பகுதி -40
தனுஷ் வீட்டில் வீராவை ஒப்படைத்து அவளின் மாமியார் போட்டு தந்த டீயினை குடித்துவிட்டு "அப்ப நான் கிளம்புறன் என்று விடைபெற்று கொண்டு தனது உயிருக்கு உயிரான நர்மதாவை காண சென்றான் அங்கு அவனுக்காக மீன் குழம்பு செய்து வைத்து காத்திருக்க அவனை கண்டதும் வந்துடிங்களா ஏங்க அன்னைக்கே வந்துருக்கனும் ப்ளைட் ஏன் மிஸ் பன்னிங்க னு கேற்க நடந்ததை அனைத்தும் அவளிடம் ஒப்புவிக்க நேரம் போனதே தெரியவில்லை.
🌼🌼🌼🌼🌼🌼
வீரா வா நம்ப ஒரு நல்ல கார்டியாலிஜிஸாட் பார்க்க போலாம். உன்னோட சிகிச்சை பத்தி பேசலாம். அதெல்லாம் ஒன்னும் வேணாம்ங்க எல்லாம் சரியாகிடும் என்றவளை மெல்ல அவள் தோளில் கை போட்டு "எனக்கு நீ வேணும் வீரா மறுபடியும் எல்லா பிரச்சினை தாண்டி ஒரு புது வாழ்க்கை வாழனும். இங்க பாரு என்கூட டாக்டர் கிட்ட வா...போய் என்னனு பாத்துட்டு வருவோம். டாக்டரிடம் அவளை அழைத்து செல்ல அங்கு பரிசோதனை நடந்தது "சார் உங்க மனைவிக்கு மன இருக்கம்னால ஏற்பட்ட ஒரு சின்ன அட்டாக் மாதிரி மாத்திரை ல குணபடுத்தலாம் ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் மன அழுத்தம் இருக்ககூடாது. நீங்க தான் பார்த்துக்கனும். குழந்தையோட நிறையா நேரம் செலவிட சொல்லுங்கள்... அப்புறம் எங்கயாவது கூட்டு போங்க கோவில் ஸ்தலம் அந்த மாதிரி அல்லது இயற்கை சார்ந்த இடங்கள் கூட்டு போங்க.....
சரிங்க டாக்டர் அப்படியே செய்றன். என்று கூறிவிட்டு வெளியே வரும்போது "என்னங்க என்று வீரா அழைக்க சொல்லு வீரா என்னடா என்று அன்பாக அவன் அரவணைக்க "ஐ..லவ் யூ தனுஷ்...என்று புன்னகையிக்க..
என்ன??? ..
ம்ம்ம் yes.லவ் யூ ஸோ மச்
என்னடி திடிருனு??😊ஆனால் உன் வாயால கேக்குறப்ப ரொம்ப ஹேப்பி ஆமா நான் குடுத்த டைரி படிச்சியா மலேசிய ல இருக்கிறப்ப???
படிச்சேன் புரிஞ்சிக்கிட்டன் எல்லாமே. ஆமா என் தனுஷ் என்னை எவ்வளவு லவ் பன்னாருனு...😁
ஹாஹா
🌼🌼🌼🌼🌼🌼🌼
சக்தி -முருகேஷ் இருவரும் நவினை சந்திக்க வந்தனர் குழந்தையை பார்த்து விட்டு செல்ல அப்போது நர்மதா அவர்களிடம் "அண்ணி பிற்காலத்தில் என் பொன்னை உங்கள் பையனுக்கு கட்டிபேலா??😊என்று ஆசையாய் கேற்க சக்தி அதை அப்படியே ஆமோதிக்க நவினும் முருகேஷும் தலையசைக்க அங்கிருந்த கிழவன் கிழவியும் அதை ஆசிர்வதிக்க அந்த நாள் மிகவும் சந்தோஷமாக இருந்தது இரண்டு தம்பதியருக்கும்.
(வேகமாக மாதங்கள் பல கடந்தன)
வீராவை ஒரு நல்ல சூழலில் வாழவைக்க விரும்பிய தனுஷ் ecr இல் ஒரு நல்ல இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் ஒரு வில்லா வாங்கினான். பால்கனியிலிருந்து எட்டிபார்த்தால் கடல் தெரியும் . வீட்டுக்கு வெளியே வந்தாள் ரோஜா தோட்டம் என பல கோடி செலவில் வீட்டை வாங்கினான் இதெல்லாம் எப்படி???தனது பூர்வீக சொத்தை விற்றான் தந்தை அனுமதியோடு பிறகு தாயின் நகை மற்றவைக்கு கடன் வங்கியில் இப்படி எல்லாம் சேர்த்து அந்த அழகான வில்லாவை வாங்கினான். தனது மகள் அகல்யா மனைவி வீரா தாய் தந்தை என அழகான சிறிய குடும்பமாக அந்த வில்லாவில் வலம் வந்தனர். தற்போது வீராவின் மனநிலை மாறியது உடல் தேறியது மாத்திரை மருந்து குறைந்தது . இவளது மனதில் தற்போது தனுஷ் மற்றும் அகல்யாவின் சிந்தனை தவிற எதுவும் பெரிதாக அவள் கருதவில்லை.
.....நவின் அதே வீட்டில் அந்த வயதான கிழவன் கிழவி மட்டும் தன் மனைவி குழந்தை என போதுமான அளவு சம்பாதித்து நால்வரையும் காப்பாற்றுகிறான். சொந்த வீடு வாங்கும் கனவு அவன் மனதிலும் தத்தளித்தது. ஆனால் அலுவலகத்தில் கூடிய சீக்கிரம் அங்கு பணிபுரியும் ஆட்களுக்கு குடியிருப்பு கட்டி தருவதாக அவரது முதலாளி சொல்லவே ...அந்த கனவை தற்போது கனவாகவே வைத்துள்ளான். இன்னுமும் நர்மதா இருந்த ஆஷ்ரமத்தில் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு தினமும் திண்பண்டங்கள் வாங்கி தருகிறான்.
......முடிவுற்றது.....
Moral : யாருக்கு யார் என்பது இறைவன் முடிவு செய்தவை ஆம் வீராவுக்கு தனுஷ் என்றும் நவினுக்கு நர்மதா என்றும் இறைவன் போட்ட முடிச்சு. இப்படிதான் நிஜவாழ்விலும் அவரவருக்கு இன்னார் என்று இறைவன் முடிவு செய்கிறார். அதுமட்டுமின்றி சக்தி -முருகேஷ் போன்ற மறுமணம் செய்துகொள்பவர்களும் சந்தோஷமாக தான் வாழ்கின்றனர்.
இன்னொரு விஷயம் உலகில் யாருமே அநாதை இல்லை நவின் அந்த வயதான தம்பதியரை தத்தெடுத்த மாதிரி ஒவ்வொரு மனிதனும் ஒரு ஆதரவற்றவரை தத்தெடுத்தால் உலகில் ஆஷ்ரமங்கள் தேவைப்படாது. இது தான் இக்கதையில் நீங்க பார்த்த விஷயங்கள்.
இந்த கதைக்கு லவ் குரு என்று பெயர் வைத்ததுக்கு காரணம் கதாநாயகி அந்நிகழ்ச்சியை விரும்பி கேற்பாள்😁அதாங்க நம்ப கதாபாத்திரம் வீரா.
சரி சரி உங்கள் விமர்சனம் வரவேற்கபடுகிறது.
இக்கதை அடுத்த தலைமுறையை வைத்து தொடரலாமா வேண்டாமானு நீங்களே சொல்லுங்க அதாவது அகல்யா ,அப்புறம் சக்தி மகன் அரசன் அப்புறம் நம்ப நவினின் மகள் . இவங்களை வைத்து கதை தொடரலாமா வேணாமா னு எனக்கு தெரியனும். இந்த கதையை ரசித்து படித்த உங்கள் அனைவருக்கும் நன்றி.
Thanks to all my readers .
Unga ellarum names nyabagam iruku 😁unga comments enaku romba pidichiruku . Unga votes ku romba happy😁😁😁🌼🌼🌼
Story next generation vechu start panradha irundha பகுதி -41 ல இருந்து ஆரம்பிக்கனும். ஆனால் கதை கரு புதியதாக இருக்கும். ஆனால் ஒரு தொடர்ச்சியாக தான் இருக்கும். கேரக்டர் பெயர் எல்லாம் அதே தான் ...கதையின் கருத்து தான் வேற ஏனெனில் 40 update la moral solliten la so after 41 la irundu moral vera mari irukum.
Ok take care everyone.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro