Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கண்மணி: 52

காரில் ஏறி அமர்ந்ததுமே யாதேஷ் காரை வேகமாக காரை ஓட்டிக் கொண்டு நகரத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தான். குழந்தையை பின் இருக்கையில் படுக்க வைத்திருந்த ஷிவன்யா ' எங்கு போகிறோம்? ' என்று எந்த கேள்வியும் இல்லாமல் அவனைப் பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தாள்.

இதழில் உறைந்த புன்னகையோடு யாதேஷ் அவள் பார்வைவீச்சை நன்கு அறிந்தவனாக அலட்டாமல் வர ஷிவன்யாவும் எதுவும் கூறவில்லை.

அந்த மென்மையான மௌனத்தில் தான் ஏங்கித் தவித்த மண்ணவனின் அருகாமையினால் மகிழ்ச்சியில் திழைத்திருந்த பெண்ணவள் மெல்ல அறியாது அவளை நித்திராதேவி அன்பாய் அரவணைத்துக் கொண்டாள்.

குடிகொண்ட மௌனத்தை உணர்ந்தது போல் அவள் புறம் திரும்பிய யாதேஷ் தன்னவள் நிர்மலாய் உறங்குவதை கண்டு காரை சாலையின் ஓரமாக நிறுத்தினான்.

சத்தம் ஏதும் இன்றி அவளையே அவன் பார்த்திருக்க, திகட்ட திகட்ட தன்னவளை இரசித்த யாதேஷிற்கு அப்படியே இந்த காலம் நின்றுவிட கூடாதா என தோன்றியது.

உலகம் வென்ற வித்தகனுக்கும் உன் கைப்பிடித்த நொடி முதல் இந்த நீண்ட வாழ்நாள் போதாமல் போகிறதடி கண்மணி...

பட்டும் படாமல் அவள் பிறை நெற்றியில் இதழ் பதித்த யாதேஷ் பின் இருக்கையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மகளை கண்டு புன்னகையோடு மீண்டும் காரை உயிர்பித்து அந்த நீண்ட பயணத்தைத் தொடங்கினான்.

மெல்ல மெல்ல தன் தினசரி வேலை நேரத்தை முடித்துக் கொண்டு தாயைத் தேடிய சேயாக கதிரோன் தன் சகோதரனை வேலைக்கு அனுப்பிவிட்டு மலையடிவாரம் செல்ல சோம்பல் முறித்துக் கொண்டு முகில்களின் இடையில் இருந்து மெல்ல எட்டிப் பார்த்தான் சந்திரன்.

ஷிவன்யாவின் பொன்விழிகள் பொருமையாக பிரிய அவள் இருந்த காரும் அருகில் யாருமில்லாத இடமும் தான் முதலில் அவள் மூளையில் பதிந்தது.

ஓட்டுனர் இருக்கையில் யாதேஷ் இல்லை. பின் இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த ஷிவானியும் இல்லை. அவளை சுற்றிலும் இருளே சூழ்ந்திருக்க தான் கண்டது அனைத்தும் தன் கனவு தானா? என் கணவன் என்னுடன் இல்லையா? என சிந்திப்பதற்கே அவளது இதயம் கதற, தட்டுத்தடுமாறி கதவைத் தள்ளி காரை விட்டு வெளியே வந்தாள்.

அவளை சுற்றிலும் இருள் சூழப்பட்டிருக்க, அந்த இருளில் தன் உலகை தொலைத்த பெண்ணவளின் இருதயம் அங்குமிங்கும் அலைப்பாய்ந்தது.

" மாமா! "

கத்திப் பார்த்தாள். கதறிப் பார்த்தாள். ஆனால் அவளது ஒரு குரலுக்கே துள்ளி ஓடி வரும் அவளவன் அவளை சுற்றி எங்கும் இல்லை.

நான்கு வருடங்களும் அழுது அழுது வற்றியிருந்த ஷிவன்யாவின் கண்ணீர் ஊற்று மீண்டும் ஊற்றெடுக்க, அவளது இதயம் அவளிடத்தில் இல்லாத அவனை தேடி அந்த இருளில் மூழ்கத் தொடங்கியது. வலியும் பயமும் ஷிவன்யாவின் தொண்டையை அடைக்க எங்கு மீண்டும் அவனை தொலைக்கக் கூடாத விதியிடம் தொலைத்துவிட்டேனா என்ற வினா அவளது கண்ணீரைப் பெருகச் செய்தது.

" மாமா! எங்க போனீங்க? மாமா! என்ன தனியா வீட்டுட்டுப் போகாதீங்க! வேணாம்! நான் தனியா இருக்க மாட்டேன். எனக்கு நீங்க வேணும் மா! நான் தனியா இருக்க மாட்டேன். "

" யமுனா கண்ணத் திற! "

திடீரென கேட்ட ஒரு அதட்டல் ஷிவன்யாவை பட்டென ஒரு முடிவில்லா பாதாளத்திற்குள் தள்ள, தட்டுத்தடுமாறி எதையாவது பிடிக்க வேண்டி பறபறத்த அவள் கரங்களை வலிய கரம் ஒன்று இறுக்கிப் பிடிக்க, சட்டென அவள் முன் அவன்.

" என்னப் பாரு டி! நான் இங்க தான் இருக்கேன். "

ஷிவன்யா அவள் கண்களை அவளே நம்ப இயலாமல் அந்த பயத்திற்கு இடமும் கொடுக்க விரும்பாமல் அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள்.

" மாமா...மாமா... எங்கையும் எங்கையும் போகாதீங்க ப்லீஸ்... ப்லீஸ்... என்ன திரும்ப விட்டுட்டுப் போய்டாதீங்க ப்லீஸ்... ப்லீஸ் மா என்ன...என்ன விட்டுட்டு...விட்டுட்டுப் போய்டாதீங்க... "

யாதேஷின் சித்தம் ஒரு சில நொடிகள் செயலற்றுப் போயிருந்தது. உறங்கும் தன் மனைவியையும் குழந்தையையும் காரில் விட்டுவிட்டு ஒரு டீ குடிக்கலாம் என காரை நிறுத்தப் போனவனை திடீரென எழுந்த ஷிவானி " அப்பா கடலு போலாம்ப்பா! " என தூங்கி எழுந்ததும் எழாததுமாக ஐஸ் வைத்து அவனை இழுத்து வந்திருந்தாள்.

ஷிவன்யா ஒரு முறை கண்களை சுருக்கி அவனிடம் ஆசை குரலில் கேட்டாலே தலையாட்டும் அவனுக்கு அவனது குட்டி தேவதையின் அழகை தவிர்க்க முடியவில்லை. உறங்கும் தன்னவளது உறக்கத்தை கலைக்க மனமின்றி அவளை தொந்தரவு செய்யாமல் ஷிவானியை கடலுக்கு தூக்கிச் சென்றிருந்தான் யாதேஷ்.

இருவருமாக அரை மணி நேரம் தண்ணீரில் கால் நனைத்து விளையாடியிருக்க, அவள் ஆசையாய் அலைகளோடு ஓடி விளையாடுவதை கண்ணிமைக்காமல் இரசித்துக் கொண்டே அனைத்தையும் அவன் இதயம் என்னும் பெட்டகப்பெட்டியில் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான் யாதேஷ்.

தன் மகளோடு ஆடிக்களித்துவிட்டு தலையை சிலிப்பிக் கொண்டு கரைக்கு வந்தவன் இன்னும் அலைகளிடம் ஓடிவிட்டு அது மீண்டும் வரும் போது கரைக்கு ஓடிக் கொண்டிருந்த ஷிவானி மீது ஒரு கண் வைத்துக் கொண்டே தன் காரை நோக்கி நடந்தான்.

இருக்கையில் தலையை அங்குமிங்கும் வேகவேகமாக ஆட்டிக் கொண்டிருந்த ஷிவன்யாவின் நிலையில் பதறியவன் காரை திறந்து உள்ளே வந்ததுமே கேட்டதென்னவோ அவளது அழுகுரல் தான்.

" வீட்டுட்டுப் போகாதீங்க! வேணாம்! நான் தனியா இருக்க மாட்டேன். எனக்கு நீங்க வேணும் மா! நான் தனியா இருக்க மாட்டேன். "

அவன் எவ்வளவு முயன்றும் ஷிவன்யா கண்களை பிரிக்கவில்லை. கண்ணீர் அவள் கன்னம் தாண்டி தடம் புரண்டோட மீண்டும் மீண்டும் அவனை அழைத்து அழுது கொண்டே இருந்தவளை அந்த நிலையில் காண இயலாமல் கத்தியவனின் கத்தலே அவளை நிலையடையச் செய்தது.

இப்போது தன் நெஞ்சில் கதறிக் கொண்டிருந்தவளை பார்த்தான். அவளை அணைக்காமல் இருந்த யாதேஷின் கரங்கள் மெல்ல அவள் இடையை அவனோடு இழுத்துக் கொண்டது. சூடான அவனது கண்ணீர் மெல்ல அவன் கன்னங்களை நனைக்க, ஒரு கரத்தால் அவள் தலையை மென்மையாக கோதியவன் அவளது கன்னத்தோடு தன் கன்னம் உரசினான்.

" யமுனா... "

அவனது தழுதழுக்கும் குரல் அவள் உயிர்வரை தீண்டி வர பெண்ணவளின் உடல் சிலிர்த்து அடங்கியதை அவனும் உணர்ந்தான்.

" நான் இங்க தான் டி இருக்கேன். உன் மாமா வந்துட்டேன். "

ஷிவன்யாவின் அழுகை பெருக்கெடுத்தது. காற்றிற்கும் இடம்விடாமல் அவள் அவனை இறுக்கி அணைத்துக் கொள்ள யாதேஷ் அவன் தலையை அவள் தலையோடு சாய்த்து " அழாம கொஞ்சம் என்ன பாரேன்... கண்ணத் திற டி, "

" நீங்க...நீங்க காணாப் போய்டுவீங்க... "

யாதேஷிற்கு அவளின் கேவலை கேட்டு மேலும் அழ வேண்டும் போல் இருந்தது.

" என்ன நம்பு மா... ப்லீஸ் யமுனா, "

" வே...வேணாம் மாமா... வேணாம்... கனவுல இருந்து எந்திரிக்க சொல்லாதீங்க ப்லீஸ்... என்ன விட்டு நீங்க போய்டுவீங்க... "

ஷிவன்யாவின் இதழை விட்டு வந்த வார்த்தைகள் தானாக அவன் இதயத்தை ரணமாக்கியது. அவள் நிஜஉலகை மறந்து இது ஏதோ கனவு உலகம் தான், தான் கண்களைப் பிரித்தால் எப்போதும் போல் இவன் காற்றோடு காற்றாக இருளோடு நிழலாக மறைந்துவிடுவான் என சஞ்சரித்திருந்தாள்.

எத்தனை நாட்கள் தான் வந்துவிட்டேன் என எண்ணி கனா கண்டு பின் ஏமாற்றம் கண்டாளோ? எத்தனை தூங்கா இரவுகள் தன் அணைப்பின்றி தனிமையில் வாடினாளோ?

" ஏன் டி இப்டி உன்னையே வருத்திக்கிற...? யமுனா... யமுனா ப்லீஸ் என்னப் பாரு, நான் எங்கையும் போக மாட்டேன். "

அவன் நெஞ்சில் மேலும் மேலும் புதைந்தவள் தொடர்ந்து அவனை பார்க்க மாட்டேன் என தலையை இடவலமாய் ஆட்டிக் கொண்டே இருக்க, அவள் கழுத்தை ஒரு கரத்தால் பிடித்து மறு கரத்தால் தாடையை அழுத்தி மேலே உயர்த்திய யாதேஷ் அவள் எதிர்பார்க்கும் முன் அவள் இதழில் அவன் வரிகளை எழுதினான்.

அகல விரிந்த ஷிவன்யாவின் இமைகள் அவள் பார்வைக்கு உயிர் கொடுக்க அப்போதே அவளவனை பார்த்தாள். அவன் முகத்தில் வலியும் கோவமும் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. ஆனால் அவை அனைத்தையும் தோற்கடிப்பது போல் ' உன் புருஷன் வந்துட்டேன் டி. நான் வந்துட்டேன். ' என அவன் உணர்த்த நினைக்கும் உண்மையின் ஏக்கம் அந்த இதழ் முத்தத்தில் பிரதிபலித்தது.

தேனுண்ட வண்டாக மதியிழந்த பெண்ணவள் அவள் மண்ணவனிடம் சரணடைய அவளை மேலும் தனக்கருகில் இழுத்தவன் அவளை விட்டுப் பிரிந்த போது ஷிவன்யா பெருமூச்சறித்தபடி அவன் நெஞ்சோடு ஒன்றியிருந்தாள்.

அவள் தாடையைப் பிடித்து முகத்தை அவனுக்கு நேராக உயர்த்திய யாதேஷ் அவள் மூடப்பட்ட இமைகள் இரண்டிலும் அழுந்த முத்தம் வைக்க, கண்ணீர் தேங்கியிருந்த விழிகள் அவனை விழித்துப் பார்த்தது.

" என்ன டி? இன்னும் என்னப் பண்ணா நான் நிஜம் தான்னு நம்புவ? "

என்ன தான் அவன் சிரித்துக் கொண்டே நக்கலாக கேட்டிருந்தாலும் அவன் ஏக்கத்தை பட்டென கவனித்துவிட்டாள் அவள். சிந்தனை ஏதுமின்றி அவள் அவனை மீண்டும் அணைத்துக் கொள்ள பெருமூச்சோடு அவளை அணைத்துக் கொண்டான் யாதேஷ்.

ஒரு சில நிமிடங்களில் தன்னவளை சமாதானம் செய்து கைப்பிடித்து வெளியே அழைத்து வந்தான். இவ்வளவு நேரமும் அலைகளோடு விளையாடி கலைத்துப் போய் அவர்களிடம் ஓடி வந்தாள் ஷிவானி.

" அம்மா என்ச்சிட்டியா? வா மம்மி மணல் ஹவுஸ் கட்டுவோன்! வா, வா! அப்பா நீயும் வாங்க! " இருவரின் கரத்தையும் பிடித்து அவள் குதிக்க, அழுது அழுது சோர்ந்திருந்த ஷிவன்யா ஏதும் கூறும் முன்பாக யாதேஷ் முந்திக் கொண்டான்.

" பேபி டால் மணல் வீடு கட்டப் போறீங்களா? மம்மி இப்போ தான எந்திரிச்சாங்க சோ அம்மா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். அப்பாவும் பாப்பாவும் கட்டலாமா? "

" வாங்க வாங்கப்பா! அம்மா நீ இங்கியே இரு! நானும் அப்பாவும் வன்டுறோம். காணாப் போய்டாத மம்மி! "

அன்னைக்கு வேகமாக அறிவுரை கூறி அவளை சமத்துப் பிள்ளையாக ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டுத் தான் புன்னகையோடு காத்து நின்ற யாதேஷுடன் மணல் வீடு கட்ட நகர்ந்தாள் ஷிவானி.

யாதேஷும் ஷிவானியோடு ஒரு குட்டி மணல் வீடை கட்டத் தொடங்க, அந்த அழகை கன்னத்தில் கை வைத்து இரசித்துக் கொண்டிருந்த ஷிவன்யாவின் கண்ணீர் எப்போது அவள் கன்னத்தை நனைத்தது என்று அவளே அறியவில்லை.

மகள் கூறும் அனைத்தையும் அவன் பார்த்து பார்த்து செய்ய ஒரு ஒரு முறையும் அவனை பாராட்ட ஷிவானி கைத்தட்டி சிரித்து யாதேஷின் கன்னத்தில் முத்தமழை பொழிந்தாள். தன் குட்டி தேவதையின் விளையாட்டு மழையில் ஆசை தீற நனைந்திருந்த யாதேஷ் திரும்பி அவனவளைத் தேடினான்.

அவர்கள் இருவருது பார்வையும் ஒன்றோடொன்று சங்கமிக்க, எழுந்து அவளை நோக்கி வந்தான்.

ஷிவன்யா தன்னிடம் நடந்து வரும் யாதேஷை காணாத கனவாய் கண்ணீருடன் மிளிர்ந்த புன்னகையோடு பார்த்திருக்க அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவனின் கரம் தானாக அவள் கன்னத்தை வருடியது.

" ஹாய் பொண்டாட்டி, "

" ஹாய் மாமா, "

அவள் நெற்றியோடு நெற்றி முட்டிய யாதேஷின் கண்கள் அவளைக் கண்டு அழகாய் சிரித்தது.

" எப்டி இருக்கு இப்போ? ஓக்கேவா? "

கண்கள் மூடி நெஞ்சை அடைத்த மூச்சை இழுத்தவள் தலையை இடவவதாய் ஆட்டினாள். யாதேஷ் அவளை புரியாமல் பார்க்க

" ஒருவழியா என் கிட்ட வர்ரதுக்கு வழி கெடச்சிடுச்சுள்ள உங்களுக்கு? "

" வழின்னே தெரியாம நாழு வர்ஷமா தேடீட்டு இருந்தேன். ரொம்ப லேட் தான் இல்ல? "

" பரவாயில்ல... வந்துட்டீங்களே... அது போதும். "

அவள் கண்களை விட்டுத் தப்பித்த கண்ணீரை அவன் புன்னகையோடு தன் ஒற்றை விரலால் சிறைப்பிடிக்க, " அப்டியா? " என்று கேட்டான்.

" ஹ்ம் ஆமா. அது போதும். உங்கள தேடவிட்ட நான் தான் தேடி வராம தப்பு பண்ணீட்டேன். ஸாரி மாமா... "

வேகமாக தலையை இடவலதாய் ஆட்டி அவள் கன்னத்தை இரு கரத்திலும் ஏந்திய யாதேஷ்

" ஷ்ஷ்... ப்லீஸ் யமுனா ஸாரி மட்டும் கேக்காத டி. நடந்தது நடந்ததாவே இருக்கட்டும். எதையுமே என்னால மாத்த முடியாது. அந்தளவுக்கு சக்தி இருந்துருந்தா எதையும் நான் நடக்க விற்றுக்க மாட்டேன். உன்ன இத்தன வர்ஷம் இவ்ளோ வலியோட தனியா விற்றுக்க மாட்டேன். என் உயிர் என் கூட இல்லாம எங்கையோ கஷ்டப்பட்டுட்டு இருக்குறது தெரியாம எல்லாம் மறந்து நான் அன்னைக்கு கண் விழிச்சப்போவும் நான் நானா இல்ல... நான் உன்ன தான் தேடுறேன்னே தெரியாம உன்னையும் நீ சந்தம்பட்ட நம்ம நினைவுகளையும் தேடுனேன் டி. ஆனா என்னோட கெட்ட நேரமோ என்னமோ... நீ என் கண்ணு முன்னாடி வர வரைக்கும் எதையுமே என்னால கண்டுப்புடிக்க முடியல... ஆனா விதி எவ்வளவு தான் நம்மள லெஃப்ட் அண் ரைட் வாங்கி இருந்தாலும் என்னோட டார்க்-ஆன உலகத்துல தொலஞ்சு போன என்ன நீ கண்டுப்புடிச்சிட்ட டி, "

" இனிமே திரும்ப...திரும்ப அந்த மாதிரி நடந்தா... "

" அந்த மாதிரி எதுவும் ஆகாது. நான் இனிமே ஒரு நிமிஷம் கூட உன்ன விட்டும் நம்ம புள்ளைய விட்டும் தனியா இருக்க மாட்டேன். யாரு என்ன சொன்னாலும் நீ என்னோடவ. என்னோட எல்லாம் நீ தான் யமுனா. இப்பவும் நான் உன் புருஷன் மட்டும் தான். ஐம் ஆல்வேஸ் யுவர்ஸ். "

மண்டியிட்ட நிலையிலே அவளை யாதேஷ் இழுத்து அணைத்துக் கொள்ள முதல் முறை காதலை சொன்ன போது கூட அவன் இதயம் இத்தனை வேகத்தில் துடித்ததா என்று அவனுக்குத் தெரியவில்லை. நான்கு வருட கண்ணாமூச்சி ஆட்டத்தின் வலிகள் முடிவுக்கு வந்தும் ஒரு மோன நிலையில் தன் அரவணைப்பில் நிலைத்திருந்த காதலியின் மௌனத்தை பகுத்தறிய இயலாமல் அவன் இதயம் பதைபதைத்துக் கொண்டிருந்தது.

ஆனால் என்றும் போல் இன்றும் அவன் படபடக்கும் இதயத்தை அமைதியாக்கும் சக்தி படைத்த அவள் ஒரே வாக்கியத்தில் அவனுக்கு மீண்டும் உயிரூட்டினாள்.

" ஐ லவ் யு மாமா, "

யாதேஷ் சட்டென அவளிடம் இருந்து பிரிந்து அவளைப் பார்க்க, ஷிவன்யா அவன் விழிகளை உருத்து நோக்கினாள். அவன் கண்களில் தெரிந்த கேள்விக்கு பதில் அவள் அதரங்கள் மொழிந்தது.

" அப்பவும் இப்பவும்... எப்பவுமே... ஐ லவ் யு, "

விழி மீறிய வழி நாடி...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro