நிலா - 12
ரகு சுப்பிரமணியம் தனக்கு எதிரே அமர்ந்திருக்கும் அர்ஜுனை விழி எடுக்காமல் பார்த்தான். இவன் வந்து மூன்று மணி நேரங்கள் ஆகியது. மௌனமாகவே அமர்ந்திருந்தான் வார்த்தை ஒன்று கூட பேச பிடிக்காமல்.
ரகு நேரத்தை பார்த்தான், விடியற்காலை மூன்றை நெருங்கிவிட்டது. இரவு பன்னிரெண்டுக்கு வந்து வீட்டின் அழைப்பு மணியை அழுத்தியிருந்தான்.
"என்ன அர்ஜுன்?"
"உன்கிட்ட பேசணும்டா" என்றதோடு உதடுகளை பூட்டிவைத்துவிட்டான் அர்ஜுன்.
இவனும் தண்ணீர் ஒன்றை எடுத்து வைத்து பக்கத்திலே அமர்ந்திருந்தான். வக்கீல் ஆயிற்றே பொறுமை அதிகமாகவே இருந்தது. அர்ஜுனோ இங்கு வந்தது யோசிக்க மட்டும் தான் என்பது போல் அமர்ந்திருந்தான்.
"மூணு மணி நேரம் தூங்குனா தான் என்னால அடுத்த வேலைய செய்ய முடியும். யோசிக்கிறதா இருந்தா வெளிய போ" என்றான் நாளைக்கு தேவையான கோப்பைகளை எடுத்து வைத்து. படுக்க போனவன் கையை பிடித்து அருகில் அமர்த்திக்கொண்டான் அர்ஜுன்.
"பேசணும்டா ரகு" தீவிரமான முகபாவனையுடன்.
"தெரியும் நீ கடைசில இங்க தான் வந்து நிற்பனு" அர்ஜுன் கையை விலக்கி விட்டு எழுந்த ரகு, சில காகிதங்களை எடுத்து வந்து போட்டான் நண்பன் முன்.
"இது உன்னோட வைப் சம்மந்தப்பட்ட டீடைல்ஸ். அந்த பொண்ணோட ஸ்டேட்மென்ட், அவங்க அப்பா ஸ்டேட்மென்ட் வரை எல்லாமே இருக்கு" வரிசையாக சுட்டி காட்டினான்.
"அந்த பொண்ணுக்கு ரெண்டு வயசு இருக்குறப்போ அவங்க அம்மா இறந்துட்டாங்க. அப்பா இரும்பு பட்டறைல வேலை பாத்தவர். வைப் வைத்தியத்துக்கு ஏகப்பட்ட கடன்.
அதுல இருந்து வெளிய வரவே அந்த குடும்பம் பல வருஷம் போராடிருக்கு. அவ்ளோ கஷ்டத்துலையும் அவர் ஒரு ரூபா எங்கையும் கை வச்சது இல்ல. ரொம்ப நேர்மையான மனுஷன். அதே குணம் தான் பொண்ணுக்கும்"
எதற்காக இதனை ரகு கூற வருகிறான் என்பது புரிந்தது அர்ஜுனுக்கு, "இது தேவையில்லை, அவ மேல நம்பிக்கை இருக்கு"
ரகு, "திடீர்னு அறிவு வந்துடுச்சோ. அன்னைக்கு டிவோர்ஸ் வேணும்னு வந்து நின்னப்போ எங்க போச்சு இந்த அறிவு?"
அர்ஜுன் ஏதோ பேச வர அவனை தடுத்தவன், "உன் சந்தேகத்தை பூர்த்தி பண்ண வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு. கேட்டுக்கோ"
அழுத்தமாக அர்ஜுனை தடுத்தவன், "நல்ல பிரைட் ஸ்டுடென்ட் உன் வைப். படிச்சது எல்லாம் ஸ்காலர்ஷிப்ல தான். உன் ஹாஸ்பிடல்ல ஜாயிண்ட் பண்ணி மூணு வருஷம் ஆகுது. ரெண்டு வருஷம் முன்னாடி தான் அவங்க அப்பா ஓனர் அவருக்கு வாட்ச்மேன் வேலை குடுத்து அவங்க வீட்டை அவர் பேர்ல எழுதி வச்சு லோன் வாங்கி குடுத்துருக்கார். அதுவும் அவரா செய்யல"
ஒரு கடிதத்தை அவன் முன் வைத்தான், "இலக்கியா அப்பாக்கு டி.பி வந்துடுச்சு. அதுனால வேலை சரியில்லைன்னு அவங்க மேனேஜர் அவரை வேலை விட்டு அனுப்ப சொல்லி எம்.டிக்கு போட்ட லெட்டர்.
இந்த லெட்டர் வரவும் அவர்கிட்ட சொல்ல முடியாம அவர் ஓனர் இந்த பொண்ணுகிட்ட பேசிருக்காங்க. இத்தனை வருஷம் வேலை பாத்ததுக்கு மூணு லட்சம் பணம் குடுக்குறோம், உன் அப்பாவை வீட்டுல இருக்க சொல்லிடுங்கனு.
இந்த பொண்ணு தான் அவர்கிட்ட பேசி வேலை வாங்கி குடுத்து, அந்த மூணு லட்சத்தை வச்சிட்டு மேல அவங்க அப்பா மட்டும் தங்கிகிற மாதிரி ஒரு ஹால் டாய்லட் வச்சு வீடு கட்டி கேட்ருக்கு. மிச்ச பணத்தை லோன் போட சொல்லி. ரெஸ்ட் யு க்நோ"
ஒரு சில நொடிகள் இடைவேளை விட்டு, "இதை எல்லாம் ஏன் உன்கிட்ட சொல்றேன்னு பாக்குறியா? காசு இருக்க உங்களுக்கு வசதியா வாழணும்ங்கிற ஒரு வழி தான். பணம் இல்லாதவங்களுக்கு அதை சம்பாதிக்க பல வழி இருக்கு. அந்த பொண்ணு அப்பா ஸ்டேட்மென்ட் பாரு"
அதனை மட்டும் எடுத்து அர்ஜுன் கையில் கொடுத்தான். அர்ஜுன் எடுத்து பார்த்தான், வங்கியில் வைப்பு தொகையாக ஒன்றரை லட்சம் இருந்தது. அதே போல் இலக்கியாவின் கணக்கை பார்க்க, ஆயிரம் கூட இல்லை.
"அவ அப்பா சம்பளம் வந்ததும் பத்திரமா ஒரு ரூபாய் எடுக்காம அந்த பொண்ணு ரெண்டு வருசமா சேர்த்து வச்சிட்டு வருது. வீட்டு லோன் போக வீட்டு செலவு எல்லாம் அவளோட பணம் தான். தனக்காகன்னு அவ யோசிச்சது போலவே தெரியல"
"நான் விசாரிச்ச வரை ஒரு குறை சொல்ல முடியாது. தேவைக்கு மீறி உங்க ஹாஸ்பிடல்ல சரி, அபார்ட்மெண்ட்ல சரி யார்கிட்டயும் அனாவசிய பேச்சு கூட இல்ல.
அவ இதெல்லாம் பணத்துக்காக தான் பண்றதா நீ நினைச்சா உன் எண்ணத்தை மாத்திக்கோ" என்றான் ரகு நல்ல நண்பனாய்.
அர்ஜுன் நெற்றியை நீவியபடியே, "அதெல்லாம் நான் நினைக்கலடா, பணத்தை பத்தி நினைக்காத மனுஷங்களே இருக்க மாட்டாங்க. ஏன் நாங்க எதை நோக்கி ஓடல? என் பிரச்சனையே அவ நர்ஸ், நான் டாக்டர் தான்" கூறினான்.
தலையை ஆட்டி, "ம்ம்ஹ்ம் நீ வாழ்க்கையை வாழ மாட்ட. கெளம்பு இங்க இருந்து" என்றான் தீவிரமாய்,
உடனே, "அப்றம் டிவோர்ஸ் வாங்கலாம்னு நினைச்சிடாத. நீ எந்த லாயர் கிட்ட போனாலும் எவனும் உனக்காக வந்து நிக்க மாட்டான்"
"இப்போ என் பிரச்னை அதுவே இல்ல ஓகே?" எழுந்து நின்ற அர்ஜுனுக்கு இன்னும் இலக்கியா கூறிய வார்த்தைகள் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
"சூசைட் பண்ணனும் போல இருக்காம் அவளுக்கு. ஏதாவது சைகார்டிஸ்ட் இருந்தா சொல்லுன்னு என்கிட்டயே கேக்குறா ரகு. அதுலயும் கடைசியா வந்துச்சு பாரு அந்த ஒரு சொட்டு கண்ணீர்...
ச்சை யார்ரா இவ? எதுக்கு என் லைப்ல வந்தா? என் வேலைய நான் பாத்துட்டு நிம்மதியா தானே இருந்தேன்? என்னைக்கு இவ வந்தாளோ அன்னைல இருந்து நான் ஓடிட்டு இருக்கேன்"
இயலாமையில் துவங்கியவன் வார்த்தை இறுதியில் ஆத்திரத்தில் வந்து முடிந்தது. ஆனால் கோவ வார்த்தைகள் பின்னால் நிஜமான கோவம் துளியும் இல்லை. வேதனை மட்டுமே இருந்தது, அவளது வேதனையை துடைத்து எறிய முடியாத வருத்தம் மட்டுமே மேவி இருந்தது.
"பக்கத்துல போகவும் முடியாம தூரமா தள்ளியும் நிக்க முடியாம தான் நாலு மாசம் விட்டு ஓடுனேன். வந்த ரெண்டே நாள். மறுபடியும் எனக்கு தூக்கம் போச்சு. சூசைட் பண்ற அளவு அப்டி என்னடா அவ வாழ்க்கைல நடந்துபோச்சு? பைத்தியக்காரி"
நடு இரவில் அவள் பேசியதை மறக்க முடியாமல் தான் இங்கு ரகுவை தேடி அர்ஜுன் வந்து நிற்பது. தெரியவில்லை என செய்வதென.
"எதுக்கு இப்டி பேசுறாங்க?"
அர்ஜுன், "மேடம் லோன்லியா பீல் பன்றாளாம். பீலிங்ஸ் ஷேர் பண்ண கூட யாரும் இல்லையாம்"
ரகு, "அப்போ சைகார்டிஸ்ட்கிட்ட போக வேண்டியது உன் வைப் இல்ல, நீ தான்" என்றான் ரகு சிறிதும் அசராமல்.
பதிலுக்கு அர்ஜுன் முறைக்க, "முறைச்சா பேச்சை மாத்திடுவேன்னு நினைக்கிறியா? தெளிவா தான் சொல்றேன். ஒரு பொண்ணு, அதுவும் உன்ன நம்பி வந்த உன் மனைவி இந்த அளவு யோசிக்கிறாங்கன்னா தப்பு யார் மேல இருக்குனு யோசி அர்ஜுன்" அதே யோசனை தானே அவனிடம் அவனே கடந்த மூன்று மணி நேரங்களாக.
"பொதுவா பொண்ணுங்க அவ்ளோ சீக்கிரம் யாருக்கும் கழுத்த நீட்டிட மாட்டாங்க. என்ன பொறுத்த வரை இலக்கியா இப்டி பண்ணிருக்குற காரணம் கண்டிப்பா உன் ஹாஸ்பிடல் மேல உள்ள அக்கறையா என்னனு தெரியல பட் இப்போ நீ சொல்றதை வச்சு பாத்தா. ஷி லைக்ஸ் யூ. ரொம்ப நாளாவே"
ரகு கூறியதில் அர்ஜுனின் அடிமட்டம் ஆட்டம் கண்டது உண்மையே. அவன் அவளிடம் உணர்ந்த அதே விஷயம் உண்மையாக இருக்க கூடாதென்று வேண்டிய முட்டாள்தனமான கோரிக்கை, இன்று நண்பன் மூலம் கேட்கும் பொழுது அதிர தான் வைத்தது.
"கனவு கன்னி, அதுல இருந்து வர்ற பேர், இது எல்லாம் எவ்ளோ நாள் நிலைக்கும்னு நினைக்கிற? அவுட்லுக் டிசிவ்ஸ் அண்ட் மனி இஸ் மேஜிக் (வெளித்தோற்றம் பொய்யானது, அப்றம் பணம் வெறும் மேஜிக்).
ரெண்டுமே ரொம்ப நாள் நிலைக்காது அர்ஜுன். லவ் பண்றத விட லவ் பண்ணப்படுறது வரம்டா.
நீ தேடுற வாழ்க்கைல அது கிடைக்குமா தெரியல. உனக்கு அமைஞ்சிருக்க வாழ்க்கைல நீ எதிர் பாக்குற பெருமை, புகழ் கிடைக்காம இருக்கலாம். அதுக்கெல்லாம் மேல நிம்மதி கிடைக்கும். காசை சம்பாதிக்க துணை தேடாம, மனசுக்கு துணை தேடுடா" என்றதோடு சென்று உறங்கிவிட்டான் ரகு.
அவனுக்கு நாளை பார்க்க வேண்டிய வேலைகள் ஓராயிரம். அர்ஜூனுக்கும் அதே போல் தான். ஆனால் இப்பொழுது அவனது எண்ணமெல்லாம் அவனது நர்ஸ் பெண் தான்.
மூளையை குடைந்து ஒவ்வொரு செல்லிலும் இம்சிக்கிறாள். காலை ரகு எழும்வரை அர்ஜுன் அங்கேயே தான் இருந்தான். ரகு தேநீரை ஒப்படைத்த பிறகு தான் அதனை குடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்.
செல்பவனை பிடித்து, "என்ன முடிவு பண்ணிருக்க?"
ரகு கேட்க, "உடனே முடிவெடுக்க முடியாது. அவளை பர்ஸ்ட் நார்மல் ஆக்கணும்" பதில் கொடுத்து வீடு நோக்கி பயணித்தான்.
செல்லும் வழியிலேயே ஒரு நோயாளி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்திருந்தது.
"ஆக்சிடென்ட் கேஸ் அர்ஜுன். பொண்ணு ப்ரெக்னென்ட். எய்ட்த் மந்த தான் ஆகுது ஆனா தலைல பலமான அடி. ஒன் ஹவர்ல ரிப்போர்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணி வைக்க சொல்றேன்"
அன்னை பானுவிடம் இருந்து வந்த தகவலில் முக்கால் மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தான்.
இலக்கியா முன்னே சென்று தன்னுடைய கைகளை சுத்தம் செய்து அர்ஜுனுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் பொழுது நோயாளியின் அறிக்கைகளை எடுத்து வந்த மூத்த செவிலியர் இலக்கியாவின் உடையை பார்த்து,
"என்ன இலக்கியா இது? போ டிரஸ் மாத்திட்டுவா"
"இல்ல மேம், எமெர்ஜென்சி கேஸ்னு கால் வந்துச்சு. நான் வெளிய இருந்தேன். அதான்..."
"அப்போ பிரச்சனை இல்ல, ஹால்ஃப் டே லீவ் போட்டுட்டு வந்து ஜாயின் பண்ணிக்கோ. இன்னைக்கு நீ இப்டி வருவ, நாளைக்கு உன்ன பாத்து இன்னொருத்தர் ரூல்ஸ் பிரேக் பண்ணுவாங்க. வாட் டூ யு திங்க் அஸ் யுவர்செல்வ்ஸ்? இந்த ஹாஸ்பிடல் ஓனரா? அர்ஜுன் சார் வர முன்ன வெளிய போ"
இரவு முழுதும் வேலை பார்த்து கண்கள் சிவப்பேறி அவரது அசதி தெரிந்தது. அடுத்த பகுதி வேலைக்கு வருபவர்கள் வரவே இன்னும் ஒரு மணி நேரம் மேல் ஆகும்.
இந்த அறுவை சிகிச்சையையும் விட்டு செல்ல முடியாத கோவம் அந்த ஐம்பது வயதை தொட்ட செவிலியருக்கு.
"இல்ல மேம் அர்ஜுன் சார் என்னை..."
"நீ இல்லாம இங்க எதுவும் ஓடாதுனு நினைக்கிறதை நிறுத்து இலக்கியா. நீ இங்க வந்து ரெண்டு மூணு வருஷம் தான் ஆகுது. அதுக்கு முன்னாடி வரைக்கும் எத்தனையோ ஆபரேஷன்ஸ் நடந்துருக்கு, எல்லாத்துக்கும் உன்கிட்டயா நாங்க வந்து நின்னோம்? சும்மா நீ இல்லாம இங்க எதுவுமே இல்லனு பேசாத"
அவரது வார்த்தைகள் இலக்கியாவின் மனதை அதிகம் தாக்கியிருக்க கன்னத்தில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
"சாரி மேம், பட் ப்ளீஸ் இந்த ஒரு தடவை எக்ஸ்யூஸ் பண்ணுங்க" இத்தனைக்கும் காரணம் அவளது உடை தான்.
செவிலியருக்கான உடையை அணியாமல் வீட்டிலிருந்த பொழுது உடுத்தியிருந்த புடவையோடு வந்திருந்தாள். அந்த புடவையும் அவள் வழக்கமாக அணியும் மங்கிய நிறமுள்ள புடவை தான். அதற்கே இவ்வளவு பேச்சு விழுந்தது.
"ஒன்னு பண்ணும்மா... உன் அப்பாவை ஒரு ஹாஸ்பிடல் கட்ட சொல்லி, அங்க இந்த மாதிரி ரூல்ஸ் போடு. நான் அங்க வேலைக்கு சேர்ந்து முதலாளி அம்மாக்கு பெர்மிஷன் தர்றேன்"
இதன் இடையே உள்ளே வந்த சில மருத்துவர்களும், செவிலியர்களும் இருவரையும் பார்த்தவண்ணம் தான் இருந்தனர். அப்பொழுது அந்த கர்பிணி பெண்ணை ஆபரேஷன் தியேட்டர் உள்ளே அழைத்து வந்திருக்க, "உன்ன பேபிசிட் பண்ண எனக்கு நேரம் இல்ல இலக்கியா. வெளிய போ" அ
வர் கத்தியதில் தூக்கி வாரி போட்டது பெண்ணின் உடல். அவள் வெளியே செல்ல கதவை திறந்த பொழுது உள்ளே வந்த அர்ஜுன், "எங்க போற" என்றான் அவள் முகத்தை ஆராய்ந்தவாறே.
"இல்ல சார்..." அவளை பேச விடாமல், " உள்ள வா" அழைத்தவன் அவள் முன்னே நின்றான்.
அவன் எண்ணம் புரிந்து அவனுக்கான உடையை நீட்ட, "என்னாச்சு?" கேட்டான் மெதுவான குரலில்.
ஒன்றும் பேசாமல் அவன் பின்னே சென்று முடிச்சுகளை போட்டவள், அவன் கையில் கையுறளைகளை கொடுத்து இன்ட்ராஓக்யூலர் லென்ஸ் கண்ணாடியையும் அனுவித்துவிடாமல் கையிலே ஒப்படைக்க பார்த்தாள்.
"என்ன பாரு" அழைத்தான்.
இலக்கியா தலையை உயர்த்தாமல் நிற்க, பிரதாப்பிடம், "நீங்க அனஸ்தீசியா போடுங்க டாக்டர் நான் வர்றேன்" என்றான்.
அவனது அனுமதி கிடைக்கவும் மற்ற கூட்டம் அவர்கள் வேலையை உடனே பரபரப்பாக செய்ய துவங்கினர். எவர் பார்வையும் தங்கள் மீதில்லை என்பதை உறுதி செய்துவிட்டு மீண்டும் இலக்கியாவை அழைத்தான்.
பெண்ணவள் திரும்பவே இல்லை. அவளது விசும்பல் சத்தம் மட்டும் மெதுவாக கேட்க, "இப்ப என்ன பாக்க போறியா இல்லையாடி?" அவனது அதட்டலில் கண்ணீரை துடைத்து விழி உயர்த்தினாள்.
மூக்கின் நுனி சிவந்து போயிருந்தது அவளது விழிகளை போல. "யார் என்ன சொன்னா?"
"யூனிபார்ம் போடாம வந்துட்டேன்னு கவிதா மேம் திட்டுனாங்க"
"ரொம்ப ஹார்ஷா பேசுனாங்களா?"
தலையை ஆட்டினாள், "நான் கெளம்பவா சார்?"
அவனோ அவளை விடும் எண்ணத்திலே இல்லை, "முகத்தை வாஷ் பண்ணிட்டு வா"
"இல்ல அவங்க..."
"போனு சொல்றேன்" அழுத்தமாக கூறி குறைக்கவும் அவன் கூறியதை செய்து வந்தாள்.
அர்ஜுன் இந்நேரம் அந்த பெண்ணின் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை பரிசோதித்துக்கொண்டிருக்க, இவள் வந்ததும் மீண்டும் அந்த மூத்த செவிலியர், "இலக்கியா நீ போ வி கேன்..."
அவரை பேச விடாமல், "இலக்கியா ரிப்போர்ட்ஸ்" அவளிடம் நேரடியாக கேட்டிருந்தான்.
அவ்விடத்தில் உள்ளவர்களுக்கு அவனின் இச்செயல் பெருத்த அதிர்ச்சியாக இருந்தது.
இது போன்ற சமயங்களில் அதிகம் இவ்விடத்தில் கோவத்தை காட்டுவது அவனாக தான் இருக்கும், அவன் கோவத்திற்கு பயந்தே அவர் இலக்கியாவை விரட்ட பார்க்க இங்கு நடப்பதோ வேறு.
பிறகு அவளை இவ்வுடையிலே வா என இழுத்து வந்ததே அவள் கணவன் தானே. அவர்களுக்கு அது எங்கே தெரிய போகிறது?
அர்ஜுன் கேட்டதை வேகமாக அவன் கையில் ஒப்படைத்து அவனுக்கு வலது பக்கம் வந்து நின்றுகொண்டாள். இதை கவனித்த கவிதா முகத்தை தூக்கி வைத்து அவளை அப்பொழுது புறக்கணித்தார்.
அவ்விடத்தில் அப்பொழுது நுழைந்திருந்தனர் பானுவும் மற்றொரு மருத்துவர் செல்வராஜன் என்னும் நரம்பியல் மருத்துவர் அர்ஜுனுக்கு உதவ.
உள்ளே வந்த பானு மருமகளை பார்த்து கண்ணாலே சிரிக்க, பெண்ணும் மென்மையாக சிரித்தாள். அர்ஜுன் அன்னையை கூட கவனிக்கவில்லை, அவனது கவனம் முழுதும் அந்த கர்பிணி பெண்ணின் மருத்துவ அறிக்கையிலே இருந்தது.
அவ்விடத்தையே சூழ்ந்திருந்த பதற்றமான நிசப்தத்தை நிறைத்திருந்தது இயந்திரங்களில் சப்தம் மட்டுமே.
"சிவியர் இன்ட்ராகார்னியல் ப்ளீடிங். சப்ட்யூறல் ஹெமோடோமா. இவங்க மூளை ஏற்கனவே வீங்க ஆரமிச்சிடுச்சு" என்றான் அர்ஜுன்.
செல்வராஜன், "பேபி கண்டிஷன்?"
பானு, "பேபிக்கு இப்போ வர எந்த பிரச்னையும் இல்ல செல்வா"
"அவங்க ஏற்கனவே 34 வீக்ஸ். இந்த ப்ளீடிங் எதுவும் பாதிப்பை?" இலக்கியா தயங்கி கேட்க,
பானுவும், "சி-செக்ஷன் பண்ணிடலாமா அர்ஜுன்?"
"இல்ல ம்மா, இந்த மாதிரி சிச்சுவேஷன்ல சைல்ட் விட மதர் ஹெல்த் தான் ப்ரியாரிடைஸ் பன்னனனும். பேபி கண்டிஷன் மோசமா இருந்தா மட்டும் தான் அந்த ஆப்ஷன் போவோம். இங்க பேபி நார்மல் சோ பர்ஸ்ட் மதர் பிரஷர் ரிலீஸ் பண்ணனும்"
இலக்கியாவின் கைகள் அவள் பிடித்திருந்த ஸ்கால்பெல் மேல் அழுத்தம் கூடியது. அவள் பார்வையோ குழந்தையின் இதய துடிப்பில் மட்டுமே நிலைத்திருந்தது.
"பேபி ஹார்ட் பீட் ஏற இறங்க இருக்குது சார்" இலக்கியா தகவல் கொடுக்க வேகமாக வேலைகள் துவங்கியது.
"ராஜன் டிகம்ப்ரசிவ் க்ரேனியக்டமி பண்ணுங்க. எவ்ளோ வேகமா பிரஷர் கம்மி பண்ண முடியுமோ பண்ணனும்" செல்வராஜன் அவனுக்கு கொடுத்த வேலையை செவ்வனே செய்து முடிக்க பிறகு பொறுப்பை அர்ஜுன் கையில் எடுத்துக்கொண்டான்.
"ரெண்டு பேரையும் காப்பாத்திட முடியும்ல?"
தலை ஆட்டினான், "உறுதியா சொல்ல முடியாது. போராடனும்" என்றவன் கையில் அவள் ஒப்படைத்த ஸ்கால்பெல் வந்து அமர ஆழமான கீறல் ஒன்றை விட்டு அவ்விடத்தையே முற்றிலும் அமைதியாக்கினான் அர்ஜுன்.
"ஹெமோடோமா இன்னும் ப்ளீட் ஆகிட்டே தான் இருக்கு. இதுவே நடந்தா ரெண்டு பேரையும் காப்பாத்த முடியாது. போர்ஸப்ஸ்" அவன் கேட்டதை அவள் நீட்ட, அதனை பயன்படுத்தி மீண்டும் கொடுத்தான்.
"சக்ஸன்" இவ்வாறே அவனுக்கு தேவையானதை அவன் கேட்கும் முன்பே எடுத்து இலக்கியா கொடுக்க, முதல் முறை இருவரது புரிதலையும் அந்த அறுவை சிகிச்சையில் பார்த்தார்.
இலக்கியா கருவிகளை எடுத்து கொடுக்கும், வைக்கும் 'க்ளிங் க்ளிங்' என்னும் சத்தங்களும் தான் அவ்விடத்தை நிறைத்திருந்தது.
பெண்ணவளின் விழிகள் அடிக்கடி குழந்தையின் இதயத்துடிப்பை பார்த்துக்கொண்டே தான் இருந்தது.
"ICPய மானிடர் பண்ணிட்டே இரு. கொஞ்சம் அதிகமானாலும் சொல்லு" இலக்கியா தலை அசைத்து சம்மதித்தாள்.
அறுவை சிகிச்சை மேலும் தொடர்ந்தது. பார்த்து நிதானமாக செய்ய வேண்டிய சிகிச்சை. வெளியே தாய்க்கு மட்டுமே முக்கியத்துவம் என கூறினாலும் உள்ளுக்குள் இரண்டு உயிர்களையும் ஏற்பாடு பட்டாவது காப்பற்றிவிட வேண்டும் என்கிற ஒரு எண்ணம் தான் அவனுக்கு.
மூளையின் மெல்லிய சதையை கிழிக்கும் பொழுது புருவங்கள் மத்தியில் உருவாகிய வியர்வை துளியை கவனித்த இலக்கியா வேகமாக அவனுக்கு இடையூறு விளைவிக்காமல் துடைத்துவிட்டாள்.
அவளது இறகை போலான வருடல் அர்ஜுனுக்கு வேலையில் தடையில்லாமல் முன்னேற வைத்தது.
"ICP அதிகமாகுது சார்..." இலக்கியா அவசர செய்தியை குரலில் பதட்டம் இல்லாமல் கொடுக்க, அர்ஜுனிடம் சிறிதும் பதட்டம் இல்லை.
வார்த்தை அழுத்தமாக அதே நேரம் மெலிதாக வந்தது, "ஃபோர்செப்ஸ்" ஃபோர்செப்ஸை அவளது கைகள் வேகமாக கொடுத்தது.
அறை எங்கும் பதற்றமான காற்று வீச, அர்ஜுன் சிறிதும் தன்னுடைய கவனத்தை திசைதிருப்பவில்லை. துல்லியமாக, நுணுக்கமாக வேலை பார்த்த கைகளின் சிறு சிறு அசைவில் அவன் பார்வையும் அந்த நோயாளியின் சிரத்தை விட்டு அகலவில்லை.
"புடிச்சாச்சு. ப்ளீடிங் கிளாம்ப் பண்ண போறேன்" கசிந்த ரத்தத்தின் வேகம் மெல்ல மெல்ல குறைந்து கட்டுக்குள் வர, அறையிலிருந்த பாதி பேருக்கு பெருமூச்சு வந்தது.
"பேபி ஹெர்ட்பீட் லோ ஆகுது சார்"
"நான் தான் சொன்னேனே மதர்ஸ் லைப் இஸ் இம்பார்டென்ட் ஃபார் மீ. அவங்க பிரைன் ஸ்டேபிள் ஆகுற வரை வேற எதை பத்தியும் எனக்கு கவலை இல்லை"
பற்களை படித்து அவன் கூறியதில் மறுத்து பேச தயங்கினாலும் தலை அசைத்து சம்மதித்தாள். அர்ஜுன் விரல்கள் அறுவை சிகிச்சையின் முக்கிய பகுதியை தொடர்ந்து முடித்து, "இன்னைக்கு எந்த உயிரும் போகாது" அமைதியான அந்த அறையில் அவளுக்காக அவன் கூறிய ஆறுதல் அனைவருக்குமே கேட்டது.
ரத்த கசிவை முற்றிலுமாக கட்டுப்படுத்தியவன் குழந்தை மற்றும் தாய் இருவரின் நிலையம் நிலையாகி விட்டது என்பதை உறுதி செய்த பிறகே தன்னுடைய கையுறைகளை அவிழ்த்தான்.
இலக்கியா அவன் கொடுத்த கருவியை வாங்கி வைக்க, ஆபரேஷன் டெஸ்க்கை விட்டு பெருமூச்சோடு விலகி நின்றான்.
"ஆள் தி பெஸ்ட் கைஸ். மதர் அண்ட் சைல்ட் ரெண்டு பேருமே சேப்" இலக்கியாவின் கண்கள் மென்மையடைந்து கணவனை நிதானமாக வருடியது.
அறையிலுள்ளவர்கள் அவனது நிதானத்திற்கு பாராட்டி கைகள் தட்ட, பானுவுக்கு மகனை நினைத்து பெருமிதத்தில் சிரிப்போடு நிறைவையும் வந்தது.
"நீ குழந்தையை விட்ருவியோனு நினைச்சேன் அர்ஜுன்"
"சுச்சுவேஷன் அப்டி ம்மா. சின்ன மிஸ்டேக் வந்தாலும் ரெண்டு பேரையும் நாம இழந்திருப்போம்" என்றவன் , "செல்வராஜன் கேன் யூ?"
"நான் ஸ்கேல்ப்ப கிளோஸ் பண்ணிறீன் சார்" என்றான் அவனே வேகமாக.
உரைகளை அவிழ்த்து வைத்தவன் குறிப்பேட்டில் தேவையான தகவல்களை நிரப்பி, "இவங்கள ஐ.சி.யுல வச்சே வாட்ச் பண்ணுங்க. ICP கொஞ்சம் மாறினாலும் யோசிக்காம உடனே எனக்கு இன்போர்ம் பண்ணனும்" அவன் கூறியதை குறிப்பெடுத்துக்கொண்டாள் இலக்கியா.
"மாம் நியோனாட்டாலஜிஸ்ட் வர சொல்லி பேபி கண்டிஷன் கம்ப்ளீட்டா செக் பண்ணிடுங்க"
"சரி அர்ஜுன்" என்றார் மேலோட்டமாக குழந்தையின் அசைவுகளை சோதித்து.
"அடுத்த டுவல்வ் ஹௌர்ஸ்க்கு ஒன் ஹௌர்க்கு ஒரு தடவ மானிடர் பண்ணிட்டே இருக்கனும்"
அதையும் அவள் குறிப்பெடுப்பதை பார்த்தவன் இரண்டு எட்டு வைத்து மீண்டும் நின்றான், "இன்னைக்கு நைட் இன்னொரு சி.டி ஸ்கேன் எடுத்துடுங்க, வீக்கம் கண்ட்ரோல்ல இருக்கானு செக் பண்ணனும். நான் இல்லனாலும் டியூட்டி டாக்டர் யார் வந்தாலும் செக் பண்ணிட்டு எனக்கு ரிப்போர்ட் மெயில் பண்ணிடுங்க"
இலக்கியா, "ஓகே சார். அவங்க பேமிலிக்கு..."
அர்ஜுன், "சொல்லிடு. ஆனா எதுக்கும் ரொம்ப நம்பிக்கை குடுக்க வேணாம். அடுத்த 24 ஹௌர்ஸ் க்ரூஷியல் தான். அப்றம் இன்னைக்கு லீவு கேட்ருந்தல? வீட்டுக்கு கிளம்பு" அங்கிருந்த அனைவரின் காதிலும் விழும்படி.
'நான் எப்போ கேட்டேன்?' புரியாமல் விழித்தவள் அங்கு முடிக்க வேண்டிய சில வேலைகளை முடித்து அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் தகவலையும் கொடுத்து அர்ஜுனிடம் வந்தாள்.
அவன் அறைக்கு வந்தால், "இப்ப தான் சார் கிளம்புனார் இலக்கியா. நீங்க வந்தா உங்களையும் வீட்டுக்கு கிளம்ப சொன்னார்"
'ஏற்கனவே ஒரு நாள் லீவ் போச்சு. இப்போ இன்னொரு நாள். யாரை கேட்டு போக சொல்றார்? நானா கேட்டேன் இவர்கிட்ட லீவ் தாங்கனு வந்து? ஐநூறு ரூபா போய்டும். ச்ச இந்த மனுசன வச்சுக்குட்டு'
கணவனை பாரபட்சம் பார்க்காமல் திட்டிக்கொண்டே வந்தவளுக்கு ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது.
ஏதோ சிந்தனையில் இருந்தவள் அழைப்பை ஏற்று காதில் வைக்க, "திட்டுனது போதும், உனக்கு ரைட் சைட்ல தான் நிக்கிறேன் வா" அழைத்திருந்தது அர்ஜுன் தான்.
அவனோடு வாதாட பல இருந்தும் இதற்கு வாதாட பிடிக்காமல் அமைதியாக வந்து பின்னே கதவினை திறக்க, "நான் உனக்கு என்ன டிரைவர்ரா, முன்னாடி வா" அவனே எக்கி கதவை திறந்துவிட முகத்தை தூக்கி வைத்து வந்தமர்ந்தாள்.
மீண்டும் நீண்ட நெடிய அமைதியான பயணம். நேற்று இரவில் இருந்தே சற்று மேகமூட்டமாக தான் வானம் தென்பட்டது.
ஆலம்பரை கோட்டை. சிதைந்த நிலையிலிருந்த அந்த கோட்டை கடற்கரை அருகே, சென்னையை விட்டு ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் அமையப்பட்டிருக்கும்.
இவ்விடத்திற்கு இலக்கியா இது வரை வந்ததே இல்லை. அர்ஜுனோடு இவளும் வர, மணலில் இருவரும் அமர்ந்துவிட்டனர். இலக்கியாவிற்கு சற்று பயமாக தான் இருந்தது.
அதிகம் ஆட்களே இல்லை. அதிகம் என்ன, ஆட்களே இல்லை. இவ்விடத்திருக்கெல்லாம் வர பல முறை அவள் தந்தையிடம் இலக்கியா கேட்டது உண்டு.
ஆனால் அவர் இவ்விடத்தின் கூட்டத்தை பற்றி யோசனையில் அனுப்பியது இல்லை. இன்று இங்கு வந்தும் பயம் மனதெங்கும் வியாபித்து போனது. அடிக்கடி சுற்றத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளது பதற்றத்தை உணர்ந்தவன், "எதுக்கு இப்டி பயப்பிடுற? உன் கை எப்படி நடுங்குது பார்" அவளது விரல்களை சுட்டிக்காட்டி அர்ஜுன் தன் பக்கம் அவள் கவனத்தை ஈர்த்தான்.
குனிந்து தன்னுடைய விரல்களை பார்த்தாள், இந்த அளவிற்கு பயந்துள்ளது இப்பொழுது தான் புரிந்தது. கைகள் இரண்டையும் பின்னிக்கொண்டு முன்னிருந்த கடலை வெறிக்க துவங்கினாள்.
"ஏன் எப்ப பாரு பீச் பக்கமே வர்றிங்க?"
"என்ன உன்ன கொன்னு இந்த கடல்ல தூக்கி போட்டுடுவேன்னு நினைச்சியா?" விழிகள் இரண்டும் விரிந்து அவளை காட்டிக்கொடுக்க சிரித்துவிட்டான் அர்ஜுன்.
"அடி பாவி. அப்டி தான் நினைச்சியா?" அவளையும் மீறி பெண்ணின் தலை ஆடியது.
"ரைட்டு..." அர்ஜுனும் அதே அமைதியோடு அவளே ஏதாவது பேசுகிறாளா பார்ப்போம் என அவளுக்கான நேரத்தை கொடுத்தான். அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகியது. அவள் பேசுவதாய் தெரியவில்லை.
"எதுக்கு இப்டி இருக்க?" மூச்சை இழுத்து விட்டவள் உடனே பேசவில்லை, இன்னும் சிந்தனையில் மூழ்கியிருக்க அவளது தோள்கள் கூட விறைப்பாக இருந்தது இந்த குளுமையான காற்றிலும்.
அவள் நேற்றைய வார்த்தை காற்றில் வந்து உரசி செல்ல அர்ஜுன் கைகள் அவளை தன் தோள் வைத்து தீண்டி சீண்டினான். அவன் தீண்டவும் தான் அவளது சோர்வான பார்வை நீங்கியது.
"ஹாஸ்பிடல்ல இருந்து வந்ததுல இருந்தே நீ சரியில்ல"
"இன்னைக்கு நடந்த இன்சிடென்ட் ரொம்ப சென்சிடிவ். மதர் நார்மல் ஆகி பேபிக்கு ஏதாவது ஆகிருந்தா யோசிக்க கூட முடியல"
"இந்த பீல்ட்ல இதுக்கெல்லாம் மென்டல்லி தயாராகிட்டு தான் வரணும். கண்டிப்பா ஒரு வகைல நம்மள இதெல்லாம் குழப்ப தான் செய்யும். ஆனா கடந்து வந்து தானே ஆகணும்" தலை அசைத்து ஆமோதித்தாள்.
"இருந்தாலும் இவ்ளோ எமோஷன் ஆகிட்டு அங்க ஆபரேஷன் தியேட்டர்ல ரொம்ப நார்மலா இருந்த?"
அதை நினைக்கையிலே அவள் உடல் இன்னும் விறைத்தது, "ரொம்ப கஷ்டமா தான் இருந்தது"
"அவ்ளோ ஈசி இல்ல, எனக்கு புரியிது. ஆனா நான் பாத்த நர்ஸ்ல நீ ரொம்பவே எமோஷ்னலி ஸ்ட்ராங் தான், சில பேரால இந்த சிச்சுவேஷனை ஹாண்டில் பண்ண முடியாது. சில நேரம் நீயும் டயர்டா பீல் பண்ணலாம். தப்பில்ல"
இலக்கியா மெல்லிய புன்னகையோடு அவனது பாராட்டை ஆமோதித்தாள், தன்னுடைய அழுத்தத்தை இன்னும் உள்ளேயே அடக்கி வைத்து.
இருந்தும் லேசான கிண்டல் பார்வையோடு, "என்ன பெட்டரா பீல் பண்ண வைக்க தான் இந்த பாராட்டா?"
விளையாட்டின் பளபளப்பு அவன் கண்ணில் மின்ன சிரிப்போடு, "இது வேலை செய்யிது. இல்ல?" பெண்ணவள் மென்மையாக சிரித்தாள், கொஞ்சம் பதற்றம் தணிந்தவளாக.
"சரி ஹாஸ்பிடல்ல அந்த நர்ஸ் உன்ன என்ன சொன்னாங்க?"
முகம் மீண்டும் சூம்பியது அர்ஜுன் மனைவிக்கு, "நான் இதுவரை இப்டி வந்ததே இல்ல சார். எப்பவும் என்னோட லாக்கர்ல கூட ஒரு ஸ்பேர் டிரஸ் வச்சிருப்பேன். இன்னைக்கு கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டாங்க. என் ஹாஸ்பிடல்லா, என் அப்பா ஹாஸ்பிடல்லா அப்டி இப்டினு"
தன்னை பற்றி பேசியதை விட அவள் தந்தையை பற்றி பேசியதை தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை இலக்கியாவால். அதை நினைக்கும் பொழுது இப்பொழுது கூட அழுகை வந்தது.
"சும்மா விட்டு வந்தியா?" அவளது அப்போதைய அழுகையின் காரணம் இப்பொழுது புரிந்தது.
"அவங்க என்னோட சீனியர் சார். அவங்கள பகைச்சிட்டு என்னால அங்க ஒர்க் பண்ண முடியாது"
"என்கிட்ட மட்டும் எப்படி சண்டைக்கு வர்ற? நம்மள பத்தி கூட ரெண்டு வார்த்தை பேச விட்டுடலாம், ஆனா நம்ம பேரண்டஸ் பத்தி ஒரு வார்த்தை தெரியாம கூட பேச விட கூடாது. நான் ஸ்கூல் படிக்கிறப்போ, என்ன டென்த் படிச்சிருப்பேன்.
'இவன் அம்மா யாரையாவது கொன்னு கூட இவனை டாக்டர் ஆகிடுவாங்க'னு சொன்னான். அவ்ளோ தான் அவன் வாய் உடையிற அளவு அடிச்சு வந்தேன்"
"ஐயோ... இவ்ளோ ஆக்ரோஷமா?"
"அதுவே ரொம்ப கம்மி. டீச்சர்ஸ்க்கு தெரிஞ்சு ரொம்ப பெரிய பிரச்னையாகிடுச்சு. இல்லனா கழுத்தை உடைச்சிருப்பேன்"
"சிவ சிவா..." பயத்திலே அவனை விட்டு சில இன்ச் தள்ளி அமர்ந்துகொண்டாள்.
"நீ ஏன்டி தள்ளி போற? நான் என்ன உன்னையா அடிக்க போறேன்?" என்றவன் தன்னுடைய சட்டையிலிருந்த கடலைமிட்டாய் ஒன்றை மனைவியிடம் நீட்டினான். வாங்கியவள் அவனுக்கும் கொடுத்து தானும் உண்டாள்.
"நம்மள பத்தி பேச யாருக்கும் இடம் குடுக்க கூடாது இலக்கியா. எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் பதில் குடுக்காம இனி வராத. சுய கௌரவத்தை மட்டும் எந்த நிலையையும் விட கூடாது. அப்டி அதை விட்டு கிடைக்கிற எதுவும் தேவையும் இல்ல" அர்ஜுன் பேச்சை அமைதியாக கேட்டுக்கொண்டவள் தலை அசைத்து ஏற்றுக்கொண்டாள்.
"கிளம்பலாமா? தூக்கம் வருது" வீட்டிற்கு வரும் வழியிலே ஒரு உணவகத்தில் நிறுத்தி இருவரும் காலை உணவை புறக்கணித்து மதிய உணவை முடித்து தான் இல்லம் வந்தனர்.
கொடியில் சிக்கிய பறவையாய் தவித்து துடித்து வந்தவளுக்கு சிறிது ஆசுவாசம் கிடைத்தது அவனோடு நடந்த சிறு உரையாடலுக்கு.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro