கட்டிகொள் என்னை: 20
சூர்யாவின் அப்பார்ட்மென்ட்டிற்குள் நுழைந்தவுடன் ஆரவும் ஷிவனேஷும் அந்த இடத்தை சுற்றிப் பார்த்தபடியே வர, ஆர்யாவின் சிறுவயது படங்கள் ஆரவை பட்டென ஈர்த்தது. அவன் அருகில் சென்று படத்தில் தெரிந்த இரண்டு வயது ஆர்யாவை வருட, ஷிவனேஷ் எச்சிலை கூட்டி விழுங்கினான். அவன் அறியாத முகமா அது...?
சசிக்கும் ஆரவிற்கும் அருந்த நீரை கொடுத்த சூர்யா, உட்காராமல் தயங்கி நிற்கும் ஷிவனேஷை ஏறிட்டாள்.
" உட்காருங்க ஷிவனேஷ்... எவ்வளவு நேரம் நிக்கப் போறீங்க? " என பெருமூச்சோடு தனியாய் இருந்த கதிரை ஒன்றில் அமர, சசி அவனை இழுத்து வந்து அவர்களின் அருகில் அமர வைத்தாள்.
" என்னண்ணா ஆச்சு உனக்கு? நானே இன்னைக்கு உனக்கு ஃபோன் பண்ணலாம்னு தான் இருந்தேன்... நீ ஏதோ அண்ணிக்கிட்ட கோச்சிட்டு இருக்கேன்னு சொன்ன... அண்ணி நீ செத்துட்டன்னு சொல்றாங்க... அக்கா எங்க?! உனக்குத் தெரியுமா அவ காணும்னு?! அப்பறம் கொழந்த
" சசி பதறாத... " ஷிவனேஷ் அமைதியாய் அவளின் தலையை தட்டிக் கொடுக்க, சசிக்கு பொருமை என்ற சொல்லே எண்ணத்தில் இல்லை.
" எப்டிண்ணா பதறாம இருக்க சொல்ற?! அக்கா நம்மளல்லாம் விட்டுட்டு போய் நாழு வர்ஷமாச்சு! அவ மாமாவ பார்க்க தான போறான்னு சொன்ன, ஆனா மாமாக்கு எதுவுமே நியாபகம் இல்ல... மாமாக்கு அக்சிடென்ட் ஆய்டுச்சாம்! " அவனுக்கு தெரிந்த விஷயத்தையே இவள் மீண்டும் ஒப்புவிக்க, பெருமூச்சோடு சூர்யா அவளை தன் புறம் திருப்பினாள்.
" சசி கொஞ்சம் அமைதியா இரு டா... நாழு வர்ஷத்துல நிறைய நடந்து போச்சு... நான் இரெண்டு வர்ஷம் பங்கலூர்ல இருந்தேன். "
அவ்வளவு தான். அதற்கு மேல் ஆரவை கட்டிவைக்க அவர்களிடம் எந்த வேலியும் இல்லை.
" டேய் டேய் போதும் டா! ஒழுங்கா எனக்கு ஃப்லஷ்பக் சொல்லுங்க! என்ன நடக்குது இங்க?! "
ஷிவனேஷும் சூர்யாவும் ஒரே போல் பெருமூச்சை இழுத்தவிட்டனர். அனைத்து கேள்விகளின் விடைகளும் நான்கு வருடம் முன்பு நடந்த விபத்தில் தொலைந்துவிட்டது.
ஐந்து வருடங்கள் முன்பு...
யாதேஷ் அவனது காதலை ஒத்துக் கொண்டவுடன் ஷிவன்யாவின் வாழ்வில் பல மாற்றங்கள் தெரிந்தது. பார்க்கும் இடமெல்லாம் தெரியும் அவன் இப்போது மீண்டும் அவள் இருக்கும் இடமெல்லாம் இருந்தான்.
ஷிவன்யாவின் சலிப்புத் தட்டிய நாட்களை புயலென தகர்த்தெரிந்து அவளை நில்லாமல் ஆக்கியிருந்தவனை பெரும்பாடுபட்டு நிறுத்தினாள் அவள். இப்போது கூட, கல்லூரியின் மேடையில் நின்று அவளை பார்த்து அந்த ஆளை இழுக்கும் புன்னகையோடு பாடிக் கொண்டிருந்தான் அவன்.
" இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே... " இரம்மியமன அவன் குரல் அவளை இம்சித்தது. மனம் படபடக்க, இதழ் தந்தியடிக்க வாயடைத்து நின்றாள் அவன் முன்...
" இன்னும் பேச கூட தொடங்கல
என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல
இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாத... "
கண்கள் கொஞ்சும் அவன் காதல் மொழி அவளுக்குத் தான் புரியும் போல. அந்த கல்லூரியே அவன் விழியில் கட்டுண்டு கிடந்த ஷிவன்யாவின் நிலையை கண்களில் படம்பிடித்தது.
" இன்னும் பேச கூட தொடங்கல
என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல
இப்போ மழை போல நீ வந்தால் கடல் போல நான் இருப்பேன்
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன...? " சரியாக பாட்டின் வரிகளோடு அவள் கைகளில் அவன் ஒரு ரோஜா மலரை நீட்டி நின்றான்.
இந்த காதல் மன்னனுக்கு சரியான அமைச்சனாய் ட்யூன் போட்டுக் கொண்டு அவனுக்கு பின்னே ஆரவ் முகமெல்லாம் சிரிப்போடு நின்றிருக்க, அவளவனின் குரலில் கட்டுண்டிருந்த ஷிவன்யாவால் அதற்கு மேல் முடியவில்லை.
" அய்யோ பெருமேளே! ஒரு நிமிஷம் நில்லுங்க! "
" இல்ல நான் பாட்டு பாடப்போறேன்! " என மீண்டும் வாறிக் கொண்டு கிளம்பியவனை கரகோஷம் போட்டுக் கத்திக் கொண்டிருந்த இளைஞர் பட்டாளத்திடமிருந்து பாடுபட்டு தனியே இழுத்து வந்தாள் ஷிவன்யா.
" ஸீனியர்... எங்க பார்த்தாலும் இருக்கீங்க! பாட்டு பாடீட்டே இருக்கீங்க! என்ன பார்த்து...இப்பிடி இப்பிடி இவ்வளவு அழகா சிரிச்சிட்டே இருக்கீங்க! " அவள் வேகவேகமாக அவனின் வசீகரிக்கும் புன்னகையில் தன்னை இழக்கும் முன் கண்களை மூடிக் கொண்டு கத்த, யாதேஷ் செய்வதறியாது விழித்தான். " என்ன என்ன என்ன செஞ்சிட்டு இருக்கீங்க நீங்க?! என்ன தான் சொல்லவறீங்க?! "
" இப்டி தெளிவா கேற்றுந்தீன்னா நான் முன்னாடியே சொல்லீருப்பேன்... " என கழுத்தை தேய்த்துக் கொண்டு தரையை அளந்தவனை பார்த்தவளால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.
" நீங்க இவ்வளவு வெட்கப்பட்டு இன்னும் நான் லவ்-ல விழுந்துட்டா அது முழுக்க முழுக்க உங்க தப்பு தான். உங்க தப்பு மட்டும் தான் மிஸ்டர் யாதேஷ் ஷிவன். " என கோபமாக சொல்லத் தான் அவளும் முயன்றாள் ஆனால் அவளவன் உதிர்த்த மென்னகை அவளை அணையிட்டு இழுத்தது.
" யமுனா, என்ன கட்டிக்கிறியா? "
காதல் கணவிலிருந்து விழித்து, விண்ணிலிருந்து படாரென கீழே விழுந்து பேந்தபேந்த முளித்தவளை பார்த்திருந்தால் நம் நாயகனும் வாயடைத்துத் தான் போயிருப்பான். கடந்த ஒரு வாரமாய் அவளை பேசாமல் உயிரோடு வாட்டியடித்ததுமில்லாமல், அவளிடம் தன் வாய்மொழியால் எதையும் கூறாது ஓடி ஓழிந்துவிட்டு இப்போது நேரடியாக அவன் கேட்ட கேள்வி அவளை பனிகட்டியாய் உரைய வைத்திருக்க, யாதேஷிற்கு தான் அவள் மூச்சுவிடும் சத்தம் கூட கேட்காமல் எங்கு தன்னை தனியே விட்டுவிட்டு ஓடிவிட்டாளோ என்ற பயம் எழுந்திருந்தது.
" யமுனா? "
" யமுனா! "
" ஏய், எங்க டி போன...? "
" அடியேய்! "
நல்லவேளையாக அவனது கடைசி அழைப்பு அவளது செவிகளை அடைந்திருக்க, நெஞ்சில் கை வைத்துக் கொண்டு இரண்டடி பின் நகர்ந்தவள் அவனை நம்பாத பார்வை பார்த்தாள்.
" அய்யோ நான் கணவு கிணவு கான்றேனா? யோவ் ஸீனியர் என்னய்யா ஏதேதோ சொல்ற? "
" ஏதே யோவா? "
" அய்யோ பெருமாளே! நான் யார்ட்ட போய் கேப்பேன். யார்ட்ட போய் சொல்லுவேன். 6 மாசம் என்ன பார்க்காம சுத்துன இந்த மனுஷன் என்ன பார்த்து கட்டிக்கிறியான்னு கேட்குறாரு... இராமா, என் மாமன் என்ன பார்த்து கட்டிக்கிறியான்னு கேட்டுட்டாரு! "
விட்டால் அவள் அந்த கல்லூரிக்கே மைக் வைத்து சொல்லியிருப்பாள் போல. யாதேஷிற்கு கண்ணிமைப்பதற்குள் அவள் கூற்றைக் கேட்டு முகமெல்லாம் சூடேறியிருக்க, தட்டுத்தடுமாறி அவளது வாயை மூடி மரத்தோடு அவளை சாய்த்தான்.
" அய்யோ வாய மூடு டி பாவி. என்ன என்ன சொல்லீட்டு இருக்க— "
எங்கு அவனை பேசவிட்டாள் அவள்? அந்த நெருக்கத்திலும் அவன் கைகளை படக்கென கீழே இறக்கவிட்டு, மிளிரும் அவன் அழகிய விழிகளை பார்த்துப் புன்னகைத்தாள்.
" அய்யோ என்ன திரும்ப ஒருக்க உரிமையா அடியேன்னு கூப்டுங்க மாமா! "
அடக்கமாட்டாமல் தன் தலையை அந்த மரத்திலே இடித்துக் கொண்ட யாதேஷ் அதற்கு மேல் முடியாமல் கெஞ்சலாய் அவளது கைகளை அழுத்தினான்.
" போதும் டி... ப்லீஸ்... "
" அய்யோ என் மாமன் வெக்கப்பட்டா— "
இதற்கு மேல் பேசவிட்டால் இவள் தன் மரியாதையை கல்லூரியில் கப்பல் ஏற்றிவிடுவாள் என அவள் வாயை மீண்டும் இறுக்கி மூடியவன், " இதுக்கு மேல பேசுனீன்னா நான் உன் ஹிட்லர கூப்ற்றுவேன் டி. நான் சொல்றத மட்டும் கேளு... நீ இப்போ எதுவும் சொல்ல வேணாம். என்ன புடிச்சிருக்கு, என்ன கட்டிக்கிறீன்னா இன்னைக்கு சாய்ந்திரம் மரத்தடிக்கு வா... ஒரு இடத்துக்கு அழைச்சிட்டுப் போறேன், இப்போ மாமா போய்ட்டு வரேன். "
ஹிட்லர் என்ற பெயரை எடுத்ததும் கப்சிப்பென அமைதியான ஷிவன்யா, அவளோடு நெருங்கி நின்று அவள் கண்களை எதிர்நோக்கி அவன் கூறிய ஒவ்வோர் சொல்லையும் கேட்டு சிலிர்த்தடங்கியவள் அவன் இறுதி கூற்றோடு அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு சென்றதும் " பெருமாளே! " என நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்துவிட்டாள்.
***
ஒருவழியாக நான்கு மணி நேரம் அவன் நான்கு நிமிடம் பேசியதையே மீண்டும் மீண்டும் பேசிபேசி அத்விகாவின் காதை அறுத்துவிட்டு ஷிவன்யா ஒரு அழகிய சிவப்பு சுடிதார் அணிந்து, அழகாய் பிண்ணலிட்டு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அவன் சொன்ன மரத்தடியில் போய் பொம்மை போல் அமர்ந்துவிட்டாள். அங்குமிங்கும் கண்களை சுழட்டிக் கொண்டும், நகத்தைக் கடித்துக் கொண்டும் அமர்ந்திருந்தாள்.
அவன் எங்கே அழைத்து செல்வான், ஏன் அழைத்துச் செல்கிறான் என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை. அவள் ஹிட்லரிடம் மட்டும் " பர்மிஷன் கேட்கல, இன்ஃபர்மேஷன் சொல்றேன். நான் ஸீனியரோட எங்கையோ போறேன். எதுவா இருந்தாலும் அவர்ட்ட கேட்டுக்கோங்க... போய்ட்டு வந்துடுறேன், போய்ட்டு வந்துடுறேன், போய்ட்டு வந்துடுறேன், போய்ட்டு வந்துடுறேன், " என ஷிவனேஷ் " போய்ட்டு வா, " என அவன் வாயாலே சொல்லும் வரை சொல்லிவிட்டு இப்போது பொம்மை போல் வந்தமர்ந்திருக்கிறாள் இவள்.
" மாமா! " என ப்ரின்சிபலை பார்த்த ஸ்கூல் குழந்தைப் போல் அவள் அட்டென்ஷனில் எழுந்து நிற்க, அவள் இங்கே இருக்க வேண்டும் என தனக்குத் தெரிந்த அனைத்து கடவுளிடமும் அப்லிக்கேஷன் போட்டுக் கொண்டு வந்த யாதேஷ் பெருமூச்சை விட்டான்.
" சோ... போலாமா? "
" போலாமே! "
அவளது குரலில் கேட்ட துள்ளலில் மனம் துள்ளி குதித்தது அவனுக்கு. யாதேஷ் அவளை கண்டு சிரிக்க மீண்டும் ஷிவன்யாவின் இதயம் கட்டுண்டு விழுந்தது.
" இப்டி சிரிச்சு சிரிச்சே மனுஷன கவுத்துறுங்க, " மயங்கிய வண்டு பூவைப் பார்ப்பது போல் அவனை அவள் இரசிக்க, யாதேஷின் இதழ்களோடு கண்களும் சேர்த்து சிரித்தது.
பின் என்ன? ஷிவன்யா க்லீன் போல்ட் தான்.
ஒரு தலையசைப்புடன் யாதேஷ் ஷிவன்யாவை அழைக்க, அவ்விருவருமாய் அங்கிருந்து கல்லூரியின் வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினர். வழிநடுவெல்லாம் தன் கையோடு உரசும் அவன் கைகளை அவள் கண்கொட்டாமல் பார்க்க, அதை அறிந்தானோ அந்த கள்ளன் அவனது சிறுவிரலை அவளோடு கோர்க்க, சிலிர்த்தடங்கிய ஷிவன்யா அவளின் மாயவன் செய்த மாயத்தை அவன் வதனத்தில் பூத்த மென்னகையில் தான் புரிந்துகொண்டாள்.
முதல் முறை அவனை அவள் பார்த்த நாள் அவள் கை பற்றினான். இன்று மீண்டும் அவன் பிடித்தபோது, மெதுமெதுவாய் அவளது விரல்களும் அவன் உள்ளங்கையில் ஊடுருவ, உலகறியா அந்த இளஞ்சோடிகளின் கரங்கள் மாயமாய் ஒன்றிணைந்திருந்தது.
கல்லூரியின் வெளியே நாயகர்களுக்காய் காரில் காத்துக் கொண்டிருந்த ஆரவ் அவர்களின் சேர்ந்திருந்த கரங்களை கண்டு விசிலடித்து கூச்சலிட, ஷிவனேஷ் ஒரு நிறைவான புன்னகையில் தன் மகிழ்வை காட்டினான்.
காரை விட்டிறங்கிய அவ்விருவரையும் கண்டவுடன், ஷிவன்யா பட்டென சுதாரித்து தன் கையை உருவிக் கொள்ள, படக்கென அதை மீண்டும் இழுத்துப் பிடித்தான் யாதேஷ்.
" ஏங்க என்ன பன்றீங்க?! ஹிட்லர் என்ன பார்க்குது! ஏன் ஹிட்லர் வந்துருக்குன்னு சொல்லவே இல்ல? " என பல்லிடுக்கில் யாதேஷின் தோளிற்கு பின் மறைந்து கொண்டு, குதிங்காலில் நின்றபடி பேசியவள் ஷிவனேஷ் ஏதோ அவளை அடித்துவிடுவான் என்ற ரேஞ்சிற்கு நாயகனிடம் குற்றம் சாடினாள்.
" ஏன் இந்த ஷைனெஸ்லாம் உனக்கு க்ரௌண்ட்-ல என்ன மாமான்னு கூப்ட்டப்போ வரலையோ? "
யாதேஷ் கேலியாய் அவளை பிடித்து முன்னே இழுக்க, வாயெல்லாம் பல்லாக நின்றிருந்த ஆரவ் வாணத்தில் எந்த மேகத்திற்கு தாவினான் என்று அவனே அறிவான்.
" ஏதே மாமான்னு கூப்ட்டாளா?! ஏய் குயிலி ஒரு வர்ஷமா உன்ட்ட பேசுறேன், ஒருக்க என்ன நீ மாமான்னு கூப்ற்றுக்கியா இல்ல இவன தான் கூப்ற்றிக்கியா?! எப்டி அவன மட்டும் நீ மாமான்னு கூப்டலாம்? " என அவனையும் ஷிவனேஷையும் காட்டி கேட்டு, யாதேஷை முறைத்தான்.
அவஸ்தையாய் ஷிவனேஷின் பார்வையில் நெழிந்து கொண்டிருந்த ஷிவன்யா படக்கென ஆரவைப் பார்த்தாள். " அண்ணா நான் ஏன் உங்கள மாமான்னு கூப்டனும்?! "
" அதான அவ உன்ன ஏன் டா மாமான்னு கூப்டனும்? நானும் நீயும் ஒன்னா?! " யாதேஷும் இப்போது சண்டைக்கு வர, ஆரவால் இறுதியில் சலித்துக் கொள்ள மட்டும் தான் முடிந்தது.
" நம்ம வாழ்கைல யாருமே நம்மள மாமான்னு கூப்ட மாட்டாங்க போல மச்சான்... சிங்கிள்ஸ் சாபம் உங்கள சும்ம விடாது டா, " இவன் காரில் ஏறிக் கொண்டிருந்த யாதேஷையும் ஷிவன்யாவையும் கரித்துக்கொட்ட, ஷிவனேஷ் கஷ்வலாக அவனை பார்த்துவிட்டு,
" நான் வேணா உன்ன மாமான்னு கூப்டவா மச்சான்? "
அவனின் படுசீரியசான சின்சியர் சிகாமணி முகத்தை அருகில் பார்த்ததோடு இல்லாமல் அவன் கேட்ட கேள்வியில் அவனை தூரதள்ளிவிட்டான் ஆரவ்.
" போடாங்கு டேய்! போடா அந்த பக்கம்! "
வேணான்னா போ என்பது போல் தோலை மிகவும் சாதாரணமாக குலுக்கிவிட்டு ஷிவனேஷ் வண்டியில் ஏற, தன்னை பார்த்து சிரிக்கும் வாழ்கைக்கு " நானும் கமிட் ஆவேன்டா ஒரு நாள்! " என்று சவால்விட்டுக் கொண்டு தன் ஓட்டுனர் இருக்கையில் சென்றமர்ந்தான் அந்த முரட்டு சிங்கிள் என்கிற ஆரவ்.
விழி மீறிய வழி நாடி...
DhiraDhi ❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro