பாகம் -44
காலைபொழுது கடந்துக்கொண்டே இருக்க ,சமையல் ஆரம்பிக்கும் முன் பூஜையரையில் விளக்கேற்றி சாமிக்கும்பிட்டு இருந்த நர்மதாவை பின்னாடியே வந்து கண்ணை பொத்தினான் அவளுடைய மகன் அவினாஷ். ஊட்டி கான்வர்ண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு அங்கேயே போட்டோகிராபி கோர்ஸ் முடித்துவிட்டு சினிமா துரையில் வேலைத்தேட தற்போது சென்னை வந்துள்ளான். அநன்யாவின் செல்ல தம்பி இவனே. அநன்யா இவனுக்கு இன்னொரு தாய் எனவும் கூறலாம்.
"ஏய்...அவி விடு டா...பூஜை பன்றப்போ என்ன இது கண்ணை பொத்துற பழக்கம் என்றவுடன் "மா நான் தான் னு எப்படி கண்டு பிடிச்ச ???என்று கேற்க "என் புள்ள கை எப்படி இருக்கும் னு தெரியாதா என்ன சரி சரி வா உக்காரு காபி தரேன் னு சொல்லி முடிப்பதற்குள் அநன்யா காபியுடன் வந்தாள்"அவினாஷ் செல்லம் ஏன் இவ்வளவு நாள் அக்காவை பார்க்க வரலை ????நம்ப வீட்டு கிரஹபிரவேசம் கூட நீ வரலை ரொம்ப மோசம் டா நீ.
"அக்கா நான் என்ன பன்றது இப்பதான் கோர்ஸ் முடிஞ்சது..இனி இங்க தான் இருக்கபோறன் சினிமால அய்யாவுக்கு வேலை தேட..😁
ம்மா இவன் பாரேன் மா சினிமா அதுஇதுனு வாழ்க்கை கெடுத்துக்க போறான் இங்க பாரு அப்பா கிட்ட சொல்லி ஸ்டுடியோ வச்சி தரசொல்றேன் .
நேரம் தற்போது 9.30 டிபன் சாப்பிட்டு விட்டு அநன்யா அவசரமாக கிளம்பினாள் "அவி வந்து மத்ததெல்லாம் பேசிக்கலாம் நீ ரெஸ்ட் எடு ..."அக்கா எங்க கிளம்பிட்ட???நான் வரவா???என்றவனை வேணாம் டா நான் அரசன் மாமாவை பார்க்க தான் கிளம்புறன் இன்னைக்கு டெல்லி கிளம்புறாரு .
ஓ...ஓகே போயிட்டுவா .
இவள் நேராக ரயில்வே நிலையத்தில் அவனுக்காக காத்திருக்க அரசன் லக்கேஜுடன் அங்கு வந்தான். "ஹாய் டி அநன்யா என்னை வழியனுப்ப வந்துருக்கியா??😊
ம்ம்ம் ஆமா ஏன் உங்கள் கூட யாரும் வரலையா வழியனுப்ப என்று அவள் கேட்டதுக்கு "அதான் நீ வந்துருக்கியே "
ஹாஹா சரி சரி இந்தா மாமா விபுதி கோவில்ல அர்ச்சனை பன்னிட்டு வந்தேன் நீ நல்லபடியா படிக்கனும் னு அதை எடுத்து வைத்துக்கொண்டவன் "என் மேல உனக்கு என்ன இவ்வளவு அக்கறை அநன்யா ????சரி உண்மையை சொல்லு நம்ப வீட்டில் பெரியவங்க நீயும் நானும் கல்யாணம் பன்னிக்கனும் சொல்றதுல உனக்கு உடன்பாடு இருக்கா????அவன் கேட்டதுக்கு மெளனமாக இருந்தவள் "மாமா ரயில் கிளம்ப போது ஏறு அப்புறம் பேசிக்கலாம் .
ஏய் இன்னும் அரைமணி நேரம் இருக்கு நீ முதல்ல உன் மனசுல என்ன இருக்கிறது சொல்லு. என்றவனை கண்களை நோக்கி"மாமா....பெரியவங்க சொல்றதை வச்சு இல்லை ,எனக்கே உங்க மேல கொள்ள பிரியம், நீ தான் வேணும்னு நான் நினைக்கல ஆனால் நீ என் கூட இருந்தா வாழ்க்கை சூப்பரா இருக்கும் நம்புறன். என் நம்பிக்கை யை காப்பாத்துவிய பதிவு சொல்லு?
சுத்தி வளைச்சு என்னை லவ் பன்றேனு சொல்லவர அதானே ???😁
அப்படியும் வச்சிக்கலாம் மாமா..ஹாஹா எது எப்படியோ நீ போய் உன்னோட படிப்பு முடிச்சு வா மத்தது பேசிக்கலாம். அப்புறம் அவினாஷ் வந்துருக்கான் ஊர்ல இருந்து.
அப்படியா எப்படி இருக்கான் அந்த வாண்டு😁
நல்லா இருக்கான்...மாமா ஏதோ சினிமாவில் சேரனும் அதுஇதுனு சொல்லிட்டு இருந்தான். பார்க்கலாம் .
ஓகே.. அநன்யா பை. என்று அவள் தலையை லேசாக ஆட்டி கண்ணத்தை தட்டிவிட்டு புரப்பட்டான் ...உங்க கூடவே நானும் வரவா என்ற ஏக்கத்துடன் அவனையே பார்த்து கை அசைக்க அவனோ இருக்கையில் அமர்ந்தபடி ஜன்னல் வழியே அவளை பார்த்துக்கொண்டு இருந்தான். "சாரி அநன்யா இன்னும் நீ என் மனசுல காதல் அப்படிங்கிற இடத்தை பிடிக்கல . என் மனசுல உன் மேல அப்படி ஒரு ஆசை வரும்போது கண்டிப்பாக உன்னை மிஸ் பன்னாமல் கண்டிப்பா கல்யாணம் பன்னிப்பேன் அதுவரை எனக்காக நீ காத்துட்டு இரு. நீ இருப்பனு நம்புறன். என்று மனதில் கூறிக்கொண்டு இருந்தான் சில நொடிகளில் மழைத்தூரல் வர ஜன்னல் கதவை சாத்திவிட்டு இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினான்.
தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro