பகுதி -17
அன்று ஐந்தாம் மாதம் துவங்கியது வீராவுக்கு கர்பமாகி. வழக்கமாக ஐந்தாம் மாதம் தாய் வீட்டில் பூ முடிப்பது வழக்கம் நம்முடைய கலாச்சாரத்தில். எனவே சக்தி அவளுக்கு பூ முடிக்க ஏற்பாடு செய்தாள் இதை கண்ட வீரா...
"அண்ணி என்ன நடக்கிறது ...??? என்ன இங்க விசேஷம்??☺️
அதுவந்து உனக்கு பூ முடிக்கலானு இருக்கேன். அதான்.
இதெல்லாம் வேணாம் அண்ணி ...
இங்க பாரு இதெல்லாம் ஒரு வழக்கம் . உன் வயிற்றில் வளர்ர குழந்தைக்கு நல்லது டா மா...இங்க பாரு ஒன்னுல ஐந்து வகை சாப்பாடு செய்து . பெரியவர்கள் நாலு பேரு கூப்பிட்டு உனக்கு ஆசிர்வாதம் பன்ன சொல்லுவேன் அவ்வளவு தான். இந்த மாதிரி சூழலில் நிலங்கு வைக்க முடியாது உனக்கு அட்லீஸ்டு சிம்பிளா பன்னலாம் னு.....
சரி என்னமோ பன்னுங்க
கதிர்வேலன் - கண்ணாடி வளையல் போடுவாங்க மாசமா இருக்கிற பொன்னுங்க ஆனால் என் பொன்னுக்கு அந்த குடுப்பனை இல்லை என்று நொந்து கொண்டார்.
சக்தி - மாமா அதுக்கென்ன நான் தங்க வளையல் 4 செய்து வச்சிருக்கன் என் செல்லத்துக்கு . கண்ணாடி வளையல் இல்லைனா என்ன . தங்க வளையல் யார் வேணாலும் போடலாம்.
முருகேஷ் - சக்தி, உனக்கு ஏது தங்க வளையல் பன்றதுக்கு காசு😃
சக்தி - ஹாஹா.... என்னோட நெக்லஸ் போட்டு வளையல் வாங்கினேன்.
கதிர்வேலன் - அம்மாடி.... எனக்கு உன்னை பார்க்குறப்ப கடவுளை பார்க்குற மாதிரி இருக்கு. தாயி...நீ மருமக இல்லத்தா....என் குலசாமி.
ஐயோ மாமா... ஏன் பெரிய பெரிய வார்த்தை எல்லாம். விடுங்க மாமா வீரா யாரு என் நாத்தனார். இதெல்லாம் நான் செய்யாம யார் செய்வா??☺️
நவின் குறுகிட்டான் "அட ஆமா மாமா யாரும் இல்லாம அநாதை மாதிரி இருந்த எங்க இரண்டு பேருக்கும் இப்படி மாமன் மச்சான் நாத்தனார் னு உறவுகள் கிடைச்சுதே இதுக்கே நாங்க நன்றி கடன் பட்டுறுக்கோம்.
வீரா - டேய் நண்பா நீ ரொம்ப மெச்யூரா பேச ஆரம்பிச்சிட்ட னு அவன் தோளை தட்டி புன்னகையித்தாள். ரொம்ப நாள் கழித்து அவள் சிந்திய புன்னகை இதுவே.
சற்று அவளை அனைவரும் திரும்பி பார்த்தனர் "வீரா....நீ கொஞ்ச கொஞ்சமாக பழைய வீராவா மாறிட்டு வர என்று அனைவரும் ஆச்சரியபட"தன் உறவுகளுக்காக தன் கஷ்டத்தையும் மறந்து சிரிக்க துவங்கினாள் வீரா.
பூ முடிக்கும் நிகழ்ச்சி நடந்தது ....தேங்காய் சாதம் மாங்காய் சாதம் எலுமிச்சை சாதம் தயிர் சாதம் என்று வகையான உணவு பறிமாற பிறகு நாலு பெரியவர்கள் வந்து அட்சதை தூவி அவளை ஆசிர்வாதம் பன்னாங்க.
பிறகு சக்தி வீராவுக்கு தங்க வளையல் அணிவிக்க அதை வெறித்து நோக்கியபடி இருந்தாள் வீரா......
"என்ன வீரா என்றாள் சக்தி....
அண்ணி....உங்க மடியில கொஞ்ச நேரம் படுத்துக்கவா...
வா...இதென்ன கேள்வி.... படு.
.........
..........இதைகண்ட நவினுக்கு தான் ஒருமுறை அக்காவிடம் மடியில படுக்கவா என்று கேட்டது நினைவுக்கு வந்தது. அன்று நவினை குழந்தை போல் பாவித்தவள் இன்று வீராவை குழந்தை போல் பாவிக்கிறாள். சக்தி என்ற பெயரில் இவ்வீட்டுக்கு ஒரு தாய் கிடைத்துவிட்டாள்.
................
வீட்டில் எந்நேரமும் வீராவின் சோக கதையும் குடும்ப கதையுமாக இருப்பதால்,வெறுத்து போன நவின் கொஞ்ச நாள் தன்னுடைய நண்பன் தயாளன் வீட்டில் தங்கிட்டு வரலாம் என்று நினைத்தான். தயாளன் வீடு omr பகுதியில் இருக்க ..அவ்வீட்டுக்கு சென்றான்.....
தயாளன் - வா நண்பா காலேஜ் ல பார்த்தது உன்னை இப்ப தான் பாக்குறன்....மாம்..டேட் இதான் நவின். ஓகே டாட் நாங்க மாடிக்கு போறோம் . எங்களுக்கு டின்னர் மேல அனுப்பிடுங்க.
வாயில் ஒரு சிகிரெட் வைத்தபடி "சொல்லு மச்சான்.."என்றான் தயாளன்.
ஏய் தயா...என்னடா இது தம் பழக்கம் இருக்கா உனக்கு என்றான் நவின்.
ஏன் உனக்கு இல்லையா...😀😀😀
ம்ம்ம்... இருக்கிற பிலிங்ஸ் க்கு தண்ணியே அடிக்கனும் ஆனால் பழக்கம் இல்லை😢😢😢😢
ஹாஹா.... சரி இந்தா ஒரு தம் அடி எல்லாம் சரியாயிடும்.
அடிக்கலாங்குற ????
அடி மச்சான்ஸ்😃
நண்பர்கள் இருவரும் பழைய கதைகளை பேசிக்கொண்டு சிரித்தவன்னம் நேரத்தை கழித்தனர். ஒருநாள் இரவு பொழுதே கழிந்தது. மறுநாள் அவனுக்கு அழைப்பு வந்தது எதிர்முனையில் வீரா "ஏய் எங்க டா போன ????
எ...என்னோட ப்ரண்டு தயாளன் .
ஓ....அவனா...நம்ப கிளாஸ் தானே அவன்.. ஆமா அவன் வீட்டில் உனக்கு என்ன வேலை??☺️
ம்ம்ம் அது சரி மேடம் ஏன் இவ்வளவு விசாரிக்கிறிங்க ???நான் இல்லாமல் போர் அடிக்குதோ....!!!!
ஆமா...அப்படி தான் அதுக்கு என்ன இப்ப???☺️
ஒன்னுல தாயி....வரேன் மதியம்.
வா...வா....இன்னைக்கு நான் ஸ்கேன் எடுக்க போவேன் பேபி மூமண்டு காட்டுவாங்க டாக்டர்.... வந்து நீயும் பாரு.
நான்... பார்க்கனுமா....?? ஏய் என்னடி எனக்கு இவ்வளவு உரிமையா??😊
நண்பா....எனக்கு யார் டா இருக்கிறா..நீ...என் அண்ணா ,சக்தி அண்ணி...அப்பா ..நீங்க நாலு பேரு தான் என் உலகம் .
போனை வைத்துவிட்டு யோசித்தான் நவின்!!!! அவளுடைய சின்ன உலகில் நமக்கும் இடமிருக்கிறதா என்று.
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro