Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி -ஒ

நவின் என்னடா இது டைனிங் டேபிளில் வச்ச சாப்பாடு அப்படியே இருக்கு நீ மதியம் சாப்பிடலையா???என்று அக்காள் சக்தி கேற்க எதுவும் பேசாமல் தன் மொபைலையே பார்க்க அவன் தோளை உலுக்கி "தம்பி என்னடா கன்னு ஆச்சு என்று மீண்டும் வினவ...
"அக்கா உன் மடியில கொஞ்ச நேரம் படுக்கவா....

இது என்னடா கேள்வி படு....

அவள் மடியில படுத்தவன் "அக்கா இப்பொதெல்லாம் வாழ்க்கை வெறுமையாக இருக்கு நீயும் ஆபிஸ் போற...வீராவும் இல்லை.... எனக்கு தனிமை வாட்டி வதைக்குது அக்கா.....நான் கொஞ்ச நாள் பெங்களூர் போய் சித்தப்பா வீட்டில் தங்கிட்டு வரவா????☺️

அவன் தலையை கோதியவள் "டேய் கணணா...நவின் உனக்கு இங்கயே ஒரு வேலை பார்த்து வச்சுருக்கேன் அடுத்த ஞாயிறு இன்டர்வியூ ....இப்போ போய் பெங்களூர் போனால் நல்லாவா இருக்கும் ......ம்ம்ம்.

அப்படி இல்லை ...சரி அதை விடு அந்த முருகேஷ் எப்படி நல்லா பழகுறாரா??☺️

அ....அது வந்து உனக்கு எப்படி தெரியும்??😊

ஏய் லூசு அக்கா அந்த முருகேஷ் வேற யாருமில்லை நம்ப வீராவோட அண்ணன்.. ஹாஹா

அடப்பாவி 😀😀😀எனக்கு தெரியாது .

ஹாஹா சரி சரி லவ் எந்த ரூட்டில் போது...

டேய் தம்பி மாதிரி யா பேசுற....வாயை மூடு...

ஏன் கேட்டா...என்னவான்...ச்சி பே....தன் சோகத்தை மறந்து அக்காவை கலாய்த்து கொண்டு இருந்தான். நேரம் போனதே தெரியவில்லை. உறங்க சென்றவன் தன் அக்காவை பக்கத்தில் படுக்க சொல்லிவிட்டு அவள் மீது கால் போட்டு தூங்கினான்....அவனுடைய அக்கா அவனை குழந்தை போல் பாவித்து அவன் தலையை வருடினாள் "டேய் நவின் செல்லம்....கல்யாணம் ஆயிட்டு என் வாழ்க்கை எப்படி இருக்கபோது தெரியாது ஆனால் உன்னை எப்பவுமே விட்டு கொடுக்க மாட்டேன்.... வீரா மாதிரி ஒரு நல்ல பொன்னு உனக்கு மனைவியா வந்தா நல்லாருக்கும் ...நீ ரொம்ப நல்லவன் டா...உனக்கு எல்லாம் நல்லதே நடக்கும் செல்லம்....என்று அவன் நெற்றியில் முத்தமிட்டு தானும் உறங்கினாள். இடை இடையே முருகேஷிடமிருந்து மிஸ்டு கால் வந்தது......

க்ரிங்.....க்ரிங் னு இரண்டாவது ரிங்க் அட்டண்டு பன்னாங்க நம்ப சக்தி ...
"ஹலோ......சொல்லுங்க என்ன இந்த நேரத்தில்???☺️நானும் தம்பியும் தூங்கிட்டு இருந்தோம்.

ஒன்னுல நாளைக்கு உன்னை பெண் பார்க்க வரேன் அப்பாவையும் எங்க அத்தையையும் கூட்டிட்டு நாளைக்கு காலைல சரியாக பத்து மணிக்கு தயாரா இரு பட்டுபுடவை கட்டிட்டு தலை சீவி ஒழுங்காக இரு 😀😀😀

கண்ணை கசக்கியபடி விழித்தவள் "என்னங்க சொல்றீங்க...... நாளைக்கு பெண் பார்க்க வரிங்களா????அய்யோ இது என்ன திடிருனு....... சத்யாமா நான் எதிர்பாக்கல ....

ம்ம்ம் நம்ப என்ன காலேஜ் படிக்கிற பசங்களா ஐ லவ் யூ கிஸ் யூ னு ஆரம்பிக்க...ஹாஹா நேரடியாக கல்யாணம் தான்..... ஹாஹா என்ன ஓகேவா...இங்க பாரு சக்தி உன்னை எனக்கு பிடிச்சிருக்கு அம்புட்டு தான். உனக்கு வாழ்க்கை தர ஆசைபடுறன்...மறுபடியும் உன் வாழ்க்கை ல பூவும் பொட்டும் கொண்டு வர போறன்.....😀

எ....என்னங்க.......

என்ன சக்தி சொல்லு டா மா....😀

என் தம்பி...... என்னோட தம்பி யை விட்டு என்னால பிரிய இயலாது.. அதனால ....அவனும் நம்ப கூட வச்சிக்கலாம்னு.....

ஏய் சக்தி.. இது என்ன கேள்வி உன் தம்பி க்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுற வரைக்கும் நம்ப கூடவே இருக்கட்டும். எனக்கு ஒன்னும் கஷ்டமில்லை ஓகேவா....

ரொம்ப தாங்க்ஸ்...

உன் தாங்க்ஸ் எல்லாம் எனக்கு வேணாம்.be happy .

ஹாஹா... ஓகே...சரிங்க குட் நைட்.

ஏய்...ஏய்.....சக்தி நாளைக்கு உங்க வீட்டுக்கு வரப்ப அக்கம்பக்கத்தில் இருக்கிற நாலு பெரியவங்கல கூட்டு உக்கார வை சபையில் ஏனெனில் உனக்கு வீட்டில் பெரியவர்கள் யாருமில்லை ல அதான் தப்பா எடுத்துக்காத....

ம்ம்ம்..... இதுல என்ன இருக்கிறது விடுங்கள் நான் எதும் தப்பா எடுக்கல ஓகே ...பை.

மறுநாள் பொழுது மெல்ல விடிந்தது.... காலையில் எழுந்து வீடு சுத்தம் பன்னி வாசலில் கோலமிட்டு கொண்டிருந்த அக்காளை பார்த்து நவின் "அக்கா.. வாட் எ...சர்ப்ரைஸ்??😊 என்ன இன்னைக்கு விசேஷம் வீடெல்லாம் ஜொலிக்குது ....

வெட்கத்தில் தலை குனிந்து என்னை முருகேஷ் பெண் பார்க்க வராரு அதான்...

ஓ...ஓ...அப்படி போகுதா கதை.....வாவ் சூப்பர். அக்கா இன்னைக்கு மதியம் எனக்கு ஆனந்த பவன் ல ட்ரீட் ஓகேவா...

ஹாஹா சரி டா நீயும் குளிச்சிட்டு ரெடி ஆகு அவங்க வந்துருவாங்க...

ம்ம்ம் அக்கா...வீரா வருவாளா இன்னைக்கு???☺️முருகேஷ் தங்கச்சி தானே அவ...பெண் பார்க்க அவளும் வருவாளோ....

தெரியல...டா அதெல்லாம் முருகேஷ் சொல்ல ல...ஆமாம் எந்நேரமும் வீரா வீரா தானா உனக்கு ..இங்க பாரு கன்னு.. அவ நம்ப வீட்டில் இருந்த நாட்கள் அழகானது தான், ஒரு ஆதரவுக்காக கொஞ்ச நாள் நம்ப வீட்டில் இருந்தா....அதுக்காக வாழ்க்கை முழுவதும் அவ நம்ப கூட இருக்க முடியாது. அவளுக்கு புருஷன் குடும்பம் இருக்கிறது புரியுதா.....போ...போய் குளிச்சிட்டு வா...காபி தரேன்...

அ.....அக்கா.....என் வாழ்க்கை ல உண்மையான தோழி னா அது "நீ" தான் கா.....நீ இல்லாமல் என்னால வாழ முடியுமா தெரியல....எல்லாருக்கும் உன்னை மாதிரி அக்கா கிடைப்பாங்களா தெரியாது. என்னோட கஷ்டம் சுகம் எல்லாத்தையும் நீ தான் கா என் கூடவே இருக்கனும். இருப்பியா அக்கா என்று தன் அக்காளின் கையை பிடித்தபடி கேற்க "அவளும் அவன் கையை பிடித்தபடி "டேய் நவின் நான் எப்பவுமே உன் கூட இருப்பேன் டா...அம்மாக்கு அம்மாவா அக்காவுக்கு அக்காவா....தோழிக்கு தோழியா.....எப்பவுமே இருப்பேன்.......

நவின் கண்கள் கலங்கின......தன் தாய் தந்தை புகைப்படம் பார்த்து "மா...பா...எனக்குனு ஒரு தாயை அக்கா வடிவில் பரிசா தந்ததுக்கு நன்றி...... உங்கள் ஆசிர்வாதம் எனக்கும் அக்காவுக்கும் எப்பவுமே இருக்கனும் என்றதும் அவன் தாய் புகைப்படமிலிருந்து ரோஜா பூ கீழே விழுந்தது ஆசிர்வதித்தபடி.

தொடரும்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro