Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🔥 ரௌத்திரம் பழகு - 02 🔥

ங்கிருந்து குந்தவையும் அவர் குடும்பமும் சென்ற பின் , தன் நாக்கை கீழ்பக்க பற்களில் சூழட்டி அவர்கள் சென்ற திசையினையே குரூரமாகப் பார்த்து சிரித்தாள் ஷிரின்.

அப்போது, ஷிரினின் அலைபேசி அடிக்க அதை எடுத்து காதில் வைத்தவுடன் , "ஏய் குட் நியூஸ்... நாளைக்கு அவள் வீட்டுக்குள்ள போக போறேன்... " என சிரித்தாள்.

"ஹே சூப்பர் டி... " என எதிரில் இருந்து அவள் தோழி உற்சாகமாக கூறியதும்,  " இனி அந்தக் குடும்பத்துக்கு அழிவுக் காலம் தான்..." என கூறிவிட்டு, சிறு இடைவெளி விட்டு , "சரி நான் நாளைக்கு அங்க போய்ட்டு உனக்கு கால் பண்றேன்... நான் சொன்னது நியாபகம் இருக்குல.. "  என ஷிரின் கூறியவுடன் , " ம் இருக்கு டி... " என அவள் பதிலளித்தாள்.

"சரி நான் அப்பறம் பேசுறேன்... " என்ற ஷிரின் அலைபேசியை வைத்துவிட்டு அங்கு வந்த ஆட்டோவில் ஏறி தன்னிடத்திற்குச் சென்றாள்.

------

டலூர் - சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள தனது ஏகே ஸ்நாக்ஸ் பேக்டரிக்கு தன் விலை உயர்ந்த மகிழுந்தில் வந்திறங்கிய ஆதவை பார்த்ததும் , அங்கிருந்த காவலாளி ஆதவிற்கு கை உயர்த்தி வணக்கம் வைத்ததும் , அதற்கு பதில் அளிக்கும் விதமாக தலையை மட்டும் அசைத்துவிட்டு உள்ளே சென்றான்.

ஆதவ் உள்ளே வந்ததும் , அனைவரும் ஆதவிற்கு தங்களது மரியாதையை செலுத்தினார்கள். ஆதவின் அறையில் முக்கியமான கோப்புகளுடன் காத்திருந்தான், ஆதவின் பிஏ சுபைத் அஹமத்.

ஆதவ் உள்ளே வந்ததும் , " குட் மார்னிங் ஸார்... " என வரவேற்றான் , சுபைத். "குட் மார்னிங் சுபைத்... வாட்ஸ் த மேட்டர்..? எதுக்கு அவசரமா வர சொன்னீங்க? " என ஆதவ் , தன் நாற்காலியில் அமர்ந்தபடி கேட்டான்.

"ஸார் , வானம் டெக்ஸ்டைல் கம்பெனி இருக்குல" - சுபைத்

"ம் ஆமா சுபைத். இட் இஸ் தி ஓன் ஆஃப் தே டாப் கம்பெனி இன் தமிழ்நாடு ரைட்... " என ஆதவ் சுபைதை பார்க்க, " எஸ் ஸார் யூ ஆர் ரைட்... அந்தக் கம்பெனி மேனேஜர் சரவணன் உங்களைப் பார்க்க வந்திருக்காங்க...  " என சுபைத் கூறியதும் , "ஹே வேர் இஸ் ஹி நவ்...? " என ஆதவ் பரபரப்பாகக் கேட்டதும் , "கான்பிறன்ஸ் ஹால்ல வெய்ட் பண்றாரு ஸார்... " என சுபைத் கூறியதும் , ஆதவே எழுந்து கான்பிறன்ஸ் ஹாலை நோக்கி விரைந்தான்.

கதவைத் திறந்து கொண்டே , " குட் மார்னிங் ஸார்... ஸாரி ஃபார் மை லேட் " என மன்னிப்பு கேட்டு கொண்டே உள்ளே நுழைந்த ஆதவைப் பார்த்து சிரித்தபடி, " இட்ஸ ஓகே ஸார்.." என கூறிக்கொண்டே எழுந்து நின்றான் , அந்த ஆறடிக்குச் சொந்தமான சரவணன்.

"ஓகே ஆதவ்,ஐ அம் கம்மிங் டூ தி பாய்ட்... எங்க கேண்டீன்ல உங்க கம்பெனியில இருந்து ஸ்நாக்ஸ் சப்ளை செய்யனும்... அட்வான்ஸ் பைவ் லாக்ஸ் " என சரவணன் நீட்டியதும் ,  " ம் ஓகே ஸார்... பேலன்ஸ் சேவெண்டி லாக்ஸ் சப்ளை பண்ணதும் கொடுங்க... " என ஆதவ் சரவணன் கொடுத்த அந்தப் பணத்த வாங்கியபடி கூறினான்.

அதன்பின் இருவரும் வேறு சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். சுபைத் இருவருக்கும் தேநீரை எடுத்து வந்து கொடுத்தான். அதை அருந்தி விட்டு , "ஓகே ஆதவ், ஹேட் அ கிரேட் டைம் வித்யூ... மீட் யூ நெக்ஸ்ட் டைம்... தேங்க்யூ... " என்று கூறியபடி எழுந்த சரவணன் , ஆதவிடம் கைகுலுக்கி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

"ஓகே சுபைத் இன்னிக்கி வந்த ஆர்டர் பற்றி வொர்க்கர்ஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க... அண்ட் எல்லாருக்கும் இந்த மண்த் போனஸ் 5000 சொல்லிடுங்க... பைல்ஸ் சைன் பண்ணணும் சொன்னீங்கள... அதை எடுத்துட்டு என் கேபீனுக்கு வந்துடுங்க " , என கூறிவிட்டு ஆதவ் தனது இடத்தை நோக்கிச் சென்றான். சுபைத் ஒரு பெருமூச்சு விட்டபடி , ஆதவ் கூறியதை செய்ய சென்றுவிட்டான்.

ஆதவ், தன்னிடத்திற்கு வந்து வேறு சில கோப்பைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சுபைத், வேலை செய்பவர்களிடம் வந்து , " எல்லாருக்கும் ஒரு ஹேப்பி நியூஸ்... " என மகிழ்ச்சியாக கூறியதும், " என்ன நியூஸ் சுபைத்... சொல்லுங்க " என ஆர்வமாக ஒருவர் கேட்டதும், " நம்ம எல்லாருக்கும் இந்த மண்த் 5000 போன்ஸ் கொடுக்கிறதா பாஸ் சொல்லி இருக்காரு... " என சுபைத் புன்னகையுடன் கூறியதும், " ஏஏஏஏஏ" என அனைவரும் மகிழ்வில் கரகோஷம் எழுப்பினர். வேலை விஷயங்களையும் சுபைத் கூற, அதே உற்சாகத்துடன் வேலை செய்யத் தொடங்கினார்கள்.

சுபைத் கூறிவிட்டு ஆதவ் கையெழுத்திட வேண்டிய முக்கிய கோப்புகளை எடுத்துக் கொண்டு ஆதவ் இருக்கும் இடத்திற்குச் சென்றான். சுபைத் கொடுத்த கோப்புகளை சரிபார்த்து விட்டு கையெழுத்திட்டான், ஆதவ்.

ஆதவ், "ஓகே சுபைத். எனி அதர் இம்பார்டட் வொர்க் இஸ் தேர்...? " என சுபைத்யிடம் கேட்ட போது , ஆதவின் அலைபேசி ஒலித்தது.

"ஓன் செகண்ட்..." என்ற ஆதவ் , தன் அலைபேசியை எடுத்து காதில் வைத்தவன் , "இதோ வர ம்மா "  என படபடப்பாகப் பதிலளித்துவிட்டு , "ஓகே சுபைத் எல்லா வேலையும் முடிஞ்சுதுல... " என ஆதவ் கேட்டவுடன் , "நீங்க சைன் போடுற வேலை எல்லாம் முடிஞ்சுது... ஸார்... " என சுபைத் பதிலளித்துவிட்டு ஆதவைப் பார்த்தான்.

"அப்ப சரி... அம்மா உடனே வர சொல்லிட்டாங்க... நான் கிளம்புறேன்... " என ஆதவ் கூறிவிட்டு வீட்டிற்கு விரைந்தான்.

------

கடலூரில் நெல்லிக்குப்பம் சாலையில் அமைந்திருக்கும் அரசு குழந்தைகள் காப்பகத்துக்கு வந்திருந்தார்கள் , குந்தவை , அதிராம பாண்டியன் மற்றும் ஆதிரை.

அங்கு செல்ல மணி பத்தாகியது. முதலில் குழந்தைகளுக்கு  உணவை தனது கைகளிலே பரிமாறினார், குந்தவை.

ஆதிரை, குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகளை வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசை வழங்கினாள். குழந்தைகளும் தங்களது தனித்திறமைகளை காட்டி அவர்கள் பக்கம் கவர்ந்தார்கள்.

குந்தவை, ஆதிரையின் கைகளால் குழந்தைகளுக்கு புது ஆடைகளை வழங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

இத்தனை நேரம் மகிழ்வாக இருந்த ஆதிரையின் முகமும் மனமும் வாடி போனது. காரணம் காலையில் நடந்த நிகழ்வு தான். அந்த நிகழ்வு திரும்பத் திரும்ப ஆதிரையின் கண்முன் வந்து செல்ல ஆதிரையின் முகமெல்லாம் வியர்த்து போனது.

தன் மகளின் மனநிலையை உணர்ந்த குந்தவை, " ஆதி ஒன்னுமில்ல... ஜஸ்ட் காம் டவுன்...  " என ஆறுதல் அளித்ததும் தன் அம்மாவின் மடியில் தலை வைத்து கொண்டாள், ஆதிரை. தன் மகனை அலைபேசியில் அழைத்து வீட்டிற்கு வர சொன்னார், குந்தவை.

------

இவர்களின் வண்டி சத்தம் கேட்டதும், வீட்டின் கதவு திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்ததும் காவலாளி மரியாதை வைத்தார். வாசலின் வலப்புறத்தில் செடிகள் மற்றும் மரங்களும் இடப்புறத்தில் மர ஸோபாவும் அதற்கு பக்கத்தில் இரு ஊஞ்சல்களும் இருந்தன.

அவர்கள் வந்த சிறிது நேரத்திலே ஆதவும் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். தன் அண்ணன் ஆதவை பார்த்தவுடன் , ஆதிரை ஓடி வந்து அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட , ஆதவிற்கு ஒன்றும் புரியவில்லை.

"ஹே! நண்டு எதுக்கு அழுவுற என்னாச்சு ? " என பதட்டமாக ஆதவ் கேட்டதும் , குந்தவை நடந்ததைக் கூறினார்.

"எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கச்சி மேலயே கை வைக்க நினைச்சிருப்பானுங்க... அவனுங்களை.." என எரிமலையாய் கொதித்து வெளியே சென்ற ஆதவை, " டேய் ஆதவ் அதான் அந்தப் பொண்ணு அவனுங்களை அடிச்சிட்டாளே... அப்பறம் என்ன? " என்று அதிராம பாண்டியன் தடுத்ததும் ,  "அந்தப் பொண்ணு யாரு ? " என ஆதவ் கேட்டதும் , " நாளைக்கு அவள் நம்ம வீட்டுக்கு வேலைக்கு வருவாள்... அப்ப பார்த்துக்கோ ... " என குந்தவை கூறிவிட்டு நகர்ந்தார்.

அதைக் கேட்டதும் , "நம்ம வீட்டுக்கா?  " என ஆதவ் புருவத்தை உயர்த்திக் கேட்டதும் , " ஆமா டா... அம்மா உனக்கு என்ன வேணுமோ கேளு நான் செய்றேன் கேட்டதும் அந்த பொண்ணு உங்க வீட்டுல எதாவது வேலை இருந்தா கொடுங்க நான் செய்றேன் சொன்னா. அதான் அம்மா நாளைக்கே வீட்டுக்கு வா சொல்லிட்டாங்க... " என ஆதிரை விளக்கியதும் ஆதவிற்கு கோபமேற அதை அடக்கிக் கொண்டு , தன்னறை நோக்கிச் சென்றான்.

------

ன் அறையில் இருந்த பெரிய கண்ணாடி முன் தன் பிம்பத்தைப் பார்த்து , 'முன்ன பின்ன அறியாத பொண்ணை எதுக்கு நம்ம வீட்டுக்கு வேலைக்கு வர சொல்லி இருக்காங்க...? எதாவது செய்யனும்னா பணத்தையோ சாப்பாட்டையோ கொடுத்து அனுப்ப வேண்டியது தானே? ஏன் இந்த அம்மா இப்டி இருக்காங்களோ? ' என கடுகடுத்த ஆதவ் , அறையிலே அங்கும் இங்கும் நடந்துக் கொண்டே , 'யாரா இருக்கும்...? அம்மா அந்தப் பொண்ணை பத்தி சொல்லும் போது அவங்க கண்ணுல அப்படி ஒரு சந்தோஷம்...? என்ன காரணம்...? யார் அவள்...? ' என ஆதவின் மனம் யாரென்றே அறியாத அந்தப் பெண்ணைப் பற்றி அறிந்துக் கொள்ள , ஆர்வம் எழ , 'சரி அதான் நாளைக்கு வீட்டுக்கு வராளே... அப்ப தெரிஞ்சிக்கலாம்... யாருன்னு தான் பார்ப்போமே...?' என மனதிற்குள் சபதம் எடுத்துக் கொண்ட ஆதவ் , கணினியில் தன் வேலைகளைக் கவனித்தான்.

------

"ஹே! இந்தா நீ கேட்ட லேட்டஸ்ட் போன் அன்ட் சிம் " என தாஹிரா ஒரு புதுமாடல் அலைபேசியையும் புது சிம்மையும் ஷிரினிடம் கொடுத்துவிட்டு, " ஹே! பீ கேர்புல். ரொம்ப ஜாக்கிரதையா இரு சரியா..." என தாஹிரா எச்சரிக்கையாகக் கூறியவுடன் , "ஹூம்! நான் மாட்டிக்க மாட்டேன், என் உயிரே போனாலும் சரி... அந்த குடும்பத்தை நடுத்தெருவுல நிறுத்துவேன்... " என ஷிரின் ஆவேசத்துடன் கூறினாள்.

"இங்க பாரு டி, அவங்களை அழிக்கிறேன் சொல்லிட்டு உன் உடம்பை கெடுத்துக்காத அப்பறம் நான் சும்மா இருக்க மாட்டேன்... அல்சர் இருக்கு நேரா நேரத்துக்கு சாப்பிடு... "  என தாஹிரா அக்கறையாக கடிந்துக் கொள்ள , "ம் சரி டி நான் என்னை பார்த்துக்கிறேன்... நேரமாகுது தொழுதுட்டு கிளம்பனும். துஆ செய் சரியா" என ஷிரின் புன்னகையுடன் கூறியதும் , தாஹிரா, "அல்லாஹ் உன் பக்கம் சரியா... கவலைப்படாம கிளம்பு... வா ரெண்டு பேரும் சேர்ந்தே தொழுவோம்... " என இருவரும் சேர்ந்து தொழுதார்கள்.

"அப்ப சரி நான் கிளம்பிறேன் டி... அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) " என ஷிரின் ஸலாம் வைத்துவிட்டு அங்கிருந்து ஆதவ் வீட்டை நோக்கி கிளம்பினாள்.

அவர்கள் கொடுத்த முகவரியில் ஆட்டோவில் வந்திறங்கிய , ஷிரின் வீட்டின் கதவைத் தட்டியதும் , அங்கிருந்த காவலாளி , "யாருமா நீ ? யார் வேணும்...? " என ஷிரினை நோக்கி கேட்டதும் , "மேடமை பார்க்கனும்..." என காவலாளியிடம் ஷிரின் கூறினாள்.

"உன் பேரையும் எதுக்காக வந்திருக்க விஷயத்தையும் சொல்லு நான் உள்ளே போய் அம்மா கிட்ட அனுமதி வாங்கிட்டு வரேன்..."  என அந்தக் காவலாளி கூறியதும் , "என் பேரு ஷிரின் வீட்டு வேலை செய்ய வந்திருக்கேன் சொல்லுங்க..." என ஷிரின் அப்பாவியாகக் கூறியதும் , " சரிமா இங்கேயே நில்லு வந்திடுறேன் " என அந்தக் காவலாளி வீட்டிற்குள் நுழைந்தார்.

ஹாலில் உள்ள ஸோபாவில் அமர்ந்து , நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தார், அதிராம பாண்டியன்.  தன் கணவனுக்கு தேநீரை எடுத்து வந்துக் கொடுத்த குந்தவை ,  காவலாளி உள்ளே வருவதைப் பார்த்து , "என்ன வேணும் செல்வம்? " எனக் கேட்டதும் , " அம்மா வீட்டு வேலை செய்ய ஷிரின் ஒரு பொண்ணு உங்களை பார்க்க வந்திருக்கு ம்மா..." என கூறியதும் , "உள்ளே வர சொல்லு செல்வம் " எனக் கூறியதும், சரியென தலையசைத்து விட்டு , வெளியே நிற்கும் ஷிரின் அருகில் வந்த செல்வம் , "அம்மா உன்னே உள்ளே வர சொன்னாங்க... " என கூறியதும் , "ம் சரிங்க ஸார்... " என ஷிரின் கூறிவிட்டு , 'உன் குடும்பம் நாசமாகுறது உறுதி...' என குரூரமாகச் சிரித்துக் கொண்டு அந்த வீட்டினுள் நுழைந்தாள் ஷிரின்.

குளித்துவிட்டு வெளியே அமர்ந்து நாளிதழ் படிப்பது ஆதவின் அன்றாட வழக்கங்களில் ஒன்று. இன்றும் குளித்து விட்டு , வெளியே காலடி எடுத்து வைத்த ஆதவ் , எதிரில் வரும் ஷிரினை கவனிக்கவில்லை. அதேபோல்  அந்த வீட்டை நோட்டமிட்ட படியே வந்த ஷிரினும் ஆதவை கவனிக்கவில்லை.

ஆதவ் , ஷிரின் மேல் மோத , வாசற்படியில் ஏறிய ஷிரின் தடுமாறி விழப் போனதும், "ஹ்ஹ்..ஹே ! " என்ற ஆதவ், ஷிரினின் இடையைப் பற்றித் தாங்கினான்.

வெண்ணிறமும் அல்லாமல் கருநிறமும் அல்லாமல் மாநிறத்தில் பார்க்கும் அனைவரும் தன் வசத்தில் விழ வைக்கும் சிறு கண்களும் அடர்த்தியான புருவங்களும் , சற்றே கொழு கொழு என இருந்த ஷிரினை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவ்.

"அண்ணா... " என ஆதிரை ஆதவை அழைத்தும் பயனற்றுப் போக , "டேய் தடிமாடு..." என முதுகில் ஒரு அடிப்போட்டவுடன் தன்னிலை வந்த ஆதவ் , ஷிரினை தன் வசத்திலிருந்து விடுவித்துவிட்டு , " யார்...? " என்பதனை போல் தன் தங்கையை பார்த்து செய்கையால் கேட்டதும் , " நேத்து என்னே ஒரு பொண்ணு காப்பாத்தினா சொன்னனே அவள் தான் இவள் பேரு ஷிரின்... " என்ற ஆதிரை, ஷிரினை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

ஷிரினால் தன் குடும்பத்திற்கு வரவிற்கும் ஆபத்தை ஆதவ் தடுப்பானா?

பார்ப்போம்...

🔥 தொடரும் 🔥

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro