🚘வேட்டைக்காரி 🚘
ஹாய்..
என் பேரு.. இல்லை.. அது தேவையில்லை..
என்னை பத்தி சொல்லனும்னா நான் எங்க வீட்டுக்கு மூத்த பொண்ணு.. எனக்கு ஒரு தங்கை இருக்குறா.. அவ +2 படிக்கிறா..
நான் இப்போ தான் டிங்ரி முடிச்சேன்..
எனக்கு என்கேஞ்மென்ட் ஆகி சந்தோஷமா தான் இருந்தேன்..
ஒரு நிமிஷம் வெய்ட் பன்னுங்க..
🚘
ஹான்.. அங்க ஒருத்தன் டிப் டாப்பா நிக்கிரான்..
ஒரு வேலை எங்கையாவது போக வெய்ட் பன்றாங்களோனு நினைச்சிட்டு அவன் கிட்ட போய் "என்ன சார் லிஃப்ட் வேணுமானு" கேட்டேன்..
அவன்,. "நோ தேங்க்ஸ்"னு திரும்பிட்டான்..
மனசுக்குள்ள சிரிச்சிக்கிட்டேன்..
ஏன்னு கேக்குறீங்களா??
ஒரு அழகான பொண்ணு இந்த நடு இராத்திரில ஆளு நடமாட்டம் இல்லாத இடத்தில லிஃப்ட் வேணுமானு கேட்டும் டீசென்ட்டா திரும்பிக்கிட்டானே.. ரொம்ப நல்லவன் தான்..
சரி.. நாம்ம கார் ஸ்டார்ட் பன்னுவோம்னு கிளம்பிட்டேன்🚘..
ஹான்.. எதோட விட்டேன்.. 😴😴
ஆஆஆ.. என்கேஞ்மென்ட் ஆகிருச்சி..
அதுக்கப்புரம் நல்லா தான் போச்சி..
ஆனா, சந்தோஷத்துல எல்லோருக்கும் உடம்பு வைக்கும்.. எனக்கு மட்டும் குறைய ஆரம்பிச்சிச்சி..
நானே ஆச்சரியம் படுற அளவுக்கு குறைய ஆரம்பிச்சிச்சி..
அப்புறம கொஞ்ச நாள்க்குளையே என் உடம்பு வலிக்க ஆரம்பிச்சி தோல்ல எரிச்சல், அரிப்புனு வர ஆரம்பிச்சிச்சி..
இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் தெரியாம நான் ஹாஸ்ப்பிட்டல்ல ச்செக் அப் பன்ன போனேன்.. ஹ்ம்ம்ம்..
ஸ்ஸ்ஸ்ஸ்.. தலை வலிக்குது.. கொஞ்ச நேரம் கார்ர ஸ்டாப் பன்னிட்டு சாயலாம்னு கார்க்கு உள்ளையே படுத்தேன்..
செம்ம தூக்கம்.. நல்லா கண்ணை சொக்கும் போது ஏதோ சத்தம் கேட்டு முழிச்சிட்டேன்..
காரை சுத்தி மூணு பசங்க.. நல்ல குடிச்சிட்டு நிண்ணாங்க.. அதுல ஒருத்தன் லிஃப்ட்னு கேட்கவும் நான் டோர ஓப்பன் பன்னேன்..
அவன் என் கைய பிடிச்சு இழுத்துட்டான்..
என் மனசுல ஏதோ பட்டிச்சி..
முறைச்சி பார்த்து கையை பின்வாங்கிகிட்டேன்..
அவுங்க மூணு பேரு.. நான் ஒருத்தி.. ஆளு நடமாட்டம் இல்லாத காட்டு பகுதி..
அவுங்க எண்ணம் எனக்கு புரிஞ்சிருச்சி..
காட்டுக்குள்ளே இழுத்துட்டு போனானுங்க..
அவுனுங்களுக்கு என்னை இரையாக்குனாங்க..
நான் மயக்க நிலைல இருக்கும் போது.. "போய்ட்டு வரவா செல்லக்குட்டினு கேட்டானுங்க".. ஹாஹா.. "உங்க தப்புக்கு தண்டனை கிடைச்சிருச்சினு சொன்னேன்"
"என்ன"னு புரியாம சிரிச்சவங்க.. நான் சொன்னதை கேட்டதும் அதிர்ச்சியாகிட்டாங்க..
ஏதோதோ பயம் அவுங்க கண்ல தெரிஞ்சிச்சி..
நான் குரோதமா சிரிச்சிட்டு.. ஒழிஞ்சீங்க டா னு சொன்னேன்..
கொஞ்ச நேரத்துல நான் கார்ரை எடுத்துட்டு கிளம்புனேன்..
😯😯😯டாக்டர் ச்செக் பன்னிட்டு என்ன ப்ராப்ளம்னு சொன்னாங்க..
அதை கேட்டுட்டு என்ன செய்ரதுனு எனக்கு புரியலை..
எதுனால?? என்ன?? ஏது??னு தெரியல..
ரிசல்ட்ட வாங்கிட்டு வீட்டுக்கு போனேன்..
கல்யாண வேலை நடக்குது.. ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ குடுத்து வைக்கல.. என்ன செய்ய னு புரியல.. விஷயம் தெரிஞ்சா எல்லோருக்கும் கஷ்டம்.. எனக்கு அடுத்து தங்கச்சி இருக்குறானு யோசிச்சிட்டு இருந்தேன்..
அப்போ,. அப்பா டி.வி பார்த்துட்டு இருந்தாங்க..
ச்சே.. என்ன இது.. எந்த ச்சேனல் வைச்சாலும் பலாத்காரம், பலாத்காரம்னு வருது.. பொண்ணுங்களுக்கு சேஃப் இல்லை, பச்சை குழந்தைக்கு கூடனு புலம்பிட்டு இருந்தாங்க..
நானும் நியூஸ் பார்த்தேன்..
உன்மை தான்,.
பொள்ளாச்சி, கோயம்பத்தூர், காரைக்குடி, சேலம், இராமநாதபுரம்னு அடுக்கிட்டே போகலாம்.. இப்படி போச்சி.. இந்த நாடு.. சாரி.. உலகமேனு சொல்லலாமோ.. ப்ச்ச்.. அதை விடுங்க..
இதுக்கு இவனுங்களுக்கு எவ்வளவு தண்டனை குடுத்தாலும் அது கம்மி தான்னு நினைச்சேன்..
அப்போ எனக்கு மனசுல ஒன்னு பட்டிச்சி..
நான் ஒரு முடிவெடித்தேன்..
"எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை, நான் காதலிச்சவனோட இந்த ஊரை விட்டு போறேன்.. மன்னிக்கவும்" னு எழுதி வைச்சிட்டு எனக்கு தேவையான திங்க்ஸ எடுத்துட்டு போய்ட்டேன்..
என்னை பத்தி சொல்லி என்னை பெத்தவங்கள கஷ்டப்படுத்த விரும்பலை.. சிறு கோவம் வந்தாலும் நான் எங்கையாவது நல்லா இருப்பேனு நினைப்பாங்களே.. அது போதும்னு கிளம்பிட்டேன்..
இவ்வளவு தான்..
இப்போ இப்படி 🚘 சுத்திட்டு இருக்கேனா அதுக்கு காரணம்.. என் இணம்.. என் இணம் மட்டும் தான்.. என் இணத்துக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்..
என் இணத்துல யாரும் கஷ்டப்பட கூடாது.. இதுக்கு அப்புறம் எந்த பொண்ணுங்களுக்கும் எவனும் ப்ரச்சனை தர நினைக்க கூடாது..
இன்னொரு தடவை பெண் கற்பழிப்புனு எந்த ஒரு பத்திரிகையிலையும், ச்சேனலையும் வர கூடாது..
அதுக்கு தான் நான் தனியா நிண்ணு போராடுறேன்..
முட்டாள் பசங்க.. அவனுங்க என்னை இரையாக்கிட்டாங்களாம்.. ஹாஹா..
எனக்கு தான் அவனுங்க இரையானாங்க..
எப்படினு பார்க்குறீங்களா??
இதோ அந்த ரிசல்ட்..
"HIV positive"
இதை அவனுங்க கிட்ட சொன்னது கூட தண்டனை அவுங்களோடவே போகட்டும்னு தான்..
நான் ஒரு கெட்டவனையும் விட மாட்டேன்..
நான் ஒருத்தி அழிஞ்சி மத்த பொண்ணுங்க லைஃப்ப சேஃப் பன்னுவேன்..
ஏய்ட்ஸ் னதும் நான் மூலைல உட்கார்ந்து அழுவலே..
கெட்டவங்களை அழிக்க கடவுள் எனக்கு குடுத்த வழினு நினைச்சி என் வேட்டைய ஆரம்பிச்சேன்..
காலைல வேலைக்கு போனாலும்.. ஈவ்னிங் மேல இப்படி ட்ரைவ் பன்னுவேன்.. ஊர் ஊரா போவேன்.. இது வரை முப்பத்து நான்கு பொருக்கிங்களுக்கு தண்டனை குடுத்திக்குறேன்..
இனியும் குடுப்பேன்..
தப்பு நடக்குற இடத்துல நான் வந்து தண்டனை குடுப்பேன்..
இதுக்காகவே அந்த கடவுள் எனக்கு நீண்ட ஆயுளை தரனும்னு வேண்டிக்குவேன்..
என் வேண்டுதல் நிறைவேராதுனு தெரிஞ்சும்..
ஆமா,. அங்க என்ன சலசலப்புனு 🚘காரை ட்ரைவ் பன்னிட்டு போனேன்..
இரண்டு பசங்க தள்ளாடியபடி என் காரை நோக்கி வந்தாங்க..
நான் குரோதத்துடன் பார்த்தேன்..
வேட்டைக்காரியின் வேட்டை தொடரும்..
முற்றும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro