Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🔥 ரௌத்திரம் - 1 🔥

கடலூர்....

17.11.2014

கார்த்திகை மாத மழையிலும் பறவைகள் தங்கள் கூட்டிலிருந்து வெளியே வந்து கீச்கீச் என்று ஓசை எழுப்பிக் கொண்டே தங்களுக்கான உணவைத் தேட தொடங்கியது.

மணி காலை ஆறு என்றாலும், வானம் என்னவோ அதிகாலை ஐந்து மணி என்பது போல் சூரியனை வெளிக்காட்டாமல் தனக்குள் மறைத்து வைத்திருந்தது.

'சஷ்டியை நோக்கச்
சரவண பவனார்
சிஷ்டருக் குதவும்
செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில்
பன்மணிச் சதங்கை....'

அத்தெருவில் அமைந்திருந்த கோவிலில் கந்த சஷ்டி கவசம் ஒலிக்க, அதனை கேட்டுக் கொண்டே தங்களது வீட்டு வாசலுக்கு முன் எழிலோவியமாக கோலமிட்டு வண்ண பொடிகளால் அதனை இன்னும் வண்ண மயமாகினார்கள் இல்லத்தரசிகள்.
அத்தெருவில் அமைந்திருக்கும் பாடலீஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு மிக்க கோவில் ஆகும். இது கடலூர் நகரில் திருப்பாதிரிப்புலியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இத்தலமானது சம்பந்தர்,  அப்பர் போன்றோரால் பாடல் பெற்றதாகும். 274 சிவாலயங்களில் இது 229 வது தேவாரத்தலம் ஆகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  இதுவும் ஒன்றாகும்.

கோவிலில் பூஜைகள் சிறிது நேரத்தில் தொடங்கவிருக்க, கோவிலின் எதிரில் உள்ள தெப்பக்குளத்தில் இருந்து குடத்தை இருமுறை தண்ணீரில் அசைத்துவிட்டு அதில் நீரை எடுத்துக் கொண்டு தன் இடுப்பில் தாங்கியபடி கோவிலினுள் நுழைந்தார், நாற்பத்தைந்து வயது நிரம்பிய குந்தவை.

கோவிலினுள், ஊதா நிற சட்டையையும் வெள்ளை நிற வேஷ்டியையும் கட்டியபடி அங்கு வேலைகள் எல்லாம் சரியாக நடக்கிறதா? என்பதை கண்காணித்துக் கொண்டிருந்தார் ஐம்பது வயது நிரம்பிய அதிராம பாண்டியன்.

இன்னும் தன் மனைவி வராததை கண்ட அதிராம பாண்டியன் , "டேய்! ஆதவ் " எனத் தன் மகனை அழைத்ததும் , வெள்ளை நிற சட்டையை ஆலிவ் க்ரீன் கலர் பேண்டுக்குள் டக்கின் செய்த அந்த ஐந்தடி உயரமானவன், தன் அப்பாவின் பக்கம் திரும்பி , " ம் சொல்லுங்க ப்பா... " என கேட்டதும் , " எங்க டா உன் அம்மாவை இன்னும் காணோம்... பூஜை ஆரம்பிக்கிற நேரம் ஆகிடுச்சு ? " என கடுகடுக்கவும் , ஐயர் வரவும் சரியாக இருந்தது.

ஐயர் இருவரையும் நோக்கி , "ஜலத்தை எடுத்துன்னு வர சொன்னேனே எடுத்துட்டு வந்துட்டேளா..? " என கேட்டதும் , "இதோ அம்மா வந்துட்டாங்க... " என்ற குரலை கேட்டு திரும்பி பார்க்க , இளம்பச்சை நிற புடவையில் தன் மகள் ஆதிரையின் பதிலில் நிம்மதியடைந்த அதிராம பாண்டியன், தன் மனைவி வரும் திசையை நோக்கினார்.

தண்ணீர் குடத்தை எடுத்து வந்ததும், ஐயர் குந்தவையை நோக்கி , "பூஜையை ஆரம்பிச்சிடலாமா....? " என்றவுடன் , "ம் ஆரம்பிச்சிடுங்க ஐயரே..." என குந்தவை சிரித்த முகத்துடன் கூறியதும், ஐயர் பூஜைகள் செய்ய தொடங்கினார். 

"டேய்... இப்ப தான் பூஜை ஆரம்பிச்சு இருக்கு... கவனமா இருங்க... பொண்ணு தனியா சிக்கிச்சுனா உடனே தூக்கிடுங்க... சரியா... " என ஒருத்தன் தன் அடியாளுக்கு அலைபேசி மூலமாக கட்டளையிட , "சரி ண்ணே! " என்றான். அவன் அலைபேசி வைத்துவிட்டு , யாருக்கும் தெரியாமல் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தான்.

இன்று, குந்தவையின் பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்தநாள் அன்று கடலூர் நகரில் அமைந்துள்ள பாடலீஸ்வரர் கோவிலில் சிவபெருமானிற்கு சில பூஜைகள் செய்து தரிசனம் செய்து விட்டு , அன்றைய தினத்தில் ஏழை மக்களுக்கு அன்னதானமும் வழங்குவது வழக்கமாக வைத்திருந்தார், குந்தவை.

பூஜைகள் எல்லாம் முடிய மணி எட்டானது. பூஜைகள் முடிந்தவுடன் அன்னதானம் செய்ய ஏற்பாடுகளை தொடங்கினார்கள். அன்னதானம் வழங்கும் இடத்திற்கு மக்கள் அனைவரும் வந்தமர, அதிராம பாண்டியன் அவர்களுக்கு வாழை இலையை வைத்தார். குந்தவை உணவை பரிமாறினார்.

"டேய் இப்ப அன்னதானம் தொடங்கிடுச்சு... இன்னும் கொஞ்ச நேரத்தில முடிஞ்சிடும் எல்லாமே தயாரா இருக்குல... மிஸ் பண்ணி தொலைச்சிடாதாங்க டா... " என தன் அடியாட்களை தயார்படுத்தி கொண்டிருந்தான், அந்த மர்ம நபர்.

இவர்களை பற்றி ஒரு அறிமுகம்.

குந்தவை மற்றும் அதிராம பாண்டியன் இருவருக்கும் திருமணம் முடிந்து இருபத்தி ஆறு ஆண்டுகள் முடிந்திருந்தது. திருமணமான புதிதில் சிறியதாக தொடங்கிய தொழில் தான் ஏகே ஸ்நாக்ஸ் பேக்டரி. இன்று கடலூரில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தது. இவர்களின் ஸ்நாக்ஸ் அனைத்து இடங்களிலும்  பிரபலமாக இருந்தது.

குந்தவை - அதிராம பாண்டியன் இருவருக்கும் இரண்டு பிள்ளைகள். முதல் மகன் பெயர் ஆதவ். பி.காம் முடித்துவிட்டு தனது பெற்றோரின் நிறுவனத்தை கவனித்துக் கொண்டிருக்கிறான். இரண்டாவது மகள் பெயர் ஆதிரை. இவள் பிஇ முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறாள்.  மீதி கதையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

வேலைகள் முடிய மணி பத்தானது. கோவில் சன்னதியில் சிறிது நேரம் அமர்ந்து குடும்பத்தோடு தங்களது நேரத்தை செலவிட்டார்கள்.

"ஆதவ்.." என குந்தவை அழைத்ததும் , "சொல்லுங்க ம்மா... " என ஆதவ் கூறியதும் , " நம்ம கம்பெனியில வேலை எல்லாம் எப்படி போகுது? " என குந்தவை வேலை பற்றி விசாரித்தார்.

அதற்கு ஆதவ் , " ம் நல்லா போகுது ம்மா " என்றவுடன் ,  "ம் உன்னால எல்லாத்தையும் ஹேண்டில் பண்ண முடியுது தானே... " என குந்தவை அக்கறையுடன் கேட்டதும் , "எஸ் ம்மா ஐ கேன்! " என்றான் ஆதவ் நம்பிக்கையுடன்.

"ம் குட் " என குந்தவை பாராட்டிவிட்டு , "ஆதிரை நீ படிச்சு முடிச்சிட்ட அடுத்து வேலைக்கு போகலாம்ல...? " என குந்தவை கேட்டதும் , தேங்காயை வாயில் வைத்துக் கொண்டே, "போலாம் போலாம் அதுக்கென்ன அவசரம்...? " என கேட்ட ஆதிரையை கடுமையாக முறைத்தார், குந்தவை.

"சரி விடு குந்தவை. அவளுக்கு எப்ப வேலைக்கு போக தோனுதோ போகட்டும்... சரி காப்பகத்துக்கு போகனும். நியாபகம் இருக்குல...? "  என ஆதிராம பாண்டியன் பேச்சை மாற்றியதும் , 'ஹப்பாடா தப்பிச்சோம்...' எனத் தனக்குள் பெருமூச்சை விட்டாள் ஆதிரை. 

குந்தவை, "ம் நியாபகம் இருக்குங்க. சாமி கும்பிட்டு கிளம்பிடலாம்..." என்றவுடன் அனைவரும் எழுந்து சென்று சாமியை கும்பிட்டு விட்டு கிளம்ப , ஆதவிற்கு அலைபேசி ஒலிக்க , அதை எடுத்துக் கொண்டு சற்று நகர்ந்து சென்று விட்டான்.

"டேய் எல்லாரும் தயாரா இருங்க டா... அவங்க வெளியே வர போறாங்க ... " என தன் அடியாட்களை எச்சரித்தான், அவன்.

"டேய்... மச்சான் வாங்க டா அவங்க வராங்களா... அந்தப் பொண்ணை சரியா தூக்கிடனும்..." என அங்கிருந்தவன்  இன்னொருத்தவனுக்கு கூறியதும் அவனும் சரியென தலையசைத்தான்.

பேசி முடித்து விட்டு வந்த ஆதவ் , "அம்மா கொஞ்சம் வேலை வந்துடுச்சு... நான் கிளம்பிறேன்..." என கூறியவுடன் , "வாட் இஸ் திஸ் ஆதவ்? " என அதிராம பாண்டியன் முறைக்க , "நோ டாட் இட்ஸ் அர்ஜன்ட்...! " எனத் தன் கன்னங்களை சுருக்கிக் ஆதவ் கெஞ்சியதும், "இட்ஸ் ஓகே ஆதவ் யூ கேன் லீவ்..."என அம்மா குந்தவை புன்னகையுடன் கூறியதும், " மை ஸ்வீட் மம்மி... தேங்க்யூ..." என கூறிவிட்டு ஆதவ் தன் மகிழுந்தில் பறந்தான்.

"சரி ம்மா நான் காருக்கு போறேன்"  என ஆதிரை வெளியில் நிற்கும் தன் மகிழுந்தை நோக்கி வந்தாள்.

"டேய்... நமக்கு வேலை ரொம்ப சுலபமாகிடுச்சு... பொண்ணு தனியா வருது டா... ஒரே அமுக்கா அமுக்கிடுங்க..."என அவன் கூறியதும் , "சரிங்க ண்ணே...! " என  தன் அலைபேசியை வைத்துவிட்டு , "டேய் வா டா மீனு தானா வந்து வலையில மாட்ட போகுது... "  என்றவன் ஆதிரையை நோக்கி மயக்க மருந்து இருக்கும் துணியை கையில் வைத்தபடி  நடந்து வந்தான்.

ஆதிரை, கவனிக்காமல் தனது மகிழுந்தின் கதவை திறக்க முயலும் போது அவன் கை ஆதிரையின் முகத்திற்கு அருகில் வர , அதை இறுக்கமாக பிடித்தது ஒரு கை.

இறுகிய இறுகில், அவன் "ஆஆஆஆஆஆ" என அலற தொடங்கியதும் , "என்ன வலிக்குதா? வலிக்கட்டும்..." என கூறியவள், வேகமாக அவன் கன்னத்தில் அறைந்தாள்.

அவன் கத்தியதில் மிரண்ட ஆதிரை, " அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா..." என கத்தினாள். தன் மகளின் குரலைக் கேட்டு அதிர்ந்த குந்தவையும் அதிராம பாண்டியனும் பதறியடித்துக் கொண்டு தன் மகளருகே வந்தார்கள்.

"ஏன் டா பொண்ணுங்க தனியா வரது உங்களுக்கு வசதியா போகிடுச்சோ...? " என இருவரையும் அங்கிருந்த கட்டையால் அடித்ததும் வலி தாங்காமல் அங்கிருந்து ஓடிவிட்டார்கள்.

அவள் அடித்துக் கொண்டிருந்த நேரம், மிரண்டிருந்த ஆதிரை தன் அம்மாவை அணைத்து கொண்டு நடந்ததை கூறினாள்.

அவள் இவர்களின் பக்கம் திரும்பியவள், " என்ன மா பயந்துட்டிங்களா...? இவனுங்களை கண்டு நாம பயப்பட கூடாது ... அவனுங்க தான் நம்மளை கண்டு பயப்படனும்... பொண்ணுங்க நாம எப்பவும் தைரியமா துணிச்சலா இருக்கனும்... " என கூறியதும், "ரொம்ப நன்றி மா... கடவுள் மாதிரி வந்து எங்க மகளை காப்பாத்திட்ட...? " என அதிராம பாண்டியன் தன் கையெடுத்து அவளிடம் கேட்டதும்,  "அட! என்ன ஐயா இது...? எனக்கொரு அக்கா இருந்து அவளுக்கு இந்த மாதிரி பிரச்சனை அப்படினா நான் சும்மா இருப்பேனா? இருக்க மாட்டேன்ல சரிங்க மா நான் வரேன்..." என அவள் கிளம்ப இருக்க , "ஒரு நிமிஷம் ... "  என குந்தவை அழைத்ததும் , " என்ன ம்மா...? " என அவள் கேட்டதும் ,  "உன் பேரு என்ன? " என கேட்டதும், "என் பேர் ஷிரின் ம்மா...? " என சிரித்த முகத்துடன் கூறியதும் , "ஓ முஸ்லீமா...? உன் வீடு எங்க இருக்கு ? " என கேட்டதும் , ஷிரின் அமைதியாகினாள்.

ஷிரினின் அமைதி குந்தவை மனதை ஏதோ செய்ய, "ஏன் மா அமைதியாகிட்ட...? " என கேட்டதும் , ஷிரினின் கண்கள் கலங்கத் தொடங்கிய படி , "விடு எதுவும் இல்ல ம்மா... ஹாஸ்டல்ல தங்கி இருக்க... அம்மா அப்பா யாருமில்ல..." என கூறியவள் அங்கிருந்து நகர முயன்ற போது , "உனக்கு என்ன வேணாலும் கேளு மா நான் தரேன்... " என குந்தவை கேட்டதும் , "இல்ல மா அதெல்லாம் எதுவும் வேணாம்... நான் வரேன்... " என மறுபடியும் செல்ல இருந்த ஷிரினிடம் , "எது வேணாலும் கேளு மா... " அதிராம பாண்டியன் வற்புறுத்தியதும் , சிறிது நேரம் யோசித்த ஷிரின் , "உங்க வீட்டுல வேலை எதாவது இருந்தா போட்டு கொடுக்கிறீங்களா? துணி துவைக்கிறது ,சமையல் செய்றது , வீடு கூட்டி பெருக்கிறது எந்த வேலையா இருந்தாலும் நல்லா செய்வேன் ம்மா..." என பணிவுடன் கேட்டதும் , "அவ்ளோ தானே..."  என குந்தவை சிரித்தபடி , "வா வந்து காருல உட்காரு... இன்னிலருந்து நீ எங்க வீட்டுல வந்து வேலைக்கு சேர்ந்துக்கலாம்... எங்களோடவே தங்கிகலாம் " என்றவுடன் , " இல்ல ம்மா  நான் என்னோட திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு ஹாஸ்டலுக்கு பேமெண்ட் கொடுத்துட்டு நாளைக்கு வந்து சேர்ந்துக்கிறேன்... நீங்க உங்க அட்ரஸ் மட்டும் கொடுத்துட்டு போங்க... " என்றவுடன் தங்களது வீட்டின் முகவரியை ஒரு தாளில் எழுதி ஷிரின் முன் நீட்டிய, ஆதிரை, "இது தான் எங்க அட்ரஸ். நாளைக்கு உனக்காக நான் காத்திட்டு இருப்பேன்... சீக்கிரம் வந்துடு சரியா..." என்றாள்.  .

ஷிரினும் சிரித்த முகத்துடன் வாங்கி கொண்டு, " சரி..." , என்றதும் , " இன்னிக்கி எங்க அம்மாவோட பிறந்தநாள்.. அன்னதானம் கொடுக்க இங்க வந்தோம்... அவங்க பர்த்டே கிப்டா நீ கிடைச்சிருக்க..." என கூறிய ஆதிரை , "தேங்க்ஸ்..." என ஷிரினை அணைத்துக் கொண்டாள்.

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ம்மா...!" என தன் வாழ்த்தை தெரிவித்தாள். "நாளைக்கு மறக்காம வந்துடு சரியா... நாங்க கிளம்புறோம்..." என  அவர்கள் தங்களது மகிழுந்தில் ஏறி சென்றனர்.

தன் ஒற்றை விரலால் கண்களைத் துடைத்து சிரித்த ஷிரின்,  "போடி போ... இன்னிக்கி உன் பிறந்த நாளா...? அன்னதானமா கொடுக்கிற அன்னதானம்...அடுத்த பிறந்தநாளுக்கு அன்னதானம் கொடுக்க நீ இருக்க மாட்ட..." என தன் மனதில் வன்மமாக கூறியபடி, "கவுண்ட் யூவர் டேஸ் பேபி..." என முணுமுணுத்தாள்.

தன் நாக்கை கீழ்பக்க பற்களில் சூழட்டி அவர்கள் சென்ற திசையினையே குரூரமாகப் பார்த்தாள்.

யார் இந்த ஷிரின்...?

விடைகள் அடுத்தடுத்து பகுதிகளில்....

🔥 தொடரும் 🔥

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro