Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Chapter - 21




வீட்டினுள் நுழைந்ததுமே, "அது என்ன எப்ப பார் ஸ்ரீ ஸ்ரீனு அவங்க பேர சுருக்கி பேசுறீங்க?" கணவனிடம் கேள்வி எழுப்பினாள்.

"சுருக்கி பேர் சொல்றதுல என்ன இருக்கு, பழகிடுச்சு ஸ்டார்டிங்ல இருந்தே"

"நீங்க பேர் சொல்ற மாதிரி இல்ல. கொஞ்சுற மாதிரி இருக்கு"

அர்ஜுன் சத்தமாக சிரித்தான், "என்ன பொறாமை தலை தூக்குற மாதிரி இருக்கு" மனைவியை நெருங்கி வந்தான்.

"ஒரு ஆமையும் தலை தூக்கல. நானும் பாத்துட்டே தானே இருக்கேன் எப்ப அவங்கள பத்தி பேசுனாலும் ஸ்ரீ ஸ்ரீனு தான் வருது. உள்ளேயே பதிஞ்சிடுச்சு போல" முகத்தை ஒரு பக்கமாக தூக்கி வைத்த மனைவியை கைகளில் அள்ளினான் அர்ஜுன்.

"என்ன பண்றீங்க?"

அவள் அதிர, "எனக்கு பதிஞ்சிடுச்சு சொன்னல... அதான் என்ன பதிஞ்சிருக்குன்னு காட்ட போறேன்" என்றவன் குரலே ஒரு மார்கமாக இருக்க உள்ளுக்குள் சிறு ஆசை அதிர்வு.

"ஹாஸ்பிடல் போகலையா?"

"ம்ஹூம்"

"ஏதாவது எமெர்ஜென்சி கேஸ் இருக்குமே"

"நான் மட்டும் அங்க நியூரோ இல்லையே"

"ஆனா உங்கள பாக்க தான் நிறையா பேர் வருவாங்களே"

"நாளைக்கு பாத்துக்குறேன்" அப்போ இன்று முழுதும் இவன் வீட்டிலா? பதறி தான் போனாள்.

அதோடு அர்ஜுன் மனைவியை தங்கள் அறையிலுள்ள கட்டிலில் படுக்க வைக்க இன்னும் பயம் கூடியது.

அவன் கிடத்திய வேகத்தில், "நாம அங்க போறோம்னு சொல்லிருக்கோம்ல. வாங்க பேக்கிங் ஸ்டார்ட் பண்ணிரலாம்" கீழே குதிக்க பார்த்த மனைவியை அப்படியே அமுக்கி அவள் மேல் மொத்தமாய் சாய்ந்திருந்தான்.

இலக்கியாவின் உடலோடு மொத்தமாய் அழுத்தி இருந்தது அர்ஜுனின் கல் உடல்.

அவன் கணம் ஒரு புறமெனில் அவனின் இந்த நெருக்கம் வேறு வகையான அவஸ்தையை கொடுத்தது.

"ஆறு மாசம் கழிச்சு தான் வர்றோம்னு சொல்லிருக்கேன். அப்பவும் இங்க இருக்குறது இப்டியே தான் இருக்கும்"

"சா... சார்..."

"என்னங்க..." அவள் மூச்சு வாங்கி பேச திணறவும் இன்னும் மனைவியை அணைத்து படுத்தான்.

இவளால் மூச்சே விட முடியாமல் போக, அர்ஜுன் மார்பில் கை வைத்து தள்ளி, "ஐயோ மூச்சு முட்டுது போடா" அவளை மீறி கூறிவிட குலுங்கிய சிரிப்போடு மனைவியின் மேலிருந்து மேலிருந்து விலகி அருகே சரிந்தான்.

"அப்பா... ஐயோ..." மார்பினில் இவள் கை வைத்து மூச்சு வாங்க, மீண்டும் மனைவி மேல் விழுந்தான் அர்ஜுன். இம்முறை அவன் சிரம் மட்டும் அவள் கழுத்துக்கு கீழ் விழுந்தது.

"என்ன பண்றீங்க, கொஞ்சம் மூச்சு விட்டுக்குறேனே"

"பேர் சுருக்கி சொல்லி கூப்பிடுறதால அவ என்னோட லைப்ல இருக்கானு அர்த்தமாகிடுமா? இப்போ நீ சொன்னியே போடானு. அந்த உரிமை அவளுக்கு கிடைச்சிடுமா, இல்ல உன்ன தவற வேற யாரையும் தான் டி போட்டு நான் கூப்பிட்டிருப்பேனா?"

"வாய்ப்பு அதிகம். நமக்கு கல்யாணம்னு முடிவாகுறதுக்கு முன்னாடி அன்னைக்கு உங்க ரூம்ல டி சொன்னிங்களே என்னை"

"எப்டி சொன்னேன்னு எனக்கே தெரியல. எனக்கே தெரியாம ஏதோ ஒரு தேவதை வந்து என் காதுல 'இவ தான் உன்னோட வாழ்க்கை'னு சொல்லிருக்கும் போல"

"உங்க கம்பி கட்டுற கதை எல்லாம் இங்க வேணாம்" என்றாலுமே அவள் கன்னம் சூடேறி சிவந்து தான் போனது.

"என்ன சொன்னா என் இலக்கியா நம்புவா?" புரண்டு படுத்தவன் அவள் கழுத்தெங்கும் முத்தம் வைக்க கூச்சத்தில் உடல் தாளாது போனது.

"வர வர ரொம்ப பண்றீங்க நீங்க" முத்தத்தை சுட்டிக்காட்டினாள்.

"ஏன் பிடிக்கலையா?" விலகியவன் கன்னத்தை வேகமாக பிடித்து சிவந்த கன்னத்தோடு, "பிடிச்சிருக்கு தான். ஆனா ரொம்ப கூச்சமும் இருக்கு"

அவளின் கன்னம் கிள்ளி முத்தமிட்டவன்  அன்று அவள் தந்தை வீட்டிற்கு வாங்கி வந்த செடிகளை நட்டு வைக்க மாடி அழைத்து சென்றான்.

சற்று மீண்டு வந்தவளிடம் கண் பார்த்தே நெளிய வைத்தான். அவள் சிணுங்களில், "நான் என்னடி பண்றேன்" என்றான் கேள்வியாக.

"எதுக்கு இப்டி பாக்கிறிங்க? உள்ள போங்க. ஒரு காபி எடுத்துட்டு வாங்க. பசிக்கிது" ஏதோ காரணம் கூறி அனுப்பி வைத்தாள்.

திரும்பி வந்தவரிடம், "பாத்திங்களா இந்த அடுக்கு மல்லில இப்போவே ஒரு பூ வந்துடுச்சு, கூடவே ரெண்டு மொட்டு" குறிஞ்சி பூவின் அதிசயம் போல் அவள் சற்று கண் விரித்து கணவனுக்கு காட்ட அந்த சிறிய பாவனையில் மீண்டும் அவளிடம் மயங்கினான்.

"எடுத்து வச்சுக்கோ இலக்கியா?"

"ஒன்ன எப்படி?"

"இரு" உள்ளே சென்றவன் அவள் உடமைகளில் சிறு கிளிப் ஒன்றை எடுத்து வந்து பூவை பறித்து சிகையில் சூடினான். ஒற்றை பூவாயினும் அதன் வெண்மைக்கு நேர் மாறாக கருகருவென இருந்த இலக்கியாவின் கூந்தலில் எடுப்பாய் மிளிர்ந்தது.

"அழகா இருக்கு" என்றான் ரசனையாக.

அவன் என்ன அர்த்தத்தில் கூறினானோ அதன் மறைபொருளை உணர்ந்தவள் தானும் சிரிப்போடு அதனை உள்வாங்கினாள்.

இருவருக்கும் மற்றவரின் அழகை வர்ணித்து புகழ்ந்து தள்ளுவதில் விருப்பம் இல்லாது போக, இது போன்ற வார்த்தை பரிமாற்றங்கள் அழகாய் இருவானத்தையும் விரித்தது

"நான் வீட்டுல ஒரு பொய் சொன்னேன் கவனிச்சியா?" கேட்டான் அவளை ஆழம் பார்த்து.

"இல்லையே. இதை கொஞ்சம் பிரிச்சு தாங்க" மண்ணை சுற்றியிருந்த நெகிழிப்பையை நீக்கி அவளை பார்த்தவன்,

"நம்ம கல்யாணத்தோட பேஸ் (base) உன்னோட லவ் இல்லனு"

அவன் தராமல் இருக்க கை நீட்டி வாங்க போனவள் அதிர்ச்சியுற்று அப்படியே சிரம் தாழ்த்தினாள், "பொய் இல்லையே" என்று.

"அப்போ ஹாஸ்பிடல் மட்டும் தான் உன்னோட மைண்ட்ல இருந்துச்சு?"

அவள் அமைதியாக இருக்க, "எனக்காக தான்-னு கூட சொல்ல வேணாம், ஆனா எனக்காக இல்லனு என்ன பாத்து சொல்லு"

அவளில் எழுந்த தடுமாற்றத்தை உன்னிப்பாக கவனித்தவன் அவள் தோண்டி வைத்திருந்த மண்ணில் செடியை மேலோட்டமாக வைத்து உள்ளே சென்றான்.

இலக்கியாவுக்கு பெரும் பூகம்பகமே நிகழ்ந்தது, அவர்கள் திருமணத்தில் பாதி காரணம் மருத்துவமனையின் நலன் கருதி இருந்தாலும் மீதி தன்னுடைய சுயநலம் தானே.

அவனிடம் ஒப்புக்கொள்ளுதல் ஒரு வித ஆசூசையை தன் மேல் தானே உணர்வது போலிருந்தது. எல்லாம் சரியாக நடக்க பிரச்னை இல்லை, தவறி இருந்தால் அர்ஜுனின் வாழ்க்கைக்கு அவள் பதில் கூறிவிட முடியுமா?

மகிழ்ச்சியாக இருந்த மனநிலை மாறி மனமெங்கும் பாரம் இடம்பெயர்ந்து.

அப்பொழுது விட்ட பேச்சு வார்த்தை அன்று இரவு உணவை முடித்து இருவரும் மெத்தையில் படுத்தும் தொடரவில்லை.

கோவமாக இருக்கிறானோ என இலக்கியா கணவனின் முகத்தை அடிக்கடி பார்க்க, அவன் மிகவும் இயல்பாக இருந்தான்.

அந்த அமைதியும் இயல்பு மாறா முகமும் அவனின் எதிர்பார்ப்பு அவள் மனம் திறப்பது ஒன்றே என தெளிவாக கூறியது.

புத்தகம் ஒன்றை படித்துக்கொண்டிருந்தவன் உறக்கம் வரவே அதனை மூடி வைத்து இலக்கியாவின் நெற்றியில் இதழ் பதித்து, "குட் நைட்" திரும்பி படுக்க போனவன் டீ-ஷர்ட் காலரை திரும்ப விடாமல் பிடித்துகொண்டாள்.

இலக்கியா, "எப்படி தெரியும்?" கண்ணீரோடு அவனை பார்த்தாள்.

அர்ஜுன், "என்ன தெரியும்?"

"உங்களுக்கு தெரியும்" அவளின் சிணுங்களில் சிரித்தவன், "என்னடி மொட்டையா பேசுற"

"மொட்டையும் இல்ல. சொட்டையும் இல்ல. சொல்லுங்க எப்படி தெரியும்?" வசதியாக படுத்தவன் தன்னுடைய மார்பினை பெண்ணுக்கு கண் ஜாடையில் காட்ட தயக்கமின்றி சரணடைந்தாள்.

"என்னைக்குன்னு குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஸ்ரீ பத்தி... ஷ்ஷ்... அஞ்சுஸ்ரீ"

அவனின் செயலில் சிரித்தவள், "பரவால்ல சொல்லிக்கோங்க" என்றாள்.

"ம்ஹூம் சொல்லல. அஞ்சுஸ்ரீ விஷயம் தெரியாம இருந்த நேரம் அது. நாம பாத்தே ரொம்ப நாள் ஆச்சு நினைக்கிறன். அந்த ரிப்போர்ட் வந்த நாள், உன்ன பாக்குறதுக்காக நான் வீட்டுக்கு வந்தேன்.

அந்த நேரம் என் கார பாத்து நான் அதுல இருக்கேனு தெரிஞ்சு உன் கண் ஒரு சொட்டு கண்ணீர் விட்டுச்சு பார். அவ்ளோ தான். அத்தனை நாள் உன் மேல இருந்த கோவமெல்லாம் போச்சு.

அடுத்து நான் காட்டின கோவம் எல்லாம் வேணும்னு நானா வர வச்சது. அது சாதாரண கண்ணீர் மாதிரி தெரியல, அவ்ளோ பீலிங்ஸ் எதுக்கு அந்த கண்ணுக்கு வரணும் யோசிக்க ஆரமிச்சப்போ கிடைச்ச பதில் தான் இது"

விழியை அவனை விட்டு பெண்ணவள் அகற்றவில்லை. காதலை வாய் மொழியாய் கூறுவதை காட்டிலும், கண்களால் உணர்த்துவது ஒரு அழகென்றால், அந்த மொழியை புரிந்து பிரதிபலிப்பது ஒரு அழகிய வரம்.

"ஒவ்வொரு தடவ நான் எங்கையாவது போயிட்டு வர்றப்ப இதே மாதிரி தான் ரியாக்ட் பண்ணுவியா?"

"எப்பவும் இல்ல. அன்னைக்கு ஏன்னு தெரியல. ரொம்ப எமோஷன் ஆகிட்டேன்"

"எதுக்குடி உனக்கு என் மேல இவ்ளோ ஆசை?"

அர்ஜுனை இமை சிமிட்டாது பார்த்தவள், "என் அம்மா என் நியாபகத்துல கூட இல்ல ஆனா அவங்களை ரொம்ப பிடிக்கும். அதுக்கு காரணம் சொல்ல முடியுமா?" அதே போல் தான் உன்னையும் என அவள் கூறியதில் உடல் சிலிர்ப்பது அவன் முறையானது.

யாரை வெறுக்க காரணங்கள் தேடினானோ இன்று காரணமே இல்லாமல் அவள் மேல் பைத்தியமாக காத்திருந்தது மனம். இன்னும் அவளின் ஆழம் சென்று அறிய ஏக்கம்.

"என்னால உன் அளவு லவ் பண்ண முடியுமா தெரியல. கம்மியா இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்குவியா?"

கண் சிமிட்டி இலக்கியா பதில் கொடுக்க, அர்ஜுனின் இதழ்கள் மனைவியை நிதானமாக அனைத்துக்கொண்டது.

"நான் ரொம்ப தப்பான பொண்ணு தானங்க... உங்கள கார்னர் பண்ணி என்ன கல்யாணம் பண்ண வச்சிருக்கேன். எனக்கே என்ன நினைச்சா அசிங்கமா இருக்கு"

"தப்பு தான், ஆனா நீ பண்ணதுல பத்து பேர் நல்லா இருகங்கனா நம்ம பண்ண தப்பும் சரியா மாறிடும்"

இலக்கியாவுக்கு மனமே ஆறவில்லை. தன்னை சமாதானம் செய்ய தான் அர்ஜுன் இவ்வாறு கூறுகிறான் என தெளிவாக தெரிந்தது.

மௌனமாக அவன் மார்பினில் மூக்குரச, அவள் சிரத்தின் மேல் நாடி பதித்து, "பத்து பேர விடு. என்ன மட்டும் எடுத்துக்கோ. பணத்துக்காக என்னவும் செய்ற குடும்பத்துக்கிட்ட இருந்து என்ன காப்பாத்திருக்க. அவளை கல்யாணமே பண்ணிருந்து அதுக்கு அப்பறம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல எனக்கு தெரிஞ்சிருந்தா அவளை விட்டுட்டு எனக்குன்னு ஒரு வாழ்க்கை தேடிருக்க என் வீட்டுல விட்டிருக்க மாட்டாங்க.

அவளுக்குன்னு ஒரு சந்தர்ப்பத்தை குடுத்து பாரு அர்ஜுன்னு தான் சொல்லிருப்பாங்க. அதுக்கு அப்பறம் என் வாழ்க்கையை யோசி" தலை தூக்கி அவனை பார்த்தாள்.

"கண்டிப்பா மொத்த சந்தோஷத்தையும் இழந்து நின்னுருப்பேன். அவ பண்ணது தப்பு இல்ல, நம்பிக்கை துரோகம். அந்த நரகத்துல இருந்து என்ன காப்பாத்திருக்க"

"இருந்தாலும் நான்..."

"இல்லம்மா... மறுபடியும் சொல்றேன் நீ பண்ணது தப்பில்ல. உன் காதலை அடையிரதுக்கு நீ எடுத்த முயற்சி அது"

"உங்களுக்கு அவங்க மேல அட்ராக்ஷன் மட்டும் தான் இருக்குற மாதிரி எனக்கு பீல் ஆச்சு அதுனால தான் நான் அப்டி சொன்னேன். நீங்க அவங்கள லவ் பண்ற மாதிரி எனக்கு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா உங்களுக்கு நடுல வந்திருக்க மாட்டேன். என் மேல சத்தியம்" கரத்தை அவள் தலைக்கு எடுத்து செல்ல வேகமாக பிடித்துக்கொண்டான்.

"இதுக்கெல்லாம் சத்தியம் பண்ணுவியாடி" அவள் கன்னத்தை நனைத்திருந்த கண்ணீரை துடைத்தவன் மென்மையாக அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

அவள் என வந்தாலே காதலெனும் எதிர்பார்ப்பு பிறந்துவிடுகிறது அவனிடம். மணிகண்ணக்காய் இல்லை என்றாலும் மனம் விட்டு பேசும் சில நிமிடங்கள் அவள் கொடுக்கும் காதல் அணைப்பினில் அந்த எதிர்பார்ப்பும் முழுமையடைந்துவிடுகிறது.

"நான் உன்ன கல்யாணம் பண்ணாம போயிருந்தா என்ன பண்ணிருப்ப இலக்கியா?"

அந்த நினைவே கசந்தது, "ரொம்ப கஷ்டம் தான். உங்க நிச்சயம் வந்தே எனக்கு ஒரு வாரம் தூக்கம் இல்ல. எவ்ளோ அழுதேன் தெரியுமா? மனசெல்லாம் பாரமா இருந்துச்சு. ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆகிருந்தா நாலு அஞ்சு வருஷம் கழிச்சு அப்பாக்காக வேற வழியே இல்லாம இன்னொருத்தர கல்யா..."

அவள் கூற வருவதன் பொருள் புரிய வேகமாக மனைவியின் இதழை அவள் வார்த்தைகளோடு சேர்த்து சிறை செய்திருந்தான்.

"சொல்லாதடி கடிச்சே தின்னுடுவேன்" இடையே அவளை விடுவித்து எச்சரித்தவன் மீண்டும் மென்மையாக மனைவி இதழணைத்தான்.

*****

நகரம் எங்கும் தேடி பார்த்துவிட்டனர் ராமகிருஷ்ணன் குடும்பத்தினர். எங்கும் மண்டபம் அமையவில்லை.

அனைத்து மண்டபங்களும் ஏற்கனவே பதிவாகியிருக்க என்ன செய்வதென்று தெரியாமல் சற்று ஓய்ந்து தான் போயினர். நாளை மருத்துவமனையில் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

அதற்கு தயாராவதா இல்லை மண்டபத்தை பார்ப்பதா என தெரியாத நிலை அங்கு. மதியம் உணவுண்ண அர்ஜுன் வருவான் என நினைத்திருக்க அவன் வீட்டிற்கு கிளம்புவதாக நின்றான்.

"உன்கிட்ட பேச தான் அர்ஜுன் எல்லாரும் வெய்ட் பண்றோம். ஒக்காரு சாப்பிடு" என்றார் பரிமளா.

"இலக்கியா வெய்ட் பண்ணுவா அத்தை. என்னனு சொல்லுங்க"

"எல்லாத்துலயும் அவசரம் தான் உனக்கு" அவனை இழுத்து அமர வைத்தார் பரிமளா,

"உன் அவசரத்துக்கு மண்டபம் கிடைக்கலடா. என்ன பண்றது?"

அர்ஜுன், "அவ்ளோ தான, அதை நான் பாத்துக்குறேன், மண்டபத்துல இல்லனா என்ன ப்பா, கிரௌண்ட் ஒன்னுல வச்சுக்கலாம். எப்படி பாத்தாலும் செலவு கம்மியாகும், வசதியும் கூட. ஈவினிங் இடம் எதுனு முடிவா சொல்றேன்" என்றவன் வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

அவ்வளவு அவசரமாக வீட்டிற்கு வந்தவனுக்கு பசி வயிற்றை பிடித்து கவ்வியது.

"இலக்கியா" சமையலறை பார்த்து அழைத்தவன் அவள் இல்லாது போக தங்கள் அறைக்கு மேலே ஏறினான்.

அங்கும் மனைவியின் தரிசனம் முதல் பார்வையில் கிடைக்காமல் போக தலையை உயர்த்தி பார்த்தவன் உறைந்து போனான்.

கால்கள் மெல்ல சத்தமெழுப்பாமல் அறையின் மேல் தளத்தில் அமைந்திருந்த அறைக்கு நகர்ந்தது.

பூனை போல் பதுங்கி வந்ததன் காரணம் அங்கு அவனது எலி, அர்ஜுனின் சட்டையை அணிந்து நின்றது. அதிலும் அதிக சிந்தனையோடு மேலும் அவனது உடைகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்கு அருகே இருந்த ஒரு நாற்காலியில் அவளது புடவையும், அவர்கள் திருமண புடவையின் ரவிக்கையும் இருந்தது.

அதனை பார்த்த அர்ஜுனின் தொண்டை குழி ஏறி இறங்க ஒரு நொடி நின்ற கால்களும் அவளை பார்த்து நிற்காமல் முன்னேறியது.

பெண்ணவளுக்கோ குழப்பம். பல வெள்ளை நிற சட்டைகள் வைத்திருக்கிறான், அதில் எது தங்கள் திருமண உடை என அறிந்திட ஆசை.

வரவேற்பிற்கு அளவு ரவிக்கை அர்ஜுன் தான் நேற்று கேட்டிருந்தான். அவளிடம் உள்ளவற்றில் அவர்கள் திருமணத்தின் பொழுது அணிந்த அந்த ரவிக்கை தான் அவளுக்கு மிகவும் கச்சிதமாக இருக்க, இப்பொழுதும் அதுவே சரியாக இருந்தால் அதனை கொடுக்க எண்ணி அணிந்து பார்த்தாள்.

நினைத்ததை போலவே அருமையாக பொருந்தியும் போனது. அதனை மாற்றி புடவையை அணியவிருந்த நேரம் அர்ஜுன் சட்டை அழகாய் பார்வையில் விழுந்தது.

அதனை எடுத்து அணியும் ஆசை வர அர்ஜுனின் ஆலிவ் கிறீன் நிற சட்டையை நிதானமாக அனுபவித்து அணிந்தாள்.

அர்ஜுனின் கைகளுக்குள் அடைங்கியது போல் எண்ணம் வர, அவர்கள் திருமண நாளின் நினைவில் அத்தனையும் அணியும் ஆசையில் தான் தேடியது.

ஒரு சட்டையை எடுத்து நுகர்ந்து பார்த்தவள் மனம் அதனை நெருக்கமாய் உணராமல் போக அடுத்தடுத்து வெள்ளை சட்டையை எடுத்து பார்க்க, இறுதியாக கிட்டியது அந்த சட்டை.

கையில் எடுக்கும் பொழுதே அந்த சட்டையின் காலர் நுனியில் இருந்த மஞ்சள் நிறம் அவளில் இதழில் புன்னகையை தோற்றுவிப்பதாக.

போட்டிருந்த உடையின் மேல் பட்டனை அவிழ்த்த அவள் கைகள் அர்ஜுனின் தொண்டை கனைப்பு சத்தத்தில் அப்படியே நின்று போனது.

திடுக்கிட்டு திரும்பியவள் எச்சில் விழுங்கி அர்ஜுனை பார்க்க, இரு புருவம் உயர்த்தி தலையை மேல் நோக்கி அசைத்து என்னவென அவன் கேட்டதில் அடக்கிய சிரிப்பின் வலி ஆண் அவனின் இதழில் அவனையும் மீறி வெளியேறியிருந்தது.

"என் ஸ்மெல் வேணுமா?" வசியக்காரனின் கேள்வியில் உண்மையை உணரும் வகையில் அவள் தலை தன்னாலே ஆட,

"நானே இங்க தான இருக்கேன்" என்றவனின் கூற்றில் வேகமாக இல்லை என தலையை ஆட்டினாள்.

மனைவியின் திருட்டு முழியில் இதழ் கடித்து சிரித்தவன் மீசையை நீவிவிட்டு அவளை நோக்கி வந்தவன் சில இன்ச் மட்டுமே தள்ளி நின்றான்.

"சா... சாப்பிடலாமா?"

"ம்ம் சாப்பிட தானே போறேன்" இலக்கியாவின் இடை தாண்டி ஒரு அடி கீழ் இறங்கி நின்ற அவனுடைய சட்டையின் நுனியை பிடித்து, "ரொம்ப லூசா இருக்கும் போல"

பேச்சு கொடுத்தவாறே சட்டையின் அடியில் கை நுழைத்து அவளது வெற்று இடையை பற்ற வெட்டி இழுத்தது போல் அவள் உடல் அதிர்ந்தது.

அவனின் கையை பிடித்தவள் சொக்கிய கண்களோடு, "என்ன பண்றீங்க?" கேட்க அவனிடமோ குறும்பு கூத்தாடியது.

"நீங்க என்னங்க பண்றீங்க?" கையை தானே மேலும் நகர தடா போட்டாய், விரலுக்கு இல்லையே என அர்ஜுனின் விரல்கள் தடையே இல்லாமல் நகர்ந்தது.

அவனின் அச்செயலில் பேச வந்த வார்த்தை மறந்து மறுப்பு கூட தோன்றவில்லை. கண்கள் அர்ஜுனை தவிப்போடு பார்க்க, மூச்சு சீரற்று இருந்தது.

"ஓ உள்ள வேற ப்ளௌஸ் போட்ருக்கியா?" ஏமாற்றத்தோடு அவள் ரவிக்கையின் இறுதி பாகத்தில் தொட்டு சோகமாக கேட்டான்.

அந்த நேரத்தை பயன்படுத்தி வேகமாக அர்ஜுனின் கையை உள்ளிருந்து அவள் எடுக்க, உச் கொட்டி மீண்டும் உரிமையாய் அவளை வசப்படுத்தினான்.

"சார்... இதெல்லாம் தப்பு" என்றாள் கூச்சத்தை மறைத்து.

"இருக்கட்டுமே சார். சில தப்பு ரொம்ப அழகு" அவள் கன்னத்தை இதழால் உரசி அவன் மொழிய, பெண்ணவளின் நறுமணம் தந்த மயக்கத்தில் கண் மூடி கிரங்கினான்.

"இலக்கியா..."

"ம்ம்" காற்றை விட மெல்லிய குரலில் வந்தது அவள் பதில்.

தடையேதும் விதிக்காமல் தன்னிடம் தன்னையே ஒப்படைத்து நிற்கும் மனைவியை அள்ளி விழுங்க ஆசை பொங்கியது மருத்துவனுக்கு.

"தப்பு பண்ணனும் போல இருக்கு"

அத்து மீறிய அவனின் கைகளின் அட்டகாசத்தால் ம்ம் என வந்த அவளின் முனகலை, "அப்போ பண்ணலாம் சொல்ற?"

சிரிப்போடு அவன் கேட்க மறுக்கவும் முடியாமல் வாய் திறந்து ஏற்கவ்வும் முடியாமல் பாவை தான் தவித்தது.

"சொல்லு இலக்கியா" சேட்டையை நிறுத்தி அவள் நெற்றி முட்டி அவன் கேட்க, மூச்சு வாங்கி தலை உயர்த்தி கூட பார்க்கவில்லை.

"பழகுன பொண்ணுங்களையே உன்ன தான் ரொம்ப லவ் பன்றேன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன். சொல்ல போனா என்னோட லவ் ஸ்டார்டிங் ஸ்டேஜ்ல தான் இருக்கு. அதுக்கே ஏன்டி உன்ன மொத்தமா தெரிஞ்சுக்கணும்னு ஆசைய தூண்டுற?"

"இ... இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும்?"

"உன் பதிலை சொல்லு இலக்கியா"

"என்... என்ன பதில்?"

"பேர் அளவுல" அவன் சட்டையினுள் பதுங்கியிருந்த அவள் தாலியை அவள் கழுத்தை உரசி வெளியே எடுக்க சிலிர்த்தது பெண் உடல், போதா குறையாக குனிந்து அவள் நெஞ்சோடு உரசிய தாலியில், அவள் நாடியில் சிகை உரச முத்தம் வைத்தான்.

"என்னங்க..." தாறுமாறாக துடித்த இதயத்தை அடக்கி இலக்கியா மெல்லிய குரலில் அழைக்க, "கயிரளவுல இருக்க நம்ம உறவை முழு மனசோட..." அங்கம் உரசல் இலக்கியாவின் செவியோரம் வந்து, "இலக்கியாவோட அர்ஜுனா மாறனும்"

இளைப்பாற வேண்டிய இடம் அவன் நெஞ்சமென அறிந்தவள் அதே மார்பினில் சரிய இசையாய் அவனின் இதயம் வெற்றி களிப்பில் ஆடியதை துள்ளலோடு கேட்டாள்.

அவள் சம்மதம் வரும் முன்பு அத்து மீறிய அவன் கைகள், அது கிட்டிய பிறகு அதே உந்துதலோடு அவளில் நெருங்க முடியவில்லை.

"நர்ஸம்மா..." கையை மாலையாக்கி அவன் கழுத்தில் போட்டு, "டாக்டரே..." மெல்லிய குரலில் அவள் அழைக்க, மனைவியை பூவை போல் மென்மையாக அள்ளி மஞ்சத்தில் சேர்த்தான்.

அவனது பார்வை அவள் அணிந்திருந்த அவன் சட்டையிலிருந்து அவள் விழிகளுக்கு மாறியது.

"என்னோட வாசனை வேணுமா, நான் வேணுமா?"

சட்டையின் காலரை இறுக்கமாக பற்றியவள் சிரிப்பை அடக்க உதட்டை கடித்து சில நொடிகள் பார்வையை காரணமே இல்லாமல் வேறு பக்கம் திருப்பி அவனை சோதிக்க நினைத்தாள்.

ஆனால் இன்று அவனுக்கு பொறுமை வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. புஷ்அப்ஸ் செய்வது போல அவளுக்கு நேர் வந்து காத்திருந்தான்.

அதுவும் அந்த கண்களில் வந்து குடிகொண்டிருக்கும் நாணம் காதலை அழகான தவிப்பாய் எடுத்துக்காட்ட ஆசையாக அவளுக்காய் காத்திருந்தான்.

"ரெண்டும் வேணும்" இந்த பதிலை அர்ஜுன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

மென்னகையோடு கைகள் இரண்டிலும் சற்று தளர்வு கொடுக்க, தன் மேல் பொத்தென விழுவான் என இலக்கியா எதிர்பார்த்திருக்க அவனோ சில இன்ச் இடைவேளை விட்டு அவளை விஷமமாக பார்த்து சிரித்தான்.

"பயந்துட்டியா?"

அவளை தலை அசைக்க, "நான் வந்துட்டேன். என் ஸ்மெல் வேணும்னா அதுக்கு ப்ராஸஸ் கொஞ்சம் அதிகம், பரவல்லயா?"

முகம் குப்பென சூடேறி சிவக்க வெட்கத்தோடு மெல்ல பெண்ணவள் தலை அசைக்க, அவளை ஆட்கொள்ள முதலில் மனைவியின் முகத்தை முத்தத்தால் குளிப்பாட்டி இதழில் இளைப்பாறினான்.

அவனின் அதிரடி வேட்டையை புள்ளிமான் எதிர்பார்க்க அர்ஜுன் முன்னேறாமல், சில நொடிகள் முன்பு பார்த்த காதலோடு கூடிய ஆசை மறைந்து வருத்தம் மேவி நின்றது.

"என்னாச்சு?"

"இப்போவே இதை கேக்கணும் தோணுது இலக்கியா. அப்றம் கேட்டா பெண் பித்தத்துல கேக்குறேனு நீ நினைச்சிட்டு கூடாது. படிக்கிறியாடி? உன் விருப்பம் போல டாக்டர் ஆகு. சென்னை, டெல்லி, அமெரிக்கா, லண்டன் எங்க வேணாலும் போ. இந்த தடவை பணம் உனக்கு தடையா இருக்க கூடாது"

அவள் ஆரம்ப நாட்களில் இதனை நினைத்து வருந்தியதை போல அதே துக்கம் அவன் கண்களில் அவளுக்காக.

"ஓ... நான் டாக்டர் ஆகணுமா?"

உனக்கு இன்னும் உன் ஆசை குறையவில்லையா என அவள் அர்ஜுனை சீண்ட, அவன் சூடேறவில்லை. அவளை விட்டு தள்ளி அமர்ந்து பார்த்தான்.

"உன்ன இம்ப்ரெஸ் பண்ணனும்னு கேக்கல இலக்கியா. ரொம்ப நாளா யோசிச்சேன் தான். உனக்கு எங்க தோணுதோ அங்க போ, வீடு, நான், மாமா இப்டி யாரையும் யோசிக்காத. நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன்" அர்ஜுனை ஆழ்ந்து பார்த்தவளுக்கு இப்பொழுது நிஜமாகவே கோவம் வந்தது.

"அஞ்சு வருஷம் நான் இல்லாம சந்தோசமா இருக்க போறீங்க அப்டி தான?"

"நான் எதை பத்தி பேசுறேன், நீ என்ன பண்ற? பேச்சை மாத்தாம பதில் சொல்லுடி"

"நான் டாக்டர்னு சொன்னா தான் உங்களுக்கு கௌரவம்னா கண்டிப்பா படிக்கிறேன். அதுல எனக்கு கோவமோ வருத்தமோ கொஞ்சமும் இருக்காது, உங்களுக்கே உங்களுக்காக பண்ணுவேன்"

"எனக்காக நான் பேசணும்னா நம்ம கல்யாணம் முடிஞ்ச கையோட உனக்கு சீட் வாங்கி வந்துருப்பேன்"

இலக்கியா, "அப்போ இது என்னோட விருப்பம் தான?" ஆம் என தலை அசைத்தான் அர்ஜுன்.

"ஆரம்பத்துல வருத்தம் தான். ஆனா இப்போ இல்ல. சொல்லப்போனா என் வேலை படிப்பு எல்லாம் எனக்கு ரொம்ப சந்தோசம் தான் குடுக்கும். இப்போ கொஞ்ச நாள் அந்த முடிவுல இன்னும் உறுதியா நிக்கிறேன்"

"என்னாலயா?"

"நல்ல விதத்துல, ஆமா. காதலுக்கு அழகு, பணம் மட்டுமில்ல படிப்பு கூட தடையா இருக்குமான்னு பல நாள் வருத்தப்பட்ருக்கேன். அது இல்லனு காலம் உங்கள என்கிட்ட குடுத்துருக்கு பாருங்களேன் அந்த நிம்மதி எனக்கு என்னைக்கும் வேணும்.

டாக்டர் ஆகி வந்து என் கனவை நான் நிறைவேத்தினாலும், ஏதாவது ஒரு சமயம் நீங்க காட்டுற அன்புக்கு அந்த டாக்டர் பட்டம் தான் காரணம்னு நான் யோசிச்சிட கூடாது"

"நான் அப்டிலாம் யோசிக்க மாட்டேன்டி"

"மாட்டீங்க தான். எனக்கு என்னோட அர்ஜுன் சார், நர்ஸ் இலக்கியாவை மட்டுமே பாத்து மயங்குனவரா இருக்கனும்.

எல்லாத்துக்கும் மேல, என் அப்பாக்கு நான் குடுத்த மிக பெரிய கெளரவம் இந்த நர்ஸ் பட்டம் தான். அவருக்கு அதுல ஒரு அலாதியான நிறைவு. அதை எப்பவும் நான் மாத்த விரும்பல.

அர்ஜுனோட இலக்கியா எப்படி வேணாலும் மாறலாம். ஆனா மணிகண்டன் பொண்ணு நர்ஸ்னு இருக்க பேர் எப்பவும் மாற விட மாட்டேன். புரிஞ்சிப்பீங்களா?"

மனைவியை கண் எடுக்காமல் பார்த்தவன் இரண்டு நொடிகளில் அவளில் மொத்தமும் படர்ந்து பித்தன் ஆனான்.

வண்ணக்கொடியில் வண்டாடும் மலராய் மலர்ந்து கிடந்த அவள் இதழை கண்களின் வார்த்தை அல்லாமல் ஆசையின் வார்த்தை மூலம் உணர்த்தினான்.

கோடி மலர்களை விட்டு அவளிடம் வந்து அவன் மயங்கி போனதன் ரகசியத்தை அழுத்தமாய் அர்ஜுன் விளக்கினான்.

அவன் சட்டை இருவர் மேலிருந்தும் விலகி, அன்பு மணக்கும் தேன் சுவை பாட்டாய் ரீங்காரமிட்டது அவர்கள் முத்தத்தில்.

இதழ் விலகி அவள் அங்கம் பார்த்தவனுக்கு முத்தம் வாங்கியவளை விட அதிகம் மூச்சு வாங்கியது.

குறும்புக்காரன் நேர் வழியே செல்லாமல் இல்லாத சேட்டையை அவள் மேனியில் நிகழ்த்த பொன்னாய் மின்னியது பெண் மேனி.

ஆசையாய் அழுத்தமாய் அவளில் தன்னை கொடுத்து உள்ளங்களை மட்டுமல்லாது உடலையும் ஒன்றாக்கி இணைத்தான். எல்லை மீறும் அவர்கள் அன்பிற்கு ஆசை என்னும் செல்வம் சொர்கத்தை காட்டிய நேரம் அது.

"இந்த அழகையா இவ்ளோ நாள் மறைச்சு வச்சிருந்த?"

மனம் மட்டுமல்ல மங்கை மொத்தமே அழகாய் தெரிந்தது காதல் திறையாலா இல்லை உண்மையிலே அவள் அழகா அவன் மட்டுமே அறிந்தது.

அவளின் ஒவ்வொரு அசைவும் அர்ஜுனுக்கு தித்திப்பை கூட்ட தேடலின் தேடல் முடியாமல் நீண்டது.

அவள் முகம் சுருங்கிய பொழுது கைகள் அவள் கன்னத்தை அணைப்பதும், இதழ் மலர்ந்த பொழுது வெட்கத்தால் மேலும் அவளை மலர செய்வதும் அவன் காதல் மொழி.

பிரித்தறிய முடியா பேரின்பம் காதல் அகங்காரமாக இருவர் கண்களிலும் சூட்டிவிட்டது. சோர்வில் இலக்கியா போர்வையினுள்ளே சுருண்டுபோக, அவளின் முகத்தை கண் எடுக்காமல் ரசித்து பார்த்தான் கணவன்.

சிறு சிறு தொடுகையை அவன் விரல்கள் அவள் முகத்தினில் விழுந்த பூனை முடிகளை ஓரம் அனுப்பினான். அது வெறும் சாக்கு தான் அவளை தீண்ட.

கூசும் எறும்பாய் ஊர்ந்த கணவன் விரல்களில் சிணுங்கினாள் பெண், "சிணுங்காதடி"

"ஹ்ம்ம்... ரொம்ப டயர்டா இருக்குங்க" மீண்டும் சிணுங்கினாள்.

"சரி ரைட்டு... இப்டியே பண்ணா பாவம் பாக்க மாட்டேன் அடுத்த ரவுண்டு தான்"

ஆசை வற்றாமல் அர்ஜுன் பார்வை வீச, "ஒரு ஒன் ஹவர் மட்டும் குடுங்களேன்"

அர்ஜுனுக்கு முகம் எல்லாம் புன்னகையானது, "ரொம்ப சந்தோசம்டி பொண்டாட்டி. நான் நாளைக்கு பாத்துக்கலாம் நினைச்சேன். நீ என்ன விட ஸ்பீடா இருக்க. பெர்பாமன்ஸ் அப்டியா?"

அவன் மார்பிலே தொடர்ச்சியாக அடி விழ, அடுத்த கூடலுக்கு அதுவே வழியாக மாறியது.

அவன் ஆசைக்கு அவளிடம் மறுப்பு இல்லாமல் போக, திரும்பி செல்லவும் பெரிய மனத்துடையவன் அல்லவே அர்ஜுன்.

தாராளமாக மனைவியை மீண்டும் ஆட்சி புரியத்துவங்கி முடியா வாழ்க்கை பாதையில் பெண்ணவளையும் இழுத்து சென்றான்.

சிணுங்கல், கொஞ்சல், கெஞ்சலுக்கு பெயர் போன பள்ளியறை அதில் வரவேற்புக்கு தான் இடம் பார்ப்பதாக சொல்லி வந்த வார்த்தைகள் எல்லாம் ஏதோ ஒரு மூலையில் அமைதியாக கிடந்தது.

அலறியே இருந்தாலும் அர்ஜுனின் கைபேசி போல அதையும் அந்த ஜோடி புறாக்கள் புறக்கணித்திருப்பார்கள் தான்.

அடுத்த நாள் மருத்துவமனை செல்ல தயாராகிய மனைவியிடம் வம்பு செய்தே அவளை கிளம்ப விடாமல் செய்துவிட்டான் அர்ஜுன். அவனிடம் பட்ட பாடு அவள் சொல்லி எவரும் நம்ப போவதில்லை.

குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முள் கூட குறைய வராதவன் மனைவியோடு ஐந்து நிமிடங்கள் பிறகே வர அங்கு பெரும் அதிர்வலை தான். முற்றும் முதல் காரணமாய் இலக்கியாவின் கைகள் அர்ஜுனோடு பின்னி பிணைத்திருப்பது மட்டுமே ஆனது.

"இந்த பொண்ணு எப்பவும் இவ்ளோ அழகா, இல்ல இந்த டிரஸ்ல இப்படியா?" பலரின் மன கேள்வி அதுவாக தான் இருந்தது.

வெள்ளை சீருடை புடவையிலே பார்த்து, இந்த ஆரஞ் வண்ண பட்டுபுடவையில் மிளிர்ந்தவளை வியந்து தான் பார்த்தனர் மருத்துவமனையில்.

புடவையோடு முகத்திலிருந்த பூரிப்பும் காரணம் என ராதாவுக்கும் அர்ஜூனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் அது. மொத்த பார்வையும் தன் மேல் இருக்க சற்று நெளிந்தே அர்ஜுனோடு நடந்தாள்.

"இந்த நெளிப்பெல்லாம் நைட் வச்சுக்கலாம் இலக்கியா. தைரியமா நட. இது உன் ஹாஸ்பிடல்" கணவனின் ஊக்குவிப்பில் முன்பிருந்த சங்கடம் கொஞ்சமே கொஞ்சம் மறைந்து தான் போனது.

வைராக்கியமாக இன்று தான் தாலியை மருத்துவமனை அணிந்து வந்தாள். அணியும் பொழுதே ஒரு நிம்மதி அவளுள் பிறப்பெடுக்காமல் இல்லை.

அதனோடு சிறிய வைர கழுத்தணி ஒன்று மட்டுமே அவளது ஆபரண எண்ணிக்கை. பேரனையும் பேத்தியையும் பார்த்து பார்த்து ராதா மற்றும் ராமகிருஷ்ணன் கண்கள் ஜொலித்தது.

மருத்துவமனை என்பதால் கூட்டம் வைத்து அறிவிக்க முடியாத நிலை. ஆதலால் உணவு நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அதிகமானோர் கூடியிருந்த நேரம் மனைவியோடு வந்து செய்தியை உடைத்திருந்தான்.

"ஹலோ எவ்ரிஒன், இந்த சிம்பிள் லஞ்ச் எங்களோட..." இலக்கியாவையும் தன்னையும் சுட்டிக்காட்டி, "முதல் வருஷ கல்யாண நாளுக்கான ஒரு சின்ன லஞ்ச் பார்ட்டி. வயிறார சாப்பிட்டு, மனசார வாழ்த்துங்க"

அவ்வளவே உரை என முடித்துக்கொள்ள கிசுகிசுப்போடே அன்றைய மதிய உணவு அமர்களமானது.

எளிமையான உணவு என கூறி இடியப்பம், சப்பாத்தி, பிரியாணி, வெள்ளை சாதம், சிக்கன், மட்டன், மீன், இறால், முட்டை என அசைவத்தில் அத்தனையையும் இறக்கியிருந்தான்.

அவர்களை வாழ்த்தியவர்களை விட, உணவை வைத்து பாராட்டி சென்றது தான் அதிகமானது.

வீட்டின் அனைவரும் உணவை முடித்து சிறிது ஓய்வெடுக்க அவர்கள் வழக்கமாக கூடும் அறைக்கு சென்றனர்.

"அர்ஜுன், இலக்கியா எங்க?"

ராமகிருஷ்ணன் வந்து கேட்க, "வேற எங்க இருப்பான், ஏதாவது கேஸ் பைலை பாத்துட்டு இருப்பான்" தாத்தாவுக்கு பதில் கூறியபடியே அர்ஜுன் அறையின் கேமராவை அங்கிருந்த திரையில் தர்ஷன் ஒளிபரப்ப,

"டேய் மொதையாவது ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணாம இருந்தாங்க, இப்போ.... யோசிடா" அவன் கையை பிடித்து நினைவூட்டினான் வருண்.

தர்ஷனுக்கு குறும்பு மேலோங்க நண்பனையும் மீறி அர்ஜுன் அறையின் கேமராவை தேடி போட அதில் சிக்னல் வரவில்லை. முக்கிய இடங்களின் காணொளி மட்டுமே இங்கு தொடர்பில் வைத்திருப்பது.

அதில் அனைத்திலும் தர்ஷன் தேடி பார்க்க எதிலும் அர்ஜுன் அறையின் காணொளி வரவில்லை.

"இன்னுமா உனக்கு புரியல? கேமராவை அர்ஜுன் கட் பண்ணிட்டான்" என்றார் வரதராஜன் அடக்கப்பட்ட சிரிப்போடு.

"பாத்தியாடா இந்த ப்ராடு டாக்டர, ஹாஸ்பிடல்ல ஒரு இடம் விடாம கேமரா வைக்கணும்னு சொல்லிட்டு அவன் ரூம்ல எடுத்துட்டான்"

"கல்யாணம் பண்ணிக்கோங்கடா உங்களுக்கே தெரியும்" போகிற போக்கில் கூறி சென்ற பாட்டியை வியப்போடு பார்த்தான் வருண்.

"சின்ன பசங்கனு நிரூபிக்கிறானுங்க பாரு. விளையாட்டு குணம் கொஞ்சமும் மாறல" அர்ஜுனின் பேச்சை மறைக்க இவர்களை பிடித்து ஆள் ஆளுக்கு வெளியே சென்றுவிட்டனர்.

தர்ஷன் கூறியதை செய்திருந்தால் அர்ஜுனின் மன்மத லீலைகள் அவன் வீட்டினருக்கே தெரிந்திருக்கும்.

அர்ஜுன் தப்பித்தானா இல்லை அவனது உண்மை முகம் வீட்டினருக்கு தெரியாமல் போனதா தெரியவில்லை.

"போதுங்க" அவள் கெஞ்சல் வார்த்தைகள் யாவும் அர்ஜுன் செவிகளை எட்டவே இல்லை. பெருமூச்சோடு அர்ஜுன் கையை பிடித்து நிறுத்தி தண்ணீரை அருந்தினாள்.

"பேசாத, இதுக்காகவா இப்டி ஹாஸ்பிடலுக்கே தெரியாம இழுத்துட்டு வந்தேன்"

"அதுக்குன்னு இப்டி மூச்சே விட முடியாத அளவு சாப்பாட வாயில திணிக்கிறது தப்புங்க"

"அது ஆசைடி பொண்டாட்டி. கதவை திறந்து வச்சு கொடுக்கணும்னு தான் ஆசை. ஆனா இப்டி"

மேஜையில் அமர்ந்திருந்த மனைவியை நோக்கி இருக்கையிலிருந்து எழுந்தவன் அவள் உதட்டில் பட்டென முத்தம் வைத்து மீண்டும் அமர்ந்தான், "நினைக்கிறப்போ எல்லாம் யோசிக்காம குடுக்க முடியாதே"

சிவந்த அவள் முகத்தை பார்த்து அர்ஜுன் கண்ணடிக்க தண்ணீரை எடுத்து குடித்தாள். உணவை பார்த்து மனைவிக்கு ஊட்டிவிட ஆசை கொண்டவன் அவளை இழுத்து தன்னுடைய அறைக்கு வந்துவிட்டான்.

கேட்டால், "நீ விருந்து வச்சப்போ நீ தானே ஊட்டி விட்ட, இப்போ என் டர்ன்" என்றான், மறுக்க முடியவில்லை.

அவனுக்கு சரியாக ஊட்ட கூட தெரியவில்லை, அதிகம் அவளது புடவையில் சிந்தினாலும் மற்றவரை விட இலக்கியாவுக்கு உணவின் ருசி அபாரமாக இருந்தது.

இதோ தன்னுடைய பசி மறந்து அவள் வயிறு நிறைய உண்ண வைத்து இன்னும் ஊட்டிவிட தயாராக நின்றான்.

"ஒன்னு கேக்கணும் நினைச்சேன், எதுக்கு இந்த திடீர் விருந்து? வீட்டுல சொல்றப்போ உங்க முகமே சரியில்ல. எதுவும் பிரச்சனையா?"

சிறு யோசனைக்கு பிறகு, "முன்னாடி எல்லாம் லீவ் ஹெட் நர்ஸ்கிட்ட சொல்லுவ, இப்போ எல்லாம் எதுக்கு என் மூலியமா வருது, அதுவும் அடிக்கடி லீவ் போடுறதா பேச ஆரமிச்சிட்டாங்க.

அவங்க என்னோடவே உன்ன வச்சு பேசுனது கூட எனக்கு தப்பா இருக்கு. உன் கேரக்டர் என்னால கூட தப்பாகிட்ட கூடாது இலக்கியா. அதான் சரி பண்றேன்"

என்றவனை கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டாள் அவன் மனைவி. அர்ஜுனோ உணவை சிரிப்போடு எடுத்து கொடுக்க போக,

"முடியவே முடியாது போங்க"

"எக் வைட் மட்டும் சாப்பிடு"

"ஐயோ வேணாம்ங்க, ப்ளீஸ். பாதி பிளேட் எனக்கே ஊட்டி விட்டீங்க. பாருங்க வயிறு புல்"

"அதை நைட் பாத்துக்குறேன் இலக்கியா ம்மா, இப்ப ஆ சொல்லு" அவனது காதல் விளையாட்டில் இவள் தான் திக்குமுக்காடி போனாள்.

அவளை வெறுக்க மிகப்பெரிய காரணத்தை தேடியவன், அவளை நேசிக்க மிக சிறிய காரியத்தை தேடி இப்பொழுது அளவே இல்லாமல் அவளில் வீழ்ந்து போனான்.

காரணமே கிடைக்காவிடினும் நேசித்திருப்பான் என்பது அங்கு வேறு கதை. சரித்திரத்தில் இடம் பிடிக்க அவள் காதலெனும் பற்றுக்கோலை பிடித்து அடி எடுத்து வைக்க நிச்சயம் வெற்றி இலக்கியாவின் அர்ஜுனுக்கு தான்.

முற்றும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro