Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

என்ன செய்ய?: 39

" மாமா இந்த பூ வச்சிக்கோங்க, "

" இல்ல அப்பா இந்த பூ வச்சிக்கோங்க, "

" ஆர்யா மாமாக்கு நான் குதுக்குறேன்! "

" அப்போ நான் பேபிக்கும் ஷிவாம்மாக்கும் குதுக்கவா? "

இவ்வாறாக குழந்தைகள் இருவரும் அவர்களுக்குள்ளே பேசியபடி அவர்கள் மரத்தின் அடியில் இருந்து அள்ளிக் கொண்டு வந்த பூக்களை அவர்களுக்குள்ளே பிரித்துக் கொள்ள, ஷிவனேஷின் மடியில் அமர்ந்து கொண்டு சூர்யாவிற்கு ஒரு பூவை நீட்டினான் ஆர்யா.

அவனைத் தொடர்ந்து ஷிவானி கண்கள் சிரிக்க அவள் எடுத்து வந்த மஞ்சள் நிற மலரை ஷிவனேஷிடம் நீட்ட அதை அவன் புன்னகையோடு வாங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷிவன்யா அழுது ஓய்ந்து பத்து பதினைந்து நிமிடங்கள் ஆகியிருந்தது.

சூர்யாவையும் ஆர்யாவையும் மாற்றி மாற்றி பார்த்தவள் ஆர்யா அவளுக்கு நீட்டிய பூவை வாங்கிக் கொண்டு அவன் கன்னத்தில் மென்மையாய் முத்தம் பதித்தாள்.

" ஆர்யா, " அவள் ஆசையாய் அழைத்து அவன் கன்னத்தை வருட ஆர்யா அழகாய் புன்னகைத்தான்.

சூர்யா அவர்களைக் கண்டு புன்னகைக்க, ஷிவனேஷ் குழந்தைகளை விளையாட அனுப்பிவிட்டு ஷிவன்யாவைப் பார்த்தான்.

அவன் பேச்செடுக்கும் முன்பே அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் நம் நாயகி.

" அவர பத்தி என் கிட்ட பேசாதீங்க... "

ஷிவனேஷ் வானத்தைப் பார்த்துக் கொண்டே தலையசைத்தான். " சரி பேசல, "

அவன் சொன்னதுமே ஷிவன்யா உதட்டைக் கடித்துக் கொண்டு தலையைத் தாங்கி அமர, ஷிவனேஷின் அமைதிக்குப் பின் இருக்கும் ஏதோ ஒன்றை அறிந்திருந்த சூர்யாவும் அமைதி காத்தாள்.

அந்த மௌன நிலையும் நீடித்தது ஷிவன்யா தலையை இடவலதாய் ஆட்டிக் கொண்டு அவ்விருவரையும் முறைக்கும் வரை.

" எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு அவர் முன்னாடி போய் நிக்க சொல்றீங்க என்ன? "
---

சூர்யா திடீரென அவள் கத்தவும் படக்கென திரும்பி பார்த்து விழித்தாள். " நான் சொல்லவே இல்லையே, "

" நாழு வர்ஷம் எந்த மூஞ்ச வச்சிட்டு அவன் கூட சுத்துனியோ அதே மூஞ்ச வச்சு தான். எனக்குத் தெரிஞ்சு உனக்கு வேற எந்த முகமும் இல்லை. "

அலட்டிக்கொள்ளாத ஷிவனேஷிடமிருந்து மிகவும் அமைதியாக வந்தது அவளின் கேள்விக்கான பதில்.

ஷிவன்யா " என்ன நக்கலா? அவருக்கு எல்லாம் மறந்து போச்சு! நான்...எங்க வாழ்கை எல்லாமே மறந்ததுக்கு அப்பரம் நான் என்ன...என்ன சொல்லுவேன்? அவரு வாழ்கைல இனிமே எனக்கு இடமே இல்ல..."

ஷிவனேஷ் மெல்ல ஷிவன்யாவைப் பார்த்தான். " உனக்கு அவன் வாழ்கைல இடமே இல்லனா இந்த லாஸ்ட் ஃபோர் டேஸா அவன் ஏன் ஷிவா உனக்கு இரெண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ஃபோன் பண்ணிக்கிட்டு இருக்கான்? "

ஷிவன்யா உறைந்து போய் அவனை பார்க்க, அவன் முகத்தில் இன்னமும் அந்த அமைதி இருந்தது.

" அவனுக்கு எல்லாமே மறந்துப் போச்சுன்னு நீ சொல்ற தான்... ஆனா ஏன் திரும்ப உன் கிட்ட அவன் பேசிக்கிட்டு இருக்கான்? உன் குரல கேட்குறதுக்காக ஒரு நாளைக்கு இருவது காள் ஏன் செஞ்சிட்டு இருக்கான்? உனக்கு இடமே இல்லன்னு நீ நெனச்சீன்னா ஒரு ஒருதடவையும் அவன் ஃபோன் பண்ணப்போ எதுக்காக ஃபோன அட்டெண் பண்ண? உனக்குத் தெரியாதுன்னு சொல்லாத, அவன் தான் ஃபோன் பண்ணான்னு உனக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். "

ஷிவன்யா சட்டென அவனிடம் இருந்து பார்வையை மாற்றிக் கொள்ள, ஷிவனேஷ் வானத்தைப் பார்த்து புன்னகைத்தான்.

" வாயால நீ எல்லாம் முடிஞ்சு போயிடுச்சுன்னு சொன்னாலும் எல்லாமே முடிஞ்சு போய்டாது ஷிவா... எதுவும் முடிஞ்சு போகாது. "

சூர்யா ஷிவன்யாவின் தோளைப் பற்றி அவள் பார்வையை இவள் புறம் திருப்பியபோதும் நம் நாயகியின் பார்வை ஏதோ ஒரு கண்காணாத இடத்தில் நிலைத்திருக்க, திரும்பி ஷிவனேஷைப் பார்த்துவிட்டு குழந்தைகளிடம் சென்றாள்.

சூர்யா நகர்ந்து செல்வதை பார்த்தபடி தங்கைக்கு சிறிது அவகாசம் கொடுத்த ஷிவனேஷ் ஷிவன்யா திடீரென எழுந்ததும் அவளைப் பொருமையாகப் பார்த்தான்.

அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் கண்களில் கண்ணீர் மெதுமெதுவாய் ஊற்றெடுக்க, குறுக்கும் நெடுக்கும் வேகவேகமாக நடந்தாள். அவள் கைகள் இறுக்கி அவள் உடையை பிடித்திருக்க, தன்னைத்தானே அணைக்கட்டி இழுத்துப் பிடித்துக் கொண்டாள்.

ஷிவனேஷ் அவள் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்தபடி மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டு வெளியே அவளின் ஒரு வார்த்தைக்காக காத்திருந்தான். " பேசு ஷிவா... பேசு, என் கிட்ட பேச வேண்டியதெல்லாம் பேசு. பேசு... "

நிமிடங்கள் கடந்தது. தொலைவில் இருந்து இவர்களை சூர்யா திரும்பிப் பார்த்தாள். ஆனால் இத்தனை ஆண்டுகள் பூட்டிவைத்த வலிகள் அனைத்திலும் திண்டாடிக் கொண்டிருந்த ஷிவன்யா இன்னும் நடப்பதை நிறுத்தவில்லை.

ஷிவனேஷின் கேள்விகள் அனைத்திற்கும் தன்னிடம் பதில் இருந்தாலும் அதை வெளியே சொல்ல இயலாமல் ஏதோ ஒன்று ஷிவன்யாவின் தொண்டைகுழியில் பெருகிக் கொண்டிருந்தது. அவளது நில்லாமல் ஓடிய கண்ணீர் ஒரு கட்டத்தில் ஷிவனேஷின் பிம்பத்தையே அவள் பார்வையிலிருந்து மறைத்தது.

நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஷிவன்யா மூச்சடைக்க அவள் ஹிட்லர் முன் நின்ற போது அவன் அவள் கண்களுக்குத் தெரியவில்லை.

அங்கிருந்த யாரும் அவளுக்குத் தெரியவில்லை. அந்த மொத்த பார்க்கிலுமே அவளுக்கு தெளிவாய் தெரிந்தது அவளை அழகாய் இரசித்துப் பார்த்தபடி நிற்கும் அவள் கணவனின் பிம்பம் தான்.

" நீ எவ்ளோ கோவமா இருந்தாலும் சரி டி, நான் பேசுறத ஒரு தடவை கேட்டாப் போதும் நீ என் கிட்ட ஓடி வந்துடுவ இப்டி குடுகுடுன்னு, " யாதேஷின் அழகிய புன்னகை அவள் நெஞ்சை உலுக்க, அவன் வார்த்தைகள் மேலும் அவளை அசைத்தது.

கண்களை மூடி கீழே அமர்ந்த ஷிவன்யா அவள் அண்ணனின் இதயத்தை உலுக்குவதைப் போல் அழுதாள். இன்னும் எவ்வளவு தான் அழுவாளோ? கடந்த நான்கு வருடங்களுமே அழுகையில் கரைந்திருந்தாலும், மேலும் அழுவதற்கு அவள் விழிகளில் கண்ணீர் வற்றிப் போனது போலவே இருந்தாலும் ஒவ்வோர் முறை அவன் சிரித்த முகம் அவள் கண்களில் மீண்டும் கண்ணீரை ஊற்றுவித்தது.

" எனக்கு...எனக்கு வேற என்ன செய்றதுன்னு...தெரிய...தெரியல. நான்...நான் என்ன தான் செய்வேன்? இந்த—இந்த நாழு வர்ஷமும் அவரு—அவரு திரும்ப வந்துர மாட்டாரான்னு நான் அழுவாத நாளே இல்ல! இப்போ...இப்போ என் புருஷன்! உயிர் போய்டுச்சு எல்லாமே என்னால—என்னால தான்னு அந்த நிலைமைல நான்...நான் விட்டுட்டுப் போன என் புருஷன் இப்போ என் கண்ணு முன்னாடி உயிரோட நிக்கிறப்போ...அவருக்கு எதுவுமே நியாபகமும் இல்லாதப்போ...எனக்கு... எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல! "

ஷிவனேஷ் அமைதியாக அவள் அழுவதைப் பார்த்தபடி அமர்ந்திருக்க ஷிவன்யாவே மேலும் தொடர்ந்தாள்.

" நான் என்ன செய்ய முடியும்? அவரு அம்மா— என்னால அவங்களப் பத்தி நினைச்சேப் பார்க்க முடியல... என்னால எந்த முகத்த வச்சிட்டு அவரு முன்னாடி போய் நிக்க முடியும். அவரோட பொண்ணு— "

ஷிவன்யா வேகமாக அவள் வாயை கையால் மூடிக் கொள்ள, ஷிவனேஷ் அவள் முகத்தில் தெரிந்த பயத்தை  கண்டு உடைந்து போனான்.

" நீ ஏன் ஷிவா இவ்ளோ கஷ்டப்படனும்? ஒரு வார்த்தை அவன் கிட்ட நீ பேசுனா அவன்— "

ஷிவன்யா " நான் என்ன பேசுவேன்? ஆறு வர்ஷத்துக்கு முன்னாடி நமக்கு கல்யாணம் ஆய்டுச்சு, அந்த அக்ஸிடென்ட்ல நீங்க...நீங்க செத்ததுக்கு காரணம் நான் தான்னு என்ன உங்க அம்மா வெளிய தொரத்துனதால நான் உங்கள விட்டுட்டு தூரமா போய்ட்டேன்னு சொல்லவா?! "

கோவமாக கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்ட ஷிவன்யா வேகமாக தலையை இடவலதாய் ஆட்டினாள்.

" அவருக்கு...அவருக்கு இந்த பிரச்சனை வந்ததுக்கு காரணமே ஒரு வகைல நான் தான்! அவரும் நீங்களும் என்ன மறுத்துப் பேசுனாலும் நான் நம்ப மாட்டேன்! என்ன காப்பாத்த போய் நீங்க சண்ட போட்டதுல தான் அவருக்கு ஆறு வர்ஷத்துக்கு முன்னாடி தலைல அடிப்பட்டுச்சு, அவரு இப்போ எல்லா நியாபகத்தையும் இழந்துட்டு நிக்கிறதுக்கு காரணம் கூட நான் தான்... "

தன் மீது குற்றம் சாடிக் கொள்ள ஷிவன்யாவிற்கு யாருமே சொல்லித் தர வேண்டிய அவசியமே இல்லை என்பதை நன்கு அறிந்திருந்த ஷிவனேஷ் பெருமூச்சோடு, " இதே சண்டை உங்களுக்கு வந்தப்போ நீ அவனுக்கு என்ன சத்தியம் பண்ணன்னு மறந்துட்டியா? "

ஷிவன்யா கோவம் என்ற திரையின் பின் மறைந்து கொள்ள எண்ணினாலும் அந்த கேள்வி அவளின் இதயத்தை இறுக்க, அவள் நினைவுகளும் பின்னோக்கி நகர்ந்தது.

ஐந்து வருடம் முன்பு...

யாதேஷ் மற்றும் ஷிவன்யாவின் வாழ்கை அழகோவியமாய் வளர்ந்த காலத்தில் இருவரும் காதலில் தித்தித்தனர். ஊடல் கூடலோடு நகர்ந்த நாட்களில் புதிய தம்பதிகள் இருவரும் மேலும் மேலும் ஒருவர் மீது ஒருவர் காதலில் விழுந்தனர்.

சில நாட்களாகவே யாதேஷிற்கு தலைவலி அதிகரித்துக் கொண்டிருந்ததை கவனித்திருந்த ஷிவன்யாவின் பிடிவாதத்தால் ஒரு நாள் இருவருமாக ஆரவோடு மருத்துவரிடம் செல்ல, வீரியம் அறியாமல் சென்றவர்களுக்கு அணுகுண்டை தூக்கி வீசினார் அந்த மருத்துவர்.

" உங்களுக்கு தலைல ஒரு நரம்புல சின்ன வீக்கம் இருக்கு... ப்ராப்பர் ட்ரீட்மென்ட் இருந்தா சீக்கிரம் சரியாகிடும் ஆனா கொஞ்சம் கெர்ஃபுலா இருங்க. ஆல்ரெடி கண் பார்வைய இழந்துருக்கதால இது சிவியர் ஆகவும் வாய்ப்புகள் அதிகம். "

ஷிவன்யா பயத்தில் வெளிரி விட அவள் பயத்தை அவள் கைகளை இறுக்கிப் பிடிப்பதிலே உணர்ந்திருந்த யாதேஷ் இந்த பேச்சுவார்த்தையை முடிந்த மட்டும் விரைந்து முடிக்க முயற்சித்தான்.

" நீங்க ப்லைண்னெஸ் சரி செய்ய ட்ரீட்மென்ட் எடுத்துக்களாமே யாதேஷ்? "

ஷிவன்யா குழப்பமாய் " இவரு ப்லைண்னெஸ்-அ ட்ரீட் பண்ண முடியுமா? " என கேட்ட அதே நேரம், யாதேஷ் அவருக்கு பதில் தந்தான்.

" அக்ஸிடென்ட் ஆனப்போ எந்த ட்ரீட்மென்ட்டும் இல்லன்னு சொன்னதால... "

ஷிவன்யா " இருங்கங்க... டாக்டர் இவங்க ப்லைண்னெஸ்க்கு ட்ரீட்மென்ட் இருக்கா? "

டாக்டர் " இருக்கே... இப்போ நீங்க ஒக்கே சொன்னாலும் நாம பண்ணலாம், "

அதற்கு மேல் என்ன? மேலும் அவன் உடல் நிலையை பாதிக்க வேண்டாமல் ஷிவன்யா

" அப்போ அந்த ட்ரீட்மென்ட்ட ஸ்டார்ட் பண்ணலாம். "

யாதேஷ் " இல்ல டாக்டர். வீ இர் ஃபைன் திஸ் வே. தன்க்யூ, " என படபடவென கூறிவிட்டு வேகமாக ஷிவன்யாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்திருந்தான்.

ஷிவன்யா " ஏங்க, என்ன ஆச்சு உங்களுக்கு? ட்ரீட்மென்ட் இருக்குன்னு சொல்றாங்க— "

யாதேஷ் " பரவாயில்ல யமுனா... நாம கிளம்பலாம் டி, "

" மாமா, தொடர்ந்து தலை வலி இருந்துட்டே இருக்குறதுக்கு ட்ரீட்மென்ட் எடுத்து சரி பண்ணீடலாம்ல மாமா? "

யாதேஷ் " அப்பரமா பேசிக்கலாம் வா, "

அங்கே வாக்குவாதம் செய்ய மனமில்லாமல் யாதேஷை அவள் பின் தொடர, அவர்களின் பேச்சை பாதியில் கேட்ட ஆரவும் யாதேஷை அமைதியாக பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் காரிடம் சென்றுவிட்டான்.

வீட்டிற்கு வரும் வரை அமைதியாக இருந்த ஷிவன்யா காரை விட்டு இறங்காத குறையாக யாதேஷை பிடிக்க முயல, அவன் எப்படியாவது தப்பி ஓடத் தான் முயன்றானே ஒழிய மீண்டும் அந்த பேச்சிடமே வரவில்லை.

இவள் ஆரவை சப்போர்ட்டுக்கு கூப்பிட்ட போது ஆரவ் அமைதியாக பெருமூச்சோடு தரையில் போய் அமர்ந்துவிட்டான். பொருமை இழந்த ஷிவன்யா ஷிவனேஷையும் உடனே அவர்களின் வீட்டிற்கு வர சொல்லிவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

" என்ன நெனச்சிட்டு இருக்கீங்கன்னாவது சொல்லலாம்ல? இதென்ன விளையாட்டு? இரெண்டு பேரும் செவுத்தப் பாத்துட்டு இருக்கீங்க? அந்த டாக்டர் உங்க கண் பார்வை வர்ரதுக்காக ட்ரீட்மென்ட் பண்ணலாம்னு தான மாமா சொல்றாரு? நீங்க பார்வையில்லாம கஷ்டப்படுறதுக்கு இந்த ட்ரீட்மென்ட் பண்ணலாமே, "

யாதேஷ் கண்ணோடு காதும் போய் விட்டதென சொல்லாமல் சொல்வது போல் இவள் புறமே திரும்பாமல் அமர்ந்திருந்தான். இப்படியே சுவற்றைப் பார்த்துக் கொண்டு மௌனவிரதம் இருந்தால் தன் ஆசை மனைவி அவளே பத்து நிமிடம் கத்திவிட்டு பின்னர் மறந்துவிடுவாள் என காத்திருந்த யாதேஷின் எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டான் அப்போதே வீட்டிற்குள் நுழைந்த ஷிவனேஷ்.

ஷிவனேஷ் " இவக்கிட்ட இன்னும் எதுவும் சொல்லலையா டா நீ? "

அவன் வந்ததும் வராததுமாக கேள்வி கேட்டதை முதலில் கவனிக்காத ஷிவன்யா திடீரென இவ்வளவு நேரமும் காது கேட்காதென பாவித்துக் கொண்டிருந்த கணவணின் முகத்தில் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் ஏராளமான உணர்வுகள் வந்துவிட்டு மறைந்ததை கண்டு உடனே ஷிவனேஷிடம் திரும்பினாள்.

" என்ன சொல்லலையா? அவரு எதுலும் சொல்லவே இல்ல, நீங்க சொல்லுங்க! "

யாதேஷ் " டேய்—

இவன் வாயை திறப்பதற்குள் ஆரவ் அவனைப் பிடித்து மீண்டும் அமர வைத்தான். அமைதி நீங்கி இப்போது அவன் முகத்தில் விஷமம் குடிக் கொண்டிருந்தது.

" என் கிட்ட தான சொல்ல கூடாதுன்னு சத்தியம் வாங்குன? அவன் கிட்ட வாங்கலையே! இப்போ என்ன பண்ணுவ?! " என வேண்டுமென்றே வம்பிழுக்க, இவை அனைத்தையும் ஷிவன்யா கேட்டுக் கொண்டு தான் இருக்கிறாள் என்பதாலையே பதட்டத்தில் யாதேஷ் அவனை தள்ளிவிட்டுவிட்டு எழுவதற்குள் ஷிவனேஷ் மொத்த விஷயத்தையும் புட்டுபுட்டு வைத்திருந்தான்.

ஷிவனேஷ் " நம்ம ஊருக்கு போனப்போ அவனுக்கு சண்டைக்கு நடுவுல தலைல அடிப்பற்றுச்சு. ஒன் மன்த் அவங்க ஃபமெலி டாக்டர்கிட்ட தான் பார்த்துட்டு இருந்தான், அவரு தான் இப்போ புதுசா ஒரு ட்ரீட்மென்ட் வந்து இருக்குறதா சொன்னாரு... ஆனா அன்னைக்கு தலைல அடிப்பட்டதால அவன் தலை நரம்பு வீக்கா தான் இருக்கு... சோ இந்த ட்ரீட்மென்ட் பண்ணா நமக்கு நூறு சதவீதம் பார்வை வந்துடும்னுக்கு நம்பிக்கை இருந்தாலும் அவன் உடல்நிலைய மேபி பாதிக்கலாம்னு சொன்னாரு... "

தலையில் அடிப்பட்ட விஷயத்தைக் கேட்டு ஷிவன்யா அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அவளே அறியாது அடுத்த கேள்வியை வினவினாள். " பாதிக்கலாம்னா? பு...புரியல... "

யாதேஷ் தலையில் கை வைத்துக் கொண்டு சுவற்றில் சாய்ந்ததை ஓரக்கண்ணால் பார்த்தபடியே ஷிவனேஷ் கூறினான்.

" சைட் எஃபெக்ட் இல்ல... ப்ரெய்ன் வீக்கா இருக்குறதால அவனுக்கு நிறைய விஷயம் மறந்து போகவும் வாய்ப்பு இருக்கு... "

விழி மீறிய வழி நாடி...

DhiraDhi ❤️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro