பகுதி -27
வீராவின் மாமியார் தன் கணவரின் தோளில் சாய்ந்து கண்கலங்கினார் "என்னங்க என் மகன் நிக்க வேண்டிய இடத்தில் இப்போ நவின் நிக்கிறான் எனக்கு பார்க்க கஷ்டமா இருக்கு என்று அவளின் மனகுமறல் அவர் கேட்டு விட்டு "இங்க பாரு மா...எப்ப நம்ப புள்ளைய பறிகொடுத்தோமோ அப்பவே வீரா நமக்கு சொந்தமில்லை அவ நமக்கு ஒரு மகள் மாதிரி தான் மருமகள் இல்லை... அவளும் பாவம் இந்த இளம் வயதுல விதவையா இருக்கிறது எவ்வளவு கஷ்டம். இப்ப பாரு நவினை கட்டிட்டு மங்கலகரமான வாழ்க்கை வாழபோறா..வா பந்தி ல சாப்பிட்டு கிளம்பலாம்.
ஒருபக்கம் சக்தி முருகேஷிடம்"எனக்கு என்னமோ இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைங்க அன்னைக்கு ஜோதிடர் தனுஷ் இன்னும் உயிரோட இருக்கானு சொன்னாரு அப்படி னா தனுஷ் திரும்பி வருவார் ங்க.......
"ஏய் வாயை மூடு என் தங்கச்சி முகத்தில் இப்ப தான் நான் சிரிப்பே பாக்குறன்...நவின் தான் அவளுக்கு பொறுத்தமான தேர்வு அவ அவனோட வாழட்டும் தீர்காயிசா"
வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது மறுநாள் முஹூர்த்தம் வரவேற்பு முடிந்து நவினை பார்ட்டி ஹாலில் உள்ள மொட்டை மாடியில் சந்திக்க "நவின்.... என்ன டா ஒரு மாதிரி இருக்க....???😊
இல்லை.... என்னனு தெரியல மனசு ஒருமாதிரி இருக்கு..என்னை நர்மதா சுத்தி சுத்தி வந்தா அந்த பொன்னு மனசுல நான் முழுசா இருக்கேன் ,எனக்கு கல்யாணம் னு கேள்வி பட்டு அவ மனசு என்ன பாடுபடுமோ நினைச்சாலே கஷ்டமா இருக்கிறது.
இங்க பாரு டா நவீன் நானே மனசு பூர கனவுகளோட உன்னை கைபிடிக்க போறன் ,என் மகள் அகல்யா இனிமே நம்ப பொன்னு புதுசா மூனு பேரும் ஒரு அழகான வாழ்க்கை யை வாழ போறோம் இப்ப போய் இப்படி முகத்தை வச்சிகிட்டு இருந்தா நல்லாவா இருக்கும். நாளைக்கு காலை ல முஹுர்த்தம் . எழுந்து தயார் ஆகனும் போய் படு.
தூக்கம் வரலை டி...
ம்ம்ம் ச்ச..இவன் மூட் மாத்தனுமே எப்படியாவது என்ன செய்யலாம். ம்ம்ம்..... டேய் நவின் வழக்கம் போல ஒரு ஹக் தாயேன் என்றவுடன் அவளை அணைக்க வெடுக்கென்று அவன் கையை (வலது) தன் இடையில் அமர்த்தினாள். அவனோ நாளை முதல் தன்னவள் என்ற உரிமையுடன் அவளது இடையை தீண்ட அவனது மனம் தற்போது மெல்ல மோகத்தினால் மாறியது ,தனது தீண்டலை மெல்ல அவன் அதிகரிக்க அவளோ "இது என்னடா வம்பா போச்சு கொஞ்சம் விட்டா இங்கேயே பர்ஸ்ட் நைட் நடத்திருவான் போல என்று சட்டென்று விலகினாள்.
என்ன ஆச்சு வீரா ??
ஒன்னுல... சரி குட்நைட் போ தூங்கு. ம்ம்ம் சரி என்று படி இறங்கினான் அவளும் சிறிது நேரம் சிலு சிலு காற்றை ரசித்துவிட்டு கீழே இறங்கினாள். அங்கு தனது 6 மாத குழந்தையான அகல்யா கையை வாயில் வைத்தபடி உறங்கிகொண்டிருந்தது.. அதை ரசித்துவிட்டு உறக்கத்தை தழுவினாள்
.
🌸🌸🌸🌸🌸
அங்கு வெற்றி முகவரியை தேடி வர கதவு பூட்டி இருந்தது பக்கத்தில் இருந்தவர் "தம்பி யார் வேணும்??
அக்கா இங்க இருக்கிறவங்க எங்க ??வீடு பூட்டியிருக்கு.
அதுவா ஒரு கல்யாண வரவேற்பு க்கு போனாங்க வந்துருவாங்க வெயிட் பன்னு...என்றவுடன் அங்கேயே வாசலில் காத்துக்கொண்டு இருந்தான்.
சிறிது நேரத்தில் வயதான தம்பதி வண்டியில் இருந்து இறங்கினர்.
"தம்பி என்ன எங்க வீட்டு வாசல்ல காத்துட்டு இருக்க என்ன வேணும்???
அம்மா....என்று அழைத்தவுடன் அவனுடைய தாய் கண்கலங்கினார் "தம்பி நீ யாருன்னு தெரியல ஆனால் அம்மானு கூப்பிட்ட உடனே மனசு என்னமோ பன்னுது உள்ள வா தம்பி....
மா...மா....நான் தான் உன் புள்ள தனுஷ் ....கொடைக்கானல் ல நான் சாகல நடந்த விபத்தில் நான் மலையில் இருந்து தவறி விழுந்தது உண்மை தான் ஆனால் ஒரு மரக்கிளையில் சிக்கிட்டன் அதானால என் உயிருக்கு ஆபத்து வரலை மண்டைல தான் கொஞ்சம் அடி அதுல பழசு எல்லாம் மறந்துட்டு முகம் சேதம் அதான் ப்ளாஸ்டிக் சர்ஜரி பன்னி என் முகம் மாறிட்டு...என்ன மலையடிவாரத்தில் இருக்கும் வழிபோக்கர்கள் பார்த்து காப்பாற்றி ஹாஸ்பிட்டல சேர்த்தாங்க. இது தான் நடந்தது இது மட்டும் தான் எனக்கு ஞாபகத்தில் இருக்கும். இப்ப கூட நீ அப்பா எல்லாம் எனக்கு புதுசா தெரியிரிங்க ...ஆனால் நீங்க தான் அப்பா அம்மானு நான் நம்பி தான் ஆகனும் என் நிலமை அப்படி.
இதை பொறுமையாக கவனித்த தாயோ தன் மகனை மெல்ல கண்ணத்தை ஏந்தி அவனது முகத்தை வெறுத்து நோக்கினாள் "தனுஷ்...நீ மொத்தமா ஆளு மாறிட்ட ஆனாலும் நீ தான் என் மகன்னு நாங்களும் நம்புறோம் ...நீ என் மகன் தான்....
எ....ஏ...ஏய் இங்க பாரு டி கழுத்தில் மச்சம்... ஏ...ஏய் இவன் நம்ப புள்ள தான் டி ....இதுல எந்த சந்தேகமும் இல்லை என்று தந்தை உணர்ச்சி வசப்பட்டு சொல்ல ...அவனுடைய ஷர்ட் காலரை விலக்கி பார்க்க மச்சம் இருந்தது. தாய் தந்தையருக்கு மட்டுமே தெரியும் ஒரு குழந்தையின் அடையாளம் இதில் தனுஷ் பெற்றோர் மட்டும் விதிவிலக்கா என்ன???
சற்று சுதாரித்து டேய் தனுஷ் உனக்கு ஒரு மனைவி இருக்கா டா பெயர் வீரா....உ...உனக்கு ஒரு குழந்தை யும் இருக்கு பெயர் அகல்யா ....என்று கண்ணீர் மல்க சொல்ல... அவனோ தாயை அணைத்து "ம்மா...என்ன மா சொல்றிங்க எனக்கு னு மனைவி குழந்தை இருக்கா....ம்மா நான் அவங்களே பார்க்கனும் மா என்னை கூட்டு போங்க.....
அ...அவளுக்கு நாளைக்கு கல்யாணம் டா .அவளுடைய நண்பன் நவினோடு . இப்பவே போய் தடுத்தா தான் உண்டு வா போலாம். என்று பெற்றோர் அவனை அழைத்து கொண்டு வீரா இருக்கும் மண்டபத்துக்கு சென்றனர்.
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro