பகுதி -26
பழைய ஞாபகம் எதுவும் அவனிடமில்லை எவ்வளவு யோசித்தாலும் நினைவுக்கு எட்டவில்லை... வெற்றி என்று பெயர் கொண்டானே தவிற இன்னும் வாழ்வில் வெற்றியடையவில்லை...மனம் சோர்வு அடைந்து விட்டது. கடைசியாக ஒரே ஒரு முயற்சி தான். ஆம் தனக்கு விபத்து நடந்த காரின் எண்ணை வைத்து எந்த ஏரியாவில் இருந்து வந்தது அந்த கார் அப்படினா அவன் எந்த இடத்தல இருந்து வந்திருக்கிறான் என்று தெரிந்துகொள்ள முற்பட்டான். அந்த எண் தெளிவாக அந்த இடத்தை காட்டியது...அந்த இடத்தில் "வீரா ட்ராவல்ஸ்"என்று எழுதபடாடிருந்தது.அங்கு இருவர் வேலை செய்து கொண்டு இருக்க "எக்ஸ்கியூஸ் மீ...இந்த ட்ராவல்ஸ் யாருது???
சார்..இது தனுஷ் னு ஒருத்தர் நடத்துனாரு அவரு கொடைக்கானல் விபத்து ல உயிர் இழந்துட்டாராம் அதான் இந்த ட்ராவல்ஸ் இப்ப அவங்க அப்பா நடத்துராங்க....
எ...என்ன... சொல்றிங்க எனக்கு அப்பா இருக்காங்கலா???
யோவ் என்னையா உளர்ர உனக்கு அப்பாவா??நான் தனுஷ் சார் அப்பா பற்றி பேசுறன் போயா லூசு சிரியான மென்டலா இருப்பான் போல.
ஐயோ...சார் கொடைக்கானல் ல யாருக்கு விபத்து நடந்ததா சொல்றீங்களோ அவன் தான் நான்... நான் சாகலை இப்ப வெற்றி அப்படிங்கிற பெயர் ல புது மனிஷனா வந்துருக்கன்..அப்படி பார்த்தால் நீங்க சொல்ற அந்த தனுஷ் நான் நானே தான்...... ப்ளீஸ் எனக்கு அட்ரஸ் தாங்க நான் என் அப்பா அம்மாவை பார்க்கனும்.
சார்..தனுஷ் சார் நீங்களா அப்படினா என்னை உங்களுக்கு அடையாளம் தெரியலையா...சார்...என்ன ஆச்சு சார் உங்களுக்கு.. எனக்கு வேலை கொடுத்ததே நீங்க தான் சார்...அங்க பாருங்க நீங்க வழக்கமா அரட்டை அடிக்கும் பைக் மெக்கானிக் கடை...சார் எதுவுமே உங்களுக்கு ஞாபகம் இல்லையா....
இல்லை ....எனக்கு எதுவுமே ஞாபகம் வரலை ஆனால் நீங்க சொல்றதை நான் நம்புறன் . எனக்கு அட்ரஸ் தாங்க அப்பா அம்மாவை முதல்ல பார்க்கனும்.
🌸🌸🌸🌸🌸
அங்கு கோலாகலமாக வீரா - நவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துக்கொண்டிருந்தது. ஆம் வீரா சரின்னு சொன்ன இரண்டே நாளில் இந்த திருமண ஏற்பாடு வெகு விரைவாக நடந்தது. கதிர்வேலன் தன் மகளின் முதல் திருமணம் தான் ஏடாகுடமாக கடமைக்கு முடிந்தது அட்லீஸ்ட் நவினுடன் நடக்கும் இந்த கல்யாணத்தை ஆவது எல்லாருக்கும் தெரிவித்து நடக்கனும் என்று ஆசைப்பட வெகு விரைவாக ஏற்பாடு செய்தார். பக்கத்தில் இருந்த ஒரு பார்ட்டி ஹாலில் அலங்கரித்து மேடையில் நவினையும் வீராவையும் நிற்க வைத்து தடபுடலாக விருந்துடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதை கேள்விபட்ட நர்மதா மனமுடைந்து போக ,நாள் முழுக்க அழுதுகொண்டே இருந்தாள்.
சுற்றி இருந்த குழந்தைகள் நர்மதா அக்கா ஏன் அழறிங்க என்ன ஆச்சு என்று கேற்க "இனி நவின் உங்களையோ என்னையோ பார்க்க வரமாட்டாரு "என்று கதறி அழ அங்கிருந்த குழந்தைகள் அவளையே ஏக்கமாக பார்த்தன...
ஆமா வெற்றி மாமா எங்க போனாரு என்று ஒரு குழந்தை கேற்க "வெற்றி அண்ணணும் அவருடைய வாழ்க்கை யை தேடி போயிருக்கார் அவரும் இனி வரமாட்டாரு என்று அழ அந்த குழந்தைகளுக்கு எதுவும் புரியவில்லை.
பார்ப்போம் என்ன நடக்கிறது??
நவின் வீரா திருமணம் ஒருபக்கம்
நர்மதாவின் கண்ணீர் ஒருபக்கம்
வெற்றி என்கிற தனுஷின் வாழ்க்கை ஒருபக்கம்.
எது ஜெயிக்கும்??பொறுமையுடன் பார்ப்போம்.
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro