ரோபோ 1
ரோபோ ரோமியோ நீ என் பூமியோ
ரோபோ ரோமியோ கதால் காமியோ காமியோ காமியோ....
என அவள்(ஹீரோயின்) பாடி முடிப்பதற்குள் அவன்(ஹீரோ) வந்திருந்தான்..
"யாத்தி... உண்மையான ரோபோ வந்துருச்சே..." என நினைத்தவள் அருகிலிருந்த தோழிகளைப் பார்க்க அவர்களும் எச்சிலை முழுங்கியப்படியே இருந்தனர்.
"அடேங்களா எழுந்து நில்லுங்க டி..இல்லைன்னா அதுக்கும் திட்டு விழும்.." எனக் கூறியவள் முதலில் எழுந்து நிற்க அவளையடுத்து அடுத்தடுத்த வானரங்களும் எழுந்து நின்றனர்.
அனைவரையும் பொதுவாக முறைத்துப் பார்த்தவன் கைகாட்டி நின்றுக் கொள்ள
"சும்மா பாத்தாலே மூக்கு புடைப்பா இருக்கும் .. இப்ப முறைச்சுட்டு வேறா நிக்கிறான் சொல்லவா வேணும். ஐயோ எரும மாட்டுக் கணக்கா புஸு புஸுன்னு மூச்சு விட்டுட்டு பாத்துட்டு இருக்கானே.. இவனா வெளிய போ பேயேன்னு சொல்றதுக்கு முன்னாடி நம்மாளே வெளிய போக ரெடியா இருப்போம்..." என மனதில் நினைத்தவள் அவனையே பார்க்க
"என்ன பண்ணிட்டு இருக்கீங்க எல்லாம்.. இது கிளாஸ் ரூம்.."
"நான் மட்டும் என்ன..." அவள் நினைக்க நினைக்கவே அவனின் கனீர்க் குரலில்
"சந்தைகடையில்ல..." எனக் கூறி முடித்தான்.
'சந்தைக்கடையாவது பாக்க ஜிகுஜிகுன்னு இருக்கும்..' என நினைத்தவள் சலித்தப்படியே எதிரில் நின்றவனைப் பார்க்க அவனின் முறைப்பு கூடியதோ தவிர குறையவில்லை..
"மூசடு என்ன பண்ண போறனோ தெரிலயே.. முறைச்சுட்டே நிக்கிறான்.." என நினைத்த அடுத்த நிமிடம்
"மணி கர்ணிகா.." என அவன் அழைக்க இதயம் தாறுமாறாக அடித்து கொள்ளப் பயந்த பார்வையுடன் அவனைப் பார்த்தாள்.
"நீங்க தானே பாட்டு பாடிட்டு இருந்தது..." என அதட்ட
முதலில் ஆமென தலையாட்டிப் பின் இல்லையென வேகமாக தலையை ஆட்டிக் குனிந்துக் கொள்ள அவளைப் பார்த்தபடியே
"டீத் பார்முலா சொல்லுங்க.." எனக் கூற முகத்தைப் பாவமாக வைத்தவள்
"எந்த டீத் சார்.. எருமையோட டீத்தா.. இல்லை குரங்கோட டீத்தா..." என வார்த்தை நடுக்கத்துடன் வந்தாலும் அதில் சிறு நக்கல் இருக்க தான் செய்தது...
"என்ஜினீயரிங் முடிச்சுட்டு மறுபடியும் நானும் டாக்டர் படிக்கறன்னு ஸீன் போட்டுட்டு நீட் படிக்க வந்தா இப்படி தான் லூசு தனமா கேள்விக் கேட்க தோணும்.." என வெடுக்கென்றுக் கூற அவனை முறைத்தப்படி நின்றாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro