🌚4🌚
பரபரப்பான நகரங்களில் ஒன்றான சென்னை நகரம் அன்றும் தன் பரபரப்பை வெளிக்காட்டிக்கொண்டிருந்த காலை நேரம் அது.
அந்த இளங்காலை வெயிலில் பதினைந்து மாடிகளைக்கொண்ட அந்த கம்பீரமான கட்டிடத்தில் வெள்ளி நிறத்தினால் ஆன பெரிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த "என். ஆர் குறூப் ஒப் கம்பனி" என்ற பெயர் மிகவும் பிரகாசமாக மின்னிக்கொண்டிருந்தது.
உரிமையாளர் யார் என்பதை பலர் இதுவரை அறிந்திராத ஒரு புகழ்பெற்ற கம்பெனி.
அந்த கட்டிடத்தின் எட்டாவது தளத்தில் ஒரு புறம் இருப்பவர்கள் கொஞ்சம் கலவரத்தை தத்தெடுத்த முகத்துடன் அமர்ந்திருந்தனர்.
அதற்கு காரணம் அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த நேர்முகப்பரீட்சையே ஆகும். அங்கு தான் நம் நாயகியான ரிதுர்ஷிகாவும் அமர்ந்திருக்கிறாள். வழமையான அதே பயந்த மனநிலையுடன் தனக்கு தெரிந்த ஜெபங்களை யாரும் அறியா வண்ணம் உச்சரித்தபடி அமரந்துகொண்டிருந்தாள்.
ஏதோ ஒரு யோசனையோடு யதேர்ச்சையாக தனது வலதுபக்கம் திரும்பியவளின் கண்கள் தானாக கலங்க கைகள் ஆட்டம் போட ஆரம்பித்தன.
அதற்கு காரணம் அவளுக்கு பக்கத்தில் காலியாக இருந்த இருக்கையை நோக்கிய வண்ணம் ஒரு ஆண்மகன் வேகநடையுடன் வந்துகொண்டிருந்ததே ஆகும்.
பெண்கள் மாத்திரம் இருக்கும் ஒரு வரிசையாக பார்த்து அமர்ந்திருந்தவளின் அருகில் இருந்த இருக்கையை நோக்கியே அந்த ஆண் வந்து கொண்டிருந்தான்.
தன் தடுமாற்றத்தை மறைக்க கண்களை இருகமூடிக்கொள்ளலாம் என்று பார்த்தவள், எங்கே கண்ணீர் வழிந்து தன் பலவீனம் வெளிப்பட்டு விடுமோ என்ற யோசனையில் பார்வையை ஒரு நிலையில் வைத்துக்கொண்டு தன் கையில் இருந்த கோப்பை இறுகப்பற்றிக்கொண்டாள்.
"ஹாய்"
என்ற அழைப்பில் ஒரு நிமிடம் குழம்பிப்போனாள் ரிதூ.
அதற்கு காரணம், கேட்டதுவோ பெண் குரல்.
தன்னை ஓரளவு சமன் செய்துகொண்டவள் முகத்தில் ஒருவாறு புன்னகையை பரப்பிக்கொள்ள முயற்சிக்கவே அது பயனில்லாமல் போனது. எவ்வாறோ மெதுவாக தன் பக்கத்தில் வந்தமர்ந்தவரிடம் திரும்பியவள்,
"ஹாய்"
என்று சொல்லும்போதே கண்களில் இவ்வளவு நேரம் தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தின் வழியே வழிந்தது.
இவளுக்கு பக்கத்தில் வந்தமர்ந்தவளோ இவளைக் கண்டு ஒரு நிமிடம் திடுக்கிட்டாள். பின் ஏதோ புரிந்தவளாக அவளது பார்வை கீழ்நோக்கிச் சென்று ரிதுர்ஷிகாவின் கைகளில் போய் நிலைத்தது.
ரிதுர்ஷிகாவின் கைகள் இரண்டும் நடுங்கிக்கொண்டிருக்க இப்பொழுதும் கண்களில் இருந்து கண்ணீர் விடாமல் வழிந்து கொண்டிருந்தது.
பக்கத்தில் அமர்ந்தவளின் பார்வை நொடியில் ரிதுர்ஷிகாவின் முகத்தை ஆராய்ந்தது.
சுற்றும் முற்றும் பார்த்தவளின் கண்களில் அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்த சிசிடிவி கமெரா சிக்கியது. உடனடியாக ஏதோ யோசனைக்கு சென்றவள்,
சட்டென்று ரிதுர்ஷிகாவின் கையை சிறிது அழுத்திப்பிடித்து இவள் உணரும் முன்னே இவளை இழுத்துக்கொண்டு லிஃப்ட்டை நோக்கி நடக்கலானாள்.
எதிரே வந்த ஆண் மகன் ஒருவன் யாரென்று தெரியாத இந்த புதியவளை நோக்கி முறுவளித்து,
"மேடம்"
என்று அழைக்க அவனுக்கு பார்வையாலே ஏதோ கூறியவள் ஒரு கையால் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் ரிதுர்ஷிகாவை பிடித்துக்கொண்டும் இன்னொரு கையால் தனது கையடக்கத்தொலைபேசியில் மின்னல் வேகத்தில் எதையோ தட்டிக்கொண்டும் இருந்தாள்.
இதை எதனையும் உணரும் நிலையில் இல்லாத ரிதூவின் மனதில் இப்பொழுது இருப்பது எல்லாம் தனக்கு இந்த வேலை கிடைக்காது என்ற எண்ணவோட்டம் தான்.
தான் இப்போது இருக்கும் மனநிலைக்கு பேசாமல் திரும்பி சென்று விடலாம் என்று யோசனையில் மூழ்கியிருந்தவள்,
பெயரே தெரியாத அந்த பெண்ணின்
"இப்டி உட்காருடா"
என்ற மென்மையான குரலில் சுயநினைவுக்கு வந்தாள்.
புதியவளைப்பார்த்து திருதிருவென முழித்தவள் அப்போது முதன்முதலாக தன் இயலாமையுடனான பயந்த சுபாவத்தை எண்ணி மிகவும் வருந்தினாள்.
ரிதுர்ஷிகாவின் முகத்தையே ஆராய்ச்சிப் பார்வையோடு பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண்ணிற்கு ஓரளவு இவளின் மனநிலையை புரிந்துக்கொள்ளக்கூடியதாக இருக்கவே, எதிரே அமர்ந்திருந்தவள் இவளுக்கு பக்கத்தில் வந்தமர்ந்து இவளது தோளை ஆதரவாகப் பற்றித்திருப்பி தன்னை காணச்செய்து ரிதுர்ஷிகாவின் கண்ணில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரையும் துடைத்து தான் ஓடர் செய்திருந்த குளிர்பானத்தையும் பருகச்செய்தாள்.
இவள் பருகும் வரை பொறுமையாக இவளையே பார்த்துக்கொண்டிருந்தவளின் கண்கள் இவளது முகத்தில் ஆழ்ந்திருந்தது.
"ஆர் யூ ஓகே.
ஹாஸ்பிடல் போலாமா? இல்லாட்டி ஏதாவது மெடிசீன் போட்டுக்கிறியா?"
அவளது அன்பில் நெகிழ்ந்தவள், நெகிழ்வுடன் அந்த பெண்ணைப் பார்த்து.
"ஐம் ஓகே அண்ட் சாரி"
என்றாள்.
ரிதூவைப் பார்த்து புன்னகைத்தவள்,
"எதுக்கு சாரி"
"இல்ல...
உங்களையும் சேர்த்து டிஸ்டெர்ப் பண்ணிட்டேன்.
ரியலி சாரி"
"இட்ஸ் ஓகே அதனால ஒண்ணுமே ஆகல இல்ல...
ஸோ நோ வொரிஸ் பா."
சிறிது இடைவெளி விட்டவள்
"உன் பெயரு?"
ஒருமையில் இவளோடு பேசத் தொடங்கியிருந்தாள் புதியவள்.
"ரிதுர்ஷிகா"
"ஓஓஹ் நைஸ் நேம். உங்கள மாதிரியே."
புன்னகை மாறாமல் கூறினாள் அவள். அவளின் பதிலில் கபடமற்ற தன்மையை ரிதுர்ஷிகாவால் புரிந்துகொள்ள முடிந்தது.
தான் இருக்கும் மனநிலையில் கஷ்டப்பட்டு புன்னகைத்தவள்,
"தேங்க்யூ. உங்க நேம்?"
"ஐம் நிருஷனா. யூ கென் கால் மீ நிரு...
வாங்க போங்கன்னு எல்லாம் என்ன கூப்பிடாத பா. சும்மா வா போன்னே பேசு. இனிமே நாங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் ஓகே. ஸோ நோ கூச்சம் நோ பயம். சும்மா பேசு ரைட்.
நான் கொஞ்சம் வாயாடி தான் ஆனாலும் நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்ன?"
புதியவளின் அதிரடி சரவெடிப் பேச்சில் நிருஷனாவைப் பார்த்து விழித்தாள் ரிதுர்ஷிகா. இதுவரை இல்லத்தில் இருப்பவர்களை தவிர யாருமே அவளிடம் இவ்வாறு பேசியதும் இல்லை அக்கறையாக நடந்துகொண்டதுமில்லை. யாரென்றே தெரியாத ஒருத்தி தான் குழப்பமான மனநிலையோடு இருக்கும் போது தன்னை இங்கே இழுத்துக்கொண்டு வந்து தன்னை ஆசுவாசப்படுத்தி இனி தொடர்ந்து நண்பிகளாக இருப்போம் என்று வேறு சொல்கிறாள் என்று இவளுக்கு உண்மையிலே ஆச்சரியமாகத் தான் இருந்தது.
அதேவேளை இதுவரை புரிந்திராத ஒரு மகிழ்ச்சி அவளது மனதை வருடிச்சென்றது. அதே நேரம் இவள் போல் நானும் இருந்தால் தன்னாலும் ஒருவரோடு இவ்வாறு பழக முடிந்தால், என்ற எண்ணம் தோன்றி ஏதோ ஒரு வெறுமை தன்னை சூழ்ந்திருப்பதுபோல் வினாடியில் உணர்ந்தவள் தன்னை உடனே மீட்டுக்கொண்டு,
"கண்டிப்பாங்க"
"என்னப்பா நீ. ங்க பங்கன்னு சொல்லிட்டு...
சரி நிருன்னு சொல்லு. அப்போ தான் நா ஒத்துக்குவேன்."
கேலியுடன் கூடிய கண்டிப்புடன் கூறினாள் நிரு.
"ம்ம்ம் சரி" என்று கூறி இப்பொழுது உண்மையாகவே சிரித்தாள் ரிதுர்ஷிகா.
"தட்ஸ் குட்...
போலாமா?"- நிரு
"ம்ம்ம்ம். இது எத்தனையாவது ப்ஃலோர்?" -ரிதூ
"சிக்ஸ்த் ப்ஃலோர் ரிதூ"
கட்டிடத்தின் ஆறாவது மாடியில் அந்த கம்பெனி நடத்தும் அவர்களது ஊழியர்களுக்கான ரெஸ்டாரண்டிற்கு ரிதுர்ஷிகாவை அழைத்து வந்திருந்தாள் நிரு.
ரிதுர்ஷிகாவின் கண்ணீருக்கும் நடுக்கத்திற்கும் ஏதோ ஒரு உடல் உபாதை தான் காரணம் என ஆரம்பத்தில் எண்ணினாள் நிரு. ஆனால் அவளது நடவடிக்கைகளை இக்குறுகிய இடைவெளியில் கண்காணித்தே இந்த கொஞ்ச கால இடைவெளியில் ரிதூ வின் நிலையை ஓரளவு கண்டுகொண்டாள் அவள்.
ஓடர் செய்த பானத்தை எடுத்துக்கொண்டு வந்த அந்த நபரைக்கண்டதும் இவளது முகம் போன போக்கை வைத்தும் ஏதோ ஒரு குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை அறிந்துகொண்டாள் நிரு.
இவளைப் பார்த்ததும் பிடித்துப்போன நிருவிற்கு இவளைப் பற்றி அறிந்து இவளது மனோநிலையை மாற்ற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஆனால் இவள் யார்? இவளது கடந்தகாலம் என்ன? இவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்பன தொடர்பாக எதுவும் தெரியாமல் இருக்க, யாரிடம் இவளைப் பற்றி அறிந்துகொள்வது என்ற விடயங்கள் எல்லாம் இப்போதைக்கு புதிராக நிருவுக்கு தோன்ற இவளை தன் தோழியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
இயல்பிலேயே பார்ப்பவரோடு நட்புப் பாராட்டும் இயல்பு கொண்டவள் நிரு. அவளுக்கு நேர்மாரானவள் தான் ரிதுர்ஷிகா.
இன்று கிடைத்திருக்கும் நட்பின் ஊடாக ரிதூவின் வாழ்வில் மாற்றம் ஏற்படுமேயானால் அது நமக்கு பெரும் வெற்றி ஆகும். அவ்வாறான ஒரு மாற்றம் ஏற்படுமேயானால் அதில் முதல் சந்தோஷப்படுவது விஜய்யும் தர்ஷினியும் ஆகும்.
அதே போல் ரிதுர்ஷிகாவின் வாழ்வில் மாற்றம் இன்னொருவருக்கும் முக்கியம் ஆகும்.
யார் அது?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro