யதார்த்தம்
தந்தை மகளிற்கு நடுவே நடந்த அந்த சுவாரசியமான விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்த மதுவின் நினைவுகள் அவளது பெற்றோரை எண்ணி துயர்கொண்டது ,.தன்னுடைய இச்செயல் அவர்களுக்கு எவ்வளவு பெரிய மனவருத்தத்தையும் தலை குனிவையும் ஏற்படுத்தும் என்பதை நினைத்தவள் கண்கள் மெல்ல கலங்கயது.
கலங்கிய கண்களையும் வருந்திய மனதையும் சமநிலைக்கு கொண்டுவர அவள் நிலாவை தேடி வரவேற்பறைக்கு வந்தாள்.
அங்கே தந்தையின் மடியில் அமர்ந்து அவனது கண்ணத்தை பிடித்து ஆட்டிக்கொண்டு சந்தோஷமாக சிரித்துக்கொண்டிருந்த நிலாவை பார்த்தவள் மனதில் இந்த குடும்பத்தில் தான் இணைய வேண்டும் என்ற உறுதியான எண்ணம் தோன்றியது.
அழகான புன்னகையால் நிலா முன் சென்றவள் ," பேபி... நீ ஸ்கூல் விட்டு வந்து டிரெஸ் கூட மாத்தலடா வா அம்மா உனக்கு டிரெஸ் மாத்தி விடறேன்," என்று அவளை கூட்டிக்கொண்டு படுக்கையறை நோக்கி சென்றாள்.
செல்லும் அவளையே தொடர்ந்த ஆதியின் கண்களில் அதுவரை இருந்த கனிவு மறைந்து ஒரு வித கனல் குடிகொண்டது," அவ்ளோ சீக்கிரம் உன்னை விட்றமாட்டேன் ," என்று மனதில் உறுதி எடுத்தவன் அடுத்த அறைக்குள் தன்னை புகுத்தி கொண்டான்.காலையிலிருந்தே அமைதியற்ற மனநிலையில் இருந்தவனிற்கு சிறு அமைதியும் தனிமையும் தேவைப்பட கண்களை மூடி தியானம் செய்ய தொடங்கினான்.
மதுவின் சொல்பேச்சு கேட்டு சமத்தாக வேறு உடையில் வந்த.நிலா தன் தந்தையை காணாமல் தேடி பின் தாயிடம் வந்தாள்," அம்மா அப்பாவை காணோம் எனக்கு பசிக்குது...," என்று சின்ன சினுங்கலுடன் கூறியவள் தாயை கட்டி அணைத்தாள்.
" நிலா செல்லம்....அப்பா அந்த ரூம்ல இருப்பாங்க போய் அப்பாகிட்ட இருங்க அம்மா சாப்பாடு எடுத்து வைச்சுட்டு கூப்பிடறேன்," என்று கூறியவளை மறுத்த குட்டிப்பெண் ," முடியாது நான் உங்ககூடவே நின்னுகிறேன்," என்று கூறினாள்.
அவளை வாரி.அணைத்த மது வேகமாக சாப்பாட்டை.மேஜை மீது பரப்பிவிட்டு மகளிடம் திரும்பி," செல்லகுட்டி போய் அப்பாவை சாப்பிட கூட்டிட்டு வாங்க ," என்று அன்பு கட்டளையிட அதை மறுத்த சிறியவளோ ," நிலா குட்டிக்கு பயங்கரமா பசிக்குது ஒரு அடி கூட நடக்க முடியாது பாப்பா பாவம்," என்று உதடு பிதுக்கி கூற அதன் அழகில் மயங்கியவள் சிறு கலக்கத்துடன் அவனது அறையை நோக்கி எட்டு வைத்தாள்.
இதுவரை அவனின் அறைக்குள் அவள் நுழைந்தது இல்லை அதற்கு தைரியமும் வரவில்லை மனதில் ஆயிரம் தடுமாற்றங்கள் நிகழ அவனது அறை வாசலை அடைந்தாள் , கதவு சாத்தப்பட்டிருக்க மெதுவாக தட்டினாள், உள்ளிருந்து எந்த வித சலனமும் இல்லாது போக மேலும் சத்தமாக தட்டினாள் , இப்பொழுது அவனது குரல் யாரு என்று.மெதுவாக வினவ , தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ," நான்தான் மது சாப்பிட வாங்க ," என்று கூறி முடிக்கையில் பெரும் சத்தத்துடன் கதவு திறக்கப்பட ருத்ராமூர்த்ரியாக அங்கே நின்றிருந்த ஆதிய்யனை பார்த்தவளின் கை, கால்கள் நடுங்க மிரட்சியுடன் அவனை பார்தாள்.
அவளது இந்த நடுக்கத்தையும் மிரட்சியையும் அலட்சியம் செய்தவன்," என் ரூம்வரை வருவதற்கு உனக்கு தைரியம் வந்திடுச்சா?? எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இந்த அக்கரை காட்டிர மாதிரி நடிச்சு என் பக்கத்தில வரனும் னு கனவுல கூட நினைக்காத னு , இது தான் கடைசி தடவையா இருக்கனும் புரியுதா??? " என்று உறுமியவன் தன் அறைக்குள் செல்ல திரும்பினான் , பின் நினைவு வந்தவனாய் மீண்டும் மதுவை பார்தவன் ," ஓ... உன் கழுத்துல இருக்கிற இந்த தங்க சங்கிலியோட உரிமைய நிலை நாட்ட வந்தியா ?? " என்று நக்கலுடன் கேட்டவன் அவளை அருவருப்புடன் நோக்கி," இதை பாரு இந்த தங்க சங்கிலி ஊருக்கு தாலி ஆனால் உனக்கு நான் போட்டுருக்கிற கடிவாளம் , அதை நல்லா மனசுல வச்சுக்கோ , அதை விட்டுட்டு அதை சாக்கா வச்சு என் பக்கத்தில நெருங்கனும் நினைச்ச , அதுக்கப்பறம் விளைவுகள் இன்னும் மோசமா இருக்கும் , புரியுதா??" என்று உறுமியவன் அவளது முகத்தையே நோக்கினான்.
அவனது விழி வீச்சை தாங்காமல் கீழே குனிந்தவளை ," கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும் னு அடிப்படை அறிவு கூட உனக்கு இல்லையா??" என்று வினவினான்.
அவனின் சரமாரி தாங்குதலில் நிலைகுழைந்து இருந்தவள் , புரிந்தது என்பதை உணர்த்த மெதுவாக தலையை ஆட்டினாள். அதற்கும் அவளை சீறும் விழிகளில்.நோக்கியவன்," கேள்வி கேட்டா வாயை திறந்து பதில் சொல்ல மாட்டீங்களா மகாராணி........,"என்று கூறி நிறுத்தியவன் ," ஆமா உன் பேரு என்ன??" என்று கேட்டான்.
இம்முறை அதிர்ந்து நின்ற மது பின் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ," ,என் பேரு கூட உங்களுக்கு தெரியாதா???" என்று உடைந்த குரலில் கேட்க , " உஸ்........ அழுகை நாடக்கத்தை நிறுத்திட்டு கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு உன் பேரு என்ன??"
" மதுமிதா.."
" ம்...இருக்கட்டும் ஆனால் நான் அப்படி கூப்பிட மாட்டேன் புரியுதா??" என்று சினத்துடன் கூறியவன் அவனது அறைக்குள் நுழைய முற்படுகையில் அவன் சட்டை இழுபட கோபத்தின் உச்சிக்கே சென்றவன் ," ஏய் உனக்கு அறிவில்லை.." என்று திரும்பியவன் அங்கே நிலாவை பார்ததும் சட்டென்று முகத்தில் கனிவை கொண்டுவந்து ," என்ன செல்லம் ??" என்று வினவினான்.
" எனக்கு பயங்கரமா பசிக்குது பா சீக்கிரம் சாப்பிட வரமா அம்மாட்ட என்ன பேச்சிட்டு இருக்கீங்க???" என்று வினவினான்.
அவளது கேள்வியை உதறி தள்ளியவன்," அச்சோ பசிக்குதா?? வாங்க வாங்க சாப்பிடளாம் , " என்று அவளை வாரி அணைத்துக்கொண்டு சாப்பாடு மேஜை நோக்கி சென்றான்.
புயல் அடித்து ஓய்ந்தது போல அமைதி நிலவியது , அந்த புயலில் சிக்கி தவித்து சின்னாபின்னமாகி சிலையென சமைந்தவள் ," எத்தனை ஏச்சுக்கள் எத்தனை பேச்சுக்கள் , இவற்றை கேட்பதற்கு தானா இந்த திருமண பந்தம் , தன்னை பாராட்டி சீராட்டி வளர்த்த பெற்றோர்களை தவிக்க விட்டு இவனை திருமணம் செய்தது இவற்றை அனுபவிக்கத்தானா , இவை எல்லாவற்றிற்கும் மேலாக தான் செய்த தவறுதான் என்ன?? ஒரு மரணதட்டணை கைதிக்கு கூட அவன் செய்த குற்றத்தை அவனிடம் கூறி அதற்கு தண்டனை வழங்கப்படும் ஆனால் இங்கே என்ன தவறு செய்தேன் என்பதே தெரியாமல் என்னை வார்த்தைகளால் வதைப்பது எந்த விதத்தில் நியாயம் ," எர்று பலவாறாக எண்ணிக்கொண்டிருந்த மதுவின் செவிகளில் நிலா அழைத்தது விழவில்லை.
" அப்பா அம்மா ஏன் பதில் சொல்ல மாட்டேங்குறாங்க ?" என்ற வினவிய நிலாவிடம் ," நீங்க போய் அம்மாவை கூட்டிட்டு வாங்க குட்டி ," என்று கூறினான் ஆதி. தன் தாய் இருந்த இடத்தை நோக்கி சென்ற சிறியவள் அங்கே அவளை காணாது வீடு முழுக்க அவளை அழைத்துக்கொண்டு தேடினாள். நிலாவின் தேடலில் இருந்து மதுவை காணவில்லை என்பதை உணர்ந்த ஆதி ," எங்க போயிருப்பா?? என்ற வினாவுடன் எழுந்து நிலாவிடம் சென்றான்," என்ன குட்டி?? அம்மா எங்க??" என்று வினவினான்.
" அம்மா காணோம் பா ," என உதடு பிதுங்கி அழத்தொடங்கிய மகளை தூக்கி தோளில் போட்டவன் ," நிலா ப்ரேவ் பொண்ணு இல்லையா?? இதுக்கெல்லாமா அழுவாங்க , அம்மா வாஷ்ரூம் போய் இருப்பாங்க ,இருங்க நான் கூட்டிட்டு வரேன்," என்று கூறியவனை இடைமறித்த நிலா ," இல்லை என்னை.தூக்கிட்டு போங்க நானும் வருவேன் ," என்று அடம்பிடித்தாள். ஒரு பெருமூச்சுடன் அவளையும் தூக்கிக்கொண்டு மதுவை தேடினான் ஆதி. அந்த சிறிய வீட்டில் எங்கும் மதுவை காணாததால் நெற்றியில் சிந்தனை கோடுகள் தோன்ற ," எங்க போயிருப்பா??" என்று யோசித்தான். அவனது யோசனையை கலைக்கும் வண்ணம் வாசலின் செக்யூரிட்டி பதட்டமான குரலில் ,"ஆதி ஐயா.....ஆதி ஐயா.....இங்க சீக்கிரமா வாங்களேன்," என்று அழைக்க , வேகமாக கையில் நிலாவுடன் குரல் வந்த திசை நோக்கி சென்றான் ஆதித்யன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro