசிக்க முடியல... என் மனசு முழுக்க நீ அழுதுட்டு என்ன விட்டுட்டு ஓடுனது மட்டும் தான் டி இருந்துச்சு... எப்டியாவது உன்ன ஆஃபீஸுக்கு வரவச்சிடனுனு என்னென்னமோ பண்ணேன். ஆனா...ஏன் எதுக்குன்னு ஆரவ் ஒரு ஒரு தடவ கேட்டப்போவும் நான் பதில் சொல்லல. என் யமுனாவ பார்க்கனும். என் யமுனா என் பக்கத்துல இருக்கனும். என் யமுனா எனக்கு வேணும். இது மட்டும் தான் டி ஓடீட்டே இருந்துச்சு... "

ஷிவன்யா அவன் கண்கள் சோர்ந்தாலும் ஒரு புன்னகை அவன் இதழை லேசாக அலங்கரிப்பதை பார்த்துக் கொண்டே தன் கண்கள் திறையிடுவதை உணர்ந்து பார்வையை சாலைப் புறம் திருப்பினாள்.

" ஒரு நாள் ரொம்ப சந்தோஷமா நான் வீட்டுக்குப் போயிட்டு இருந்தேன். ஆனா ஏதோ ஒரு பஸ் ஹாரன் சத்தம் என்ன டிஸ்டர்ப் பண்ணி நான் எங்க போறேன்னே நான் கவனிக்கல கொஞ்ச நேரத்துக்கு, ஏதோ நல்லா தெரிஞ்ச ஒரு இடம் தான் ஆனா எப்டி என்னன்னு தெரியல... "

திடீரென யாதேஷின் கண்கள் இரண்டும் சிரித்தது. அவன் அழகாக தன் மகளின் தலையை வருடி " அப்போ தான் நைட் என் தங்கம் எனக்கு ஃபோன் பண்ணா, உன்னோட பழைய நம்பர்ல இருந்து காள் பண்ணதால உன்னோட ரிங்டோன கேட்டு எனக்கு தலையும் புரியல காலும் புரியல... உன் நம்பர் என் ஃபோன்ல எப்டி வந்துச்சு? உன் வாய்ஸ் எப்டி வந்துச்சு? ம்ஹும் நான் எதுவும் யோசிக்கல... ஷிவானி என்ன அப்பான்னு கூப்பிடுற வரைக்கும்... "

அன்றைய நினவில் பெருமூச்சுவிட்டாள் ஷிவன்யா. " அன்னைக்கு நாங்க மட்டும் நேரத்துக்கு வரலன்னா என்ன ஆகியிருக்குமோ... ஏங்க நீங்க வேற... நான் கூப்பிட கூப்பிட நீங்க பதிலே சொல்லாம இருந்ததும் உயிரே என் கிட்ட இல்ல, "

யாதேஷ் ஆச்சர்யமாக கண்களை விரித்து " அட ஆமா... நீயும் ஆரவோட வந்த தான? நான் இன்னும் அன்னைக்கு நடந்தத கனவுன்னே நினைச்சிட்டு இருக்கேன் டி, "

" ஏதே? "

" அதான் நீயும் ஆரவும் என்ன வீட்டுக்கு கூட்டீட்டு வந்தீங்களே... ஆனா அங்க என்ன ஆச்சுன்னு எனக்கு எதுவும் நியாபகம் இல்ல. ஆனா அதுக்கப்பரம் ஷிவா நேர்ல வந்துட்டான். அந்த வெளக்கெண்ணெய் முன்னாடியே என் கண்ணு முன்னாடி வந்துருந்தா எப்போவோ நியாபகம் வந்துருக்கும் போல டி எனக்கு! "

" என்னங்க சொல்றீங்க... எனக்கு ஒன்னுமே புரியல, "

" கடைசியா அந்த அக்ஸிடென்ட்ல எனக்கு எல்லாம் மறந்து போகுறதுக்கு முன்னாடி கூட இருந்தது ஷிவா தான். அவனோட நினைவுகள் கொஞ்சம் கொஞ்சம் அப்பப்போ எனக்கு முன்னாடில இருந்து வந்துட்டு வந்துட்டுப் போகும். எத்தன தடவ கேட்டாலும் ஷிவா யாருன்னு ஆரவ் ஒருதடவ கூட வாயத் திறந்து சொல்லல... ஆனா உன் ஹிட்லர் என் கண்ணு முன்னாடி வந்தப்போவே எனக்கு அந்த அக்ஸிடென்ட் கண்ணு முன்னாடி வந்துப் போன மாதிரி இருந்துச்சு டி... "

ஷிவன்யாவின் மூளையில் அவனது வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ரிங்காரமிட சரியாக காரை எங்கோ நிறுத்திய யாதேஷ் இப்போது அவளைப் பார்த்துத் திரும்பினான்.

" அன்னைக்கு... அன்னைக்கப்பரம் என்ன ஆச்சு? எங்க போனீங்க ஒரு வாரமா? ஆனா இன்னுமே தெளிவா உங்களுக்கு எதுவும் நியாபகம் வந்த மாதிரி தெரியலையே... "

" அன்னைக்கு நீயும் ஆரவும் என்ன வீட்டுக்கு கூட்டீட்டு வந்தீங்க சரி. என் கார அம்போனு இங்க நடுத்தெருவுல விட்டுட்டுப் போனது நியாபகமே இல்லையா டி? "

யாதேஷ் சிரித்துக் கொண்டே காரின் கதவைத் திறந்து கீழே இறங்க, அப்போதே கார் எங்கையோ நிறுத்தப்பட்டுள்ளதை உணர்ந்து பேந்தபேந்த முளித்தபடி அவனைப் பின் தொடர்ந்து பின் இறங்கிய ஷிவன்யா

" கார மறந்துட்டோம் தான்... நான் அண்ணா எடுத்துப்பாங்கன்னு நினைச்சேன். சரி கார விடுங்க! அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? "

" இருக்கே. நாம விட்டுட்டுப் போன கார தேடி வந்து தான் நான் நம்ம ப்யூட்டி லோட்டஸ் பாட்டிய கண்டுப்பிடிச்சேன். "

அதிர்ச்சியும் ஆச்சர்யமும் போட்டிப் போட்டுக் கொண்டு ஷிவன்யாவின் முகத்தை நிறைக்க அவள் முன் முகம் கொள்ளா மகிழ்ச்சியோடு நின்றிருந்த யாதேஷ் சிரித்துக் கொண்டே திரும்பி அங்கிருந்த வீட்டைக் காட்டினான்.

எப்படி அவளாலும் அவர்கள் இருவரும் ஒன்றரை வரும் இல்லறத்தோடு நல்லறமாய் வாழ்வின் பல நுனுக்கங்களை கற்று வாழ்ந்த அவர்களின் வீட்டினை மறக்க முடியும்?

யாதேஷ் அவளிடம் நீட்டிய கரத்தை உறைந்த பனிக்கட்டியாலான பொம்மை போல் அவள் பிடிக்க, அவன் புன்னகை மறையாமல் அவளை அவனோடு இழுத்துக் கொண்டு அவர்களின் எதிரே இருந்த வீட்டை நோக்கி நடந்தான்.

வீட்டின் மணியை அடித்த இரண்டே நிமிடத்தில் கதவு திறக்கப்பட்ட, கதகளி ஆடிக் கொண்டிருந்த ஷிவன்யாவின் இதயம் சட்டென அமைதி அடைந்தது.

கதவைத் திறந்து கொண்டு நின்றது சாட்சாத் யாதேஷின் செல்ல லோட்டஸ் தான்.

ஆனால் கதவைத் திறந்ததுமே தாமரைப் பாட்டி பட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டு வேகமாக உள்ளே சென்றுவிட்டார்.

" நாழு வர்ஷமா நான் உயிரோட இருக்கனா இல்லையான்னு பார்க்காதவங்கல்லாம் இப்போ ஏன் இங்க வந்தாங்க? "

திடுக்கிட்ட ஷிவன்யாவிற்கு மனம் கனத்தது. தாமரையின் கோவமும் சரி தான். உண்மையில் ஒன்றரை வருடத்திற்கும் மேலாக தன் பெற்றோர் அருகில் இல்லாத போது உண்மையில் தான் பெற்ற பிள்ளைப் போல் அவளை ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்துப் பார்த்து வழி நடத்திய தாமரையை உண்மையிலே ஷிவன்யா மறந்துவிட்டாளே...

ஷிவன்யாவின் கண்கள் பயத்தின் சாயலாக கண்ணீர் குளமாயின. அவள் நேராக கதவை அகலத் திறந்து பயந்து பயந்து உள்ளே வந்தாள்.

" பா...பாட்டி... "

ஒரு கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்திருந்த தாமரை பாட்டி முகத்தை மறுபுறம் திருப்பிக் கொள்ள, ஷிவன்யாவிற்கு உலகமே இருண்டது போல் ஒரு பயம். அவள் பாவமாக யாதேஷைத் திரும்பி பார்க்க அவன் மென்மையாய் அவளை தாமரை பாட்டியிடம் தள்ளினான்.

" பாட்டி... பாட்டி என்னப் பாருங்க பாட்டி... " ஷிவன்யா தாமரையின் அருகில் மண்டியிட்டு அமரவும் அவள் வார்த்தைகள் அடைத்தது.

ஆனால் பாட்டி இன்னமும் எனக்கு காது கேட்காமல் போய் கால் மணி நேரம் ஆகிவிட்டது என சொல்லாமல் சொல்வது போல் சுவரையே பார்த்துக் கொண்டு வீம்பாய் அமர்ந்திருந்தார்.

ஷிவன்யா மீண்டும் யாதேஷைத் திரும்பி பார்க்க அவள் கண்ணீர் இப்போவா அப்போவா என இமைகளை விட்டுத் தாவி குதிக்கக் காத்து நின்றது.

" பேசு டி, " என கண்களாலே தன்னவளை தைரியப்படுத்தியவன் உறக்கம் கலைந்து சினுங்கத் தொடங்கிய மகளுக்கு மெல்லத் தட்டிக் கொடுத்தான்.

" பாட்டி... பாட்டி, என்ன பார்க்க மாட்டீங்களா பாட்டி? என் மேல கோவமா இருக்கீங்களா? ஸாரி பாட்டி... என்னப் பாருங்களேன், "

ஷிவன்யா என்ன இரைஞ்சியும் தாமரை பாட்டி மலை இறங்குவதாய் தெரியவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என அவர் முறுக்கிக் கொண்டிருக்க மெல்ல மெல்ல தன்னை சமன்செய்து கொண்ட ஷிவன்யா

" என்கிட்ட பேச மாட்டீங்கல்ல...? சரி போங்க நான் போறேன் திரும்ப! அப்படியே அமேரிக்கா போயிடுறேன், "

" எங்க வேணா போ. என் பேத்திய இங்கையே விட்டுட்டுப் போ, "

ஷிவன்யா இதழை கடித்துக் கொண்டு சிரிப்பை காட்டாமல் " அம்மா இல்லாம என் பொண்ணு எங்கையும் இருக்க மாட்டா, நான் தான் வேணாம்ல உங்களுக்கு? அப்போ என் பொண்ணும் வேணாம். "

" நீ போ டி, என்ன மறந்துட்டு எங்கையோ கண்காணாத ஊருக்குப் போனல்ல? போ அங்கையே... நான் செத்ததுக்கு அப்பரம் உனக்கு கடிதாசி வரும் அப்போ வந்து பாரு, "

ஷிவன்யா அவரது கடைசி வார்த்தையில் துணுக்குற்று பேச வாய் எழாமல் அப்படியே இருக்க, யாதேஷ் உடனே தன்னவளின் வலியைப் புரிந்துகொண்டான்.

" லோட்டஸ் என் பேத்திய பார்த்தே ஆவனும் ஒழுங்கா இங்க கூட்டீட்டு வா இல்லனா நான் ஏங்கி போய்டுவேன் மாஞ்சு போய்டுவேன் ன்னு நீ கெஞ்சுனதால தான என் பொண்டாட்டிய இங்க கூட்டீட்டு வந்தேன். என்ன நீ போக சொல்ற அவள? "

தாமரை பாட்டி அவன் அங்கு இல்லவே இல்லை, அவன் எதுவும் சொல்லவே இல்லை என்பதை நிரூபிப்பது போல் அலட்டாமல் அமர்ந்திருக்க ஷிவன்யா அவரை நம்பாமல் பார்த்தாள்.

" அப்படியா பாட்டி? என்ன பார்க்காம ஏங்கி போய்ட்டீங்களா நீங்க? "

தாமரை பாட்டி திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவுடன் ஷிவன்யாவிற்கு மீண்டும் கண்கள் கலங்கிவிட்டது. என்றும் சிரித்த முகமாய் அதட்டிப் பேசும் அவர்களின் செல்ல பாட்டியின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் ஷிவன்யாவையும் தாக்க அவள் உடைந்து அழுவதற்குள் தாமரை பாட்டி அவளை இழுத்து அணைத்துக் கொண்டார்.

" என் மேல பாசமே இல்லல்ல உனக்கு? பாட்டி பாட்டின்னு என் பின்னாடி நீ சும்மா தான் சுத்தீட்டு இருந்த இல்ல? ஒரு தடவை... ஒரு தடவ என் கிட்ட வரனும்னு தோனலையா உனக்கு? "

அதற்கு மேல் தாங்கமாட்டாமல் குழந்தைப் போல ஷிவன்யா கத்தி அழத் தொடங்கினாள். என்ன தான் கோபம் இருந்தாலும் குழந்தையை தண்டிக்க எவ்வளவு நேரம் ஒரு தாயின் மனம் வீம்பு பிடிக்கும்?

ஷிவன்யா மீதான தாமரை பாட்டியின் அளவில்லா பாசம் அவரது கோவத்தையும் தாண்டி அவளை அரவணைத்தது.

" பாட்டி நீ காணாம உன்ன எவ்வளவு தேடுனேன் தெரியுமா? இதோ இவன் தான் எங்கையோ போய் தொலஞ்சிட்டான்னு நினைச்சேன். ஆனா நீ... "

" ஸாரி பாட்டி! ஸாரி! "

அதற்கு மேல் அவளிடம் எந்த சமாதானமும் இல்லை.

" பரவாயில்ல விடு தங்கம். இந்த கெளவி தனியா சாகுறதுக்கு முன்னாடியாவது உங்கள ஒரு தடவ பார்க்கனும்னு நெனச்சேன். அதான் இப்போ பார்த்துட்டேனே. அழாத டி என் செல்லம்ல... பாட்டிக்கு உன் மேல கோவம் இல்ல... அழாத, "

" பாட்டி பாட்டி அப்டியெல்லாம் சொல்லாதீங்க! நீங்க இன்னும் நிறைய வர்ஷம் வாழனும். நான் உங்கள எங்கையும் போக விட மாட்டேன். நானும் இனிமே போகல பாட்டி. போகல... போ மாட்டேன். "

தாமரை பாட்டி அவள் தலையை கோதி தரையில் அமர்ந்து அவரது மடியில் ஷிவன்யாவை சாய்த்துக் கொள்ள, சற்று நேரம் அவரை கட்டிக் கொண்டு அழுதுத் தீர்த்தப் பிறகு தான் ஷிவன்யா தன்னிலையை அடைந்தாள்.

இரவு உணவை உண்ணாமல் வெளியே சென்றால் காலை வெட்டி காகத்திற்குப் படையல் வைத்துவிடுவேன் என்ற தாமரை பாட்டியின் அன்பு மிரட்டலின் காரணத்தினால் நம் நாயகனும் நாயகியும் அன்றைய இரவை அங்கேயே களித்தனர். ஷிவன்யா தன் பாட்டியை வேலையே செய்ய விடாமல் தன்னை சமையலில் மூழ்கடித்துக் கொள்ள தாமரை பாட்டிக்கு ஷிவானி எழுந்ததும் அவளோடு விளையாடவே நேரம் போதவில்லை.

இதுவரை பாட்டி தாத்தா என்ற உறவுகளை புத்தகத்திலும் படத்திலுமே பார்த்திருந்த ஷிவானிக்கு தாமரையின் புன்னகையும் பாட்டியின் அன்பு வாய்மொழியும் விரைவாகவே பிடித்துவிட்டது.

தாமரை பாட்டியிடம் நிலா சோறு உண்டு அவர் சொல்லும் கதையெல்லாம் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த ஷிவானியை பார்த்தபடி அவன் நண்பர்களுக்கு ஃபோன் செய்து தாங்கள் நலமாக உள்ளதை தெரிவித்தான் யாதேஷ்.

விழி மீறிய வழி நாடி...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro