பகுதி -37
மாதங்கள் கடந்தன :
அன்று சண்டை வந்த நாள் முதல் தனுஷ் அவளிடம் சரியாக பேசுவதில்லை குழந்தை யை கொஞ்சுவதிலும் அக்கறை இல்லை ஒரு மாதிரி மௌனம் சாமியார் மாதிரி அமைதியாக இருக்கவே இவளுக்கு கடுப்பாகி போக "வாக் இன் இன்டர்வியூ "பேப்பரில் இருப்பதை கண்டு வெளிநாட்டு வேலை ஒன்றில் சேர்ந்தாள் . அங்கு இருக்கும் ஒரு கட்டிட நிறுவனம் ஒன்றில் கணக்காளர் வேலை மலேசியாவில் வேலை என்பதால் சம்பளம் அவள் செய்யும் வேலைக்கு எக்கசக்கமாக அளிக்கும். எனவே குழந்தையை மாமியாரிடம் ஒப்படைத்து தான் மலேசியா சென்றுவிட முடிவு செய்தாள் ஏர்போர்ட்டில் அவளை வழியனுப்ப மட்டும் தனுஷ் வந்தான்.
"வீரா...நல்லா முடிவு பன்னி தான் கிளம்புறியா???,இப்ப இந்த வேலை தேவை தானா????
ஹாஹா(ஏளன சிரிப்புடன்)என்ன பன்ன சொல்றீங்க தனுஷ் ????இப்படி யே மத்தவங்க நினைச்சு எவ்வளவு நாள் வாழமுடியும் அதான் என் கரியர் ல கான்சன்ட்ரேட் பன்னலாம் னு கிளம்பிட்டன்.
ஓ....நீ சொல்ற அந்த மத்தவங்க யாரு தெரிஞ்சிக்கலாமா என்று தனுஷ் கேற்க "நீங்க தான் வேற யார்??? நான் என்னமோ பெரிய தப்பு பன்னிடவளாட்டும் உங்கள் பின்னாடி கெஞ்சுறதும் நீங்க மூஞ்சியை திருப்புறதும். சரியில்லை.
நான் வெளிப்படையாக சொல்றன் வீரா நீ நவினோட வெச்சிருக்க ப்ரண்டிஷிப் எனக்கு பல தருணங்களில் பொஸஸிவ் ஏற்பட்டுருக்கு அதெல்லாம் உனக்கு சொல்லி புரகயவைக்க முடியாது எப்ப பாரு அவன் என்ன பன்னான் எங்க இருக்கான் இப்படியெல்லாம் நீ யோசிக்கிறது தேவை இல்லை னு தோனுது அதான் என்றவனை ஏறிட்டு பார்த்து "சரி அப்ப நான் கிளம்பட்டுமா போர்டிங் க்கு நேரம் ஆகுது என்றவளை அவன் ஏறிட்டு பார்க்க இருவரும் கண்களும் ஏக்கத்துடன் பார்த்தன கடைசியாக அவள் "அகல்யா மட்டும் கொஞ்சம் பாத்துக்கங்க என்று கூறிவிட்டு திரும்பிபார்க்காமல் செல்ல இவனோ ..
வீரா...
வீரா என்று கத்திக்கொண்டு செல்ல அவனை திரும்பி பார்த்தவள் புருவம் உயர்த்தி என்ன என்று கேற்க "உனக்கு நான் கொடுக்கனும் னு நினைச்ச சர்ப்ரைஸ் இதோ இந்த டைரி தான். ஆமாம் எனக்கு முன்பிலிருந்து டைரி எழுதுற பழக்கம் இருந்துருக்கு. இந்த டைரி நான் படிக்க படிக்க பழைய ஞாபகம் வந்துட்டு....என்னை பழைய தனுஷா மாத்தினது இந்த டைரி தான் டி...இந்தா நேரம் இருக்கிறப்ப படி...பை டேக் கேர்.
🌼🌼🌼🌼🌼🌼
மாதங்கள் கடந்த நிலையில் நர்மதா ஒரு பெண் குழந்தையை ஈன்று எடுக்க அக்குழந்தையை தாத்தா பாட்டி யே பராமரிக்க நர்மதாவை தன் வீட்டு பிள்ளைபோல் பார்க்க நவின் நர்மதா வாழ்க்கை இந்த ஆதரவற்ற முதியோருடனே நாட்கள் கழிந்தது சரியாக ஜோதிடர் சொன்ன நாள் இன்றோடு முடிகிறது . இந்நிலையில் இதுவரை தனுக்கு எந்த பிரச்சினை யும் வராத நிலையில் இனி என்ன வரப்போகும் என்று தனக்கு தானே சொல்லி சிரித்து விட்டு ஆபிஸ்...கிளம்பினான். ஆபிஸ் வந்தடைய அங்கு அவனுடைய உயர் அதிகாரிகள் அவனை அழைத்து
"டேக் யுவர் சீட் மிஸ்டர் உங்களுக்கு ஒரு குட் நியூஸ் நம்ப கம்பெனி கிளை புதிதாய் மலேசியாவில் ஆரம்பிக்கிறோம். அங்கு திறப்பு விழாவில் கலந்துகொள்ள உங்களுக்கும் வாய்ப்பு உள்ளது எனவே எங்களோடு நீங்களும் நாளைக்கு வரிங்க என்ன ஓகே தானே...
சார்....என வாயை பிளந்தான் "இந்த வாய்ப்பை யாரவது வேணானு சொல்லுவாங்களா சார்...வரேன் சார் பாஸ்போர்ட் எல்லாம் இருக்கிறது சார்😁
ஹாஹா.... ஓகே நவின் போய் வேலை கவனிங்க இப்போதைக்கு . இதை சொல்ல தான் இப்ப கூப்பிட்டன். என்றவுடன் "ஓகே சார் லெட் மீ லீவ் "என்று தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தான். "ஏண்டா ஜோசியரே என் பொன்னு பிறந்த நேரம் எனக்கு வெளிநாடு போக வாய்ப்பு கிடைச்சிருக்கு என்னமோ பெரிய பீலா விட்டு குடும்பத்தில் குழப்பம் உண்டு பன்னியே உனக்கு இருக்கு டா கச்சேரி என்று மனதில் திட்டியவாறு வேலை கவனித்தான்
தொடரும்
நவின் மற்றும் வீரா விரைவில் சந்திப்பார்கள் நம்புவோம் 😁
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro