Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவனும் அவளும்: 1

அவனும் அவளும்: 1

கடல் தாண்டி போகும் காதலி...
கை மீறிப்போகுது என் விழி...
நகராமல் நெஞ்சம் போனதே...
என் வாழ்க்கை என் கதி....

கடல் தாண்டி போகும் காதலி....
கை மீறிப் போகுது என் விழி...
நகராமல் நெஞ்சம் போனதே...
என் வாழ்க்கை என் கதி...

பாதி காதல் தந்த பெண்ணே
மீதியும் வேண்டும்....
நீ போன பின்பு எந்தன்
மனமோ இருண்டு தான் போகும்...

காத்திரு என்று நீ சொல்லி போனால்
அதுவே போதும்...
மறந்திடு என்று நீ சொல்லி நேர்ந்தால்
உயிரே போகும்....

என உள்ளம் உருக மங்கையர்கள் மட்டுமல்லாது உலகவாசிகளையே பல மணிநேரம் மூழ்கடிக்கும் குரலில் உருகியிருந்தவன்.. பட்டென பாடியவரின் வாயை மூடினான் ஷக்திதாரவ்

ஆரவ் " இவ்ளோ நேரம் உன்ன பாட விட்டேன் ஓக்கே... ஆனா நீ நெக்ஸ்ட் பாட போற லைன் உன்மை இல்ல... சோ நீ அத பாடக்கூடாது " என கண்டிப்பாய் கூறியவனின் கண்டிப்பில் ஒளிந்திருந்த தவிப்பை எளிதாய் கண்டுக் கொண்டு பாட்டு வரிகளிலும் தனக்கு யாரும் இல்லை என கூறக் கூடாதென தவிக்கும் தன் உயிர் தோழனை தன் வசீகரிக்கும் புன்னகையுடன் அணைத்துக் கொண்டான் நம் கதையின் நாயகன் யாதேஷ் ஷிவன்

யாதேஷ் " சரிடா மச்சான்.. பாட்ட கூட பாட விடாத நீ... "

ஆரவ் " சரி அந்த சனியன் வரதுக்கு முன்னாடி கிளம்பலாமா??? அப்பரம் போன மாரி தான், " என கடுகடுக்க

யாதேஷ் " ஏன் டா? அவள கரிச்சுக் கொட்டலன்னா உனக்கு நாள் ஓடாதே.. "

ஆரவ் " அவளுக்குள்ளாம் நீ வாதாடாத மச்சான். "

யாதேஷ் " சரி சரி நோ ஆர்க்யூமென்ட்ஸ்.. வா போவோம். " என இருவரும் அறையிலிருந்து வெளி வந்தனர்..

ஆரவ் கால் எடுத்து வைக்க போக, அவனை பதறிபோய் தடுத்தான் யாதேஷ்.

யாதேஷ் " மச்சான் மச்சான் நோ ரிஸ்க்.. கால எங்க வச்சாலும் பாத்து வைக்கனும்... குட்டி பிசாச நம்பமுடியாது.."

ஆரவ் " அப்டீங்குர?? "

யாதேஷ் " அப்டிதாங்குரேன்... " என இருவரும் " டொய் டொடைன் " என பீஜியம் உடன் கீழ் நோக்கியவாறே செல்ல,  யாதேஷ் கூறியது போலவே மாடி படியின் முதல் படியில் வண்டி நிறைய எண்ணெய் வடிந்துக் கொண்டிருந்தது.

ஆரவ் " பாத்தியாடா உன் அரும தங்கச்சி பன்னி வச்சிர்க்க வேலைய ?? பாவி நமக்கு சங்கு ஊத ப்லன் போட்டுர்க்கா! "

யாதேஷ் " மச்சான் நமக்கு இல்ல, உனக்கு. "

ஆரவ் " ங??"

யாதேஷ் " என்ன ங?? நீ அவள்ட்ட சொல்லாம போனதுக்கு உனக்கான தண்டனை.. "

ஆரவ் " அப்போ நா கீழ விழுந்த மாதிரி நடிக்கிறேன் நீ என்ன காப்பாத்து, அப்பரம் எந்த ஜீஸ்ல எத கலப்பான்னு சொல்ல முடியாது. " என முதல் படியை தாண்டி இரண்டாவது படியில் கால் வைத்தவன், கீழ் இறங்கி விட்டு கடைசி படியில் படுத்துக் கொண்டு கத்த தொடங்கினான்..

ஆரவ் " மச்சான்..... நா விழுந்துட்டேன் டா... என்ன ஹாஸ்பிட்டல் கூட்டீட்டு போடா...கால நகத்த முடியல டா.. மச்சான்.. இங்க வாடா!!! "

யாதேஷ் " அச்சச்சோ மச்சான்!! என்னடா ஆச்சு???" என இவனும் ஏதுவுமே தெரியாததை போல் கீழே ஓடினான்...

இவர்களின் சத்தத்தில் கீழிருந்த ஓர் அறையிலிருந்து வெளிவந்தாள் ஒரு தேவதை.. மஞ்சள் சுடிதாரில் காதணி இரண்டும் கன்னத்தில் முத்தமிட, வளையல்கள் தன்னிருப்பிடத்தை உணர்த்தி சத்தமாய் சினுங்க, குறும்பு நிறைந்த புன்னகையுடன் ஓடோடி வந்தாள் நம் யாதேஷின் அருமை உடன் பிறப்பு மற்றுமல்லாமல் ஆரவின் ஆருயிர் காதலி,  விஜித்தா.

அவன் விழுந்து கிடந்த தோரணையை கண்டு அவளின் முகம் சுருங்கியது. யாதேஷ் கீழே அமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க, அவன் மடியில் படுத்து கத்தி கொண்டிருந்தான் ஆரவ். ஒரு கையில் அவன் வலது காலை பிடித்திருந்தான், விருவிருவென அவன் அருகில் வந்த விஜித்தா பாரபச்சமே பார்க்காமல் தன் காதலனின் வலது காலை உதைத்தாள்.

ஆரவ் " அடியேய்!! அடியேய்!! வலிக்கிது டி... உதைக்காத டி!! "

நம் யாதேஷோ ஆரவின் தலையை தன் மடியில் வைத்தவாறே வயிறு வலிக்க சிரித்துக் கொண்டிருந்தான்.

ஆரவ் " டேய் நீ எல்லாம் ஒரு நண்பனாடா? உன் உயிர் ப்ரெண்ட உன் தங்கச்சி இப்படி உதைக்கிறாளே, அதத் தட்டி கேக்காம இப்படி கெக்கபெக்க கெக்கபெக்கன்னு சிரிச்சிக்கிட்டு இருக்கியே டா! " என்றான் உதை வாங்கிக் கொண்டே.

யாதேஷ் " அவ என் தங்கச்சியா மட்டும் இருந்தா நான் கேற்றுப்பேன் டா, ஆனா அவ உன் லவ்வரும் ஆச்சே... அதான் நீ அடிவாங்குரத இரசிச்சிட்டு இருக்கேன்.. "

விஜித்தா " ஏன் டா தடிமாடு, நீ சும்மா வந்துருந்தா கூட உன்ன பொழச்சுப்போன்னு விற்றுப்பேன் டா!! மவனே, அவன் மடில படுத்து ஒப்பாரி வைக்கிற!! உனக்கு உண்மையா அடிப்பற்றுந்தா அவன் உன்ன தூக்கிர்க்க மாட்டானா!! "

ஆரவ் " அடப்பாவி டேய்!! அப்போ நான் உன்னால தான் மாட்டுனேனா?!! "

யாதேஷ் " சாரி மச்சான். உனக்கு அடிபட்ட அதிர்ச்சில கொஞ்சம் கொழம்பீட்டேன். "

சமையலறையிலிருந்து வெளிவந்த யாதேஷ் மற்றும் விஜித்தாவின் அன்னை சாதனா, இவள் செய்வதை கண்டு அவள் தலையிலே கொட்டு வைத்து ஆண்கள் இருவரையும் எழ வைத்தார்.. இருவரும் சிரித்துக் கொண்டே எழுந்து மணியை பார்த்து விட்டு நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து அவர்களின் ஆபீஸிர்க்கு விரைந்தனர்.

நம் நாயகனை பற்றி பார்க்களாம் வாருங்கள்...

யாதேஷ் ஷிவன் மற்றும் ஷக்திதாரவ்.. குழந்தையாய் தவழும் போதிலிருந்தே நண்பர்கள். ஏனெனில் யாதேஷின் அன்னையும் ஆரவின் தந்தையும் அண்ணன் தங்கை..
யாதேஷிற்கு சிறுவயது முதல் ஒரே உற்ற தோழன் ஆரவ் மட்டுமே. யாதேஷின் தந்தை குமரன், இராணுவவீரர். அன்னை சாதனா, தங்கை விஜித்தா ஒரு வருடம் முன்பே ஜர்னலில் பீஜியை முடித்தாள்...

நல்ல போதுமான உயரம், மெலிந்த மேனியுமல்லாமல் ஜிம் போய் உடலேற்றிய கட்டுமஸ்த்தானமும் இல்லாத வலுவான உடல். ட்ரிம் செய்த தாடி, அளவான கேசம், வசீகரிக்கும் புன்னகை, அனைத்திற்கும் மேலாக உலகை மயக்கும் குரல் என மங்கையர்களை மயக்கும் ஆணழகனே நம் நாயகன்.

சக்திதாரவ், யாதேஷின் உயரத்திற்கு குறைவில்லாத உயரம்,  கட்டுக்கோப்பாய் சற்றே மெலிந்தவன் என்றாலும் பார்ப்போர் ஒருமுறை திரும்பி பார்த்து விட்டு செல்லும்ஹண்ஸம் யங்மேன். எதிர்பாராத விதமாக ஆரவின் ஆறு வயதில் அவனின் தந்தை இறைவனடி சேர்ந்தார். அன்னையை மட்டுமே பற்றுகோலாய் பிடித்து வளர்ந்தவன் ஆரவ். ஆரவின் அன்னை பூரணி, மிகவும் அன்பானவர். அவருக்கு அவரது மகன் தான் உலகம். ஆரவின் இதயம் விஜித்தா என்றால் அவனின் உயிர், அவன் நண்பன் யாதேஷ். அப்பேர்பட்ட நட்பே அவர்களது உன்னதமான உறவு.

இருவரும் நான்கு வருட VISCOM படிப்பை முடித்து, ஆறு மாத இடைவேளை காலத்தின் பின் இப்போது " Y A S " டிவி என்ற சனலை நடத்திவருகின்றனர். " Y A S " ( Y = YADHESH... A = AARAV )யாதேஷ் ஆரவ் இருவரும் அவர்களின் சொந்த முயற்சியில் உருவாக்கிய டிவி சனல். உலகளவில் டாப் 10 டிவி சனல் லிஸ்டில் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கும் ஒரே தமிழ்நாட்டின் தொலைகாட்சி நிறுவனம் அதுவே. இரவு பகல் பாராமல் அவர்கள் செய்த உழைப்பே தற்போது இத்தகைய உயரத்தை அளித்துள்ளது. நான்கு வருடங்களில் இத்தகைய உயரத்தைத் தொட்ட " Y A S"ன் மேல் அனைவருக்குமே சிறு பொறாமை திறை அவர்களரியாமல் உருவாகிவிட்டது. 

தீவிரமாய் உரையாடிக் கொண்டே உள் நுழைந்தனர் இருவரும். வேலையாட்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதைக்காய் காலை வணக்கத்தை தெரிவித்தனர். புன்னகையுடன் ஏற்று கேபினுள் நுழைந்தவர்களின் பின்னே நுழைந்தான் அவர்களின் ஒரு பீஏ ராஜ். அதாவது நம் ஆரவின் பீஏ, யாதேஷிற்கு பீஏவாக பணிபுரிந்தவர் வேலை நிறுத்தம் செய்துவிட்டார்..

உள்ளே வந்த ராஜ்ஜிடம் படபடவென சரவெடியாய் வேலையை அடுக்கத் தொடங்கினான் யாதேஷ். கடைசியாக

யாதேஷ் " நெக்ஸ்ட் வீக் மன்டேவே இன்ட்டர்வ்யூ பன்னலாம், இத இன்பார்ம் பன்னிடுங்க.. " என அறிவித்தான்.

ராஜ்ஜும் அவன் கூறிய வேலைகளை முடிக்க சிட்டாய் பறந்துவிட்டான்..

கண்ணாண கண்ணே
கண்ணாண கண்ணே
என் மீது சாயவா...
பொண்ணாண நெஞ்சை
பொண்ணாண கையால் பூ போல நீவவா...

ஆராரிராரோ.. ராரோ ராரோ..
ஆராரிராரோ.... ஆராரிராரோ ராரோ ராரோ... ஆராரிராரோ....
என்ற பாடலை தேன் ஒழுக பாடிக் கொண்டே தன் முட்டை கண்களை மெல்ல திறந்த குட்டி தேவதை தன் அன்னை உறங்குவதை கண்டு பொங்கி எழுந்தாள்.

" மம்மி..மம்மி... மம்மிமிமிமிமி....எழுன்ரி மம்மி... டைம் ஆச்சு...நா ஸ்கூல் போவேணாமா? " என அவளின் மழலை மொழியில் எழுப்பிக் கொண்டிருந்தாள் அந்த மூன்று வயது தேவதை, ஷிவானி.

கண்களை கசக்கியவாறே கலைந்த கேசத்துடன் தன் மூன்றரை வயது மகளை அணைத்துக் கொண்டாள் அந்த 26 வயது பேரழகி யமுனஷிவன்யா..

ஷிவன்யா " பட்டுமா நா உன்ன பாட்டு தான பாட சொன்னேன். மம்மிய தூங்க வைக்கவா சொன்னேன்?? பாரு மம்மிக்கு இப்போ தூக்கம் வருது!" என மீண்டும் சரியப்போனவளை இழுத்து,

ஷிவானி " மம்மிமிமிமிமிமிமிமிமிமிமிமி!! " என பக்கத்து தெருக்கே கேட்கும் அளவு அவள் கத்த, அதில் ஷிவன்யாவின் மொத்த தூக்கமும் பறந்து போனது.

ஷிவானி " போய் கெளம்பு மா. " என அவளை குளியல் அறைக்குள் தள்ளிவிட்டாள்.. பதினைந்தே நிமிடத்தில் லாங் டாப் மற்றும் லெகினில் பேரழகியாய் வந்த தன் தாயை கண்டு அவளை கீழே குனிய வைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் ஷிவானி. தன் மகளுக்கு தானும் முத்தமிட்டவள் காலை மணி 8:30 என்பதை கண்டதும், ஷிவானியையும் அழைத்துக் கொண்டு வீட்டை பூட்டிவிட்டு ஸ்கூட்டிலில் பறந்தாள்..

ஷிவானியை அவளின் பள்ளியில் பத்திரமாய் விட்டுவிட்டு, அவளின் ஆப்பீஸிர்க்கு சென்றாள் ஷிவன்யா. இவளை கண்டதும் அனைவரும் புன்னகைக்க மெல்லிய புன்னகையுடன் விலகிச் சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள் அவள்.

கழுத்தில் காலர் வைத்து முழு கை விட்ட வெள்ளை டாப்... பஞ்சு கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு செல்லும் சிறிய ஜிமிக்கி, சிவந்த ரோஜா இதழ், கூர் நாசி, பிறை நெற்றி, வாகெடுத்து பின்னலிட்ட நீண்ட கூந்தல் என எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் தேவலோகமங்கையென தெரியும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்தன்.

ஷிவன்யா வேலை பார்க்கும் ஆபீஸின் ஜீ.எம். அவள் இங்கு வேலைக்குச் சேர்ந்த இரண்டு வருடமாய் அவளின் அழகை பின் தொடரும் நரி கூட்டத்தில் ஒருவன், ஆனால் இதுவரை நம் ஷிவன்யா அவனை ஏறெடுத்தும் பார்த்ததில்லை.. அமைதியின் உருவாய் இருப்பவளை இவன் சாதாரணமாக எடை போட்டுவிட்டான்.. ஒரு உறையை காட்ட வேண்டி இவன் அறை கதவை தட்டிவிட்டு வெளியே நின்றாள் ஷிவன்யா.

ஆனந்தன் " எஸ் கமின். "

ஷிவன்யா " சர்... இந்த பதிவ வார இதழ் கூட பதிச்சிரளாமா இல்ல வேற ரெடி பன்னட்டுமா??? "

ஆனந்தம் " இதுவே போற்றுங்க ஷிவன்யா. "

ஷிவன்யா " தன்க்யூ சர். " என வெளியேற போனவளை தடுத்தான்.

ஆனந்தம் " வெயிட் வெயிட் ஷிவன்யா நா உன் கிட்ட பேசனும். "

ஷிவன்யா " என் கிட்ட பேச என்ன சர் இருக்கு??? "

ஆனந்தம் " இருக்கு ஷிவன்யா.... நம்ம கல்யாணத்த எப்ப வச்சிக்கலாம்னு பேசுர விஷயம் இருக்கு.. "

ஷிவன்யா " சாரி சர்... எனக்கு இதுல விருப்பம் இல்லன்னு முன்னாடியே சொல்லிட்டேன்.. " என வெளியே போக போனவளை அவள் கையை பிடித்து இழுத்தான்.. அவன் இழுத்த வேகத்தில்,  பிடித்து வைத்த பொறுமை எங்கோ ஓடிவிட,  ஓங்கி ஒரு அறைவிட்டாள் ஷிவன்யா. கதிகலங்கி போனான் ஆனந்தன்.

ஷிவன்யா " ஒரு தடவ சொன்னா புரியாதா??? ஐம் நாட் இன்ட்ரெஸ்ட்டட்! ! "

ஆனந்தன் " ஏய்! என்ன!? ஆஃப்ட்ரால் ஒரு பொண்ணு நீ, என்ன கை நீட்டி அடிக்கிறியா??? "

ஷிவன்யா " அஃப்ட்ரால்.. ஹான்??? ஒரு பொண்ணா இருந்து பாரு டா... பொரம்போக்கு,  சொன்னது சொன்னது தான்... "

ஆனந்தன் " பாவம், கல்யாணமான ஒரே வருஷத்துல புருஷன் செத்துட்டானே.. மூணு வயசு கொழந்தையோட கஷ்ட்டப்படுரியேன்னு பாவம் பாத்து வந்தா... அழகு இருக்குங்குர திமிருல ஆடுரியா?? "

ஷிவன்யா : ஒருத்தி உங்க ப்ரொப்போஸலுக்கு ஒத்துக்கலன்னா உடனே இத சொல்லிடுவீங்களே.ஆமா டா எனக்கு அழகு இருக்குன்னு தான் திமிரு. இப்போ என்ன செய்யப் போற நீ?!  வந்துட்டான், பெருசா பேச.. உன் தயவுல வாழனும்னு எனக்கு எந்த தலையெழுத்தும் இல்ல. என் பொண்ண எப்படி வளக்கனும்னு எனக்குத் தெரியும். இனிமேலும் என் கண்ணு முன்னாடி வந்துராத, உயிரோட இருக்க மாட்ட.. "

ஆனந்தன் " என்னையே மெரட்டுரியா??? உன்ன வேலைய விட்டு தூக்குரேன் இரு டி.. " அடுத்த நொடி அவன் கன்னம் பழுத்திருந்தது ஷிவன்யா விட்ட அடுத்த அறையில்.

ஷிவன்யா " எவ்ளோ தைரியம் இருந்தா என்ன டி போட்டு பேசுவ??? இனிமே எந்த பொண்ண நீ டி போட்டு பேசுனாலும் இது நியாபகம் வரும். நீ என்ன, என்ன வேலைய விட்டு தூக்குரது. உன்ன மாரி பொரம்போக்குங்க இருக்குர இந்த ஆஃபீஸ்ல நான் இருக்க மாட்டேன். " என ஐடியை கலட்டி அவன் மேலே எறிந்திவிட்டு வந்தாள்.

மொத்த ஆஃபீஸுமே அவளை வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தது. வேலைக்குச் சேர்ந்த இந்த இரண்டு வருடங்களில் தேவைக்கு அதிகமாக பேசாமல் வெறும் புன்னகையுடன் நகரும் இவள் இன்று ஆபீஸையே இரனகளமாக்கி விட்டாளே என்ற அதிர்ச்சியில் இருந்தனர்.

தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றவள், கதவை இழுத்து மூடிவிட்டு மெத்தையில் அமர்ந்தாள்....

இறுகியிருந்த அவளின் முகம் மெல்ல மெல்ல தளர்ந்தது. இவ்வளவு நேரம் ஜான்சிராணியை போல் காட்சி அளித்தவளின் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் சிந்தியது.. நேரே இருந்த அலமாரியின் உள் இருந்த ஒரு புகைப்படத்தை எடுத்தவள், அதில் நிழலாய் கருப்பு நிற உருவத்தில் தெரிந்த ஓர் ஆடவனின் புகைப்படத்தை கண்ணீருடன் வருடினாள். அப்படத்தை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்தவளின் மனதில் தானாய் ஒரு பாடல் கேட்க தொடங்கியது....

கண்ணாணகண்ணே.... நீ கலங்காத டி....
கண்ணாணக்கண்ணே... நீ கலங்காத டி....
நீயே...யே... கலங்காத டி...
நீ.... கலங்காத டி...
யார் போனா... யார் போனா...
யார் போனா என்ன நான் இருப்பேன டி....

என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கனும்...
நசுங்குர அளவுக்கு இருக்கி நா புடிக்கனும்..
நா கண்ண தொறக்கையில்.. உன் முகம் தெரியனும்...
உசுருள்ள வரைக்குமே... உனக்கென்ன புடிக்கனும்...

கடலல போல உன் கால் தொட்டு உரசி...
கடலுள்ள போரவன் நா இல்ல டி....

கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி...
கரை தாண்டும் வர நா இருப்பேனடி...

கண்ணாணக்கண்ணே நீ கலங்காத டி...
யார் போனா என்ன நா இருப்பேன டி....

ஷிவன்யா " நீங்க போனதுக்கு அப்பரம் எனக்கு இருக்க உங்களோட ஒரே நினைவு இந்த பாட்டு மட்டும் தான். நீங்க இல்லனாலும் இந்த பாட்டு தான் என்ன இந்த நாழு வருஷமா வாழ வச்சது. ஏன் என்ன விட்டு போனீங்க??   எவன் எவனோ உங்க இடத்த பிடிக்க பாக்குறான், நீங்க தட்டி கேக்க மாட்டீங்களா?? இந்த இறைவனுக்கு நான் மட்டும் தான் கெடச்சேனா??! " என மனமுடைந்து அழுதாள்.

அவள் மனதிலோ,  " ஓய்... நா இருந்தாலும் இல்லனாலும்  உன்ன சுத்தி தான் என் மனசு என்னையே அறியாம இருக்கும். சில பரதேசி பிக்காளிங்க பன்னதுக்குலாம் நீ கலங்கக் கூடாது. உன் பாதைல நீ முன்னேறி போ. எவன் வந்தா நமக்கென்ன?? வர்ரவன் வந்துக்குட்டே தான் இருப்பான். நீ தான் முன்னேறி போகனும்.. நான் செத்தே போனாலும் நான் உன் கூட தா இருப்பேன். " என்று அவளவன் கூறியவை நினைவு வர, தன் ஃபோனை எடுத்து கண்ணாணக்கண்ணே பாடலை ஓட விட்டாள் ஷிவன்யா.

அதை கண்டு மூடி அனுபவித்தவள் பாடல் முடிந்ததும், கண்களை திறந்தாள்.. இப்போது அவள் கண்ணில் துளி கண்ணீரில்லை.. படத்தை அலமாரியினுள்ளே வைத்தவள் எழுந்து சென்றுச் செய்தி தாள்களை புரட்டத் தொடங்கினாள். அவளுக்கேற்ற வேலை எங்குமே கிடைக்கவில்லை.. எதாவது ஏற்றதை போலிருப்பினும் ஷிவானிக்கு பள்ளி வசதிகள் பிரச்சனையாய் இருக்க, ஒவ்வொன்றாய் கழித்துக் கொண்டே வந்தவளுக்கு ஒரு கம்பெனி ஆஃபர் பிடித்தது. அது எங்கிருக்கிறதென உடனே ஆராய்ந்தவளின் மனம் சென்னை என்ற இலக்கத்தை கண்டு ஒரு நொடி நடுநடுங்கிப்போனது.

அவளின் மூளை " சென்னையா?? வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. அங்க போனா திரும்ப பல பிரச்சனைய நீ சந்திப்ப. பாக்க வேண்டியதெல்லாம் பாத்தாச்சு... நீ அங்க போனா பிரச்சனை ஜாஸ்த்தியாகும்... வேண்டாம். " என அவளை தடுப்பதிலே குறியாய் இருக்க,

அவளின் மனமோ " இல்ல ஷிவன்யா. நீ போ. நீ ஒன்னும் அவங்கள தேடி போக போறதில்ல. நீ வேலைக்குப் போ... ஷிவானிய வளக்கப் போர.. அவ்ளோ தான்... அவங்களால ஒன்னும் பன்ன முடியாது... என்ன, உன்ன பாத்தா குத்தி காட்டிப் பேசுவாங்க... அவ்ளோ தான்... எவ்ளோவோ கேட்டுட்ட. இதுக்கு மேல கேக்கப்போறது உன்ன ஒன்னும் பன்னிடாது.. நீ உன் பாதைய மத்தவங்களுக்காக பயந்து மாத்தக்கூடாது... நீ போ. " என அவளை சரியான பாதைக்கு திசை திருப்ப முயன்றது.

அவளின் மூளையோ " வேண்டாம் ஷிவன்யா வேண்டாம்... அங்க அவரோட வாழ்ந்த நினைவெல்லாம் இருக்கு.. அங்க போனா எல்லாம் திரும்ப வெளி வரும்.. வேணாம்... அவங்களுக்கு தெரிஞ்சா நீ தான் எல்லாத்துக்கும் காரணம்ங்குர மாரி பேசுவாங்க... "

அவளின் மனம் " பேசுறவங்க பேச தான் செய்வாங்க... அதுக்குன்னு அவங்க வாய போய் நாம டேப் போட்டு ஒட்ட முடியாது... அது முடியாதுன்னு பயந்து ஓடவும் கூடாது. அத காதுல போட்டுக்காம நம்ம வேலைய பாத்தாலே போதும்.. "

இந்த கூற்றினால் மூளையின் அனைத்து வாக்கியங்களையும் ஷிவன்யாவுக்கு ம்யூட் ஆக்கியது...

ஷிவன்யா " கரெக்ட்.. யாரோ எவரோ பேசுறாங்கன்னு நான் ஏன் பயப்படனும்?? நான் இது வர கேட்காத வார்த்தையா?? ஷிவானிக்கு நல்ல ப்யூச்சர் வேணும், அவ்ளோ தான்.. அதுக்காக நான் என்ன வேணா பன்னுவேன்.. " என ஒரு முடிவோடு எழுந்தாள்.

அடுத்த நான்கு நாட்களில் தங்களின் பொருட்கள் அனைத்தையும் பக் செய்து முடித்து ஷிவானியின் பள்ளியில் டீசியை வாங்கிக் கொண்டு அவளின் வாழ்கை முடிந்ததாய் எண்ணிய அதே இடத்தில் மீண்டும் கமா போட்டு விதி தொடங்கி வைத்ததை அறியாமல் ஷிவானியை தோளில் சாய்த்துக் கொண்டு " என்ன நடந்தாலும் தன் மகளுக்காய் அவளின் அப்பா வாழ்ந்த இடத்திலே வாழ்ந்து அவளை முன்னுக்குக் கொண்டு வருவேன். " என்ற முடிவுடன் சென்னையை நோக்கிப் பயணித்தாள் நம் கதாநாயகி ஷிவன்யா.

விழி மீறிய வழி நாடி...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro